ப்ரியவதனாவின் காதல் மனது

வணக்கம் தோழமைகளே

நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே. 

அன்புடன்,

தமிழ் மதுரா

 

கனவுக்குள் இணைந்து

கவிதையாய் என்னுள் புகுந்தாய்

கண நேரம் கூடப் பிரியாது

அடைகாத்தாய் எனை

கண்விழித்துப் பார்த்தேன்

கரைந்தே போனாய் காற்றாய்

கனவு தொலைந்தால் கருகித் தவிக்குது எம் மனசு

 

நிழலாய் எனைத் தொடரும்  உன் நினைவு –

ஆனால் நிகழ்வில் இல்லை – நீ என்னோடு

நித்தமும் கலங்கித் தவிக்கிறேன்

நிராசையாய் போன

நினதன்பாலே – எனினும்

நிழலாய் வருவாய் என்ற நம்பிக்கையில்

நிற்கிறேன் கால்கடுக்க.

— ப்ரியவதனா

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்துவிட்ட என்னை நிச்சயம் முயன்று முத்தமிடுவேன் உனைக் காட்டிய கண்ணை தெவிட்டாமல் பார்த்திருப்பேன் என் விழி குடிக்கும் உன்னை கண்ணாளா  உன் கண்ணசைவில் துளிர்க்கும் எந்தன் பெண்மை!!   காட்சிகள் அனைத்தும் திரிந்து நீ மட்டுமே நிற்க,

புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)

புதுமை பெண்ணின் மாற்றம் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வாழ்பவள் பாரதியின் பொன்மொழி படி நடப்பவள் உன்னைக் கண்டு தலைகுனியும் போதும் உன் கண்களை தவிர்க்கும் போதும் மட்டும் மறக்கிறேன் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் ~ஸ்ரீ!!~ Download Premium WordPress

புன்னகையே பதிலாய் (கவிதை)புன்னகையே பதிலாய் (கவிதை)

வணக்கம் தோழமைகளே! நமது தளத்துக்கு தனது கவிதை மூலம் வருகை தந்திருக்கும் சுரபி மூர்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.  இத்தனை அழகாய் காதலை சொல்லும் காதலிக்கு அவனின் புன்னகை கிடைக்காமலா போய்விடும் சுரபி.  அன்புடன், தமிழ் மதுரா     புன்னகையே