Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 68

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 68

உனக்கென நான் 68

இருவரும் காரின் அருகில் செல்ல சந்துரு சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தான். “அது எப்புடி அப்ப கோடாங்கி இப்ப எருமையா ஹா ஹா” அவள் வெட்கத்தில் காரினுள் ஏறி அமர்ந்தாள்.

“என்னப்பா சட்டுனு உள்ள உட்காந்துட்ட இது கார்ப்பா எருமைமாடு இல்ல” என சிரிக்க முறைத்தாள். சிறிது கோவம் அடைந்துவிட்டாள் என்பதுதான் உண்மை அந்த மாலைநேர சூரியன் அவள் கன்னத்தில் பட்டு அதில் இருந்த கோபத்தை சிவப்பாக பிரதிபலித்தது.

“என்ன அரிசி வேற எதுவும் கதை இருந்தா சொல்லிடுமா இன்னைக்கு நான் சிரிக்குற மூட்ல இருக்கேன்”

“வண்டிய எடுங்க இல்லைனா நான் இங்கயே இருந்துகிறேன்” என கோபமாக பேசினாள். அந்த கோபத்தை ரசித்தவன் சிரிப்பை அடக்கிகொண்டு காரை எடுக்க அது ரோட்டில் ஓடியது. ஆனாலும் சந்துரு ஜன்னல் புறமாக திரும்பிகொண்டு சிரிக்க அரிசி கோவத்தில் ஓரக்கண்ணால் பார்த்தாள்.

ஆத்திரத்தில் நகங்களை கடித்துகொண்டிருந்தாள் அவளுக்கு ஒருவித பயமும் தொற்றிகொண்டது.

வீட்டை அடைய “ஆமா எப்புடி அந்த குலுக்கைகுல்ல விழுந்த?” என சிரித்தான்.

“ம்ம்” என கூறிவிட்டு முறைத்துகொண்டு வீட்டின் கதவினை திறந்தாள் பின் சமையலறைக்குள் புகுந்து பூஸ்ட் தயார் செய்தாள். அந்த டம்ளர் வெளியில் தின்னையில் அம்ர்ந்திருக்கும் சந்துருக்கு கிடைத்தவிதம் இருக்கிறதே அப்படி ஒரு சத்தம். அந்த இரும்பும் கல்லும் மோதிகொண்டன.

“அரிசி பாத்து டம்ளருக்கு வலிக்க போகுது” இன்னும் அவன் உதட்டில் புன்னை இருந்த்து. முறைத்துகொண்டு தனது அறைக்குள் சென்றாள். அவனும் பின்னாலயே வந்தான். அவள் கட்டிலிலிருந்து எழுந்துகொண்டு அந்த மேஜையில் அமர்ந்தாள். “ம்ம் மேடம் செம்ம் கோவத்துல இருக்காங்க” என கூறிவிட்டு அந்தசாக்லட்டை எடுத்துஅந்த டேபிளில் வைத்தான்.

அதை தட்டிவிட்டாள். “ஓஓ அப்ப சாக்லட் சாப்புடுறது இல்ல” அன்பரசியின் கழுத்தின் பின் தன் தாடையை வைத்தான். “நான் சமைக்குறேன்” என அவள் எழுந்துகொண்டாள்.

அவளை கட்டிபிடித்தான் “விடுங்க” என கூற “சரி அப்புறம் சமைக்கலாம் நீ உட்காரு உன்ன நான் டிஸ்ட்ரப் பன்னல” என அவளை மேஜையில் அமரவைத்துவிட்ட கட்டிலில் விழுந்து தன கைபேசியை நோன்டினான்.

அவள் அவன் கூறியதை பார்த்து சிரித்தாள் மௌனமாக. சந்துரு அவளை பார்த்து “தூங்கபோறியா! நான் வேனா சாப்பாடு வாங்கிட்டு வாரேன் நீ சமைக்க வேனாம்” என்றான்.

அவள் மௌனமாக சிரித்தவள் எழுந்துகொண்டு அவனை முறைத்துகொண்டே சென்றாள். “என்ன அரிசி எங்க போற”

“டயர்டா இருக்கு குளிக்க போறேன்”

“நானும் வரவா” என அவன் கேட்க முறைத்துவிட்டு கிளம்பினாள். சிறிது நேரத்தில் அவள் அந்த சுடிதாரை அணிந்துகொண்டு வந்தாள். “வாவ் இது நான்  உன் பர்த்டேக்கு எடுத்து குடுத்தது சூப்பர் அரிசி” என அவன் கூற முறைத்துவிட்டு கண்ணாடியின் முன் நின்று தலைசீவினாள்.

“என்ன அரிசி பேசமாட்டியா”

“ஆமா”

சோகமாக அவன் முகத்தை கண்ணாடி வழியே பார்க்க சிரிப்பு வந்தது இவளுக்கு. அவள் சிரிப்பதை பார்த்துவிட்டான் சந்துரு. ஐடியா என தன்னிடமிருந்த தலையனையை தூக்கி அவள் மீது எரிந்தான்.

“அரிசி எடுத்துகுடேன்” என கெஞ்சினான்.

எடுத்து அவனருகில் முறைத்துகொண்டே வைத்தாள். “ம்ம் நன்றிங்க டீச்சர்” என அவன் கூற அதில் அவன் அடுத்து நீச்சல் கத்துகுடுங்க என கேட்க போகிறான் என தெரியும் அதனால் சிரித்தாள்.

அதற்குள் மறுபடியும் தலையனையை அவள்மீது எறிய அவளும் தூக்கி எரிந்தாள். அதை எடுத்து அவளை அடித்தான். “என்னடி அடிக்குற”

“போடா நீ மட்டும் அடிக்குற”  என அவனது கையை பிடித்துகொண்டு சண்டை போட்டாள்.

அவளை இழுத்து கட்டிலில் தள்ளிவிட்ட தலையானையால் அடித்தான். “இப்ப அடிடி பாப்போம்” என அவளது கையை பிடித்துகொள்ள அவள் முயன்று பார்த்தாள் ஆனால் முடியவில்லை.

அவள் மூச்சுவாங்குவதை பார்த்த சந்துரு அவளது கண்ணில் கரைந்தான். அவளோ கீழே இருக்க அவளுது துள்ளல் குறைந்தது. அரிசிக்கான பலம் இல்லை. அவளுது சூடான மூச்சினை ரசித்தான். அவளது இதழ்களை பார்த்தான் பூக்களில் தேனெடுக்க காத்திருக்கம் வண்டாக. அவளுக்கு மேலும் மூச்சு வாங்க அதை முழுவதுமாக தன்னுள் வாங்க நெருங்கினான்.

“அம்மாகிட்ட சொல்லிடுவேன்” ரகசியமாக கூறினாள்.

“சொல்லிகோடி” என இதழில் இதழ் பதித்தான் அவளது கைகள் அவனிடமிருந்து விடைபெற தன்னவனை இறுக்கமாக கட்டிகொண்டாள். நீண்டநாள் காதலை காமம் சிறிது துளைத்து பார்த்தது.

மின்னல் அழகியை பிடிக்க

இடியரசன் விரட்டுகிறான்

இந்த ஓட்டம் மழை என்று அந்த கால

மொழி

அதன் சான்றாக இப்பூவுடல் மின்னலை

காதலெனும் மழையினால் சிறை

பிடித்த காதலன் அந்த வேலையில்

காமம் எனும் குளிர் சேர்ந்து இருவரை

நனைக்க போர்வை துனைதேடினர்

பூமிக்கு வந்த மழையாக

அன்பு முழுவதையும் அன்பிடம்

செலுத்தினான். மங்கையோ

முகம் சிவக்க தன்னவன் அன்பில் கரைந்தாள்.

தன் உயிருடலை சமர்பித்தாள் அவனுக்கென

அந்த அமிர்த நேரம் அவளுள் ஓர் உறுதி

உனக்கென நான் இருப்பேனடா

என்னாளும் என

காதலெனும் கோட்டையை இந்தபுது

வெள்ளம் தகர்க்க நீர் வடிந்தபின்

கோட்டையின் பளிங்கு பவளமாக

காதல்மீதமிருக்க தன்னவளை

கட்டிகொண்டிருந்தான் மேனிக்கோர்

தடையில்லாமல் இருவருள்ளும் அந்த ஓசை

உனக்கென நான்.

“ரெட்ட புள்ளையா பெத்துகுடுடி அப்பதான் இவங்கள சமாளிக்கமுடியும்” என அவளை பின்னாலிருந்த அழைத்துகொண்டு அவளது கன்னத்தில் கன்னம் வைத்தான். பின் முத்தமிட்டான்.

“சரிங்க” என அவள் வெட்கத்தால் கண்களை மூட “அது என்ன சரிங்க”

“சரிடா பெத்து தாரேன்” என்றாள் சிறிது துணிவாக

“சரி என்ன பேர் வைக்கலாம்” என அவன் யோசிக்க “அதுக்குள்ள என்னங்க அவசரம்” என சினுங்கினாள்.

“ஆமால்ல இன்னும டைம் இருக்குள்ள சரி வா” எனமீண்டும் கட்டிபிடித்து தன் அன்பு மழையை பொழிந்தான் அந்த அன்பிடம்.இப்பிடயாக அவர்கள் இரவு கழிந்தது.

“ஏங்க நீங்க சண்டை போட்டதே இல்லையா”

“ம்ம் போட்டுருக்கேன்”

“யாருகூட”

“என் பொன்னாட்டிகூட இப்பதான சண்டை போட்டேன் அவகூட எனக்கு சரியா சண்டை போட்டாள்ள அப்புறம் நீச்சலும் சொல்லிகுடுத்தா” என அவன் கூற அவனது கன்னதை கடித்தவள் “அது இல்லடா நிஜமா சண்டை போட்டது இல்லையா”

“ஏன் கேக்குற”

“இல்ல சும்மா கேட்டேன்”

“நான் போட்டுருக்கேன்டி மன்டைலாம் உடைச்சுருக்கேன்”

“எப்பங்க”

“சுவேதா வரவும் கேட்டுக்கோ ஐயா இப்ப லவ் மூட்ல இருக்கேன் நோ ஆக்சன்” என தன்னவளை கட்டிகொண்டு உறங்கினான். ஆம் சுவேதாவிற்கு டிரக் சப்ளை செய்து அவளை அனுபவிக்க ஒருவன் நினைத்தபோது சுகு எப்படி சும்மா விடுவான். சந்துரு பாலாஜி சுகு என மூவரும் அந்த பூபதியை அடித்த அடியில் கல்லூரியிலிருந்து சஸ்பன்ட் செய்த சம்பவம் அது. அடுத்து அவன் இவர்கள் வழியில் வந்தது இல்லை. இப்போது ஃபோனில் சுவேதாவை மிரட்டி கொண்டிருக்கிறான். அது சந்துருக்கு தெரியவரும்போது அவனுக்கு முடிவு இருக்கும். இருந்தாலும் தன் டெடி அரிசியை மகிழ்ச்சியாக கட்டி பிடித்து உறங்கிபோனான்

காலையில் அசந்துதூங்கியவனை தண்ணீர் ஊற்றி எழுப்ப அவளை கட்டிபிடித்துகொண்டு தூக்கிசென்று மீண்டும் குளிக்க வைத்தான். “டேய் ஓல பட்டாசு நான் காலைலதான்டா குளிச்சேன்”

“ம்ம் என்ன குளுப்பாட்டுனேல அதான் இந்த தன்டனை” என அரிசியுடன் வம்பிழுத்தான்.

“போடா டிரஸ்லாம் நனைஞ்சிடுச்சு” என சன்டையிட்டு ஒரு வழியாக ஜான்சியை பார்க்க கிளம்பிவந்தனர். சந்துரு மத்த பார்மாலிட்டிகளை பார்த்தான்.

“என்ன அன்பு முகத்துல இன்னைக்கு ஒரே சந்தோஷம் பாப்பா ரெடியா” என ஜான்சி கூற வெட்கத்துடன் அந்த பெட்டின் நூலை கையால் பிரித்தாள். “ம்ம் சீக்கிரம்மா” என ஜானசிகூற இருவரும் பேச துவங்கினர்.

இப்படியே நாட்கள் ஓட ஜான்சி வீட்டிற்கு அழைத்துவரபட்டால். பங்களாவில் தங்கியவலுக்கு போஸின் இந்த வீடு சிறியதாக தெரிந்தாலும் அன்பின் கூரையில் அழகாக இருந்தது.

ஒரு மாத்ததில் ஜான்சியால் நன்றாக பேச முடந்தது. பின் சுவேதாவிடமிருந்து ஃபோன் சுகுதான் பேசினான். “டேய் அவளுக்கு மூளைல இருந்த கட்டி கறைஞ்சிடுச்சுடா இட்ஸ் மெடிக்கல் மிராக்கில்ங்குறான் இங்க இருக்குற டாக்டர். ஆமாடா அவ சந்தோஷமா இருக்கா அதுதான் காரணம் இப்ப லேசர் ட்ரீட்மன்ட் மட்டம் பன்னிருக்காங்க அடுத்த வாரம் ஊருக்கு வாரோம்” என சுகு கூற சந்துரு அந்த ஃபோனை வாங்கி மாறிமாறி பேசி டவரை நோகடித்தனர் அன்பு தொல்லையால்.

அந்த நாளும் வரவே சுவேதா வந்தாள் அவளது கையால் கம்பெனி திறக்கபட்டது வீட்டன் கடைகுட்டு அவள்தான் அல்லவா அதனால்தான் இந்த பாசம். அந்த புதுவீட்டற்கும் வந்தனர் அனைவருக்கும் அறை ஒதுக்கபட்டிருந்தது.

ஆனால் கம்பெனி ஓபன் பன்னும்போது அந்தசம்பவத்தை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆம் அங்கு கிடந்த சேற்றில் கால்வைத்த ஜான்சி தவறி சரிய கோபி அவரை தாங்கிபிடித்தார். “பாத்துபோங்க மேடம” என்றான்

அவள் ஒரு ஆண்மகனின் கைபட்டதால் வெட்கபட்டாள் ஆனால்கூட்டத்தில் காட்டிகொள்ளாமல் இயல்பாக சிரித்துவிட்டு நகர்ந்தாள். “ஆமா நீங்க” என அவர் கேட்க “ஜான்சி சந்துருவோட அக்கா”

“ஓஓ நீங்கதான் அந்த ஜான்சியா” என கூறிவிட்டு அங்கிருந்த நகர்ந்தார். ஏன்அவர் அப்படி கேட்டார் என்ற குழப்பம் ஜான்சிக்கு ஆனால் அவர் அப்படி கேட்டது பிடித்திருந்தது.

“எல்லாருக்கும் சாக்லட் குடுங்கப்பா” என சந்துரு “அண்ணா வாங்க” என சேகரை அழைக்க “நீ போயி குடு வளர்மதி” என தன் காதலியை அனுப்பினான்.

ஜான்சி அவனை பார்த்துவிட்டு “நீ நடத்துடா” என்றாள். “உன்னதாங்கி பிடச்ச ரோமியோ யாருக்கா” என சேகர் கேட்க “சும்மா இருடா” என நாணத்துடன் கூற “யாருப்பா ரோமியோ” என சந்துரு வந்தான்.

“அந்த மாமாதான்” என சேகர் கூறிவிட்டு ஓட அந்த இடத்தில் நின்று ஃபோன் பேசிகொண்டிருந்த்து கோபிகிருஷ்ணன்தான். “ம்ம் சரிக்கா” என சந்துரு ஜான்சியை பார்த்து கூற “சும்மா இருடா தம்பி” என அமைதியாக சென்றார்.

அனைத்து குடும்பமும் ஓரே வீட்டில் தங்க மஞ்சுளா தன் டுவின்ஸ் வான்டுகளை வளர்ப்பதில் பிஸி. இப்படியே நாட்கள் சென்றது. கோபியும் இந்த புது மில்லிலேயே இருந்தார்.

கம்பெனிகள் இனைந்துவிட்டகாரணத்தினால் சந்துருதான் அனைத்து கம்பெனியும் பார்த்து கொள்கிறான். ஆனால் இந்த ஜான்சி “கம்பெனிய சுத்திபாத்துட்டு வந்துடுறேன் தம்பி” என கூறிவிட்டு புது மில்லிற்கு அடிக்கடி செல்வாள். அங்கு என்ன பார்க்க போகிறாளோ. கோபியை இல்லை என நான் சொல்லமாட்டேன்.

ஆம் ஒரு நல்ல நாளில் ஜான்சி கோபி திருமனம் முடிந்தது. பின்ன என்ன “கோபி அண்ணா அந்த ஃபைல்” என சந்துரு பழக்க தோஷத்தில் கூற “அண்ணா இல்லடா மாமான்னு கூப்பிடு” என கோபிகூற சந்துருக்கு புரிந்துவிட்டது.

“கோபி மாமா ஜான்சி அக்காவ உங்களுக்கு பிடிச்சிருக்கா” என சந்துரு கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதிலில் இந்த திருமனம் முடந்தது. ஆனால் இந்த சேகர் அன்னாதான் பிரட்சனை.

இல்லை இல்லை வளர்மதிதான் பிரட்சனை கம்ப்யூட்டர் பாடத்தில் பெயில் அதனால் தன்னவன் கம்ப்யூட்டர் ஹேக்கர் ஆனால் தான் பெயில் என மனதில் வருத்தம். தான் அதில் பாஸ் ஆகிட்டுதான் கல்யானம் பன்னுவேன் என சேகருக்கு முடிவாக கூறிவிட்டாள். அதானால் சேகர் சந்துருவிடம் தினமும் கேட்பது “தம்பி காசு குடுத்தாவது அவள பாஸ்பன்ன வைடா”

“ஐய்யோ நேர்மையா எழுதட்டும் அண்ணா வெயிட் பன்னுங்க” என சந்துரு எஸ்கேப்

“ம்ஹூம் நேர்மைநா எழுதுனா ஔவ்வையார மாறுன அப்புறம்தான் கல்யானம் பன்னனும் வேனாம் அடுத்த ஜென்மத்துல பன்னிகுறேன்” என  சேகர்கூற அனைவரும் சிரிப்பர். “நான் பாஸ் ஆகுறேன்” என சபதம் விட்டு செல்வாள் வளர்மதி.

வருடங்கள் இப்படியே மகிழ்ச்சியாக ஓட மஞ்சுளா மதுரையில் தன் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டாள் தன்னவன் பாலாஜியுடன் இரு குழந்தைகள் அவளுக்கு.இந்த செட்டின் மூத்த வாரிசுகள்.

அப்பறம் நம்ம சுவேதாவுக்கும் சுகுவுக்கு ஒரு அழகான ஆண்குழந்தைங்க அதுக்கு என்ன பேர் வச்சுருப்பாங்க கெஸ்பன்னுங்க. ம்ம் கரெக்ட் அந்த வான்டு பேரு அன்பரசன். கொஞ்சம் இல்ல ரொம்ப வாலு அரிசியவே தூக்கி சாப்புட்டுருவான். எல்லாம் அரிசியின் டிரயினிங் மற்றும் அவள் கொடுக்கும் செல்லம். “பார்வதி அம்மா நீங்க அரிசி அன்னிய எப்புடிதான் சமாளிச்சீங்களோ அப்பா என்ன வாலு இவன்” என புலம்புவாள் சுவேதா.

“என் கஷ்டம் இப்ப தெரியுதாமா! அவனுக்கு அன்புனு பேரு வைக்காதனு சொன்னா கேக்குறியா” என பார்வதி சிரித்துகொண்டே செல்வார்.

நம்ம அரிசிகுடும்பத்த பாக்கனுமே அமாங்க அவளுக்கு ஒரு பொண்ணு அவள மாதிரி அழகா இருப்பா என்ன அவ கொஞ்சம் அமைதிங்க சந்துரு மாதிரி. அதனாலதான் அவள சுவேதாவோட மகனுக்கு இப்போவே பேசிட்டாங்க. ஸோ யாரும் பொண்ணோ மாப்பிள்ளையோ கேக்ககூடாது. அவள் தாத்தா செல்லம் அவளை போஸும் சன்முகம் வயலிற்கு அழைத்து சென்றுவிடவர். அவள் கழுத்தில் அந்த கேமிரா ஏன் வந்தது அப்புடின்னு தெரியல ஒருவேல. நீங்க யோசிக்குறது கரேக்ட்தான் அவ பேரு ஜெனிபர். போட்டோ எடுக்க கிளம்பிடுவா சும்மா கேமிரா வழிய பாப்பா போட்டோலாம் எடுக்க தெரியாதுங்க போக போக பழகிடுவா. உங்க வீட்டு விசேசத்துக்கு போட்டோ எடுக்கனும்னா புக்பன்னிகோங்கப்பா.

அப்புறம் போஸுக்கு இருக்குற நோய சன்முகம் சரக்குபோட்டு சந்துருகிட்ட உளறிட்டாரு. அன்னைக்குதான் அவ்வளவு ஆத்திரதபட்டான். இன்றுவரை சிகிச்சைதான். அவரு வாழ்கை சந்துருவின் அதட்டலுக்கு பயந்து நீடித்துள்ளது. மற்ற விசயத்தில் மாமாவுக்கு பயந்தாலும் இந்த உடல்நலன் விசயத்தில் விட்டு கொடுப்பதில்லை.

சரி இவங்க என்ன பன்றாங்க அட நம்ம  கம்யூட்டர் புழுக்கள்ப்பா யாருன்னு பாக்குறீங்களா சுகுவும் சேகரும்தான். “மாப்ள இந்த புரோக்ராம கிராக் பன்னுங்க பாக்கலாம்” என சுகு புதிதாக கஷ்டபட்டு இயக்கிய புரோக்ராமை காட்ட சேகர் அதை பார்த்துவிட்டு சிரிக்க வளர்மதி வந்துவிடுவாள். “மாமா இது என்ன தப்பு இருக்கு ஒரே கருப்பா இருக்க” என தன் கனினியை காட்டுவாள்.

சேகர் அவள் தலையில்  கொட்ட தலையை கையால் தேய்த்துவிட்டு “என்ன மாமா ஏன்” என சினுங்க “#include<conio.h> போடுறதுக்கு பதிலா #include<coin.h> னு போட்டு வச்சிருக்க நமக்கு கல்யானம் இந்த ஜென்மத்துல நடக்காதுடி” என சிரித்துவிட்டு “மாமா முடிஞ்சு என்ன சப்பையா எழுதிருக்கீங்க இதையா கவர்மென்டுக்கு அனுப்ப போறீங்க” என சுகுவின் புரோக்ராமை தட்டிவிட்டு எழுந்து செல்ல சந்துரு நுழைந்தான்.

“என்ன தம்பி டல்லா இருக்க”

“இல்ல சேகர் அன்னா நேத்தே பணம் அனுபிருக்கனும் ஆனா பேங்க் லீவு இன்னைக்கும் லீவு அதான் பஞ்சு ஸ்டாக் கம்மியா இருக்கு சப்ளையர் சத்தம் போடுவான்” என சந்துருகூற

“கொஞ்சம் உங்க ஃபோன குடுங்க” என வாங்கியவன் பாஸ்வேர்டை மதிகப்பதில்லை.  சிறிது நேரம்குடைந்தவன் “இந்தாடா தம்பி அனுப்பியாச்சு”

“சேகர் அண்ணா பேஙக்லீவுன்னா இன்னைக்கு”

“டேய் நான் போனவாரமே அனுப்பிட்டேன்”

“போன வாரமா?”

“அட நீவேற ஏன்டா இந்தியால பேங்க் செக்கியூரிட்டி சிஸ்டம் ரொம்ப மட்டம்டா” என நடந்துசெல்வான்.

“ஜான்சி அம்மா அத்த கத சொல்லுங்க” என குழந்தைகளை ஜான்சியை சூழ்ந்துகொள்வர். மூத்த வாரிசு என்றாள் இந்த அன்பு தொல்லை இருக்கதான் செய்யும். ஜான்சியும் அனைவரையும் மடியில் தூக்கிவைத்துகொண்டு கதை சொல்லவாள். அவர்கள் அடுத்து அடுத்து என கேட்க ஜான்சியால்நீண்ட நேரம் பேசமுடியாதல்லவா அவள் உடல்நிலை அப்படி. இருந்தாலும் செருமிகொண்டு கண்கள் கலங்க கதை சொல்லுவாள். அதை பார்த்து வேதனைபடுவான் சந்துரு. தன்னவனின் கண்ணை பார்த்தே புரிந்துகொள்ளும் அன்பு “ஏய் வாண்டுகளா ஜான்சி அம்மாவ கத்த வைக்ககூடாதுனு சொன்னேன்ல வெளிய போயி விளையாடுங்க” என அதட்டுவாள்.

இன்றும் அப்படி நடக்கவில்லை “குட்டிகளா ஜான்சி அம்மாவ டிஸ்ட்ரப் பன்னாதீங்க வெளிய பொம்மை கார் எல்லாம் இருக்கு போயி விளையாடுங்க” என கூற அனைவரும் ஐ ஜாலி என ஓடினர்.

மேலே சென்றான் ரூமில் அன்பு இல்லை. தேடினான். “அரிசி அரிசி எங்க போன” வீட்டிற்கு வந்து தன்னவள்முகம் காணாமல் அன்றைய நாள் முழுமையடையாது அவனுக்கு.

அவள் ஆசையாக வாங்கிகொடுத்த அந்த சுடிதாரை போட்டிருந்தாள். அழகான மாலைபொழுதில் அந்த வீட்டின் மாடியில் ஆம் அவள் வானிலிருந்துவந்திறங்கிய தேவதைதான் சந்துருவின் தேவதை. அவ்வளவு அழகாக முதல்நாள் கேக்குடன் வந்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய நியாபகம் அவனுக்கு கூடவே அந்த சிறுவயது அன்பும் வந்து சென்றாள்.

 

“என்ன அரிசி இங்க வந்து நிக்குற”

தன்னவனை திரும்ப பார்க்க அவளது கண்ணில் கண்ணீர் “ஏய் ஏன்டி அழற”

“இல்லைங்க எனக்கு எவ்வளவு சொந்தங்க இருக்காங்க அவங்களுக்காக வாழுறது தனி சுகம்தான் அதான் ஆனந்த கண்ணீர்ங்க”

“என்னடி நீ” என அவளை அனைத்துகொண்டான.

“இல்லைங்க நீங்க எனக்காக எவ்வளவு பன்னிருக்கீங்க இந்த வீடு பாசமான அன்னிங்க எனக்கு வாழ்கை இன்னைக்கோட முடிஞ்சா போதும்ங்க” என கண்ணீர்விட்டாள்.

“யேய் லூசு என்ன பேச்சு இது சந்தோஷமா வாழனும்டி நீ அதுக்குதான் நான் இருக்கேன்” என சந்துருகூற அவனது மார்பிரல் சாய்ந்து அவனது இதயதுடிப்பை கேட்டாள். உனக்கென நான் இருக்கேன்டா என் ஓலை பட்டாசு. என சிரித்தாள். “அம்மா சிரிங்க” என குட்டி ஜெனி தன் குட்டி கேமிராவில் இருவரையும் சேர்த்து தன் முதல் கிளுக் கிளுகினாள்.

இந்த குடும்பம் என்றும் நீடூடி வாழ அந்த குடம்பத்தில் ஒருவராக உங்களை ஆசிர்வதிக்க கேட்டுகொள்ளும் உங்கள் அன்புதோழி

-ஜெனிபர்@அனுபாரதி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 4கபாடபுரம் – 4

4. கடற்கரைப் புன்னைத் தோட்டம்   இளையபாண்டியருடைய தேர் திடீரென்று அங்கு நின்றது எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. முன்னால் சென்ற தேர்கள் வெகுதூரம் போய்விட்டன. பின்னால் வர வேண்டிய தேர்கள் வரமுடியாமல் இளையபாண்டியருடைய தேர், கோட்டத்தின் வாயிலிலேயே வழிமறித்து நின்று

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 02சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 02

இதயம் தழுவும் உறவே – 01 காலையின் பரபரப்பு மெல்ல குறைந்ததும் சற்று ஓய்ந்து அமர்ந்தார் மீனாட்சி அம்மா. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் அவருடைய மகன்களுக்கு விடுமுறை தினமாக இருந்தது. மீனாட்சி அம்மாவுக்கு இரண்டு மகன்கள்.

ராணி மங்கம்மாள் – 14ராணி மங்கம்மாள் – 14

14. இடமாற்ற எண்ணம்  அப்போது சின்ன முத்தம்மாளின் இதயத்தில் தாய்ப் பாசத்துக்கும் விரக்திக்கும் இடையே ஒரு போராட்டம் மூண்டது. துணிவதும், தயங்குவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்த மனம் துணிந்து முடிவெடுத்திருந்தாலும் மறுபடியும் பாசமும், பிரியமும், அஞ்ஞானமும் குழம்பின. சிரமப்பட்டு வலிந்து முயன்று இதயத்தைக்