ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39

39 – மனதை மாற்றிவிட்டாய்

மறுநாள் அனைவரும் மகிழ்ச்சியோட விழிக்க ஆதியின் வீட்டிலே நிச்சயம் என்பதால் பரபரப்பாக அனைவரும் வேலை செய்துகொண்டு ஆதிக்காக காத்திருக்க ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அந்த சூழலை கண்டு முதலில் திகைக்க அவனின் கண் முன்னால் தேவதையாக ஜொலிக்கும் தன்னவளை விழியகல பார்த்தவன் சுற்றி இருந்த அனைவரும் மறக்க ஏனோ தோன்றியவனாக அவளிடம் இருந்து பார்வையை அகற்ற

அபிசார், கொஞ்சம் மிச்சம் வைங்க. உங்களுக்கு தான் இன்னைக்கு நிச்சயம். அதனால ரெடியாகி வாங்க மொதல்ல.” என கிண்டலுடன் கூற அவனுக்கோ அவளிடம் இன்னும் தெளிவு பெறாத பல விஷயங்கள் இருக்க அதை அறிந்துகொள்ள எண்ணியவன்

நான் திவிகிட்ட தனியா பேசணும்என்றான்.

அனைவரும் அவனை வம்பிழுத்து அதெல்லாம் நடக்காது. ஒழுங்கா போயி ரெடியாகு. எதுன்னாலும் அப்புறம் தான் என விரட்டினர்.

அவனும் மேலே சென்று என்ன நடந்தாலும் சரி, யாரு என்ன சொன்னாலும் சரி நிச்சயம் நடக்கறதுக்கு முன்னாடி அவகிட்ட பேசிட்டு தான் அடுத்த வேலை.

திவி சொல்லட்டும் என்ன லவ் பன்றேன்னு அப்புறம் எந்த பிரச்சனைனாலும் நான் பாத்துக்கறேன். அந்த வார்த்தை அவகிட்ட இருந்து கேட்டா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும் என முடிவெடுத்து தயாராகி வர அனைவரிடமும் நான் திவிகிட்ட பேசணும் என அனைவரும்ஒரு சேர கத்த,

மதிடேய் நல்ல நேரம் முடியறதுக்குள்ள நிச்சயம் பண்ணனும். அப்புறமா 2 பேரும் பேசிக்கோங்க.” என தடுத்துக்கொண்டிருக்க ஆதிக்கு கொரியர் ஒன்று வந்தது.

அம்மு வாங்கியவள் ஆதி அண்ணாவுக்கு என்று கத்திகொண்டே வரயாருஎன்றான்.

தெரில அண்ணாஏதோ பெண்டிரைவ் கவர்ல இருக்கு. போஸ்டல் மேலையே குறிப்பில் இருந்ததை அவள் படிக்க

தங்களின் நிச்சயத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நிச்சயம் துவங்கும் முன்பு இதை கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டும். இது தங்களின் குடும்பத்திற்கான பரிசு.

இப்படிக்கு தங்களின் நலம் விரும்பி

சுபி அந்த பெண் டிரைவை அம்முவிடம் இருந்து பறித்துகுடும்பத்தோட பாக்கணும்னு தானே இருக்கு. சோ நான் இப்போவே போடப்போறேன்.” என்று அவள் கனெக்ட் செய்ய அனைவரும் ஆவலுடன் பார்க்க முதலில் ஆதியின் குடும்பம், கோவிலில் அம்மு, அர்ஜுனின் நிச்சயம் என சில படங்கள் வர அனைவரும் மகிழ்வுடன் பார்க்க முக்கியமாக திவியின் குறும்புகள், கோபம், சிரிப்பு, என பல விதவிதமான ரியாக்ஷனில் இருக்க ஆவலுடன் அனைவரும் பார்த்து அவளை வம்பிழுத்து கொண்டிருக்க இறுதியில் ஒரு வீடியோ வந்தது.

அதில் திவி பேசியது.

அவங்க கல்யாணம் பண்ற அளவுக்கு பேசுறமாதிரி நான் இருந்திருக்கேன்னா சொத்து எனக்குதானே வரும். எல்லாரையும் பத்தி சரியா யோசிச்ச நீ, என் விசயத்துல தப்பு பன்னீட்டியே? நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் இல்ல. ஓகே உனக்கு மொதல்ல இருந்து சொல்றேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஆசை. நிறையா பணம் இருக்கனும். கணக்கு பாக்காம செலவு பண்ணனும். லைப்ப என்ஜோய் பண்ணனும்னு. மதி அத்தை பாமிலய அங்க பாத்தபோதே டிசைட் பண்ணிட்டேன். வெளில சுத்தாமா, பிரெண்ட்ஸோட இருக்காம வேலை இல்லாமலா தினமும் அவங்ககூடவே இருங்கறது அந்த பேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்றதுன்னு இருந்தேன். எல்லாமே அவங்க சொத்துக்குத்தான். ஆனா எனக்கு டிஸ்டர்ப் பண்ணி, பழிவாங்கி சொத்தை அடையறது இன்டெரெஸ்ட் இல்ல. யோசிச்சு பாரு அப்டி பண்ணாலும் என்னைக்காவது உண்மை தெரிஞ்சிடுமோ என்னாகுமோன்னு யோசிக்கணும், அதுக்கு தனி பிளான் பண்ணனும். ஒருத்தர் ஒத்துக்கிட்டாலும், இன்னொருத்தர் பிரச்னை பண்ணுவாங்க. இப்போ உனக்கு இருக்கே அந்த மாதிரி. இட்ஸ் சோ காம்ப்ளிகேட்டேட்ல. அதான் உரிமையா உள்ள போயி உக்காந்திட்டா யாரும் எதுவும் பண்ணமுடியாது. இத்தனை வருஷமா அவங்ககூட இருக்கேன். ஒரு ஒருத்தருக்கும் என்ன என்ன வேணும்/ எப்படி பேசணும். என்ன மாதிரி சொன்ன கேப்பாங்கனு எல்லாமே தெரியும். அந்த வீட்ல எனக்கான உரிமை ரொம்ப இருக்கு அதுவும் இப்போ சொல்லவே வேண்டாம். உனக்கே தெரிஞ்சிருக்கும். நீ அவங்களுக்கு பிரச்சனை குடுத்தாலும் அத நான் தடுக்க தடுக்க எனக்கான வேல்யு அதிகம்தான் ஆகும். இல்ல அந்த பிரச்சனைல அவங்க பாதிச்சாலும் அவங்களுக்கு ஆறுதல் சொல்றேன்னு அவங்ககூடவே இருப்பேன். அப்போவும் அவங்க என் பேச்சை தான் கேப்பாங்க. எனக்கும், ஆதிக்குமான கல்யாணத்த நிறுத்துனாகூட உங்கனால தான் பிரச்னை அதுவும் சொத்துக்காகத்தான். அபி, அம்மு, அனு பேர்ல பாதி பாதியா எல்லாம் இருந்தா அவங்களுக்கு இண்டிரெக்டா பிரச்சனை குடுப்பாங்க. சோ என் பேர்ல சொத்து இருங்கட்டும் அப்போதான் பிரச்சனை பண்ண யோசிப்பாங்கன்னு சொன்னா கண்டிப்பா எழுதி குடுத்துடுவாங்கஒரு பார்ட் ஆதிக்கு. அதுவும் இப்போ எழுதி வாங்குறதுல பெரிய ப்ரோப்லேம் இருக்காது. அண்ட் இன்னொன்னு என்ன சொன்ன? ஆதியை லவ் பன்ரேன்னா? அவரு பன்றாரு. நான் வாய திறந்து இதுவரைக்கும் அவர்கிட்ட லவ் பன்றேன்னு எப்போவாது சொல்லிருக்கேனா? வீட்ல மேரேஜ் பண்ணறதும் அவங்களோட இஷ்டம். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இவரு லவ்வே பண்ணாடியும் இந்த மேரேஜ் டிஸ்கேசன் நடந்திருக்கும். ஆதி ரொம்ப நேர்மையா யோசிப்பாரு. அதனால அவரை கன்ப்யூஸ் பண்றதுக்கு தான் இத்தனையும். அவரு என்கிட்ட அவரோட பீலிங்ஸ காட்டுனாலும் நான் அத முழுசா தடுக்கவுமில்லை, ஏத்துக்கவுமில்லை. ஒருவேளை பின்னாடி ஏதாவது ப்ரோப்ளேம்னாலும் ஆதிகிட்ட சொல்லிடுவேன். நான் லவ் பன்றேன்னு சொன்னேனா. பாமிலில தானே டிசைடு பண்ணாங்கன்னு. அவரும் எதுவும் சொல்லமுடியாம போய்டுவாரு. சோ நீ அந்த குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னை பண்ணாலும் எனக்கு கவலை இல்ல. யாரு என்ன பண்ணாலும் எனக்கு வேணும்கிறது தானா கிடைக்கும். அதனால உன் பிளான்ஸ மத்தவங்ககிட்ட வெச்சுக்கோ. என் பக்கமா திருப்ப பாத்த நான் என்ன சொன்னாலும் செய்ய மொத்த குடும்பமும் இருக்கு. ஆதியும் சேத்தி தான்..

நானா நம்ப சொன்னேன்.”

திவிஇன்னும் சின்ன புள்ள மாதிரி திங்க் பண்ணாத, ஆதியோட பவர் தெரியாம பேசிட்டு இருக்க. என்ன நீ கொல்ல ட்ரை பண்ணாலும் ஆதி என்ன சாகவிடமாட்டாரு. எனக்காக செலவு பண்ணி காப்பாத்த மொத்த குடும்பமும் இருக்கும். ஒருவேளை கொன்னாலும் அந்த குடும்பத்துக்கு நான் தியாகி தான். முக்கியமா ஆதி அதுக்கு காரனமானவங்கள கண்டுபுடிக்காம இருப்பாரா சொல்லு. கண்டுபுடிச்சு அணு அணுவா சித்ரவதை பண்ணி கொல்லுவாறு. அவரால என்னை மறக்க முடியாது. அதனால நீ நினைச்சது நான் செத்தாலும் நடக்காது. சொத்தும் உனக்கு வராது. அந்த சொத்து ஒட்டுமொத்தமா எனக்கு தான். அடிச்சாக்கூட எந்திருக்கறது ஈஸி தான். ஆனா இவ்ளோ பாசமா இருந்திட்டு நம்ப வெச்சு ஏமாத்துனா அவ்வளோ சீக்கிரம் அந்த வலில இருந்து வெளில வரவும் முடியாது. அடுத்து யாரையும் உடனே நம்பவும் மனசுவராது. கரெக்ட் தானே. “

என்று சில இடங்களில் எடிட் செய்து திவி பேசியதை மட்டும் அந்த விடீயோவில் காட்ட அவளை முழுதாக தவறானவள் என சித்தரிப்பது போல இருந்தது அந்த வீடியோ.

கூட்டத்தில் ஈஸ்வரியுடன் சேர்ந்து ஒரு சிலர் சலசலக்க, அடிப்பாவி இப்படி பண்ணிட்டாளே. எவ்வளோ நம்புனாங்க. என்ன இருந்தாலும் குடும்பத்துக்குள்ள இருக்கற மாதிரி வருமா. வெளில இருந்து வந்தவ தானே. அவளுக்கு எங்க பாசமெல்லாம் புரியப்போகுது. இவளை போயி நம்பி ….என ஆரம்பிக்க அனைவரையும் அடக்கிய ஆதி நேரே திவியிடம் சென்று

நீ சொல்லு இது நீயில்லேல்ல? ” என முழு நம்பிக்கையுடன் கேட்டான்

ஈஸ்வரிஎன்ன ஆதி, இவளோ நாள் நடிச்சவளுக்கு ஒரு பொய் சொல்ல தெரியாதா? அவகிட்ட போயி இன்னும் கேக்குற.?”

ஆதிபோதும் நிறுத்துங்க ….” என்று அடக்கியவன் அவளிடம் திரும்பிஎன்கிட்ட பொய் சொல்லமாட்டா அவ

என்றவன்சொல்லு அந்த மாதிரி நீ பேசல தானே? “

திவிஆதி நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க…. அது ஏன்னு. ..” கையமர்த்தி நிறுத்தியவன்எனக்கு வேணும்கிறது பதில், விளக்கம் இல்ல. சே எஸ் ஆர் நோநீதான் அப்டி பேசுனியா? “

அவனின் கேள்வியில் இருந்த உறுதி, கோபம், கண்டவள்ஆமாஎன்றாள்.

ஆதி அப்டியே சோபாவில் அமர்ந்துவிட்டான். அங்கு இருந்த அனைவர்க்கும் பேரதிர்ச்சி திவியா இப்டி என்றளவிற்கு ஆடிப்போயிருந்தனர்.

திவி மண்டியிட்டு ஆதியிடம்ப்ளீஸ் ஆதி, நீங்க கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நான் எதுனால அந்தமாதிரி பேசுனேன்னு சொல்றேன். உங்ககிட்ட சில விஷயம் தனியா பேசணும். அதுக்கப்புறம் முடிவு பண்ணுங்க.”

ஈஸ்வரிதனியா கூட்டிட்டு போயி பேச போறியா? இல்ல மயக்கபோறியா? “

திவிச்சீய்…. வாய்மூடுங்க .இப்டி பேச அசிங்கமா இல்ல.”

அவள் கன்னத்தில் விழுந்த அறை அவளின் தந்தைஅசிங்கத்தை பத்தி நீ பேசுறியா? உன்ன என்னமாதிரி வளத்தோம்னு ஒரு ஒரு நிமிஷமும் பெருமை பட்டோம். இப்டி மொத்தமா குழிதோண்டி பொதச்சிட்டியே? “

அப்பா….நான்..”

அவளது அம்மா அருகில் வந்துவேண்டாம் இனி அம்மா, அப்பா கூப்பிடாத. எங்க பொண்ணு செத்துட்டான்னு நினைச்சுக்கறோம். ….”

இப்படி ஒரு இடத்துல இருந்தா பொண்ணு எடுக்கணும் என சலசலப்புடன் வேண்டாம் என்றுவிட்டு வெளியேறினர்தர்ஷனிக்கும் வரன் பார்த்த குடும்பஸ்தர்கள்.. அவளுக்கும் வரன் அமைந்துவிட திவி ஊரில் இருந்து வந்ததும் இவள் கல்யாணம் முடிந்தவுடன் அவளுக்கு செய்துவிடலாம் என எண்ணினார்கள்.

இதை கண்ட திவிராஜீ மா, அவங்கள கூப்பிடுங்க. ராஜாப்பா நீங்களாவது சொல்லுங்க அவங்ககிட்ட…”

ராஜாஎன்ன சொல்ல சொல்ற. உன்ன என் பொண்ணா நினைச்சு வளத்தேன். இப்போ உன்னால என் பொண்ணு வாழ்க்கை இப்டி ஆயிடிச்சு. இன்னும் எங்களை யார்கிட்ட போயி கெஞ்சி தலை குனிஞ்சு நிக்க சொல்ற? ” எனவும்

என் தம்பி பொண்ணு என்றுகூட சொல்லாமல் என் பொண்ணு என்றே அழைத்தவர் அவ்வாறே அனைவர்க்கும் அறிமுகப்படுத்தியவர் என் மேல் உயிராய் இருந்தவர் என்னால் பெருமைபட்டவரா இப்டி ஒரு வார்த்தை கூறியது. அவரு பொண்ணோட வாழ்க்கைய கெடுதிட்டேனா? அப்போ நான் யாரு? என எண்ணியவள் சிவா, ரஞ்சி, தர்ஷி என அனைவரிடமும் சொல்லஅண்ணா, அண்ணி நீங்களாவது சொல்லுங்க. நான் தப்பு பண்ணல. தர்ஷி, நீ அம்மா அப்பா கிட்ட சொல்லு ப்ளீஸ்.

நான் உன் லைப்ப கெடுக்கமாட்டேன்..நீ என் தங்கச்சி. நான் எப்படி உன் வாழ்க்கையில..நான் அவங்ககிட்ட பேசுறேன்.

சிவாவேண்டாம் திவி, என் தங்கச்சியோட வாழ்க்கையை நானே பாத்துக்கறேன். நீ தலையிடாத

திவிக்கு அண்ணாவ கூறியது என யோசிக்கும் முன்

ஈஸ்வரி பாட்டியிடமும், மதியிடமும் வந்துஎன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண கேக்கும்போது ரொம்ப செலவு பண்ணுவா? பணத்துக்காக தான் பண்ணுவான்னு எல்லாம் சொன்னிங்களே? உங்க பேரனோட மனசு, உயிரு, சொத்து, மானம்னு எல்லாத்தையும் எடுத்துட்டு போக வந்திருக்காளே. இவளை நினைச்சு தான் என் பொண்ண வேணாம்னு சொன்னிங்களா? பாம்புக்கு பால் வார்த்திருக்கியே சந்திரா? ” என குத்திக்காட்ட

சேகர் திவியிடம்ஏன் மா இப்டி பண்ண?”

மாமா, என் மருமக எது செஞ்சாலும் காரணம் இருக்கும்னு சொல்லுவிங்கள்ல, எப்போவும் என் மேல நம்பிக்கை இருக்குன்னு சொல்லுவீங்கள. ப்ளீஸ் மாமா என்ன நம்புங்க. நான் அப்படி இல்ல.” என கெஞ்ச

மதிசரி, அது என்ன காரணம், ஏன் அப்டி பேசுனேனு சொல்லு. எல்லார் முன்னாடியும்.” அனைவரும் அதை ஒப்புக்கொண்ட அவள் கூறும் பதிலை எதிர்நோக்க

திவி மதியை பாவமாக பார்த்துவிட்டுசாரி அத்த, ஆதியை தவிர வேற யார்கிட்டேயும் அத சொல்லமுடியாது..”

அவளை அறைந்த மதிஇங்க உன்ன எல்லாரும் என்ன என்ன பேசிட்டு இருக்காங்க. நானும் பொறுமையா கேக்குறேன். உன் இஷ்டத்துக்கு ஆடுற நீ. என்கிட்ட கூட சொல்லமுடியாத அளவுக்கு விஷயமா? ஆனா நல்லா கேட்டுக்கோ. இத்தனை பேர் முன்னாடி உன்ன பத்தி தப்பானவன்னு காட்டுறமாதிரி எல்லாம் நடந்துபோச்சு. இதுக்கு மேல நீ அவனை கல்யாணமே பண்ணாலும் இந்தமாதிரி ஊர்ல எல்லாரும் ஒரு ஒரு மாதிரி என் பையனுக்கு பின்னாடியும், முன்னாடியும் பேசத்தான் செய்வாங்க. அதுக்கு நான் இடம் கொடுக்கமாட்டேன். நீ பண்ண விஷயம், சொல்ற காரணம் சரின்னா எல்லார் முன்னாடியும் இங்கேயே சொல்லு. இல்ல இந்த கல்யாணத்துக்கு நானே சம்பாதிக்கமாட்டேன்.”

அம்மு, சுபி, அனு, அபி, அரவிந்த் எல்லாரும் கோபமும், குழப்பமும் கலந்த நிலையில் நிற்க அனைவரிடமும் கெஞ்சிய திவி கடைசியாகஅப்போ யாரும் என்ன நம்பமாட்டீங்களா? இவ்வளோ நாளும் நானும் உங்ககூடத்தானே இருந்தேன். என்ன நீங்க தானே வளத்துனீங்க. இத்தனை வருசமா பாத்த குணத்தை, உங்களோட வளர்ப்பை இந்த ஒரு வீடியோ பொய்யாகிடுச்சுல்ல? ” என யாரும் தான் கூறுவதை கேட்காமல் இப்டி நடந்துகொள்கிறார்களே என்ன நம்பலையா? யாருமே என இயலாமையோடு கேட்டவளை கண்டு அனைவரும் கண் கலங்கினர் அவள் தானே கூறினாள் அவ்வாறு பேசியது தான் தான் என்று பின் என்ன செய்வது என அமைதியாக இருக்க திவி இருந்தும் விடாமல்

ஆதியிடம் சென்றுஆதி, ப்ளீஸ் நீங்க என்னை பாருங்க. நீங்க இப்டி இருக்காதீங்க கஷ்டமாயிருக்கு. எனக்கு ஒரு சான்ஸ் குடுக்கமாட்டீங்களா? என்ன நம்புங்க ஆதி. உங்ககிட்ட நான் நடந்தது எல்லாம் சொல்றேன். இங்க யாருமே என்ன நம்பலையாம். எனக்கு கவலை இல்ல. நீங்க ஒருதடவை சொல்றத கேளுங்க ஆதி ப்ளீஸ். நீங்க என்ன நம்புறீங்க தானே. நீங்க எதுன்னாலும் சொல்லுங்க. நான் செய்றேன், கேக்கறேன் . நீங்க இப்டி இருக்காதீங்க. ” என அவன் கையை பிடித்துக்கொண்டு அவள் கெஞ்ச

அவளை நேராக பார்த்தவன் கையை விலக்கிவிட்டுஉன்ன ஒருத்தரும் ஒரு குறையும் சொல்லக்கூடாதுனு நினச்சேன். ஆனா இன்னைக்கு ஊரே கூடிநின்னு உன்ன தப்பா பேசுற அளவுக்கு கொண்டுவந்திட்டேயேடி.அதுவும் நம்ம மொத்த குடும்பமும் கூட. … ப்ளீஸ் என்னால முடில திவி . எனக்காக ஒன்னு செய்யறீயா? “

அவள் தலையசைக்க

என் முகத்தில முழிக்காத. போயிடு.” என்றான்.

கலங்கிய விழிகளில் கண்ணீர் வர தயாராக இருக்க அதை கண்ட ஆதி அதை தடுக்கும் வழியின்றி தன்னை அடக்கிக்கொண்டு எழுந்துவிட அவளும் விழி மூடி வந்த கண்ணீரை அடக்கியவள் அடுத்து ஒருவரிடமும் எதுவும் கூறாமல் யாரையும் பார்க்காமல் அந்த இடத்தை விட்டே வெளியேறிவிட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 12கபாடபுரம் – 12

12. அந்த ஒளிக்கீற்று   இருளில் எங்கிருந்தோ எதிர்வந்த அந்த ஒற்றை ஒளிக்கீற்றே கரைகாணாப் பேரிருளுக்குப் பின் விடிந்து விட்டாற் போன்ற பிரமையை உண்டாக்கிற்று அவர்களுக்கு.   “மற்றொருவருடைய ஆட்சிக்குட்பட்ட கோ நகரத்தில் இப்படியொரு இருட்குகை வழியைப் படைக்கும் துணிவு வர

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32

32 தாம்பூலத்தட்டை துரைப்பாண்டியின் சார்பாக மாதவனின் தந்தை நல்லசிவம் தர, நாகரத்தினம் பெற்றுக் கொண்டாள். தடுக்கும் வழி தெரியாத சுஜி அறையில் போய் அமர்ந்து விட்டாள். பரிசப் பணமா தந்த இருவதஞ்சாயிரத்துக்கு நமக்கு என்ன வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள்

KSM by Rosei Kajan – 6KSM by Rosei Kajan – 6

அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… Download Nulled WordPress ThemesFree Download WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload Nulled WordPress Themeslynda course free downloaddownload redmi firmwareDownload Premium WordPress Themes FreeZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=