Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 26

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 26

26 – மனதை மாற்றிவிட்டாய்

அந்த நேரம் சேகரும், மதியும் வந்து கோவிலுக்கு செல்லவேண்டுமென அழைக்க அனைவரும் கிளம்பினர். அனு தனக்கு டியூஷன் இருக்கு எனவும், ஆதி ஆபீஸ் செல்லவேண்டும், அர்ஜுனை அழைத்துக்கொண்டு போக சொல்ல மற்ற அனைவரும் கிளம்பினர். அர்ஜுனின் பெற்றோர்களை அப்டியே கோவிலுக்கு வர சொல்லிவிட்டனர். திவி ஏதோ பிரண்ட் பாக்க செல்லவேண்டுமென மறுக்க ராஜீ, மகாவை அழைத்துக்கொண்டு சென்றனர்.

ஆதிக்கு திவி இவர்களோடு போகவில்லை எனவும், அவள் காலைல பேசுனது நினைச்சுட்டு இருக்காளோ? அப்டியே கோபம்னாலும் என்கிட்டதா ரியாக்ட் பண்ணுவா, பட் இருந்தாலும் , எதுவுமே சொல்லாம என் செல்லம் போய்ட்டாளே. முகமே வாடிடுச்சுனு சுபி சொன்னாலே பீல் பண்ணிருப்பாளோ? பாவம் அவ.. போன் பண்ணலாமா? பண்ணி என்னனு சொல்றது? இல்ல நேரல நான் பேசிட்டா சரி ஆய்டுவா. சரி ஈவினிங் அவகிட்ட பேசலாம்.. முடிஞ்சா மதியமே போகலாம்…” என முடிவெடுத்து அவன் வேலையில் மூழ்க,

சிறிது நேரத்தில் அவனுக்கு புது நம்பர்ல இருந்து கால் வந்தது. அதை எடுத்தவன் கேட்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது …திவியின் தோழி பேசினாள். “திவிக்கு வீடு வரும் வழியில் ரோடு கிராஸ் செய்யும்போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது, எப்படியோ வீடு பக்கத்தில் என்பதால் கூட்டிட்டு வந்துட்டேன். காலிலே நல்ல அடி, நடக்கவே முடிலேனு சொல்றா… இங்க ஏதோ ஏரியால ப்ரோப்லேம் போல.ஹொஸ்பிடல்ல கூப்பிட்டா வண்டிகூட வழில மாட்டிகிட்சாம். சோ இங்க கூட்டிட்டு வாங்க டிரீட்மெண்ட் பண்ணிடலாம்ணு சொல்லறாங்க. வீட்ல எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க. மேரேஜ் விஷயமா பேச போற இடத்துல இந்த மாதிரி அடிபட்டது சொல்லி அவங்கள டென்ஷன் பண்ண வேணாம்னு உங்க நம்பர் குடுத்து கூப்பிட சொன்னா சார்..கொஞ்சம் பிளட் லாஸ் வேற அதிகம்.. அவ மொபைல்ல நம்பர் எடுக்க சொல்லிட்டு இருந்தா அப்டியே மயங்கிட்டா….” என கூறியது தான் அவன் “நான் உடனே வீட்டுக்கு வரேன்” என புயலென வண்டியை கிளப்பினான்.

ஆதிக்கு மனமே இல்லை “அட்ச்சோ ஏன் டி இப்டி பண்ற? எத்தனை தடவ சொல்றது? பாத்து ரோடு கிராஸ் பண்ணுனு…எல்லாம் விளையாட்டுத்தனம். ஆண்டவா இரத்தம் வேற அதிகமா போற அளவுக்கு கால்ல அடின்னா, எப்படி டீ தாங்குவ? கொஞ்சம் பொறுத்துக்கோடா இதோ சீக்கிரம் வந்துடறேன். ” என புலம்பிக்கொண்டே விரைந்தான். அவன் மனம் முழுக்க அவள் மட்டுமே தான். வீட்டினுள் வேகமா நுழைந்தவன் அங்கே அவள் முழுமையாக நிற்பதை கண்டவன் அதன் பின்பு தான் நிம்மதியாக மூச்சு கூட விடமுடிந்தது.

அவளோ சிரித்துவிட்டு “வாங்க சார், என்னை எல்லாம் கண்டுக்கவே கூடாதுனு சொன்னிங்க… அப்டியே போகட்டும்னு விட்றவேண்டியதுதானே… வருவீங்கன்னு நினச்சேன். பட் இவளோ சீக்கிரம், அதுவும் இப்டி வேர்க்க, இவளோ வேகமா, வந்து மூச்சு வாங்குற அளவுக்கு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல பா. ஒருவேளை அத்தை கேட்டா பதில் சொல்லணும்னு வந்திங்களா? இல்ல இந்த இம்சையை எப்படி அடிபட்டு அழுகுதுனு பாத்து எஞ்சாய் பண்ண வந்திங்களா? ஆனாலும் ஆதி செம பாஸ்ட்டா வந்து இருக்கீங்க..” என அவள் விளையாட்டை பொய் சொல்லி வந்ததை எண்ணி சிரித்துக்கொண்டிருக்க அவள் ஓங்கி ஒரே அறை அவள் சோபாவில் விழுந்தாள்.

ஒரு நிமிடம் கண்களையும் கைகளையும் இறுக மூடியவன் அனைவரும் வந்துவிட கூடும் என எண்ணியவன் அவளை பற்றி தன் அறைக்கு வேகமாக இழுத்துச்சென்றான். வந்த வேகத்தில் அவளை கையை விட்டுவிட்டு கதவை அடைத்துவிட்டு கத்த துவங்கினான். “அறிவில்லையா டி உனக்கு. எதுஎதுல விளையாட்றதுன்னு இல்ல? திமிரு. அப்டி என்ன பொய்? விளையாட்டுத்தனம் உனக்கு? இனிமேல் வாய திற. அப்டியே இன்னும் நாலு கொடுக்கறேன். இதுல ‘ எப்படி அடிபட்டு அழுகுதுனு பாத்து எஞ்சாய் பண்ண வந்திங்களா?னு’ லூசுத்தனமா கேள்வி வேற என அடிக்க திரும்ப போக அவள் கன்னத்தில் கைவைத்து குறுகி நிற்க, ஏன் டி இப்படியே நிக்கிற.. எதாவது பேசித்தொலை…”

“பேசுனா திருப்பி அடிப்பீங்கனு சொன்னிங்களே? ”

“இந்த வாய்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, அப்படி அடி வாங்குனாலும் நீ அடங்குறியா? கொஞ்ச நேரத்துல எவளோ டென்ஷன். ச்ச…. கொஞ்ச நேரமாவது மனுசனா நிம்மதியா இருக்க விட்ரியா? உயிரே போகுது….” என்க

அவள் “சாரி ஆதி, மார்னிங் நீங்க என்ன பத்தி இம்ச, டார்ச்சர், பொய் சொல்லுவா? ஏமாத்துவானு எல்லாம் சொன்னதுல கொஞ்சம் கோபம். அதுதான் கொஞ்சம் அலையவிடலாம்னு அப்டி பிளான் பண்ணிட்டேன். அதுவும் கண்டுக்ககூடாதுனு சொன்னதுல கொஞ்சம் வருத்தம், அதனால தான் அடிபட்டதுனு சொல்லிட்டேன்.. உண்மையாவே கண்டுக்கலேனா அத பத்தி பெருசாவே எடுத்துக்கமாட்டீங்க? ஏதோ கொஞ்சம் அக்கறை இருந்தாலும் என்ன வந்து பாத்திட்டு அடிபட்டத சொல்லி சீண்டி வம்பிழுப்பின்கனு தான் நினச்சேன்… நீங்க இவளோ சீரியஸ்ஸா எடுத்துப்பீங்கனு நினைக்கல ஆதி. வம்பிழுக்க தான் நினச்சனே தவிர வேற எதுவும் பெருசா யோசிக்கல. . நான் பண்ணது தப்புதான்… உங்கள வேலை நேரத்துல இப்டி டென்ஷன் பன்னிருக்கக்கூடாது. வேணும்னா இன்னும் என்ன எத்தனை அடிவேனும்னாலும் அடுச்சுக்கோங்க. ஆனா உங்க நிம்மதியா கெடுக்கறேனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க ஆதி ப்ளீஸ் கஷ்டமாயிருக்கு .. ” என அழுது விடுபவள் போல அவள் கன்னத்தை பிடித்து கொண்டு நிற்க இவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

அவளிடம் சென்று அவள் கன்னத்தில வைத்திருந்த கையை விலக்கியவன் அவள் எடுக்கவிடாமல் தடுக்க இவனும் விடாப்பிடியாய் கையை விலக்கி அவள் கன்னத்தை வருடிவிட்டான். நன்றாக விரல் பதிந்து சிவந்த கன்னத்தை தன் நெஞ்சில் படுமாறு அவளை சாய்த்துக்கொண்டான். ஏதோ பெரிதாக தவறு செய்து விட்டவள் போல பயந்து நின்ற அவளும் அவன் மார்பில் நெருங்கி ஒட்டிக்கொண்டாள். மீண்டும் அவள் “நீங்க இப்படி எனக்காக ரியாக்ட் பண்ணுவீங்கன்னு எனக்கு தோணல. எனக்கு தெரியல. சாரி ஆதி.என் மேல பிராமிஸ்… நான் இப்போ பொய் சொல்லல ” என பேசியவளை ஆதி “ஸ்ஸ்… தியா என்ன இது ப்ரோமிஸ் எல்லாம் பண்ணிட்டு…. நீ இப்போ பொய் சொல்லலைனு எனக்கு தெரியும். பேசாம கொஞ்ச நேரம் இரு.” என தலையை வருடிக்கொடுத்தான். அவளும் அமைதியாக இருந்தாள்.

பின் அவளை விலக்கியவன் தன்னை பார்க்க சொன்னான். அவளும் பார்க்க “தியா, இனிமேல் இந்தமாதிரி விஷயத்துல என்கிட்ட எப்போவும் பொய் சொல்லமாட்டேன்னு எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணுவியா என கைநீட்ட, அவள் ஒரு நொடிகூட யோசியாமல் அவன் கைகளை பற்றி “ப்ரோமிஸ் ஆதி, விளையாட்டுக்கோ, சீரியஸோ இனிமேல் உங்ககிட்ட எதுக்கும் பொய் சொல்லமாட்டேன்.. நீங்க சொல்றத கேட்பேன்.. ஆனா நீங்களும் இனிமேல் அப்படி நிம்மதியா கெடுக்கறேன் அப்புறம்… அப்புறம் உயிரை.. என இழுத்து அந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது. என்மேல கோபம் நான் தப்பு பண்ணா சண்டைபோடுங்க, அடிங்க. .பட் அப்படி எல்லாம் உங்கள ஹர்ட் பண்ணிட்டு பேசாதீங்க…” எனவும் அவளை அணைத்துக்கொண்டு “உயிர் போகுதுனு ஒரு வார்த்தைக்கு சொன்னத கூட தாங்கிக்காம இப்படி பேசுறாளே. எனக்காக அடிகூட வாங்கிக்கறாளாம். இவளை என்னதான் பண்றது…மனசுல இருக்கறத மறைக்காம சொல்லிடறா… ஆனா அத யோசிச்சு புரிஞ்சுக்கிட்டா பரவலையே…” என எண்ணியவன் “சரி டா கீழ போலாமா?” அவளும் அமைதியாக வந்தாள். அவன் அவளிடம் “தியா குட்டி , நீ இப்படி அமைதியா இருந்தா நல்லவேயில்லை…” அவள் “ம்ம். …” ஆதி “என்ன ம்ம்…. ஒழுங்கா எப்போவும் போல இருக்கமாட்டியா?”

திவி “நான் ஏதாவது லூசுமாதிரி பேசி கஷ்டப்படுத்திடுவேன் வேண்டாம் நான் பேசமாட்டேன் ..” என

நிலைமையை சாதாரணமாக்க நினைத்து அவளை இப்படி எல்லாம் கேட்டா நீ அடங்கமாட்டே என உணர்ந்தவன் பேச்சை மாற்றி “சரிடா , ஆனா கால்ல பேசுனது நீ இல்லையே?” என கேட்க

அவள் பேசமாட்டேனு கூறியதை மறந்து “அதுவா? அது என் பிரண்ட் சசி, அவகூடதான் வந்தேன். அவளை இருக்க சொன்னேன். அவதான் பொய் சொன்னதால உங்களுக்கு பயந்து ஓடிட்டா.” என

ஆதி “இல்லையே பொய் சொல்ல பயந்தமாதிரி தெரிலையே… ”

“நீங்க வேற ஆதி சும்மா அடிபட்டதுனு சொன்னா நீங்க நம்பமாட்டீங்கனு, உங்களுக்காக புல் ஸ்கிரிப்ட் நான்தான் எழுதினேன்.. கேள்விக்கே இடமிருக்கக்கூடாதுனு. ஆனாலும் அவ ஒழுங்கா பேசவேயில்லை.. அவளை நெறைய தடவ பேசச்சொல்லி அப்புறம் கூப்பிட்டோம். அதான் அவ்ளோ லேட். ரியலா அவளை பேசவேகிறதுக்குள்ள… ஸ்ப்ப்பா. ..”

ஆதி இன்னும் தெளியாமல் “நீ சொல்றதும் உண்மைதான்…ஆனாலும் குட்டிம்மா அவ்ளோ நேரம் டயலாக் பேசுனா ஓகே அப்டி இருக்க அந்த பதட்டம் கூட ரியல்லா எப்படி வந்தது… நான் அதனால தான் வேற எதுவும் கேக்காம உடனே கிளம்பினேன் ”

இவள் சிரித்துக்கொண்டே “அந்த பதட்டம் எனக்கு அடிபட்டதுன்னு சொன்னதால, இல்ல உங்ககிட்ட பொய் சொல்றமோன்னு வந்தது இல்ல. . ஒழுங்கா ரியலா பேசலேனா அவ லவ் மாட்டெர வீட்ல கொஞ்சம் மாத்தி சொல்லி புகைச்சுவிட்ருவேனு பயமுறுத்தி போனே கைலையே வெச்சுஇருந்தேன். அதனால தான்.” என அவள் சொல்லி சிரிக்க

ஆதி அவள் காதை திருகி “அடி பிராடு, பாவம் அந்த பொண்ணையும் எவ்வளோ பயமுறுத்திருக்க? இப்படி கிரிமினலா யோசிக்கிற மூளைக்கு கொஞ்சம் உபயோகமா வேலை குடுத்தா நீ எங்கேயோ போயிருப்ப…” அவன் கூற அவள் சிரிக்க “சரி எனக்கு ஒர்க் இருக்கு நீ பண்ண வேலைல அப்படியே வந்துட்டேன். ஈவினிங் பாக்கலாம். பை டா தியா” என

திவி வேகமாக அவனிடம் சென்று “ஒரு டவுட்…”

“என்ன”

“அதுயென்ன, அப்போப்போ தியானு சொல்லறீங்க…. யாரோட பேர அது? ”

“உன் பேரு தான்”

நம்பாமல் கண்களை சுருக்கி பார்க்க அதை ரசித்தவன் “உன் புல் நேம் என்ன? ”

“திவ்யஸ்ரீ”

“எல்லாருக்கும் நீ திவி, எனக்கு ஸ்பெஷலா கூப்பிடணும்னு தோணுச்சு. அதுவும் நிக் நேம்ல. .அதுதா தியா” அவள் விழி விரித்து ஸ்பெஷலலா ?

“சரி எல்லாருக்கும் நிக் நேம் வெப்பேல்ல. …எனக்கு நீ என்ன நிக் நேம் வெச்ச? ”

“ஓ. ..நெறைய இருக்கே. ..ஆனா” என அவள் திருதிருவென முழிக்க

“எது ‘காண்டு காட்ஜில்லா, அரமென்டல் ஆதி…’ இதெல்லாமா?

அவள் மனதிற்குள் அர்ஜுனுக்கு அர்ச்சனை செய்ய

“அர்ஜுன திட்றத விட்டுட்டு, தேவையில்லமா யோசிக்கறத விட்டுட்டு போயி எனக்கு என் நேம்ல இருந்து யாரும் கூப்பிடாத நீ மட்டும் ஸ்பெஷல கூப்பிட ஒரு நேம் கண்டுபுடி. போ….”

அவளும் “சரி” என துள்ளிக்குதித்து ஓடினாள்.

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 14யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 14

கனவு – 14   அன்று திங்கள் கிழமை காலை. மக்கள் நிரம்பி வழிந்தனர் இலங்கை வங்கியில். வார விடுமுறை கழித்துப் பணம் போடவும், எடுக்கவும் வருபவர்களாலும் அடகு வைக்க, எடுக்க வருபவர்களாலும் எப்போதுமே திங்கள் கிழமைகளில் கூட்டம் அதிகம் தான்.

வார்த்தை தவறிவிட்டாய் – 1வார்த்தை தவறிவிட்டாய் – 1

ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன். வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன். நமது கதாநாயகி பானுப்ரியாவை

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74

74 – மனதை மாற்றிவிட்டாய் உடனே சுபிக்கிட்ட சொல்லி அவங்க பொண்ண கூப்பிட்டு இன்ட்ரோ குடுன்னு சொன்னேன். மீரா அம்மாகிட்ட கேட்டு அவளை அவளது தோட்டத்தில் சென்று பார்க்க சுபி திவியை மீராவிற்கு அறிமுகப்படுத்தியதும் இருவரும் ஏனோ ஒரு தோழமையுடனே ஐந்து