Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 64

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 64

உனக்கென நான் 64

ஆம் ஆசிக் தனது காதலிக்கான பலிவாங்குதலை நிகழ்த்திவிட்டான். அதற்குள் சந்துரு அவளை நோக்கி ஓட சேகரும் பின்னாலயே தன் அக்காவை கண்டு ஓடி வந்தான்.

சந்துரு அவளை ஏந்திகொண்டு வரவே ஆசிக் அவனருகில் வந்து “சார் விடுங்க சார் இவ சாகவேண்டியவதான்” என கூறிவிட்டு “ஜெனிக்கு இப்புடிதான்டி வலிச்சிருக்கும் உன்ன கொல்றதுக்காகதான் இவ்வளவு நாள் உயிரோட இருந்தேன்டி இப்ப ஜெனி உயிரவிட்ட இடத்துலயே அவ சாட்சியா உன்ன கொண்ணுட்டேன் சார் கீழ போடுங்க சார் நாயி சாகட்டும்” என திட்டிகொண்டே வர அவனுக்கு ஒரு அறை விழுந்தது.

“அன்பு நீயா?”

“ஆமாடா ஜெனி இப்புடி பன்ன சம்மதிச்சிருப்பாளா? இவங்கள கொண்ணதால அவ ஆத்மா நிம்மதியா இருக்கும்னு நினைக்குறியா”

“ஆனா என் ஜெனிய கொண்ணவள நான் சும்மா விட முடியுமா”

“டேய் நீ ஜெனிய புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான்டா; என்னதான் அவ கோவமா பேசுனாலும் அவ ஒரு புழுக்குகூட கெடுதல் நினைக்காதவடா அவள காதலிக்குறேன்னு சொல்லுற ஆனா அவள புரிஞ்சுகள. அப்ப நீ அவ அழகமட்டும் தான்டா  காதலிச்சிருக்க. அவ மனசு உனக்குபுரியலை” என்று அன்பு திட்டும்முன் காரில் ஏற்றிகொண்டு கிளம்பியிருந்தான் சந்தரு.

ஆசிக்கிற்கு ஜெனி இதை விரும்ப மாட்டாள் என புரிந்துவிட்டுது. அங்கிருந்த காரில் மற்றவர்கள் அனைவரும் ஏற ஆசிக் அங்கேயே நின்றான். கார் வேகமாக பறந்தது.

ரோட்டில் தனித்துவிட பட்ட ஆசிக்கிற்கு இருந்த ஓரே சொந்தம் ஜெனியின் நினைவுகள்தான். கனவுகளில் வந்து அழகாக கேசம் கோதிவிட்டு காதில் காதல் சொல்லுவாள். கவலைகள் சூழ்ந்த நேரத்தில் அருகில் அமர்ந்து ஆறுதல் தருவாள். காற்றிலும் தன் காதலனுக்காக உறங்க அன்னை மடி தருவாள். அந்த குளிர்காற்று ஏனோ இன்று உஷ்னமாக மாறியிருந்தது. புது முடிவு தருவிக்கும் முன் மனதிலிருந்த ஜெனியிடம் கேட்பான். சரி என்றாள் வெட்கத்துடன் சிரிப்பாள். தவறென்றால் தலையில் கொட்டிவிட்டு கண்களை மூடிகொள்வாள். ஆனால் இந்த முடிவை ஆசிக் உணர்ச்சி வேகத்தில் எடுத்துவிட்டான்.

இந்த கூற்று மெய்பட்டால் ஆம் உணர்ச்சி என்பது ஜெனியுடன் இனைந்தது அல்லவா பின் எப்படி உணர்ச்சிவசபட முடியும். அப்படியானால் ஜெனி என்னை விட்டு போகிறாளா? என்ற எண்ணம் தூளைக்க தன் கண்ணீரை சிந்தியவன் “ஜெனி ப்ளீஸ்டி என்ன மன்னிச்சிடு நான் தெரியாம தப்பு பன்னிட்டேன் என்ன விட்டு போயிடாதடி” என அழுதான். ஆனால் தேவதைகள் வந்து அந்த பைக்கின் அருகில் நின்ற ஜெனியை பட்டு கம்பளம் போர்த்தி ராணியாக அலங்கரித்து மேலே எழுப்ப ஜெனி அவனை ஏக்கத்துடனும் ஒருவித குற்ற உணர்வுடனும் பார்த்தாள்.

“ஜெனி போகாதடி”

என வார்த்தைகள் வர பின் மனதில் ஓர் எண்ணம் “சரி ஜெனி நீ மேல சந்தோஷமா இருக்கனும் இவங்கள கொண்ண பாவம் உனக்கு வரகூடாது நான் அவங்களை எப்படியாவது காப்பாத்துறேன்டி இது சத்தியம்” என கூறிவிட்டு பைக்கின் அருகில் செல்ல அந்த தேவதைகளின் தங்க விளங்கை அறுத்துகொண்டு அந்த பைக்கில் அவன்பின் ஏறி அமரந்துகொண்டு கட்டிகொண்டாள்.

“என்ன மேடம் விட்டுட்டு போனிங்க”

“ம்ம் நீ கொலைகாரனா மாறிட்ட பின்ன எப்புடி உன்ன நம்பி வர முடியும்”

“அது சரி சரி பிடிச்சுகோ கொஞ்சம் வேகமா போக போறேன்டி” என பைக்கை முறுக்க மின்னலாக சீறி பாய்ந்தது.

சந்துருவும் குடும்பத்தினரும் அந்த அவசர அறைக்கு வெளியே காத்துகொண்டிருக்க செவிலயர்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். சேகர் முற்றிலும் உடைந்துவிட்டான்.

“எங்க ஆக்கா செத்துடுமா” என திரும்ப திரும்ப கேட்க “எதுவும் ஆகாது சேகர் அவ நல்லவ” என சன்முகம் ஆறுதல் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தான் ஆசிக்.

“சார் என்ன  மன்னிச்சிடுங்க” என சேகர் காலில் விழ அன்பு முறைத்துகொண்டு நின்றாள்.

“என் இழப்பு பெருசு சார் ஜெனியோட உயிர எடுத்துட்டாங்க எனக்கு அவதான் உலகம் அந்தகோவத்துல பன்னிடேன் சார் எதுனா தன்டனை குடுக்கனும்னா குடுங்க சார்” என்ற ஆசிக்கை பார்த்த சேகர்.

“நீங்க என்ன பன்னுவீங்க விடுங்க” என மீண்டும் தலை குனிந்துகொண்டான். அப்போது ஆசிக் அங்கு வந்த ஒரு நர்ஸ் ஆசிக்கை பார்த்தாள்.

“ஹேய் ஆசிக் என்னப்பா ஹாஸ்பிட்டல் பக்கம் நீதான் பெரிய அத்தலட் ஆச்சே எதுவம் மெடிக்கல் செக்அப் பன்னனுமா” என கேட்க அவன் கண்ணில் இருந்த நீரை பார்த்தாள்.

“ஏய் என்னடா ஆச்சு” என பதறினாள்.

“இல்ல தேவி உள்ள ஆபரேஷன் நடந்துகிட்டு இருக்கே அவங்க எனக்கு வேண்டபட்டவங்க அதான்” என இழுத்தான்.

உடனே அவனை தனியாக அழைத்து சென்றவள் “அவங்க சீரியஸ்தான்டா அதுவும் O- ரத்தம் சும்மாவே கிடைக்காதுடா அதனால டாக்டர் பர்தரா எதுவம் பன்னமுடியல நான் கூட அதுக்குதான் ஃபோன் பன்ன வந்தேன்”  என கூற “எனக்கும் அந்த குருப் தான்”

“ஆனாலும் கொஞ்சம் கஷ்டம்தான்டா” என அவள் முகத்தில் தெளிவாக இருந்தாள் பல ஆபரேஷன் பார்த்திருக்கிறாள் அல்லவா. ஆசிக் கண்கள் மேலும் குளமாகின. அவள் செய்வதறியாது நின்றாள்.அப்போது அவனருகில் நின்ற ஜெனி இவனை பார்த்து சிரித்துவிட்டு பாசத்துடன் தலையை கோதிவிட்டு பின் அந்த அறைக்குள் சென்று மறைவதாக தோன்றியது.

சிறிது நேரத்தில் “ஏய் டாக்டர் கத்திகிட்டு இருக்காருடி அவங்களுக்கு கான்ஸியஸ் வந்துகிட்டு இருக்கு எல்லாம் கன்ட்ரோலா இருக்குடி சீக்கிர்ம் வா” என அங்கு வந்த ஒரு பெண் கூற “ம்ம் இவருதும் அதே பிளட்தான்டி” என தேவி நியாபகம் செய்துவிட்டு செல்ல அந்த பெண் வாங்க ஆசிக்(சார்) என இவனை அழைத்து சென்றாள்.

“இவங்க உங்களுக்கு என்ன வேனும்” என ஊசி வலிக்காமல் இருக்க சில கேள்விகள் கேட்டாள். “என் அக்கா” என அமைதியாக கூறினான்.

பின் சிறிது ரத்தம் எடுக்க “ஆமா தேவி உங்களுக்கு என்ன வேனும்”

“தெரிஞ்ச பொண்ணுங்க”

“சொந்தமா”

“இல்லங்க”

“பின்ன?”

“அது எதுக்குங்க” அவள் முகத்தில் சிறிய கலக்கம் வந்துபோனது.

“சரி உங்க பேரு என்னங்க”

“ஆசிக்” எனஅவன் கூற அவள் கண்கள் விரிந்தன. “நீங்கதான் அந்த ஆசிக்கா அப்பாடா நான் உங்கள பாத்துட்டேன்” என அவள் கூறுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆம் ஜெனியின் நினைவாக பல தொண்டுகளை செய்துகொண்டிருக்கிறான். அதிலும் ஜெனியின் மரணம் அவனை வெகுவாக பாத்ததிருந்த்தாள். இனி யாரையும் சாகவிடபோவதில்லை என மருத்துவம் செவிலியர்கள் படிப்புக்கான  பணங்களும் இலவச வகுப்புகளும் என பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறான். இந்த பெண்ணாலும் ஒருமுறை பணம் கட்ட முடியவில்லை.

“ஏன்டி டல்லா இருக்க”

“இல்லடி எங்க அப்பா அம்மா வச்சுருந்த காச எடுத்து சீட்டாடி குடிச்சு காலிபன்னிடாருடி இப்ப எப்புடி பீஸ் கட்டுறதுன்னு தெரியல இன்னைக்கு கடைசி நாள் வேற எங்க மாமா காசு தரும்னு நம்பி கடைசில கைய விரிச்சுட்டாங்கடி” என புலம்பினாள்.

“ஒரு நிமிசம்இருடி” என தேவி ஃபோன் செய்து விட்டு வந்தாள். “ம்ம் கட்டியாச்சுடி போய் ஹால்டிக்கட் வாங்கிகோ”

“எப்புடிடி” என அவள் கண்கள் விரிய ஆசிக்கை பற்றி விளக்கினாள். “அந்த அண்ணதான்டி ஜெனி சேவை மையம்னு ஒன்னு வச்சு இதுவரைக்கும் எனக்கு பீஸ் கட்டுது” என்றாள். அந்த பெண்ணிற்கு இவனை வாழ்வில் ஒருநாளாவது பார்க்க ஆசை இன்று பார்த்துவிட்டதாள் இந்த மகிழ்ச்சி.

“சார் நான் இப்ப நல்லா சம்பாதிக்குறேன் சார் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்” என கூறி கொண்டிருக்க “பிளட் எடுத்துட்டியாடி” என அந்த சிவப்பு தண்ணீரை எடுத்துகொண்டு செல்லும்போது ஆசிக்கின் காதில் “அண்ணா நீங்கதான் ஆசிக்னு சொல்லிடாதீங்க அப்புறம் இது லூசுமாதிரி பிகேவ் பன்னும் சின்ன கிரஸ் இருக்கு உங்கமேல இந்த பொண்ணுக்கு ஜாக்கிருதை” என செல்ல அந்த அறிவிப்ப கால தாமதம்.

“ஆமா நர்ஸ் உங்க பேரு என்ன”

“ஜெனிபர்” என கூறிவிட்டு தன் நம்பர் எழுதபட்ட ஒரு காகிததை கொடுத்துவிட்டு அறையில் புகுந்தாள். அந்த தாளின் பின் புறம் “உங்கள எனக்கு பிடிச்சிருக்கு” என இருந்தது.

சிறிது நேரம் கழிய டாக்டர் வெளியே வர அங்கு ஆசிக் நிற்பதை பார்த்து தலைகுனிந்து நின்றாள் ஜெனி.

“டாக்டர் அவங்களுக்கு” என சந்துரு கேட்க

“அவங்களுக்கு எதுவும் இல்ல நரம்பு எதுலையும் கட் ஆகல ஆனா குரல் வளைலதான் கொஞ்சம் கீறல் இருக்கு”

“என்ன சொல்றீங்க” என பதறினான் சேகர்.

“இல்ல ஒரு மூனு மாசம் பேச முடியாது” என சந்துருவின் முகத்தை பார்த்துகூறினார். “அப்புறம் ஸ்பீச் தரபி கொடுக்கனும் இனிமே அவங்க ரொம்ப நேரம் பேசகூடாது அன்ட் சத்தமா பேசகூடாது சரியா”

“எத்தன நாளைக்கு டாக்டார்”

“எப்பவும்தான்” என டாக்டர் நகன்றார்.

பார்வதியும் அன்பும் வீட்டிற்கு சென்று அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வந்தனர். மற்ற அனைவரும் ஜான்சிக்கு காவலாக இருந்தனர். அன்பும் சுவேதாவம் அவளை ஓர் குழந்தையாக பார்த்துகொண்டனர். தன் உயிரை கொல்ல வந்தவளுக்கும் பாசம் அளிப்பவள் அன்புஅரிசி சுவேதாவும் அப்படியே.

இரண்டு வாரங்கள் ஓட சுவேதா அங்கு இருந்தால் காயம் ஆறதுவங்கியது. சுவேதா ஜான்சியின் அருகில் அமர்ந்து இருந்தால். அன்பரசி அந்த ஆரஞ்சுபழத்தை பாடாய் படுத்திகொண்டிருந்தாள். இவர்களை பார்த்த ஜான்சியின் மனம் கனமாக இருந்தது.

‘ஜான்சி நீ இவங்கள கொல்லனும்னு பாத்த ஆனா இவங்க உன்ன காப்பாத்தனும்னு நினைக்குறாங்க அதுலையும் இந்த சுவேதா சொத்துக்கு பங்கா வந்துடுவாளோனு பயந்த ஆனா இப்புடி அன்பா பாத்துகிறா என்ன மன்னிச்சிடுமா நீ வயசுல சின்னவளா  இருந்தாலும் என்னவிட மனசுல நல்லவமா” என கண்ணீர் விட ஜான்சி இப்போதுதான் அழுகிறாள் அடுத்தவர் முன்.

அவளது கண்ணீரை துடைத்துவிட்ட சுவேதா “ஏன் அக்கா அழறீங்க நாங்க இருக்கோம் எதுனாலும் சொல்லுங்க”

அந்த நேரம் அரிசி “இந்தாங்க ஜுஸ்” என குடுக்க அதை வாங்கி கீழே வைத்தாள். ஜான்சியோ நான் பேசனும் என்பதுபோல சைகை செய்ய

“அக்கா டாக்டர் ஸ்ட்ரைன் பன்ன வேணாம்னு சொல்லிருக்காங்க” என தடுத்தாள் சுவேதா.

இருந்தாலும் ஜான்சி முயன்று “ரொம்ப நன்றிம்மா தங்கச்சி அக்காவ மன்னிச்சிடு” என வார்த்தை வந்து மறைய அவளது தொண்டையில் ரணமும் கண்ணீர் குளமாகவும் மாறியது.

“ஐயோ அக்கா எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க நீங்க பெரியவங்க” என தடுத்துவிட்டு ஜான்சியை தலையனையில் சாய்த்தாள். ஆனால் அவள் “எனக்கு ஒரு பேப்பர் வேனும் எனபது போல சைகைகாட்ட” ஒரு நோட் எடுத்து கொடுத்தாள் அரிசி. பின் மீதமிருந்த ஆரஞ்சு பழத்தில் எதாவது வருகிறதா என பார்த்துகொண்டிருக்க ஜான்சி எழுதி முடித்து சுவேதாவிடம் கொடுத்தாள்.

அதை படித்தாள் சுவேதா. அதில் சுவேதா நீ என் வாரிசுடா ஆமா நீ சுந்தரம்-சரஸ்வதி குடும்பத்தோட கடைகுட்டிடா. என வாசிக்க சுவேதா ஜான்சியை பார்த்தாள். அவள் கண்ணீருடன் மேலும் வாசிக்க சொன்னாள்.

ஜான்சியும் சேகரும் திரும்ப இந்தியா வரவே அவளுக்கு இருக்கும் பொறுப்பு காவேரி குடும்பத்த முழுசா அழிக்கனும். தனது தம்பிக்கு நல்ல ஒரு கம்பெனியை கட்டமைக்கனும் என்ற இரண்டுதான்.

தன் ஆடிட்டரை அழைத்தாள். “சார் அப்பாவோட பிராபர்டி டீடயில்ய்ஸ் எனக்கு வேணும்.”

“ஓகேம்மா ஆனா அப்பா இப்புடி திடிர்னு இந்தமுடிவு எடுப்பாருன்னு எனக்கு தெரியாதும்மா”

“லுக் மிஸ்டர் இந்த அனுதாபம் காட்டற வேலைலாம் என்கிட்ட வேனாம் அன்ட் கால் மி மேடம் ஆர் யு அன்டர்ஸ்டேன்ட்” என கத்த அவர் “ஒகே மேடம்” என கிளம்ப “வந்துட்டானுக பன்னுற தப்ப மறைக்க எதாவது சொல்லிகிட்டு” என திட்டியது அவர் காதில் விழாமல் இல்லை.

அவர் கொண்டுவந்த டாகுமென்டை பார்த்தவள். “என்ன சார் இது”

“இது உயில்மா உங்க அப்பா உங்களுக்குதான் எழுதியிருக்காரு”

“இதோட ஒரிஜினல் எங்க”

“அது உங்க வக்கில்கிட்டதான் இருக்கும்”

“ம்ம்” என வாசித்து பார்த்தாள்.

அதில். இது நான் சுய நினைவோட எழுதுற உயில். எனக்கு ஜான்சி மூத்த பொண்ணு மற்றம் சேகர் ஒரு பையன். கூட அபின்னு ஒரு மனைவி எனக்கு இருந்தாங்க அவங்களுக்கு சுவேதான்னு ஒரு பொண்ணு இருக்கிறாள். அவதான் என்னுடைய இளைய வாரிசு. பட்டினத்தில் இருந்த என்னுடைய சில மில்கள் அவளது பெயரில் மாற்றி எழுதிவிட்டேன் மேற்படி என் உடல்நிலை மோசமான காரணத்தால் என்னுடைய சொத்துக்களில் சுவேதாவுக்கும் பங்கு உள்ளது என்பதையும் என் இளையமகள் சுவேதாவை மூத்த மகள் ஜான்சியின் பொறுப்பில் விடுகிறேன் எனவும் கூறி கொள்கிறேன். மேற்படி விவரங்கள் பின்னால் இனைத்துள்ளேன்.

இப்படிக்கு,

செல்வதனசேகர்.

என ஜான்சியின் தந்தை செல்வமுமாய் சுவேதாவின் தந்தை தனசேகருமாய் கூற ஜான்சிக்கு தன் தம்பியின் சொத்தில் பங்கு கேட்க யாருக்கும் உரிமை இல்லை என நினைத்தாள். அப்போது சுவேதாவை கண்கானிக்க அவள் “போடா நீயும் உன் சாப்பாடும்” என ஜான்சியின் எதிரி சந்துருவின் வீட்டிலிருந்து சிரித்துகொண்டே ஓடி வர அந்த கருமை பூசிய கண்ணாடி வழியே பார்த்தாள். பின் சந்துருவுடன் சிரித்துகொண்டே காரில் ஏறி சென்றாள் சுவேதா.

ஜான்சியின் மனதில் ‘அப்ப அபிநயான்னு ஒரு வேசிய வச்சு எங்க அப்பாவ மடக்கிபோட்டு இப்ப அவளுக்கு சுவேதா வாரிசா; நேரடியா எங்க அப்பாகூட மோத முடியாம அந்த சன்முகம் இப்புடி எமோஷனல் பிளாக்மெயில் பன்னி எங்க சொத்தோட ஒரு பாதிய காவேரி கம்பெனி எடுத்துகலாம்னு பாக்குறீங்களா! அதுக்கு சுவேதா இருந்தாதான” என மனதில்கூறியவளுக்கு கிடைத்த தகவல் சுவேதா மில்ஸ் காவேரி மில்ஸோட பார்ட்னர் என்பது கூடவே இந்த கம்பெனியின் முடிவு எடுக்கும் பொறுப்பு சந்துருவிடமிருந்தது. இந்த தரவுகள் இது சன்முகத்தின் சதிதிட்டம் என ஜான்சியை நம்ப செய்தது.

ஆனா உனக்கு எதுவும் தெரியாதுங்குறது எனக்கு இப்பதான் குட்டிமா தெரியும் அக்கா உன்ன கஷ்டபடுத்திருந்தா மன்னிச்சிடுடா நீ எங்க வீட்ட தங்ககுட்டிடா அக்காவ உன்கூட சேத்துகுவியா.

கோவம் இருந்தா சொல்லிடு நான் தனியா இருந்துகிறேன் ஆனா உன் அண்ணன் சேகரையாவது உன்கூட சேத்துகோடா சுவேதா. இது அக்காவவோட ஆசை என அந்த கடிதம் முடிய சுவேதாவின் கண்ணில் கண்ணீர் அது ஏன் வந்தது என்று தெரியவில்லை.

நீண்ட நாட்களாள பாசம் என்பதை அறியாதவலுக்கு கோடையில் பெய்த அடைமழையாக சந்துரு அன்பு மஞ்சு போஸ்மாமா சன்முகம் அப்பா பார்வதி என தொடர்ச்சியாக பெய்ய தனது உண்மையான சொந்தங்களான ஜான்சி அக்கா கிடைத்துவிட்டார் கூடவே சேகர் அண்ணா போனஸ். செல்வதனசேகர் வாரிசு ஜான்சி சேகர் சுவேதா.

“அக்கா” என ஜான்சியை கட்டிகொண்டாள் சுவேதா கண்ணீருடன்.

தன் தங்கையை அனைத்தாள் சுவேதா. இப்படி ஒரு பாசமான தங்கையின் அரவனைப்பை இன்று ஜான்சி உணர இப்படியே இறந்தாலும் சரி என்று தோன்றியது.

அன்பு அவர்களை பார்த்துகொண்டு நிற்க “இத புடிம்மா” என சன்முகம் வந்தார் கூட சந்துரு பார்வதி போஸ் சேகர் ஆசிக்(ஜான்சியை பார்க்கம் சாக்கில் ஜெனியும் வந்தாள்). அனைவரும் ஜான்சியை சுற்றி அம்ர்ந்தனர். கூட நந்தனி அம்மா வந்திருக்க சுவேதாவோ “இதுதான் நம்ம அம்மாக்கா” என ஆர்வமாக கூற “அவரோட பொண்ணாமா நீ அழகா இருக்க என்ன அவர மாதிரி முன் கோவம் இருக்கு! இனி நீ என் கன்ட்ரோல்தான்மா சொல்லிட்டேன் உன்ன கட்டி கொடுக்குற வரைக்கும் நீ என் குழந்தைதான்” என கன்டிப்பாக ஜான்சியை பார்த்து கூறிவிட்டார் நந்தினி அம்மா.

“அத்த நாங்க எங்க அன்னய கூட்டி போயிடுவோம்” என அரிசி மல்லுக்கு நின்றாள்.

“ஏய் நிறுத்துங்கப்பா இவங்க எங்க அக்கா என்கூடதான் இருப்பாங்க” என சுவேதாவின் வாதம்.

இப்படியே சண்டை தொடர “ஹலோ இங்க கவனிங்கப்பா” என சந்துரு கூறினான்.

திடீரென அவன் கையின் பின்னாலிருந்து அந்த கேக் முளைக்க “ஹாப்பி பர்த்டே ஜான்சி அக்கா” என அந்த மருத்துவமனையின் அமைதியை குலைக்க “ஏங்க சத்தம் போட வேனாம்னு சொல்லுங்க டாக்டர் திட்டுவாறு” இது ஜெனியிம் புலம்பல் (என்னுடயதும்தான் நீண்ட நாள் கழித்து சுவேதாவுக்கு சொந்தம் கிடைத்ததாள் ஏற்படும் சத்ததின் அளவை யூகித்து பாருங்கள்)

பிறந்தநாள் என்றால் “நான் ஏன் பிறந்தேன்னே தெரியலடா தம்பி எனக்கு பிறந்தநாள்தான் கேடா” என கூறி நகர்வாள். இன்று சிப்பிக்குள் முத்தாள அதை ரசித்தாள். ஜான்சி.

மருத்துவமனை விழாகோலம் பூண்ட ஜான்சியை சுற்றி அனைவரும் அமர்ந்தனர். அவர்களை பார்த்த ஜான்சி தன் எதிரியாக இருக்கும் சன்முகத்தை பார்த்தாள். அவர் முகத்தில் ஒரு புன்னகை அழகாக அந்த புன்னகையை பார்த்ததும் அவர் கையை பிடித்துகொண்டு சற்று சிரம்பட்டு “ என்ன மன்னிச்சிடுங்க சார்” என கண்ணீர் விட்டாள்.

“எதுக்கும்மா மன்னிப்பு! சொந்தகாரங்க மன்னிப்பு கேக்கலாமா?” கண்ணில் நீருடன் சிரிக்க முயன்றார். பின் “நீ உன் குடும்பத்த பத்தி முழுசா தெரிஞ்சுக்காமதான இப்புடி நடந்துகிட்டு உன் மேல தப்பு இல்லம்மா அப்புறம் நீ அழிக்க நினைக்குறியே காவேரி மில்ஸ் அப்புறம் அதோட ஓனர் சந்துரு இவங்க யாருன்னு தெரியுமா?”

-தொடரும்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 3கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 3

அழகான மச்சம் கன்னகுழியில் சிறைபட்டிருக்க சிரித்துகொண்டே “மே ஐ கம் இன் சார்” என்ற தனது கனவு கன்னியைப்  பார்த்துவிட்டான் விஷ்ணு. அவனது அனுமதிக்காகக்  காத்திருந்தாள் ஆனால் விஷ்ணுவோ ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மிதந்தான். “சார்” என குறுக்கிடவே “கம் இன்” என நிறுத்தினான். கால்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 18யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 18

கனவு – 18   அதுல்யாவின் திருமணம் தமிழ், சிங்கள இரு முறைகளின்படியும் வெகுவிமரிசையாக கண்டியில் நடந்தேறியது. வைஷாலி, சஞ்சயன் நாலைந்து நாட்கள் அங்கேயே சென்று தங்கி நின்று சந்தோசமாகக் கொண்டாடி விட்டு வந்தனர்.   திருமணம் முடித்த கையோடு அதுல்யாவும்

ராணி மங்கம்மாள் – 4ராணி மங்கம்மாள் – 4

4. இராயசம் அச்சையாவும் ரகுநாத சேதுபதியும்  டில்லி பாதுஷாவின் பிரதிநிதி ஆத்திரம் அடைந்ததைக் கண்டு ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பன் அவனை நோக்கிப் புன்னகை பூத்தான்.   “நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! இதன் விளைவுகள் கடுமையாயிருக்கும் என்பதைச் சிந்திக்காமல் செயல்படுகிறீர்கள் என்பதை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன்”