Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 9

அத்தியாயம் – 9

 

சென்னையை நெருங்கும் சமயம் “அப்பறம் உன் நிஜமான வேலையைப் பத்தி எப்ப சொல்லப் போற ஜெய்”

 

“நான் முன்னாடியே சொன்னேனே”

 

“ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் கூட செக்யூரிட்டி டீம், போலிஸ் எல்லாரும் நெருக்கமா இருக்குறது எனக்கு ஆச்சிரியமான விஷயம்”

 

“நான் இன்ஷூரன்ஸ் க்ளைம்ல இருக்கேன். என் பீல்ட்ல இந்த மாதிரி சில ஜேம்ஸ்பாண்ட் வேலைகளைப் பண்ணித்தான் பிராடுகளைக் கண்டுபிடிப்போம். வேலை மூலமா இவங்க எல்லாரும் எனக்குப் பழக்கம். இப்பவும் உனக்கு சந்தேகம் போகலைன்னா என்னால வேற எதுவும் செய்ய முடியாது”

 

“உங்கப்பா தியேட்டர் வச்சிருக்காருன்னு சொன்னேல்ல”

 

“ஆமாம் அதைத் தவிர கடைகள், நிலம்னு அங்கங்க இருக்கு. ஊர் பக்கம் பெயர் சொன்னா அடையாளம் சொல்ற அளவுக்கு ஓரளவு பரிச்சியமானவர்.

 

உங்கப்பாவைப் பத்தி நீ சொல்லவே இல்லையே. அவர் என்ன வேலை செஞ்சாரு”

 

“அவர் எக்ஸ்போர்ட் பிஸினெஸ்  பெரிய அளவில் செஞ்சாரு. அது சம்மந்தமா சைனா, ஜப்பான், யூரோப் எல்லா இடத்துக்கும் போயிட்டு வருவார். இன்னதுதான்னு குறிப்பா சொல்ல முடியாது. உணவு பொருளில் இருந்து விலை உயந்த பொருட்கள் வரை அதில் அடக்கம்”

 

நடுவில் ஒரிடத்தில் வண்டியை நிறுத்தியவள்.

 

“எனக்கு சூடா டீ  வேணும். உனக்கு ஏதாவது வேணுமா?” என்றாள்.

 

“எனக்கும் டீ சொல்லு…. பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன்” அவன் கழிவறைக்கு செல்லும் வரைக் காத்திருந்தவள் மின்னல் வேகத்தில் அலைப்பேசியை எடுத்து சந்தானத்தை அழைத்தாள்.

 

“அங்கிள் விநாயகமூர்த்தி சேலம் பத்தி விசாரிங்க. அவர்தான் ஜெய்ஷங்கரோட அப்பாவாம்”

 

“நான் ஈரோடுன்னு மறந்துட்டு பேசுறியே. விநாயகமூர்த்தியை எனக்கு நல்லா தெரியும். சேலத்தில் பெரிய ஆள், நல்ல குடும்பம். அவரோட பையனா ஜெய்…. “ வியந்தார்

 

“அப்பாடா… ஊர் பேர் தெரியாதவனோட உன்னை அனுப்பிச்சுட்டேனோன்னு வருத்தப்பட்டு இருந்தேன். இந்த வயசான காலத்தில் என்னை இப்படி கவலைப்படுத்தாதே அஞ்சலி”

 

“சரி… கொஞ்சநாள் மாயாவை உங்க வீட்டில் தங்க சொல்லிருக்கேன் அங்கிள். நான் வர வரைக்கும் அவளை பாத்துக்கோங்க”

 

“கண்டிப்பா…” அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அலைபேசியைத் துண்டித்தாள்.

 

வழியில் உணவை முடித்துவிட்டு இருவரும் அவளது சென்னை வீட்டை வந்தடைந்தார்கள். கொஞ்சம் தூசியைத் தவிர குறை சொல்ல முடியாதபடி இருந்தது வீடு. அந்த தூசியையும் வாட்ச்மேனின் மனைவி வந்து அரைமணி நேரத்தில் கூட்டி துடைத்துக் கொடுத்துவிட்டு சென்றாள்.

 

“இங்க திருட்டு முயற்சி எதுவும் நடக்கல போலிருக்கு”

 

“அப்பா கொலை செய்யப்பட்டதால் இந்த வீட்டுக்கு பலத்த காவல் போட்டிருக்காங்க. அதுவும் கூட திருட்டு நடக்காததுக்குக்  காரணமா இருக்கலாம்.

ஆனால் பெங்களூரில் கூட காவல் போட்டிருந்தும் ரெண்டாவது முறை திருட்டு முயற்சி நடந்ததே… எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”

 

“எனக்கென்னமோ அவங்க தேடுறது உன்கிட்ட இருக்குற மாதிரிதான் தோணுது. நீ சொன்ன தகவல்களை வச்சுப் பார்த்தா அவங்க தேடுறதை இன்னமும் அடையலைன்னு படுது. அதனால அது உன்கிட்டதான் இருக்கும். ஊரிலிருந்து என்னென்ன எடுத்துட்டு வந்த”

 

“என்ன எடுத்துட்டு வருவாங்க. இங்கேயே உடைகள் இருக்கு. அதனால ரெண்டு மூணு செட் மட்டும் உடைகள் மற்றும் பயணத்துக்கு வேண்டியது. அவ்வளவுதான்”

 

“அதைத்தவிர நகைகள், பணம், போன், பென்டிரைவ், கம்பியூட்டர் இதுமாதிரி ஏதாவது குறிப்பிடும்படியா இருக்கா”

 

“நகைகள் அணியும் வழக்கம் இல்ல. எல்லாம் பேன்சி ஐட்டம் தான். தென்.. போன் கூட பழசுதான். அதில் உருப்படியா எந்த விஷயமும் இருக்காது.  எலக்ட்ரானிக் திங்க்ஸ் எல்லாம் வீட்டில்தான் இருக்கு. ஆனால் அதில் யாரும் கை வைக்கல”

 

“வேற பழைய ஸ்டைலில் பேப்பர் பைல் ஏதாவது”

 

“அன்னைக்கு நம்ம பார்த்த ஆல்பம் மட்டும்தான். வேற எதுவும் இல்லையே”

 

“அப்ப அன்னைக்கே நான் சொன்ன மாதிரி உன்னோட ஆல்பமா இருக்க வாய்ப்பிருக்கு. இப்ப அந்த ஆல்பத்தை எடுத்தா ஒரு க்ளான்ஸ் பாத்துடலாம். நம்ம கண்ணில் முதல் தடவை படாதது கூட இப்பப் பட வாய்ப்பிருக்கு”

 

ஆல்பத்தை இருவரும் முதலிலிருந்து அலசத் தொடங்கினார்கள்.

 

ஒவ்வொரு படத்தையும் நிதானமாகப் பொறுமையாகப் பார்த்தார்கள். அந்தப் படத்தின் பின்னணியை சொல்லச் சொல்லிக் கேட்டான்.

 

“ஜெய் உங்களுக்கு உடம்பு சரியில்லை. போய் தூங்குங்க. மத்ததை காலைல பார்த்துக்கலாம்”

 

“இன்னும் கொஞ்சம் போட்டோஸ்தான் இருக்கு. புல்லா முடிச்சுட்டே படுக்கலாம்” என்றான்.

 

ஒவ்வொரு பக்கத்திலும் அதன் மூலைகளிலும் சலிக்காமல் அவன் அலசியதைப் பார்க்கவே வியப்பாக இருந்தது அஞ்சலிக்கு.

 

“இந்த அளவுக்கு நீங்க தேட அவசியமில்லை. ஒரு படத்தில் எங்கப்பா முகம் வாடி இருந்தது வாஸ்தவம்தான். அதைத் தேடி யாராவது இந்த அளவுக்கு அலைவாங்களா… என்னால நம்ப முடியல. ஒரு விலை உயர்ந்த கல்லு, வைரம் இப்படி இருந்தால் இப்படி பில்ட்அப் கொடுக்குறதில் நியாயம் இருக்கு. ஆனால் எனக்குத் தெரிஞ்சு அந்த மாதிரி எதுவும் இல்லையே”

 

“அப்ப உனக்கே தெரியாம ஏதோ ஒண்ணு இருக்குன்னு அர்த்தம். என்றவன் ஹுர்ரே…” என்று கத்தினான்.

 

“இங்க பாரு.. “ அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் இரண்டு படங்களுக்கு மத்தியில் இன்னொரு சிறிய படத்தை யாரோ ரகசியமாக ஒளித்து வைத்திருந்தனர்.

 

மூன்று படங்களையும் வெகு ஜாக்கிரதையாக எடுத்தாள். அதனைப் பிரிக்கப் போனவளைத் தடுத்தவன்

 

“ஒட்டிகிட்டு இருக்கு. உடனே பிரிச்சு எடுத்தா டேமேஜாயிடும். கொஞ்ச நேரம் காத்தாட விடு. நான் ஒரு டீ  போடுறேன். அதுக்கப்பறம் இந்தப் படத்தைப் பத்திப் பார்க்கலாம்.

 

டீ போட்டபடியே வீட்டை அலசினான். அது டவுன்ஷிப் போன்ற குடியிருப்புப் பகுதி. தனித்தனி வீடாக இருந்தாலும் தேவையான வசதியுடனும் பாதுகாப்புடனும் இருந்தது. வீடும் தரைப் பகுதி, முதல் மாடி என்று அவர்களுக்கு வசதிப்படி கட்டப்பட்டிருந்தது. மொத்தத்தில் அப்பார்ட்மெண்ட்டின்  பாதுகாப்பு, தனிவீட்டின் சவுகரியம்.

 

டீ குடித்து முடித்ததும் வெகு கவனமாக படத்தை எடுத்தான். அந்தப் படத்தில் அஞ்சலி மாத்திரம் தனியாக இருந்தாள். வேறு ஒன்றும் குறிப்பிடும்படி முக்கியமாகத் தோன்றவில்லை அவளுக்கு.

 

“இந்தப் படம் எடுத்த சூழ்நிலையை சொல்லு. அதுக்கு முன்னாடி உங்கப்பா ஓகேயா இருந்தாரா”

 

“அங்கிருக்குற ஆத்தில் குளிச்சுட்டு வந்தார். வரும்போதே அவர் முகம் சரியில்லை. சாப்பாடு வேண்டாம் கிளம்பலாம்னு செல்லும்போதுதான் அதை கவனிச்சேன். ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கலாம்பா ன்னு கேட்டேன். ஒரு நிமிஷம் யோசிச்சவர் இந்த மலைப்பகுதில நிக்க வச்சு எடுத்தார்”

 

“நல்லா யோசிச்சு சொல்லு, இந்தப் பக்கம் நீங்க நின்னுட்டு இருந்திங்களா இல்லை இங்க வந்து எடுத்திங்களா”

 

“ம்… இங்க வந்துதான் எடுத்தோம்”

 

அவளைத் தடுத்தவன் “இந்தப் பகுதியில் குறிப்பா நிக்க வச்சு எடுத்திருக்கார்னா.. ஏதாவது காரணம் இருக்கும்”

 

“இருக்கலாம்… எல்லாரும் கீழேயே நின்னு குளிச்சுட்டு போய்டுவாங்க. இந்தப் பகுதி நல்லா பழகுனவங்களுக்கு மட்டும்தான் தெரியும். எங்கப்பாவும் நானும் பல வருஷங்களா இந்தப் பகுதிக்குப் போறதால பொது மக்களுக்கு அதிகம் பரிட்சியமில்லாத பகுதிகள் கூட எங்களுக்குப் பழக்கம்”

 

“இங்கிருந்து பார்த்தா… கீழ கார் எல்லாம் தெரியுதே… எப்படி”

 

“சாதாரணமா கீழேருந்து பாக்குறவங்களுக்கு இது ஒரு செங்குத்தான பாறை மாதிரிதான் தெரியும். ஆனால் அதுக்குப் பக்கத்தில் இருக்கும் இந்த இடத்தை பாறைல முளைச்ச இந்தப் பெரிய மரமும், புதரும் மறைச்சுடும்”

 

ஜெய் யோசனையில் ஆழ்ந்தான். அஞ்சலி அவரது தந்தையுடன் களித்த அந்த நாளுக்கே மனதளவில் சென்றுவிட்டாள்.

 

“லெப்ட் சைட் தள்ளு, ரைட் தள்ளுன்னு சொன்னவர் கடைசில என்னை போகஸ் பண்ணாம எடுத்திருக்கார். அவர் மனசு குழம்பியிருந்திருக்கணும். அது புரியாம நான் சின்ன பிள்ளைத்தனமா போட்டோ எடுக்க சொல்லிட்டு… அவரும் அவுட் ஆப் போகஸ்ல எடுத்திருக்கார்”

 

தந்தையின் நினைவில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

“ஜெய்… “ துள்ளிக் குதித்து எழுந்தாள்

 

“இன்னொரு விஷயம்… இந்தப் படம் காணாம போச்சுன்னு அவர் சொன்னதா நினைவு. ஆனால் எப்படி இங்க வந்தது?”

 

“உங்கப்பாதான் வச்சிருக்கார். இந்த போட்டோவில் அவர் போகஸ் பண்ணது உன்னையில்லை அங்க தூரத்தில் நின்னுட்டு இருந்த காரை…” உறுதியாக சொன்னான்.

 

“காரா…”

 

அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு சிவப்பு நிற கார் ஒன்று தொலைவில் தெரிந்தது. அதன் ட்ரைவர் வெளியே நின்றிருந்தான்.

 

“யாரா இருக்கும்… “ அவள் வியந்தபோதே தனது கைப்பையிலிருந்து பெரிதாக்கிக் காட்டும் மெக்னிபையிங் கண்ணாடியை எடுத்தான் ஜெய்.

 

“என்னமாதிரி ஆள் நீ… பையில் மெக்னீப்பையிங் கிளாஸை வச்சுட்டே அலைவியா”

அவளைப் பொருட்படுத்தாது படத்தில் தெரியும் காரில் கவனமானான். ஆனால் ஒன்றுமே தெரியாமல் மசமசப்பாய் இருந்தது.

“நாளைக்கு எனக்குத் தெரிஞ்ச ஸ்டுடியோவில் தந்து இதை பெருசாக்கித் தர சொல்லணும்” என்றான்.

“ஆமாம் இதை எடுத்த காமிரா இருக்கா… “

“காமிரா இல்லை. வழக்கமா ஆல்பம் போடுவோம். அதே மாதிரி போட்டுட்டு திரும்புற வழியில் யாரோ காமிராவைத் திருடிட்டான்”

சொல்லும்போதே அது திட்டமிட்டத் திருட்டாக இருக்கும் என்றே இருவருக்கும் பட்டது.

“என்னை சுத்தி என்ன நடக்குது ஜெய்” மலங்க மலங்க விழித்தாள் அஞ்சலி.

“இதுவரை என்ன நடந்திருந்தாலும் பரவால்ல இனிமே அதைத் தொடராம பார்த்துப்போம்…

 

மனசைக் குழப்பிக்காம நீ போயி தூங்கு அஞ்சலி.”

 

“நீ…”

 

“நேத்திலிருந்து தூங்கிட்டுதானே இருக்கேன். இப்ப கொஞ்ச நேரம் புக்ஸ் எதுவும் படிச்சுட்டுத் தூங்குறேன். உன்கிட்ட புத்தகம் ஏதாவது இருக்கா”

 

“எங்க வீட்டில் பெரிய லைப்ரரியே இருக்கு… வா காமிக்கிறேன்”

 

தனது அறைக்குப் பக்கத்திலிருந்த நூலகத்தைக் காட்டித் தந்தாள்.

 

“படிச்சுட்டு புத்தகத்தை அதே இடத்தில் வச்சுடு… இல்லைன்னா எங்கப்பாவுக்குப் பிடிக்காது” அவள் கண்களில் கண்ணீரின் பளபளப்பைக் கண்டவன், அவளது தோளை மென்மையாகப் பற்றி முகத்தை நிமிர்த்தினான்.

 

“உங்கப்பாவுக்குப் பிடிக்காததை என்னைக்கும் செய்ய மாட்டேன். இப்ப நீ அழறது கூட உங்கப்பாவுக்குப் பிடிக்காதுதான்… அதனால…”

 

ஆவலுடன் அவனது இதழ்கள் அவளது இதழ்களைச் சிறை பிடித்தது. தூரத்தில் அலறிய ஹாரன் ஒலியைக் கேட்டு அஞ்சலி உணர்வுக்கு வந்தபொழுது அவனது கைகள் அவளது இடுப்பினை உடும்புப் பிடியாய் சுற்றியிருந்தது.

 

“நீ ரொம்ப மோசம்… இப்படி எல்லாம் பண்ண… நாளைலேருந்து வெளில தங்கிக்கோ” அவளது குரல் கீச் கீச்சென அவளுக்கே கேட்க,

 

“அழுமூஞ்சியை விட இந்த வெட்கப் படுற மூஞ்சி பெட்டரா இருக்கு” என்றான் அவளது காதருகே.

 

“போடா…” என்றபடி அவனைக் கீழே தள்ளிவிட்டுட்டுத் தனது அறைக்கதவை சாத்திக் கொண்டவளைப் பார்த்து சிரிப்புடன் தனது தலையைக் கோதிக் கொண்டான்.

 

இன்றைப் போல இனிமையாக இனி வரும் நாட்கள் இருக்குமா என்று என்னை தயவுசெய்து கேட்காதீர்கள்.

8 Comments »

  1. ஹீரோ இப்பத்தான் புல் போம்ல இருக்கிறார்னு பார்த்தா கடைசில இப்படிச் சொல்லிட்டீங்களேக்கா… அந்த போட்டோவில அப்பிடி என்ன தான் இருக்கு… வெய்டிங்

  2. Hi mam

    Story interestinga irukku. Waiting for next episode. Un idhayam pesugiren
    story eppo update pannuvinga

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: