Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 59

உனக்கென நான் 59

விமான பறவையின் இறக்கைகள் வலுவிழந்த காரணத்தினால் அது அந்த நவீன நகரத்தில் இளைப்பாற இறங்கியது. மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த நகரம் அது தமிழ்நாட்டின் தலைமையாக முடிவெடுக்க வேண்டுமல்லவா. மூளையில் நரம்புகளின் வேகத்தைபோல அனைத்து மனிதர்களும் இயங்கிய தருனம் அது. கிராமத்தின் அமைதியால் அடைகாக்கபட்டவள் அன்பரசி. அவளுக்கு இதெல்லாம் புதுமையாய் இருக்க சற்று பயத்தில்தான் இருந்தாள்.

சந்துரு அதை புரிந்தவனாக பருந்துவரும் போது குஞ்சுகளை காப்பாற்ற அடைகாக்கும் கோழி போல அவளை அனைத்துகொண்டு வெளியே வர சிதம்பரம் காத்துகொண்டிருந்தார். “வாங்க தம்பி அம்மா மகாலட்சுமி மாதிரி இருக்காங்க” என அன்பரசியை பார்த்துகூறவிட்டு காரில் ஏறினார்.

“சந்துரு எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்குடா நீங்க போங்க” என சுகுமார் கழன்றுகொள்ள முயற்சிக்க அவனது மனதிலிருந்தது ‘சுவேதா என்னாலதான பேசம மௌனமா வர்ரா நான் இல்லைனா நிம்மதியா இருப்பாள்ள’ என அவர்களிடமிருந்து பிரிந்துகொள்ள ஈடுபட்டான்.

“டேய் வாடா வீட்டுக்கு வந்துட்டு அப்புறம் எங்கவேனாலும் போ” இது சந்துரு

“ஆமா தம்பி வாங்க” என பார்வதி கூற “இல்லம்மா இன்னொரு நாள் கன்டிப்பா வாரேன் நம்ம வீடுதான எப்ப வந்தா என்ன” என சுவேதா எதாவது கூறுவாளா என பார்த்தான். ஆனால் அவள் சுகுவை திரும்பிகூட பார்க்கவில்லை.

“சரிப்பா சிதம்பரம் கார் எடுங்க! சுகு நாளைக்கு வரட்டும் நல்ல நேரத்துல போயிடலாம்” என சன்முகம் கூற கார் நகர்ந்தது. சுகு அந்த காரை பார்த்துகொண்டு நிற்க சுவேதா அவனை திரும்பி பார்த்தாள் ஏக்கத்துடன். அதை சந்துரு கவனிக்காமல் இல்லை.

தேவதையை சுமந்துவரும் தேராக அந்த கார் அந்த பிரம்மான்ட வீட்டினை அடைய பார்வதியின் கண்கள் விரிந்தன. தன்மகள் நன்றாக வாழபோகிறாள் என்ற மகிழ்ச்சி அவருக்கு.

தோட்டகாரர், வாட்ச்மேன் சமையல்காரர்கள் என வீட்டில் தனிகுடும்பம் கூட்டு குடும்பமாக இருபதுபேர் இருந்திருக்க்கூடும். அனைவரும் தங்களது புது முதளாலி அம்மாவை காண ஆர்வமாக நிற்க முனியம்மாள் ஆர்த்தி தட்டை எடுத்து வந்தார்.

“தம்பி நீ குடுத்து வச்சுருக்கப்பா இப்புடி ஒருதங்கத்த பிடிச்சுருக்கபாரு” என அவர் கூற “இல்லக்கா அன்புதான் குடுத்து வச்சுருக்கா சந்துருவ கட்டிகிறதுக்கு” என பார்வதி கூறினார்.

ஆர்த்தி எடுத்து உள்ளே செல்ல பால்கொடுத்து வரவேற்பு நிகழ்ந்தது. “டேய் அன்னா நீயே குடிக்காம அன்னிக்கும் குடுடா” என சுவேதா கூற அன்பின் அந்த சோகமுகத்தை கலைக்கலாம் என சந்துரு நினைத்துவிட்டு “அவங்க பூஸ்ட் மட்டும்தான் குடிப்பாங்க இந்த பால் எல்லாம் பிடிக்காதுன்னு நினைக்குறேன். என்ன அரிசி நான் சொல்றது சரிதான?”

அவள் குழப்பத்துடன் ஒருபாரவை வீச “என்னப்பா பொண்ணு ரொம்ப அமைதியா இருக்காங்க சந்துரு மாதிரி தைரியமா இருக்கவேனாமா” என ஒருவர் கூற “அட ஏங்க அண்ணே நீங்க வேற அவ பன்ற சுட்டிதனத்துக்கு நீங்கலாம் ஈடு கொடுக்கமுடியாது. புது இடம்ல அதான் இப்புடி இருக்காங்க” என்றான் சந்துரு

“ஆமா இவங்க ஊர்லபோய் கேட்டு பாருங்க” என சுவேதா மேலும் தூண்டிவிட்டாள்.

பின் அனைவரும் அன்பை கொஞ்சிவிட்டு தங்களது வேலைகளை பார்க்க செல்ல பார்வதி முனியம்மாளுடன் சேர்ந்துகொண்டு சமைக்க ஆரம்பித்தனர். சுவேதாவோ “அப்பா நான் வீட்டுக்கு போயிட்டு வாரேன் நந்தினி என்ன பன்னுதுனு தெரியல”

“இரும்மா அப்புறம் போகலாம்” என சன்முகம் தடுக்க

“இல்லப்பா நாளைக்கு வாரேன் அப்புறம் நாளைக்கு அன்னிய எங்க வீட்டுக்கு கூட்டிட்டி போயிடுவேன் எனி அப்ஜக்ஸ்ன்?” என்றாள்

“நோ அப்ஜக்‌ஷன்மா உனக்கு இல்லாத உரிமையா” என கூற “ஸ்வீட் அப்பா” என கூறிவிட்டு கிளம்பினாள்.

சன்முகமோ தன் மனைவியின் புகைபடத்தை பார்த்துகொண்டு “காவேரி நான் உன் ஆசைய நிறைவேத்திடேன்மா நீ நினைச்சமாதிரி அன்பரசிய உனக்கு மருமளா ஆக்கிட்டேன் ஆனா நீதான் அத பாக்க இங்க இல்ல எப்படி இருந்தாலும் நீ பாத்துகிட்டுதான் இருப்ப எனக்கு தெரியும். இனி எனக்கு இங்க வேலை இல்லைனுநினைக்குறேன். அப்பறம் உன்ன பாத்தும் ரொம்ப நாள் ஆச்சும்மா பேசாம என்னயும் உன்கிட்ட கூப்பிட்டுகோமா! நானும் உன்கிட்ட வந்துடுறேன்” என அந்த புகைபட காவேரியிடம் பேசிகொண்டிருக்க அவளிடமிருந்து ஓர் அன்பான பார்வை வீசிகொண்டிருந்தது.

“அம்மா உங்க பேரும்மா” என பார்வதி கேட்க “நான் முனியம்மாமா” என அந்த காய்கறிகளை கழுவிகொண்டே கூற அதை வாங்கினார் பார்வதி. “ஐயோ அம்மா நான் நறுக்கிகிறேன் உங்களுக்கு எதுக்கு சிரமம்”

“இருக்கட்டும்மா” என அதை வாங்கிநறுக்க ஆரம்பிக்க முனியம்மாள் அடுத்த வேலையை துவங்கினார்.

“உங்க பொண்ணு அழகா இருக்காம்மா எங்க சந்துரு தம்பிக்கு ஏத்த ஜோடிம்மா. இன்னொரு விசயம்மா”

“என்ன” எனபதுபோல பார்க்க

“அன்பரசிய தவர யாரையும் சந்துரு கல்யானம் பன்னிருக்க வாய்பே இல்லமா”

“என்னங்க சொல்றீங்க”

“ஆமா அவர் ரூம் சுவத்துல பாருங்க ரெண்டே பேருதான் அவர் உலகம் ஒன்னு என தெய்வம் பார்வதி இன்னோனு உங்க பொண்ணு அன்பரசிமா” என்று அவர்கூற பார்வதிக்கு மனம்முழுதும் நிறைந்துவிட்டது.

“ஆமா அம்மா நீங்க காவேரி அன்னிய பாத்துருக்கீங்களா?”

“அட என்னமா இப்புடி கேட்டுடீங்க; அவங்கதான் எனக்கு தெய்வம் அப்ப சின்ன வயசும்மா புழைக்க இங்க வந்தோம் நானும் என் புருஷனும். அவரு இந்த கட்டிட வேலைக்கு போவாரு அப்ப ஒருநாள் மாடில இருந்து விழுந்துட்டாரு; எனக்கு உலகமே இருன்டுடுச்சுமா”

“ஐயோ என்னங்க சொல்றீங்க”

“ஆமா கடவுள் நம்மகிட்ட நிறைய விளையாட்டு காட்டுவாறு ஆனா முடிவுல நல்லவழிகாட்டுவாரும்மா; அவர காப்பாத்த என்னபன்றதுன்னு தெரியல நிறைய பணம் செலவு பன்னும்னு சொல்லிடாங்க. நாங்களை புழைக்க வந்த இடத்துல இது என் சக்திக்கு ரொம்ப மீறுனதும்மா அவரு என்னவிட்டு கொஞ்சம் கொஞ்சமா பிரியுரத என்னால பாக்க முடியல அடுத்து என்ன பன்ன பேசாம ஒரு கோயில்ல போய் உட்காந்து அழுதேன். ஏழைவேற என்ன செய்யமுடியும். அப்ப சாமிமாதிரி ஒருபையன் வந்தான்.அம்மா ஏன் அழறீங்க அப்புடின்னு”

“மாப்பிளையா?”

“ம்ம் ஆமா தாயி அவரேதான். அப்பதான் காவேரி அம்மாவ பாத்தேன் அம்மா இந்த பெரிம்மா அழுதுகிட்டு இருக்காங்க அப்புடின்னு சொன்னதும் அந்த பொண்ணு என பக்கதுல உட்காந்துச்சு”

ஏன் அக்கா அழறீங்க

அத எப்படிம்மா சொல்லுவேன்என கண்ணீர் வடிக்க

என்ன உங்க தங்கச்சியா நினைச்சு சொல்லுங்க அக்கா என்னல முடிஞ்சத நான் பன்னுறேன்என அவள் கூறியதும் அந்த அம்பாளே கேட்பதுபோல இருக்க தன் கவலைகளை அழுது புலம்பினாள்.

ம்ம் எந்த ஹாஸ்பிட்டல் சொன்னீங்கஎன அவள் கேட்டுதான் தாமதம் முனியம்மாளின் கனவரை குணபடுத்தி அவளிடம் ஒப்படைத்துவிட்டாள். ஆனால் அவருக்கு ஒரு கால் பறிபோனது.

காவேரி அப்படியும் விடவில்லை தன் சிறிய மில் யூனிட்டில் கணக்கு வழக்கு பார்க்க அவரை போட்டாகிவிட்டது. கூடவே

அக்கா என்க்கு ஒரு உதவி பன்றீங்களாஎன காவேரி கேட்க

என்னம்மா உதவின்னு கேக்குற உத்தரவுன்னு சொல்லு நீ எங்களுக்கு எவ்வளவு உதவி பன்னிருக்கஎன முனியம்மாள்கூற

இல்லக்கா அன்னைக்கு ஒரு சாம்பார் அப்புறம் கிழங்குகூட்டு எடுத்து வந்தீங்கள்ள அதுநீங்க பன்னதா

ஆமாமா ஏன் நல்லா இல்லையா

இல்லக்கா சூப்பரா இருந்துச்சு

அதுக்கு என்னமா

இல்ல இதுவரைக்கும் என் ஹஸ்பென்ட்டுக்கு நான் ஒழுங்க சமச்சுபோட்டது இல்ல அவரும் எதுவும் சொல்லாம சாப்பிட்டுடுறாரு; ஆனா எனக்கு ஒரு பொண்டாட்டியா அவருக்கு நல்ல சாப்பாடு போட முடியலைனு வருத்தமா இருக்குமா ப்ளீஸ் எனக்கு கத்து தரரீங்களாஎன தயங்கிய அந்த காவேரி கண்ணுக்குள் நிற்க கத்துகொள்வதற்கு யாரிடம் வேனாலும் யாசகம் கேக்கலாம் என்ற அவளது குணமும் பிடித்துபோக அந்த வீட்டில் முனியம்மாள் சமையலுக்க இருக்க கூடவே காவேரிக்கு கோர்ஸ் ஆரம்பித்தது.

“ஆனா என் தங்கச்சி என்கிட்ட முழுசா கத்துகிறதுக்கு முன்னாடியே..!!” என முனியம்மாளின் தொண்டை அடைத்தது. பார்வதி அவரை பார்க்க “அவங்களோட ஆசை ஐயாவுக்கு நல்ல சாப்பாடு போடுறது அதான்மா நான் இங்கயே வேலைக்கு சேந்துட்டேன் நான் சாகுற வரைக்கும் என் இந்த கட்டை இந்த குடும்பத்துக்குதான்மா” என அழுதார். பின் பார்வதி சமாதனம் செய்ய சமையல் வேலைகள் தொடர்ந்தன.

அன்பரசி தன்னவன் அறைக்கு செல்ல அவளுக்கு ஆச்சரியம் எப்படி தன் சிறிய அறைக்குள் அவன் இத்தனைநாள் இருந்தான் என. கூடவே காணாமல் போன அவளது சிறுவயது புகைபடம் சுவற்றில் பெரிதாக மாட்டியிருக்க அவன் காலையில் எழுந்ததும் பார்க்கும் வகையில் அந்த மேஜையின்மீது வைக்கபட்டிருந்த காவேரி மற்றம் அரிசியின் புகைபடத்தை பார்த்து மனதில் மகிழ்ந்தாள்.

அவளை பொறாமைபட வைக்குமாரு ஒரு விஷயமும் அங்கு இருந்தது. அது அந்த கட்டிலில் அமர்ந்திருந்த அந்த டெடிபியர். “என்ன அரிசி மேடம் வீடு புடிச்சிருக்கா”

“ம்ம்”

“இங்க என்ன மாற்றம் வேனாலும் நீ பன்னிக்கோ அப்புறம் எதுனா வேனும்னா முனியம்மா அத்தய கூப்பிட்டுகோ” என தன் உடைகளை மாற்ற அவள் திரும்பிகொண்டாள்.

‘ஓஓ சந்துரு மத்த நாள் மாறி பன்னிட்டியேடா’ என தனக்குள் திட்டிகொண்டு உடனே அங்கிருந்த அந்த குளியலறைக்குள் சென்றான். “சே அரிசி இப்புடி பன்னிடியே நீ கொஞ்சநேரம் வெளிய இருந்திருக்கலாமே” என தனக்குள் திட்டிகொண்டாள்.

பின் டீசர்ட் டிராக் அனிந்துவெளியே வந்தான். “அரிசி நீ போய் பிரஸ் ஆகனும்னா ஆகிகோ” என கூற “ம்ம் சரிங்க” என உள்ளே நுழைந்தாள். பின் முகத்தை கழுவிவிட்டு பட்டுபுடவையை மாற்றிவிட்டு சாதாரன உடைக்கு மாறினாள்.

பிறகு அவன் அங்கு கழற்றிய துணிகளை எடுத்து ஊறவைத்தாள். “மேடம் என்ன பன்றீங்க” என சந்துரு குரல் கொடுத்தான். அவளை நீண்ட நேரம் காணாத்தால்.

“ஒன்னுமில்லைங்க”

“இல்லையே டிரஷ் மாத்த இவ்வளவு நேரமா அம்மாவேற கீழ சாப்பிட கூப்பிடுறாங்க” என அவன் கூற “நீங்க சாப்பிடுங்கநான் வாரேன்” என சத்தம் கொடுத்தாள்.

“என்னதான் அரிசி பன்ற நீ”

என அவன்கூற கதவைதிறந்துகொண்டு முகத்திலிருந்த வியர்வையை துடைத்தாள். அங்கு பார்த்தவன். “ஆமா உன்ன யாரு இத பன்ன சொன்னா அதுக்கு ஆள் இருக்காங்க அரிசி” என அவன்கூற “இல்லைங்க சும்மாதான இருக்கேன் அதான்”

“உங்க அம்மாகிட்ட நான் சத்தியம் பன்னிருக்கேன்மா உன்ன கஷ்டபடுத்தமாட்டேன்னு இந்தமாதிரியெல்லாம் பன்னி என்ன கஷ்டபடுத்தாத” என அவன் முகத்தை சோகமாக்கினான்

“இல்லைங்க இதுல என்ன கஷ்டம் இருக்கு” என அவள் கூற “ம்ம்” என அவன் முடித்தான் பேச்சுபோட்டியில் அவளை ஜெயிக்கமுடியாது அல்லவா!

“சரி வா சாப்பிடலாம்” என கையோடு கூட்டிசெல்ல சாப்பாடு முடிந்தது.

பின் அப்படியே அறைக்கு செல்ல அரிசி அசதியாக இருப்பது கண்ணாலையே கண்டான். “என்னமா தூக்கம் வருதா”

“ம்ம்”

சரி தூங்கு” என கூறிவிட்டு அந்த மடிகனினியை எடுத்து அமர்ந்தான். முற்றலும் புதிய இடத்திலும்தன்னவன் அருகில் அமைதியாக துயில்கொண்டாள். நேரம் ஓடியதே தெரியவில்லே அவளுக்கு பின் அவள் எழும் வரை காத்திருந்தான்.

தூக்கம்தான் பொரும்துன்பத்திற்கு மருந்து என அறிந்தவன் அவன். ஆதவன் ஓய்வெடுக்கும் நேரத்தில் எழுந்தாள். “பூஸ்ட் வேனுமா அரிசி” என கேட்க “மணி எவ்வளவுங்க”

“ம்ம் அங்க வாட்ச் இருக்குபாரு”

அது ஏழு என காட்ட”ஐயோ இவ்வளவு நேர்ம் தூங்கிட்டேனா” என தலையில் கைவைத்தாள்.

“அதுக்குதான் நைட் தூங்கனும்னு சொல்றது”

அவனை ஓரகண்ணால் பார்த்தாள். “சரி இந்த டைரிதான உன்ன தூங்கவிடாம பன்னுச்சு” என அதை காட்டினான்.

“இத நீங்க படிச்சீங்களா” என பதறினாள்.

“நீதான சொன்ன இது சஸ்பென்ஸ்னு! எனக்கு நீ வச்சுருக்குற சஸ்பென்ஸ நான் எப்படி இப்ப பாப்பேன் அப்புடி பாத்தா நீ ஏமாந்துற மாட்டியா” என கூற அவனை கட்டிகொண்டாள்

“ம்ம் ஆவுன்னா அன்பு எக்ஸைட் ஆகிடுறாங்கப்பா” என கிண்டல் பன்ன அவன் அந்த டைரியை படித்திருப்பதை அவள் அறியவிலை.

“ஏங்க நான் ஒன்னு கேக்கவா”

“ம்ம் உத்தரவு கொடுங்க மாகாராணி”

“மலரபாத்தீங்களா”

“ஆமா உன் கல்யானத்துல உன்னவிட அதிகமா சந்தோஷமா சுத்துனது அவதான் நீதான் மனசுல எதயாவது நினைச்சுகிட்டு உர்ருனு இருந்த” என கன்னதை கிள்ளினான்.

“அவ குழந்தை..!”

“ஆமா பிரியாகுட்டி அவளுக்கு என்ன”

“இல்ல நம்மலுக்கும் அதுமாதிரி” என அவள் அந்த ஜான்சியை பார்த்து பயந்துகொண்டுகூற சந்துருக்கும் அந்த எண்ணம்தான் அவளிடமிருந்துவிலகி நின்றான்.

“அன்பு நான் உன்கிட்ட ஏற்கனே சொன்னேன்ல எனக்கு ஒருத்திய முழுசா லவ் பன்னனும் அப்பறம் தான் இந்த குழந்தை இதெல்லாம் நம்பிக்கை மனச குழப்பிக்காம போய் சாப்பிட்டு தூஙகு”என அந்த டெடிபியரை கட்டிகொண்டு தூங்கினான். நடித்தான்.

அவனது அருகில் அமர்ந்தவள். என்ன செய்வது என்று தெரியாமல் அவனை பார்த்தாள்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: