Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 18

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 18

“என்னடா வது குட்டி ஒன்னோட மாமாகிட்ட பேச உனக்கு என்ன தயக்கம்?நான்தான் என் மேல் நீ கோபமாக இருப்பாயோ என்று லேட்டாக வந்து இவ்வளவு நாளை வேஸ்ட் செய்துவிட்டேனா?கவலையே படாதே இதோ மாமா வந்துகிட்டே இருக்கேன்” என்று தனக்குள் பேசி கொண்டவன் வேகமாக தனது அறையை நோக்கி நடந்தான்.தன் அறைக்கு சென்ற அர்ஜூன் அதிர்ந்து போனான்.

தோழி தன் மேல் அப்பிய கிரீம் பிசு பிசுவென இருக்க வந்தவுடன் அபியையும் இழுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்தவள்.அவனை சுத்தம் செய்து தூங்க சொன்னாள் “அபியோ வள்ளி பாட்டியோடுதான் படுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க” வள்ளியின் அறைக்கு அனுப்பிவிட்டு இவள் சுத்தம் செய்ய பாத்ரூமிற்குள் சென்றாள்.

இரண்டு மூன்று முறை நன்றாக சோப்பு போட்டு தேய்த்த பின்னரே அந்த கீரிமின் பிசுபிசுப்பு போனது.”ஹப்பாடா” என்று நிமிர்ந்தவள் வந்த அவசரத்தில் மாற்றுடை எடுக்காமல் வந்தது அப்போதுதான் உரைத்தது.

“ச்ச்ச்ச…..என்ன முட்டாள் தனம்” என்று தன்னை நொந்து கொண்டவள்.

“சரி எப்படியும் அஜூ வருவதற்குள் வேறு உடை மாற்றிவிடலாம்” என்று அங்கிருந்த டவலை எடுத்து உடலில் சுத்தி கொண்டு வெளியே வந்தாள்.அப்போதுதான் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் அர்ஜூன்.

சுவாதியை பார்த்த அர்ஜூன் மூச்சு விடவும் மறந்தவனாக வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.அவனின் வாய்தான் ஒன்றும் பேசாமல் இருந்தது.அவனது கண்கள் சுவாதியின் கலைந்திருந்த தலை கழுத்தில் தான் கட்டிய மாங்கல்யம்.அதற்கும் கீழ் அதிக இடைவெளியில் இருந்த டவலை எதிரியை பார்ப்பது போல் பார்த்தான்.முழங்கால் வரை இல்லாமல் அதற்கு மேலே முடிந்து போயிருந்தது டவல்.வாழை தண்டு போன்று வழ வழ வென்றிருந்த காலில் சரியாக துவட்டாததால் நீர் துளி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து அவனை வெறுப்பேற்றி கொண்டு இருந்தது.

 

ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து நிற்க முதலில் சுதாரித்த சுவாதி அவனது பார்வையில் முகம் சிவக்க தன் கைகளால் மேல் பக்கம் மறைத்து மீண்டும் பாத்ரூம் பக்கம் செல்ல திரும்பியவள்.அர்ஜூனின் கைகளில் சிக்கினாள்.

“என்ன மேடம் எங்க ஓட பாக்குறீங்க?”

 

“அ..அஜூ…அது வந்து”……    சுதி.

 

“அது வந்து”……   அஜூ.

 

“அஜூ பிளீஸ் அஜூ என்னை விடுங்கள் எனக்கு ஒரு மாதிரி இருக்கு”.     சுதி.

“ஒரு மாதிரினா.எது மாதிரி” என்று கேட்டு கொண்டே தன் இரு கைகளையும் அவளது இடையில் வைத்து நகர முடியாதபடி பிடித்து கொண்டவன் அவள் தோள் வளைவில் முகம் புதைத்து அங்கிருந்த நீரை தன் உதட்டால் துடைத்து கொண்டு இருந்தான் அர்ஜூன்.

 

அவனின் எதிர்பாராத வரவினாலும் திடீர் தாக்குதலிலும் தடுமாறியவள் அவனின் கைகளும் உதடும் எல்லையை மீறி கொண்டு இருப்பதை உணர்ந்தாள்.

“அஜூ முதலில் நாம் இருவரும் பேச வேண்டும் பிறகு”……..

“பேசியது எல்லாம் போதும் இத்தனை வருடங்கள் ஏங்க வைத்த உனக்கு சரியான தண்டனை தராமல் விடமாட்டேன்.அபி கூட பாரு அப்பாக்கு நல்லது செய்யனும்னு வள்ளி அத்தைக்கூட போய்ட்டான் நோ தியரி ஒன்லி பிராக்டிக்கல்” என்று அவளின் துண்டில் கைவைத்தவனை தடுத்தவள்.

“பிளீஸ் அஜூ அந்த லைட் மட்டுமாவது” என்று தடுமாற ஓகே என்று ஒத்து கொண்டவன் லைட்டை அணைத்து விட்டு விடி விளக்கை போட்டான்.

“அஜூ பிளீஸ்” என்றவளின் இதழை தன் இதழ் கொண்டு மூடியவன்.சற்று நேரம் கழித்தே மூச்சு விட அவளை விடுவித்தான்.

“வது குட்டி உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா உனக்கு முழுதாக ஒரு முறை உடை மாற்றியதே நான்தான்.பிறகு எதற்கு இப்படி பண்ணுகிறாய்.உனக்கு சந்தேகம் இருந்தாள் உனக்கு எங்கு எங்கு மச்சம் இருக்கிறது என்று சொல்லவா?”

“ச்சீ… போங்க அஜூ நீங்க ரொம்ப மோசம்.என்னுடன் பேசவே டைம் இல்லாதவர் போல் டெய்லி லேட்டா வருவீங்க,என்னோட முகத்த பாத்து கூட பேசாம இருந்தீங்க,உங்களுக்கு என் மேல் கோபம்னு நெனச்சு நா எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? நீங்க என்னனா இப்ப கூலா வந்து நோ பேச்சுனு சொல்றீங்க” என்று குறைபட்டு கொண்டாவள்.இப்போது மட்டும் என்னை என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

“இப்பவும் எனக்கு நேரம் இல்லை ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று சொன்ன அர்ஜூனை என்ன வேலை என்று அவள் நிமிர்ந்து பார்க்க.குறும்பான அவனது பார்வையே அது என்ன வேலை என்பதை அவளுக்கு தெளிவுபடுத்தியது.

“நோ..நோ.. அஜூ நான் பேசனும்”.    சுவாதி.

 

“உன்ன பேச விட்டாதானே” என்று சொன்னவன் அதற்கு மேல் அவளை பேசவிடாமல் அவனது முக்கிய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.சீண்டல்களுடனும்,சுவாதியின் சிணுங்களுடனும் அங்கு இல்லறம் என்னும் நல்லறம் அரங்கேறியது.

காலையில் கண் விழித்த சுவாதி தான் இருக்கும் நிலை அறிந்து முகம் சிவந்து போனவள்.எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி முகத்தில் பரவி இருக்க சிறு குழந்தையாக தூங்கும் கணவனின் கன்னம் தொட்டு “ஐ லவ் யூ அஜூ” என்று மென்மையாக நெற்றியில் முத்தம் இட்டாள்.மீண்டும் அவள் எழ முடியாத படி இருக்கி கொண்டான் அவளது கணவன்.

 

“நீங்கள் தூங்கவில்லையா” என்று கேட்டவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தவன் “நீ எழுந்திரிக்கும் போதே எழுந்துவிட்டேன் நீ என்ன செய்கிறாய் என்று பார்க்க படுத்திருந்தேன்” என்று சொல்லி சிரித்தவன் கைகளை மேலும் அவள் இடையில் இறுக்கினான்.

 

அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்பதை உணர்ந்தவள் “அபி வந்துடுவான் அஜூ என்னை விடுங்கள்” என்று குரல் குழைய சொல்ல மகனின் பெயரை கேட்டதும் துள்ளி எழுந்த கணவனை பார்த்து சிரித்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்துவிட்டாள்.

காலையில் அனைவரும் டிபன் சாப்பிட வந்தமர்ந்தனர் ஒருவரை தவிர அது நகுலன்தான்.  “கீதா நகுலன் எங்க?”  சுந்தரி.

“அவரு மேல ரூம்லயும் இல்ல அத்த”.  கீதா.

“காலைல டிபன் கூட சாப்பிடாம இவன் எங்க போனான்.எப்ப பாரு பிஸ்னஸ்.சாப்பிடாம கூட என்ன பிஸ்னஸோ.சொல்லிட்டாவது போனானா அதுவும் இல்ல இவன் என்ன நெனச்சுக்கிட்டு இருக்கான் சாயந்திரம் வரட்டும் பேசிக்கிறேன்” என்று திட்டிக்கொண்டே மற்றவர்களுக்கு பரிமாறினார்.

நகுலன் சாப்பிடவில்லை எனவும் கீதாவிற்கு சாப்பாடு இறங்க மறுத்தது.தட்டில் இருந்த இரண்டு இட்லியை அலைந்து கொண்டு இருந்தவள் அனைவரும் சென்றதும் தானும் சாப்பிடாமலே எழுந்து கை கழுவ சென்றாள்.அவளது தட்டில் இட்லி அப்படியே இருப்பதை பார்த்த சுந்தரி “என்ன மா சாப்பிடவே இல்லை” என்று கேட்க.

“இல்லை அத்தை நைட் கேக் சாப்பிட்டது ஒரு மாதிரி இருக்கிறது எனக்கு வேண்டாம்”.  கீதா. “உனக்கு பிறந்த நாள் என்று கேசரி எல்லாம் செய்திருக்கு நீ எதுவுமே சாப்பிடவில்லையே” என்று ஆற்றாமையாக சொன்னார்.

“நான் பிறகு சாப்பிடுகிறேன் அத்தை” என்றவள் இன்னும் அங்கிருந்தாள் எதுவும் சொல்வார்கள் என்று நினைத்து வேகமாக தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்த அர்ஜூன் யோசனையாக புருவத்தை சுருக்கினான். சுவாதியிடம் இதைபற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அன்று முழுதும் நகுலன் எங்கு இருக்கிறான் என்ன செய்கிறான் என்று தெரியாமல் மண்டையை பிய்த்து கொள்ள வேண்டும் போல இருந்தது கீதாவிற்கு.

“மனைவிக்கு பிறந்த நாள் சரி மனைவி தான் இல்ல அட்லிஸ்ட் பிரண்டுனு நெனச்சாவது ஒரு விஷ் பண்ணுணனா.இப்ப எங்க இருக்கான்னு வேற தெரியலா.டேய் நளா ஏண்டா இப்படி படுத்துற.ஒரு வேலை அவனோட லட்ட பாக்க போயிருப்பானோ” என்று கண்டதையும் யோசித்து அவளுக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம்.

“என்னமோ பண்ணு அதுதான் இனி உன் இஷ்டத்துக்கு இருக்கலாம்னு சொல்லிட்டனே” என்று தன்னுடைய மனதுக்கு சமாதானம் செய்வது போல் சொல்லி தன்னை தானே தேற்றி கொண்டாள்.மற்றொரு அறையில் சுவாதி கோபமாக அர்ஜூனை முறைத்து கொண்டு இருந்தாள்.            “எவ்வளவு பெரிய விஷயம் இதை முதலில் சொல்லாமல் என்ன வேலை செய்தீர்கள் நேற்று”.    சுதி.

“ஹேய்……என்னடி என்னை சொல்ற.தப்பு உன் மேலதான்”.  அஜூ.

 

“தப்பு என் மேலயா!?நான் என்ன செஞ்சேன்”.      சுதி.

 

“உன்னை யாரு நான் வரும் போது அப்படி நிக்க சொன்னது. சும்மாவே உன்ன பாத்தா எங்க என்ன கண்ட்ரோல் பண்ண முடியாம போயிடுமோனுதான் நான் வீட்டுக்கு லேட்டா வந்துகிட்டு இருந்தேன்.அப்படிபட்டவன் முன்னாடி நீ அந்த போஸ்ல நின்னா என்ன பண்ணுவேன் சொல்லு” என்று அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொன்ன கணவனை என்ன செய்வது என்று சுதி கோபமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

“அதுமட்டும் இல்லாம மேடம் என்கிட்ட பேச வெயிட் பண்ணிகிட்டு இருக்கறதாவும் என்னுடைய கடைகண் பார்வை படாதானு ஏங்கிகிட்டு இருப்பதாகவும் எனக்கு தகவல் வந்தது.என் வது குட்டிய இனிமே காக்க வைக்ககூடாதுனு வேகமா வந்தனா வந்ததும் உன்ன பாத்து டோடல் பிளாப்”.   அஜூ.

அவனது வார்த்தைகளில் இருந்த கிண்டலை கண்டு கொண்டவள்.இவனை பேசவிட்டாள் இப்படியே பேசி கொண்டே இருப்பான் இவன் வாயை அடைக்க ஒரே வழிதான் இருக்கு என்று யோசித்தவள்.

“சரி நீங்க இப்படிதான் பேசிக்கிட்டு இருக்க போறீங்க.இங்கு யாரும் உங்களுக்கு ஏங்கிகிட்டு இருக்கல.அதனால ரொம்ப பீல் பண்ணாம தூங்குங்க எனக்கு தூக்கம் வருது” என்று படுக்க போனாள்.

“என்னடி இப்படி டக்குனு தூக்கம் வருதுனு சொல்ற கொஞ்சம் பில்டப்பண்ணா எக்ஸ்ட்ராவா எதாவது கிடைக்கும்னு பாத்தா உள்ளதுக்கே மோசம் வந்துடும் போல சரி..சரி..எந்திரி சொல்றேன்”. அஜூ.

“நோ தேங்ஸ் நான் காலைல கீதாவ மிரட்டி கேட்டுக்கறேன்”.

“ஓகே ஓகே போதும் விளையாட்டு.நாம சீரியஸா பேசலாம்”.

 

“அப்படி வாங்க வழிக்கு என்று மனதுள் நினைத்து கொண்டாலும் என்ன அஜூ நீங்க” என்று சலித்து கொள்பவள் போல் காட்டி கொண்டாலும் தோழியின் வாழ்க்கையாயிற்றே என்று கவனமாக கேட்க ஆரம்பித்தாள்.

கீதா,நகுலன்பற்றிய அனைத்து விஷயங்களையும் சொன்னவன் முதல் நாள் இரவு அவர்களுக்குள் நடந்த உரையாடலையும்,அதன் பிறகு நகுலனின் புலம்பலையும் சொல்லி முடித்தவன்.

“நம்மை சேர்ப்பதற்காக அவர்கள் செய்த வேலை இது.இவர்களுக்குள் விருப்பம் இல்லை என்றாலே நாம் ஏதாவது செய்து சேர்த்து வைக்கதான் பார்ப்போம்.இப்போது விருப்பம் இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பின் அவர்களை பிரியவிட கூடாது”.

“கீதாவைபற்றி உனக்குதான் நன்றாக தெரியும் இந்த விஷயத்தில் நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும்”.

“இல்லை அஜூ இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை”.  சுதி.

“என்ன வது இப்படி சொல்கிறாய்”.  அஜூ.

 

“ஆமாம் அஜூ இவர்கள் விஷயத்தில் எனக்கு புரிந்தவரை இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி கொண்டாலே பிரச்சனை இருக்காது.அது மட்டும் இல்லாமல் இருவரும் மற்றொருவரை காதலிப்பதாக ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் எப்படி நாம் ஒன்றாக இருந்தாள் பிரச்சனை குறையும் என்று நினைத்து இருவரையும் அருகருகில் இருக்க வைத்தார்களோ நாமும் அது போல் அவர்களுக்கான தனிமையை கொடுக்க வேண்டும்”.

 

“இப்போது அவர்கள் தனியாகதானே இருக்கிறார்கள்”.

 

“இல்லை அஜூ எனக்கு இந்த சந்தேகம் முதலிலேயே வந்தது. நகுல் ரூமில் இருக்கும் போது இவள் அறை பக்கமே போக மாட்டாள்.இரவும் அபியுடன் விளையாண்டு கொண்டு ஹாலிலேயே டிவி பார்த்து கொண்டு லேட்டாகதான் தூங்க அவள் அறைக்கே செல்வாள்.ஆனாலும் நகுலனுக்கு பிடிக்கும் என்று மீன் சமைத்து கற்று கொண்டு சமைத்தாள்”.

 

“அவருக்கு பிடிக்கும் என்று வாரத்தில் இரண்டு நாட்கள் புடவை கட்டினாள்.உங்களுக்கு தெரியுமா அஜூ கீதுவுக்கு புடவை கட்டவே பிடிக்காது அதனால் புடவை கட்ட பழகவே இல்லை.என்றாவது கோவில் விஷேஷத்திற்கு அவளை புடவை கட்ட வைக்க நானும் அம்மாவும் ரொம்ப கெஞ்ச வேண்டும் அப்போதுதான் கட்டுவாள்.அப்படிபட்டவள் நகுலுக்காக புடவை கட்டுகிறாள் என்றால் அவளுக்குள்ளும் காதல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.அதனால்தான் நானும் சரி கணவன் மனைவி ஊடல் போலும் சீக்கிரம் சரியாகிவிடும் என்று நினைத்து பேசாமல் இருந்தேன்.ஆனால் இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகும் என்று நான் நினைக்கவே இல்லை”.       “கீதாவும் நகுலனை விரும்புகிறாள்.ஆனாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக விலக நினைக்கிறாள் என்று நினைக்கிறேன். அனேகமாக அந்த காரணம் உங்கள் தம்பி காதலிப்பதாக அவளிடம் சொன்ன லட்டுவாக கூட இருக்கலாம். இவர்கள் சேருவதற்கான ஒரே வழி கீதா அமெரிக்கா போவதுதான்”.

 

“ஹேய் வது என்ன சொல்ற அவ அமெரிக்கா போனா இங்க என் தம்பிக்கு பைத்தியம் பிடிச்சுடும்”.  அஜூ.

“நல்லா பிடிக்கட்டும்.அப்பதான் யாரு முதலில் சொல்வது என்று உங்கள் தம்பிக்கு இருக்கும் ஈகோ குறையும்.கீதா நகுலனின் காதல் ஜெயிக்க வேண்டும் என்றுதான் இப்படி செய்கிறாள் என்று நினைக்கிறேன்.இந்த பிரிவு அவளுக்கும் காதலின் பிரிவை புரிய வைக்கும்” என்றாள் குரல் கம்ம.

 

“என்னாச்சு வது?”

 

“எங்கள் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை பாத்தீங்களா அஜூ”.                     சுதி

“என்ன ஒற்றுமை?”

 

“நாங்க ரெண்டு பேருமே நாங்க காதலிச்சவங்க அவங்க காதலிச்சவங்களோட சேரனும்னு நெனைக்கறோம்”.  சுதி.

“ரொம்ப நல்ல ஒற்றுமை.ரெண்டு பேருமே நீங்க செய்யறதுதான் சரினு நெனைக்கற குணம்.மத்தவங்களபத்தியும் அவங்களோட பீலிங்ஸபத்தியும் நினைக்காமா தனக்குதான் எல்லாம் தெரியுனு நெனைக்கற குணம்” என்று இத்தனை நாட்கள் மனதில் இருந்த ஆற்றாமை  வார்தைகளாக வெளி வந்தது.

“இல்ல அஜூ.அது அப்படி இல்ல.உங்கள பிரிஞ்சி வர்ரது எனக்கும் கஷ்டமாதான் இருந்துச்சு.ஆன எனக்கு வேற வழி தெரியவில்லை.நீங்க எவ்வளவு கஷ்டபட்டிங்களோ அதவிட அதிகமா நா கஷ்டபட்டேன்”.

“அபி வயிற்றில் இருக்கும் போது உங்களோட தோள் சாயனும்.அவனோட மூவ்மண்ட்ட உங்ககிட்ட சொல்லனுனு எவ்வளவு ஆச இருக்கும் தெரியுமா,ஆனா அக்காவோட காதலனாச்சேனு அப்ப எல்லாம் என்ன நானே திட்டிக்குவேன்.ஒவ்வொரு முறை கீதா என்ன அழகா இருக்கடினு சொல்லும் போதும் இந்த அழகு அவனுக்கு பிடிக்கவில்லையே என்ற ஏக்கம்தான் வரும் ஏன் என்னை அவனுக்கு பிடிக்கவில்லை என்ற கேள்வியை எனக்கு நானே பலமுறை கேட்டுக்குவேன்” என்றவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

“கீதா,வள்ளிமா,ராகவ் அப்பா இல்லனா நா இல்ல அஜூ. எவ்வளவு அக்கறையா பாத்துக்கிட்டாங்க தெரியுமா. அவங்களோட இன்னோரு பொண்ணுனுதா எல்லாரும் அங்க நெனச்சுக்கிட்டு இருந்தாங்க”.

“ஹாஸ்பிட்டல உங்கள முதல்ல பாத்தவுடனே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா ஆனா  கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை பெற்று கொண்ட என்னபத்தி உங்க வீட்ல என்ன நினைப்பாங்களோங்கற எண்ணம் தலை குனிய வச்சது”.

“இப்ப எதுக்குடா அதெல்லாம்.அதுதான் எல்லாம் சரியாகிடுச்சே”.    அஜூ.

“இல்ல அஜூ இன்னைக்கு நான் உங்களோட இருக்கனா அதுக்கு முழு காரணம் கீதா.அவ வாழ்க்கையும் நல்லா ஆகனும் அப்பதான் எல்லாம் சரியாகிடுச்சினு அர்த்தம்”.

 

“நாமதான் ஒண்ணும் பண்ண கூடாதுனு சொல்லிட்டியே? அப்புறம் எப்புடி?”

“அவர்களோட காதலே அவர்களை சேர்த்து வைக்கும் அஜூ”.

 

“நான் உங்களுடன் பேச வேண்டும் என்று நேற்று சொன்னது இதைபற்றிதான் ஆனால் நீங்கள்தான் என்னை பேசவே விடவில்லை”.

“எனக்கு புரியுது வது.ஆனா நடந்து முடிந்த விஷயங்களை பேசி என்ன பயன்.நாம கஷ்டப்பட்ட நாட்களை மீண்டும் நினைப்பதைவிட இனி வரும் நாட்களை எப்படி மகிழ்ச்சியாக்குவது என்றுதான் பார்க்க வேண்டும்”.

“இல்ல அஜூ நீங்க எப்படி உங்களோட காதல எனக்கு புரிய வச்சீங்களோ அதே மாதிரி நானும் என்னோட காதல உங்ககிட்ட சொல்லனும் என்றவள் திருமணத்திற்கு பிறகு தான் இருதலை கொள்ளி எறும்பாக துடித்தது.ஊருக்கு சென்ற போது அர்ஜூன் பேசியதை கேட்டு மனம் தெளிந்தது.கோவிலுக்கு சென்ற போது ரம்யாவை சந்தித்தது என்று அனைத்தையும் சொன்னவள் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா அஜூ”.

“வீட்டில் மாலதியின் டைரியில் உங்கள் போட்டோ பார்த்து எத்தனை நாட்கள் அழுதேன் என்று தெரியுமா?”என்றவள் அந்த நியாபகத்தில் இன்றும் கண்ணீர் சிந்தினாள்.

“ஆனால் பாருங்க அஜூ எனக்கு மாப்பிளை பார் என்று விளையாட்டுக்கு நான் சொன்னதை கூட அப்படியே செய்துவிட்டாள்.அவள் ரொம்ப நல்லவ அஜூ சத்தமாகூட பேசமாட்டா அவளுக்கு ஏன் அஜூ அந்த கடவுள் இப்படி ஓர் முடிவை கொடுத்தார் என்று அழுகையினுடே பேசினாள்”.

 

“அவள் மனதில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் வெளியில் வந்தால்தான் அவளுக்கு மன அமைதி கிடைக்கும் என்று அவளை பேச விட்டு அமைதியாக காத்திருந்தான் அஜூ”.                                   அம்மாவைபற்றி சிறிது நேரம் மாலதிபற்றி சிறிது நேரம் என்று பேசி அழுதுகொண்டே அவன் தோளில் சாய்ந்து தூங்கி போனாள்.

சிறு குழந்தையென தூங்கும் தன் மனைவியை பார்த்தவன். “இந்த சின்ன வயதில் இவள் எவ்வளவு கஷ்டம் அனுபவித்து இருக்கிறாள்.இதில் நான் வேறு இவள் கஷ்டத்திற்கு காரணம் ஆகிவிட்டேன்.இனி இவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர் வர விட மாட்டேன்” என்று தனக்குள் சொல்லி கொண்டவன் அவளை அணைத்தவறே தூங்கி போனான்.

 

அன்று முழுவதும் தான் எங்கிருக்கிறேன் என்பதை கூட யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து விட்டு இரவு ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தான் நகுலன்.தன்னிடம் இருந்த மற்றொரு சாவி கொண்டு உள்ளே வந்தவன் மீண்டும் கதவை மூடிவிட்டு தன் அறைக்கு சென்றான்.

 

கீதா அங்கு எப்போதும் தான் படுக்கும் இடத்தில் படுத்து கொண்டு இருந்தாள்.ஆனால் என்ன கண்ணில் கண்ணீர் கரையுடன் உறங்கி இருந்தாள்.

அவள் முகத்துக்கு நேராக தன் முகத்தை வைத்தவன் அப்படியே கீழே உட்கார்ந்து அவள் விழித்திருப்பது போல் அவளுடன் பேச ஆரம்பித்தான்.

“நீ எதற்காக அழுகிறாய் என்னை அழ வைத்துவிட்டு உனக்கு என்ன வந்தது என்று இந்த அழுகை.நீ தான் அமெரிக்கா போக போகிறாயே பிறகு ஏன் இந்த கண்ணீர்.உன் கனவு நிஜமாகிவிட்டது வாழ்த்துக்கள் கீது மேடம்” என்று பேசி கொண்டே தூங்கி போனான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4

“அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான்” என்று சொன்னவுடன். “வாட்”  என்று கத்திவிட்டாள் பிறகு சுற்றுபுறத்தை அறிந்து அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டி அமர்ந்தவள். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்டாள். தோழியின் குணத்தைபற்றி அறிந்ததால்.இனி சுவாதியின்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 10சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 10

அடுத்த நாள் எப்போதும் போல் லட்சுமியை செக் செய்ய சென்றவன்.சுவாதி வீடு கும்பலாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க “சுவாதி அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம் அதனால் இன்றே நிச்சயமும்.ஒரு வாரத்தில் திருமணம்” என்று ராம் வீட்டில் இருந்து வந்து பேசி

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 14சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 14

காலையில் எழுந்து மனைவியை தேடிய நகுல் அவளை காணாமல் கீழே சென்றான்.செல்லும் முன் ஒரு முறை கண்ணாடியை பார்த்துவிட்டு சென்று இருக்கலாம் விதி யாரை விட்டது.               அம்மா காபி என்று அமர்ந்தவன் அப்பா தன்னை விசித்திரமாக பார்ப்பதை பார்த்து “என்னப்பா அப்படி