Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 55

பாகம் – 55

மௌனங்களையே பாஷையாய் கேட்டுக் கொண்டு இருந்தவனை, தன் சிரிப்புச் சங்கீதங்களால் சிலிர்க்க வைத்தவள், இப்போது மௌனமே சம்மதமாகி அவன் முன்னால் நிற்கையில், அவளது பாதம்கூட நோகாமல் பக்குவமாய் பார்த்து பார்த்து பணிவிடை செய்தான். கை விரல்களையே கடவுச் சொல்லாய் கொண்டு முன்னேற, கண்கள் இருளிலும் துளி வெளிச்சம் தேடி சதிராடிட, வெடித்து சிதறிய விண்கலமாய் உடல்கள் இரண்டும் வெப்பத்தில் தீய்ந்திட்டது. திருவாளர் பிரம்மனும் திருடன்தான் போல, அவன் கனவுகளை திருடி அவளைப் படைத்திருக்கிறானே அந்த கள்வன்.

 

இருவரின் தேவையும் தீர்ந்த பின் விலகி அமர்ந்தவளின் மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டு ஆரவ் துள்ளி எழுந்து, “என்னடா?” என்றான்.

 

பார்பி, “ஆரவ், நான் தப்பு பண்ணிட்டேனா? ஒரு பொண்ணு இப்டி எல்லாம் பிகேவ் பண்ண கூடாதுல்ல”

 

ஆரவ், “ம்… பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து தப்புன்னு சொல்லுற…” என்றதும் அவள் சிணுங்கல் மேலும் அதிகமாக, அவளை இறுக்கமாக அணைத்து, முகத்தை தனக்கு நேராய் நிமிர்த்தி, அவள் கண்ணோடு தன் கண்களை கலக்கவிட்டு, “நான் உனக்கு யாருடி?” என்றான்.

 

பார்பி அதிர்ச்சியா பயம்மா என்றறிய முடியா பார்வையில் அவனை பார்த்துவிட்டு, உள்ளுக்குள் காதல் வந்து குடியேறிட “என்.. என்னோட…” என்றிழுத்தாள்.

 

ஆரவ், “ம் சொல்லு.. உன்னோட..”

 

“புருஷன்” சொல்லிவிட்டு உதட்டை கடித்து கொள்ள,

 

ஆரவ், “தெரியுதில்ல, பின்ன எப்டி தப்புன்னு சொல்ற? இப்படித்தான் இது நடக்கும், இதுதான் இயற்கையின் நியதி, நாம எல்லாரும் இப்டித்தான் பொறந்தோம். புரியுதா?”

 

வெட்கம் கூடிப்போக, புரியாமலேயே புரிந்ததாய் தலையாட்டியவளின் தலையில் ஆரவ் செல்லமாய் முட்டி, ” டேய் செல்ல குட்டி, உனக்கு புரியிர மாதிரியே சொல்றேன், நீ இப்பத்தான் உன் அடி மனசுல இருந்து என்னை முழுசா ஏத்து கிட்டன்னு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தேவையில்லாம உன்ன நீயே கன்பியூஸ் பண்ணிக்காம கொஞ்சம் தூங்குடா, ஓகே…” என்றான். அவன் சந்தோஷமாய் இருக்கிறான் என்பதே அவளை நிம்மதி கொள்ள செய்ய, நடந்து முடிந்ததை பற்றி கவலைப்படாமல் தொலைந்து போன தன் சேலையை தேட ஆரம்பித்தாள்.

 

“இன்னும் என்னடி அங்க உருட்டிகிட்டு இருக்க?”

 

“என்னோட டிரஸ்ஸ காணும் ஆரவ்…”

 

“இருட்டுல தேடினா எப்டி கிடைக்கும்? லைட்ட போட்டு தேடனும்.”

 

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், நான் இப்டியே தேடிக்கிறேன்.” ‘இவனுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நான் இப்டி இருக்கும் போது எப்டி லைட்ட போட முடியும்? இந்த சேலையும் வேற எங்க போய் தொலஞ்சதுனு தெரியல’ படுக்கை மேல் எத்தனை தேடியும் சேலை கைக்கு கிடைக்காமல் போக, கட்டிலின் அடியிலும் தேட தொடங்கினாள்.

 

“இப்பவாச்சும் கிடைச்சதா?”

 

“இல்ல…”

 

“சொல்றத கேளுடி, லைட்ட போட்டு தேடு…” இந்த முறை அவளும் மறுக்க முடியாமல், லைட் ஸ்விட்ச்சை போட்டுவிட்டு முடிந்தவரை கைகளால் தன்னை தானே மறைத்து கொண்டு திரும்பி பார்த்தாள். இதற்காகவே காத்திருந்தவனை போல ஆரவ் அவளை விழுங்கும் பார்வை பார்த்திட, அவளின் சேலையோ அவனின் தலைக்கு கீழே தலையணையாய் மாறி அங்கே சிறைபட்டு கிடந்தது. வேகவேகமாக லைட்டை மீண்டும் ஆப் செய்துவிட்டு, “பொறுக்கி ராஸ்கல்” என அவனை கைவலிக்கும் வரை அடிக்க, அவனோ அத்தனையும் வாங்கி கொண்டு அடக்கமாட்டாமல் சிரித்தான். இதுக்குமேலும் இவனுடன் மல்லுக்கட்ட கூடாது, என நினைத்து அவனை அந்தபக்கம் உருட்டிவிட்டு சேலையை தேட அங்கே அதை மீண்டும் காணவில்லை.

 

“ஆரவ் நீங்கதான ஒளிச்சு வச்சிருக்கீங்க. ப்ளீஸ் குடுங்க”

 

“எங்க தூக்கி போட்டேன்னு எனக்கே தெரியலியே, லைட்ட போட்டு தேடி தரவாடி செல்லம்?”

 

இதுநேரம் வரை இழுத்து பிடித்திருந்த அச்சம், மடம், நாணம் எல்லாம் பறந்து போக, “ஆரவ்… உன்ன என்ன பண்றேன்னு பாருடா…” என்று மேலே பாய்ந்தவளை அவன் சரியாக கேட்ச் பிடித்து தனக்கு வசதியாய் படுக்க வைத்து கொண்டான். “ஏன்டி… உனக்கு பாட்டும் பரதமும் தெரியும்னு இதுவரைக்கும் என்கிட்ட நீ சொல்லவே இல்லைல அதுக்குதான் இது” என இறுக்கி அணைத்தான்.

 

அவன் ஆட்டம் முடிந்த பிறகு அவள் விலகி அமர்ந்து, “ஆரவ், நான் சகஜமா இருந்தப்போ எனக்கு எதுவும் ஞாபகமில்ல, எனக்கு ஞாபகம் வந்தப்போ நான் சகஜமா இல்ல. கூட்டி கழிச்சு பாத்தா உங்க லவ்வுக்கு வயசு வெறும் மூணு நாள் தான். அதுலயும் என்கூடவா பேசிட்டு இருந்தீங்க?” என அவன் காதை பிடித்து பலம்மாக திருகினாள்.

 

“ஸ்ஸ்ஆ.. அப்போ பிரியங்காவையும் அவ அம்மாவையும் நீ இங்க கூப்ட்டதுக்காக உன்ன பனிஷ் பண்ணிக்கவா?”

 

“என்னோட ஆரவ்வ இத்தன வருஷமா அவங்கதான் பத்திரமா பாத்துகிட்டு இருந்திருக்காங்க, ஆரவ்க்கும் பார்பி வர முன்னாடி பிரியங்காவதான ரொம்ப புடிக்கும். சின்ன சண்டைக்காக முக்கியமான விஷேசத்துல அவங்கள ஒதுக்கி வைக்கலாமா? ஆரவ்க்காக பார்பி அவங்க எல்லாத்தையும் கூப்பிட்டதுல தப்பே இல்ல…”

 

“ஓ.. அவ்ளோ தூரம் உனக்கு கொழுப்பு ஆகிடுச்சா, பாக்கலாம் இன்னிக்கி நீ எப்டி உன் சேரிய கண்டு புடிக்கிறன்னு…” என அதிகாலை வரை தேடலும் ஊடலும் இடையிடையே கூடலுமாகி இரண்டர கலந்து கிடந்தவர்கள், இறுதியில் வெள்ளி முளைக்கும் நேரம் தான் உறங்கவே போனார்கள்.

 

ஆரவ் கண்விழித்து போது ஜன்னலின் வெளியே வெளிச்சம் மிக அதிகமாகவே பரவி இருந்தது. மணி ஏழோ எட்டோ இருக்கலாம் என நினைத்து போனை எடுத்து பார்க்க, அது மணி பதினொன்றடா மடையா என்றது.

 

“ஐயயோ, போச்சு போச்சு… இன்னிக்கும் மாட்டிக்கிட்டேனா. டேய் பார்பி எழுந்திரிடா, தாத்தா நம்மள கொலவெறியோட தேடிட்டு இருப்பாரு…” என தன் மார்பில் துயில்பவளை எழுப்பினான். நேற்றிரவு ஆடிய ஆட்டத்தின் விளைவாய் சிவந்த கண்களோடு பார்பி விழிக்கவே முடியாமல் தவிக்க, “சரி நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. நான் போய் சமாளிச்சுக்கிறேன்” என்று பெட்ஷீட்டை இழுத்து முழுவதுமாய் மூடிவிட்டான். ஆரவ் இருக்க பயமேன் என அவளும் நன்றாக புரண்டு படுத்து உறங்க தொடங்கினாள். அவளிடம் வீராப்பாய் சொல்லிவிட்டானே தவிர வெளியேறி செல்ல மனம் வராமல் வெட்கம் பிடிங்கி தின்றது. என்ன செய்வது அங்கேயே இருக்க முடியாதே, அவன் வெளியே போய்த்தானே ஆக வேண்டும். மெல்ல கதவை திறந்து மற்றவர்களை நேருக்கு நேர் எதிர் கொள்ளாமல், ஹாலில் வந்து அமருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

 

ஜனனி, “குட் மார்னிங் மாமா…. இந்தாங்க டீ…” என்று நீட்டியவளிடம் காதில் அவன் ஏதோ மந்திரம் ஓத தலையாட்டி விட்டு சிட்டாக பறந்து விட்டாள். யாருக்கும் தெரியாமல் ஒரு செட் டிரஸ் பார்பிக்கு கொண்டு வந்து வைக்கபட்டது. பெரியவர்கள் எல்லாம் கண்டும் காணாமலும் ஒதுங்கிவிட நண்பர்கள் நால்வரும் சேர்ந்து கொண்டு அவனை வாட்டி எடுக்க ஆரம்பித்தார்கள்.

 

வஜ்ரா, “ஏன்டா மானத்த வாங்குற? ‘மாமா எங்க?.. மாமா எங்க?’ன்னு காலைல இருந்து உன்ன வலைவீசி தேடிட்டு இருந்தா ஜனனி. அவளுக்கு இதெல்லாம் சொன்னாலும் புரியுமாடா”

 

யஷ்மித், “ஏன்டா உன்னால ஒரு ரெண்டுநாள் வெய்ட் பண்ண முடியலடா?”

 

ரிஷி, “டேய்.. அதிசயத்திலும் அதிசயமா இன்னிக்கி தாத்தா தான்டா உனக்கு சப்போர்ட்டா பேசினாரு. அவரு சொன்னதால தான் இவ்ளோ நேரம் யாரும் உங்கள டிஸ்டர்ப் பண்ணல”

 

ஆரவ் அவர் அறையை எட்டி பார்த்தான், அவர் அவனுக்காகவே காத்திருந்ததை போல அங்கே நின்றிருக்க, அவரிடம் எழுந்து சென்றான். தாத்தா ரகசியமாக, “ஒரு ரெண்டு நாளைக்கி கோயில் குளம்னு போக வேண்டி இருக்கும். அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தனித்தனியா தூங்கினா நல்லா இருக்கும்…” என்றிட இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல், தலையை சொறிந்தபடி தலையாட்டியவனை பார்க்க அவருக்கும் சிரிப்பாகத்தான் இருந்தது.

 

மதியம் உணவு நேரம் வந்த பிறகும் அடித்து போட்டதை போல அசந்து உறங்குபவளை எழுப்பிட அவனே வர வேண்டியதாயிற்று. ஆரவ் அவளின் பிறை நெற்றியில் முத்தமிட்டு “பார்பி எழுந்திரிடி, டைம் ஆச்சு” என்றவனை அவள் தூக்க கலக்கத்திலேயே கை நீட்டி அழைத்தாள்.

 

“ஹேய் மறுபடியுமா? ஏற்கனவே நேத்து என்னோட ரிவென்ச் கவுன்ட்டிங் எவ்ளோ குறைஞ்சுச்சுனு தெரியாம குழப்பமா இருக்குது, நீ இப்டி கூப்பிட்டா நான் மறுபடியும் ஆரம்பிச்சிடுவேன். சேட்டை பண்ணாம எழுந்திரிச்சு வாடி, கதவு வேற திறந்து கிடக்குது பாரு…” என்றதும் கண் விழித்தவள் கடிகாரத்தை பார்த்ததும் அடித்து பிடித்து குளியலறைக்குள் ஓடினாள். அவசர அவசரமாய் ஒரு குளியலை போட்டுவிட்டு சுடிதாரில் மளமளவென தயாராகி சத்தமின்றி வெளியேறியவள் வேறு யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.

 

அவளை அம்மாவும் சித்தியும் சேர்ந்து சுற்றி வளைத்து கொண்டு, “இப்பிடியாடி பொறுப்பில்லாம தூங்குறது, பொம்பள புள்ள நைட் எவ்ளோ லேட்டா படுத்தாலும் காலைல எந்திரிச்சு எல்லா வேலையும் பாக்கனும். போற இடத்துலயும் இப்பிடியே இருந்து தொலைக்காத…” என்றவர்களை ங்ஙே… வென வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.

 

‘எதுக்கு திட்டனுமோ அதுக்கு திட்டாம எது எதுக்கோ திட்டிட்டு இருக்காங்க. இவங்களுக்கு மேட்டரு தெரியுமா, இல்ல ஆரவ் எதாச்சும் பொய் சொல்லி சமாளிச்சு வச்சிருக்கானா, இப்ப இவங்களுக்கு என்ன பதில் சொல்ல?’ என்று திருதிருவென முழித்தவள் கையில் சாப்பாட்டை குடுத்ததும், மற்ற நினைவுகளை பசி புறம் தள்ளியது. உணவை முடித்தபின் அவனின் பழிவாங்கும் முறை ஞாபகம் வர தனக்கு தானே சிரித்தபடி கனவுலகில் சுற்றி கொண்டிருந்தாள்.

 

அதன்பின் மாலை நெருங்க ஷாப்பிங் செல்வதற்காக அத்தனை பேருக்குமான கார்கள் ஏற்பாடு செய்ய பட்டது. தங்களது அறைக்குள், ஆரவ் தன் நண்பர்கள் அனைவரையும் வட்டமாக உட்கார வைத்து அவர்களின் பொறுப்பில் ஆளுக்கொரு குடும்பமாய் டீம் பிரித்து கொடுத்தான்.

 

1) வஜ்ராக்கு தாத்தா & பார்பியின் குடும்பம்.

 

2) ரிஷிக்கு வித்யாவின் குடும்பம்.

 

3) யஷ்மித்க்கு ஜனனியின் குடும்பம்.

 

4) பிரித்விக்கு பிரியங்காவின் குடும்பம்.

 

5) நிதிஷ்க்கு அவன் குடும்பமும் ஷர்மா அங்கிள் குடும்பமும்.

 

ஆரவ், “எல்லாரும் அவங்க அவங்க டீம் மெம்பர்ஸ ஜாக்கிரதையா பாத்துக்கனும். யாராச்சும் மிஸ் ஆகிட்டாலோ இல்ல அவங்களுக்கு வர வேண்டியது எதாவது வராம போயிட்டாலோ அதுக்கு நீங்கதான் பொறுப்பு. கிளம்புறதில இருந்து வீட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் நீங்கதான் இன்சார்ஜ், நான் அந்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன். வேற எதாச்சும் டவுட் இருக்கா?”

 

யஷ்மித், “என்னங்கடா ஷாப்பிங்னு சொல்லிட்டு, ஸ்கூல் பசங்க எக்ஸ்கர்ஷன் போற மாதிரி டீம் பிரிச்சுட்டு இருக்கீங்க.”

 

ரிஷி, “ஓசில ஷாப்பிங் போனா, துட்டு குடுக்குறவன் சொல்றத நாம கேட்டுத்தானடா ஆகனும்.”

 

யஷ்மித், “அட்லீஸ்ட் எனக்கு வேற பேமிலியாச்சும் குடுங்கடா, ஜனனி வேண்டாம்…”

 

பிரித்வி, “இல்ல மச்சி, எங்களால அவள கன்ட்ரோல் பண்ண முடியாது. நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்டா” என்றிட மொத்த கூட்டமும் அவனை பார்த்து சிரிப்பாய் சிரித்தது.

 

பட்டாம் பூச்சி போல் சிறகடித்து சுதந்திரமாய் பறந்து திரிந்தவனை, உன் ஒற்றை பார்வையில் சிறைபிடித்து சென்ற என்னுயிர் காதலியே… உன் பார்வைக்கு அர்த்தம் தெரியாத போது என்னுள் மாற்றங்கள் எதுவுமே இல்லை… இன்று அந்த பார்வையின் அர்த்தம் புரிந்ததும் என் உயிரணுக்களில் ஆயிரமாயிரம் மாற்றங்கள் காண்கிறேன் நான்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: