Skip to content
Advertisements

யாரோ இவன் என் காதலன் – 13

அத்தியாயம் – 13

 

தனது கையிலிருந்த பென் டிரைவை வெறித்தாள் அஞ்சலி.

 

“இதுக்கான பாஸ்வேர்ட் உனக்கு மட்டும்தான் தெரியும் அஞ்சலி” என்றான் ஜெய்.

 

“எனக்கா…”

 

“ஆமாம்… “

 

“சுத்த பேத்தல்… இந்த பென் டிரைவை இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லை. எதை வச்சு இந்த பாஸ்வர்ட் எனக்கு மட்டும்தான் தெரியும்னு முடிவுக்கு வந்திங்க”

 

“ஏன்னா இதுக்கு சொந்தக்காரர் மிஸ்டர். தனசேகர். உங்க அப்பா… இது உனக்காக உன் அப்பாவால் அனுப்பப் பட்டது”

 

“சத்தியமா புரியல” தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

 

“இதைப் போட்டுப் பார்த்தால் உனக்குப் புரியும். இதில் என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாது. அது எவ்வளவு முக்கியமானதுன்னும்  எனக்குத் தெரியாது. இந்த இடத்தில் நான் ஒரு டெலிவரி ஆள் மட்டுமே. மத்தபடி இது உனக்கு உடமையானது. இதைத் திறக்கும் வித்தை  உனக்குத் தான் தெரியும்”

 

“உங்கப்பாவைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா உனக்கு பாஸ்வர்ட் தெரியணும்… நல்லா யோசி… உனக்கும் உங்கப்பாவுக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு வார்த்தையாவோ இல்லை எண்ணோவோ  இருக்க சான்ஸ் இருக்கு… முயற்சி பண்ணு … நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்றபடி அங்கிருந்து அகன்றான்.

புதிராக அவனைப் பார்த்த வண்ணம் அந்த பென் டிரைவை தனது லாப்டாப்பில் போட்டாள். அதிலிருந்த நூற்றுக்கணக்கான பைல்களைக் கண்டு தலையே சுற்ற ஆரம்பித்தது. அதில் பலவற்றில் பாஸ்வார்ட் தேவைப் பட்டது. இதில் எந்த பைல் அவளுக்குத் தேவையானது. எல்லாவற்றையும் பார்வையால் அலசினாள்.

 

ஒரு பைல் ‘5கம்’ என்றிருக்க அவளது கண்கள் வியப்பில் விரிந்தன. அஞ்சுகம் என்பது அவளது பாட்டியின் பெயர். அவர் பிறந்த அதே தேதியில் அவளும் பிறந்தாளாம் வருடமும் மாதமும் மட்டும் வேறு அதனாலேயே அவளுக்கு அஞ்சலி என்று பெயர் என்று தனசேகர் அவளிடம் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லிச் சொல்லி அந்தப் பாட்டியின் பிறந்த நாளும் கூட அவளுக்கு மனப்பாடம்.

 

அந்தக் காலத்து பாட்டிகளுக்கு பிறந்த நாள் என்னவென்றே தெரியாது. அவர்கள் வீட்டில் வேலை செய்த பாட்டியும் அப்படித்தான். ஒரு வேளை பிறந்தநாளைப் பற்றித் தெரிந்திருந்தால் கூட ஆங்கில மாதம் தேதி தெரியுமா… தமிழ் மாதத்தை அல்லவா சொல்வார்கள். தந்தை ஏன் அஞ்சுகம் பாட்டியின் பிறந்தநாள் என்று அழுத்தி சொன்னார். ஒருவேளை அந்த எண் தான் கடவுச் சொல்லோ?

தோன்றிய மறு வினாடி வேக வேகமாய் அதில் அந்தப் பாட்டியின் பிறந்தநாள் என்று தந்தை சொல்லிய எண்ணைப் போட்டதும் பைல் திறந்தது. அது ஒரு வீடியோ. விடியோவைப் போட்டு சில வினாடிகள் டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன். ஆனால் அந்த விடியோவில் ஏதோ செய்தி இருப்பதாகப் பட்டதால் பொறுமையாகப் பார்த்தாள். ஆரம்பித்து சரியாக ஒரு நிமிடத்திற்குப் பின் அந்த விடியோ மாறி ஒரு நபர் அதில் தோன்றினார். அது அவளது தந்தை தனசேகர்.

“அஞ்சலி இந்த விடியோவுக்கான கடவுச் சொல் ‘வேடிக்கை விளையாட்டு’. நான் டிக்டாவில் சொன்ன மாதிரி இந்தப் பாஸ்வர்ட் சொல்லுவது உன் அப்பாவேதான்.

 

நான் ‘வேடிக்கை விளையாட்டு’ன்னு இதுக்குக் கடவுச் சொல்லை வைத்திருந்தாலும். நான் சொல்லப் போவது வேடிக்கையோ விளையாட்டோ இல்லை. மிக மிக முக்கியமான விஷயம்.

 

முதலில் ஒரு தகப்பனா சில விஷயங்கள்… எப்படி இருக்க… அப்பா என்ற இந்த வாக்கிங் ஸ்டிக் இல்லாம நடை பழகிட்டியா… நீ எங்க இருந்தாலும் என் மனசு உன்னை சுத்தித்தான் இருக்கும்.

 

இந்த விடியோவை நீ பார்க்கும் நிலைமை வந்திருக்குன்னா நான் இல்லைன்னு அர்த்தம். ஒண்ணு நான் உன் பக்கத்தில் இருக்க மாட்டேன். இல்லை உயிரோட இருக்க மாட்டேன். இது ரெண்டுமே உனக்கு நல்லதில்லை. ஆனாலும் இது எந்த நேரத்திலும் எனக்கு நடக்கலாம்னு நான் எதிர்பார்த்துட்டு இருந்ததுதான்.

 

சரி விஷயத்துக்கு வருவோம். அஞ்சலி, உன்கிட்ட என்னோட வேலையைப் பத்திப் பொய் சொன்னதுக்கு மன்னிச்சுக்கோ. நான் மட்டுமில்லை என் துறையில் வேலை பார்க்குறவங்க பெரும்பாலான பேர் தங்களது உண்மையான வேலையைப் பற்றி  வெளியே சொன்னது கிடையாது.

 

அது என்னன்னு உனக்குக் குழப்பம் வரலாம். இது பத்தி விரிவா சொல்ல  எனக்கு நேரமில்லை, அதுக்கு இது சமயமும் இல்லை. ஆனால் ஒண்ணு மட்டும் உன்கிட்ட சொல்லனும்னு ஆசைப்படுறேன். உன் அப்பா கெட்டவன் இல்லை. நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாரா இருக்கவன்னு உன் மனசில் நல்லா பதியவச்சுக்கோ.

 

நம்ம அரசாங்கத்தின் உளவு பாதுகாப்புத் துறையில்தான் நான் வேலை பார்க்கிறேன். தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தீய சக்திகளை களை எடுக்குறதுதான் எங்க முழு நேர வேலை. இது மட்டுமில்லாம போதைப் பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மாதிரி சில வேலைகளுக்கும் அரசாங்கத்தின் மற்ற பிரிவு ஆட்களுடன் இணைத்து பணி புரிவோம். ஏன்னா ஒரு தவறு நடக்கும் இடம்தான் மத்த பெரிய தவறுகளுக்கான நெட்வொர்க் உருவாகும் களம். ஒண்ணைப் பிடிச்சா மற்ற குற்றங்கள் எல்லாம் வரிசையா பொல பொலன்னு கொட்டும்.

 

சில வருடங்களுக்கு முன்னாடி இந்திய அளவில் போதை மருந்து கடத்தல் செய்யும் மிகப் பெரிய கூட்டத்தைப் பிடிக்க முயற்சி நடந்தது. அப்பத்தான் அவங்க நாட்டுக்கே தீங்கு செய்யக் கூடிய நாசகார திட்டத்தில் இறங்கி இருப்பதை ஸ்மெல் பண்ணோம். ஆனால என்ன ஏதுன்னு எங்க யாருக்கும் தெரியாது. எங்க டீமில் அதைக் கண்டுபிடிக்கும் வேலையில் முழு மூச்சா இறங்கினோம்.

 

அது மிகப் பெரிய நெட்வொர்க் என்பதால் பலரும் இணைந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. அதில் சேகரிச்ச முக்கியமான ஆவணங்கள் பல என்கிட்டே இருந்தது. இந்த நிமிஷம் வரைக்கும் அதைப் பிடுங்க பல முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. இதில் என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டா உனக்கு யார் பாதுகாப்பு? இந்த ஒரு கவலைதான் என் மனசை அரிக்குது. அதனாலதான் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முயற்சி பண்றேன். கிஷோர் உனக்கு பாதுகாப்பா இருப்பான்னு நினைக்கிறேன்.

 

ஆனால் அதுக்கு நடுவில் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டா  உன்னைப் பாதுகாக்க  என் துறையில் சிலரைப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கேன். அதில் ஒருத்தன் தான் ஜெய்ஷங்கர். ஐபிஎஸ் எக்ஸாம் பாஸ் பண்ணவன். தன் திறமையால் வெகு சீக்கிரம் உளவுத் துறைக்கு வந்துட்டான்.

 

என் டீமில் சில வருடங்கள் வேலை செஞ்சிருக்கான். இந்த ஆபரேஷனில் மிகப் பெரிய பங்கு அவனுக்குண்டு. அவனுக்குத் தந்த அசைன்மெண்ட்ஸ் அத்தனையும் கச்சிதமா முடிப்பான்… வெரி  ப்ரில்லியன்ட் பாய். அவனை நீ சந்தேகப்பட்டால் மட்டும் இந்த பென் டிரைவை உன்கிட்ட காமிக்க சொல்லியிருந்தேன். நீ என் பொண்ணாச்சே. சந்தேகப் பட்டுட்ட அதுதான் இப்ப இந்த வீடியோவைப்  பார்த்துகிட்டிருக்க.

 

கவனமா கேட்டுக்கோ… இப்ப உனக்கு நிறைய ஆபத்து சுத்திகிட்டு இருக்கும். இந்த சமயத்தில் நீ நூறு சதவிகிதம் முழுமையா நம்ப வேண்டிய ஆள் ஜெய் மட்டுமே.

 

நீ சில க்ளூக்களை நம்ம வீட்டு டிக்டாபோனின் உதவியால் புக் செல்ப்பில் கண்டு பிடிக்கலாம்… ஆனால் அது முழுமையானதில்லை. அது தவிர நானும் நீயும் கடைசியா ட்ரெக்கிங் போனப்ப எடுத்த புகைப்பட ஆல்பம் அதிலும் உன்னைத் தனியா நிக்க வச்சுக் கடைசியா நான் எடுத்த போட்டோவையும் எடுத்துட்டு ஜெய் கூட எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு. போட்டோ முக்கியம் அஞ்சலி. போட்டோ இல்லாம நம்பர்களை வச்சு ஒண்ணும் செய்ய முடியாது. அது முக்கியமானது என்பதால்தான் உன்னோட ஆல்பத்தில் மறைச்சு வச்சேன். அதை நீ உன் பாதுகாப்பில் வச்சிருப்பேன்னு தெரியும்.

 

இந்த ஆதாரங்கள் எல்லாத்தையும் டெல்லில மணிவண்ணன்னு ஒருத்தர் இருப்பார் அவர்கிட்ட கொடுத்துடு. அவர் என்னோட பாஸ். அவர் மத்தது எல்லாத்தையும் பார்த்துப்பார்.

 

இது அத்தனையும் எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் செய். ஆதாரங்கள் கவனம் அஞ்சலி… மணிவண்ணனைத் தவிர வேற யாரு கைலயும் அது சிக்கிடக் கூடாது.

 

நானே இப்ப என் கையால் அதை அவருக்கு அனுப்பிருக்கலாமே ஏன் தலையை சுத்தி மூக்கைத் தொடணும்னு நினைக்கலாம். உன்கிட்ட பேசுற இந்த நிமிஷம் வரை நான் அடைய நினைக்கும் இந்த விஷயங்கள் இன்னும் முழுமையா முடியல. அதுவரை என்னோட ரகசிய குறிப்புகள் மாறிட்டே இருக்கும். உனக்கு இடம் மட்டுமே சொல்லிருக்கேன். அதை எப்படி உபயோகிக்கணும் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். அதை அவங்க பார்த்துப்பாங்க.

 

உன் கிட்ட நிறைய பேசணும், பகிர்ந்துக்கணும்னு ஆசை இருக்கு. ஆனால் காலம் கடந்துடுச்சு. உன்னோட பாதுகாப்பு எனக்கு முக்கியம் அஞ்சலி. அதுனாலதான் உன்னை அறியாமலேயே உனக்கு செக்யூரிட்டிகள் பலரை சுத்தி போட்டிருப்பேன்.

ஐ லவ் யூ… டேக் கேர் அஞ்சும்மா”

 

அவ்வளவுதான் அவர் பேசியது.

 

‘டாடி’ என்றபடி விசும்பினாள். விடியோ நின்ற பின்பு கூட மறுமுறை அதைப் போட்டுப் பார்த்தாள். அதன் பின் இன்னொரு தரமும்.

 

கடைசி வரை தான் பெற்ற மகளிடமே தனது வேலையைப் பற்றி மறைத்திருக்கிறார். இப்போது இவரைத் திட்ட வேண்டுமா இல்லை நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ததை எண்ணிப் பூரிக்க வேண்டுமா… அவளுக்குத் தெரியவில்லை.

 

“பார்த்துட்டியா” என்றபடி அறையினுள் நுழைந்தான் ஜெய்.

 

“ம்…” வேகமாய் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

“இது உனக்கு ரொம்ப தேவையா இருக்கும்” என்றபடி ஆவி பறக்கும் காப்பிக் கோப்பையினை நீட்டினான்.

 

மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். அவளுக்கு இந்த இரவில் அடுக்கடுக்காய் தொடரும் பிரேக்கிங் நியூஸ்களைத் தாங்கும் சக்தி மிகவும் தேவையாய் இருந்தது.

“ஒவ்வொரு முறையும் இந்த விஷயங்களைப் பத்தி உன்கிட்ட சொல்லிடணும்னு நினைப்பேன். ஆனால் சந்தர்ப்பம் அமையாம போயிருச்சு”

 

சோபாவில் அமர்ந்தவண்ணம் காப்பிக் கோப்பையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி பருகிக் கொண்டிருந்தவள் அப்படியே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு வலி, முகத்தில் ஏமாற்றம்…

 

“ஆக… இது எல்லாம் உன்னோட வேலைக்காகத்தான் நடந்தது. நான் உனக்கு ஜஸ்ட் ஒரு அசைன்மெண்ட்தான் இல்ல”

 

அவளிடம் அவன் கூறிய தகவல்கள் எல்லாம் பொய். அந்தப் பொய்யில் ஒரு கோட்டை கட்டி உட்காந்திருக்கிறாள். அவளால் ஏமாற்றத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

 

அவன் பதில் பேசவில்லை.

 

“உன் வேலை என்ன. எதுக்காக தினமும் என் ஹோட்டலுக்கு  சாப்பிட வந்த”

 

“நான் உன் பாதுகாப்புக்காக அசைன் செய்யப்பட்டவன். தினமும் ராத்திரி உன்னைப் பார்த்துட்டு நீ நலம்னு ரிபோர்ட் அனுப்பனும்”

 

“அன்னைக்கு ராத்திரி வெயிட் ஹார்ஸ் கிட்சன் வரை லைட்டை நிறுத்திட்டு வந்தியே… அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு”

 

“எப்படியோ எதிரிகள் பார்வை படாம ஒரு வருஷம் தள்ளிட்டோம். அன்னைக்கு ராத்திரி நீ இருக்குறது பத்தி க்ளூ கிடைச்சு வொயிட்  ஹார்ஸ்க்கு உன்னைத் தேடி எதிரிகள் வர்றாங்கன்னு தகவல் கிடைச்சது. உன்னைக் கடத்துறது அவங்க நோக்கமா இருக்கலாம்.

 

உன்னைத் தண்ணி ஜக்கில் கொண்டு வர சொன்னபோது அந்தத் தகவல்தான் வந்தது. அங்கிருந்து கிளம்புற அளவுக்கு நமக்கு நேரமில்லை.

அந்த சமயத்தில் உன்னை அவங்க கண்ணில் படாம காப்பாத்துறதுதான் மிகப் பெரிய காரியமா என் கண் முன்னாடி தெரிஞ்சது. அதுனாலதான் எல்லா விளக்கையும் நிறுத்திட்டு ஹோட்டல் மூடிட்ட மாதிரி ஒரு தோற்றத்தை உண்டாக்கினேன்.

 

ஆனால் அவங்க இறங்கி சுத்திப் பார்த்தாங்க. நீயும் நானும் இருந்த சமையல் அறை பக்கமும் வர சத்தம் கேட்டது. அவங்க கண்ணுல நீ படாம இருக்கனும்னுதான் உன்னை அவங்க கண்ணிலிருந்து மறைக்கத்தான் ரெண்டு பேரும் மறைய இடம் இல்ல… வெளிச்சம் படாத சுவற்றுக்குப் பின்னாடி… அங்க… நான்… நீ… கிஸ்…”

 

“ஸ்டாப் இட்…”

 

“நான் உன்கூட இதைப் பத்தி பேசணும் அஞ்சலி… “

 

“நீ இப்ப எதுக்காக இங்க இருக்க… அதைப் பத்தி மட்டும் சொல்லு”

 

“உன் அப்பா சொல்லிருக்க பொருட்கள்… அது என்னான்னு முழுமையா எனக்கும் தெரியாது. எல்லாத்தையும் எடுத்துட்டு என் மேலதிகாரிங்க கிட்ட ஒப்படைக்கணும். அதுதான் என்னோட முதல் கடமை”

 

கடமை… வெறும் கடமைதான். இவனது பாழாப்போன கடமையை உண்மைன்னு நம்பி நான் ஒரு ஆகாசக் கோட்டையைக் கட்டிட்டு இருக்கேன் பாரு என்னை சொல்லணும்.

ஆகாசக் கோட்டையெல்லாம் தகர்ந்து சடுதியில் தனது வாழ்க்கையே காற்று போன பலூனாக, சின்னஞ்சிறுசாக சுருங்கி விட்டதைப் போல உணர்ந்தாள்.

 

அவளது சிறிய பெங்களுர் பிளாட், அவளது விடுதி. அங்கு அவளை அனுப்பிவிட்டால்  போதும். இவற்றுடனேயே அவளது மிச்ச வாழ்நாளைக் கழித்து விடுவாள்.

Advertisements

10 Comments »

  1. Appa jai ketavanila anjali oda appavum nalavar than very happy. Pavam anju we can understand her situation.epo purinjupa jaia.
    Anthe villain kooda yaru.super a kondu poreenga mathura story a

  2. Super sis but pothum Anjali ku ithuku mela ala vaikathinga….avala Jai Yoda serthu vainga ka….. Ava apparently illama irukurathu pathatha pothum avaluku anba matum Jai ya koduka solunga Jai ya….plz plz

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: