Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 51

பாகம் – 51

ன் குறுந்தாடிகள் குத்துகிறதென்று பழிவாங்க என்னிதழையே கடித்து தின்றுவிட்டு, இல்லாத உன் மீசையை முறுக்கி உந்தன் வீரந்தனை காட்டுகிறாயடி… வித விதமான யுத்தங்களை, முழுக்க முழுக்க முத்ததிற்காகவே துவக்கி என்னை வழி நடத்த வைக்கிறாயடி… நான் காதலில் கசிந்துருகி நின் இடையில் சரியும் வேளைகளில், பேரழகு பெட்டகமாய் நாணியே எனை கொல்கிறாயடி… விதவிதமான என் காதல் கிறுக்கு தனங்களை ரசித்து ருசித்து அனுபவிக்கிறாயடி… உன் நினைவால் நான் உளறும் வார்த்தைகளை எல்லாம் கவியாய் வடித்து கொடுக்கையில், அமுத துளிகளாய் அள்ளி குடிக்கிறாயடி… என் ஆண் கர்வங்களை அழிக்கும் குறிக்கோளோடு, உன் ஆடை மூடிய அழகு சொர்கத்தை மறைத்து ஒளித்து விளையாடி எனை கொன்று பசியாறிட துடிக்கும் என் செல்ல ராட்சஷியடி நீ…

 

தென்றலாய் தொடங்கிய முத்த பரிமாற்றம், விரைவிலேயே மையம் கொண்ட புயலென மாறிட, எது யார் தந்தது என்றறிய விழையாமல், வினாடிக்கு வினாடி கூடிக்கொண்டே சென்ற அவர்களின் மையல் விளையாட்டால் முத்தச்சத்தம் கல் மண்டபம் முழுதும் எதிரொலிக்க தொடங்கியது. முத்த கடலில் மூழ்கி எழுந்தவனுக்கு முத்து முத்தாய் வேர்த்து விட, அவள் நாணம் பூசி தன் தாவணி முந்தானை கொண்டு அவன் முகம் துடைக்க வந்ததை பார்த்து அவன் கிறக்கமாய் சிரித்தான்.

 

பார்பி, “போங்க, நீங்க சிரிக்கிறீங்க, நான் போறேன்…” என்றிட “சும்மா இருந்தவன முந்தானையில முடிஞ்சு வச்சிட்டு இப்ப எங்க போறடி?” என்று மீண்டும் முத்த போர் ஆரம்பித்தான். அவர்களின் இரைச்சல் சத்தம் தாங்காமல் பப்லுவே விழித்து எழுந்து விட்டான். பார்பியை கண்டதும் பப்லு எழுந்து அவள் அருகில் வருவதை கண்டதும், அவள், “விடுங்க ஆரவ்… பப்லு முழிச்சிடுச்சு… இங்க வருது…” என அவன் கைகளிலிருந்து விலக முயன்றவளை ஆரவ் விட மறுத்து விட்டான். பப்லுக்கும் அவள் இருக்கும் நிலை புரிந்ததோ என்னவோ! அவர்கள் இருவரின் அருகில் வந்து படுத்து கொண்டு, அடிக்கடி துதிக்கையை மட்டும் ஆட்டி, ‘நான் இங்கே விழித்திருக்கிறேன்’ என்றுணர்த்தியது.

 

“ஆரவ் விடுங்க, பப்லு பாக்குது…”

 

“பாத்தா பாக்கட்டும், அவனுக்கு எதுவும் புரியாது.”

 

“ஆனா எனக்கு புரியும்ல, தள்ளி போங்க, அவன் பாத்துட்டே இருக்குறது எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு….” என்றாள். ஒரு அழுத்தமான முத்தத்திற்கு பின் அவன் அவளை தன் மடியிலிருந்து இறக்கி விட, அவள் பப்லு அருகில் சென்று அவன் தலைமேல் சரிந்து படுத்து கொண்டாள். பப்லு இதற்காக காத்திருந்ததை போல துதிக்கையை தூக்கி அவள் மடியில் போட்டு கொண்டது.

 

“ஹிம்… என்கிட்ட இருந்து உன்ன பிரிக்கிறதுக்குனே ஊருக்கு ஊரு எதாச்சும் ஒண்ணு இருக்குதுடி…” என்றான் பப்லுவை முறைத்தபடி.

 

பார்பி, “சாரி ஆரவ், நீங்க ரொம்ப ஆசையா இருந்தீங்க, என்னாலதான் இவன் முழிச்சிட்டான்” என்றவளிடம், ஆரவ், “ஹேய், நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா? இதுக்குபோய் ஏன் இவ்ளோ பீல் பண்ற? நமக்கு என்ன இன்னிக்கேவா வாழ்க்கை முடிய போகுது? இப்ப விட்டதையும் அடுத்த தடவ சேத்து ஸ்கோர் பண்ணிடுவேன்…” என்றான் குறும்பாய்.

 

“கொஞ்ச நேரம் முன்னாடி இதே விஷயத்துக்காக நான் என்ன குதி குதிச்சேன். நீங்க என்னடான்னா ஈசியா முடிச்சுட்டீங்க, உங்களுக்கு என்மேல கோபமே வராதா ஆரவ்?”

 

“உன்ன வெறும் காதலியாவோ இல்ல மனைவியாவோ மட்டும் பாத்திருந்தா நீ விலகினதும் கோபம் வருமோ என்னமோ. நான் உன்ன என்னோட எல்லாமுமா பாக்குறேன்டா, ஒரு நிமிஷம் காதலியா என் கைய புடிச்சுகிட்டு இருப்ப, அடுத்த நிமிஷம் சண்ட போட்டு என்னை அடிச்சு விரட்டி எதிரி ஆயிடுவ, அதுக்கு அடுத்த நிமிஷம் குழந்த மாதிரி எதாச்சும் டவுட்டு கேட்டு சேட்டை பண்ணுவ, அப்புறம் என் மனசுல இருக்குற கஷ்டத்த இறக்கி வைக்கிற அனுசரணையான பிரெண்டா இருப்ப, அப்பப்போ எங்க அம்மா மாதிரி அதிகாரம் பண்ணுவ, பசிக்கும் போது பொண்டாட்டி மாதிரி ருசியா சமச்சு தருவ, இப்டி தசாவதாரம் எடுத்தா அந்த அழகுலயே நான் என்னை மறந்து மயங்கிடுறேன்…..” என்று ராகம் போட்டு பாடினான்.

 

அவள் காதல் போதை கொண்டு கைகளை நீட்டி அழைக்க, இந்த நொடிக்காகவே காத்திருந்த அவனும் ஆசையாக ஓடிவந்து அவளை அணைத்தபடி படுத்து கொண்டான். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பப்லு இந்த முறை அவனை ஒதுக்கி தள்ளாமல் தானும் தன் துதிக்கையை வாகாக அவர்கள் மேல் தூக்கி போட்டு கொண்டது.

 

அங்கே அறைக்குள் தாத்தா, “இந்த நேரத்தில ஆரவ் தனியா எங்க போனான்?” அத்தனை கோபமாய் வந்தது அவர் வார்த்தைகள் அனைத்தும்.

 

ரிஷி, “சும்மா காத்து வாங்கலாம்னு போயிருக்கான்…” என்று பேசி மழுப்பியவன் மேல் அவருக்கு சந்தேகம் வர, அடுத்த அறையில் இருக்கும் சந்தனாவை பார்க்க நினைத்து அங்கு சென்று அந்த அறை கதவை தட்டினார். ஜனனி கதவை திறந்ததும் உள்ளே மடமடவென நுழைந்த தாத்தா, “சந்தனா அக்காவ கூப்டு” என்றார். அவரை பின் தொடர்ந்து நண்பர்கள் நால்வரும், அவரை சமாளிக்க பின்னாலேயே உள் வந்து நின்றார்கள். வித்யாவோ மாட்டிக்கொண்ட பயத்தில் உடல் விறைத்தபடி சுவர் பக்கமாக ஒதுங்கி நின்றுவிட, அவரிடம் அசராமல் நேருக்கு நேர் நின்று பதில் சொன்னது சின்னவள் ஜனனிதான்.

 

ஜனனி, “அக்கா இங்க இல்ல தாத்தா. கிச்சன்லயோ, இல்ல அம்மா ரூம்லயோ இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.”

 

தாத்தா, “பொய் சொல்லாத ஜனனி, சந்தனா இப்ப ஆரவ் கூடதான எங்கியோ போயிருக்கா?”

 

அவர் இருக்கும் மனநிலை தெரியாமல் ஜனனி, “ஆமா, அதுல என்ன தப்பு இருக்கு? ரெண்டு பேரும் மனசுவிட்டு கொஞ்ச நேரம் தனியா பேச நினைச்சிருப்பாங்க. புதுசா கல்யாணம் ஆனவங்கள பிரிச்சுவச்சது உங்க தப்புதான. மாமா என்ன சின்ன குழந்தையா, எல்லாத்துக்கும் உங்ககிட்ட வந்து பர்மிஷன் வாங்கிட்டு நிக்க” என்றவளின் கன்னத்தை அவர் கை பதம் பார்த்தது.

 

பெண்ணை கை நீட்டினால் பொறுத்து கொள்வானா யஷ்மித், தான் இருக்கும் இடம் அவர்களுடையது என்பதையும் மறந்து பொங்கி எழுந்து விட்டான். “இப்ப எதுக்கு நீங்க ஜனனிய அடிச்சீங்க? உங்களுக்கு ஆரவ்கூட பிரச்சினன்னா போய் அவன அடிங்க, தேவை இல்லாம ஒரு சின்ன பொண்ணுகிட்ட போய் உங்க வீரத்த காட்டாதீங்க”

 

தாத்தா, “பெரியவங்கன்ற மரியாதை இல்லாம பேசினா அடிக்காம, கொஞ்சுவாங்களா? அவ என் பேத்தி. இது என் குடும்ப பிரச்சனை, நீ தலையிடாத… மீறி தலையிட்டா உன்ன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.”

 

யஷ்மித் விறைப்பாக நின்று கொண்டு, “ஜனனிய அடிச்ச மாதிரி ஈசியா என்னையும் அடிக்க முடியும்னு நினைச்சிட்டீங்களா தாத்தா? யாராலயும் நெருங்க முடியாத ஆரவ்வையே நாலு பக்கமும் செக் வச்சு நகரவிடாம பண்ணி, தலைகீழா நின்னு தண்ணி குடிக்க வச்சவன் நான். அவனோட பிஸினஸ், விளம்பர கான்ட்ராக்ட், கிரிக்கெட்னு ஒவ்வொரு இடத்துலயும் அவனுக்கும் எனக்கும் வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு பனிப்போரே இத்தன நாளா நடந்துக்கிட்டு இருந்துச்சு. அதுக்காகவே வைஸ் கேப்டன் பதவிய பிரித்விகிட்ட இருந்து அடுச்சு புடுச்சு பிடுங்கி இருக்கேன் நான்.”

 

“ஆரவ்வும் சாதாரணமா எதையும் விட்டுற ஆள் இல்ல, அவன் பசு தோலுக்குள்ள இருக்குற புலி மாதிரி ரொம்ப ஆபத்தானவன், கடைசி வரைக்கும் விடாம எனக்கு எதிரா நின்னு அடிச்சான். வஜ்ரா மட்டும் என்னை பாத்து பார்பி பத்தின உண்மை எல்லாம் சொல்லலைன்னா நான் ஆரவ்க்காக இறங்கி வந்திருக்கவே மாட்டேன். எங்களோட பவர்க்கு முன்னால நீங்கள்லாம் ஜுஜூபி. நிமிஷத்துல நீங்க இங்க வாழ்ந்ததுக்கான தடயமே இல்லாத அளவுக்கு சுத்தமா துடைச்சு எறிய முடியும். எங்களோட ஒரு நாள் வேல்யூ என்னன்னு தெரியுமா? எல்லாத்தயும் விட்டுட்டு இவங்க நாலு பேரும் இங்க வந்தது ஆரவ்க்காக, அவனுக்கு ஒரு சப்போர்ட்டா இருக்குறதுக்காக. ஆனா நான் இங்க வந்தது அவனுக்காக இல்ல பார்பிக்காக…”

 

“அவள இவ்ளோ அழகா வளர்த்த குடும்பத்த பாத்து நல்லா நாலு கேள்வி கேட்கனும்னு தான் நான் இங்க வந்ததே. அவளுக்கு வெளி உலகம் தெரியல, சுயம்மா ஒரு முடிவெடுக்க தெரியல, ஒரு பிரச்சனன்னு வந்தா அத பேஸ் பண்ண தைரியமில்லாம திணருறா, இந்த அழகுல அவளுக்கு போய் நீங்க முதல்ல பாரின் மாப்ளய பாத்திருந்துக்கீங்க. அவதான் அப்டின்னு நினைச்சு இங்க வந்து பாத்தா, எல்லா பசங்களும் அப்டித்தான் வளர்ந்து இருக்காங்க… ஒரே ஒரு பொண்ணு மட்டும் புத்திசாலியா இருக்கா, அவளையும் கேள்வி கேட்காதன்னு அடிக்கிறீங்க.”

 

“நல்ல குடும்பம்டா சாமி… ஆரவ் என்னடான்னா அன்னிக்கி பார்பிய அடிச்சிட்டு, ஹஸ்பெண்ட் அன்ட் வொய்ப் பிரச்சனைல நீ தலையிடாதன்னு சொன்னான். நீங்களும் அதே விஷயத்த அதே மோடுல கொஞ்சம் கூட மாத்தாம அப்டியே சொல்றீங்க. நான் தெரியாமத்தான் கேக்குறேன் நீங்க ஆசப்படுற வார்த்தைய மட்டும்தான் அவங்க பேசனும்னு நினைச்சா அவங்களுக்கு எதுக்கு தனியா ஒரு மூளை? இதவிட பெட்டர் ஐடியா ஒண்ணு இருக்கு, பேசாம நாக்க வெட்டிட்டீங்கன்னா பேச்சே இல்லாம இருக்கும்ல…”

 

அவரின் மனமோ ஆரவ் அடித்தான் என்ற சொல்லிலேயே உளன்று கொண்டிருந்தது, அவர் மனம் படும் பாட்டை புரிந்து கொண்ட ரிஷி, “தாத்தா, நீங்க இவன் சொல்றத மட்டும் வச்சு முடிவு பண்ணாதீங்க. ஆரவ்க்கு பார்பின்னா உயிரு, அவளுக்காக மூணாவது மாடில இருந்து அவ கூடவே விழுந்து அவ உயிர காப்பாத்தினவன். அவனே அவள அடிச்சிருக்கான்னா நிச்சயமா அதுவும் அவளோட நல்லதுக்காக மட்டும்தான் இருக்கும்.”

 

யஷ்மித் பக்கத்தில் தேமேனென்று நின்றிருந்த பிரித்வியை ‘பளார்..’ என அறைந்துவிட்டு, “இவன் தினமும் நைட்டு தூக்கத்தில குறட்டை விடுறான். அந்த கெட்ட பழக்கத்த அவன் திருத்திக்கனும்னு அவனோட நல்லதுக்காக நான் அவன அடிச்சிருக்கேன். இப்ப நான் செஞ்சது சரின்னு சொல்றவங்க எல்லாம் கைய தூக்குங்க” என்றதும் அந்த அறை முழுவதும் பேரமைதி.

 

ரிஷி, “தாத்தா, ஆரவ் பார்பிய நல்லா கவனிச்சுக்கிறதுக்காக அவனுக்கு ரொம்பவும் இஷ்டமான கேப்டன் பொறுப்பையே விட்டு விலகினவன். இப்ப வரைக்கும் அவன திரும்ப கேப்டன் ஆக சொல்லி பிசிசிஐலயும் ரசிகர்கள்கிட்ட இருந்தும் எவ்ளோ பிரஷர் வருது தெரியுமா?”

 

யஷ்மித், “ஆமாமா… அவரு பெரிய கப்பல் வியாபாரி பாரு, ஏன்டா டேய் வீட்டுக்குள்ளயே ஒரு பொண்ண யாருக்கும் தெரியாம பூட்டி வச்சிருந்தா, அவன்தானடா வந்து அவள கவனிக்கனும்?”

 

ரிஷி, “அப்டி இல்ல தாத்தா, அவமேல இருக்குற அன்புலதான் அப்டியெல்லாம் செஞ்சான். அந்த டைம்ல அவங்களுக்கு வெளியில எதிரிங்க ஜாஸ்தி, அவளோட ஹெல்த் வேற அப்போ சரியில்லாம இருந்தது. அவ பத்திரமா இருக்கத்தான் அவன் அப்டி செய்ய வேண்டியதாயிடுச்சு. அவள எவ்ளோ விரும்பி இருந்தா, அவன் தன்னோட எல்லா சொத்தையும் அவ பேர்ல மாத்தி எழுதி இருப்பான்னு யோசிச்சு பாருங்க?”

 

யஷ்மித், “அவ கேட்டாளா? சொத்து வேணும் சுகம் வேணும்னு கேட்டாளா? இல்ல அத மாத்தினதுனால எதாச்சும் ஒண்ணு அவ லைப்ல மாறிடுச்சா? இல்லைல…”

 

ரிஷி, “தாத்தா இவன் உங்கள ரொம்ப கன்பியூஸ் பண்ண பாக்குறான். இவன் பேச்ச கேக்காதீங்க… ஆரவ்க்கு இந்த உலகத்துலயே ரொம்ப புடிச்சதுனா பார்பிதான், அவளோட சந்தோஷத்துக்காக அவன் என்ன வேணாலும் செய்வான். இப்ப இங்க வந்திருக்கிறது கூட உங்கள சமாதான படுத்துறதுக்காக இல்ல, அவளோட சந்தோஷத்துக்காக மட்டும்தான்.”

 

யஷ்மித், “இது மட்டும் கரெக்ட்னு நானும் ஒத்துக்கிறேன்… ஆரவ்வ நம்பாதீங்க தாத்தா அவன் பெரிய எமகாதகன், வேணும்னா பாருங்களேன், நீங்க மேரேஜ் விஷயத்தில சரின்னு சொன்னாலும், வேண்டாம்னு சொன்னாலும் அவன் நினைச்சத செஞ்சு முடிச்சிடுவான். ஆரவ் யாருக்குமே அடங்க மாட்டான்…”

 

ரிஷி, “பார்பிய தவிர…”

 

ஜன்னல் வழி வீசும் காற்றின் இரைச்சலை தவிர வேறெந்த சத்தமும் இல்லாத அளவு, அந்த அறை முழுவதும் நிசப்தமே சூழ்ந்து கொண்டது. கிணறு தோண்ட பூதம் வந்த கதையாக சின்ன விசாரணைக்காக வந்த தாத்தாவோ, அவர்களின் பேச்சினால் ஆரவ் பற்றி பாதி தெரிந்ததிலே அரண்டு மிரண்டு போய் நிலை குலைந்து போனார்.

 

கம்பீரமாய் உள் நுழைந்தவர் துவண்டு அமர்ந்ததை கண்டு வஜ்ரா அவரிடம் வந்து, “தாத்தா, இவங்க சொல்றதெல்லாம் அப்டியே நீங்க நம்பாதீங்க ப்ளீஸ். உங்க பேத்திக்காக நான் சொல்ற ஒண்ணே ஒண்ணு மட்டும் செஞ்சு பாருங்க… நாளைக்கு ஒருநாள் யாரையும் எந்த கேள்வியும் கேக்காம, ஆரவ் சோனுவ எப்டியெல்லாம் கவனிச்சுக்கிறான்னு வேடிக்கை பாருங்க, அப்புறம் அவனோட காதலோடு அளவு  என்னன்னு உங்களுக்கே புரியும்…”

 

தாத்தா தற்சமயம் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி, “இங்க நடந்தது எதையும் யாரும் அவங்க ரெண்டு பேருட்டயும் சொல்லாதீங்க…” என வஜ்ரா சொன்னபடி செய்து பார்க்க முடிவெடுத்து அறையை விட்டு வெளியேறுகையில் யஷ்மித், “தாத்தா… எதிர்த்து பேசினா மரியாதை இல்லனு அர்த்தம் இல்ல, ஒருத்தர் மேல வைக்கிற அளவுக்கதிகமான பாசமாவும் இருக்கலாம்….” என்றான் செல்லமாய் கண்ணடித்து.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: