Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 53

பாகம் – 53

ன் சகாக்களுடன் கையில் கிடைத்த ஆயுதங்களை தூக்கி கொண்டு திடிதிடுமென கோபமாய் உள்ளே நுழைந்தான் தினேஷ், “யோவ் தாத்தா, இவ்ளோ வயசாச்சே தவிர கொஞ்சமாவது நியாயம் தர்மம் தெரியுதாய்யா உனக்கு? கோயில் பரிவட்டம் என்ன உங்க குடும்ப சொத்தா, அத நீங்களே தலைமுறை தலைமுறையா கட்சி பதவி மாதிரி உரிமையோட வச்சுக்க பாக்குறீங்க? நான் கோயிலுக்கு நன்கொடை தந்தது தப்புனு நேத்து சொல்லிட்டு, இன்னிக்கி நீ யாருக்கும் தெரியாம லச்ச கணக்குல பணத்த குடுத்து கோயில் கமிட்டி ஆளுங்கள விலைக்கி வாங்கிட்டயாக்கும். இங்கபாரு, நம்ம வம்சத்துல இப்ப நான் தான் மூத்தவன், இந்த வருஷம் எனக்கு பரிவட்டம் கட்டியே ஆவனும், சொல்லிட்டேன்…” என்று ஆர்ப்பரித்தான்.

 

அதே நேரம் வீட்டிற்குள் மேலும் புதிதாய் பத்து பேர் கையில் கன் வைத்து கொண்டு திடுதிடுவென உள் நுழைந்தார்கள். வெட்டருவா வேல்கம்பு குரூப்பை அவர்கள் சுற்றி வளைத்து நிற்க, பெண்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் பின் பகுதியில் இருந்த ஆரவ் கிச்சன் வழி புகுந்து அவசரமாய் ஓடி வந்தான். வீடு இருக்கும் நிலையை பார்த்ததுமே அவனுக்கு என்ன நிகழந்திருக்குமென புரிந்துவிட்டது. ஆரவ் தன் ஆட்களை, “கார்ட்ஸ் நோ.. நோ.. கன்னை கீழ இறக்குங்க. இவங்களும் இந்த பேமிலி ஆளுங்கதான், ஜஸ்ட் எ ஸ்மால் மிஸ் அண்டர் ஸ்டேன்டிங், நான் பேசிக்கிறேன்…” என்றான்.

 

உடனே வரிசையாய் ஒதுங்கி நின்ற கார்ட்ஸ், “சாரி சார், இவங்க எல்லாரும் கையில வெப்பன்ஸ் வச்சிட்டு வேகவேகமா உள்ள நுழைஞ்சதால சாகர் ஆளுங்கனு நினைச்சு சந்தேகப்பட்டு வந்தோம். எதுக்கும் நாங்க வெளியில நிக்கிறோம் தேவையினா கூப்பிடுங்க…” என அவர்கள் கையிலிருந்த ஆயுதங்களை ஒன்று விடாமல் வாங்கிவிட்டு வெளியேறினார்கள்.

 

ஆரவ், “ஹாய் தினேஷ்” என்றழைக்க அவன் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை. பின்னே, அவன் இந்த வீட்டிற்கு எவனோ ஒரு பணக்கார மாப்பிள்ளை வந்திருப்பதாய் கேள்வி பட்டு சண்டை போட முடிவு செய்து கூட்டமாய் வந்தான். இங்கே வந்து பார்த்தால், அவன் எதிரே நிற்பவன் பெரிய கொம்பாதி கொம்பனாய் இருக்கையில் அவனால் என்ன செய்ய முடியும்? ஏற்கனவே தன் உடன் வந்த நண்பர்கள் எல்லாம் கட்சி மாறி, ஏதோ காணாததை கண்டதைப்போல வாயை பிளந்து கிடக்கிறார்கள். இந்நேரத்தில் அவனுக்கு ஆரவ் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழி இல்லை.

 

ஆரவ், “கம் ஆன் தினேஷ் ஃபீல் ப்ரீ, வாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் உக்காருங்க. நாம எல்லாத்தையும் பேசி தீத்துக்கலாம்.” தினேஷ் அமரும் முன் அவன் அழைத்து வந்த சகாக்கள் எல்லாம் ஓடி போய் ஆரவ் அருகினில் அமர, அவனுக்கும் இப்போது அதை செய்ய வேண்டிய கட்டாயம். ஆரவ் காற்றிலே கயிறு திரிக்கும் வித்தையில் வித்தகனில்லையா, என்ன பேசினானோ! சில நிமிடங்களிலேயே அவர்கள் அனைவரும் ஏகபோக குஷியாய் அவன் சொன்னதிற்கெல்லாம் தலையாட்டி சிரிப்பதை கண்ட தாத்தா, தான் கையறு நிலையில் இருப்பதாய் உணர்ந்தார்.

 

மதியம் வரை ஆரவ்வின் குணம் புரியாமல் நிலை கொள்ள முடியாதபடி தவித்தவர், மதிய உணவை விருப்பமின்றி அரைகுறையாய் பேருக்கு கொறித்து விட்டு தன் அறைக்குள் போய் முடங்கி விட்டார். சுவற்றில் மஞ்சள் குங்குமத்தோடு சிரித்து கொண்டிருந்த பாட்டியின் படத்தினுக்கு எதிரே சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, சந்தனாவின் எதிர்காலத்தை நினைத்து கலங்கி கிடந்தார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர் அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு வாசலை பார்க்க, அங்கே ஆரவ் கையில் எதையோ எடுத்து கொண்டு வந்து நின்றிருந்தான்.

 

ஆரவ், “நானும் காலைல இருந்து பாக்குறேன், நீங்க எதையோ நினைச்சு ரொம்பவே குழம்பி தவிக்கிறீங்க. உங்களுக்கு என்கிட்ட எதாவது கேக்கனுமா? இல்ல நீங்க எதாவது சொல்லனும்னு நினைக்கிறீங்களா? எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க… எங்களோட காதல் கதைய தவிர நீங்க எத கேட்டாலும் நான் சொல்றதுக்கு ரெடியா இருக்கேன்…” என்றவன் கையில் இருந்த உணவை அவர் கையில் திணித்தான்.

 

தாத்தா அதை ஓரமாய் மேஜை மேல் வைத்துவிட்டு, “எனக்கு உன்ன பத்தி தெரிஞ்சுக்கனும்… நீ உண்மையிலயே நல்லவனா கெட்டவனான்னு முழுசா தெரிஞ்சுக்கனும்… நீ சந்தனாக்காக என்னெல்லாம் செஞ்சிருக்க, ஏன் செஞ்சிருக்கன்னு எனக்கு தெரிஞ்சுக்கனும்… உன்னால சொல்ல முடியுமா?”

 

ஆரவ், “சொன்னா உங்களுக்கு புரியுமா? உங்கள சுத்தி இத்தன பேர் இருக்குற வீட்ல ஒரே ஒரு இழப்பயே தாங்க முடியாம வாழ்ற உங்களுக்கும், சின்ன வயசில இருந்து தன்னந்தனியா வாழ்ந்த எனக்கும் ரொம்ப வித்யாசம் இருக்கு. பார்பிக்காக நான் ஏன் இவ்ளோ செய்றேன் தெரியனும், அவ்ளோதான? எங்க அம்மாவுக்கு அப்புறம் முதல்தடவை எனக்காக தான் பட்னியா இருந்து என் வயித்த நிறைச்சு பாத்தது என் பார்பி… என்னால பலதடவ மரணத்த தொட்டுட்டு வந்தவ என் பார்பி… என் அம்மா முகத்த திரும்ப பாக்க முடியாதான்னு நான் தவிச்சப்போ அவங்க உருவத்த உயிரோட்டத்தோட எனக்கு வரைஞ்சு தந்தவ என் பார்பி… என்னால கண்டவங்ககிட்ட எத்தனையோ ஏச்சு பேச்செல்லாம் வாங்கி தாங்கிகிட்டவ என் பார்பி… நான் தப்பு பண்ணிட்டேன் நானே சொன்னா கூட, அத நம்பாம, ‘என்ன ஏமாத்த பொய்தான சொன்னீங்க’ன்னு என்னை நம்புனவ என் பார்பி… எனக்காக அவ இன்னும் எவ்ளவோ செஞ்சிருக்கா, அதெல்லாம் சொன்னா நீங்க தாங்க மாட்டீங்க. இத்தன செஞ்சவள ஒருத்தன் வந்து கொல்ல ட்ரை பண்ணினா அவன சும்மா விடுவேன்னு நினைச்சீங்களா? இத பாருங்க…” என தன் போனை அவரிடம் நீட்டினான்.

 

அதன் தொடு திரைக்குள் ஒரு வீடியோ ப்ளே ஆனது, ஒரு சிறை அறைக்குள் யாரோ ஒருவனை ஐந்தாறு பேர் சேர்ந்த கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக கத்தி, கோடாரியால் வெட்டி வெட்டி விளையாடுகிறார்கள். ரத்தம் சொட்ட சொட்ட அவன் துடிக்கிறான், அழுகிறான், கெஞ்சுகிறான், இருந்தும் இரக்கமின்றி ஒரு மணி நேரமாய் அவனை துடிதுடிக்க வைத்து கொல்கிறார்கள். பார்த்து கொண்டிருந்த தாத்தாவே பதறிவிட, ஆரவ், “இவன் பேரு மனிஷ், ஆரம்பத்தில இருந்தே எனக்கும் இவனுக்கும் பிரச்சன இருந்தது. அதுக்காக என்னை பழிவாங்க, என்னோட பார்பி உடம்புல கிருமி ஏத்தி அவள கொல்ல பார்த்தான். நான் அவன கொன்னுட்டேன்.”

 

அவர் அதிர்ச்சி விலகாமல் இருக்க, ஆரவ் அடுத்த வீடியோவை ப்ளே செய்தான். ஆளில்லா நடு ரோட்டில் ஒருவனை ஓட ஓட விரட்டுகிறார்கள் சிலர். அவன் கீழே விழுந்ததும், முதலில் கால், பின் கை, அதையடுத்து தொடை என ஒவ்வொன்றாய் நிதானமாக சுட்டவர்கள், அத்தோடு அவனை விட்டுவிட்டு அவனை சுற்றி அமர்ந்து கொண்டார்கள். குண்டடி பட்டவன், “என்ன சுடுங்கடா… வலி தாங்க முடியலடா… என்ன சீக்கிரமா கொல்லுங்கடா…” என கெஞ்ச, அவன் உடலிலிருந்து கடைசி சொட்டு ரத்தம் வெளியேறும் வரை அவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டே இருப்பதை போல அந்த வீடியோ முடிகிறது.

 

ஆரவ், “இவன் மனிஷ்ஷோட அண்ணன், பேரு சாகர். மனிஷ் ஜெயிலுக்கு போனதுக்கு பழிவாங்க எங்களையும் உங்களையும் கொல்ல வந்தவன். இப்ப பாத்தத தயவு செஞ்சு பார்பிக்கு சொல்லாதீங்க, அவ பயந்திடுவா….” என்று அடுத்தை நகற்றிட போனில் வைதேகி சிரித்த முகத்துடன் வீற்றிருந்தார். “இவங்கதான் தாத்தா என்னோட அம்மா, பேரு வைதேகி. என்னோட சின்ன வயசிலயே எங்க அம்மா இறந்துட்டாங்க. என்னோட அப்பாவும் எனக்கு பனிரெண்டு வயசிருக்கும்போது இறந்திட்டாரு, நான் என் அப்பா போட்டோவ வச்சுக்க விரும்பல. என்னோட குலம் கோத்திரம் எல்லாம் எனக்கு தெரியாது, தெரிஞ்சுக்குற அவசியமும் இதுவரைக்கும் வரல…” என்றான்.

 

தாத்தா கண்களில் நீர் வழிவதை கண்டு, ஆரவ் அவர் காலடியில் அமர்ந்து, “இனிமே நீங்கதான் நான் நல்லவனா கெட்டவனான்னு முடிவு பண்ணணும். ஒருவேள உங்களுக்கு என்னை பிடிக்கல, கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொன்னா, அவள இங்க விட்டுட்டெல்லாம் போயிட மாட்டேன். அவ இல்லாம என்னால தூங்க கூட முடியல, எப்டி வாழ முடியும்? எங்கள நீங்க வேண்டாம்னு விரட்டிட்டாலும், அவ மனசில அந்த வலி தோணாத மாதிரி, இதுவரைக்கும் நான் பார்பிக்கு செஞ்சத விட இனிமே இன்னும் அதிகமாவே செஞ்சு சந்தோஷமா வச்சுக்குவேன். ஏன்னா பார்பி எனக்கு எல்லாத்துக்கும் மேல…” என்று முடித்தான்.

 

அவன் தன் மனதில் இருந்ததை இறக்கிவிட்டான், இனி முடிவை அவரே எடுக்கட்டும் என தலை குனிந்து அமர்ந்திருந்தான். தாத்தாவின் கரம் இதமாக அவன் தலை மேல் வருட நிமிர்ந்து பார்த்தவனை, “எப்படா கல்யாணத்த வச்சுக்கலாம்?” என்றார்.

 

ஆரவ், “இருங்க என் பொண்டாட்டிட்ட கேட்டு சொல்றேன், அவகிட்ட கேக்காம இனிமே எந்த முடிவும் எடுக்குறதில்லன்னு நேத்துதான் சொல்லிட்டு வந்திருக்கேன்…” என்றதும் தாத்தா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 

சந்தனாவும் காலையில் இருந்து தாத்தாவின் நடவடிக்கையை கவனித்திருந்தாள். இருந்தும் கேள்வி கேட்குமளவு அவளுக்கு துணிவில்லாததால் நடப்பதெல்லாம் அமைதியாய் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். திடீரென ஆரவ் தாத்தா அறைக்குள் சென்றதை கண்டதும், அவள் ஓரிடத்தில் நிலைகொண்டு நிற்க முடியாமல் தவித்த தவிப்பை, அவள் கொலுசின் சிணுங்கலே அனைவருக்கும் உணர்த்தியது. பார்பி, ‘உள்ள அவன் என்னெல்லாம் சொல்றான்னு தெரியலயே…’ என அவனை உடனே கண்ணால் காண துடித்தாள். அவள் வைத்த கண் வாங்காமல் அந்த அறை வாசலையே பார்த்திருக்க, ஆரவ்வும் தாத்தாவும் கார்மேகம் விலகிய வெண் நிலவாய் பேசி சிரித்தபடி வெளியே வந்தார்கள். விட்டால் அழுதுவிடுவேன் என்றிருந்தவளை தாத்தா அருகே அழைத்து, “கல்யாண தேதிய சீக்கிரமே முடிவு பண்ணிடுவோமா?” என்றதும் அவரை அணைத்து கொண்டு அழுதேவிட்டாள்.

 

பார்பி தாத்தாவின் மார்பில் சாய்ந்திருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு காதல் கொண்ட பார்வையில் அவள் ஆரவ்வை காண, தன்னவளுக்கான பதில் காதலை அவனும் தன் கண்ணில் காட்டினான். அது என்னவோ இந்த பெண்கள் அவர்களுக்காக நாம் மலையை புரட்டினாலும் தராத காதலை, அவர்களின் மனதிற்கு இனியவர்களுக்காக துரும்பை கிள்ளி போடும் நேரத்தில் தந்து விடுகிறார்கள்.

 

தாத்தா, “சாயங்காலம் வீட்டு ஆம்பளைங்க எல்லாரும் வேலை முடிஞ்சு வரட்டும், உக்காந்து பேசி முடிவு பண்ணலாம். தம்பி கல்யாண விஷயம் பேசுறதுக்கு, நீங்க உங்களுக்கு வேண்டியவங்க யாராவது வரணும்னு நினைச்சா வர சொல்லுங்க”

 

ஆரவ், “எனக்கு சொந்தம்னு சொல்லிக்க பார்பிய தவிர வேற யாரும் இல்ல…” என்றதும் பார்பி அவனை ஓரக்கண்ணால் முறைத்து பார்த்தாள். அவன் ஒண்ணும் தெரியாத பையன் போல தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டு, “ஷர்மா அங்கிளையும் என் மேனேஜர் நிதிஷ்ஷையும் இன்னிக்கே வர சொல்லிடுறேன். என்கேஜ்மென்ட், மேரேஜ் இங்கயே சிம்ப்பிளா முடிச்சிடலாம். ரிசப்ஷன் மட்டும் மும்பைல கிராண்ட்டா வைக்கிற மாதிரி இருக்கும். நீங்களே டேட் எல்லாம் பாத்து சொல்லுங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உங்க ரிலேட்டிவ்ஸ்க்கு நான் யாருன்னு சொல்லாமலே இன்வைட் பண்ணுங்க, இல்லன்னா கூட்டம் கூடி பிரச்சனையாகிடும். வீட்டு வேலைக்கு, சமையலுக்கு லோக்கல்ல ஆளுங்கள ஏற்பாடு பண்ண சொல்லி கார்ட்ஸ்கிட்ட சொல்லிடுறேன்.”

 

தாத்தா, “சரி தம்பி, உங்க இஷ்டம் போலவே செய்யலாம். சந்தனா நீ உன்னோட பிரன்ட்ஸ் யாரையாவது கூப்டனும்னு நினைச்சா முன்னாடியே சொல்லும்மா.”

 

பார்பி, “என்னோட க்ளோஸ் ப்ரன்ட்ஸ் அஞ்சு பேர மட்டும் கூப்ட்டுக்கிறேன், வேற யாரும் இல்ல” என்றாள்.

 

ஆரவ் நண்பர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மாடிக்கு ஓடியதும், பார்பி தாத்தாவிடம், “தாத்தா ஆரவ்க்கு சித்தியும் ஒரு தங்கச்சியும் இருக்காங்க. ஆரவ் இப்போ அவங்க கூட பேசமாட்டான்,  ஆனா அவங்கள விட்டுட்டு நாம பண்ண கூடாது. இப்போதைக்கி ஆரவ்கிட்ட இதபத்தி கேக்காதீங்க, நான் அப்புறமா பேசி சமாளிச்சுக்கிறேன்…” என பொறுப்பான குடும்ப பெண்ணாய் சொன்னாள்.

 

அவள் மீது ஒரு ஆச்சரிய பார்வை பார்த்தவர், “சரிம்மா…” என்றார்.

 

அந்த விஷயத்தை கேள்வி பட்டதுமே நண்பர்கள் ஐவருக்கும் அங்கே ஒரே கும்மாளமும் கொண்டாட்டமும்தான்.

 

யஷ்மித், “நான் நேத்து அவ்ளோ சொல்லியும் எப்டி தாத்தா மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டாரு? சம்திங் ராங். ஆரவ் தாத்தாக்கு பைத்தியம் கியித்தியம் புடிச்சிடுச்சாடா?”

 

பிரத்வி, “அதான… தாத்தாட்ட நீ என்னடா சொன்ன?”

 

ஆரவ், “உண்மைய சொன்னேன்…”

 

யஷ்மித், “நீ எக்கேடோ கெட்டுப்போ, எனக்கு இப்ப பேச்சுலர் பார்ட்டி வேணும்.”

 

ரிஷி, “இவன் கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு டைவர்ஸ் வாங்கி தந்திடுவான்டா…”

 

வஜ்ரா, “நீ இவன நம்புனதுக்கு ஜனனிய நம்பிருக்கலாம்டா, கண்ண மூடிட்டு உனக்கு சப்போர்ட் பண்ணுது அந்த பொண்ணு.”

 

ஜனனி என்ற பேரே யஷ்மித்தை கட்டி போட்டுவிட, அதன்பின் அங்கு நிற்க முடியாமல் பால்கனிக்கு நகர்ந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: