Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 23

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 23

23 – மனதை மாற்றிவிட்டாய்

ஆபீஸ் உள்ளே சிரித்துக்கொண்டே நுழைந்த ஆதியை பார்த்த அர்ஜுன் அவனிடம் “என்னடா ஏதோ டாலடிக்கிது…?”

“எல்லாம் உன் அடாவடி தங்கச்சியால தான்.” என நேற்று நடந்தது முதல் இப்பொழுது அவள் மிரட்டி பேச வைக்க செய்தது வரை அனைத்தையும் கூறினான்.

அதை கேட்டு சிரித்த அர்ஜுன், “எப்படியோ பிரச்னை இல்லாம இருந்தா சரி… ஆனாலும் நீ ஏன் டா அவளை சும்மா சும்மா அடிக்கற? கேக்றதுக்கு ஆள் இல்லேனு நினைச்சியா? அண்ணா நான் இருக்கேன். இனிமேல் புள்ளைய திட்டற வேலை, அடிக்கற வேலை எல்லாம் வெச்சுக்காத….பாவம்டா அவ.” என்றவனை முறைத்த ஆதி

“யாரு, அவ பாவமா? போடா நீ வேற… அவளை அடிச்சதுக்கு நான் தான் பீல் பண்ணிட்டு இருக்கேன். நீ கூட விஷயத்தை கேட்டதும் என்னை திட்டற…ஆனா அவ அத ஒரு விசயமாவே எடுத்துக்கமாட்டேங்கிறா. என்னை இரிடேட் பண்ணி டென்ஷன் பண்றத அவ ஒரு வேலையாவே பாக்றா போல. அவ பிளான் பண்ணி வம்பிழுக்க ஏதாவது பண்ணி திட்டுவாங்குனா, மூஞ்சி பாவமா வெச்சுக்கறா. தெரியாம ஏதாவது பண்ணி திட்டு அடி வாங்குனா திரு திருனு முழிக்கறா. பொதுவா பொண்ணுங்கள அடிச்சா ஒன்னு அழுவாங்க, இல்லாட்டி வீட்ல பிரண்ட்ஸ்கிட்ட கம்பளைண்ட்டா சொல்லுவாங்க, அதுவும் இல்லாட்டி அந்த பொண்ணுங்களே திட்டி என்ன அடிக்க என்ன ரைட்ஸ் இருக்கு, தைரியம் இருக்கணும்னு சண்டை போடுவாங்க.. இவ இதுல எதுமே இதுவரைக்கும் பண்ணி நான் பாக்கல. ஒரு தடவ கூட அடிச்சதும் அழுததில்ல, வேற யார்கிட்டேயும் இத பத்தி பிரச்சனையா சொல்லல. முக்கியமா இப்போவாரைக்கும் ஏன் என்னை அடிச்சீங்கனு கூட கேக்கல. ஆனா தப்புன்னு புரிஞ்சுக்கிட்டா உடனே எதைப்பதியும் யோசிக்காம சாரி சொல்லிட்றா, அப்புறம் எப்பிடியும் மிரட்டி உருட்டி கெஞ்சி கொஞ்சி பேச வெச்சிடறா. அவளை அடிச்சபோது எல்லாம் நான் தான்டா விடிய விடிய புலம்பிட்டே இருக்கேன். அவ நிம்மதியா தான் தூங்கறா. இதுல இவளுக்கு இவன் வேற சப்போர்ட்…” அர்ஜுன் அதை கேட்டு சிரிக்க

ஆதி “ஆனாலும் மச்சான், அவளோட இந்த குணம் எல்லாம் தான் என்ன ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுது போல. அழுது அடம்பிடிச்சு எமோஷனலா எதையும் சாதிக்காம, தப்புன்னா ஈகோ பாக்காம மன்னிப்பு கேக்கறது, அதே நேரம் தப்புனு பட்டா யாருக்காகவும் பாக்காம அவ உடனே குடுக்கிற பதிலடியெல்லாமே அழகு தான். இப்படிதான்னு இல்லாம பொய் சொல்லியோ நடிச்சோ அவ நினைக்கிறது எப்படியாவது சாதிக்கிறா யாரையும் கஷ்டப்படுத்தாம… நல்லதுதான் நடந்திருக்குனு அவளை யாரும் ஏதும் சொல்றதில்ல. அவ சொல்ற பொய், துறுதுறு ன்னு ஏதாவது பண்றது, பிரச்சனைனா உடனே யோசிக்காம ஏதாவது பண்ணனும்னு அவ இன்வோல்வ் ஆகுறது, இதுல இருந்து எதுவும் அவளுக்கு ப்ரோப்லேம் வந்திடக்கூடாது. யாரும் அவளை தப்பா சொல்லிடக்கூடாதுனு எனக்கு தான் யோசனையா இருக்கு. ஒரு சில விஷயம் ரொம்ப மெச்சூர்ட்டா இருக்கா, ஒரு சில விஷயம் ரொம்ப குழந்தையா இருக்கா. அதனாலேயே அவளை என்ன பண்றதுனே தெரில. ” என்றான்.

நண்பனின் தோளில் கை போட்டவன் “கரெக்ட் தான் டா… எனக்கென்னமோ அவ உன்கிட்ட மட்டும் தான் அடங்குவான்னு தோணுது. அவளை பத்தி இவ்வளோ புரிஞ்சுகிட்டு, அவளுக்காக யோசிக்கற பாரேன். ரியலி கிரேட். திவி ரொம்ப லக்கி தான்…”

ஆதி சிரித்து விட்டு “சரி, ஈவினிங் அம்மா, அப்பாவை கூப்பிட்டு எப்போ வீட்டுக்கு வர? அதுக்கு 1 ஹௌர் முன்னாடி நான் கிளம்பணும்.”

“டேய், நீயும் எங்க கூடவே வா. நீ ஏன் முன்னாடி போற? ”

“ஹலோ சார், நான் இப்போ பொண்ணு வீட்டுக்காரன். உன் பிரண்ட்ஷிப் எல்லாம் இப்போ செகண்ட் பிளேஸ் தான்..என்கிட்ட உன் லவ்வ மறைச்சதுக்கு இன்னைக்கு வீட்டுக்கு வா, உனக்கு ஏகப்பட்ட கவனிப்பு இருக்கு…”

அவனை முறைத்த அர்ஜுன் “பாத்துக்கறேன் டா…. எனக்கு சப்போர்ட் பண்ணா ஆண்டவன் யாரையாவது அனுப்புவான்.” என்றான் மேலே பார்த்து.

பிறகு நண்பர்கள் இருவரும் வேலையில் மூழ்கிவிட்டனர். மாலை 4 மணி போல ஆதி, செல்ல அர்ஜுன் அவனது வீட்டிற்கு சென்று (மல்லிகா – கணேஷ்) அம்மா அப்பாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

ஆதியின் வீட்டிலோ திவி, அனு, அபி, சுபி அனைவரும் சூழ அம்முவை அழகு ஓவியமாக செதுக்கினர். ஈஸ்வரியும், சோபனாவும் முழுதாக கலந்துகொள்ளவும் இல்லை, விலகி செல்லவும் இல்லை, ஹாலில் அமர்ந்து புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தனர்.

மதி “ஏங்க, திவி, எங்க அண்ணா, அண்ணி யாரையும் காணோம்? நான் ஒருத்தியே எத்தனை வேலை பாக்கிறது? கூட துணைக்கு கூட ஆள் இல்ல ” என பதற

“மதி, ஏன் பதட்டமா இருக்க? ரிலாக்ஸ்..” என்ற கணவனை முறைக்க

திவி “அத்தை, அப்பாவும், ராஜா அப்பாவும் லோடு எடுக்கற விஷயமா போன வேலை முடியல, சோ வரதுக்கு நைட் ஆகும், மகா அம்மாவும், ராஜீம்மாவும் அம்மு மேரேஜ் நல்லபடியா நடக்கணும்னு பூஜைக்கு குடுத்துஇருக்காங்க. சோ கோவிலுக்கு போயிருக்காங்க. வந்துடுவாங்க.”

ஈஸ்வரி “எதுக்கு தேவையில்லாம கோவிலுக்கு? …மேரேஜ் நல்லபடியா நடக்கணும்னா இங்க இருக்கற வேலைய செய்யணும், இப்படி வேலைல இருந்து கழண்டுக்க பொய்யா சாமிய இழுக்கவேண்டியது…” என்றாள்.

அனைவரும் எரிச்சலாக திவி “ஆமா ஆண்ட்டி, அவங்க தான் ஊர சுத்தறாங்க. பாவம் நீங்கதான் வீட்ல இருக்கற வேலை எல்லாம் செஞ்சு கலச்சு போயிட்டீங்க இல்ல ஆண்ட்டி..அதுனால தான் பாவம் ஒரு 2 மணி நேரமா உக்காந்த இடத்தை விட்டு எந்திருக்கவேமுடில..அவ்வளோ வேலை செஞ்சீங்கள்ல?” என்ற அவள் கேள்வியில் உள்ள கிண்டலை உணர்ந்தவள் அவளை முறைக்க அரவிந்த், சுந்தர், சேகர், ஆதி இதை எப்போதும் போல கண்டு சிரிக்க, மதி “திவி, வா நீ என்கூட” என இழுத்து கொண்டு சமையல் அறைக்கு சென்றாள்.

சிறிது நேரத்தில் வண்டி சத்தம் கேட்க அனைவரும் வாசல் வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். பரஸ்பர நலவிசாரிப்புகள் முடிய மதி,சேகர் “எடுத்துக்கோங்க ”

என பலவகை பலகாரங்கள் வைக்க கணேஷ்” என்ன சந்திரசேகர் நீங்க, எதுக்கு இப்படி வரவேற்பு, மரியாதை எல்லாம். நமக்குள்ள எதுக்கு இந்த போர்மாலிட்டீஸ் எல்லாம்? ”

மதி “அப்படி இல்லேங்க அண்ணா, முறைன்னு ஒன்னு இருக்கில்ல? அத நாமளும் குறையில்லாம செய்யணும்ல?” மல்லிகாவின் முகத்தில் ஒரு திருப்தி வர அவரே “இருக்கட்டும்ங்க, நமக்குள்ள எதுக்கு? நாம சொந்த ஊர்க்காரங்க. ஆதியை தான் பாக்கணும்னு நினச்சேன். இப்போ மொத்த குடும்பத்தையும் பாத்ததுல ரொம்ப சந்தோசம், நீங்க ஏன் நிக்கிறிங்க உக்காருங்க” என மதியை பார்த்து சொல்ல அவரும் “என்ன, நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்க அண்ணி..” என்று கூற மல்லிகா அதை ஆமோதித்து சரி என்றார். கணேஷ், மல்லிகா அனைவரையும் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் அவர்களுக்கு குடும்பத்தில் அனைவரையும் சேகர் அறிமுகப்படுத்தினார்.

மல்லிகா அபியிடம் “எத்தனை மாதம், செக்க்கப்” பற்றியும் அனு, சுபியிடம் படிப்பை பற்றியும் விசாரித்தார். கணேஷ் சுந்தர், அரவிந்திடம் தொழில் பற்றி விசாரித்தார்.

மதி இறுதியாக “இவங்க என் அண்ணி ஈஸ்வரி, அவ சோபனா அவங்களோட மூத்த பொண்ணு” என அறிமுகப்படுத்த அவர்கள் வணக்கம் சொல்ல ஈஸ்வரியாவது கடமைக்கே என சிரித்துக்கொண்டு திரும்ப, சோபனா இது எதுலையயும் கலந்துகொள்ளாமல் அவர்களை பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்தில் தலையை வைத்துக்கொண்டாள். மல்லிகா முகம் ஒருமாதிரி போக அதைவிடுத்து மீண்டும் திரும்பி “அமுதா, வா மா, இங்க வந்து உக்காரு… நீ எனக்கு பொண்ணு தான். மருமக எல்லாம் இல்ல. பதட்டப்படாம இரு.” என்று சொல்லி அழைக்க அமுதா “இருக்கட்டும் அத்தை..” என அவள் கூற

ஈஸ்வரியோ “ஏன் அம்மு, இது என்ன இந்த காலத்துல போயி இப்படி இருக்க…. நம்ம அந்தஸ்துக்கு தைரியமா கால் மேல கால் போட்டே உக்காரலாம்.. நீ என்ன இவங்க முன்னாடி உக்காரவே பயப்படற…?” என இவர்களை விட அந்தஸ்து குறைவு என மட்டம் தட்ட

மீண்டும் ஈஸ்வரி தொடர்ந்து “அர்ஜுன் தம்பி எங்க ஆதி மாதிரி ஒரு பிரண்ட் கிடைக்க குடுத்துவெக்கணும்ல. கம்பெனில பார்ட்னர், இப்போ இவ்வளோ வசதியோட அவங்க வீட்டு பொண்ணும்..உங்களுக்கு அதிஷ்டம் ரொம்ப இருக்கும் போல… “என சிரிக்க சோபனா மெலிதாக ஏளனமாக சிரிக்க அனைவரும் முகம் சுளிக்க

ஆனால் இதை சட்டை செய்யாமல் ஈஸ்வரி “அப்புறம் உங்களுக்கு ஊர்ல இன்னும் விவசாயம் தான்ல வெறும் 20 ஏக்கர் தானே இருக்கு. இனிமேல் எதுக்கும் கவலைப்படவேண்டாம். சந்திரசேகர் குடும்பத்தோட சம்பந்தம் வெச்சுக்க போறீங்க. அவங்க சொத்தே போதுமே. ” என ஈஸ்வரி நேரடியாக கூறாவிடினும் அவர்கள் வசதிக்குறைவு, திட்டம் போட்ட மாதிரி வளைத்துப்பிடித்துவிட்டனர் என்ற ரீதியில் பேசி அவர்கள் தன்மானத்தை சீண்ட மல்லிகாவிற்கு கோபம் மெலிதாக தலை தூக்க அவர் கணேஷனையும், அர்ஜுனையும் முறைக்க

சேகர் இது தன் மகளின் வாழ்வு என்பதால் “ஈஸ்வரி, சொத்து பணம் எல்லாம் எதுக்கு மா இப்போ பேசிகிட்டு. குணம் தான் ரொம்ப முக்கியம்.” என விட்டுக்கொடுக்காமல் பேச அனவைரும் லேசாக ஈஸ்வரி விடுவேனா என்று “பாருங்க, இதுதான் சேகர் அண்ணா. பணம் காசு பெருசா இல்லாட்டியும் போகுதுனு சம்பந்தம் வெச்சுக்கிட்டாலும் எப்போவும் அந்த நன்றியை மறக்காம இருக்கனும்தானே. நான் சொல்றது சரிதானே ” என கேட்க அனைவருக்கும் ஐயோ என்றிருந்தது.

அமுதாவிற்கு கைகள் நடுங்கியே விட்டன. அதை கண்ட திவி “ஆண்ட்டி, நீங்க எப்போ தப்பா சொல்லிருக்கீங்க? ” என்றாள்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 8நிலவு ஒரு பெண்ணாகி – 8

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. நான் முயலும் இந்தப் புது ஜானருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு என் பொறுப்பை மேலும் அதிகமாக்குகிறது. இன்றைய பதிவில் சந்த்ரிமா- ஆத்ரேயன் சந்திப்பு

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’

அந்தேரி பகுதியில் இருந்த பணக்கார அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ். வீடுகளின் விலையே அங்கு சில கோடிகளில்தான் ஆரம்பிக்கும். அதைத்தவிர மெயின்டனன்ஸ், இருவத்திநான்கு மணி நேரமும் திறந்திருக்கும் பிரத்யோக ஜிம்மிற்கு என்று வருடத்துக்கு சில லட்சங்கள் செலவாகும். விடியற்காலை ஐந்து மணி, அதிகாலை வேளையில்

ஒகே என் கள்வனின் மடியில் – 13,14ஒகே என் கள்வனின் மடியில் – 13,14

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. தவிர்க்க முடியாத சில காரணங்களால் பதிவு தாமதமாகிவிட்டது. அதற்கு ஈடு செய்ய இரண்டு பதிவுகளை சேர்த்து போட்டிருக்கிறேன். போன பதிவுக்கு நீங்கள் அளித்த கமெண்ட்ஸ்க்கும், லைக்ஸ்க்கும் நன்றி. உங்கள் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன என்பதை