Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2

மூவரும் அதிர்ந்து தன்னை பார்பதை உணர்ந்தவள்.

“தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் குழந்தையை பற்றிய விவரங்களை பேசவோ நினைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை” என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினாள்.

கீதாவோ தன் தோழி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள்.இருந்தாலும் அனைத்தையும் தைரியமாக எதிர் கொண்டு சமாளிக்கும் திறமையும் தைரியமும் அவளுக்கு இருக்கிறது என்ற மெச்சிதலுடன் பார்த்தாலும் பத்து வருட நட்பின் மூலம் இன்னும் ஏதோ நடந்திருக்கிறது இவள் நம்மிடம் மறைக்கிறாள் அனேகமாக அது குழந்தையின தந்தை பற்றிய விசயமாக இருக்கும் என்பது வரை ஊகித்தாள்.

பெரியவர்களுக்கு எப்படி இவள் வாழ்வை சரி செய்வது,இதில் குழந்தையை எப்படி தனியாக வளர்பாள் என்ற எண்ணம் இருந்தாலும் குழந்தையை பற்றிய பேச்சில் அவளின் குரல் மாறுபாட்டை அறிந்தவர்கள் என்பதால் அமைதியாக இருந்தனர்.

நான் பி.ஈ கம்பியூட்டர் முடித்திருக்கிறேன்.வேலைக்கு அப்ளை செய்து இண்டர்வியூவும் ஆன்லைனில் முடித்துவிட்டேன். சென்னையில் உள்ள பிரான்ஜின் திருச்சி கிளைக்கு கேட்டு இருந்தேன்,அதனால் கொஞ்சம் காத்திருக்க சொன்னார்கள். இப்போது நாளை மறுநாள் வேலையில் சேர சொல்லி ஈ மெயில் அனுப்பினார்கள்.இவள் சொல்வதை கேட்டு அனைவரும் யோசனையாக பார்த்தனர் அவர்களின் பார்வையே இது எல்லாம் எப்போது நடந்தது என்று கேட்பது போல் இருக்க

“அம்மா இறந்த உடனே அப்ளை செய்துவிட்டேன்.சென்னையில் உள்ள ஆபிஸ்க்கு வர சொன்னார்கள் நான் அங்கு வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் அதனால் இந்த ஒரு மாத தாமதம்” என்றாள்.                         கீதாவோ “வேலை கிடைத்தவுடன் அங்கிருந்து வராமல் இவ்வளவு நாளும் ஏன் அந்த நரகத்தில் இருந்தாய்” என்றாள் கோபமாக.

“சென்னையில் வேலை செய்ய எனக்குப்  பிடிக்கவில்லை” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாள்.ராகவை பார்த்த சுவாதி அப்பா “எனக்கு ஒரு உதவி மட்டும் செய்ய முடியுமாப்பா” என்றாள்.

ராகவோ “என்னமா நீ இவ்வளவு நாள் அப்பா என்றதெல்லாம் வாய் வார்த்தைக்குதானா… என்ன செய்ய வேண்டும் என்று சொல்” என்றவரை கூர்மையாக பார்த்தவாறே

“எனக்கு தனி வீடு ஒன்று பார்த்து தர வேண்டும்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்

“எதற்கு” என்ற கீதா,

“அவர்களை பார்த்து உங்களுக்கு என்னால் எந்த சிரமமும் வேண்டாம் அம்மா” என்று பிடிவாதமாக கூறவும் தாய் மகள் இருவரும் அமைதி ஆகினர்.

ராகவன் சிறிது நேரம் யோசித்தவர்.”சரிம்மா,உன் விருப்பத்திற்கு நான் சம்மதிக்கறேன்.ஆனால் நீ நான் சொல்வதற்கு சம்மதிக்க வேண்டும்” என்றவரை பார்த்த சுவாதி சம்மதமாக தலையை அசைக்க,

“கர்ப்பமாக இருக்கும் பெண்ணை தனியாக விடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் மாடியில் இருக்கும் வீட்டில் நீ இருந்து கொள். முதலில் வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்துவிட்டார்கள்,நீ அங்கு இருந்தா எங்களுக்கும் நீ கண் முன் இருக்கிறாய் என்று தைரியமாக இருக்கும்,நாளை குழந்தை பிறந்தா பார்த்து கொள்ள வசதியாக இருக்கும்” என்று மறுக்க வழி இல்லாமல் கூறினார்.

சுவாதி சற்று நேரம் யோசித்தவள் ராகவை பார்த்து நான் இங்கு தங்குகிறேன் என்றவளை மூவரும் மகிழ்ச்சியாக பார்க்க என்னிடம் வாடகை வாங்கி கொண்டாள் என்ற அவளின் அடுத்த வார்த்தையில் அந்த மகிழ்சி துடைக்கப்பட்டு அனைவரும் அமைதியாக பார்க்க,உங்கள் மனதை காயபடுத்துகிறேன் என்று புரிகிறது இருந்தாலும் நீங்கள் என் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி தலை குனிய சுவாதியின் சுயமதிப்பை அறிந்தவர்கள் என்பதால் ஒத்துக்கொண்டனர்.

கீதாவும் பி.ஈ கம்பியூட்டர் படித்ததால் வேறொரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள்.மறுநாள் சுவாதி,கீதா இருவரும் வேலைக்கு கிளம்பினர்.முதல் நாள் என்பதால் இருவரும் ஒன்றாக கீதாவின் ஸ்கூடியில் சென்றனர்.சுவாதியின் கம்பெனி தாண்டிதான் கீதாவின் கம்பெனி இருப்பதால் இருவரும் ஒன்றாக தான் செல்வர்.சுவாதிக்கு நாட்கள் மசக்கையிலும் வள்ளியின் கவனிப்பிலுமாக இதோ குழந்தையின் வளர்ச்சி ஏழு மாதம் ஆனது.

வள்ளி சுவாதிக்கு வளைகாப்பு நடத்தலாம் என்று கூற சுவாதி மறுத்தாள்,குழந்தைக்கு நல்லது என்று சொல்லவும் ஒத்துக்கொண்டாள்.வள்ளிக்கு தெரியும் குழந்தையை இழுத்தால் நிச்சயம் சுவாதி சம்மதிப்பாள் என்று,அதனாலேயே குழந்தைக்கு நல்லது என்று சொல்லவும் ஒத்துக்கொண்டாள்.

வள்ளி வீட்டிலேயே வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சுவாதியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறி சமாளித்தார்.நழுங்கு வைக்க வள்ளி சென்று சுவாதியை அழைத்து வந்தார்.

சுவாதியை பார்த்த கீதா வியந்துதான் போனாள். சாதரணமாகவே சுவாதி நல்ல அழகு இன்று தாய்மை தந்த பொழிவுடனும் மேடிட்ட வயிற்றுடனும் வந்தவளை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.அருகில் சுவாதி வந்தவுடன் அனைத்து ரொம்ப அழகா இருக்க டா என்றாள்.அதற்கு சுவாதி மென்மையாக சிரித்தாலே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

கீதாவோ தன் தோழி வாழ்வை சரி செய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.ஆனால் என்ன செய்வது ஊருக்கு சென்றாள் சுவாதியின் நிலைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்,அதை பற்றி விசாரிப்போம் என்பதால் ஊருக்கு செல்ல கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டாள் என்று யோசித்துக்கொண்டிருந்தவள் என்ன ஆனாலும் சரி ஏதாவது செய்து சுவாதியின் நிலைக்கு காரணமானவரை கண்டுபிடிக்க வேண்டும்.அவரை பற்றி எதுவும் அவள் தப்பாக சொல்லவில்லை ஏதோ மிஸ்அண்டர் ஸ்டாண்டிங்காக இருக்கும் நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின்னரே வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள்.பாவம் அவளுக்கு எங்கு தெரிய போகிறது தோழிக்கு உதவ சென்று தானே சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று.

வளைகாப்பு முடிந்து வள்ளி சுவாதியை சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லி கீதாவின் அறைக்கு சென்றவள்,அங்கு இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்தவளின் கண்கள் மேடிட்டு இருக்கும் வயிற்றில் நிலைத்தது.ஏதேதோ நினைவுகளில் கண்கள் கலங்கியது.நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஏன் இந்த நிலைமை.

எல்லா பெண்களை போல் என்னை எனக்காக மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.அது தவறா நான் உயிராக நேசித்தவனே,என் மனதை உடைத்துவிட்டானே என்னுடையவன் என்ற எண்ணம் என்னுள் இருந்து நீங்கி உரிமை இல்லாத ஒன்றை எடுத்து கொண்டது போல் தோன்றும் இந்த நினைவு எப்போது நீங்கும் என்று தனக்குள் பேசிக்கொண்டவளின் கண்களில் கண்ணீர்.

யாரோ வரும் அரவம் கேட்டு கண்ணீரை துடைத்து கொண்டு உதட்டில் போலியான புன்னகையை பூசிகொண்டு திரும்ப கீதாதான் வந்தாள் வந்தவள் உன்னை ரெஸ்ட் எடுக்க சொன்னால் என்ன செய்கிறாய் என்றவள் சுவாதியை உற்று பார்க்க அவளின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவள்.இவள் என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டாள் நடந்ததை மறக்கவும் மாட்டாள் இப்படியே மனதில் போட்டு புதைத்து கொண்டு கஷ்டபடுவாள் என்று நினைத்து பெருமூச்சுவிட்டாள்.

சுவாதியின் அருகில் வந்தவள் அவள் வயிற்றில் கை வைத்து டேய் குட்டி பையா இந்த சித்திய பாக்க சீக்கிரம் வா,நம்ம ரெண்டு பேரும் ஜாலியாக விளையாடலாம்,பார்க் போகலாம் சித்தி உன்னை எல்லா இடத்திற்கும் கூட்டி போகிறேன் என்றவளின் குரலுக்கு சரி என்று பதில் சொல்வது போல் உதைத்தான் சுவாதியின் செல்வ மகன்.

கையில் குழந்தையின் அசைவை உணர்ந்தவள் “ஹேய்…… என்று கத்தி குட்டி சித்தி பேசரது கேட்கிறதா சுதி… இங்கு பாரடி நான் சொன்னதற்கு பதில் சொல்வது போல் உதைக்கிறான்” என்றாள் உற்சாகமாக.சுவாதியும் ஆமாம் என்று தலை ஆட்டி சிரித்தாள்.

இப்படியே நாட்கள் மாதங்களாக சுவாதியின் மகன் அபிமன்யு பிறந்தான்.அரைமயக்கத்தில் இருந்த சுவாதியிடம் வந்த நர்ஸ் குழந்தையின் தந்தை பெயரை பிறப்பு சான்றிதலுக்காக கேட்க  அர்ஜூன் என்று கூறியவள் முழு மயக்கத்திற்கு சென்றாள்.

கீதாவின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.வெளியில் வந்த டாக்டரிடம் கீதா குழந்தையை பார்க்கலாமா என்று கேட்க குளிப்பாட்டியவுடன் கொண்டு வருவார்கள் பாருங்கள்.பேசண்டையும் ரூமிற்கு மாற்றியவுடன் பார்க்கலாம் என்று கூறி சென்றார்.

ராகவ் குழந்தையின் பிறப்பு சான்றிதழுக்கு விவரங்கள் சொல்ல ரிசப்ஷனை தேடி செல்ல,அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் டிஸ்ஜார்ஜ் ஆகும் போது பீஸ் கட்டிவிட்டு வாங்கி கொள்ளுங்கள் என்றாள்.

குழந்தையின் விவரங்கள் என்று அவர் கேட்க எல்லாம் பேசண்டிடம் கேட்டு வாங்கிவிட்டோம் என்றாள் புன்னகையுடன்.சரி என்று தலை ஆட்டியவர் எப்போது வீட்டிற்கு செல்லலாம் எந்த மாதிரியான உணவுகளை கொடுப்பது போன்ற விவரங்களை கேட்டுவிட்டே சென்றார்.

சுவாதியின் அறைக்கு சென்றவர் குழந்தையை பார்க்க குழந்தையின் சாயல் தனக்கு பரிச்சயமானதை போல் இருந்தது ஆனால் சரியாக தெரியவில்லை.சுவாதியின் ஜாடை கொஞ்சம் கூட இல்லாததை உணர்ந்தவர்.பெருமூச்சுடன் அட குட்டி பையா நீங்க யார் மாறி இருக்கீங்க என்று கொஞ்ச ஆரம்பித்தார். கொஞ்சம் நன்றாக யோசித்திருந்தாள் கண்டுபிடித்திருப்பாரோ என்னவோ.

கீதாவும் இதையேதான் சொன்னால்.ஆனால் குழந்தை அப்படியே அவன் தந்தையை உரித்து வைத்து பிறந்திருக்கிறான் என்று மனதோடு சொல்லி கொண்ட சுவாதி அதை பற்றி வாய் திறக்கவில்லை.சுகபிரசவம் ஆதலால் மூன்று நாட்களில் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.குழந்தைக்குபெயர் அபிமன்யு என்று வைத்தனர் சுவாதியின் விருப்ப படி.

கீதா ஆபிஸ் சென்று வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அபியுடனே தான் இருப்பாள்.ஒரு குழந்தை வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சிக்கு குறைவேது.அந்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தினான் அபிமன்யு.

ஒவ்வொரு முறையும் கீதாவிடம் திருமண பேச்சை எடுத்தால் அவள் பதில் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்ற பதிலே இருக்க.கீதாவின் அழகை பார்த்து பெண் கேட்டு வருபவர்களை சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது பெரியவர்களுக்கு.

கீதாவோ தோழியின் வாழ்வில் மாற்றம் வந்தவுடன் தான் திருமணம் என்பதில் தெளிவாக இருந்தாள்.வருடங்கள் உருண்டோட இதோ அபியின் நான்காவது பிறந்த நாளும் வந்துவிட்டது.தோழிகள் இருவர் வாழ்விலும் எந்த மாற்றமும் இல்லாமல் போக பெரியவர்கள் தான் திண்டாடி போயினர்.

ஒரு முறை சுவாதியிடம் வள்ளி அபியின் அப்பா என்று ஆரம்பிக்க கை நீட்டி தடுத்தவள்,நான் உங்களை இழக்க விரும்பவில்லை என்றாள் புரியாமல் பார்த்த வள்ளியிடம் இனி ஒரு முறை அபியின் அப்பாவை பற்றி பேசினீர்கள் என்றாள் உங்கள் யாருக்கும் சொல்லாமல் எங்காவது சென்றுவிடுவேன் என்றாள் உறுதியான குரலில் சுவாதியின் குரலே சொன்னதை செய்துவிடுவேன் என்ற உறுதி தெரிய பெரியவர்கள் அதன் பிறகு இந்த பேச்சை எடுக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3

கீதா கம்பெனிக்கு அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு ஜாலியாக அபியுடன் விளையாண்டு பொழுதை கரைத்தாள்.வள்ளி வந்து சாப்பிட அழைத்தவுடன் தான் இருவரும் சாப்பிடவே சென்றனர். மாலை அபி வந்து அழைக்கவும் பார்க்குக்கு சென்றாள்.அபி விளையாடுவதை இவள் கவனிக்க இவளை இரு விழிகள் ஆர்வமாக

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4

“அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான்” என்று சொன்னவுடன். “வாட்”  என்று கத்திவிட்டாள் பிறகு சுற்றுபுறத்தை அறிந்து அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டி அமர்ந்தவள். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்டாள். தோழியின் குணத்தைபற்றி அறிந்ததால்.இனி சுவாதியின்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17

திருமணத்தில் நடந்ததை சொன்ன ரம்யா. “எவ்வளவு கஷ்டபட்டு அந்த போட்டோ எல்லாம் வாங்கினாள் தெரியுமா அவரோட வீட்டு அட்ரஸ் அவரோட வேலை எல்லாம் கலெக்ட் பண்ணி சேட்டிஷ்பைட் ஆனவுடன் உனக்கு சர்ப்ரைஸா,நீ டூர்ல இருந்து வந்ததும் சொல்லலாம்னு காத்திருந்தோம் ஆன அதுக்குள்ள