Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17

திருமணத்தில் நடந்ததை சொன்ன ரம்யா. “எவ்வளவு கஷ்டபட்டு அந்த போட்டோ எல்லாம் வாங்கினாள் தெரியுமா அவரோட வீட்டு அட்ரஸ் அவரோட வேலை எல்லாம் கலெக்ட் பண்ணி சேட்டிஷ்பைட் ஆனவுடன் உனக்கு சர்ப்ரைஸா,நீ டூர்ல இருந்து வந்ததும் சொல்லலாம்னு காத்திருந்தோம் ஆன அதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சு.எப்படியோ மாலதி ஆசபட்டமாதிரி நீங்க ரெண்டு பேரும் சேந்தீங்களே அதுவே எனக்கு போதும்.சரி நா கெளம்பறேன் டைம் இருந்தா வீட்டுக்கு வர்றேன் சரியா பாய்”.

ரம்யா சொன்னதை கேட்ட இருவருக்கும் மனதில் அவ்வளவு நிம்மதி ஏற்பட்டது.கீதாவிற்கு இனி தோழியின் வாழ்வில் எந்த பிரச்சனையும் வராது.நாம் அமெரிக்கா செல்ல ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்றும்.

“மாலதி என் அஜூவை விரும்பவில்லையா எனக்கு என் குட்டிமா பார்த்த மாப்பிள்ளைதான் என் அஜூவா.சாரி அஜூ இது தெரியாமல் உன்னையும் வதைத்து என்னையும் வதைத்து கொண்டேன்” என்று தனக்குள் பேசி கொண்டவள் முகம் பிரகாசிக்க வீட்டிற்கு கிளம்பினர் இருவரும்.

அன்று இரவே அனைவரும் சென்னைக்கு கிளம்பினர். மறுநாள் தன்னுடைய சென்னை பிரான்ச்சுக்கு வேலையை மாற்றி கொண்டு வந்திருந்த கீதா அமெரிக்கா செல்வதற்கு தன்னுடைய ஒப்புதலை மெயிலில் அனுப்பிவிட்டு காத்திருந்தாள்.ஏற்கனவே யாரை அனுப்புவது என்று மண்டையை போட்டு உடைத்து கொண்டு இருந்த அவளின் புராஜெக்ட் மேனேஜர் இவளின் மெயிலை பார்த்தவுடன் சந்தோஷமாகி ஓகே செய்துவிட்டார்.

சென்னை வந்ததில் இருந்து அர்ஜூனிடம் எப்படி பேசுவது என்று பலமுறை ஒத்திகை பார்த்தும் ஒன்றும் ஒர்க் அவுட் ஆகாமல் கண்ணத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் சுவாதி.    கடமைக்காக என்ற அவளின் வார்த்தை அர்ஜூனை அதிகம் காயபடுத்தினாலும் சுதியை பார்க்கும் போது எல்லாம் அவனுள் எழும் தவிப்பை அடக்க முடியாமல் ஹாஸ்பிட்டலில் தன் வேலையை அதிகமாக்கி கொண்டு லேட்டாக வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.                           சுவாதியை பார்ப்பதையே தவிர்த்தான்.இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சுவாதி திகைத்துவிட்டாள்.

இப்படியே நாட்கள் செல்ல இரண்டு வாரத்தில் அமெரிக்கா செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாள் கீதா வீட்டில் இருப்பவர்களிடம் முக்கியமாக சுவாதியிடம் எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தாள்.அப்போது அவர்களது அறைக்கு வந்த நகுலன் கீதா ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை பார்த்து இவளுக்கு என்ன ஆச்சு.                                                  ஏன் இப்படி இருக்கிறாள் என்று யோசித்து கொண்டே பாத்ரூம் சென்று உடை மாற்றி கொண்டு வந்தவன். எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டும் கீதாவின் முகத்தை அப்பப்போ பார்த்து கொண்டும் இருந்தான்.

நகுலன் வந்ததை கவனிக்காத கீதா அவள் போன் அடிக்கவும் யார் என்று எடுத்து பார்த்தாள்.சுவாதிதான் அழைத்திருந்தாள்.

“இவ எதுக்கு வீட்டுக்குள்ள இருந்துகிட்டே போன் பண்றா?ஹலோ!என்னடி இங்க இருந்து கிட்டே போன் பண்ற.ஏதாவது பிராப்ளமா?”   கீதா.

“அது எல்லாம் ஒண்ணும் இல்ல நீ முதல்ல மேலே மொட்ட மாடிக்கு வா”.     சுவாதி.

“ஹேய் என்ன விளையாடறியா?நைட் பதினோரு மணிக்கு போன் பண்ணி மொட்ட மாடிக்கு கூப்பட்ற.நா வர மாட்டேன்.இது பேய் வாக்கிங் போற டைம்”.   கீதா.

“அடியேய்,நீ இப்ப வரல,நானே அங்க வந்து இழுத்துட்டு வந்துருவேன்.ரொம்ப முக்கியமான விஷயம்.இல்லனா உன்ன இந்த நேரத்துக்கு கூப்புடுவனா?உன்ன தவிர எனக்கு ஹெல்ப் பண்ண யாரு இருக்கா?”

“சரி,சரி,ஓவரா சென்டிமண்ட்ட புளியாத.நான் வர்றேன்”.           கீதா.

“இவளுக்கு என்னாச்சு.அதுதான் ஊர்லயே எல்லா பிரச்சனைக்கும் தெளிவு கிடைச்சுருச்சே இன்னும் இவளுக்கு என்ன பிரச்சன.போனா தெரிய போகுது.சரி கிளம்புவோம்” என்று எழுந்தவள் அப்போதுதான் நகுலனை கவனித்தாள். “இவன் எப்ப வந்தான் என்று யோசித்து கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் மாடியை நோக்கி சென்றாள்”.

 

“லட்டு….வர வர உனக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சு.இங்க ஒருத்தன் உட்கார்ந்து இருக்கானே அவனிடம் சொல்லிட்டு போவோம்னு தோணுதா.நீ என் கையில மாட்றநாள் ரொம்ப தூரம் இல்ல.அன்னைக்கு உனக்கு இருக்கு” என்று மனதுக்குள் அவளை செல்லமாக வைது கொண்டு இருந்தவன்.சிக்னலுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

“ஹேய்…ஏண்டி இப்படி படுத்தற.நைட் இந்த நேரத்துல கூப்ட்டு பேசற அளவுக்கு என்ன முக்கியமான விஷயம் சீக்கிரம் சொல்லு. கீழ போயிடலாம்”.  கீதா.

“அது வந்து….அது வந்து…எப்படி கேட்கறதுனு தெரியல அதான்”. சுவாதி.

“ஏய்…. என்ன கொலைகாரி ஆக்காதடி.நானே கடுப்புல இருக்கேன்.இவ்வளவு நாளும் வாயிலதானே என்கிட்ட பேசுன.அதுலயே சொல்லு அப்பதான் எனக்கு புரியும்.நீ மூக்குல பேசுனாலாம் எனக்கு புரியாது”.

“அது வந்து டி”…….  என்று இழுத்த சுவாதி தோழியின் கடுப்பான பார்வையை பார்த்து இதுக்கு மேல் இழுத்தாள் நிச்சயம் கீழே சென்று விடுவாள் என்பதை உணர்ந்து அழைத்ததர்கான காரணத்தை சொன்னாள்.அதை கேட்ட சுவாதியின் முகம் இன்னும் கோபமாகி அவளை திட்ட ஆரம்பித்தாள்.ஏனென்றால் சுவாதி கேட்ட விஷயம் அப்படி.

“போன வாரம் ஒரு மீன் வறுவல் செஞ்சல?அது எப்படி செஞ்சனு எனக்கு சொல்லு”.

“ஏண்டி.இத கேட்கற நேரமா டி இது.காலைல இருந்து இங்கதானே இருந்தேன் அப்ப எல்லாம் கேட்காம இந்த இரத்திரி நேரத்துலதான் இத கேட்கணுமா?ஒழுங்கா வா கீழ போலாம். காலைல உனக்கு செஞ்சே காட்றேன்”.            கீதா.

“ம்..ம்…நாளைக்கு நான்தான் சமைக்க போறேன்.அஜூக்கு புடிச்சதா செய்வேன்.நீ தான் வாரம் வாரம் ஓ ஆளுக்கு புடிச்சதா சமைக்கறலா.அதனால இந்த வாரம் நான்தான் சமைக்க போறேன்”.    “என்ன நாளைக்கு நீ சமைக்க போறீயா?நல்ல வேலை முன்னாடியே சொன்ன.எனக்கு நாளைக்கு ஆபிஸ்ல ஏதோ முக்கியமான வேலை இருக்குனு வர சொன்னாங்க.நான் அங்க போயிடுவேன்”.

“நீயே சமை சரியா என்று வாய் சொன்னாலும். இந்த வாரம் மட்டும்தான் என்னோட நளனுக்கு என்னால உரிமையோட சமைச்சு போட முடியும்.அடுத்த வாரம் நா அமெரிக்கா கெளம்பிடுவேன்.அதுக்கப்புறம் டைவர்ஸ்.அப்புறம்.. அப்புறம் அவனோட லட்டோட அவன் இருப்பான்” என்று தனக்குள் பேசி கொண்டவள் தோழியின் உளுக்களில் நினைவுக்கு வந்தாள்.

 

“என்னடி யோசன?நீ அப்பறமா நகுலனோட டூயட் பாடு இப்ப எனக்கு எப்படி செய்யறதுனு சொல்லு.அஜூ அன்னைக்கு வழக்கத்தவிட அதிகமா சாப்டாறு.உன்கிட்டகூட சொன்னாறு நியாபகம் இருக்க ரொம்ப நல்லா இருக்குனு அதனாலதான் உன்கிட்ட கேட்கறேன்”.   சுவாதி.      சுவாதியை பரிதாபமாக பார்த்த கீதா.”ஏண்டி அதுக்காக நேரம் காலம் இல்லையா?உன்னோட ஆர்வ கோளாறுக்கு அளவு இல்லாம போச்சு” என்று சலித்து கொண்டாலும் தோழிக்கு எப்படி செய்ய வேண்டும் என்று முழுதும் விளக்கி கூறியவளிடம் வேண்டுமென்றே உப்பு பெயராத கேள்விகளை சந்தேகம் என்று கேட்டு வைக்க கீதா கடுப்பாகி கொண்டே இருந்தாள்.                        “இப்படி நீ கேள்வி கேட்டு எனை கொள்வதற்கு நான் போன வாரம் அதை சமைக்காமலே இருந்திருக்கலாம்” என்று நொந்து கொண்டவளை கைதட்டும் சத்தம் கலைத்தது.

கையில் கேக்குடன் நகுலனும்.ஆளாளுக்கு கையில் ஒரு கவருடனும் அவர்கள் குடும்பத்தில் இருந்த அனைவரும் அங்கிருந்தனர்.ஹாப்பி பர்த் டே சாங் பாடி கொண்டு.

தன்னுடைய தாயும் தந்தையும்கூட வந்திருப்பதை பார்த்தவள் அவர்களை ஓடி சென்று அனைத்து கொண்டாள். அவர்களின் பாசத்தை அனவரும் கண்டு மகிழந்திருக்க.

நகுலன் மட்டும் “இந்த தோள்களும் உனக்காகதான் என்று புரிந்து கொள்ளவே மாட்டியா பேபி என்று அவர்களை பொறாமையாகவும்,ஏக்கத்துடனும் பார்த்தான்”.அவனது பார்வையை  யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்திருக்க ஒரு ஜோடி கண்கள் இதை கண்டு கொண்டு பிறகு ஆராய்ச்சியாக பார்க்க ஆரம்பித்தது.அது வேறு யாரும் இல்லை நம்ம அஜூதான்.        “போதும் பர்த் டே பேபி போய் இந்த டிரஸ் மாத்திட்டு வா” என்று சுவாதி அவளை கீழே அனுப்பினாள்.

 

அந்த சேலையை வாங்கி கொண்டு கீழே வந்தவள். “பரவால்லையே பிளவுஸ் கரெக்ட்டா இருக்கு என்று தோழியை மெச்சி கொண்டு” புடவை மாற்றி கொண்டு மாடிக்கு சென்றவள் தோழியை அணைத்து “எப்புடி டி இப்புடி கரெக்ட்டா பிளவுஸ் வாங்கின?ரெடிமேட் பிளவுஸ் மாதிரி இருக்கு நீ எப்ப போன?ஒரு முறை கூட நீ எனக்கு கரெக்ட்டா வாங்கி கொடுத்தது இல்லை.இந்த முறை கரெக்ட்டா வாங்கிட்ட என்று பேசி கொண்டே போனவள் தோழியின் கிண்டல் சிரிப்பை கவனித்து இவளுக்கு “என்னாச்சு நல்லா இருக்குனு தானே சொன்னேன்.அதுக்கு ஏன் இப்படி சிரிக்குறா?”அவளிடமே கேட்போம்.

 

“ஏன் டி சிரிக்கற?கரெக்ட்டா இருக்குனுதானே சொன்னேன்”. கீதா.

“அது வேற ஒண்ணும் இல்ல.என் சாய்ஸ்பத்திதான் உனக்கு தெரியுமே.அதனால நகுலனதான் இந்த டைம் உனக்கு சேலையும் பிளவுஸும் வாங்கிட்டு வர சொன்னேன்.பரவால்ல நீயே சொல்லிட்ட கரெக்ட்டா இருக்குன்னு.உனக்கே அளவெடுத்து தச்ச மாதிரி இருக்கா?” என்று மேலும் தோழியை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள் சுவாதி.

 

சுவாதி சொல்வதை எதிர் பார்க்காத கீதா வேகமாக நகுலனை பார்க்க அவன் அவளைதான் பார்த்து கொண்டு இருந்தான்.

தோழியின் பேச்சில் திகைத்து இருந்தவள் நகுலன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து. “சரியான திருட்டு கள்ளன் எப்படி கரெக்ட்டா எடுத்தான்னு தெரியலயே!எதுக்கு இப்புடி ஆள முழுங்கற மாதிரி வேற பாக்கறான்.டேய் நா உன்னோட லட்டு இல்ல.எதுக்கு இப்படி பாக்குற.இப்புடி பாத்து பாத்துதான் என்ன கவுத்தியோ என்னமோ போ”…என்று தனக்குள் சலித்து கொண்டாள்.            “என்னடி நா கேட்டதுக்கு பதிலே சொல்ல மாட்டிக்கிற?”என்ற தோழியின் கிண்டலில் முகம் சிவந்து பேசாமல் இரு டி என்று தன் தந்தையின் பின் நின்று கொண்டாள்.

 

மீண்டும் ஏக்கமாக பார்த்த நகுலனை பார்த்த அர்ஜூன் இவர்களுக்குள் ஏதோ நடக்கிறது என்பது வரை யோசித்தவன் அது என்ன என்று புரியாமல் தவித்தான்.ஒரு வழியாக கேக் வெட்டி பிறந்த நாளை அனைவருடனும் கொண்டாடிய கீதா.இதுதான் சமயம் எல்லாரும் இங்க இருக்காங்க என்று தான் அமெரிக்கா போகும் விஷயத்தை சொன்னாள்.

 

அனைவருக்கும் அதிர்ச்சி என்றாலும் நகுலனுக்கு கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது.அஜூ நகுலனையே பார்த்து கொண்டு இருந்தததால் அவனது அதிர்ச்சியை பார்த்துவிட்டான்.

 

“ஏன் இந்த கீதா இப்படி செய்கிறாள்.நகுலன் பார்ப்பதை பார்த்தாள் அவனிடம் இன்னும் இந்த விஷயத்தை சொல்லவில்லை போல தெரிகிறதே” என்று யோசித்து கொண்டு இருந்தான்.அதற்குள் அவளது பெற்றோர் அத்தை மாமா அனைவரும் மறுப்பு தெரிவித்து இருக்க அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நகுலனை பார்த்தாள்.

 

அவனோ “நீ தானே ஆரம்பித்தாய் நீயே முடித்து வை என்பது போல் தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் இறுகி நின்று கொண்டு இருந்தான்”.அனைவரிடமும் அதையும் இதையும் சொல்லி ஒரு வழியாய் சமாளித்தவள் முடியாமல் போக “என்னோட விருப்பம் இரண்டு வருஷம் மட்டும்தான் அதன் பிறகு நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்.எனக்காக என் விருப்பத்துக்காக இரண்டு வருஷம் நான் என் வாழ்வில் எடுத்து கொள்ள கூடாதா” என்று கோபம் போலும் கேட்டு அனைவரையும் சமாளித்து ஒரு வழியாக சம்மதமும் வாங்கினாள்.                          அவள் சம்மதம் வாங்கும் வரை அவளையே வெறித்து கொண்டு இருந்த நகுலன் அனைவரும் சம்மதித்ததும் ஏமாற்றம் அடைந்தான்.அவனது ஏமாற்றத்தையும் “என்னை புரிந்து கொள்ளவே மாட்டாயா” என்ற ஆற்றாமையோடு கீதாவை பார்ப்பதையும் அஜூ கவனித்து இவனிடம் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.அதற்கு முன் ஒருவருடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

 

அனைவரும் கீழே சென்ற பிறகும் கீதவும்,நகுலனும் மட்டும் அங்கு இருந்தனர்.நகுலன் திரும்பி இருட்டை வெறித்து கொண்டு நிற்க கீதா பேச்சை ஆரம்பித்தாள்.

 

“என்ன நகுலன் என்னுடைய அமெரிக்க பயணத்தை பற்றி நீங்கள் எதுவும் சொல்லவே இல்லை”.          கீதா.

 

“என்ன சொல்ல வேண்டும் கீதா”.  நகுலன்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்,தான் அவனிடம் என்ன எதிர் பார்க்கிறோம் என்பதை புரிந்து ஒன்றும் சொல்லாமல் நின்றவள். “நம் நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது நகுலன்.நான் அவசரமாக செல்வதாக நீங்கள் நினைக்க கூடாது இல்லையா?நான் உங்களிடம் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்”.

 

அதற்குள் அவள் பேச்சில் இடை புகுந்த நகுலன் “பூனை குறுக்க வந்திருக்கும்.இல்லை இவனிடம் எதுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும் என்ன சரியா?”   நகுலன்      “இல்லை நீங்கள் ஏதோ கோபத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அதனால்தான் நான் சொல்ல வருவதை கூட காதில் வாங்காமல் கோபமாக பேசுகிறீர்கள்”.  கீதா.

 

“உங்களிடம் கோபபட நான் யாரு மேடம்.நான் ஏன் உங்கள் மேல் கோபபட போகிறேன்.அதை விடுங்கள் நாடகம் என்று ஏதோ சொன்னீர்களே அதை முழுவதுமாக சொல்லி முடியுங்கள்”.  நகுலன்.

நகுலனின் அன்னியதன்மை மனதை பாதித்தாலும் ஊரில் மாலதியின் தோழியை பார்த்தது.அவள் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் சொன்னவள். “சுவாதிக்கு உண்மை புரிந்துவிட்டது. இனி அவள் வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை.எல்லாம் சரியாகிவிட்டது.நீங்களும் எத்தனை நாட்கள் உங்கள் லட்டுவை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்வில் இருப்பீர்கள். அதனால்தான் முடிந்தவரை சீக்கிரம் கிளம்ப இந்த முடிவை எடுத்தேன்.இனி நீங்கள் கனவில் மட்டும் இல்லை நிஜத்திலும் உங்கள் லட்டுகூடவே இருக்கலாம்” என்று மென்மையாக சிரித்து சொன்னவள்.அந்த வார்த்தைகளை சொல்லும் போது தனக்கு ஏற்பட்ட மரண வலியை வெளியே தெரியாமல் சாமர்த்தியமாக மறைத்துவிட்டாள்.

 

கீதா சொல்வதை கேட்ட நகுலன் அப்போதும் ஒன்றும் பேசாமல் இருக்கவும்,கீதா அவனை நெருங்கி “நகுலன்” என்று அழைக்க.அவளை பார்த்தவன்.

ஒன்றும் இல்லை நீங்கள் சொன்னதைதான் யோசித்து கொண்டு இருந்தேன். “அண்ணன் வாழ்கையாவது சரியானதே அதுவே சந்தோஷம்” என்றவன். “போங்கள் போய் நீங்கள் படுங்கள்.நான் கொஞ்ச நேரம் இங்கிருந்துவிட்டு வருகிறேன்” என்று திரும்பி இருளை வெறிக்க ஆரம்பித்தான்.

கீதா எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு சென்றுவிட்டாள்.

நகுலன் அவள் சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு. “ஏண்டி இப்படி பண்ணுன?இத்தனை நாட்களில் என்னுடைய காதல் உனக்கு புரியவே இல்லையா?உன்னிடம் அத்தனை நெருக்கம் காட்டியும் என்னை உனக்கு புரியவில்லையா?பக்கத்தில் எந்த பெண் இருந்தாலும் நான் அப்படிதான் நடந்து கொள்வேன் என்று நினைத்துவிட்டாயா?நான் பொறுக்கி இல்லடி.பார்க்கும் பெண்களிடம் எல்லாம் அப்படி நடந்து கொள்ள என் லட்டுவோடு எப்போதும் இருக்கலாம் என்று சொல்லிவிட்டு நீ சென்றால் என்னடி அர்த்தம்”.என்று வாய்விட்டே புலம்பியவனின் கண்களில் கண்ணீர் கோடுகளாக இறங்கி கொண்டு இருந்தது.அப்போதுதான் அவன் தோளை மென்மையாக தொட்டது ஒரு கரம்.

தம்பியிடம் பேச வேண்டும் என்று காத்திருந்த அஜூவின் காதில் கீதா பேசியதும் அவள் சென்றவுடன் நகுலன் பேசியதும் கேட்டு மனம் பாரமாகியது.தன் வாழ்விற்காக இவர்கள் இருவரும் எந்த எல்லை வரை சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது தன் தம்பியை நினைத்து பெருமைபட்டவன்.அவனது வாழ்வை இப்படி சிக்கலாக்கி கொண்டானே என்று அவனை நினைத்து வருத்தபடவும் செய்தான்.நகுனின் கண்ணீரை காண சகியாதவனாக ஆறுதலாக அவனை தொட்டான் அஜூ.

அண்ணனை அங்கு எதிர் பார்க்காத நகுலன் கண்ணீரை துடைத்து கொண்டு “ஒன்றும் இல்லை அண்ணா கண்ணில் தூசிபட்டுவிட்டது அதுதான் உறுத்துகிறது” என்று சமாளிக்க முயல, எல்லாம் நான் கேட்டுவிட்டேன் என்ற அர்ஜூனின் பார்வை நகுலனை நிமிர்ந்து பார்க்கவிடாமல் செய்தது.

“இப்பவாவது என்ன நடந்தது என்று என்னிடம் முழுவதுமாக சொல்வாயா இல்லை மீண்டும் மறைக்க போகிறாயா?மறைக்க போவதென்றால் இதையும் கேட்டு கொள் கீதா பேசியது.அவள் சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு நீ புலம்பியது அனைத்தையும் நான் கேட்டு விட்டேன் என் மேல் கொஞ்சமாவது பாசம் இருந்தால் என்னிடம் சொல் இல்லையேல் உன் விருப்பம்.நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்”.

“ஏன் அண்ணா இப்படி பேசுகிறீர்கள் நீங்கள் என்றால் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்கே தெரியும். என்னுடைய ரோல் மாடலே நீங்கள்தான்.நீங்களும் இப்படி பேசி என்னை வதைகாதீர்கள்” என்றவன் ஆண் மகன் அழ கூடாது என்பதை மறந்து தன் காதல் தன்னைவிட்டு சென்று விடுமோ என்ற பயத்தில் கண்ணீர் விட தொடங்கினான்.காதல் என்று வந்துவிட்டாள் எப்பேர்பட்ட வீரனையும் கோழையாக்கிவிடுகிறது என்று நினைத்து கொண்டான் அர்ஜூன்.  சற்று நேரம் தன் தோளில் சாய்த்து தட்டி கொடுத்தவன். அவனை திசை மாற்றும் விதமாக “என்ன நகுல் இது சின்ன பிள்ளை மாதிரி  எதுக்கு இந்த அழுகை உனக்கு உன் அண்ணன் இருக்கிறேன்.முக்கியமாக நீங்கள் நாடகமாடி சேர்த்து வைத்த அண்ணி இருக்கிறாள்”.

“எங்கள் காதலை சேர்த்து வைத்த உங்கள் காதலை நாங்கள் பிரிய விட்டுவிடுவோமா கவலை படாமல் என்ன நடந்தது என்று உன் காதல் கதையை என்னிடம் சொல் நானும் தெரிந்து கொள்கிறேன்”.

“எல்லா விஷயத்திலும் நீ என்னை ரோல் மாடலாக கொண்டிருந்தாள் இந்நேரம் கீதா அமெரிக்காவிற்கா கிளம்பி இருப்பாள்.ஹாஸ்பிட்டலுக்கு கைனக்காலஜிஸிட்டை அல்லவா பார்க்க போய் இருப்பாள்” என்று கிண்டல் செய்தான் அர்ஜூன்.

அர்ஜூன் எதிர் பார்த்தது போலவே நகுலனின் முகத்தில் சிறு புன்னகை எட்டி பார்த்தது. “அட போங்க அண்ணா நீங்க வேற அவளபத்தி தெரியாம பேசுறீங்க அவ பாக்கதான் பெரிய பொண்ணு மாதிரி இருக்கா சில சமயம் அவ பண்றத பாத்தீங்கனா அபிக்கும் அவளுக்கும் வித்தியாசமே தெரியாது.சில சமயம் ரொம்ப மெச்சூர்டா பேசுவா ஆன கொஞ்ச நேரத்துலயே வேற ஏதாவது குறும்புதனம் பண்ணி மொதல்ல அவ்ளோ விவரமா பேசுனவளா இவ அப்படினு யோசிக்க வச்சிருவா” என்று கண்களில் கனவு மிதக்க பேசியவன். “இருந்தாலும் அந்த சின்ன பிள்ளைதனம் தான் என்னை கவர்ந்ததுனு நினைக்கிறேன் என்னை படுத்தறா”.         நகுல்.

 

“சரி ..சரி உன்னோட லவ் ஸ்டோரிய சொல்லு”.   அஜூ.

 

நகுலன் “ஒரு பெரு மூச்சுடன் அவளை மீட்டிங் சென்ற இடத்தில் பார்த்தது அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தை என்று அனைத்தையும் சொன்னான்.கேட்டு கொண்டு இருந்த அர்ஜூன் எங்கள் வாழ்விற்கு நீங்கள் இவ்வளவு சிரமம் மேற் கொள்ள வேண்டியதாகிவிட்டது.இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம்” என்றவன்.

“நீ போய் உன்னோட லட்டோட டூயட் பாடு போ.நான் பார்த்து கொள்கிறேன்” என்று கிண்டலாக கூறினான்.

அர்ஜூனை பார்த்து அசடு வழிந்த நகுல் “தேங்ஸ்னா. எல்லாமே முடிஞ்சு போன மாதிரி ரொம்ப கஷ்டமா இருந்தது.உன் கிட்ட பேசுனதுக்கப்புறம் கொஞ்சம் பிரியா இருக்கு” என்று சொல்லிவிட்டு கீழே சென்றான்.

தம்பியின் வாழ்வை எப்படி சரி செய்வது என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு.தன் காதலை மனைவி தன்னிடம் சொல்ல தடுமாறுகிறாள் என்பதை அறிந்து சந்தோஷபட்டவன்.தன் காதல் நிறைவேறிய சந்தோஷத்தை மனைவியோடு கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

1 thought on “சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3

கீதா கம்பெனிக்கு அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு ஜாலியாக அபியுடன் விளையாண்டு பொழுதை கரைத்தாள்.வள்ளி வந்து சாப்பிட அழைத்தவுடன் தான் இருவரும் சாப்பிடவே சென்றனர். மாலை அபி வந்து அழைக்கவும் பார்க்குக்கு சென்றாள்.அபி விளையாடுவதை இவள் கவனிக்க இவளை இரு விழிகள் ஆர்வமாக

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதிசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதி

சுதியின் பேச்சில் இருந்து அவளுக்கு தங்களைபற்றி தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த கீதா நகுலை பார்த்தாள். சுதி பேசுவதை கேட்டு கீதுவின் முகத்தில் வந்து போன மாறுதல்களை கவனித்து கொண்டு இருந்தவன் அவள் பார்ப்பதை பார்த்து என்னவென்று கேட்டான். “நம்ம விஷயம் சுதிக்கு

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9

“பேயாவது ஒன்றாவது” என்று கிண்டல் செய்து சிரித்தது நினைவுக்கு வந்தது. “அப்போ பேய் எல்லாம் உண்மையில் இருக்கிறதா,இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தவன்.யாராக