Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21

21 – மனதை மாற்றிவிட்டாய்

திவியோ “என்னதான் இருந்தாலும் நான் அவர்கிட்ட அப்படி பேசிருக்கக்கூடாது. ச்ச… சரியான லூசு திவி நீ…. உண்மையாவே அவரு பாவம் தான்… அத்தை சொல்லி வந்தாரோ இல்ல இவரா வந்தாரோ எனக்காக தானே வந்தாரு. அப்போகூட என்ன ஏன் சுந்தர்கிட்ட ஹெல்ப் கேட்ட? அவங்க அம்மா ஏதாவது சொல்லுவாங்கனு தான் சொன்னாரே தவிர என்ன பத்தி எதுவும் தப்பா சொல்லல. ..”

அந்த பொறுக்கி மேல இருந்த கடுப்புல இவரு கத்திட்டே வரவும் கொஞ்சம் எமோஷன் ஆயிட்டேன்…

அதுக்காக நீ அந்த மாதிரி பேசுவியா? ஆதி செம காண்டுல இருக்காரு…. “

ஏய் அதான் ஏதோ தெரியாம பேசிட்டேனு சொல்றேன்ல அப்புறம் என்ன சும்மா குறை சொல்லிட்டே…. நான் ஒன்னும் உன்ன குறை சொல்லல…. நீ பதட்டத்துல அப்டி பேசினியோ, டென்ஷன்ல அப்படி பேசுனியோ, இல்லை ஆதி உன்ன தப்பா நினச்சுடுவாரோன்னு பயந்து அப்டி கத்துணியோ என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்பு தான். ஆதி இனிமேல் உன்கிட்ட பேசவே மாட்டாரு. ஏற்கனவே எப்போவும் சண்டை தான்.. இதுல இது வேறன்னா சொல்லவா வேணும். ”

நீ ஒன்னும் சொல்லாத. ..நானே பாத்துக்கறேன். நான் பேசுனது தப்பு, சோ நானே மன்னிப்பு கேட்டு எப்படியாவது ஆதியை பழையமாதிரி என்கிட்ட பேசவெப்பேன் பாரு. நீ என்ன திட்டி குறை சொல்லாம இப்போ போ… எனக்கு தூக்கம் வருது.” என மனதுக்குள் ஒரு போரை முடித்துவிட்டு தெளிவான முடிவுடன் உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் விடிந்ததும் அவன் ஜாக்கிங் செய்யும் வேளையில் சென்றாள் திவி.

“குட் மார்னிங் ராஜா”

முதலில் இவளை கண்டு ஆவலுடன் பேசவந்தவன் ‘வேண்டாம், அவகிட்ட உடனே பேசிட்டா அவ பண்ற தப்போட சீரியஸ்னெஸ் புரியாம திரும்ப அப்படியே பேசுவா, திரும்ப அதே தப்ப பண்ணுவா… கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்…ஒரு 2 3 நாள் பேசாம இருப்போம். அப்போதான் இனிமேல் ஏதாவது அந்தமாதிரி ஒளரமாட்டா. யோசிச்சு பேசுவா. என முடிவெடுத்தவன் எதுவும் கூறாமல் அவளை பார்த்துவிட்டு கண்டுக்காமல் ஜாக்கிங்கை தொடர்ந்தான்.

திவி அதை சட்டை செய்யாமல் “ஆதி, இன்னைக்கு அம்முவ பாக்க அர்ஜுன் அண்ணா வீட்டுல இருந்து வராங்கள்ல? எப்போ சொல்லிருக்காங்க? நீங்க எப்போ வருவீங்க? உங்ககூட அர்ஜுன் அண்ணா வருவாங்களா? இல்லை வீட்டுக்கு போயிட்டு அம்மா அப்பகூட வருவாங்களா? நான் 5 குள்ள வந்துடுவேன். அத்தை என்ன பன்றாங்க.. ரொம்ப வேலை செய்யவேண்டாம்னு சொல்லுங்க. இந்த வீகெண்ட் நீங்க பிரீயா? இல்லை பிஸியா?” என கூடவே வந்து கேள்வியா கேட்டு குடைந்துகொண்டிருந்தாள்.

அவன் பதில் கூறாமல் நின்று அவளை முறைக்க அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “என்னாச்சு ஆதி, நான் சொன்னது கவனிக்கலையா? வேணும்னா திரும்ப கேட்கவா ? என கூறி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க இவன் முழிக்க அவனது அம்மா அங்கே திவியை கண்டு அழைத்தாள்.

திவி “இருங்க வந்துடறேன்..”

அவன் “ஸ்ஸ்ஸாப்ப்பாஆ…எவ்வளோ கேள்வி கேக்குறா? நம்ம கோவத்தை கொஞ்சம்கூட சட்டையே செய்யமாட்டேன்கிறாளே? இருக்கட்டும் எப்படி பேசவெக்கிறான்னு நானும் பாக்கறேன். ” என சிரித்துக்கொண்டே நகர்ந்தான். வீட்டினுள் நுழைந்தவனை “ஆதி, காபி..” என அவள் முன் நீட்ட அதை வாங்காமல் இவனே ஊற்றிக்கொண்டு சென்று சோபாவில் அமர்ந்து நாளிதழில் தலையை கொடுத்தான். ஆனால் அவன் காதும், மனமும் அவளிடத்திலே கழட்டி வைத்துவிட்டு வந்தான்.

திவி “ச்ச. …என்ன அடலீஸ்ட் சண்டைபோட்டோ, சாதாரணமாவோ, வம்பிழுத்தோ எப்படியாவது வாயத்தொறப்பானான்னு பாத்தா நடக்கமாட்டேங்கிதே. ஒருவேளை செலெக்ட்டிவ் அம்னீஷியா மாதிரி செலெக்ட்டிவ் speak னு ஏதாவது வியாதி இருக்கோ? என்ன திட்டும்போது மட்டும் நல்லாத்தானே பேசுறான். எதுக்கும் அப்புறமா அத்தைகிட்ட சொல்லி டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும். அத்தை. …” என அவள் சீரியஸ்ஸா’க கூறிவிட்டு நகர இதை கேட்டவன் ‘அடிப்பாவி உன்கிட்ட பேசலேனா வியாதி வந்திடுமா? ராட்சசி… என்ன சொல்லப்போறாளோ?’ என நினைத்தவன் வேகமாக தன் அறைக்குள் சென்று அடைந்தான்.

அவளும் வெளியில் வந்து பார்த்து அவன் காணவில்லை எனவும் “அத்தை நானும் போய் ஆபீஸ் கிளம்புறேன். ” என ஓடிவிட்டாள். சன்னல் வழியே பார்த்தவன் சிரித்துக்கொண்டே தயாராக சென்றான்.

ஒரு மணி நேரத்தில் தயாராகி அவன் கீழே வர அம்மா அப்பா, அனு அம்மு, சுபா என அனைவரும் டைன்னிங்ல் இருக்க திவியும் உடன் நிற்க ‘இவள் எப்போ வந்தா?’ என நினைக்க இவனை கண்ட திவி “ஆதி, வாங்க சாப்பிடலாம் எல்லாரும் உங்களுக்காக தான் வைய்ட்டிங்” என அழைக்க அனைவரின் முன்பும் வேறு வழியின்றி அவனும் அமைதியாக சென்று அமர்ந்தான். அவள் தான் பரிமாறுகிறேன் என்று சொல்லி அவனுக்கு பிடிக்காததை தேடி தேடி வைத்தாள். அவனை கோபப்படுத்தியாவது பேசவைக்க.. ஆனால் அவன் அசரவில்லை.

அவளோ சுவீட்டை எடுத்தவள் உங்களுக்கு பிடிக்காதில்லை ஆதி, சோ இது வேணாம் என அவளே ஒதுக்க இவன் வேண்டுமென்றே அதை எடுத்து ஒரு உருண்டையை சாப்பிட்டான். இதை கண்ட மதி “எல்லாம் நம்ம திவி செஞ்சதுதான்… ரொம்ப நல்ல இருக்கில்ல?” என கேட்க பாதி மட்டுமே உண்டவன் அப்டியே அதை ஒதுக்கி வைத்துவிட்டு “எனக்கு பிடிக்கல மா..”என கூறிவிட்டு எழுந்துவிட்டான். திவிக்கு மூஞ்சி கூம்பிவிட்டது. இதை பார்த்த ஈஸ்வரி, சோபனா இருவரும் சிரித்துக்கொள்ள இதுதான் சாக்கு என்று ஈஸ்வரி “ஆதி, சோபிக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணணுமாம்… நீ போற வழில அவளை விட்டரியா?”

ஆதி “இல்ல அத்தை, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…. வேணும்னா சுந்தர்கிட்ட என் பைக் கி தர சொல்லி அம்மாகிட்ட சொல்லிடறேன். அவன் கூட்டிட்டு போகட்டும்… இல்லை எல்லாரும் போறிங்கன்னாலும் இன்னொரு கார் இருக்கு. போயிட்டு ரிலாக்ஸ்ஸ என்ஜோய் பன்னிட்டு வாங்க” என நாசூக்காக மறுத்துவிட்டான்.

திவியை பார்த்தவன் ரொம்ப படுத்திட்டோமோ? இருக்கட்டும் யார் யாரோ எல்லாம் இவளை பத்தி பேசுற அளவுக்கு நடந்துக்கிட்டால்ல… என ஆதங்கமும் தவிப்புமாக நினைக்க

திவி நேராக சுந்தர், ஈஸ்வரியிடம் வந்தவள் “சாரி, நேத்து நைட் உங்கள கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ஆக்ச்சுவலி, நேத்து என் வண்டி பஞ்சர், அதனால ப்ரண்ட் தான் மேரேஜ்க்கு கூட்டிட்டு போனா. திடிர்னு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இலேன்னு கால் வந்தது. அதனால அவ உடனே கிளம்பிட்டா… வந்திட்டு உடனே கிப்ட் கூட தராம 2 பேறும் கிளம்பினா நல்லாஇருக்காதுன்னு தான் நான் இருந்தேன். பஸ் ரூட் கேட்டுவெச்சுஇருந்தேன். ஆனா பஸ் பிரேக்டௌன் அதனால அதுவும் வரல. நான் வண்டில போயிருந்தாகூட எப்படியாவது வந்திருப்பேன். இடமும் புதுசு. ரொம்ப லேட்டாயிடிச்சு..பஸ்ட் தர்ஷினிக்கு தான் கூப்பிட்டேன் அவளுக்கு நேத்து கொஞ்சம் உடம்பு சரிலேன்னு படுத்துட்டாளாம். அப்பாவும், ராஜாப்பாவும் வேலை லோடு விஷயமா ஊருக்கு போயிருக்காங்க. இன்னைக்கு தான் வருவாங்க. அர்ஜுன் அண்ணாக்கு என் பிரண்ட் கிளம்பினதும் கூப்பிட்டேன் அவங்களுக்கு ஆபீஸ்ல ஹெவி ஒர்க் னு சொன்னாங்க. மதி அத்தைக்கு லைன் போகல. அதனால தான் வேற வழியில்லாம உங்ககிட்ட ஹெல்ப் கேட்டேன். சாரி ஆண்ட்டி, சாரி சுந்தர்.” என அவள் முழு விளக்கம் தர

சுந்தர் “என்ன திவி நீ, இதுக்கெல்லாம் சாரி சொல்லிட்டு… இவ்ளோ விளக்கம் தரணும்னு என்ன அவசியம் விடு” என்க

“இல்ல சுந்தர், எப்போவும் இந்த அளவுக்கு டிலே ஆகாது. சும்மா ஊர சுத்திட்டு ஹெல்ப் கேக்கறமாதிரி நினைக்ககூடாதில்ல. நீங்க வந்தாலும் வராட்டியும் உங்ககிட்ட ஹெல்ப் னு ஒன்னு கேக்கும்போது என்ன சூழ்நிலைன்னு உங்ககிட்ட சொல்றதுல என்ன இருக்கு. அதுவுமில்லாம என்ன இருந்தாலும் மத்தவங்கள டிஸ்டர்ப் பண்றது தப்புதானே… அதனாலதான் அப்போவே வாங்கனு சொல்லாம வரமுடியுமா?னு கேட்டேன்… எனிஹௌ தேங்க்ஸ்..” என்று அவள் மதியிடம் திரும்ப மதியோ ஈஸ்வரியை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் பார்வையில் “எப்படி, என் திவி யோசிக்காம எதுவும் பண்ணமாட்டா, வேற வழியில்லாம தான் கூப்பிட்ருப்பானு தெரிஞ்சிடுச்சா…” என கேள்வி இருந்தது.

ஆதியே ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை…”கேள்விக்கே இடம் குடுக்காம ஆனா எல்லா பதிலும் குடுத்திட்டாளே..சுந்தர் அம்மா தப்பா பேசுவாங்கனு மட்டும் தான் சொன்னேன். என்ன கேட்டாங்கன்னு கூட சொல்லல. அவ காலைல வந்ததுல இருந்து இத பத்தி யாருகிட்டேயும் பேசவும் இல்ல. இருந்தும் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டாளே.. மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணகூடாதுனு சொல்லி சுந்தரையும் அவள் தள்ளி நிறுத்திவிட்டாள்..” அவளை நினைத்து மனம் லேசானது.

ஆனால் அதே வரி சுந்தரை கொஞ்சம் அசைத்துதான் விட்டது. அவன் மனதுக்குள் குமுறிக்கொண்டான். “நான் உனக்கு மத்தவங்களா போய்ட்டேனா? மூணாவது மனுஷன்கிட்ட சொல்ற மாதிரி பேசுறாளே. எல்லாம் இந்த அம்மாவால் வந்தது..” என புலம்பிக்கொண்டான்.

மதி, சேகர் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு திவி கிளம்ப அவளை தடுத்த ஆதி “வண்டி பஞ்சர்னு சொன்ன. வந்திடிச்சா? ”

“இல்லை இன்னைக்கு ஈவினிங் தான் ரெடியாகும்…”

“அப்புறம் இப்போ எப்படி போவ? ”

“பஸ்ல”

“இப்போவே டைம் ஆயிடிச்சு. நானே உன்ன கூட்டிட்டு போறேன் வா. ”

“இல்ல வேண்டாம். உங்களுக்கு வேற ரூட்ல. சுத்தி போனா உங்களுக்கு லேட்டாகும்.”

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். ஈவினிங் பங்க்சன்ல நீ சீக்கிரம் வரணும். லேட்டா போயிட்டு தென் ஈவினிங் லேட் பண்ணாத. சீக்கிரம் எல்லா ஒர்க்கும் முடிச்சிட்டு வந்திடு. இப்போ போயி பேக் எடுத்திட்டு வா. ” என்று விட்டு அவனும் அனைவரிடமும் கூறிக்கொண்டு சென்றான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் மகிழ சுந்தர் கவலையுடன் உள்ளே சென்றான். சோபனாவும் ஈஸ்வரியும் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தனர்.

“என்ன போற வழில இறக்கிவிடமாட்டானாம், அவளை ஆபீஸ் கொண்டு போயி விட்டுட்டு அப்புறம் இவன் வேலைய பாப்பானாம்.”

“எல்லாம் அந்த சனியன் திவியால வந்தது. ஆதிக்கு அவன் அம்மாவை புடிக்கும்டி.. மதிக்கு இந்த திவிய பிடிக்கும். அதனால தான் அவனும் கொஞ்சம் கரிசனமா இருக்கான். நீ எதுவும் போட்டு மனச கொழப்பிக்காத.”

“ஆனாலும் அம்மா. ..”

“விடு சோபி மா. .. நீதானே சொன்ன… அவன் குணத்துக்கு தாக்குப்புடிக்க முடியாதுன்னு. அதுதான் நிஜம்.. காலையிலேயே அவ செஞ்ச ஸ்வீட்ன்னு குடுத்ததுக்கு எவ்வளோ கோபமா பேசுனான்? ”

அவளும் கொஞ்சம் ஏனோ அமைதியாகினாள்.

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53

53 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபியை கண்ட ருத்திரா “நீ இங்க…?” அபி “நான் தான்… உங்களை தான்  பாக்க வந்தேன்.” “நீ …..நீ இன்னும்?” என அவன் முடிக்காமல் திணற அவளே “நான் இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல…

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 26ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 26

உனக்கென நான் 26 கைபேசியை குழப்பத்துடன் பார்த்துகொண்டிருந்தாள் அன்பரசி. அவளது கையில் இருந்த பிரியோவோ இவளையே பார்க்க மனது அமைதியானது. யாரோ விளையாடுறாங்க என நினைத்துகொண்டு பிரியாவை கொஞ்சியபடி உள்ளே சென்றாள். அப்போது மலர் அங்கு வரவே அன்பரசியின் முகத்தில் முன்னால்