Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 54

பாகம் – 54

ஆரவ் மாடியில் தங்கள் அறையில் இருந்து ஷர்மா அங்கிளுக்கும், நிதிஷ்க்கும் தகவல் தெரிவித்து கொண்டிருக்கையில், அவனுக்கு தெரியாமல் பார்பி கீழே பிரியங்காவின் குடும்பத்திற்கும் குருவிற்கும் அழைப்பு விடுத்தாள். குரு இன்னும் ஆரவ் மீது சினம் தணியாமல் இருந்ததால், அவர்களின் திருமணத்திற்கு தன் வாழ்த்தினை மட்டும் பார்பிக்கு தெரிவித்தார். பார்பியின் குடும்பத்தினர் தங்களது உறவினர்கள், ஜோசியர், ஐயர் என தேடியபடி அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிட, நேரம் ரெக்கை கட்டி பறந்தது.

 

மாலை நான்கு மணி இருக்கையில், “நான் வந்துட்டேன்…” என துள்ளி குதித்து ஓடி வந்த ஜனனியின் சத்தம் கேட்ட பிறகே வீடு உயிர் கொள்ள தொடங்கியது. ஜனனி கல்யாண விஷயத்தை கேள்வி பட்டதிலிருந்து ஆரவ்வை ஒரு நிமிடம் கூட தனியே விடாமல் அவன் கைகளை பிடித்து கொண்டே சுற்றினாள், “மாமா நான் தான் பொண்ணுக்கு தோழி, என்ன நீங்க ஸ்பெஷல்லா கவனிக்கனுமாக்கும்…”

 

ஆரவ், “என்ன வேணும்னு சொல்லுடா செஞ்சிடுவோம்.”

 

பிரித்வி, “நல்லா பெருசா கேளு, உங்க மாமன் ஊர்ல பொட்டி பொட்டியா நிறைய பணம் வச்சிருக்கான்.”

 

ஜனனி, “அப்டியா, உங்க சம்பளம் எவ்ளோ மாமா?”

 

ஆரவ், “இப்போதைக்கு மனத்லி தெர்ட்டிக்கு மேல வரும்”

 

ஜனனி, “தெர்ட்டி தவுசனா மாமா?” என ஆச்சரியமாக வாயை பிளக்க,

 

ரிஷி, “சரியா போச்சு போ, தெர்ட்டி தவுசன் இல்லமா தெர்ட்டி க்ரோர்ஸ்” என்றதும் மொத்த குடும்பமுமே வாயை பிளந்தது.

 

ஜனனியோ மகிழ்ச்சியில், “அப்போ சரி, ஸ்கூலுக்கு நடந்து நடந்து என் காலெல்லாம் ரொம்ப வலிக்குது மாமா, எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி தாங்களேன் ப்ளீஸ்… அதவிட முக்கியம் உங்க மேரேஜ்க்கு எனக்கு டிரஸ் சேலை சுடிதாரெல்லாம் வாங்க வேண்டாம். பிங்க் கலர் லெகங்கா தான் வேணும். அப்புறமா டிரஸ்க்கு மேச்சா ஸ்டோன் வச்ச நெக்லஸ், ஒரு ஹீல்ஸ் வச்ச செப்பல், ஒரு பிங்க் கலர் வாட்ச், அப்புறம்…” என வாயில் விரல் வைத்து யோசிக்க, ஆரவ், “நீ ஒண்ணு பண்ணுடா, நல்லா யோசிச்சு வேணுங்கிறதெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு கொண்டு வா” என்றான்.

 

ஜனனி, “ஓகே மாமா, எனக்கு பசிக்குது எதாச்சும் கொறிச்சுட்டு நான் லிஸ்ட் பிரிபேர் பண்றேன்” என கிச்சனுக்குள் வந்தவளுக்கு, செமத்தியாக அர்ச்சனை கிடைத்து.

 

நந்தினி, “ஏன்டி இப்டி மானத்த வாங்குற? அவரு ஒரு பேச்சுக்கு என்ன வேணும்னு கேட்டா, இப்டியா லிஸ்ட் எழுதி தரறேன்னு சொல்றது? அறிவில்ல…”

 

நெடுநேரம் வீடு அமைதியாய் இருப்பதை உணர்ந்து, ஜனனியை தேடி கிச்சனுக்கு வந்தான் ஆரவ். அங்கே அவள் இல்லாத கண்ணீரை துடைத்தபடி உதட்டை பிதுக்கி திட்டுவாங்கி கொண்டு இருப்பதை கண்டு, “அவள திட்டாதீங்க…” என அவளை இழுத்து தன் பின்னால் ஒளித்து கொண்டான். “ஏன் என்கிட்ட கேக்க அவளுக்கு உரிமை இல்லையா? இதுவரைக்கும் பார்பிகூட அதுவேணும் இதுவேணும்னு எங்கிட்ட கேட்டதில்ல. இவளாவது மனசுவிட்டு கேக்குறாளேன்னு நானே சந்தோஷமா இருக்கேன், நீங்க ஏன் தடுக்குறீங்க”

 

நந்தினி, “அதுக்கில்ல தம்பி, என்ன இருந்தாலும் இவ உங்ககிட்ட கொஞ்சம் ஓவரா செல்லம் கொஞ்சுறான்னுதான்…” என நீட்டி முழங்க,

 

ஆரவ், “இங்க பாருங்க… பார்பி ஒருதடவ ‘ஜனனி என் தங்கச்சி மட்டும் இல்ல, நான் தூக்கி வளத்த என்னோட குழந்தை’ன்னு சொன்னா. அப்டி பாத்தா இவ எங்க ரெண்டு பேருக்கும் முதல் குழந்தை மாதிரி. ஜனனி ஆச பட்டத அடையிரதுக்காக, அவ படிப்பு கல்யாணம்னு எல்லாத்திலயும் நான் வந்து தலையிடுவேன், இப்பவே சொல்லிட்டேன். அவள இனிமே யாராவது திட்டினாலோ, இஷ்டமில்லாதத செய்ய வச்சீங்கன்னாலோ எங்க கூடவே எங்களோட வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவோம் பாத்துக்கங்க. நீ வாடா… ” என்று அவன் அழைத்து செல்ல, அதைகண்டு நந்தினி தன் ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார்.

 

மாலை நேரம் பெரியவர்கள் ஜோசியரை அழைத்து வரும் வேலையில் மும்மரமாக இருக்க, அவர்களை தொல்லை செய்யாமல் இளையவர்கள் கேங்காக வீட்டின் பின்புறம் பெரிய பெட்ஷீட் விரித்து சீட்டு விளையாடி கொண்டிருந்தார்கள். ஜனனி ஆரவ் ஒரு டீம், ஶ்ரீ பிரத்வி ஒரு டீம், ரிஷி கார்த்தி ஒரு டீம், வஜ்ரா யஷ்மித் ஒரு டீம். பப்லுவும் இன்று வேடிக்கை பாரத்தபடி அவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டது. மற்றவர்களை விடுத்து பார்பி மட்டும் வாசலிலேயே யாருக்காகவோ காத்திருந்தபடி தவம் கிடக்க, அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் நான்கு பெரிய இன்னோவா கார்கள் வந்து நின்றன. முதல் காரிலிருந்து ஷர்மா அங்கிள் மிருதுளா ஆன்ட்டி இறங்க, அடுத்த காரிலிருந்து நிதிஷ் தன் மனைவி குழத்தையுடன் இறங்க, அதற்கு அடுத்த காரிலிருந்து பிரியங்கா தன் கணவன், குழந்தைகளுடன் இறங்க, நான்காவது காரிலிருந்து சாரதாம்பாளும், பிரியங்காவின் கணவன் வகை உறவினர்களும் இறங்கி வந்தார்கள்.

 

பார்பி, “வாங்க… வாங்க…” என பயங்கர பவ்யமாக, தன் விளையாட்டு குணத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு, தெளிவாக தைரியமாக வரவேற்றாள்.

 

மிருதுளா, “பாத்து ரொம்ப நாளாச்சு, நல்லா இருக்கியாம்மா?” என்று பாசமாய் கன்னம் வருடினார்.

 

பார்பி, “நான் நல்லா இருக்கேன்மா, நீங்க எப்டி இருக்கீங்க…” என்பதற்குள் ஆரவ் நியமித்திருந்த வேலையாட்கள் வந்து லக்கேஜை எல்லாம் வாங்கி ஒரு அறைக்குள் எடுத்து வைத்தார்கள். பார்பியின் தாத்தா, அப்பா, சித்தப்பா, மாமா என அனைவரும் வந்து வந்தவர்களை வரவேற்க, வீட்டு பெண்கள் எல்லாம் டீ, டிபன், ஜூஸ் என விருந்தோம்பல் செய்ய கல்யாண வீடு களைகட்ட தொடங்கியது. பிரியங்காவும் ஷர்மா அங்கிளும் ஆரவ்வை பார்வையால் தேடுவது புரிந்த பார்பி, “ஆரவ் வீட்டுக்கு பின்னாடி இருக்காரு…” என அங்கே செல்லும் வழியை காட்டினாள்.

 

அங்கே சீட்டாட்டம் முடியும் தருவாயில் இருக்க, ரிஷி கார்த்தி டீம் வென்றுவிட்டது. தன் தோல்வியை ஒத்துக்கொள்ள விருப்பமின்றி ஜனனி பத்திரகாளியாய் மாறி மற்றவர்களை விரட்டி விரட்டி அடித்தாள். அதிலிருந்து தப்பி ஓடியவர்களை தன் படைகளான கன்று குட்டி, நாய் குட்டி, வாத்துகளை சேர்த்து விரட்டி பிடித்து கொண்டு அவள் செய்த அட்டகாசத்தில் ஆரவ் விழுந்து விழுந்து சிரிக்க, பிரியங்காவும் ஷர்மா அங்கிளும் அவனை அதிசயமாய் பார்த்தார்கள்.

 

யதேச்சையாக திரும்பிய ஆரவ் பிரியங்காவை பார்த்ததும் முகம் இறுகிவிட, அவள் அதை புரிந்து கொண்டு வந்த வழியே திரும்பி சென்றாள். ஷர்மா ஆரவ்விடம், “பிரியங்கா உன் மேல வச்சிருந்த கண்மூடித்தனமான பாசத்திலதான் அது எல்லாமே செஞ்சுட்டா, அவளையும் நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோடா…” என ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டு வேறு விஷயங்களுக்கு தாவினார். வீட்டில் புதிய விருந்தினர்கள் அனைவரும் சமம்மாக நடத்த பட்டதிலேயே பிரியங்காவும் சாரதாம்பாளும் புரிந்து கொண்டனர், பார்பி எவரிடமும் எதையும் சொல்லவில்லை என்று. மாலை நேர சிற்றுண்டியை முடித்த பிறகு, அவர்களின் குடும்ப ஜோசியர் வரவழைக்கப்பட்டு, நல்ல நாள் பார்க்கும் வேலை தொடங்கியது.

 

ஜோசியர் இருவரின் ஜாதகத்தையும் நன்றாக பார்த்துவிட்டு சந்தோஷமாக, “ரெண்டு பேருக்கும் பொருத்தம் அமோகமா இருக்கு. அடுத்தடுத்து வர்ற முகூர்த்த நாளெல்லாம் சொல்றேன், எது உங்களுக்கு சரியா வரும்னு பாருங்க. இன்னிக்கில இருந்து நாலாவதுநாள் நல்லா இருக்கு, அப்புறம் அதுக்கு அடுத்து வர்ற ஆறாவது, ஏழாவது நாள் ரெண்டும் நல்லா இருக்கு.”

 

தாத்தா, “நாலாவது நாள் நிச்சயமும், ஆறாவது நாள் கல்யாணமும் வச்சிக்கலாமா?”

 

ஆரவ், “ஏன் நாலாவது நாள் நல்லாத்தான இருக்கு, அன்னிக்கே கல்யாணத்த வச்சுக்கலாமே” என யோசனையாய் கேட்க, கூடியிருந்த கூட்டம் மொத்தமும் அவனை பார்த்து சிரித்துவிட்டது.

 

கேலியின் காரணம் புரிந்ததும் ஆரவ், “ஹேய், நான் யதார்த்தமாத்தான் கேட்டேன். இப்பவே த்ரீ டேய்ஸ் ஆயிடுச்சு, அப்புறம் இன்னும் சிக்ஸ் டேய்ஸ் கழிச்சு மேரேஜ் முடிச்சுட்டு மும்பை போக லேட் ஆகும்னுதான்…..” அவன் முடிக்கும் முன் மீண்டும் ஒரு சிரிப்பலை உருவாக, அவனை காப்பாற்ற நிதிஷ் முன்வந்தான்.

 

நிதிஷ், “என்ன எல்லாரும் எங்க மாப்பிள்ளையவே பாத்து சிரிக்கீங்க, இப்டி சிரிச்சா மாப்பிள்ள கல்யாணத்துக்கு ரொம்ப அவசரப்படுறாருங்கிறது உண்மையாயிடாதா? இத்தன பேரு பொண்ணு பாக்க வந்திருக்கோம், பொண்ணு கையில காப்பி கீப்பி குடுத்து தர சொல்ல மாட்டீங்களா? பொண்ண கூப்பிடுங்க, பொண்ணயும் பாத்து கொஞ்சம் சிரிப்போம்” என்ற அவன் கருத்தை மாப்பிள்ளை வீட்டாட்கள் அனைவரும் ஆமோதிக்க, ஆரவ் கிண்டலை சமாளித்து மற்றவர்களை எதிர் கொள்ள முடியாமல், விரல்களால் முகத்தை மூடி வெட்க முகமூடி போட்டு கொண்டான்.

 

அத்தனை நேரம் அவளும் அங்கேதான் இருந்தாள், திடீரென உருவான இந்த பெண்பார்க்கும் படலம் அவளுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒரு சேர்த்து தர, அவர்கள் விருப்பத்திற் கிணங்கி அலங்காரத்திற்கு அழைத்து செல்லப்பட்டாள். அவள் வருவதற்குள் ஆரவ்வை ஜனனியும் நண்பர்கள் நால்வரும் பாடாய் படுத்தி எடுக்க தொடங்கினார்கள்.

 

ரிஷி, “மாப்ள சார், ப்ளீஸ் பொண்ண புடிக்கலன்னு மட்டும் சொல்லிடாதீங்க…”

 

ஜனனி, “உங்களோட கம்பேர் பண்ணா பொண்ணு கொஞ்சம் குள்ளம்தான், தயவு செஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மாமா…”

 

யஷ்மித், “உங்களுக்கு பொண்ணு கூட தனியா பேசனும்னு ஆசையிருந்தா இப்பவே சொல்லிடுங்க மாப்ள, அப்புறம் ஆளில்லாத நேரத்துல சுவரேறி குதிக்காதீங்க…” என ஒவ்வொருவரும் ஓவராக கலாய்த்து அவனை ஒருவழியாக்கி விட்டார்கள்.

 

அவள் வெளிவரும் முன்னே அவளின் கொலுசொலி வந்து விட, அனைவரும் தங்கள் பேச்சை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தார்கள். மல்லிகை தோட்டத்தின் நடுவே ஒற்றை ரோஜா மலராய் பிங்க் கலர் பட்டுடுத்தி, தளர பின்னிய கூந்தல் நிறைய மல்லிகை மலர் சூட்டி, காதிலும் கழுத்திலும் அளவாய் நகைகளும் இதழில் அளவில்லா ஒரு புன்னகையும் ஆபரணங்களாய் பூட்டி, சேலையின் நிறத்திற்கு போட்டியாய் முகமெங்கும் நாணம் பூசி, அதை யாருக்கும் தெரியாமல் மறைப்பதாய் நினைத்து தலை கவிழ்ந்தபடி வந்து நமஸ்கரித்தவளை கண்டு, இவ்வளவு நேரம் சலசலத்து கொண்டிருந்த அந்த குரூப் மொத்தமாய் க்ளீன் போல்ட்.

 

ஏற்கனவே ஜனனி ஆரவ் குடும்பத்தாளாய் மாறி முழுதாய் மூன்று நாள் ஆகிவிட்டதால், குறிவைத்து பெண் வீட்டாரை பழிவாங்கினாள், “பொண்ணு ஏன் உம்முனு இருக்கு?… பேச்சு வருமா வராதா?… எங்களுக்காக உங்க பொண்ண ஒரு பாட்டு பாட சொல்லுங்க…”

 

வஜ்ரா, “ஆமாமா… அதுக்கு அப்புறம் டான்ஸ்ம் ஆடனும், இல்லையா ஜனனி?” என்றிட மீண்டும் சிரிப்பலை.

 

ஜனனி, “அது அக்காக்கு ஈசி அண்ணா. பரதம் செமையா ஆடுவா, இந்த சிட்சுவேஷன்ல அவளுக்கு பாட்டு பாடத்தான் வராது, உளறி தள்ளுவா…” என்றவளை ஐவரும் புரியாமல் திரும்பி பார்க்க, ஜனனி, “உங்களுக்கு நெஜமாவே அதபத்தி எதுவும் தெரியாதா?” என்றாள்.

 

தாத்தா, “சந்தனா முறைப்படி பரதமும், பெயின்ட்டிங்கும் கத்துகிட்டா. பாட்டு கேள்வி ஞானம்தான், இருந்தாலும் அவ குரலுக்கு பாடினாலே கேட்க அவ்ளோ அழகா இருக்கும்.”

 

மற்ற நால்வரும் அவளை கொலைவெறியோடு பார்த்திருக்க, ஆரவ் மட்டும் அமைதியாய் இருந்தான். யஷ்மித், “இவனுக்கும் அது முன்னாடியே தெரிஞ்சிருக்கும்டா, வேணும்னே நம்மகிட்ட மறைச்சிருப்பான், துரோகி” என்றிட மற்றவர்களும் அவனுடன் ஆமாம் போட்டார்கள்.

 

ஜனனி, “அக்கா டீ இன்னும் வரல…” என்றதும் முதல் டாப்பிக்கை விட்டுவிட்டு, டீக்கு தாவினார்கள். ஆரவ்க்கு டீ தர அவள் நெருங்கியதும் யஷ்மித், “இதுதான்டா நீ கட்டிக்க போற பொண்ணு, நல்லா பாத்துக்க” என்றிட, ஜனனி, “ஆமா மாமா, அப்புறம் நாளைக்கு பொண்ணுக்கு மூக்கு சரி இல்ல முழி சரி இல்லன்ற பேச்சே இருக்க கூடாது” என்று ஒத்து ஊதினாள்.

 

அவர்கள் படுத்திய பாட்டில் பொறை ஏறாமல் டீயை குடித்து முடித்தவர்கள் ஒரு சிலரே. முடிவாக ஆரவ் விருப்பப்படி நான்காவது நாள் வெள்ளி கிழமையிலேயே கல்யாணம் செய்ய தீர்மானித்தார்கள். நாளை மாலை ஷாப்பிங், அடுத்தநாள் காலை குலதெய்வ பொங்கல், அதற்கடுத்த நாள் உறவினர் அழைப்பும் நிச்சயமும், நாலாவது நாள் காலை திருமணம் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாய் முடித்து கொள்வதென்று ஒரு மனதாக முடிவெடுத்தனர். அனைவருக்கும் உணவை ஆள் வைத்து சமைக்க ஏற்பாடு செய்திருந்தான் ஆரவ், ஆதலால் வீட்டில் பெண்களுக்கு வேலையே இல்லை. வீட்டின் பின்புறம் ஒதுங்க வைக்கப்பட்டு, பெரிய பெரிய அண்டாக்களில் உணவு வகைகள் எல்லாம் தயார் செய்ய பட்டது.

 

நிதிஷ் வந்த நிமிடம் முதலே பொறுப்பை அவன் எடுத்து கொண்டு ஆரவ்வை இந்த இன்பமான தருணங்களை முழுதாய் அனுபவிக்கும் படி செய்து தந்தான். இவர்கள் அவர்களை கவனிக்க அவர்கள் இவர்களை கவனிக்க இடையிடையே இளைஞர்கள் குறும்பும் கும்மாளமாய் புகுந்து கொட்டமடிக்க என இரவு உணவை விட உறவே அதிகமாய் ருசித்தது. மருதாணி வைக்கும் வேலையை இன்றே முடித்துவிட எண்ணி, பார்பியின் கையினை ஆளுக்கொன்றாய் பிடித்து மெகந்தி போட்டபடி வித்யாவும் ஜனனியும் ஓரமாக அமர்ந்து கொண்டார்கள்.

 

பார்பிக்கு கை வலிக்காமல் இருக்க உதவி செய்கிறோம், என்ற பேரில் பார்பி கையை தூக்கி பிடித்து கொண்டு ஆரவ்வும் யஷ்மித்தும் அவர்களுடன் அமர்ந்து கொண்டதினால் அவர்கள் ஐவருக்கு மட்டும் உணவு தனியாக எடுத்து வைக்கப்பட்டது. மற்ற நண்பர்கள் விருந்தினருக்கு தேவையான உபசரிப்பில் மூழ்கி விட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் மொட்டை மாடி படுக்கைகள் உறங்க தயாராகி இருக்க, ஏற முடியாத ஒரு சில பெரியவர்களை தவிர, அநேகம் பேர் குளிர் காற்றுக்கு மயங்கி அங்கே சென்றுவிட்டார்கள்.

 

பார்பி, “எனக்கு மெகந்தி காஞ்சு கை கழுவிட்டு சாப்பிட வர்றதுக்கு டைம் ஆகும். அதுவரைக்கும் நீங்க எல்லாரும் வெய்ட் பண்ண வேண்டாம், போய் சாப்பிடுங்க”

 

மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்கையில், ஆரவ் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். பார்பி, “ஐயோ வேண்டாம் ஆரவ், யாராச்சும் பாத்திட போறாங்க. நீங்க சாப்பிடுங்க…” சொல்பேச்சு கேட்கும் பிள்ளையா அவன்? போதும் போதும் என்றவரை அவளை படுத்தி எடுத்தான்.

 

வித்யாவும் ஜனனியும் தங்களுக்குள் ரகசியமாய் விஷம சிரிப்பு சிரித்துக்கொள்ள, யஷ்மித், “நான் எதையும் பாக்கலப்பா” என்று அந்த பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டான். பேருக்கு எதையோ தின்றுவிட்டு வித்யாவும் ஜனனியும் மாடிக்கு ஓடிப்போக, யஷ்மித் ஆரவ் சாப்பிடும் வரை உடனமர்ந்து கம்பெனி கொடுத்தான்.

 

பார்பி, “ஆரவ் எனக்கு தூக்கமா வருது, நான் மொட்ட மாடிக்கு போறேன். நீங்க ரெண்டுபேரும் பொறுமையா வாங்க” என கிளம்பிவிட்டாள். பாதி வழியிலேயே மனம் மாறியவள், ‘இப்பவே மெகந்தி நல்லா புடிச்சுக்கிச்சு, எதுக்கு காலைல வரைக்கும் வெய்ட் பண்ணணும்? இப்பவே போய் வாஷ் பண்ணிட்டு படுத்தா ராத்திரி முழுக்க நிம்மதியா தூங்கலாமே…’ என நினைத்து டைனிங் டேபிளை ஒட்டி இருந்த வாஷ் பேஷனில் கையை தேய்த்து தேய்த்து கழுவி கொண்டிருந்தாள்.

 

சில நிமிடங்கள் கழித்து கிச்சனுள் யஷ்மித், “இத எப்டிடா ஆரவ் சாப்பிடுற? என்னால சத்தியமா முடியலப்பா. அதுலயும் அந்த வத்த குழம்பு இருக்கே, ஷ்ஷ்ஷப்ப்பா… பயங்கர காரம். ரிஷியெல்லாம் சாப்பாட்ட அப்டியே கொண்டு போய் கொட்டிட்டான். நிஜமாவே உனக்கு இந்த டேஸ்ட் புடிச்சிருக்காடா?”

 

ஆரவ் மறுப்பாய் தலையசைத்துவிட்டு, “இத்தனநாளா பார்பி என் வீட்ல நார்த் இன்டியன் புட் தான் சாப்பிட்டா. ஒரு தடவ கூட ‘இது எனக்கு பிடிக்கல, நல்லா இல்ல’ ன்னு ஒரு வார்த்தை சொன்னதில்லடா. இங்க வந்ததுக்கு அப்புறம் இந்த மூணு நாளும் அவ ஆசையா கேட்டு வாங்கி சாப்பிடுறப்போதான் எனக்கு அவ சவுத் இன்டியன் புட்ட எவ்ளோ மிஸ் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சது. இது வரைக்கும் நான் சாப்பிடுன்னு சொல்லி எத குடுத்தாலும் மறுக்காம சாப்பிட்ட அவளுக்காக நான் கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேனா?” என்றபடி கிச்சனில் இருந்து வெளியேறியவர்கள், அங்கே பார்பி சுவற்றில் தன் உடல் பாரமெல்லாம் சாய்த்து கண்கலங்க நின்றிருந்தை கண்டார்கள். தாங்கள் பேசியது அத்தனையும் அவள் கேட்டு விட்டாள் என புரிந்ததும் யஷ்மித் அவர்களுக்கு தனிமை தந்து நாகரீகமாய் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

 

ஆரவ், “பார்பி… அது சாப்பாடு வந்து… ரொம்ப காரமா இருந்துச்சா… அதான் யஷ்மித்…” அவளோ அவன் பேசியது எதையுமே கவனிக்காமல் கீ கொடுத்த பொம்மை போல, கிச்சனை அடுத்து இருந்த ஒரு அறைக்குள் சென்றாள். அவனும் அவள் பின்னாலேயே செல்ல, அறை முழுவதும் கும்மிருட்டு. அவளை காணாமல் அவன் தேட, கதவின் பின்னால் நின்று இருந்தவள் கதவை மூடி தாழிட்டாள். சத்தம் கேட்டு ஆரவ் தன் போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்து அவளை பார்க்க, பாதிமூடிய கண்களுடன் கிறக்கமான பார்வையை வீசி விட்டு தலை குனிந்து கொண்டாள். ஆரவ் புரிந்து கொண்டு அவளை சகஜமாக்க நினைத்து, “ப்ளீஸ் மேடம், என்ன ஒண்ணும் பண்ணிடாதீங்க. எனக்கு இன்னும் மூணு நாள்ல கல்யாணம்….” என்றுரைக்க அவளிடம் மறுமொழி வரவில்லை.

 

ஆரவ், “என்னடா? என்ன ஆச்சு என் செல்லத்துக்கு?…” என நெருங்கி வந்து ஆதரவாய் தலைகோத, ஆறடி ஆண்மகனின் சட்டையை கொத்தாக பிடித்து தன் உயரத்திற்கு இழுத்து, கணக்கெடுக்க முடியாத அளவிற்கு முத்தங்களால் அவன் முகத்தை நிறைக்க தொடங்கினாள். அதன் பின்னும் அவனை இறுக்கமாக பிடித்திருந்த கைகளை தளர்த்தி அவனை விடுதலை செய்வாளில்லை. மேற்கொண்டு முன்னேற தெரியாமல் இறுதியாய் அவள் தந்த அழுத்தமான இதழ் முத்தத்தில் அவனுள் இருந்த சாத்தானும் விழித்து கொண்டது. இதுவரை நுகர்ந்து பழக்கமில்லாத மருதாணி வாசனை அவன் நாசி வழி புகுந்து உறங்கி கிடந்த உணர்வுகளை தூண்டிவிட்டு சிரித்தது.

 

மலர் குவியலாய் மார்பின் மேல் சரிந்தவளை, தன் உயரத்திற்கும் சற்று மேலாக தூக்கி பிடித்து தனது பதில் முத்தங்களை வழங்கி கொண்டே நடந்தான். இருவருக்கும் இடையில் காற்று புகுந்தால் கூட கடும் குற்றமென கருதி இயன்றவரை அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். இத்தனை நாள் அவன் தந்த காதலுக்கு பரிசாய் தன்னையே தந்து விட்டவளை, தயாராக இருந்த கட்டிலில் கிடத்தியவன் மெல்ல மெல்ல தன் வித்தைகளை அவளிடம் காட்ட தொடங்கினான். நான் நீ என்பதெல்லாம் மறந்து நாமாகும் தருணத்தில் அவனையும் தன்னுடலின் இன்னொரு பாகமாகவே கருதியவள், கண்களை மூடி அவன் கைகளின் ஊர்வலங்களை ரசித்து கொண்டிருந்தாள்.

 

விளையாட்டு முடிந்தது கண்ணே, வா விண்ணுலம் சென்று திரும்பலாம், என்று அவன் தன் இதழ்களை கொண்டு இரண்டாவது ஊர்வலத்தை ஆரம்பித்த பிறகு தான், அவனை ஆண் என்றும் தன்னை பெண் என்றும் உணர்ந்து விழித்தாள். இதற்குள் அவன் தன்வசம் இழந்து விட்டிருக்க, ‘வெளி உலகமாவது ஒண்ணாவது…’ என அவளும் அவனின் மன்மத கீதத்தில் மயங்கி குழைந்தாள். கத்திபோல குத்தும் மெல்லிய தாடியும், கிடைத்ததை தின்ன துடிக்கும் அவனின் கோரை பற்களும், சிங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்ட சிறு மானின் கதையானது அவள் நிலை. இதுவரை தவறென்று நினைத்த தெல்லாம் இன்று சரியாகி போனது, இதுவரை அசிங்கம் என்று நினைத்த தெல்லாம் இன்று அழகாகி போனது, இதுவரை அதிகபிரசங்கி தனம் என்று நினைத்த தெல்லாம் இன்று அத்யாவசியமாகி போனது.

 

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்

கண் தீண்டி உறைகிறேன்

கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்

நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்

எது எனதும் மறக்கிறேன்….

Leave a Reply

%d bloggers like this: