Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 01

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 01

வணக்கம் தோழமைகளே!

கவிதைகள் மூலம் இதுநாள் வரை உங்களை மகிழ்வித்த ஹஷாஸ்ரீ இப்போது “மனதை மாற்றிவிட்டாய்” என்ற தொடர் கதை மூலம் உங்களைச் சந்திக்க வந்துள்ளார். 

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

1 – மனதை மாற்றிவிட்டாய்

விடிய விடிய தன் அன்பை மழையாக கொட்டித் தீர்த்து காலை தென்றல் வெண்சாமரமாய் வீச மெல்ல அனைத்து உயிர்களையும் கதிரவன் தட்டி எழுப்ப மெதுவாக வந்துகொண்டிருந்த வேளையில் அதிகாலை பூத்த அழகிய மலராய் புன்னகை தவழும் முகத்தோடு கோவிலுக்கு புறப்பட்டாள் திவ்யஸ்ரீ. “திவி மா கொஞ்சம் காப்பியாவது குடிச்சிட்டு போடா” என்ற அவள் தாயிடம் “இல்லமா நான் கோவிலுக்கு போற வரைக்கும் எதும் சாப்பிடமாட்டேன்ல pls போயிட்டு வந்து சாப்டுக்கறேன்மா” என செல்லம் கொஞ்சி அவள் தாய் தலையசைத்ததும் மகிழ்வுடன் வேகமாக வெளியேறினாள்.

அன்பே உருவான அவளது தாய் எப்போதும் போல தான் பெற்ற செல்வத்தை நினைத்து பூரிப்பும், பெருமையும் ஒரு சேர அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள் . “என்ன மகா என் பொண்ண சைட் அடிக்கிறியா?, அதுக்கு வேற ஒருத்தன் வருவான் நீ என்ன தானே சைட் அடிக்கணும்” என்று கேட்டு தன்னை வம்புக்கிழுக்கும் தன் கணவரை ஓரமாக முறைத்தாள் மகாலக்ஷ்மி .

“உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே கெடையாதா.., கல்யாண வயசுல பொண்ண வெச்சிட்டு இன்னும் இப்படியா பேசுவீங்க?” என்றாள் .

“அதேதான் நானும் சொல்றேன் என் பொண்ண நீயே இப்படி பாத்து கண்ணு வெச்சுடுவ போல, என் மருமகனுக்கும் கொஞ்சம் மிச்சம் வெய் மா and உனக்கு தான் நானிருக்கேனே ” என மீண்டும் அவரது முறைப்பிற்கு ஆளானார் மகாலிங்கம்.

என்ன தான் வெளியில் முறைத்தாலும் உள்ளுக்குள் அவரது இந்த சீண்டலை மகாவினாலும் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தன்னில் துளியளவும் குறையாத அன்போடு வாழும் ஜீவனிடம் எப்படித்தான் கோபம் கொள்வது என நினைத்து அவரை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தார் மகாலக்ஷ்மி. இருப்பினும் கணவரிடம் “விளையாடாதீங்க நான் அவளுக்காக எத நினைச்சி கவலைப்படறேனு உங்களுக்கு தெரியாதா ?” என வினவியபோதே எதுக்காக என் பொண்ண நினச்சு கவலைப்படணும் என ஆஜரானார் மகாலிங்கத்தின் அண்ணன் ராஜலிங்கம் உடன் அவரது தர்மபத்தினியும், சாந்தசொரூபனியுமான ராஜலக்ஷ்மி.

 

“அப்படி கேளுங்க அண்ணா?” என்றவரிடம் தன் பிரதான முறைப்பையும் தனது அக்கா மாமாவிடம் இன்முகத்தையும் காட்டினாள் மகாலக்ஷ்மி ..”எல்லாம் அவ கல்யாணத்த பத்திதான் அக்கா” என்றாள் . இது அவர்கள் அனைவருக்கும் புரிந்திருப்பினும் அதற்கு கவலைப்படுவது அவசியமற்றது என ராஜலிங்கம் கூறினார்.

“எதுக்குமா கவலை? நல்ல அருமையான, லக்ஷணமான பொண்ணு, பி. ஈ முடிச்சிட்டா வேலைக்கும் போறா , தங்கமான குணம், தைரியமான பொண்ணும் கூட , குறையே சொல்லமுடியாது .அவள பாக்கிற எல்லாருக்கும் எப்படியும் பிடிக்கும் என்று அவர் கூறியதை கேட்டும் இன்னும் தெளியாமல் இருப்பதை உணர்ந்த ராஜலக்ஷ்மி அவரிடம் வந்து “மகா அவ நம்ம எல்லாருக்குமே செல்ல பொண்ணு தான். நேத்து ஜோசியரை பாத்து கேட்டிட்டு வந்திட்டோம் இன்னும் ஒரு 8 மாசம் கழிச்சு அவளுக்கு வரன் பாக்க ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டாங்க போதுமா ?” என வினவியவரை அன்புடன் அணைத்துக்கொண்டார் மகாலக்ஷ்மி.

ராஜலக்ஷ்மி அறியாததா… திவியின் கல்யாணத்தில் தடை ஏற்படும், திருமணம் தள்ளிப்போகும், கண்டம் காத்திருக்கிருக்கிறது என்று கேட்டதில் இருந்து அவருக்கும் அதே கவலை தான்..இருப்பினும் தன் உடன்பிறவா தங்கையான மகா வை தேற்றும் பொறுப்பு அவரிடம் உள்ளதே..இந்த செய்தி அனைவருக்கும் தெரிந்திருப்பினும் திவியின் படிப்பு , வேலை , குணம் எதும் குறைவின்றி நிறைவையே கண்டதால் காலப்போக்கில் அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.. ஆனால் அந்த இரு தாய்மார்களின் உள்ளம் அவ்வாறு அமைதி பெறவில்லை .

2 வருடம் கழித்து தன் மொத்த குடும்பத்தையும் முக்கியமாக தன் தாய் சந்திரமதியை காணும் ஆவலில் பாரினிலிருந்து டிக்கெட் கிடைத்ததும் கிளம்பிவிட்டான் ஆதி. surprise ஆக இருக்கட்டுமென இன்று வருகிறேன் என்பதை எவரிடமும் சொல்லவில்லை . இந்த வாரத்தில் வருவதாக மட்டும் முன்கூட்டியே கூறியிருந்தான் . குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் பிடித்த அனைத்தையும் வாங்கி வந்தாலும் அம்மாவுக்கு பிடித்த எதை செய்து அவர்களை மகிழ்விக்கலாம் என யோசித்தவனுக்கு அம்மா போனில் பேசும்போது வீட்டின் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில் பற்றி கூறியது நினைவில் வந்தது. அவர்களுக்கு பூஜை கோவில் என்றால் மிகவும் இஷ்டம் என்பது தெரியும். அங்கு சென்று விட்டு ப்ரசாதத்தோடு சென்றால் அம்மா மகிழ்வார்கள் என்பது நிச்சயம் என்று கோவிலுக்கு வண்டியை விரட்டினான். அய்யர் “அர்ச்சனைக்கு பேர் நட்சத்திரம் சொல்லுங்கோ?” என வினவ அம்மனை வழிபட்டு நின்றவனுக்கு சுத்தமாக ஞாபகம் வரவில்லை .

ஆனால் “பேரு ஆதித்யா நட்சத்திரம் அனுஷம்” என எதிர் திசையில் இருந்து குரல் வந்தது .

ஆதி, யாரிவள் என் பெயருக்கு இவள் எதற்கு அர்ச்சனை செய்கிறாள்? என நினைத்து கொண்டிருக்கும் போதே அவள் இவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். ஒரு நிமிடம் தன்னை மறந்தாலும் “இவள் என்ன லூசா எதுக்கு இப்போ சிரிக்கிறா?” என எண்ணினான் .

அவளிடம் பூஜை தட்டை தந்த அய்யர் “2 பேரும் சேமமா இருங்கோ என்றதோடு நல்லா அம்சமான ஜோடிப்பொருத்தம்” என்றார். அவள் திடுக்கிட்டு விளிக்கும் முன் அய்யர் சென்றுவிட்டார் . அவனிடம் திரும்பினால் அவனோ இவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அவள் தந்த பூஜை தட்டை வாங்கிவிட்டு விருட்டென்று கிளம்பிவிட்டான்.”இவன் என்ன லூசா எதுக்கு இப்போ இப்படி மொறைக்கிறான்?” என எண்ணினான்.

பின்பு அவன் கார் எடுக்கவந்தபோது அவள் அங்கேயே நின்றாள்.

இவனுக்கு அருகில் இருந்த பூ விற்பவள் இவனை அழைத்து “தம்பி கொஞ்சம் பூ வாங்கிக்கோ” என்றாள் . இவனோ “இல்லைங்க நான் சாமி கும்பிட்டேன் பூஜை முடிஞ்சது ” என்றான் . அதற்கு அவள் “அது சரி பூஜைக்கு மட்டும் தான் பூ வாங்குவீகளோ ? உன் பொண்டாட்டிக்கு வாங்கித்தரலாம்ல” என்றாள் .

என்ன உளறல் என்று பின்னாடி திரும்பி பார்த்தால் அந்த பெண் இவன் கார் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள்.

அவளை என்ன செய்தால் தகும் என மனதுக்குள் அர்ச்சனை செய்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இருப்பினும் நடந்தவற்றை எண்ணியவனுக்கு அவன் நண்பன் ராஜேஷிடம் இருந்து call வந்தது. வீட்டில் சென்று பேசிக்கொள்ளலாம் என எண்ணி அதை cut செய்தவனுக்கு அந்தநேரத்தில் தேவையில்லாமல் ராஜேஷ் அளித்த அறிவுரை ஞாபகம் வந்தது .

“மச்சான், நீ படிச்சது பாய்ஸ் school அதுவும் வளந்தது hostel ல, college – ug ம் boys college, foreign la mba பண்ண so அங்க girls எல்லாருமே கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே மாடர்ன் அண்ட் தாராளம் அதனால உனக்கு பிடிக்கல ..அங்க பொண்ணுங்க காலச்சரே வேற. இங்க அப்படி இல்ல and உனக்கு நம்ம ஊர் பொண்ணுங்கள பத்தி தெரில.. அவங்க ஆள பாத்ததும் எடைபோட்ருவாங்க . ரொம்ப ஷார்ப் மச்சான் . ஒண்ண ஆசைப்பட்டு அடையணும்னு நினைச்சிட்டா கண்டிப்பா அதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவாங்கடா.. உன் பணத்துக்காக, உன் கரெக்ட் பண்ண எவ்ளோ வேணாலும் நடிப்பாங்க. பேசி பழகி நம்மள தெளிவா ஏமாத்தி நம்ம குடும்பத்த விட்டு பிரிச்சிடுவாங்க .. காதலிக்கறேன்னு சொல்லி ஊர் சுத்திட்டு கடைசில வீட்ல ஒத்துக்கல என்ன மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டு போறவங்கள இருந்து வீட்ல பாத்து பாத்து கல்யாணம் பண்ணி வெச்ச பெரியவங்க ஒரு வார்த்தை சொன்னாங்கன்னு அது பெருசுபடுத்தி நம்மளையே நம்ம குடும்பத்துக்கு எதிரிஆக்கிறவங்க , பெத்த குழந்தைய வெச்சு பணம் சம்பாதிக்கறவங்க வரைக்கும் எல்லா பொண்ணுங்களும் இருக்காங்க . போர்க்களத்துக்கே போகாதவன எப்படி மச்சான் வீரன்னு சொல்றது ? சோ இங்க நீ உஷாரா யாருகிட்டேயும் அப்படி ஏமாறமா இருந்து காட்டுடா. அப்போ ஒத்துக்கறோம் உன்ன யாரும் ஏமாத்தவேமுடியாதுன்னு.” என்று தன் காதல் மனைவி தன்னை விட்டு சென்ற கோபத்தில் இருந்த ராஜேஷிடம், “என்னை போல எல்லாத்தையும் ஜாலியா எடுத்துகோடா and இந்த லவ் எல்லாம் இல்லாம நான் எவ்வளோ சந்தோசமா இருக்கேன் பாரு” என்ற ஆதி செய்த அறிவுரை அவனை இவ்வாறு பேசவைத்தது . ஆனால் அப்போது தெரியவில்லை அவனது இந்த அறிவுரையும் நண்பனின் வாழ்வை மாற்றப்போவது பற்றி.

இதை யோசித்துக்கொண்டே அப்படி என்றால் இவளும் அந்தமாறி fraud இல்ல ஏமாத்தற பொண்ணா இருப்பாளோ..இல்ல பாத்தா அப்படி கெட்ட பொண்ணா தெரிலையே ..என நினைத்து கொண்டே

சிறிது தூரம் சென்றபின் அவள் scooty இல் இவன் காருக்கு பின்னாலையே வந்துகொண்டிருந்ததை பாத்தான் .”இவ இப்போ எதுக்கு நம்மள பாலோ பண்ணறா” என எண்ணியவன் தான் சில நொடி முன்பு அவளை பற்றி என்னையதை மறந்து அவள் கண்டிப்பாக தப்பானவள் தான் என முடிவெடுத்து அவளை சரமாரியாக மனதுக்குள் திட்டிவிட்டு வண்டியை புயலென கிளப்பி வீடு வந்து சேர்ந்தான் .

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 01”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

KSM by Rosei Kajan – 3KSM by Rosei Kajan – 3

அன்பு வாசகர்களே ! இதோ அடுத்த அத்தியாயம். எனது சைட்டில் எழுதும் துஜிசஜீ யின் ‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே!’ கதை நிறைவடைந்து விட்டது. லிங்க் இங்கே நூலகத்தில் கொடுத்துள்ளேன் .    [googleapps domain=”drive” dir=”file/d/1aFGNdWUh8RoWn-pXp57ag9b28Sooll7O/preview” query=”” width=”640″ height=”480″

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72

72 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கல்யாண வேளையில் மூழ்கிவிட யாரும் சோபியை கவனிக்கவில்லை. திவி தாத்தா பாட்டியிடம் மட்டும் ஆதியிடம் கூறிய விஷயங்களை கூறிவிட்டு “என்ன தப்பு பன்னிருந்தாலும் நம்ம பேத்தி தான்னு நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு தான் உங்ககிட்ட