Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67

உனக்கென நான் 67

சுவேதாவை கட்டாயமாக ஆபரேஷன் செய்துவிட்டு வருமாறு சுகுவுடன் அனுப்பிவைத்தான் சந்துரு. அவள் அழுதுகொண்டே சென்றது சந்துருக்கு வருத்தமாக இருந்தாலும் அபரேஷ்ன் முடித்து தங்களுடன் நீண்ட நாள் தங்கையாக வாழ்வால் என்ற தைரியத்துடன் தன் கண்ணீரை மறைத்துகொண்ட் அனுப்பிவைத்தான்.

“அன்னி நான் உயிரோட திரும்பி வந்தா என் உயிர் உங்களுக்குதான் அப்புடி இல்லைனா என் போர உங்களுக்கு பிறக்குற பிள்ளைக்கு வைக்குறீங்களா” என சுவேதா கெஞ்ச அரிசியோ “அன்னி வாய மூடுங்க நீங்க நல்லா வாழுவீங்க அப்புறம் மாமியாருக்கும் மறுமகளுக்கும் ஒரே பேர் சுவேதான்னு இருந்தா நல்லாவா இருக்கும் உங்க பையன் கஷ்டபடமாட்டானா கூப்பிடுறதுக்கு அடியேய் சுவேதா அப்புடின்னா கூப்பிடுவான்” என அரிசி கூற “அதுக்கு நான் திரும்ப வரனுமே” என்றாள் பறிதாபமாக.

அரிசி அவளை கட்டியனைத்து வழியனுப்பிவிட்டு வரும் வழியெல்லாம் அழுதுகொண்டே வந்தாள். அவளை சமாதானம் செய்ய சந்துரு பட்ட பாடு சொல்லிதீராது.

இந்த இரண்டுமாதமாக அனைவரும் போஸின் வீட்டிலும் பொரிய வீட்டிலும் தங்கியிருக்க சந்துரு புது கம்பெனியின் கட்டிட வேலைகளையும் புது வீட்டின் கட்டிட வேலைகளையும் கவனித்துகொண்டான்.

சன்முகமும் போஸும் வயலிற்கு சென்று தன் பழைய நினைவுகளை புரட்டிகொண்டே பாத்திகட்டுதல் பயிருக்கு தண்ணீர் விடுதல் என விவசாயத்தில் இறங்கினர். அடிக்கடி அருகிலிருக்கும் கன்மாயில் மீன் பிடித்து சாப்பிடுவதும் உண்டு சில நேரம் வேட்டையும் நடந்தது. அது அந்த கால இன்பத்தை திருப்பி பார்க்கும் இன்பத்தைவிட அதை வாழ குடுத்து வைத்தவர்கள் இவர்கள்.

ஆனால் சேகருக்கு இருக்கும் ஓரே பொறுப்பு வளர்மதியை சைட் அடிப்பதுதான். வளர்மதியும் அவனும் அந்த குளகரையில் அமர்ந்து பேசிகொண்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு பதினேழு வயது பொண்ணுக்கு இவ்வளவு ஆகாது.

பார்வதி மற்றம் நந்தினி மற்றும் அரிசி ஜான்சிக்கு துனையாக மருத்துவமனையில் தங்கியிருந்து குழந்தையாக பார்த்துகொண்டனர். கூட ஆசிக் தங்கியிருந்தான். எதாவது எமர்ஜன்சி என்றாள் ஓடுவதற்கு ஒருவன் வேண்டும் என ஆசிக்கை விட்டு சென்றான் சந்துரு. எல்லாம் தன்னவள் “ஆசிக் நல்லவங்க” என கூறிய அந்த வார்த்தைகாக முழுவதுமாக நம்பினான்.

“ஜான்சி இதுல இருக்குறத ஸ்ரைன் பன்னாம வாசிங்க” என ஒர அட்டையை நீட்டினார். அதை வாங்கியவள் வாசித்தாள். கண்களில் கண்ணீர் வந்த்து.

“எங்கல்லாம் வலி இருக்கு உங்களுக்கு” என டாக்டர் கேட்க

அவள் சில இடங்களை தொட்டு காட்டினாள். “ம்ம் ஓகே இன்னும் கொஞ்சநாள்ள நீங்க நல்லா பேசிடலாம் அடுத்த வாரம் டிஸ்ஜார்ச் பன்னிடலாமா”

“சந்துரு தம்பிகிட்ட கேளுங்க டாக்டர்” என ஜான்சி கூறிவிட்டாள். அவள் அதிக நேரம் பேசினாள் கண்களில் தண்ணீர் வந்துவிடும். “சரிம்மா நான் சந்துருகிட்ட சொல்லிடுறேன்” என டாக்டர் கிளம்ப “அன்னி இந்தாங்க சாப்புடுங்க” என தயிர் சாத்ததை பிசைந்து எடுத்துவந்தாள் அரிசி

வாய் வழியாக சாப்பாடு அதிகம் செல்லாத்ததால் அதை ஊசிவாயிலாக அனுப்பினர் கேட்டால் குளுகோஸாம். அதனால் ஜான்சியால் கையை தூக்கமுடியவில்லை.

“இருங்க அன்னி நான் ஊட்டி விடுறேன்” என அன்பு ஊட்டிவிட அப்போது கோவிலுக்கு சென்று வந்த பார்வதியும் நந்தினியும் கண்ணாடி வழியாக இவர்களது பாசமலர் படத்தை பார்க்க சிறிது நேரம் வெளியே காத்திருதிருக்க உள்ளே ஜான்சிக்கு ஊட்டிவிட்டாள் அரிசி.

“ம்ம் போதும்மா”

“நல்லா சாப்புடுங்க அன்னி அப்புறம் அவரு வநதா திட்டுவாரு” என சந்துருவை கேடயமாக்கினாள்.

“அது இருக்கட்டும் எதுனா விசேசம் இருக்கா”

“என்ன புரியல அன்னி” என சாத்தை வாயில் ஊட்ட அதை விழுங்கிய ஜான்சி “புதுவரவு இருக்கா” என அரிசியின் வயிற்றில் கைவைக்க “இல்ல அன்னி அப்புடில்லாம் எதுவம் இல்ல” என முகத்தில் சிறிது சோகம் தெரிந்தது.

“ஏன்மா?” என கேட்க “அவரு வேலைவிசயமா” என இழுத்தாள்.

“இது சரிபட்டு வராது எனக்கு சீக்கிரமா ஒரு மறுமகனோ இல்ல மருமகளோ வேனுமே சரி நான் சந்துருகிட்ட கேட்டுகிறேன்” என கூறி அரிசியை பார்க்க அவள் வெட்கத்துடன் ஜான்சியின் உதட்டை துடைத்துவிட்டு பின் எழுந்து சென்று தட்டை கழுவினாள்.

“என்னமா ஒரே பாசமா பொழியுறீங்க! அவ ஊட்டிலாம் விடுறா”

“இல்லமா அன்னி கைய தூக்கமுடியல அதான்” என அரிசி இழுக்க

“ஏன்டி நான் உடம்பு சரியால்லாம படுத்தப்போ எனக்கு ஊட்டிவிட்டியாடி! எல்லாம் அவங்க சொந்தத்துகூடதான் ஒட்டுது” என சிரித்தார் பார்வதி.

“ம்ம் அக்கா அடுத்தவாரம் டிஸ்சார்ஜ் பன்றாங்களாம் ஓகேவா” என சந்துரு உள்ளே நுழைந்தான். “நீ பாத்து பன்னுப்பா” என்றாள் ஜான்சி.

“அப்புறம் அக்கா அடுத்த மாசம் நாம இந்த கம்பெனி இங்க ஸ்டார்ட் பன்னலாம் கூடவே புதுவீட்டுக்கு எல்லாரும் குடியேறிறலாம். அப்புறம் ஒரு குட் நியூஸ் நம்ம ரெண்டு கம்பெனியும சேந்த்தால சேர் பயங்கரமா கூடிருச்சு கோபி இப்பதான் ஃபோன் பன்னாரு நம்ம கம்பெனி திறக்க அவரும் வர்ரேன்னு சொல்லிருக்காரு. ஓ சாரி உங்களுக்கு கோபி தெரியாதுல்ல” என பேசிகொண்டிருக்கும்போது “சார் கொஞ்சம் தள்ளுங்க ஊசி போடனும்” என ஜெனி உள்ளேவந்த ஜான்சியின் கையில் ஊசி ஏற்ற அரிசி கண்களை மூடிகொண்டாள். அந்த கோலத்தை தன் கேமிராவால் படம்பிடித்து வால்பேப்பராக வைத்தான். “ம்ம் ஊசி போட்டாச்சு கண்ண திறக்கலாம் அரிசி” என்றதும் திறந்தாள்.

“ஆமா சார் ஆசிக் இல்லையா” இது ஜெனி

“சிஸ்டர் அத நாங்க உங்க்கிட்ட கேக்கனும் ஆசிக் எங்க”

“இங்கதான் வர்ரேன்னு சொன்னாரு வரலையா” என சோகமாக செல்ல ஆசிக் வந்தான். அவனை பார்த்து ஒரு வெட்க சிரிப்புசிந்திவிட்டு நகர்ந்தாள் ஜெனி.

“என்ன ஆசிக் அண்ணா அந்த ஜெனிக்கு இது தெரிஞ்சது அவ்வளவுதான் பேயா வந்து கொல்லுவா” என அரிசி சிரிக்க “இல்ல அன்பு சும்மா” என சமாளித்தான்.

“ஆசிக் என்ன மன்னிச்சிடுப்பா ஜெனிய “ என குரல் வரவில்லை காத்துதான் வந்தது.”ஐயோ ஜான்சி நீங்க தெரியாமதான பன்னீங்க விடுங்க அவளே உங்கள மன்னிச்சுட்டா நான் யாரு நீங்க வந்துதுல இருந்த நூறுதடவ கேட்டுடீங்க என்கிட்ட இதுக்கு மேல இப்புடி பேசுனா நான் உங்கள பாக்க வரமாட்டேன் பாத்துகோங்க” என ஆசிக் கூற ஜான்சி அமைதியானாள்.

“என்ன பன்றீங்க எல்லாரும் “ என சன்முகமும் போஸும் வந்தனர். “

“சரிப்பா சேகர்னு ஒருத்தன உங்க்கூட அனுப்பி வச்சேன்ல அவன எங்க” என சந்துரு கேட்க “அவன் அந்த வளர்மதி வீட்டுலதான்ப்பா இருக்கான் கேட்டா கம்யூட்டர் கிளாஸ் எடுக்குறானாம் அவனுக்கு இப்ப பத்து ஸ்டூடன்ட் வேற இருக்காங்க அதுதான் கொடுமை அதுக்கு பீஸ் அந்த வளர்மடி பொண்ணு கலைக்ட் பன்னுது”

“அப்ப அந்த கன்மாய் கரையில அவங்களுக்கு என்ன வேலை”

“அதுவந்து” என சன்முகம் இழுக்க போஸ் முறைத்தார். “என்ன மாப்ள சொல்றீங்க”

“அட மாமா அதுங்க லவ் பன்னுதுங்க”

“ஆமா மாமா சந்துரு கல்யானத்துலையே பாத்து பழகிடுச்சுங்க” என ஜான்சி சிரமபட்டுகூற “சரி விடுங்க என் தம்பி பொண்ணுதான் கேட்டு பாக்குறேன் நான் கேட்டு இல்லைனா சொல்லபோறான்” என போஸ் கேட்க அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி.

“அம்மா நீயும் ஒரு கல்யானம் பன்னிகோமா” என நந்தினி கூற சோகமானள். “சித்தி எனக்கு வயசாகிடுச்சு அதுவுமில்லாம இந்த நிலையில என் மனசு கல்யானத்துக்கு தயாரா இல்ல நான் சொந்தங்க்கூட வாழனும் அவ்வளவுதான் ஒரே ஆசை.” என இடம் சோகமாக மாற சந்துரு தவிர்க்க முயன்றான்.

“ஆமா அரிசி எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் உனக்கு ஏன் அரிசின்னு பேர் வச்சாங்க” என கூற சும்மா இருங்க என சைகை செய்தாள். “அது ஒரு பெரிய கதை மாப்ள” என பார்வதி வாயை திறந்துவிட்டார்.

“அம்மா சும்மா இரும்மா இவக சும்மாவே என்ன ஓட்டுவாங்க “

“நீங்க சொல்லுங்க” என அனைவரும் கோரஸ்பாட அவர் துவங்கினார்

“ஏய் மலை விராலிமீன்டி பிடிடி” என மழையில் வெள்ளம் ஓட அந்த ஓடையில் இருவாண்டுகளும் விளையாடி கொண்டிருக்க அந்த மீனை பார்த்துவிட்டாள் அன்பு.

“போடி நான் இறங்கமாட்டேன என்ன தண்ணி அடிச்சுட்டு போயிடும் நீ வேனா புடி” என மலை பின் வாங்கினாள். சரிடி நான் புடிக்குறேன் என நீரில் பாய்ந்தாள் அந்த சுட்டிபெண்.

“ஏய் மாட்டிகிச்சுடி மலை”

“அங்கபாருடி பனமட்டை தன்னில அடிச்சிகிட்டு வருது சீக்கிரம் மேல வாடி வெட்டி விட்டுற போகுது”

“இருடி வாரேன் நீந்த முடியலடி உன் துண்ட தூக்கி போடுடி” என அன்பு கூற அவளும் அந்த துண்டை வீசினாள். “ஏன்டி என்னயா தண்ணில இறக்கிவிட்டுட்டு நீ மட்டும் மேல இருக்கியாடி” என கூறிவிட்டு வெடுக்கென இழுத்தாள்.

சட்டென மலை தண்ணீரில் விழ தண்ணீரை குடித்துவிட்டாள், “நீந்த முடியலடி அன்பு தூக்கிவிடுடி” என கெஞ்ச சரி சரி என அவளை  தூக்கிவிட்ட இருவரும் மேலே ஏறினர்.

“என்னடி இது கைல” என மலை பதறினாள்

“என்னடி” என அப்போதுதான் தன் கையை பார்த்தாள் அன்பு அது விராலிமீன்தான் ஆனால் செவுல்கள் இல்லை. கூட தன் இரண்டு பற்களை காட்டி கொண்டு அன்பை கடித்ததும் உணர்ந்தாள். அது தண்ணி பாம்பு என்று.

“ஐயோ அன்ப தன்னி பாம்பு கடிச்சிடுச்சு” என மலை அலறிகொண்டு ஓட பார்வதி கம்பை எடுத்துகொண்டு வந்தார். “ஏன்டி உன்ன ஆடத மழை போஞ்சுருக்கு வீட்டுல இருடினுதான சொன்னேன்” என நாலு சாத்து சாத்தினார். அவள் கையை பிடித்து கொண்டு பாவமாக நின்றாள். கையில் வீக்கம் ஏற்படவே அங்கிருந்த பச்சிலை வைத்தியர் வந்து மருந்துபோட்டுவிட்டு “ஒன்னுமில்லமா தண்ணி பாம்புக்கு விசம் இல்ல ஆனா இந்த மாதிரோ வீங்கிடும் சரிம்மா இந்த இலைய சாப்பிடசொல்லுங்க அப்புறம் ஒர மூனு நாளைக்கு அசைவம் வேனாம் அப்பதான் விசம் இறங்கும் சில குழந்தைங்களுக்கு இது தேவைபடாது இருந்தாலும் நம்ம ஜாக்கிருதையா இருக்கனும்ல எதுக்கும் ஒரு சூடு வச்சுட்டா நல்லதுதான்” என முரட்டு வைத்தியம் கூறி அவர் நகர்ந்தார்.

“ஏன்டி கம்மாயிக்கு போன”

“இல்லமா மலைதான் கூட்டிகிட்டுபோன” என சோகமாக கூற பார்வதிக்கு பாவமாக இருந்தது. தன் மகளுக்கு சூடு வைக்கவேண்டும் அல்லவா. அந்த கம்பி அடுப்பில் காயந்தது.

“தொடைய காட்டுடி” என சோகமாக கூற அன்பரசியோ “இந்தாமா” என நீட்டினாள். அப்போதுதானே விசம் இறங்கும். அந்த பலுத்த கம்பியை சோகமாக தன் மகளின் காலில் வைக்க அன்பரசியோ பல்லை கடித்துகொண்டாள். அந்த சம்பவத்தை கூறும்போது பார்வதிக்கு அழுகை வந்தது.

“சரி இந்த வாண்டு அப்பயாச்சும் திருந்துதானு பாத்தா இது அடங்குற கோஷ்டி இல்ல மாப்ள”

“ம்ம் அப்புறம் என்ன ஆச்சு”

“மறுநாளே ஆரம்பிச்சுட்டா”

ஊருக்குள் அந்த லாரி கவிழ்ந்த்தால் அதில் வந்த எருமை மாடுகளை அவசரத்தில் காப்பாற்ற கட்டுகளை அவிழ்த்துவிட்டனர். அந்த லாரி தீபற்றவே எருமைகள் கூரிய கொம்புகளும் வலிமையாக கால்களைகொண்டும் ஓடி ஊருக்குள் புகுந்தன. அந்த ஊர் கலக்டர் எருமைகளை பிடிக்கும் வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். கூடவே சில காவலர்களும் அதை பிடிக்க உதவி செய்தனர்.

ஆனால் ஊருக்குதான அடக்கம் இவர்களுக்கு இல்லையோ

“மலை சீக்கிரம் ஏறுடி நம்ம ஊருக்குள்ள துப்பாக்கியோட வர்ராங்க பாருடி” இது அன்பு

“அம்மா வீட்ட விட்டு வெளிய போக்கூடாதுனு சொல்லிருக்குடி வாடிவீட்டுக்கு போவோம்”

“போடு பயந்தாங்ககோழி நான் பாக்கபோறேன்பா” என மரத்திலிருந்தபடி கூற மலர்விட்டு சென்றுவிட்டாள்.

நீண்ட நேரம் யாருமே வரவில்லை. அப்போது திடீரென ஒரு எருமை வந்து அந்தமரத்தின் மீது நிற்க அதன் பின் நிறைய எருமைகள் தறிகெட்டு ஒடிவந்தன. அவை துப்பாக்கி ஓசைக்கு பயந்து ஓடி வந்தன. மரத்தில் அம்ர்ந்திருந்தவளுக்கு கால் அருகில் ஒரு ஓனான் அம்ரந்து இவளை பார்த்தது.

“ஏய் ஓனான்டி எங்க பிள்ளையாருக்கா இளநிள மோன்டு குடுக்குற இரு உன்ன” என கால்களால் மிதித்தாள். ஆம் பிள்ளையார் தாகத்தால் தவித்தபோது தண்ணீர் கேட்க இந்த ஓனான் தனது சிறுநீரை கழித்து கொடுத்ததாம் அதை பார்த்த அனில் தட்டிவிட்டு சாமி இது சிறுநீர் இந்தாங்க இளநி என குடுத்ததாக ஒரு கதை கிராமங்களில் உளவும் அதை நம்பியவள். இந்த ஒனான் வம்சத்தை பாதி அளித்துவிட்டாள் என்பது உண்மை. அதை மூக்குபொடி போட்டு டான்ஸ் ஆட வைப்பது. இல்லையென்றார் கரண்டு கம்பிமீது அடித்து போடுவது. தூக்கில் தொங்கவிடுவது என சில தண்டனைகள் நடக்கும் பின்ன பிள்ளையாருக்கு ஒன்னு என்றால் சும்மா விடுவாளா

இன்று அது தெனாவட்டாக அன்பரசியின்அருகில் நிற்க “என்ன கொழுப்பு உனக்கு எங்க அண்ணன் பிள்ளையாருக்கே நீ அப்புடி பன்னுவியா” என எட்டி மிதித்தாள். ஆனால மழை ஈரத்தில் வழுக்கிவிட கீழே இருந்த எருமையின் மீது விழுந்தாள்.

அந்த எருமை தறிகெட்டு தனது வீட்டின்புறம் ஓடவே அனைவரும் பார்த்துவிட்டனர். கிட்டதட்ட குட்டி எமதர்மராக இருந்தாள்.

போலிஸ்காரர்கள் சுடுவதற்கும் பயந்தனர். “சார் அந்த பொண்ணுமேல குண்டு பட்டா பிரட்சனை சார்” என பின் வாங்கினர். மற்றொருவர் “அது எருமை மிதிச்சி சாகட்டும் சார் அப்பதான் நம்ம தலை உருளாது” என கூற பார்வதி சுவர் பின்னால் நின்று கேட்டுகொண்டு அழுதாள்.

அந்த சவாரியை ஜாலியாக சிரித்துகொண்டே என்ஜாய் செய்தவள் அதன் காதினைபிடித்து ஸ்டியரிங்காக பயன்படுத்த பாவம் அவள் சொல்லும் திசைக்கெல்லாம் சென்றது. கூடவே பின்னால் அந்த கூட்டமே ஓடி வந்த்து.

அதை கவனித்த அந்த துப்பாக்கி மனிதன் “பாப்பா அங்க அங்க” என சைகை செய்தான். அவன் கூறிய இடத்தில் ஒரு பட்டி ஏற்பாடு செய்திருந்தனர்.

அவர் சொன்ன மாதிரியே செய்ய அனைத்து எருமைகளும் அந்த பட்டியில் அடைத்தாகிவிட்டது அங்கு நின்றிருந்த ஒருவர் இவளை படக்கென தூக்கிகொண்டு வெளியேற்றினார்.நிலமை கட்டுக்குள் வர உத்தரவு ரத்து செய்யபட்டது.

“மிலிட்டரிகாரரு பொன்னுனா சும்மாவா” என ஊரார் பாட “உங்க அப்பா மிலிட்டரியா பாப்பா” என அந்த மீசை காரர் கேட்க “ஆமா மாமா” என்றாள்.

“நீ பாரஸ்டல சேந்துகுறியா” என்று சிரித்தார். “அம்மா அடிக்கும் மாமா” எனவே தூரத்தில் பார்வதி மூங்கில் குச்சியை எடுத்துகொண்டு வருவது தெரியவே அவள் ஓடிய ஓட்டம் ஓலிம்பிக்கில் கூட யாரும் ஓடியிருக்க மாட்டார்கள்.

ஆனால் ராத்திரி சாப்பாட்டுக்கு அவள் வராமல் போனதுதான் பார்வதியை கலங்க செய்தது.தேடி அழைந்தனர் எங்குமில்லை. நல்லவேலை போஸ் ஊரில் இல்லை.இருந்திருந்தாள் அன்பரசிக்கு சூடு போட்டதுக்கே பார்வதிக்கு கன்னம் சிவந்திருக்கும்.இதில் அவளை காணவில்லை என்றால் பார்வதி பதறினாள்.

தூக்கமில்லாம் பொழுது ஓட “அந்த பாரஸ்காரரு தூக்கிட்டு போயிருப்பாருடி” என சிலர் புரளிபேச துவங்கினர். மலை பார்வதியின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

தூங்கமல் இரவு விடிய “அம்மாடி உங்க மாமனார் வீட்டுல இருந்து பேயி சத்தம் கேக்குதுடி” என ஒரு கிளவி வந்துகூற பார்வதி அந்த பெரியவீட்டைநோக்கி ஓடானாள்.

அங்கே “அம்மா அம்மா” என சத்தம்கேட்க அது அன்பரசிதான். உட்னே கதவை திறக்க மீண்டும் சத்தம் மட்டும் கேட்டது “அம்மா அம்மா” என மெழுகுவர்த்தியை எடுத்துகொண்டு பார்க்க அந்த சத்தம் பெரிய வீட்டிலிருந்த குலுக்கையிலிருந்து வந்தது. உடனே அதன் கதவை திறக்க அதில் அரிசி மணிகளுடம் வந்து விழுந்தாள் அன்பு அரிசி.

பாவம் இரவில் பசிக்க அந்த அரிசியை தின்று கிடந்துள்ளால் அம்மாக்கு பயந்துகொண்டு பெரிய வீட்டில் இறங்க ஏணிபடி உடைந்து உள்ளே விழுந்திருக்கிறாள்.

“நல்லா அரிசி சைஸ்ல இருந்துகிட்டு பன்றதெல்லாம் சேட்டை” என பார்வதி அடித்த அடியை அரிசி மறந்திருக்க வாய்ப்பில்லை.

இவள் மலை என்று கூப்பிட அவள் பதிலுக்கு போடி அரிசி என  கூப்பிட இருவரும் சிரித்துகொண்டு “இந்த பேர் நல்லா இருக்குடி நான் அரிசி நீ  மலை மலையரிசி” என பட்டமளிப்புவிழா நடந்தது ஒரு தனிகதை.

அதை கேட்டதும் சந்துரு சிரிக்க ஆரம்பித்துவிட்டான். “அரிசி ஜல்லிகட்டுலாம் போயிருக்காங்களா” என சிரிக்க அனைவரும் சிரித்தனர்

“டாக்டர் வர்ராரு” என ஜெனி தகவல் சொல்ல சிரிப்பை சிறிது நேரம் அடக்கியிருக்க ஜான்சி அரிசியின் முகத்தை பார்த்தாள். அனைவரும் தன்னை கலாய்க்க போகிறார்கள் என்ற கலக்கத்தில் இருந்தாள்.

“ம்ம் சந்துரு நீ அன்பு கூட்டிட்டி வீட்டுக்கு போ பாவம் என்கூடயே இருந்து கஷ்டபடுது” என ஜான்சி கூற “இல்ல அன்னி நான் இருக்கேன்” என்றாள்,

“சொன்னா கேளுமா” என ஜான்சி கூற சரியென கிளம்பினாள்.

-தொடரும்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51

51 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அதை பிரித்தவள் உண்மையாகவே மிகவும் மகிழ்ந்தாள். அவளின் விரிந்த விழிகள் அவளது மகிழ்ச்சியை வெளிக்காட்டின.. அக்ஸா “இது இது அவர்கிட்டேயா இருந்தது?” என கேட்க ஆதர்ஷ் “ம்ம்…நீ ஆசைபட்டு எனக்கு முதன்முதலா வாங்கினது..

உள்ளம் குழையுதடி கிளியே – 20உள்ளம் குழையுதடி கிளியே – 20

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவில் நக்ஷதிராவின் தகிடுதத்ததை உணர்ந்த சரத்தின் மனநிலை என்னவாக இருக்கும். அதிலிருந்து அவனால் மீண்டு வர முடிந்ததா பார்ப்போமா… உள்ளம் குழையுதடி கிளியே –

Chitrangatha – 43,44Chitrangatha – 43,44

ஹலோ ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்கும் நன்றி. இந்த வாரம் பல மெசேஜ்கள் மற்றும் மெயிலில் உங்களது கருத்துக்களைப் படித்தேன். எப்படி கதை போகலாம்னு டிஸ்கஸ் பண்ணிருந்திங்க. ஜிஷ்ணுவுக்காக ப்ரே பண்ணும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அப்படியே