Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 17

அத்தியாயம் – 17

 

வினோத்தை பின் மண்டையில் தாக்கியவன் மருந்தையும் கொடுத்து மயக்கமடைய வைத்திருந்தான். அதனால் அவனிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்று கூட ப்ரோஜனப் படவில்லை. ரவியின் அறையில் காற்றில் மயக்க மருந்து கலந்து அவனையறியாமல் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான். அவனே அறியாம காத்தில் மருந்து கலந்திருந்தால்… யார் வந்திருப்பார்கள்…

சிசிடிவி அவர்களின் பகுதியில் மட்டும் மின்சார வயரின் பழுது  காரணமாக நிறுத்தப் பட்டிருந்தது.

“அதை ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லல…” எரிந்து விழுந்தார் ராஜேஷ்வர்.

“சொல்லிருந்தா வேற அறைகளை மாற்றிருப்போமே”

“சாயந்தரம் எல்லாம் வேலை செஞ்சது சார். திடீருன்னு ரெண்டு மூணு கேமிரா சுத்தமா வேலை செய்யல. ஸ்பார்க் வேற வந்ததா கஸ்டமர்ஸ் புகார் தந்தாங்க. அதனால சேப்டி ரீசனுக்காக இந்தப் பகுதி காமிரா முழுசும் நிறுத்தினோம்”

பாதுகாப்பு கருதி என்று சொன்னது அவர்கள் வாயை மூட வைத்தது.

 

“நம்ம இதைக் கூட உணராம இருந்தது வெட்கமா இருக்கு”

 

“நீ வெளிய போறது தெரிஞ்சு இப்படி செஞ்சிருக்காங்க”

 

கல்லாய் இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தான் ஜெய். இதே ஊரில் எங்கோ ஓரிடத்தில் அவனது உயிர் மறைந்திருக்கிறது. ஆதாரம் எதுவும்தான் அவளிடம் இல்லையே பின் ஏன் கடத்தினார்கள்? அவளுக்கு எதுவுமே தெரியாது என்று உனக்குத் தெரியும் ஆனால் அவர்களுக்குத் தெரியுமா…

 

“அஞ்சலியைக் கடத்தினவங்களை இன்னைக்கு ராத்திரிக்குள்ள பிடிக்கணும் சார்…”

 

“கோ அஹெட் அண்ட் டூ வாட் யூ வான்ட் டு டூ. யாரையும் ஷூட் பண்ணனுமா, பண்ணு… டீம் வேணுமா கேளு… எது வேணும்னாலும் நான் அரேஞ் பண்றேன்”

“நடுராத்திரி அந்த கார்ல காத்திருந்த ரவுடிங்க பத்தி தகவல் தெரிஞ்சதா சார்…”

 

“மாறன்… விசாரிச்சிங்களா…” ராஜேஷ்வர் அவர் உதவியாளரைக் கேட்க

 

“அவங்க பிராத்தல் பார்ட்டிங்க ஸார்… இந்த ஹோட்டலில் தங்கியிருந்த சிலருக்குப் பொண்ணுங்களை சப்ளை பண்ணிட்டு அழைச்சுட்டு போவாங்களாம்… அதில் ஒரு ஆளைப் பிடிச்சு போலிஸ் ஸ்டேஷன்ல தட்டினோம். கக்கிட்டான்”

 

“அதுக்கு ஏன் அத்தனை ஆளுங்க வந்தாங்க”

 

“பொண்ணுங்க தப்பிச்சுடக் கூடாதுன்னு தான் சார். பாதிப் பொண்ணுங்க இவனுங்க அடிக்கு பயந்துதானே இந்தத் தொழிலுக்கு சம்மதிக்கிறாங்க…”

 

“சரி, வினோத் எப்படி இருக்கார்”

 

“அவர் எந்திருச்சுட்டார்” தலையில் கட்டுடன் வினோத்தை அழைத்து வந்தனர்.

 

“ஒரு செகண்ட் லைட் ப்ளிக்கர் ஆனது… நான் சுதாரிக்கிறதுக்குள்ள யாரோ என் மண்டையில் அடிச்சாங்க… நான் திருப்பி அடிக்கிறதுக்குள்ள முகத்தில் ஸ்ப்ரே பண்ணிட்டாங்க. ரவியும் மத்தவங்களும் என்ன ஆனாங்க”

 

ரவியின் கூற்றுப்படி அவனது அறைக்கு யாரும் வரவில்லை. ஆனால் சிறிது சிறிதாக மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான். என்னவாய் இருக்கும். கொசு மருந்து… லிக்விட்டில் கலந்திருந்தால்… யோசனை தோன்றியதும் பரபரவென்று ரவியின் அறை முழுவதும் தேடினான். கண்களுக்கு மறைவாக கட்டிலுக்கடியில் உபயோகிக்காமல் இருந்த பிளக் பாயிண்டில் ஆல்அவுட் லிக்விட் செருகியிருந்தது. அதை கவனமாய் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் அதில் ஊற்றியிருந்த மருந்தினை அகற்றிவிட்டு மயக்கம் வரவழைக்கும் மருந்தினைக் கலந்திருப்பது புலனானது. அதே போன்ற மற்றொன்று ஜெய்யின் அறையிலும் இருந்தது. ஜெய்  அந்த நேரத்தில் வெளியே சென்றதால் தப்பி விட்டான்.

 

வினோத் கடைசி நேரத்தில் எதிர் அறையை தங்கியதால் அவனை மட்டும் விட்டுவிட்டனர். முதல்நாள் ஹோட்டல் அறையினை சுத்தம் செய்தவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஒன்றும் பெரிதாகக் கிடைக்கவில்லை.

 

ராஜேஷ்வர் நான்கு டீமை உருவாக்கி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்திற்கு முடுக்கிவிட்டார். ஜெய், ரவி, வினோத் அனைவரையும் ஒவ்வோரு திசையின் டீமிற்கும் அனுப்பினார். வடக்குப் பகுதி டீமிற்கு அவரே பொறுப்பேற்றார்.

 

“மணி சாரை இன்னைக்கு நீங்க மீட் பண்ணனுமே. இதை விட அது முக்கியம்” மாறன் நினைவு படுத்தினார்.

 

“நல்லவேளை நினைவு படுத்தின… நான்  வெஸ்ட் டீமுக்குப்  போறேன். மணியை அந்தப் பக்கம் தான் சந்திக்க வேண்டியிருக்கு. அந்த டீமில் இருக்குறவங்க இங்க வாங்க… “ என்றார்.

 

அந்த அணியில்  ரவி இருந்தான். அவன் வடக்குப் பகுதிக்குப் பொறுப்பேற்றான்.

 

ராஜேஷ்வர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு  விவரங்களை சேகரித்தார். அனைவரும் சேர்ந்து தீவிரவாதிகள் தங்கியிருப்பதற்கான சாத்தியகூறுகள் இருக்கும் இடத்திற்கான வரைபடங்களைத் தயாரித்தனர்.  கிழக்குப் பகுதியில் நிறைய இடம் இருந்தது. அதன் பொறுப்பு ஜெய் கையில் இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் சென்று தேடுவது கொல்லன் பட்டறையில் ஊசியைத் தேடுவது போலக் கடினமான காரியம்.

 

“கவலைப்படாதே மை பாய். இளம்பெண் கடத்தல் கண்டுபிடிங்கன்னு போலிஸ்க்கு தகவல் தந்துடுறேன். அவங்களும் தேடட்டும்” என்று தைரியமூட்டினார்.

 

“நான் கிளம்புறேன்… ஜெய் உன்கிட்ட இருக்கும் எல்லாத்தையும் சீல் பண்ணி வச்சுட்டேல்ல… “

 

“வச்சுட்டேன் சார். நீங்க எடுத்துக்கலையா”

 

“எங்க… உன் கால் வந்ததும் வீட்லேருந்து கிளம்பி ஓடி வந்துட்டேன். இப்பத்தான் நினைவே வருது. இனிதான் எடுக்க ஏற்பாடு செய்யணும்” விடைபெற்றுக் கிளம்பினார்.

 

கூண்டில் அடைபட்ட புலி போல இருப்புக் கொள்ளாமல் நடை போட்டுக் கொண்டிருந்தான் ஜெய். இதே ஊரில் ஏதோ ஒரு மூலையில் அவனது உயிர் வேதனையில் இருக்கிறது. இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்.

கடைசி நேரத்தில் இந்த விடுதி அறையை புக் செய்தது தெரிந்தும் ஒரே இரவில் அவளைக் கடத்தியிருக்கிறான் என்றால் எங்களைக்  கண்காணிப்பவனாக இருக்க வேண்டும் இல்லை எங்கள் அருகில் இருப்பவனாக இருக்க வேண்டும்.

 

விழிப்பும் உறக்கமும் கலந்த உணர்வில் அஞ்சலி. கண்களை இறுக்கித் துணியால் கட்டப்படிருந்ததால் அவளால் திறக்க முடியவில்லை. சுவாசிக்க மூக்கை விட்டுவிட்டு வாயை சுற்றிலும் கூடக் கட்டியிருந்தனர்.  எங்கேயோ ஒரிடத்தில் கூனிக் குறுகி மடிந்து கிடந்தாள். அவளது மனம் நடந்ததை நினைவு படுத்த முயன்றது.

 

ஜெய் கிளம்பியதும் ஹோட்டல் அறையின் ஜன்னல் கதவைத் திறந்து எங்காவது தெரிகிறானா என்று பார்த்தாள். கண்டுபிடிக்க முடியவில்லை. சற்று நேரம் உறக்கம் வராமல் புரண்டவள் ஏதோ அரவம் கேட்க, ஜெய்.. என்றபடி எழுந்தாள். கதவை யாரோ மிக மிக மெல்லமாகத் தட்ட…  ஜெய் சொல்லிக் கொடுத்தது போல நபரைப் பார்த்துவிட்டே திறந்தாள்.

 

“என்ன ஏதாவது முக்கியமான விஷயமா… ஜெய் கால் பண்ணானா” என்று சொல்லிக் கொண்டே இருந்தவளின் முகத்தில் ஸ்ப்ரே அடிக்கப் பட்டது.

 

“அடப்பாவி… நீ… “ நம்பமுடியாத அதிர்ச்சியுடன் மயங்கினாள். அந்த நபரை நினைத்து தாள முடியாத அதிர்ச்சியில் அசைந்தாள்.

 

“அசையுறா பாரு… மயக்க மருந்தை அடிடா…”

 

“நல்லா அடி இன்னும் நாலு மணி நேரத்துக்கு முழிக்கக் கூடாது”

 

“நல்லா காரியத்தைக் கெடுத்த போ… அந்தாளுங்க  வர்ற வரைக்கும் மயக்கத்தில் இருக்கணும். ஆனால் அவங்க வர்றப்ப முளிச்சிருக்கணுமாம்… “

 

“ஏன் பொண்ணு முளிச்சிருந்தாத்தான் அவங்களுக்கு பிடிக்குமா”

 

“இது வேற விஷயம்டா…. இந்தப் பொண்ணுகிட்ட  ஏதோ முக்கியமான விஷயம் கேட்கணுமாம்… அதுக்கு இவ உயிரோட இருக்கணும், முளிச்சும் இருக்கணும்… அதுனால பாத்து மருந்து அடி…”

 

“கேட்டதும் நம்ம கோட்டைக்கு அனுப்பிட சொல்லு… இந்த மாதிரி நாலு பொண்ணு கிடைச்சா நம்ம பிஸினஸ்ல சுக்கிர திசைதான்”

 

“சான்ஸ் இல்லை இவளைப் போட்டுத் தள்ளிடுவாங்கன்னு நினைக்கிறேன்” என்று சொன்னதைக் கேட்டபடியே  மயக்கத்தில் ஆழ்ந்தாள் அஞ்சலி.

 

மயங்கும் முன்பு அவளது உதடுகள் அந்தப் பெயரை உச்சரித்தது “வினோத்… துரோகி…”

 

ஜெய்ஷங்கருக்கு ஏதோ ஒரு நெருடல், என்னவோ ஒரு பதற்றம்… சற்று நிதானமாக யோசித்தான். ரவிக்கு சற்று விழிப்புத் தட்டியதும் அனைவரும் சென்று பார்த்தனர்.

“என்னாச்சு,

ஏன் மயங்கின,

ஏதாவது சத்தம் கேட்டியா,

யாராவது பேசினாங்களா… “

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வி கேட்க அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி நின்றிருந்தான் ஜெய். ஆனால் அந்தப் பார்வையில் ஒரு கேள்வி ஒளிந்திருந்தது. தமையனின் கண்களை போகிற போக்கில் நோட்டமிட்டவன்…

 

“எனக்கு டயர்டா இருக்கு. ஒரு அரைமணி நேரம் ஓய்வு டிஸ்டர்ப் பண்ணாதிங்க… “ அண்ணனைப் பார்த்து சொன்னவாறு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவனது பார்வை அந்த அறையின் ஜன்னலின் வழியே பக்கத்துக் கட்டடத்தைப் பார்த்தது.

 

ஜெய்ஷங்கரின் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. சற்று ஓசை அடங்கும் வரைக் காத்திருந்தவன் மற்றவர்களின் கண்களில் படாமல் மெதுவாக நழுவினான். அடுத்த முப்பதாவது நொடி ரவியின் அறைக்கு எதிரே இருந்த கட்டிடத்தின் அவன் அறைக்கு நேர் எதிரே இருந்த காலி அறையின் பூந்தொட்டியை ஆராய்ந்து கொண்டிருந்தான்.அதில் சக்தி வாய்ந்த காமிரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அந்த நொடி வரை எதிர் அறையில் நடக்கும் நிகழ்வுகளை சமர்த்தாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தது. அஞ்சலி அறைக்கு முன்பும் அதே போல்  மற்றொன்று இருந்தது. அவளது அறைக் கதவு மூடியிருந்ததால் ஒரு விவரமும் இருக்காது. பரபரவென்று ரவியின் அறையில் ரெகார்ட் ஆகியிருந்ததைப் பார்த்தான்.

 

ரவி அலெர்ட்டாக அவ்வப்போது அஞ்சலி அறைக்கு சென்று கவனித்தான். சிறிது நேரம் கழித்து சோர்வாக அமர்ந்தான். கண்கள் செருக  அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்தில் ஆழ்ந்தான். சிறிது நேரம் கழித்து அந்த அறைக் கதவு மெதுவாகத் திறக்க, உள்ளே நுழைந்தான் வினோத்.

 

அவனைக் கண்ட நொடி ஜெய்யின் முகம் ரத்தமென சிவந்தது. இத்தனை வருடங்கள் அவர்கள் கழித்த நட்புத் தருணங்கள் நினைவில் வர,  “துரோகி… “ கோபத்தில் வார்த்தைகளைத் துப்பினான்.

 

அதை உறுதிப் படுத்தும் விதமாக வினோத்  ரவியின் அறையில் ஏதாவது ரெகார்டர் இருக்கிறதா என்று ஒவ்வொரு இஞ்சாகச் செக் செய்தான். அதே சமயம் காரிடாரில் ஒருவன் அஞ்சலியைத் தூக்கிச் சென்றதைக் கண்டு கோபத்தில் அவனது நரம்புகள் புடைத்தது.

 

“டேய் வினோத்… “ என்ற அவனது கர்ச்சனை அந்த அறையெங்கும் ஒலித்தது.

 

வாயில் ரத்தம் ஒழுக, பற்கள் ரெண்டு தரையில் கிடக்க, முகம் வீங்க அமர்ந்திருந்தான் வினோத்.

 

“சொல்லுடா… அஞ்சலி எங்க… எதுக்காக அவளைக் கடத்துனிங்க”

 

வெளியே தெரியாது ஒரு அறையில் அடைத்து வினோத்தை விசாரித்ததால் மற்றவர்கள் நண்பர்கள் ஏதோ ப்ளான் செய்கின்றனர் என்றே நினைத்தனர்.

“ராஜேஷ்வர் சாரைக் காண்டாக்ட் பண்ண முடியல”

 

ஜெய் டாக்குமென்ட்ஸ் மறைத்து வைத்திருந்த இடத்தில் சிக்னல் கிடைப்பது கடினம். ராஜேஷ்வர் டாக்குமெண்ட்ஸ் எடுக்க சென்றிருக்கலாம். அதன் பின் மணிவண்ணனை சந்திக்க செல்ல வேண்டும். அது காரணமாக அவரால் உடனே பதிலளிக்க முடியாமல் இருக்கலாம்.

 

“பரவால்ல விட்டுருங்க… நான் அவர்கிட்ட சொல்லிடுறேன். அந்த விடியோல அஞ்சலியைத் தூக்கிட்டு போறவனைப் பத்தி விசாரிக்க சொன்னேனே”

 

“யதுகிரிகுட்டாவில் இருக்கும் பிராத்தல் கேங் மாதிரி தெரியுது சார்”

 

“இன்னும் பத்து நிமிஷத்தில் அவங்களைப் பத்தின தகவல் எனக்கு வரணும். டீமை ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணிடு ரவி”

 

சில பல முறையான விசாரிப்புக்களுக்குப் பின் வினோத் வாயைத் திறந்தான்.

 

“வினோத்… நீ சொல்லலைன்னா எங்களால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா. நீ என் காதலியைப் பணமா பார்த்த, எங்களுக்குள்ள இருக்கும் மிருகத்தைத் தூண்டி விட்டுட்ட, பதிலுக்கு உன் குடும்பத்தை… ”

 

 

“நோ… நீ செய்யமாட்ட… “

 

“எஸ்… அஞ்சலிக்கு எதுவும் நடக்காத வரைக்கும் மாட்டேன்”

 

“யதுகிரிகுட்டாவில் பிராத்தல் டீமின் சீக்ரெட் பிளேஸ்லதான் அவ இருக்கா… உடனே போனால் அவளைக் காப்பாத்தலாம். இதுக்கு மேல வேணும்னா என்னை மட்டுமில்ல எங்க குடும்பத்தையே ஷூட் பண்ணிக்கோ…”

அதற்கு மேல் அவனிடம் விஷயம் பெயராது என்று முடிவு செய்தவன் “யதுகிரிகுட்டாவுக்கு யார் போறது?”

 

“நம்ம ராஜேஷ்வர் சார்தான்…”

 

“அவர் மணிவண்ணனை மீட் பண்றதில் பிசியா இருப்பார். அதனால நானும் நீயும் அந்தப் பகுதிக்குப் போகலாம்” தீர்மானமாக ரவியிடம் சொன்னான்.

 

“அவர்கிட்ட போன் பண்ணி சொல்லிடலாம்”

 

“அவரை ரீச் பண்ண முடியலன்னு சொன்னாங்க…”

 

“நான் ட்ரை பண்றேன்…” அவரது டீமின் மாறனை அழைத்தான்.

 

“சார் அப்பவே கிளம்பிட்டாங்களே”

 

“மணி சாரை ரிசீவ் பண்ணிருப்பாரா… இப்ப எங்க இருப்பாங்கன்னு தெரியுமா?”

 

“மணி சார் தான் ப்ரொக்ராமைக் கேன்சல் பண்ணிட்டாரே… அடுத்த வாரம்தான் வர்றார்”

காலையிலிருந்து மணிவண்ணனை ரிசீவ் பண்ண செல்வதாக சொன்னது எல்லாம்… யூ டூ ராஜேஷ்வர் சார்… எவ்வளவு நம்பிக்கையா உங்ககிட்ட எல்லா ஆதாரங்களையும் ஒப்படைச்சேன்.

வெயிட்… அஞ்சலியோட அப்பா மணிவண்ணன் சார்கிட்ட மட்டும்தான் ஒப்படைக்க சொன்னார்னு சொன்ன நினைவு. அவ படிச்சுப் படிச்சு சொன்னாளே… கடைசியில் இவ்வளவு நாள் உழைப்பையும் என் குருட்டு நம்பிக்கையால வீண் பண்ணிட்டேனே… தனது முட்டாள் தனத்தை நினைத்து வெட்கப்பட்டான்.

 

“யூ ஃபூல்…” கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை ஓங்கிக் குத்தினான்.

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த வினோத் சொன்னான் “நீ தந்த ஆதாரத்தில் சில தகவல்கள் விட்டுப் போயிருக்கு. அதைத் தெரிஞ்சுக்கத்தான் அஞ்சலியைக் கடத்தினாங்க. அந்த விவரம் கிடைச்சவுடன் அவளைக் கொன்னுடுவாங்க”

 

“யூ … , இவ்வளவு தெரிஞ்சும் ஏன்டா அவளைக் கடத்த ஹெல்ப் பண்ண…”

 

“இல்லைன்னா என் குடும்பம் உயிரோட இருக்காதே…” கண்களில் நீர் வழிய சொன்னான் வினோத்.

 

அதே சமயம் தெரியாத எண் ஒன்றிலிருந்து ஜெய்க்கு அழைப்பு வந்தது. ஒரு வினாடி அந்த ஸ்க்ரீனை முறைத்துப் பார்த்தவன், ஒருவேளை கடத்தல் காரர்களிடமிருந்து வந்ததை இருந்தால், அஞ்சலியைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் என்ற எண்ணம் தோன்றவும்  வேறு வழியில்லாமல் எடுத்தான்.

5 Comments »

 1. Vanakkam Tamil madam,

  How are you?
  I second Anu madam.

  Romba thrilling a irukku story . Eagerly waiting for the next episode.

  Excellent writing by you.

  Vaazhga valamudan.
  God bless you and your family.

  Regards
  Parvathy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: