Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 6

யாழினி நீ சும்மா இருடா…ரவி பேசட்டும்…

ரவி நீ சொல்லுப்பா…அப்படி என்ன அம்மா அப்பாவுக்கு தெரியாம…அப்படி என்னப்பா பண்ணுன…

அதானே அப்படி என்ன செஞ்ச…

யாழினி……

சரி பாலா…

அட நீ என்னை இப்படி ஏன் கிரிமினல் மாதிரியே பாக்கிற சித்து…

ரவி பீடிகைலாம் வேணாம்…சொல்லு முதல்ல…

ஒண்ணுமில்ல சித்…நான் ஒரு பொண்ணை உயிருக்கு உயிராய் நேசிச்சேன்…ஆனால் அவ என்னை காதலனாய் உன்னை பிடிக்கல நீ எனக்கு நண்பன் மட்டும்தான்னு சொல்லிட்டா…அதுக்கப்புறம் நான் அவளோட பேசுறது கூட இல்ல…

ஏன் ரவி…

இல்ல சித்…அந்த பொண்ணு என்னய நண்பனா பாத்தாலும் எனக்கு அவ நான் நேசிச்ச பொண்ணுதானே…நான் அவ கூட இயல்பாய் பேச முயற்சி பண்ணாலும்…ஏதாவது ஒரு கட்டத்தில அவ என்க்கிட்ட பேசுறத கூட ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு என்னோட அவளுக்கும் காதல் இருக்கு…மறைக்கிறா போல…இந்த மாதிரிலாம் நினைக்கத்தோணும்…அப்புறம் எனக்கு அவ என்னக்குமே நான் உளமாற நேசித்த பொண்ணு…எப்படி நண்பனா…வாய்ப்பேயில்லை…அதான் பேசுறதில்லை…

இத்துனை கணம் துடிப்பாய் பேசிக்கொண்டிருந்த யாழினிக்கு வார்த்தையில்லை…அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள்…

அவங்களும் பேசமாட்டாங்களா…

இல்லல பர்த்டே,ஏதாச்சும் முக்கியமான அக்கேஸன்ஸ்னா மேசேஜ் பண்ணுவா…நானும் அவ கேட்டதுக்கு மட்டும் ரிப்ளை பண்ணிட்டு பேசாம இருந்துடுவேன்…

ம்ம்ம் சரி ரவி இப்போ இதுல என்ன பிராபிளம்…இன்னும் அவளையே தான் நினைச்சுட்டே இருக்கியா…இப்போ உனக்கு பாத்திருக்கிற பொண்ணு பிடிக்கலயா…

ஹேய் இல்ல சித் அதெல்லாம் இல்லமா…சுத்தமா மறந்துட்டேனுலாம் சொல்லமுடியாது…ஆனாலும் நிறைய மறக்க முயற்சி பண்ணிட்டே தான் இருக்கேன்…

ம்ம்ம் அப்புறம் என்ன ரவி…

இல்லப்பா நேத்து என் வேலை முடிஞ்சு வரப்போ அவளை தற்செயலா பாத்தேன்…கண்ணீர் கண்களை நிரப்பிட்டு இருந்துச்சு…என்னால பேசவே முடியல…அப்படியே போயிரலாமானு யோசிச்சப்போ…ஆனா அவளும் என்னய பாத்துட்டா…அவளே என்னய கூப்பிட்டா…

எப்படி இருக்க ரவி…மேரேஜ் ஆகிட்டானு கேட்டா…

ம்ம்ம் நல்லா இருக்கேன்…மேரேஜ் இன்னும் ஒரு வாரத்திலனு சொன்னேன்…

ஓஹோ சூப்பர் என்னயலாம் கூப்பிடமாட்டீங்களானு கேட்டாப்பாரு…நொறுங்கிப்போயிட்டேன்…

ம்ம்ம் இப்போ கையில இன்விட்டேஷன் இல்ல…

அதனாலென்ன…பிரண்ட்ஸ்க்குள்ள அந்த பார்மாலிட்டிலாம் இல்ல…நான் வருவேன் எங்கனு மட்டும் சொல்லு…

நானும் சொல்லிட்டு கிளம்பிட்டேன்…

ஆனா மனசை பிசையுது சித்…நேத்து சுத்தமா தூக்கமில்ல…எனக்குனு ஒருத்தி வரப்போறாளே இந்த சமயத்தில என் காதலியின் நினைவுகள் என்னுள் வரப்போலாம் மைண்ட் டைவர்ட் பண்ணுறமாதிரி ஏதாச்சும் செஞ்சு மாத்திடுவேன்…

ஆனா நேத்து நான் எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னால அதுல இருந்து வரவே முடியல…

முன்னாள் காதலியை இரு விழிகள் துடிக்க நா தழுக்க…விழிகளின் உரையாடல் மட்டும் இருக்க…விழி நிரம்ப கண்ணீர் தழும்ப பாக்கிற நிமிடம்…என்னால் வார்த்தையில சொல்லமுடியல சித்…இன்னமும் ஒரு ஒரத்திலே அவ இருக்காப்போல முதல் காதல் அவ்வளவு ஈஸியா போகாதுபோலயே…டோட்டலி அப்செட்…அதான் ஆபீஸ் உம் லீவ் போட்டுட்டேன்…உங்கக்கிட்ட ஷேர் பண்ணனும்னு தோணுச்சு…மனசு ரொம்ப சரியில்ல…அதான் வந்தேன்…

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே

பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே”

அடப்பாவி எனக்காக லீவ் போட்டேனு சொன்னீயேடா பிராடு…போ…

ஹேய் யாழினி…

சரிடா இதப்பத்தி இத்தனை நாளு எண்ட்ட சொல்லணும்னு தோணவே இல்லல உனக்கு…

ஏய் அப்படியில்லடி அப்போ உனக்கு புரிஞ்சிக்கிற அளவுக்கு பக்குவம் இல்ல…

அப்போ இவளுக்கு இப்போ மட்டும் வந்துட்டாக்கும்…

பாலா…..

சரி விட்டுட்டேன்…

ஹேய் அதில்லடி எல்லார் வீட்டிலயும் அப்படித்தான் மேரேஜ் ஆகிட்டா அந்த பொண்ணுக்கு தனியா ஒரு பக்குவம் வந்துட்டதா நினைப்பாங்க அப்பதான் நிறைய பகிர்ந்துக்கணும்னு தோணும்…

சரி இவ்ளோ பேசுறேள…வீட்டில இருக்கப்போ நீயும் அம்மாவும் எலியும் பூனையுமா சண்டை போட்டுட்டே இருப்பீங்க…அப்பா தான் வந்து சண்டையை விலக்கி விடுவாங்க…

ம்ம்ம்

ஆனா இப்போ யோசிச்சுப்பாரு அம்மாவும் சரி…அப்பாவும் சரி…உங்கிட்ட எவ்ளோ நேரம் பேசுறாங்க…ஒரு சின்ன விஷயம்னாலும் உங்கிட்ட பகிர்ந்துக்கிறாங்க…சொல்லப்போனா எண்ட்ட பேசுறத விட உன்க்கிட்ட பேசுறது தான் அதிகம்…என்ன கரெக்டா…

ஹிஹிஹி கரெக்ட் தான்…

ம்ம்ம் அப்புறம் என்ன…

இவர்கள் பேசிக்கொண்டிருக்க சித்துவால் ரவி சொன்ன விடயத்திலே மனம் லயிக்க…

சரி ரவி…இப்போ நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க…தன் முன்னாள் காதலியை பார்க்க நேர்ந்ததுக்கா…இல்ல எங்க கல்யாணத்துக்கு வந்துடுவாளோனு பயமா…

அவளை பார்த்தது வருத்தம் இல்ல…சந்தோசம் தான்…ஆனா அது என்னோட நிகழ்கால வாழ்க்கையை பாதிச்சுடகூடாதேனு ஒருவித பயம்…கல்யாணத்துக்கு வரமாட்டானு நம்புறேன்…

ம்ம்ம்…

மச்சான் விடு பாத்துக்கலாம்…சரி நீ எப்போ ஊருக்கு கிளம்புற…

நாளைனைக்கு சித்…

ஓகே நாங்களும் அப்போவே வந்துடுறோம்…

ஆமா பாலா எங்க தங்கப்போறோம்…எங்க வீட்டிலயா…இல்ல உங்க வீட்டிலயா…

அடப்பாவி இன்னமும் அது எங்க வீடுதானா…நம்ம வீடுன்னு சொல்லவே மாட்டியா…

ஹிஹிஹி…

ஆனா மச்சான் என்னதான் சொல்லு இந்த மனைவிமார்களுக்கெல்லாம் தான் பிறந்த வீடுதான் பெரிசு…ஹீக்கும்…

யா அப்கோர்ஸ்…

யாழினி….

ஏய் என்னப்பா ஆளாளுக்கு என்னயே அமைதியாய் இருக்கச்சொல்றீங்க போங்க…

சரி சித் நீ நான் கேட்டதுக்கு சொல்லு…

யாழினி…நம்ம வீட்டுக்குதாண்டா போணும் இல்ல எங்கம்மா எதும் கண்டிப்பா சொல்லுவாங்க…நீ வேணா மேரேஜ்க்கு முந்தைய நாளு உங்க வீட்டுக்கு போயிக்கோ…

ஓஹோ…அப்படியாடுச்சோ உங்களுக்கு…நடக்கபோறது என் அண்ணா கல்யாணம்…ஆனா போறதுக்கு எல்லாத்துக்கும் பெர்மிஷன் வாங்கிட்டுதான் போவேண்டி இருக்கு…என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க…ஒரு பொண்ணுக்கு மேரேஜ் ஆயிடுச்சுனா எல்லா உறவும் அவ்ளோதான…மூச்சுவிடாமல் தன் கோவத்தை கொட்டிதீர்த்தாள்…

ஹேய் ஏண்டி இவ்ளோ கோவப்படுற…

அண்ணா நீ சும்மா இரு உண்ட்ட நான் எதுவும் கேட்கல…

அண்ணாவா என்ன ஒரு உலக அதிசயம்…சரிம்மா நீ பேசு…

ஹேய் யாழினி புரிஞ்சுக்கோடா…

இல்ல பாலா…நீங்களும் சரி அத்தையும் சரி எப்போபாரு இப்படியே பண்றீங்க…நானும் சமயத்தில சரி யாருக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாரு அவரு நிலமை என்னய விட சங்கடமேனு விட்டுட்டுவேன்…இப்போவும் அதான் நடக்கப்போகுது…இருந்தாலும் எனக்கும் கோவம்,வலிகள் உண்டு அதையும் நீங்க புரிஞ்சிக்கணும்…

ஹேய் இங்கப்பாரேன்…

முடியாது போ…

லவ்யூ…என்று கூறியப்படியே அவளைப்பார்த்தப்படியே அவள் விழிகளில் முத்தமிட்டான்…அழுது முடித்த விழிகள்…ஈரத்தின் சிவந்து தன் குமுறலை கொட்டியது கண்ணீராய் மேலும் அவன் தோள் சாய்ந்தப்படியே…

காற்றே உன் கால்
அடியை நான் தேடி கண்ணே
நான் காத்திருந்தேன் கண் மூடி
இது என்ன புது காலம் என்னோடு
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு
இது போலே இருந்ததில்லை எப்போதும்…

நிழல் அது தான்
பிரிகிறதே நிஜம் அது தான்
மறைகிறதே கண்ணும்
கண்ணும் தவிக்கிறதே
ஒன்றை ஒன்று தொலைகிறதே

சொல்லடி கண்மணி
நீயும் என்ன தேவதை
சிறகினை விரிக்க மறந்தாயே
நில்லடி பொன்மணி நீயும்
என்ன பெண்ணோ ஆண்
மனம் தவிக்க பறந்தாயே”

என்னடா இது ரொம்ப நேரம் சண்டை போடுவீங்க…ஒரு நல்ல எண்டெர்டெயின்மெண்ட் இருக்குனு நினைச்சேனே…இப்படி சட்டுனு சமாதானமாகிடுறீங்களே…நான் எதும் பாக்கலப்பா…நான் கிளம்பிறேன் நாளைனைக்கு மீட் பண்ணலாம் டாடா…

ஹாஹா காதலுக்கு ரொம்ப நேரம் கோவப்பட தெரியாது…

ஆஹான்…சரிங்கோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: