Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 34

34 – மனதை மாற்றிவிட்டாய்

திவி ஆதிக்கு அழைக்க லைன் கிடைக்கவேயில்லை. வேகமாக உள்ளே சென்றவள் அம்முவிடம் நான் கேக்றதுக்கு மட்டும் பதில் சொல்லு என பறக்க “ஆதி, ரிங் வாங்கிட்டு வீட்டுக்கு தானே வரேன்னு சொன்னாங்க? ”

“ஆமா, நாளைக்கு தான் கோவிலுக்கு எடுத்திட்டு வரணும். ”

“எப்போ கிளம்புனாங்க..?”

“ஒரு ஒன்றரை மணி நேரம் முன்னாடி இருக்கும்….ஏன் டி? ”

அப்டின்னா இன்னும் எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகுமே. .எங்க இருக்காங்கனு தெரில…என சிந்தித்து இங்க சிக்னல் வேற கிடைக்கலையே என எண்ணியவள் “நான் வீட்டுக்கு போறேன். நீங்க வாங்க.” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்.

அம்முவிற்கு தான் ஒன்றுமே புரியவில்லை. அனைவரும் வந்து கேட்க இவள் நடந்ததை கூற அபி சிரித்துக்கொண்டே “அட மக்கு, திவி அப்போ ஆதியை பத்தி கேட்டதுக்கு நாம எவ்ளோ சுத்தல்ல விட்டோம். அதான் இப்போ டைரக்ட்டா கேட்டு விஷயம் தெரிஞ்சதும் கிளம்பிட்டா. நீயும் உடனே சொல்லிருக்க. ”

அம்மு “இல்லை, அவ கொஞ்சம் ஏதோ பதட்டமா இருந்தா. அதனாலதான் நானும் பதில் சொல்லிட்டேன்.”

அனு “ஏன் கா, திவிய பத்தி உனக்கு தெரியாதா… விஷயம் வேணும்னா அவ எப்படி வேணும்னாலும் நடிப்பா. முகத்தை பாவமா வெச்சுக்கறமாதிரி கொஞ்சம் சீரியஸ வெச்சு கேட்டுஇருப்பா. நீயும் சொல்லிட்டா. ஏற்கனவே கூச்சமா இருக்குனு எல்லாம் புதுசா சொல்லிருக்கா. அப்போவே கேட்டுஇருக்கணும் பாட்டி தான் பதில் சொல்லிட்டாங்க. அவளை கிண்டல் பண்ண கிடைச்ச சான்ஸ இப்டி நீயும் மிஸ் பன்னிட்டேயே?” என குறைபட

அவளும் கொஞ்சம் அசடுவழிந்து “ஆமால்ல, அவ அப்படியும் பண்ணுவா. நம்பமுடியாது. சரி விடு வீட்டுக்கு போயி பாத்துக்கலாம். ”

பாட்டி “பாவம் டி புள்ளை, ராஜா வருவான்னு பாத்து ஏமாந்துட்டா. . என் பேரன எதிர்பாக்கிறவள நான் எப்படி விட்டுகுடுக்க? ..போங்க டி, போயி வேலைய பாருங்க. என் பேத்தியை யாராவது கிண்டல் பண்ணீங்க அவ்ளோதான் சொல்லிப்புட்டேன். ” அனைவரும் சிரித்துக்கொண்டே

அரவிந்த் “பாட்டி, அவதான் எல்லாரையும் கிண்டல் பண்ணுவா. அவகிட்ட இருந்து தான் நீங்க எங்களை பாத்துக்கணும். ஏதோ இன்னைக்குத்தான் மேடம் கொஞ்சம் திணறி நாங்க பாத்தோம். ஆனாலும் நீங்க சொல்றது நிஜம் தான். ஆதி வரலேன்னதும் உடனே முகம் சுருங்கிடிச்சு. அவ அப்படியெல்லாம் ரியாக்ட் பண்ற ஆளே இல்ல. ”

அனு “எல்லாம், காதல் படுத்தற பாடு.” என பெருமூச்சு விட அவள் தலையில் செல்லமாக குட்டு வைத்துவிட்டு “மொதல்ல போயி சாமி கும்பிடலாம், வாங்க..” என அழைத்துக்கொண்டு சென்றார் மதி.

வீட்டிற்கு செல்லும் வழியிலே ஆதியை தொடர்புகொண்டே இருக்க வீட்டை நெருங்கும் போது அவளுக்கு லைன் கிடைக்க அவனும் இவள் வேண்டதலை பொய்யாக்காமல் எடுத்தான்.

இவள் “ஆதி, எங்க இருக்கீங்க? எப்போ வரீங்க? ”

ஆதி, “ஏன், நீ கூப்பிட்டா வந்திடணுமா? சொல்லிடணுமா? முடியாது. நான் மதியம் கூப்பிட்டு நீ சொன்ன பேச்ச கேட்டியா?” என வம்பிழுக்க

“ஐயோ ஆதி, அதுக்கு பெரிய சாரி. எனக்கு தயவுசெஞ்சு பதில் சொல்லுங்க, எங்க இருக்கீங்க, யாரு டிரைவ் பண்றீங்க? ”

இவள் பதட்டத்தை உணர்ந்தவன் “ஹேய், என்னாச்சு மா, அர்ஜுன் டிரைவ் பன்றான். நாங்க இன்னும் ஒரு 45 நிமிஷமாவது ஆகும் ரீச் ஆக..நீ ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க.. என்ன பிரச்னை அங்க…”

திவி தான் கேட்ட அனைத்தையும் சொல்லிவிட்டு “ஊருக்கு வரதுக்கு வேற வழி இருக்கா..?”

ஆதியின் பேச்சை கேட்டதும் வண்டியை ஓரம்கட்டிய அர்ஜுன், போன் ஸ்பீக்கர்ரிலே போட அவனும் முழுமையாக கேட்டான். வரும்போது தான் அர்ஜுனிடம் முந்தைய தினம் நடந்ததை கூறி இருந்தான். அதனால் விஷயத்தின் தீவிரம் உணர்ந்தவன் “திவி, நீ கவலைப்படாத..நாங்க ஊருக்கு வேற வழில வரோம். அது கொஞ்சம் சுத்து. பட் பரவால்ல. வந்துடறோம். ”

“அர்ஜுன் அண்ணா, பாத்து பத்திரம் இரண்டுபேரும். கொஞ்சம் பொறுமையாவே வாங்க. பட் கேர்புல் அண்ணா..”

“சரிடா… நாங்க பாத்துக்கறோம். நீ பீல் பண்ணாத. ”

ஆதி “நீ எங்க இருக்க, எல்லாரும் எங்க?”

“அவங்க கோவில்லதான் இருகாங்க. அங்க டவர் கிடைக்கல. உங்ககிட்ட சொல்றதுக்காக நான் கிளம்பிவந்துட்டேன். இப்போ வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டேன். ”

“சரி, நீ ஜாக்கிரதையா வீட்ல இரு. நாங்க வந்துடறோம். ” என அழைப்பை துண்டித்தான்.
இனி அவங்க கவனமா இருப்பாங்க என நினைத்தவள் கொஞ்சம் மனது அமைதியாக வீட்டினுள் நுழைய யாரும் இல்லை என்பது உரைக்க மேலே சென்று வேடிக்கை பார்க்கலாம் என நினைத்து பால்கனி சென்றாள். அங்கே இருந்து ஒரு அறையில் ஈஸ்வரி, சோபனாவின் பேச்சு குரல்.

சோபனா “அவங்கள நான் பழிவாங்காம விடமாட்டேன் ” என்பதை கேட்ட திவி அப்டியே நின்றுவிட்டாள்.

இவ என்ன சொல்றா, யாரை பழிவாங்க போறா? என நினைக்க

ஈஸ்வரி “ஆமா சோபி, அந்த சிறுக்கிங்க 3 பேரும் கூட பொறந்தவனுக்காக பேசுறாளுங்களாம். இதுல அந்த கெழவி] வேற வந்திட்டு நாம சொத்துக்காக தான் பாக்கிறோமாம். ஆதியை உனக்கு கல்யாணம் பண்ணிவைக்க மாட்டாங்களாம். குணம் வேற. அதிக செலவு பண்ணுவா. குடும்பத்தோட சேர்ந்து இருக்கமாட்டேனு சொல்லிட்டே இருக்காங்க எல்லாரும்.. எல்லாத்துக்கும் மேல அந்த சந்திரா, என் பையன் இஷ்டம் தான். நான் பேசமாட்டேனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றா. ”

சோபி “கண்டிப்பா மா, என்ன வேண்டாம்னு சொன்னதுக்கு அவங்க எல்லாரும் வருத்தப்படணும். அவங்க எல்லாரும் அழணும். ஒருத்தருக்குமே அந்த சொத்து போகக்கூடாது. இல்ல மனசார அனுபவிக்கக்கூடாது. அந்த மாதிரி பண்றேன். ”

ஈஸ்வரி “அது எப்படி டி நடக்கும். எல்லாரும் சிரிச்சுக்கிட்டேதானே இருக்காளுங்க..என்ன குறை, என்ன பிரச்னை வரப்போவுது? ?.” என சலித்துக்கொள்ள

சோபி “பிரச்னையும் நம்மளே உண்டு பண்ணலாம் அம்மா. உதாரணத்துக்கு அபி மாசமா இருக்கா, அவளுக்கு தேவைஇல்லாதது சாப்பிட்டோ கரு களஞ்சிட்டா? மொத்த குடும்பமும் அழுகும்ல. இல்லாட்டி ஏற்கனவே பொறந்த அவங்க செல்ல வாரிசு அந்த நந்து பொடியன ஏதாவது பண்ணுவோம். எப்படியோ அபி குடும்பத்துல ஒரு அசம்பாவிதம் நடத்திட்டா, அம்மு கல்யாணம் எடுத்த நேரம் சரில்ல, அவ ராசி தான் அப்டினு ஒரு புரளியை கிளம்புவோம், அவளும் அழுமூஞ்சிதான். உடனே ஒருவேளை அப்டி இருக்குமோன்னு உக்காந்து ஒப்பாரி வெப்பா. கல்யாணத்துக்கு முழு மனசோட ஒத்துக்க மாட்டா. அர்ஜுனோட அம்மா நிறைய சாங்கியம், சம்ப்ரதாயம் பாப்பாங்க போல. இதவே அபசகுனம்னு சொல்லி கல்யாணத்த நிறுத்த வெட்ச்சிடலாம்.. 2 பொண்ணுங்க வாழ்க்கை இப்படி ஆனதும் எல்லாரும் பீலிங்ஸ்ல இருப்பாங்க. அப்போ அனுவோட பழக்கவழக்கம், போற இடத்துல,படிக்கற இடத்துலன்னு ஏதாவது பிரச்னை பண்ணுவோம். அவளுக்கு இரண்டுகெட்டான் வயசு மா. என்ன சொன்னாலும் உலகம் நம்பும். வீட்லயும் மத்த புள்ளைங்கள நினைச்சிட்டு இவளை கவனிக்கலேன்னு சொல்லி குத்திக்காமிப்போம். ஒன்னு பிரச்னைல புள்ள பாதிச்சு அதுக்காக வருத்தப்படுவாங்க. இல்ல இவளோட இந்த நிலமைக்கு நாம தான் காரணமோ, சரியா என பிள்ளையை கவனிக்கலையானு நினச்சு நினைச்சே மதி அத்தையே செத்திடுவாங்க. அப்புறம் மாமாவும், ஆதியும் அவ்ளோதான். மொத்தமாக ஜீரோ. அதுக்கப்றம் ஹெல்ப் பண்றோம்னு சொல்லி சொத்தை வாங்கி மொத்தமா அழிச்சிடலாம். இல்ல நல்ல விலைக்கு வித்திடலாம்.”

பேச்சிழந்து போனாள் ஈஸ்வரி “பெரிய ஆள் சோபி, சூப்பர்…”
வெளியில் இருந்து கேட்ட திவிக்கு தலை சுற்றியது. அமைதியாக தனது அறைக்கு சென்றவள் யோசித்தாள். சொத்துக்காக எந்த அளவுக்கு போறா இந்த சோபி, ச்சா. அவ அம்மாவும் கூட சேந்துக்கிட்டு. பேசாம சொத்தை குடுக்க சொல்லிடலாமா?, “அவளுக்கு பயந்து சொத்தை குடுக்கறதா? வேண்டாம், அது தாத்தா, மாமா, இப்போ என்னோட ஆதி எல்லாரோட உழைப்பும், கனவும் இருக்கு. அத அவங்க இழக்கக்கூடாது. ஏதாவது பண்ணனும். இத மாமா, தாத்தாகிட்ட சொல்லி குடும்பத்துல பிரச்னை வந்தாலும் அத்தை ரொம்ப சங்கடப்படுவாங்க. அப்டி நடந்தாலும் அர்ஜுன் அண்ணாவோட அம்மா அதையும் அபசகுனமா நினைச்சிட்டா… சொல்லியே வெச்சாலும் எல்லாரும் எப்போவுமே பாதுகாப்பா இருப்பாங்க, இவங்களுக்கு எந்த நேரத்துலையும் அவளால பிரச்சனை வராதுன்னு என்ன நிச்சயம். அதானே, சோபி சொன்னமாதிரி அபி கருவை சுமந்திட்டு இருக்கா, நந்து ஸ்கூல், அண்ணா வேலைக்கு,சில சமயம் வெளியூர், அனு இப்போ நல்லபடியா படிச்சாதான் அவ லைப் நல்லாயிருக்கும். அவ தனியா ஸ்கூல் போகணுமே. மாமா, ஆதி, அண்ணா எல்லாரும் வெளில போறவங்க. ஏதாவது ஆக்சிடென்ட் அந்த மாதிரி நடந்துட்டா. கடவுளே. அத்த எப்படி தாங்குவாங்க. அவள் இன்னோரு மனமோ அத்தை மட்டும் தான் தங்கமாட்டாங்களா? நீ ஆதிக்கு ஏதாவதுனா விட்ருவியா? தாங்கிபியா? என கேட்க அவள் வாய் திறந்து கத்தியே விட்டாள். “நோ…ஆதிக்கு எதுவும் ஆகக்கூடாது. ” கீழே வண்டி சத்தம் கேட்க ஆதி வந்துவிட்டார் என அறிந்ததும் அவள் அமைதியாக படுத்துகொண்டாள். அவளுக்கு இப்பொது யாருடனும் பேச மனமில்லை. தனியாக யோசிக்க வேண்டும். ஆதி அவளது அறைக்கு வந்து பார்க்க அவள் படுத்திருப்பதை பார்த்தான். அர்ஜுன் என்னாச்சுடா, திவியை பாக்கல? என்று வந்தவன் அவளை கண்டு மெலிதாக சிரிக்க ஆதியும் “பாவம் டா, ரொம்ப பதறிட்டா போல… கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றவன் மெதுவாக அவளிடம் சென்று போர்வையை எடுத்து போர்த்திவிட்டு சென்றுவிட்டான். இவனது செய்கையிலும் பேச்சிலும் இருந்த கனிவு, காதல் அதை மையமாக கொண்டு யோசிக்கத்துவங்கினாள். ஒரு முடிவுக்கு வந்தவள் உறங்கியும் விட்டாள்.

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: