Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 18

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 18

18 – மனதை மாற்றிவிட்டாய்

ஆதியும், அர்ஜுனும் அவனது அறையில் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். கீழே இரவு உணவு தயாராக ஈஸ்வரியும், சோபனாவையும் கூப்பிடனும் என்றவுடன் திவி முதல் ஆளாக நான் போறேன் அத்தை என்று கத்த ஒன்னும் வேணாம். போயி நீ வம்பிழுப்ப….அம்மு நீ போயி கூப்பிடு. என்றார் மதி. திவியை பார்த்து சிரித்துவிட்டு அவள் செல்ல திரும்பி வரும்போதும் அவள் மட்டுமே வந்தாள். மதியிடம் “அவங்களுக்கு இப்போ பசிக்கில்லையாம். அப்புறம் சாப்டுக்கறாங்களாம்.” என திவியை பார்த்துக்கொண்டே சொன்னாள். அனைவரும் சிரிக்க மதி திவியை முறைத்தாள்.

திவி அப்பாவியாக “நான் என்ன அத்தை பண்ணுவேன். வேணும்னா நான் போயி கூப்பிடவா, இல்ல சாப்பாடு குடுத்திட்டு வரவா? “என கேட்க அனைவரும் அவளை பார்த்து சிரிக்க சுந்தர் “விடுங்க அத்தை… அவளை ஏன் முறைக்கிறீங்க. ..அவங்களுக்கு பசிச்சா வந்து சாப்பிடட்டும்….ஊர்ல இருந்து நாங்களும் தான் வந்திருக்கோம். எங்களை கொஞ்சம் கவனீங்க…” என

“என்னதான் நம்ம பேச்ச கேக்காட்டியும் நமக்கு பிடிச்சவங்களுக்கு தேவையானதை பாத்து பாத்து செய்வாங்க. அதுதான் நேச்சர். ..எப்போவுமே கண்டுக்காதவங்க மேல தான் கரிசனம் ஜாஸ்தி இருக்குமாம். இல்லையா மாமா ??” என சந்திரசேகரிடம் கேட்டாள் திவி.

அவளது கேள்வி தன்னிடம் வரவும், மனைவி முறைக்கவும் “ஐயோ, அத்தை நீங்க உங்க அண்ணிக்கு செய்றத பத்தி சொல்லல…. சில விஷயம் மாமா உங்க இஷ்டப்படி விட்டாலும், தனியா விட மனசில்லாம உங்களுக்காக பாத்து பாத்து செய்வாரே அத சொன்னேன்…. கரெக்ட் தானே மாமா? ” என்றவளிடம் “மதி, திவிக்கு அந்த பூரி வை… இந்த சுவீட்டையும் சாப்பிடு டா.” என அவர் திசை திருப்ப மதிக்கு புரிந்துவிட்டது “தன் அண்ணி தன்னை அதிகாரம் செய்வது பிடிக்காவிட்டாலும், தனக்காக எதுவும் சொல்லி சண்டை போடாமல் இருந்தாலும், மற்றவர்களை வைத்து அவர்களை அடக்குகிறார். அதனால் தான் ஆதி, திவி எது சொன்னாலும் அவர் கண்டிக்காமல் அமைதியாக இருக்கிறார். எல்லாம் தனக்காக தானே எண்ணியவள் என்ன செய்வது, ஏதாவது சண்டை வந்து குடும்பம் உடைந்துவிட்டால் என்ன செய்வது… பொறுத்து போவோம். .வேறு வழியில்லை. என்று பெருமூச்சுடன் நகர்ந்தார்.

சேகர் “ஏய், வாலு என் பொண்டாட்டிகிட்ட போட்டுகுடுக்கிறியா?” என கேட்க அவள் கண்ணடித்தாள். பின்பு அர்ஜுன் தயங்கியபடியே “மாமா வர வெள்ளிக்கிழமை அம்மா அப்பா வரேன்னாங்க உங்களுக்கு ஓகேவா” என கேட்க மதியை பார்த்த சேகர் சிரித்துக்கொண்டே “அப்பாடி இப்போவாது சொன்னியே….. நீயா சொல்லுவன்னு தான் நாங்களும் வெயிட் பண்றோம்…. கண்டிப்பா. .. ஆனா உனக்கொரு விஷயம் தெரியுமா உங்க அம்மா அப்பாகிட்ட ஆல்ரெடி பேசியாச்சு…. வெள்ளி சாயந்தரம் வந்து முறைக்காக பாத்திட்டு நிச்சயத்துக்கு நாள் குறிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்..” என கூற அவனும் சிரித்துவிட்டு அம்முவை பார்த்தான். அவள் வெட்கப்பட அதை ரசித்தவன் “அண்ணா நாங்களும் இருக்கோம்…. அம்மு ப்ளீஸ் இன்னொரு தடவ அதே மாதிரி வெட்கப்படு பாக்கலாம்.” என திவி, அனு, சுபி வம்பிழுக்க அவளும் “போங்கடீ….” என்று உள்ளே ஓடிவிட்டாள்…

சிரித்துக்கொண்டே அர்ஜுனும் “சரி அப்போ நான் கிளம்புகிறேன்” என கூற “சரிப்பா, பாத்து போய்ட்டு வா.” அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பு திவி “ஐயோ அண்ணா, அம்முகிட்ட குட் நைட் சொல்ல மறந்துட்டீங்க. ….” என அனைவரும் சிரிக்க உள்ளே எட்டி பார்த்த அர்ஜுன் “நான் போன்ல சொல்லிப்பேன். …”என கூற சிறியவர்கள் அனைவரும் “ஓ. …” என்று கத்தினர். ஆதியும் “மச்சான்,தேறிட்டடா..” என்றான்.

பின்பு திவி, அனு, அமுதா, சுந்தர், சுபி அனைவரும் இரவு 9 மணியாகியும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். சோபனாவும், ஈஸ்வரியும் சாப்பிட வந்தார்கள். ஆனால் அவர்களை யாரும் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருந்தனர். மதிதான் “வாங்க அண்ணி, நான் சாப்பிட எடுத்து வெக்கிறேன்… வாம்மா சோபி” என்றார். உண்ண உட்கார்ந்தவள் திவியை பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளை சுந்தர் விரும்புகிறான் என்பது அவள் அறிந்ததே…அவள் “என் வீட்டில் நடக்கவே நடக்காது. நல்லா சிரி திவி … உன்ன அப்புறம் கவனிச்சுக்கறேன். சுந்தர் உன்கிட்ட லவ் சொல்லி நீயும் அவனும் லவ் பண்ணத்துக்கப்புறம் உன்ன கல்யாணம் மட்டும் பண்ணவிடாம தடுக்கறேன். அவனை நினைச்சிட்டு அவன்கூட வாழவும் முடியாம நீ அழுகறத நான் பாப்பேன்டி…” என தனக்குள் கூறிக்கொண்டாள்.

இங்கே இன்னொரு ஜீவனும் கொந்தளித்து கொண்டு இருந்தது. சாட்சாத் ஆதியே தான். காப்பாத்தி வைத்த பொறுமையை போ என விரட்டி விட்டு “ஏய், கிளம்பாம இன்னும் என்ன பன்னிட்டு இருக்க?” என திவியை பார்த்து கேட்க

திவி “பாத்தா தெரில… பேசிட்டிருக்கோம்… ஆமா நீங்க தூங்காம என்ன பண்றீங்க mr.பங்குச்சுவல் பாய்?” என

“ஓய்…. என்னடி கொழுப்பா?”

“எஸ் ஆதி, லைட்டா தான். … நானும் உடம்பு குறைக்க பாத்தா ஒன்னும் முடியல….. எனி ஐடியா?”

“நாளைக்கு ஆபீஸ் இல்லையா? ”

“இருக்கே”

“அப்புறம் என்ன இங்க வெட்டியா? ஒழுங்கா வீட்டுக்கு போ ”

“என்ன ஏன் தொரத்திட்டே இருக்கீங்க….. நான் கொஞ்ச நேரம் கழிச்சு போறேன். ….உங்கள நான் டிஸ்டர்ப் பண்ணலேல்ல. …அப்புறம் என்ன ?” என்றவள் திரும்பி மீண்டும் பேச

ஆதி “அதுதான்டி என் பிரச்சனையே. ….என்ன தவிர நீ எல்லார்கிட்டயும் பேசுற…. உன்ன சும்மா இப்படி பாத்திட்டு இருக்கமுடியலை….” என நினைத்தவன் அதை சொல்லாமல் இது சரிவராது….இவ சொன்னா கேக்கமாட்டா என்றவன்

“பிரச்சனை தான். நீ இப்படி கத்திட்டே இருந்தா எனக்கு டிஸ்டர்ப்பா தான் இருக்கு. அனு ஸ்கூல் இருக்கில்ல நாளைக்கு…இவகூட என்ன விளையாட்டு… எல்லாரும் இங்கதானே இருக்க போறாங்க. ..நாளைக்கு பேசிக்கலாம்…போங்க…அம்மா மகா அத்தை வேற அப்போவே கூப்பிட்டாங்கல்ல…லேட்டாகுது பாருங்க ” என அவன் கூற

மதியும் “ஆமா டா திவி நாளைக்கு எல்லாரும் பேசுங்க… பாத்து பத்திரமா போ” என்று மதியும் கூற வேறு வழியின்றி அனைவரும் குட் நைட் சொல்லி கலைந்து சென்றனர்.

அவனை முறைத்துக்கொண்டே எழுந்த திவி அனைவர்க்கும் பை சொல்லிவிட்டு செல்ல…காலையில் என்னை பாக்காம போனேல்ல… எனக்காக வெயிட் பண்ண முடியல. இப்போ மட்டும் எதுக்கு டி இருக்க… என நினைத்தவன் அவளை பின்னோடு வந்தான்…

“ஏன் கூடவே வரீங்க.. நானே போய்குவேன்…வழி தெரியும்….”

“பாதில போயிட்டு ‘சொல்ல மறந்துட்டேன், செல்ல மறந்துட்டேன்னு’ நீ திரும்பி வருவ, அப்புறம் ஒரு மணி நேரமாகும்…சோ கேட் வரைக்கும் நானே கூட வரேன்” என்றவனை வியப்புடன் ஒரு நொடி பார்த்தாள்… அவளும் அந்த பிளானில் தான் இருந்தாள்….கதவை தாண்டியதும் “பரவால்ல கொஞ்சம் ஷார்ப் தான்… ஆறடில வளந்த அறமெண்டல் னு தான் நினைச்சேன்….நாட் பேட்..” என்றவளை அடிக்க துரத்தினான். இருட்டில் ஓடி விழப்போனவளை கை பிடித்து விழாமல் நிறுத்தியவன் “ஏண்டி இப்படி ஓடுற… அடிபட்டிட போகுது…. எதுவுமில்லேல்ல….?” என கேட்க

இல்லை என்பது போல தலை ஆட்டிவிட்டு “தேங்க்ஸ் ஆதி, நல்ல வேலை புடிச்சீங்க…. விழுந்தா இதுதான் சாக்குன்னு எல்லாரும் லெக்ச்சர் எடுப்பாங்க” என காதை தேய்த்துக்கொண்டாள்.

அதை பார்த்து சிரித்தவன் “லூசு என தலையில் மெதுவாக கொட்டிவிட்டு ஒழுங்கா போயி யாரையும் பேசி டார்ச்சர் பண்ணாம தூங்கு..உன்கிட்ட இருந்து எல்லாரையும் காப்பாத்தறதே என் வேலையா இருக்கும் போலவே. ….” என கூற அவள் முறைத்துவிட்டு “அப்போ சரி, எல்லாம் சேத்தி உங்ககிட்ட சொல்லி இனி இம்ச பண்றேன்…..உங்கள யாரு காப்பாத்துறாங்கனு பாக்கலாம்…நான் யாருக்கும் அடங்கமாட்டேன் தெரியும்ல ” என அவள் கெத்தாக கூற அதை ரசித்தவன்

“உன் பேச்ச அடக்குற வழி எனக்கு தெரியும்…சோ இ வில் ஹாண்டில்” என அவளது உதட்டை பார்த்து கூறினான்.

“எப்படி, எப்படி, எப்படி??” என அவள் விழி விரித்து கேட்க தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவன் “போதும் திவி. …நாளைக்கு பாக்கலாம்…. இப்போ போ..டைம் ஆச்சு…” என இழுக்காத குறையாக அவளை அழைத்துக்கொண்டு சென்று கேட்டின் முன் விட்டுவிட்டு திரும்பினான்.

“ராஜா, பயந்துக்க மாட்டீங்கள்ல… தனியா ரோடு கிராஸ் பன்னிடுவீங்களா…நான் வேணா துணைக்கு வரவா?” என கேட்க அவளை கண்டு சிரிக்க”போயி தூங்குடா…குட் நைட்….” என கூற “குட் நைட் ராஜா” என கூறிவிட்டு ஓடினாள். சிரித்த முகமாக சென்ற மகனை பார்த்த மதி சீக்கிரம் எல்லாமே நல்லபடியா நடக்கணும் என வேண்டினாள்.

ஆதியும் அவளை நினைத்துக்கொண்டே உறங்கினான்.

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66

66 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையே எழுந்தவன் டாக்டர்க்கு கால் செய்தான். அவரிடம் விஷயத்தை கூற அவரை சென்று அழைத்துவந்தவன் வீட்டில் அனைவர்க்கும் இவன் படித்ததில் அவர்களுக்கு தேவைப்படுவதை அவள் மனநிலை பற்றி மட்டும் கூற முழுதாக கேட்டுக்கொண்ட டாக்டர் “ஓகே

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47

47 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவரும் பேசி பைரவி, அம்பிகா பையன் குடும்பத்தினர் எனவும் அக்ஸாவின் பெற்றோர்கள் பெண் குடும்பத்தினர் எனவும் வைத்து வாசு – பிரியா நிச்சயம் நிகழ்ந்தேறியது. வாசு – பிரியா திருமணம் 2 மாதம் கழித்து