Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 14

அத்தியாயம் – 14

அடுத்த சில மணி நேரத்தில் இருவரும் முயன்று தங்களது உணர்ச்சிகளை உதறிவிட்டு தேவையானவற்றை கவனமாக எடுத்து வைத்தனர். ஒருவர் வேண்டியதை சொல்ல சொல்ல மற்றவர் தன்னிடமிருந்த லிஸ்ட்டை சரி பார்த்தனர்.

 

“வாண்டு மாமா புத்தகங்கள்”

 

“எண்கள் போட்டிருந்ததை மட்டும் எடுத்து வச்சிருக்கேன். நம்மதான் எல்லாத்தையும் எழுதிட்டோமே இது அத்தனையும் வேணுமா…”

 

“நம்ம கண்களில் படாத சிலது மற்றவங்க கண்களில் பட வாய்ப்பிருக்கு”

 

அது அஞ்சலிக்கும் சரியாகவே பட்டது.

 

“போட்டோ ஆல்பம்”

 

“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன். அதிலும் அப்பாவைக் கடைசியா எடுத்த போட்டோவையும். அவர் என்னை கடைசியா அவுட் ஆப போகஸ்ல எடுத்ததையும்”

 

“உன்னை அவர் எடுத்த போட்டோவில் நம்ம கண்ணுக்குத் தட்டுப்படாம என்னவோ ஒரு உண்மை ஒளிஞ்சுட்டு இருக்குறதா படுது. லெட் அஸ் சீ… என்னோட பாஸ் புரியாத புதிர்களை விடுவிக்கிறதில் கில்லாடி. இதைக் கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவார்”

 

அவள் பதிலேதும் சொல்லவில்லை. தேவைக்குத் தவிர அவனிடத்தில் வேறு எந்த பேச்சும் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டே அவனுடன் கிளம்பத் தயாரானாள். இவனைப் பேச்சை நம்ப அவள் இனியும் தயாரில்லை. ஜெய்ஷங்கர் புத்திசாலியாய் இருக்கலாம் ஆனால் அவளைப் பொறுத்தவரை அன்பைக் கொச்சைப் படுத்தியவன். பணத்துக்காக எந்த காரியத்திற்கும் தயங்காத சிலரும், கடமைக்காக ஒரு ஸ்ட்ரடஜி வகுத்து செயல்பட்ட  இவனும் ஒரே இனம்தான். வெறுப்போடு அவனை நோக்கினாள்.

 

பேசிவிட்டு அவளது பதிலுக்காகக் காத்திருந்தவன் அவள் முகத்தில் தெரிந்த வெறுப்பைக் கண்டு என்ன நினைத்திருப்பாள் என்று சில விஷயங்களை அனுமானித்தான். அவன் மனது பதிலாகத் தந்த ஒவ்வொரு விடைக்கும்  தன்னையே வெறுத்தான்.

 

“வேற ஏதாவது…”

 

“நம்ம பெருசு படுத்தின போட்டோவையும் எடுத்து வை”

 

“ஏற்கனவே வச்சுட்டேன்”

 

ஜெய் மறுபடியும் அதனை ஒரு முறை பார்த்தான். அந்தக் காரின் உள்ளே அமர்ந்திருந்தவனின் முகம் தெரியவில்லை. ஆனால் அந்த கலங்கலாய் தெரிந்த அந்த உருவம் அவனுக்கு ஏதோ ஒரு உணர்வைத் தோற்றுவித்தது. கண்களை மூடிக் கொண்டு யோசித்தான். ஆனாலும் யாராக இருக்கும் என்று தெரியவில்லை.

 

“இப்படி லேட்டாக்கிட்டே  இருந்தா எப்படி…  உங்க கடமையை முடிக்க வேண்டாமா”

 

“என்ன…”

 

“ஒரு வருடத்துக்கு மேலா உங்களைப் பாடா படுத்திட்டு இருக்குற அசைன்மெண்ட்டை முடிப்பதில் வேகம் காட்டுங்க  மிஸ்டர். ஜெய்ஷங்கர்”

 

அந்த வார்த்தைகளில் காயம் பட்டவனாக அவளை வெறித்தான்.

 

“ஸ்டாப் இட் அஞ்சலி…”

 

ஒரு சிறிய வார்த்தைக்கே அசந்தால் எப்படி.

 

“ஜெய்ஷங்கர்… உங்களுக்கு இதுதான் தேவைன்னு முதலிலேயே சொல்லிருந்தால் அப்பயே தந்து அனுப்பிருப்பேன். இப்படி என்னை எமோஷனலா பீல் பண்ண வச்சு… ஏற்கனவே சோர்ந்திருந்த என்கிட்டே நெருங்கி, மனசை மயக்கி, அதுக்கப்பறம் உண்மையை சொல்லி உடைச்சு  வாங்கிருக்கணும்னு அவசியமில்லை. என் விஷயத்தில் உங்க டெக்னிக்கை அதிகப்படியா உபயோகிச்சுட்டிங்க”

 

“அஞ்சலி… நான்…”

 

அவனைப் பொருட்படுத்தாமல்  “கிளம்பலாமா”  அமைதியான குரலில் கேட்டுவிட்டு அவள் பாட்டுக்கு பெட்டி படுக்கைகளைக் கைகளில் எடுத்துக் கொண்டாள்.

 

ஒரு வினாடிக்குப் பின் தலையைக் குலுக்கியபடி அவளது பெட்டிகளை வாங்கக் கைகளை நீட்ட… பிடிவாதமாக மறுத்தாள்.

 

“நீ என் பாதுகாப்பில் இருக்க… பெட்டியை என் கையில் கூடத் தர  மறுக்குறது நல்லதில்லை அஞ்சலி”

 

“என்னோட விஷயங்களை நானே பார்த்துக்கும் முடிவோடதான் உங்க கூட வரேன்.

எனக்கு பாதுகாப்பு அது இதுன்னு பேத்திட்டு இருக்காதிங்க. இந்த பொருட்களை உரியவங்ககிட்ட ஒப்படைக்க சொல்லி  எங்கப்பா சொல்லிருக்கார். அதனால் மட்டுமே உங்க கூட வர்றேன்.

எந்த நிமிஷம் இதில் இருக்கும் தகவல்களை உங்க மேலதிகாரிகள்கிட்ட ஒப்படைக்கிறேனோ அதிலிருந்து உங்க பக்கம் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டேன்”

 

அவனுக்கு சொல்கிறாளா இல்லை அவளது மனதுக்கே சொல்லிக் கொள்கிறாளா தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் வெயிட் ஹார்ஸ் உணவு விடுதிக்கு வரும்போது ஆர்டர் எடுக்க வரும் தன்னைக் கண்டு பளிச்சென மின்னும் அந்தக் கண்களை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா என்று அவளுக்குத்  தெரியவில்லை.

 

அவளது கோபம் புரிந்து அவனும் மௌனமாகவே வந்தான். விமான நிலையத்தை இருவரும் வந்தடைந்தார்கள். அவர்களைக் கண்டதும் அங்கிருந்த ஒரு நபர் இருவருக்குமான விமான பயணச்சீட்டுகளைக் கொண்டு வந்து தந்தார்.

பேச்சே இல்லாது சோதனைகளை முடித்துவிட்டு கேட்டுக்கு வந்தார்கள். ஹைதிராபாத் செல்லும் விமானத்தில் ஏறும் பயணிகளுக்கான அழைப்பு வரவும் அவளை அழைத்தான்.

 

“நம்ம டெல்லி போகலயா…”

 

“இல்லை, என் பாஸ் ஹைதிராபாத் வர சொல்லிருக்கார்”

 

“எங்கப்பா டெல்லி தானே போக சொன்னார்”

 

“உங்கப்பா டெல்லி போக சொன்னாரா இல்லை உரிய ஆட்கள் கிட்ட ஆதாரத்தை ஒப்படைக்க சொன்னாரா?”

 

சற்று யோசித்தாள். தந்தை நூறு சதவிகிதம் நம்ப சொல்லி அடித்து சொன்னது ஜெய்யை மட்டும்தான். அதனால் அவன் சொல்வதையே கேட்பது என்ற முடிவுக்கு வந்தாள்.

 

இருவரும் பிஸினெஸ் கிளாசில் அருகருகே அமர்ந்து கொண்டார்கள். மிகவும் வெறுக்கும், பார்க்கவே கூசும் ஒருவனுடன் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் பெரிய சித்திரவதையாகத் தோன்றியது அஞ்சலிக்கு.

 

விமானம் கிளம்பி சிறிது நேரத்துக்குப் பின்பு தந்த பழரசங்களையும், உணவினையும் மறுத்துவிட்டு காலைக் குறுக்கி, கிட்டத்தட்ட சுருண்டு படுத்துக் கொண்டாள்.  அவளது மேனியை மற்றுமொரு போர்வை கதகதப்பாக அணைத்தது. கண்களைத் திறந்து பார்த்தவளின் அருகே ஜெய்.  சினம் பொங்க இரண்டு போர்வைகளையும் தள்ளி விட்டாள்.

 

“இன்னமும் ஏன் இப்படி வேஷம் போடுறிங்க ஜெய். அதுதான் உங்களுக்கு வேணும்னு கேட்டதைத் தந்தாச்சே. ஓவர் ஆக்ட் பண்ணாதிங்க. எரிச்சலா வருது”

 

“அஞ்சலி… என்னை… “ திணறியவன்

“பொய்மை கூட  வாய்மையின்  இடத்தில் சில காரணங்களுக்காக இருக்கலாம்னு பெரியவங்களே சொல்லிருக்காங்க ”

 

“டோண்ட் டாக் டு மீ ஜெய். ஐ ஹேட் யூ… உங்களை விட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளிப் போக விரும்புறேன்” சொல்லி முடிப்பதற்குள் அவளது குரலில் நடுக்கம்.

 

“இப்ப உன் பாதுகாப்பு காரணமா நான் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கு. அது  தொந்தரவா இருந்தால் வேற யாராவது ஏற்பாடு பண்ணிட்டு நான் தள்ளி நிக்க முயற்சி செய்றேன்” உணர்ச்சி துடைத்த குரலில் சொல்லி முடித்தான்.

 

அதன் பின்னர் விமானம் ஹைதிராபாதில் தரை இறங்கும் வரை இருவருக்கும் முள்ளின் மேல் நிற்பதைப் போலவே இருந்தது. பல புதிய பயங்கரமான அனுபவங்களை அஞ்சலிக்கும் ஜெய்ஷங்கருக்கும்  பரிசளிக்கக் காத்துக்கொண்டிருந்த  ஹைதரின் நகரம் அவர்களை அன்புடன் வரவேற்றது.

4 Comments »

  1. Ohhhh my God… So thrilled. Aduthu Enna… IPO Dan first epi la irundu padichen.. fantastic!
    Thanks a lot for this thriller. Adutha epi seekrama podunga please…

  2. Acho pavam jai evlo than thanguvan. Anjali yum pavam than ivlo periya shock ematram yarum ilatha verumai pch remba pavam.ini enna nadaka kathuruko.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: