Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 8

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 8

சுதி வரும்போது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று மாலதி ஒரு சில விஷயங்களை செய்துவிட்டு.மற்றொரு சந்தோஷமான விஷயம் என்ன என்று சுதியிடம் சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவளுக்காக காத்திருந்தாள்.                                                                                              மாலதியின் கெட்ட நேரம் அப்போதுதான் ஆரம்பித்தது.ஆம் அவள் திருமணத்திற்கு சென்ற இடத்தில் அவளை பார்த்த ராம் என்ற உள்ளூரில் இருக்கும் ஒரு பரம்பரை பணக்காரர் அவளை பெண் கேட்டு வர லட்சுமியும்,மாலதியும் பயந்துதான் போனார்கள்.

ஏன் என்றால் உள்ளூரில் அவனுக்கு இல்லாத செல்வாக்கு இல்லை.அவனுக்கு வயது 35க்கு மேல் இருக்கும். அவனின் முதல் மனைவிக்கு ஆண் குழந்தை இல்லை என்ற காரணம் தான் அவனின் இரண்டாவது திருமணத்துக்கு முக்கிய காரணமாம்  இது அவனே சொன்னது.                               அவன் சொல்வதை கேட்ட லட்சுமிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ,அவன் சட்டையை பிடித்து வீட்டைவிட்டு வெளியே இழுத்து வந்தவள்.

“வெளியே போடா நாயே உன் ஆசைக்கு தலையாட்ட இங்கு யாரும் உன் அடிமை இல்லை எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து இப்படி சொல்வாய்.என் மகள் அந்த கோவிலில் இருக்கும் தெய்வம் போல கலங்கம் இல்லாதவள் அவளுக்கு உன்னை போன்ற ஒரு தருதலைக்கு கட்டி கொடுப்பேன் என்று எப்படி எதிர் பார்க்கிறாய்.           என் மகளை கைகளில் வைத்து தாங்குபவனுக்குதான் நான் மணமுடித்து கொடுப்பேனே ஒழிய உன்னை போன்ற தெருதெருவாக அழையும் நாய்க்கு கொடுக்கமாட்டேன்” என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் பேசிவிட்டார்.அவர் கோபத்தில் பேசியதற்கான தண்டனையை அவர் மகள் அனுபவிக்க போகிறாள் என்பதை அறியாமல்.

லட்சுமி பேசியதை கேட்டு முகம் கருத்து அவரை தீர்க்கமாக பார்த்த ராம். “நீ இப்போது பேசியதற்க்கு நிச்சயம் வருத்தபட வைப்பேன்.இப்போது அமைதியாக போகிறேன் என்று நினைக்காதே.நீ இப்போது மிதித்தது பாம்பின் வாலை அது நிச்சயம் உன்னை கொத்தாமல் விடாது” என்று கூறி அவன் பார்த்த பார்வை லட்சுமியின் முதுகெலும்புவரை சில்லிட செய்தது.அது மட்டும் இல்லாமல் அவன் முகம் சொல்வதை செய்வேன் என்பதை போல் இருக்க.என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தனர் தாயும் மகளும்.

சுவாதிக்கு தொடர்பு கொண்ட போதும் ரோமிங் மற்றும் சிக்னல் பிராப்ளத்தால் அவளிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் ராம் தனக்கு சாதகமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான்.குடிக்கு ஏற்கனவே அடிமையாய் இருந்த கோவிந்தனுக்கு பாரின் சரக்கு என்று இலவசமாக கொடுத்து அவனை குடிக்க வைத்து முழு நேரமும் போதையில் இருக்கும் படி பார்த்து கொண்டவன்.அவர் போதையில் இருக்கும் போது வெற்று தாளில் கையெழுத்து வாங்கி வைத்து கொண்டான்.

ராம் பொண்ணு கேட்ட விட்டு சென்று நான்கு நாட்கள் ஆன நிலையில் தங்களது வேலைகளை மட்டும் செய்து கொண்டும் வெளியே வராமல் இருந்த தாயும்,மகளும் தன் வீட்டின் முன்பு ஏதோ சளசளப்பு சத்தம் கேட்டு வெளியே வர அங்கு ராம் தான் அடிபட்ட பாம்பாக சீறீக்கொண்டிருந்தான்.

என்ன சொல்கிறான் என்று கேட்ட லட்சுமிக்கும்,மாலதிக்கும் தலையில் யாரோ இடியை இறக்கியது போல் இருந்தது.அதாவது “கோவிந்தன் தன் மகளை மணமுடித்து தருவதாக சொல்லி அவனிடம் இலட்ச கணக்கில் கடன் வங்கிவிட்டு இப்போது பொண்ணு தர முடியாது என்று லட்சுமி சொல்வதாக சொன்னான்”.அவனின் செல்வாக்கால் மூன்று நாட்கள் முன் போட்ட கையெழுத்து ஒரு வருடத்திற்கு முன்பு போட்டது போல் தயார் செய்யபட்டு இருந்தது.

பத்தாதற்கு கோவிந்தனும் அவனையே திருமணம் செய்து வைத்தாள் மாலதி பெயரில் இருக்கும் சொத்தை தனக்கு மாற்றி கொள்ளலாம்.ஊரில் இவனுக்கு இல்லாத சொத்தா என்று பலவாறு ஆசைகாட்டி கோவிந்தனையும் கைக்குள் போட்டு கொண்டான்.

லட்சுமி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க,தான் ஏன் அந்த கல்யாணத்துக்கு போனோம் என்று நொந்து கொண்டாள் மாலதி.ராம் மாலதியின் வீட்டிற்க்கு யாரும் போக முடியாதபடி எந்நேரமும் காவலுக்கு ஆளை   வைத்தான்.

மாலதியை பார்க்க போன ரம்யாவை மிரட்டினர்.அதனால் அவளின் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று ரம்யா அப்பாவின் தங்கை கிராமத்துக்கு அழைத்து சென்று அவரின் தங்கை மகனுடன் திருமணத்தை முடித்து அவளை அங்கேயே விட்டுவிட்டுதான் வந்தனர்.இருந்தாலும் அவர்களும் மாலதியை நினைத்து கவலைபடதான் செய்தனர்.அமைதியாக அம்மாவை சுற்றி சுற்றி வரும் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று.

சுவாதி டூர் சென்ற ஒன்பதாம் நாள் நடந்தது அந்த துயரம். கோவிலுக்கு சென்றாலாவது மனபாரம் குறையும்,என்று சென்ற தாயும் மகளும் நல்லபடியாக இனி இந்த வீட்டிற்க்கு திரும்ப போவதில்லை என்பதை அறியாமல் கிளம்பி சென்றனர்.அவர்கள் கோவிலுக்கு செல்வதை அங்கு காவலுக்கு போட்டிருக்கும் ஆட்களின் மூலம் அறிந்த ராம். “உன் மகள் கோவிலுக்குள் இருக்கும் தெய்வமா. நான் நாயா பார்.இந்த நாய் என்ன செய்கிறேன்” என்று மனதுக்குள் கருவி கொண்டவன்.        அவனது ஆட்கள் மூலம் லட்சுமியை லாரியில் அடிக்க சொன்னவன் மாலதியையும் தூக்கிவர சொன்னான்.அவன் சொன்னது போல செய்த அவனின் ஆட்கள்.மாலதியை தூக்கி சென்றனர்.அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய மாலதி இறுதியாக சற்று நேரம் சோர்ந்து போனவள் போல் அமைதியாக வந்தாள்.

அவளை பிடித்து இருந்தவனில் ஒருவன் “அவ்வளவு தான் உனக்கு பலமா,இந்த காலத்து பெண்கள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று எதையும் சாப்பிடாமல் உடம்பில் தெம்பு இல்லாமல் இருக்கிறார்கள்.பார் சற்று நேரத்திலேயே இந்த பெண் போராட முடியாமல் சோர்ந்துவிட்டாள்” என்று கூற,அதற்கு மற்றவனோ “இப்படி இருப்பதும் நல்லதுதான்.ஐயாவிற்கு வசதியாக இருக்கும்” என்று கூறி அசிங்கமாக சிரிக்க கேட்டு கொண்டிருந்த மாலதிக்கு உடல் அருவருப்பில் கூசியது.தன்னை எங்கு கடத்தி போகிறார்கள் யார் கடத்த சொன்னது என்று அனைத்தும் புரிய ஒரு முடிவுக்கு வந்தவளாக ஓய்ந்து படுத்து இருப்பது போல் படுத்திருந்தாள்.

அனைவரும் அசந்திருந்த நேரம் பார்த்து கார் கதவை திறந்து கீழே குதித்தால்.அவளின் கெட்ட நேரம் அப்போதும் விடாமல்,எதிரே வந்த லாரியில் மோதினாள்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த லட்சுமியையும், மாலதியையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.தன் வாழ்வில் இது போல் இனி வாழ்வை ரசிக்க முடியாது என்னும் அளவிற்க்கு பத்து நாள் டூரை முடித்துவிட்டு ஊரில் வந்து இறங்கினாள் சுவாதி.

அம்மாவிற்கும் அக்காவிற்கும் வாங்கிய கிப்டை எடுத்து கொண்டு அவள் வீட்டிற்குள் செல்லும் போது மணி அதிகாலை மூன்று.

வீட்டில் உள்ள மூவரிடமும் எப்போதும் ஒரு சாவி இருக்கும் லட்சுமி கோவிலுக்கு சென்ற நேரம் பார்த்து மாலதியோ அல்லது சுவாதியோ வீட்டிற்கு வந்தால் உபயோகபடுத்த என்று.தன்னிடம் உள்ள சாவி கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்த சுவாதிக்கு அப்போதே அம்மாவை பார்க்க வேண்டும் என்று தோன்ற லட்சுமியின் அறைவரை சென்றவள் வேண்டாம் இந்த நேரத்தில் சென்று அவர்களின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்.காலையில் சீக்கிரம் எழுந்து பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுடன் தனது படுக்கை அறை நோக்கி சென்றாள்.

தனது அறைக்கு சென்றவள் இருவருக்கும் வாங்கி வந்த டிரஸ் பேக்குகளை அப்படியே வைத்துவிட்டு ஒரு குளியல் போட்டுவந்து படுத்தவள் காலை பத்து மணி போல்தான் எழுந்தாள்.எழுந்து மணியை பார்த்த சுதி நான் வந்தது தெரியவில்லை போல இல்லை என்றால் காலை 6 மணியில் இருந்து லட்சு சுப்ரபாரதம் பாட ஆரம்பிச்சுடும் என்று கிண்டலாக நினைத்தவள் சென்று காலை கடன்களை முடித்து வெளியே வர யாரையும் காணவில்லை.                                                     “குட்டிமாதான் காலேஜ் போயிருப்பா இந்த லட்சு எங்க போச்சு” என்று யோசித்து கொண்டே வெளியில் வந்தவள்.அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்பதை பார்த்து. “என்னடா இது பத்து நாள் ஊரில் ஆள் இல்லை என்றால் எல்லோரும் புதிதாக பார்பதை போல் பார்க்கிறார்கள்” என்று நினைத்து கொண்டு “சரி நம்ம குண்டூஸ் அம்மாகிட்ட கேட்போம் இந்த லட்சு எங்க போயிட்டாங்கனு” என்று பக்கத்து வீட்டை நோக்கி சென்றாள்.

“இந்த லட்சுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா.ஒரு பொண்ணு டூர் போனாலே அவளுக்கு என்னாச்சு ஏதாச்சுனு ஒரு போனாவது பண்ணி கேட்டாங்களா,என்ன வாழ்க்க டா இது என்று சலித்து கொண்டவள்.கவலைபடாதே சுதி உனக்குனு வர்ரவன் உன்னை உனக்காகவே விரும்பி கைல வச்சி தாங்குவான்” என்று நினத்தவள்.. “அய்யயோ…….என் வெயிட்ட அவன் தாங்களனா, எனக்குதானே பிராப்ளம் அதனால நல்லா பாத்துபான் இது ஓ.கே” என்று தனக்குள் கூறி கொண்டவள் அறிந்திருக்கவில்லை தாயும் சகோதரியும் மாற்றி மாற்றி கால் செய்து போன் எடுக்காமல் போனதை விதி என்று சொல்வதா இல்லை மாலதியின் போராத காலம் என்று சொல்வதா மொத்தத்தில் இவர்கள் வாழ்வில் விதி சற்று அதிகமாக விளையாண்டதை என்னவென்று சொல்வது.

“ஆண்ட்டி” என்று கத்தி கொண்டே வீட்டிற்குள் வந்தவள் ரம்யாவின் அம்மா அலமேலு மாத்து துணிகளையும்,பிளாஸ்க் போன்றவற்றை ஹாஸ்பிட்டல் எடுத்து செல்ல அடுக்கி கொண்டு இருந்தவள்.சுவாதியின் சத்தம் கேட்டு கண் கலங்க அவளை பார்க்க உள்ளே வந்த சுவாதிக்கு பக்கென்று இருந்தது.

“என்ன ஆண்ட்டி உங்களுக்கு உடம்பு சரியில்லையா ஏன் டல்லாக இருக்கிறீர்கள்.மாமா எங்க வழக்கம் போல வேலைக்கு போய்விட்டாரா கவலை படாதீங்க நான் உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டி போகிறேன்”.

“ஏன்…… ஏன்…… என்னாச்சு ஆண்ட்டி ஏன் இப்படி அழுகிறீர்கள்” என்று கேட்க.                                            அவரோ “மற்றவர்களுக்கு ஒன்று என்றால் ஓடி வரும் உனக்கு ஏன் டி மா இந்த சோதனை” என்று கூறி அழ.

சுதி ஒன்றும் புரியாமல் “யா……ருக்கு…… என்……….னாச்சு……. ஆண்ட்டி” என்று ஒருவித பயத்துடன் பார்த்து, “அம்மா,அம்மா எங்க ஆண்ட்டி சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு அ…….ம்மாவுக்கு ஒன்றும் இல்லைதானே” என்று நடுங்கிய குரலில் கேட்டவளிடம் அவள் டூருக்கு சென்றதில் இருந்து நடந்ததை எல்லாம் சொன்னார்.அவர் சொல்வதை கேட்க கேட்க சுவாதியின் கண்களில் குற்ற உணர்ச்சியும் தன்னால் தன் குடும்பத்திற்கு ஆபத்து நேரத்தில் பக்கபலமாக இருக்காமல் தோழிகளுடன் ஆட்டம் போட்டு கொண்டிருந்ததை நினைத்து உள்ளுக்குள் துடித்து போனாள்.

“ஹாஸ்பிட்டலில் மாமா இருக்கிறார்.நான் பிளாஸ்க் எல்லாம் எடுத்து போகலாம் என்று வந்தேன் நீ எப்போது வருவாயோ என்று எனக்கு பெரிய கவலையாக இருந்தது வா போகலாம்” என்றவரை பாவமாக பார்த்தவள் “அ……….ம்மாவுக்கு” என்று சொல்ல முடியாமல் திக்கி திணறியவளிடம் அவர்களின் நிலையை எப்படி சொல்வது என்று யோசித்த அலமேலு “வாமா ஹாஸ்பிட்டல் போனால் தெரிந்துவிட போகிறது” என்று அவளை சமாதானம் செய்து ஹாஸ்பிட்டல் சென்றனர்.

ஹாஸ்பிட்டல் சென்ற சுவாதி டாக்டரை பார்த்து அவளின் அம்மாவின் உடல்நலனை பற்றி விசாரிக்க.டாக்டர் யார் என்று பார்த்தார்.அவர்களின் மகள் என்றவளை அமர செய்து “அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று கூறியவுடன் சுதியின் முகம் பிரகாசமாவதை பாவமாக பர்த்த டாக்டர் அடுத்தடுத்து சொன்ன விஷயங்களை ஜூரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.          அவருக்கு என்ன பதில் சொல்வது என்று கூட புரியாமல் உட்கார்ந்திருந்தாள்.ஆனால் அவள் கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.அவளின் நிலையை உணர்ந்த டாக்டர் அவளுக்கு தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து “உங்கள் அக்கா உங்களை பார்ப்பதற்குதான் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.அவரது உடலில் இருந்து அதிக இரத்தம் வெளியேறி இருக்கிறது.தலையில் வேறு நல்ல காயம்.எங்களால் முடிந்த எல்லாம் செய்தாகிவிட்டது ஒரு பலனும் இல்லை”.

“ஏதோ ஒரு காரணத்திற்காகதான் அவர் உயிரை பிடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் சென்று அவர்களை சந்தியுங்கள்.உங்களிடம் பேசகூட காத்திருக்கலாம். ஆனால் அவர்களின் நாட்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான்” என்று கூறி அவரது பேச்சை நிறுத்தி கொண்டார்.

“நீங்கள் சென்று உங்கள் அக்காவை பார்ப்பதென்றால் பாருங்கள்” என்று கூறி அனுப்பினார்.முற்றிலும் உடைந்து போனவளாக வந்த சுதியை என்னவென்று அலமேலு கேட்க ,அவர் மடியில் படுத்து குமுறி அழ ஆரம்பித்தாள் “நான் தப்பு பண்ணிட்டேன் ஆண்ட்டி என்னுடைய சுயநலத்துக்காக தப்பு பண்ணிவிட்டேன்”.

“நான் மட்டும் டூர் போகாமல் இருந்திருந்திருந்தால் எனக்கு இப்போது இவ்வளவு பெரிய இழப்பு வந்திருக்காது.அக்கா என்னை பார்க்கதான் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறாளாம் டாக்டர் சொல்கிறார்.நான் போய் பார்த்தால் என்னைவிட்டு போய்விடுவாள்தானே,நான் போக மாட்டேன்,போகமாட்டேன்” என்று சொன்னதையே சொல்லி கொண்டு இருந்தாள்.

ஐ.சி.யூ வில் இருந்து வெளியில் வந்த நர்ஸ் “சுதிமா யாருங்க வந்துட்டீங்களா பேசண்ட் கூப்பிடறாங்க” என்று சொன்னவுடன் “இல்ல நான் வரமாட்டேன்,நான் வரமாட்டேன்” என்று கத்தி கொண்டே இருந்தவளை பிடித்து அமர வைத்த அலமேலு “நீங்க போங்க மேடம் நான் அனுப்புகிறேன்” என்று கூறி அவரை அனுப்பிவிட்டு சுவாதியை கோபமாக முறைத்தார்.

“நான் கூட உனக்கு உன் அக்காவின் மேல் பாசம் அதிகம் என்று நினைத்தேன்.ஆனால் நீ இவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவள் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது” என்று கோபமாக கூற.சுவாதியோ இவர் எதுக்கு இப்படி பேசுகிறார் என்று பார்த்தாள்.

அலமேலு சுதியை திட்ட தொடங்கினார். “உன் அக்காவுக்கு எப்போ ஆக்ஸிடெண்ட் ஆச்சுனு தெரியுமா என்று கேட்க”.சுதி மறுப்பாக தலையாட்டினாள்.

ஆம் விஷயம் அறிந்த ராம் தன் பெயர் வெளியில் வர கூடாது என்று சொல்லி,குடுக்க வேண்டிய இடத்தில் பணத்தை கொடுத்து ஆக்ஸிடெண்ட் கேஸாக மாற்றி விட்டான்.மாலதியின் கடத்தல் கேஸை.

“நேற்று காலை பத்து மணிக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு எங்களுக்கு மதியம்தான் தெரியும்.ஆனால் நாங்கள் வந்ததில் இருந்து உன் அப்பாவை கண்ணால் கூட பார்க்கவில்லை. கிட்டதட்ட இருபத்தி நான்கு மணி நேரமாக இந்த வலியை தாங்கி கொண்டு இருக்கிறாள்.உனக்கே தெரியும் சின்ன வலியை கூட அவளால் தாங்க முடியாது என்று.இப்போது அவளுக்கு முப்பது தையல் போட்டிருக்கிறார்களாம்.அவளுக்கு எப்படி வலிக்கும் என்று யோசித்து பார்”.

“ஒன்று நீ அவளை பார்த்து அவளின் வலியில் இருந்து வெளியில் வர உதவு இல்லை அவள் வலியில் துடித்து கொண்டே இருக்கட்டும் நான் வேண்டும் என்றால் டாக்டரிடம் சொல்லி கதவை திறந்து வைக்க சொல்கிறேன்.அவள் உன் பெயரை சொல்வதையும் வலியில் துடிப்பதையும் காது குளிர கேள்” என்று கோபமாக சொல்லிவிட்டு இரண்டு நாற்காலி தள்ளி போய் உட்கார்ந்தார்.

அலமேலு சொல்வதும் உண்மைதான்.பென்சில் சீவும் போது கையில் ஏற்பட்ட காயத்தையே தாங்க முடியாமல் இருந்தவளின் நினைவு தாக்க மெதுவாக எழுந்து ஐ.சி.யூ நோக்கி சென்றாள்.அவள் மனதினுள் “நாங்கள் யாருக்கு என்ன பாவம் செய்தோம்.எதற்காக எங்களுக்கு இந்த தண்டனை” என்று குமுறி கொண்டே மாலதி இருக்கும் பெட்டின் அருகே வந்தாள்.அவளை பார்த்து எப்போதும் சிரிக்கும் சிரிப்பை சிந்த முடியாமல் காயங்கள் அவளை வதைக்க கண்ணீருடன் சற்று நேரம் எதுவும் பேசாமல் சுதியையே பார்த்து கொண்டிருந்த மாலதி நடந்த விஷயங்கள் அனைத்தையும் மெதுவாக சொன்னவள். அவர்களுக்கு சுவாதி தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற சத்தியத்தை பெற்று கொண்டு மாலதியின் உயிர் பறவை அவளை விட்டு சென்றது.

இதோ மாலதி இறந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.லட்சுமி லாரியில் அடிபட்டதால் கோமா ஸ்டேஜில் மூன்று மாதம் இருந்து பிறகு தான் கண் விழித்தார்.அப்போதும் அவரால் முன்னை போல் எழுந்து நடமாட முடியாமல்,அவர் வேலையை கூட செய்யமுடியாமல் இருந்தார்.சுவாதிதான் அவரை பார்த்து கொண்டார்.அந்த சமயம் தான் அவர்கள் ஊருக்கு டாக்டராக வந்தான் அர்ஜூன்.         பஸ்ஸைவிட்டு இறங்கிய அர்ஜூன்.அந்த இடத்தை சுற்றி தன் பார்வையை ஓட்டினான்.

“ம்…….பரவாயில்லை கடைகோடியில் இருக்கும் ஊர் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன் நன்றாகதான் இருக்கிறது” என்று நினைத்து கொண்டு நடந்தான்.

நேராக ஹாஸ்பிட்டல் சென்று அவர்களிடம் தங்கும் இடத்தைபற்றி விசாரித்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஹாஸ்பிட்டலை தேடி சென்றான்.அங்கிருக்கும் கம்போன்டரிடம் கேட்டு தங்குவதற்கான இடம் விசாரிக்க சொல்ல,கம்போன்டர் ராஜா சொன்ன விலாசத்திற்கு இருவரும் சென்றனர்.

இருவரும் அந்த தெருவில் நுழையும் போது எதிர்பட்டாள் சுவாதி.அவளிடம் பேச வேண்டும் என்று வேகமாக சென்றான் அர்ஜூன்.அவன் சுவாதியை நெருங்குவதற்கு முன்பு ஒரு கார் அவளை உரசினார் போல் வந்து நின்றது.அர்ஜூன் காருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான்.             காரைவிட்டு இறங்கிய ராம் அசிங்கமான இளிப்புடன் “சுவதி கண்ணு எங்க போய்ட்டு வர்ர” என்று கேட்க சுவாதியோ அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்து எதுவும் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.இதுவே பழைய சுவாதியாக இருந்தால், “நான் எங்கு சென்றால் உனக்கு என்ன டா…. உன் வேலையை பார்” என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து சென்றிருப்பாள்.ஆனால் இப்போது இருப்பவள்தான் புது சுவாதி ஆயிற்றே மாலதி இறந்த பிறகு பாதி தைரியத்தை இழந்தாள்.அம்மாவின் நிலையை அறிந்து எதுவும் எதிர்த்து சொல்லமுடியாத கோழையானாள்.

தன் தந்தையே தன்னுடைய வாழ்வை அழிக்க எண்ணுகிறார் என்ற உண்மை அறிந்து,துடித்தவளிடம் கொஞ்சம் கூட மனசாட்சி என்பது இல்லாமல் அவளது தந்தை, ராமுடனான திருமணத்திற்கு சுவாதி சம்மதிக்கவில்லை என்றால் லட்சுமியை கொன்றுவிடுவதாக மிரட்டியதில் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.அமைதியாக வேறொரு வேலை செய்து வந்தாள்.அது என்ன வேலை என்று இதுவரை யாரும் அறியாமல் பார்த்து கொண்டாள்.

ராம் மறுபடியும் கேட்கவும் தன்னிலை உணர்ந்து அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்க ஆரம்பித்தவளின் காதில் விழுந்த வார்த்தை அவளை நெருப்பில் நிற்பது போல் மாற்றியது.                        “எதற்கு இப்படி வெயிலில் அழைகிறாய் நம்முடைய கார் எதற்கு இருக்கிறது.நீ வெயிலில் அழைந்தாள் என்னால் தாங்கமுடியவில்லை” என்று வசனம் பேசி கொண்டிருந்தான்.

ராம் பேசுவதை கேட்டு கொண்டிருந்த அர்ஜூன் யார் இவன்.இப்படி உளறி கொண்டு இருக்கிறான்.ஒரு வேலை இவளுக்கு தெரிந்தவரோ என்று சுவாதியின் முகம் பார்த்தவன் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

ஏன் என்றால் சுவாதி முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அவனை நிமிர்ந்து பார்த்து,எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தவளின் பார்வையில் விழுந்தான் அர்ஜூன்.    சுவாதி அர்ஜூன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.அர்ஜூனோ “அப்பாடா….. ஒரு வழியா நம்மை பார்த்துவிட்டாள்” என்று நினைக்க,சுவாதியோ “யார் இவன் எதற்கு இப்படி பார்த்து கொண்டிருக்கிறான்.இதற்கு முன் இவனை பார்த்ததில்லையே” என்று யோசித்து கொண்டு இருந்தாள்.                                                                                                                                                       திடீரென, “ஏய் யார் நீ?” என்ற ராமின் அதட்டலில் இருவரும் தன்னை சுதாரித்து கொண்டனர்.

ராமோ “நான் இங்கு பேசி கொண்டு இருக்கிறேன் இவள் யாரை பார்க்கிறாள்” என்று பார்த்தவனின் கண்ணில் பட்ட அர்ஜூனை பார்த்து கோபம் கொண்டு அந்த கேள்வியை கேட்டான். அர்ஜூனோ நிதானமாக அவர்கள் அருகில் வந்து நின்றான். “நான்” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே ராஜா வேகமாக அவர்கள் அருகில் வந்து “டாக்டர் சார் வாங்க போகலாம்” என்று அவசரமாக அர்ஜூனின் கைபற்றி இழுத்தான்.

“ஒரு நிமிடம் இருங்க ராஜா சார்க்கு பதில் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று கூறியவன்.சுவாதியை பார்த்து கொண்டே “நான் புதிதாக இந்த ஊருக்கு வந்திருக்கும் டாக்டர் இதே தெருவில் அதோ அந்த வீட்டில்தான் வாடகைக்கு வர போகிறேன்” என்று கூற கேட்டு கொண்டிருந்த ராமின் முகம் விகாரமானது.

“டாக்டர் சார் கேள்வி கேட்டாள் பெண்களை பார்த்துதான் பதில் சொல்வரோ” என்று ராஜாவை பார்த்து கேட்ட ராம். “நீ கிளம்பு என்று அதிகாரமாக சுவாதியை போக சொன்னான்” .அவளும் விட்டால் போதும் என்று சிட்டாக பறந்துவிட்டாள்.அவள் போவதை பார்த்து கொண்டிருந்த அர்ஜூனை பார்த்த ராம். “இங்க பாருங்க டாக்டர் சார் வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்க்க வேண்டும்.பெண்களிடம் ஒழுக்கமாக பழகுங்கள்.ஏதாவது தவறாக என் காதுக்கு வந்தது அவ்வளவு தான்” என்று மிரட்டிவிட்டு ராஜாவை பார்த்து “சொல்லி வை” என்று கூறி தன் வண்டியை எடுத்து கொண்டு சென்றுவிட்டான்.

“வாங்க சார் இப்பதான் வந்தீங்க அதுக்குள்ள அவனிடம் வம்பு எதற்கு.என்னவோ இவன் பெரிய யோகியவான் போல உங்களுக்கு அட்வைஸ் செய்கிறான்.இது தான் கலிகாலம் போல” என்று புலம்பிவிட்டு அர்ஜூன் தங்க பார்த்திருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வீடு பார்க்க பெரிய வீடாக இருந்தது.அதற்கு அர்ஜூன் “என் ஒரு ஆளுக்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடு” என்று கேட்டான். “இந்த ஏரியாவில் இது போல் ஒரு வீடு கிடைக்காது சார்.அதுமட்டும் இல்லாமல் ஹாஸ்பிட்டலில் இருந்து இந்த வீடு பக்கம்.வீட்டில் கூட நீங்கள் சிகிச்சை அளிக்கலாம்” என்று கூற அர்ஜூன் ஒரு வழியாக ஒத்து கொண்டான்.

பைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ளே போய் வைத்த ராமை பார்த்த அர்ஜூன் இவன் ஏன் அந்த ஆளைபற்றி அப்படி சொன்னான் அவளிடம் வேறு அந்த ஆள் பேசி கொண்டு இருந்தானே என்னவென்று ராஜாவிடமே கேட்போம் என்று முடிவு செய்து அதை கேட்கவும் செய்தான்.

“நீ ஏன் அந்த ஆளைபற்றி அப்படி சொன்னாய்.அவன் யார்” என்று கேட்க “அது ஒரு பெரிய கதை சார் நீங்க முதலில் ரெஸ்ட் எடுங்க ப்ரியா இருக்கும் போது பேசலாம்.நான் சென்று உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்.நீங்கள் அதற்குள் குளித்துவிடுங்கள்” என்றவன் வேகமாக வெளியேறினான்.

அர்ஜூனும் ராமைபற்றி யோசிக்காமல் வந்த அழுப்பு நீங்க குளிப்போம் என்று குளியலறை நோக்கி சென்றவன் மனதில் சுவாதியின் நினைவே வந்தது. “சுவாதி என்றுதானே அவன் சொன்னான் நைஸ் நேம்.உன்னை மறுபடியும் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை வது” என்று தனக்குள் கூறி கொண்டவனின் மனசாட்சி                                                                                                                                 “என்ன வதுவா…… டேய் நீ இப்பதான் அவளை பார்த்தாய்,அதற்குள் செல்ல பேர் வைக்கும் அளவுக்கு வந்துவிட்டதா” என்று கேலி செய்தது.

“ஏய் நான் அவளை இப்போது தான் பார்த்தேன் என்று சொல்லாதே ஆறு மாதத்திற்கு முன்பே பார்த்து போட்டோவும் எடுத்து வைத்திருக்கிறேன்.என்ன பெயர், என்ன ஊர் என்று எதுவும் தெரியாமல் இருந்தது,இப்போது தெரிந்துவிட்டது அவ்வளவுதான்.அவள் என் காதலி.என் வருங்கால மனைவி நான் அவளை எப்படி வேண்டும் என்றாலும் கூப்பிடுவேன்,நீ உன் வேலையை பார்” என்று அதன் தலையில் கொட்டி அடக்கினான்.அவள் நினைவுடனே குளித்து வந்தவனை சூடான இட்லியும் குருமா வாசமும் வரவேற்றது.

ராஜாவை பார்த்து சிரித்து “பயங்கர பசி என்று கூறி சாப்பிட ஆரம்பித்தான்.பசி ஓரளவு சமன்பட்ட பின்பு சமையல் யாருடையது. என் அம்மா சமைப்பது போலவே இருக்கிறது” என்று கூறினான்.

ராஜா சிரித்து கொண்டே “வீட்டு சமையல்தான் சார் அந்த அம்மா நல்லா சமைப்பாங்க.அவங்ககிட்டதான் வாங்கிட்டு வந்தேன்” என்று கூற சாப்பிடுவதை நிறுத்திய அர்ஜூன் “யாரிடமும் வாங்க வேண்டாம் ராஜா வீட்டில் நானே சமைத்து கொள்கிறேன்.மற்றவர்களிடம் இனாமாக எதுவும் வாங்குவது எனக்கு பிடிக்காது.நீங்கள் கடையில் வாங்கி வருகிறேன் என்று தானே சொன்னீர்கள்” என்று கேட்டான்.

“அந்த சுவாதி பொண்ணுதான் சார் கூப்பிட்டு கொடுத்தது.பதிலாக அவர்களின் அம்மாவின் உடல்நிலையை முழுவதுமாக செக் செய்ய வேண்டுமாம்” என்று கூறினான்.முதலில் ராஜா சொன்னதை கேட்டு சந்தோஷபட்டவன் அவன் அடுத்து சொல்வதை கேட்டு ஆச்சரியபட்டு அவனிடமே கேட்டான் “இது அவர்கள் வீடு தானே அவர்கள் நினைத்தாள்,சென்னை போன்ற பெரிய நகரத்தில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கே அழைத்து போகலாமே” என்று கேட்டான்.

ராஜா  “எல்லாம் விதி சார் என்ன பணம் இருந்து என்ன புண்ணியம் வீட்டில் ஆண்பிள்ளை சரியில்லை என்றால் எல்லா கஷ்டமும் வரும்.நீங்கள் சாப்பிடுங்கள் டெஸ்ட் பண்ண நாளை காலை பதினோரு மணி போல் வர சொன்னது” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென சென்று விட்டான்.         அர்ஜூனும் இவனிடம் எது கேட்டாலும் பதில் வராது இங்குதானே இருக்கிறோம் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

அடுத்த நாள் சென்று லட்சுமியை முழுவதுமாக டெஸ்ட் செய்ததில் அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரது உயிரை காத்து  வைத்திருப்பது போல்தான் அர்ஜூனுக்கு தோன்றியது.  ஆக்ஸிடன்டில் அதிக பதிப்படைந்தவரை சாதாரண ட்ரிட்மண்ட் கொடுத்து அவரது உயிரை தற்போது போகாமல் மட்டுமே காத்துள்ளனர்.இதே நிலையில் இவ்வளவு நாட்கள் இருந்ததால் அவர்கள் மேலும் வீக்காகதான் ஆகியிருக்காறார்கள்.இன்னும் மிஞ்சி போனால் ஆறு மாதம் என்ற விவரத்தை சொன்ன போது கேட்டு கொண்டிருந்த சுவாதியின் இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று மட்டுமே வெளிப்பட்டது.            தாய்காக அவள் கத்தவில்லை கதறவில்லை அர்ஜூனுக்கு ஆச்சரியமாக இருந்தது.எதுவும் பேசாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினான்.                          அன்று இரவு ராம் குடித்துவிட்டு வந்து சுவாதியின் வீட்டின் முன்பு நின்று கொண்டு கண்டபடி கத்தி கொண்டு இருந்தான்.

“ஏய் நான் உன்னை விலக்கி வாங்கிவிட்டேன்.நீ எனக்கு தான். இதை யாராலும் மாற்ற முடியாது இதை அந்த மாலதி தடுத்தாலும் சரி.அவளுக்கு ஒரு முடிவு கட்டி விட்டேன்.இங்க பார் கேரள நம்பூதிரி மந்திரித்து கொடுத்த தாயத்து” என்று கத்தி கொண்டு இருந்தான்.சத்தம் கேட்டு வெளியே வந்த அர்ஜூனுக்கு ஆச்சரியம். என்னவென்றால் அவனுடைய இத்தனை கத்தலுக்கும் பதில் இல்லாதது போல சுவாதியின் வீட்டு கதவு மட்டும் இல்லாமல் அந்த தெருவில் அனைவர் வீடும் மூடி இருந்தது.

தன் வீட்டின் உள்ளே வந்து படுத்த அர்ஜூனுக்கு ஒரே குழப்பமாகவும் யார் அந்த மாலதி என்று யோசித்து கொண்டே தூங்கி போனான்.இதோ ஆகிவிட்டது அர்ஜூன் அந்த ஊருக்கு வந்து இரண்டு மாதம் ஓடி விட்டது.இடையில் பலமுறை சுவாதியிடம் பேச முயற்சி செய்து தோல்வி அடைந்தாலும் அவன் முயற்சியை நிறுத்தவில்லை. அவளுடன் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகமானதே தவிர குறையவில்லை.

சுவாதிக்கும் அர்ஜூனின் மேல் நல்ல எண்ணம் வர துவங்கி இருந்தது.அதற்கு காரணம் அர்ஜூன் பலமுறை ராமின் அறுவையில் இருந்து காப்பாற்றியதே.

நல்ல எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக சுவாதியினுள் காதலாக மாறிய சமயம் இடி போல் இறங்கியது சுவாதியின் அப்பா சொன்ன செய்தி.ஆம் “சுவாதிக்கும் ராமுக்கும் சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும்” என்று அவர் சொன்னதுதான் அந்த இடி.

கை கூடா காதல் என்னுள் ஏன் வந்தது என்று ஊமையாக அவளால் அழ மட்டுமே முடிந்தது.பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக இந்த காதலை வெளியில் யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளே புதைத்து கொள்வது என்ற முடிவு எடுத்து கொண்டாள்.

இப்படியே நாட்கணக்கில் அல்லாமல் மாத கணக்கில் தன்னுள் மொட்டுவிட்ட காதலை தனக்குள்ளே மறைத்துவிட்டதாகதான் நினைத்தாள்.அவளுடையவன் வந்து அவளிடமே சவால் விடும் வரை.

அவர்கள் ஊரில் திருவிழா ஆரம்பித்தது.அன்று அனைவரும் அம்மனுக்கு பூ எடுத்து சென்று அம்மனுக்கு கொடுப்பர்.சுவாதியும் தான் கொண்டு சென்ற பூவை அம்மனுக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கோபுரத்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள்.                                      அர்ஜூனும் கோவிலுக்கு வந்த இடத்தில் சுவாதியை பார்த்து அவளிடம் பேசும் ஆவலில் அவள் அருகில் செல்ல,சுவாதி அர்ஜூன் வருவதை பார்த்து எழுந்து செல்ல முற்பட்டாள்.அவளின் செயலை எதிர் பார்த்து வந்தது போல் வேகமாக அவளை நெருங்கிய அர்ஜூன் அவளின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு

“உட்கார்,நான் உன்னுடன் பேச வேண்டும்” என்று சொன்னான்.சுவாதியோ “யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் முதலில் கையை விடுங்கள்” என்று சீறினாள்.                                               “நான் கையை விட்டாள் நீ ஓடி விடுவாய் எத்தனை முறை இப்படி செய்திருக்கிறாய்.நான் சொல்வதை கவனமாக கேட்டு கொள் யார் வேண்டுமென்றாலும் என்னவேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும் இந்த அம்மன் சந்நிதியில் வைத்து சொல்கிறேன் நன்றாக கேட்டு கொள் உனக்கு தாலிகட்டி உன் நெற்றியில் பொட்டு வைக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது.நான் தான் உன் கணவன்.உனக்கும் என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.நீ யாருக்காக பயப்படுகிறாய் என்றும் தெரியும். இதுதான் என் முடிவு என்று சொன்னவன் இதை சொல்லதான் வந்தேன் பாய்……..” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

சுவாதி தான் என்ன நினைக்கிறோம் என்று புரியாமல் திக் பிரம்மை பிடித்தவள் போல் நின்று கொண்டு இருந்தாள்.பக்கத்து வீட்டு மாமி வந்து அவள் நிற்பதை பார்த்து

“என்ன மா ஏன் இப்படி தனியாக நிற்கிறாய்” என்று கேட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.நாட்கள் தன் போக்கில் செல்ல, அர்ஜூன் தன் காதலை சொல்லி ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று இரவு தூக்கம் வராமல் மாடியில் நடந்து கொண்டிருந்த அர்ஜூனுக்கு யாரோ ரோட்டில் பதுங்கி பதுங்கி செல்வது கண்ணில்பட்டது.யார் இது இந்த நேரத்துக்கு ஒரு வேலை திருடனாக இருக்குமோ எதற்கும் போய் பார்ப்போம் என்று இவனும் வேகமாக இறங்கி அந்த உருவத்தை தொடர்ந்து சென்றான்.

அந்த உருவம் மறைவாக ஒரு மரத்தின் பின்புறம் சென்று சிறிது நேரம் கழித்து வெளிபட்ட போது பார்த்த அர்ஜூனுக்கு வேர்த்து விறுவிறுத்து போய்விட்டது.என்ன காரணம் என்று பார்கிறீர்களா அது ஒன்றும் இல்லை அவன் பார்த்தது பேயை.ஆமாம் தலையை விரித்து போட்டு கொண்டு வெள்ளை நிற சாரி கட்டி கொண்டு ஜல் ஜல் என்று கொழுசு சத்தத்துடன் ராமின் வீட்டிற்கு அருகில் சென்று நிலம் அதிர நடந்து,விகாரமாக சிரித்தது.

அர்ஜூனோ ராஜா சொன்ன விஷயத்தை நினைத்து திகிலடைந்து இருந்தான்.அதாவது “சுவாதிக்கு ஒரு அக்கா இருந்ததாகவும் அவள் இறந்து அவளின் ஆவி இங்கு சுத்தி கொண்டு இருப்பதாகவும் அவளை நைட் சிப்ட் முடிந்து வருபவர்கள் பார்த்திருப்பதாகவும் அதனால் இரவு நேரங்களில் வெளியே எங்கும் போக வேண்டாம்” என்று எச்சரித்து இருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 6சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 6

ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியேறிய சுவாதி ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்வதற்குள் சில முடிவுகளை எடுத்தால். அதன்படி வண்டியில் வரும்போதே தன் அக்காவின் பழக்கம் போல் தூங்கிய மகனை கண்ணில் நீருடன் பார்த்தவள் “உன்னை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.நாம்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4

“அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான்” என்று சொன்னவுடன். “வாட்”  என்று கத்திவிட்டாள் பிறகு சுற்றுபுறத்தை அறிந்து அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டி அமர்ந்தவள். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்டாள். தோழியின் குணத்தைபற்றி அறிந்ததால்.இனி சுவாதியின்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12

ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின் ஆப்ரேஷனை கவனிப்போம் என்று ஒன்றாக சகோதரர்கள் இருவரும் சொன்னதை கேட்டு வள்ளி முனகி கொண்டே சம்மதித்தாள். இரயில்