Skip to content
Advertisements

ராஜிபிரேமாவின் ‘நான் என்பதே நீதானடி கண்ணம்மா ❤️ ‘

நிலா…பெயருக்கேற்ற அழகு…நான் சொல்வது முகத்தில் மட்டும் அல்ல…அவள் குணம்… அத்துனை அன்பு நிறைந்தவள்..
தனக்கு பிடித்தவர்களின் மகிழ்ச்சி காண எத்துனை எல்லையும் செல்லக்கூடியவள்…சூர்யாவுடன் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆயிற்று ஆனால் அவனது அன்பில் நித்தமும் கைதாகி காதலில் திளைத்துக் கொண்டிருந்தாள்…

வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான்… ஆனால் அவளே எதிர்ப்பார்க்கா வகையில் அமைந்தது அவள் வந்த புகுந்த வீடு…வழக்கமாய் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை எல்லாம் அங்கு இல்லை…அத்துனை அன்பை பெற்றாள் அவள் மாமியாரிடமிருந்து….அவளை பொறுத்தவரை அவளின் இன்னொரு அன்னை அவர்…மாமியாரே இவ்வாறு எனில் மாமனாரை சொல்லனுமா என்ன…தனக்கு பெண்ணில்லா குறையை தீர்க்க வந்தவள் எனக் கருதி நிலாவை தங்கமாய் வைத்துக் கொள்வார்…

அம்மா…என்ன இன்னைக்கு சுசியம்லாம் செஞ்சுருக்க…என்ன விஷயம்…

அதெல்லாம் ஒன்னுமில்லடா…நிலா கேட்டானு செஞ்சேண்டா…

அம்மாவை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்துட்டு…அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவர் மா…

என்னடா ஓவர் என் மருமக ஆசைப்பட்டத செஞ்சு தரது ஓவரா…

நீ அவ வந்ததுக்கு அப்புறம் என்னயே அம்புட்டு பாசமா பாத்துகிறது இல்ல…போ மா எனக்கே பொறாமையா இருக்கு…என அவன் போலியாய் கோவமிட…

உனக்கு வேற வேலையே இல்லடா போ…

செரிமா அவ இன்னும் வரலியா…

இல்லடா இன்னைக்கு அவ பிரெண்ட மீட் பண்ணனும்னு கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னாடா…

பாத்தியா அதயும் எங்கிட்ட சொல்லல…அவளுக்கும் உன்மேல தான் பாசம் அதிகம் போல என நைசா சொல்ல…

அட போடா எப்போ பாரு என்னத்தையாச்சும் சொல்லிக்கிட்டு…

அம்மா போன் அடிக்குது எடேன்…

எனக்கு அடுப்படில வேல இருக்குடா நீ எடுடா…

ம்ம்ம்…ஹல்லோ…ஆங் சொல்லுங்க…

ஹெல்லோ சூர்யாவா…

ஆமாங்க நீங்க…நான் நிலா பிரெண்ட்…ஈவ்னிங் நானும் அவளும் எங்க வீட்டுக்கு போய்ட்டு இருந்தப்போ நாங்க எதிரில வந்த பைக்ய அப்புறம் தான் பாத்தோம்…சோ திருப்ப ட்ரை பண்ணப்போ ரெண்டு பேரும் கீழ விழுந்துட்டோம்…

வாட்ட்ட்ட்ட்ட்….நிலாக்கு என்னாச்சு….அவ எப்படி இருக்கா…குரலில் அவ்வளவு பதற்றம்…

இல்ல அவளுக்கு ஒன்னுமில்ல நல்லா இருக்கா…கொஞ்சம் தள்ளி முள் நல்லா இருந்த இடத்தில விழுந்துட்டா…

அப்புறம் என்னாச்சு…அய்யோ என்னாச்சு அவளுக்கு சொல்லுங்க… அழுகிற தொனியில் அவன் கேட்க…

ஒண்ணுமில்ல அதுனால கை காலில கொஞ்சம் சிராய்பு தான்…ஹாஸ்பிடல்லாம் போய்ட்டு வந்துட்டோம்…இப்போ நல்லா இருக்கா…எங்க வீட்ல தான் இருக்கா…

பெரிய பிரச்சனை இல்லல…பீளீஸ் மறைக்காம சொல்லுங்க…

இல்லல சூர்யா…அதெல்லாம் இல்ல…

நான் இப்பவே வரேன் எனக்கு அவள பாக்கனும்…

ம்ம் சரி…

அம்மா நான் இப்போ வந்துடுரேன்…

எங்கடா போற…நிலா வந்தா தேடுவாடா இரு…ஆமா ஏன் ஒருமாதிரி இருக்க…என்னாச்சு டா…சொல்லு…

அதெல்லாம் ஒன்னுமில்லமா…அம்மாவிடம் எத்தனை கணம் மறைக்க முடியும்…உடைந்து அழுதான்…அத்துனையும் அம்மாவிடம் கூறினான்…

என்னடா ஆச்சு அவளுக்கு… என்னால இருக்க முடியாது நானும் உன்னோட வாரேன்…

அனைவரும் கிளம்பிச் செல்ல…

வாசல் கதவு லைட்டாக திறந்தே இருக்க உள்ளே சென்றனர்…வீடு முழுக்க இருட்டிக் கிடந்தது…

சட்டென Happy 50th wedding anniversary My dearest Lovely Athai and Mama…என குரல் கேட்க வெளிச்சம் வரவும் சரியாய் இருந்தது…

புரிந்தது இவர்களுக்கு அத்துனையும் நாடகமென…

நேராய் அத்தையிடம் சென்ற நிலா முதலில் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு…பீளீஸ் மன்னிச்சுடுங்க அத்தை…உங்கள நான் வரவக்கணும்னு நினைச்சேன் அதான் இப்படி பொய் சொன்னேன்…உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் அத்தை இப்படி பண்ணேன்…சாரி அத்தை…

அவள் அத்தைக்கு உள்ளுக்குள் முதலில் கோவம் இருந்தாலும் அது தங்களுடைய சந்தோஷத்திற்க்கு என எண்ணும் போது…

அதுக்காக இப்படியாமா சொல்லுவ …எப்படி பதறியடிச்சுட்டு வந்தோம்னு தெரியுமா…என மெலிதாய் கண்டிப்பு காட்ட…

மன்னிச்சுடுங்க அத்தை இத நாம வீட்டுலே வச்சுருக்கலாம்…இந்த வீட்டு தாத்தா மாமாவோட ரொம்ப பழக்கம் அந்த காலத்தில இருந்தே…அவங்களால நடக்க முடியாது…அவங்க உங்களை ஆசிர்வாதம் பண்ணணும்னு ஆசைப்பட்டாங்க…நீங்க உங்க கல்யாண நாளை அவங்க வீட்டுல கொண்டாடணும்னு சொன்னாங்க அத்தை…நீங்க நான் வேற ஏதாச்சும் சொன்னா வந்திருப்பீங்களானு தெரியல…இந்த வயசுல எதுக்குமா இதெல்லாம்னு மறுத்திருப்பீங்க…அதான் அத்தை இந்த சர்ப்ரைஸ்…எது சொன்னாலும் நான் பண்ணது தப்பு தான்…மன்னிச்சுடுங்க அத்தை…

சரி விடுமா எத்தனை மன்னிப்பு கேட்ப…எனக்கு புரியுது…ஆனா ஒன்னு இனி இப்படி பண்ணாத…அவளோ தான் சொல்லிட்டேன்…

சரி அத்தை…வாஞ்சையுடன் மருமகளை தழுவிக் கொண்டார்…

மாமா நீங்களும் மன்னிச்சுடுங்க மாமா…

உங்க அத்தையே மன்னிச்சுட்டா அப்புறம் என்னமா…விடுமா நீ எங்களுக்கு தானே இவ்வளவும் பண்ண…

அடுத்ததாய் சூர்யாவை பார்த்தாள்…கோவத்தின் உச்சியில் அவன் இருப்பது புரிந்தது…

எதுவும் பேசாமல்…கண்களால் மன்னிப்பு கேட்டாள்…அவன் முறைத்து விட்டு அம்மாவின் அருகில் நின்றுக் கொண்டான்…

தன் நயன மொழியும் தோற்றுப்போக எப்படியும் சமாதானப்படுத்திடலாம் என இவளும் அடுத்த ஏற்பாடுக்கு ஆயத்தமானாள்…

கேக் கட்டிங்…நிரம்ப மகிழ்ச்சியும்…மன நிறைவும் ஆசிர்வாதங்களும் தாராளாமாய் கிடைக்க…திருப்தியாய் அனைவரும் கிளம்பினர்…

வீட்டிற்குள் நுழைந்தும் நிகழ்வுகளை அசைப்போட்ட படியே அனைவரும் இருக்க…சூர்யாவின் முகத்தில் மட்டும் செழிம்பே இல்லாததை உனர்ந்தாள்…

ஒரு வித கவலையுடன் சரி அத்தை கொஞ்சம் அசதியா இருக்கு நான் தூங்குறேன் என நிலா சொன்னதும்…

அம்மா அவளுக்குத் தானே சுசியம் செஞ்ச…கொடுக்கலயா…(என்ன தான் கோவமிருந்தாலும் இந்த அன்பை காட்ட தவறுவதில்லை இந்த காதல் கொண்ட மனது)

பாத்தியாடா மறந்தே போயிட்டேன்…நல்ல வேளை சொன்ன…

அவள் அத்தை அவளுக்கு எடுத்து வந்து அவளுக்காய் செய்த சுசியத்தைக் கொடுக்க…(தனக்காய் ஒருவர் மெனக்கெட்டு செய்யும் சிறிய செயல் கூட தரும் ஆனந்தம் வேறு எதற்கும் ஈடாகாது) அத்தையின் அன்பில் மட்டுமில்ல…கணவனின் மெல்லிய பாசத்திலும் நெகிழ்ந்துப் போய் சூர்யாவை பார்த்து காதலாய் புன்னகைக்க…அவன் கோவம் மாறாமல் தன் அறைக்கு சென்றான்…

இவள் சாவகாசமாய் சாப்பிட்டு விட்டு மெதுவாய் அறைக்குள் வந்தாள்…இவள் வருகையை எதிர்நோக்கி அவனும் தூங்காமல் விழித்திருந்தான்…

அவன் முகம் கனலாய் இருந்தது கண்டு கொஞ்சம் பதறி தான் போனாள்…

இவளை பார்த்ததும் கதவை சாத்து எனக் கூறினான்… கேள்வியுடனே கதவை அடைத்தவள் முகம் வெளுத்துப்போனது…ஏதோ பெருசா வாங்கிக் கட்டப்போறேன் என மனதில் நினைத்துக் கொண்டாள்…

நினைத்தவாறே…என்னமா நல்லாசாப்பிட்டியா…

ம்ம்ம் என நிலா தலையாட்ட…

அவளே எதிர்ப்பார்க்கா வகையில் கோவம் தாளாமல் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டான்…

கன்னத்தில் கை வைத்தவாறே கீழே விழுந்தாள்….எதுவும் பேசாமல் அழுது கொண்டே தூங்கிப் போனாள்…

அவள் தன் பெற்றோரின் சந்தோஷத்திற்கு தானே பொய் சொன்னாள்..எத்தனை மருமகள்கள் இன்று இப்படி இருக்கிறார்கள்… கோவம் கண்ண மறைச்சு இப்படி அடிச்சுட்டேனே என தான் அடித்த கையயே வெறித்துப் பார்த்தபடியே நினைத்தான்…

அவள் அருகில் சென்று அமர்ந்தான்…அவளை எழுப்ப முயல்கையில் தான் கவனித்தான் அவள் கன்னத்தில் வரி வரியாய் தன் கையின் தடங்கள்… மனம் கலங்கிப் போனான்…விழி நீரை நிரப்பிருந்த்து…

நிலா எந்திரிடா…பிளீஸ்…சாரிடா… மாமா ஏதோ கோவத்தில அடிச்சிட்டேன்…

அவள் மெதுவாய் கண்கள் சொருக எழுந்தாள்…அவள் கண்களில் இருந்த மிரட்சி அவன் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது…

ஐ யம் சாரிடா நிலா…ஏதோ உன்மேல உள்ள அளவு கடந்த பாசத்தில …நான் ஏதோ கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்…பிளீஸ் டா
..இந்த மாமாவை மன்னிச்சுடு நிலாவின் கைகளை கெட்டியாய் பிடித்துக் கொண்டான்…

எனக்கு தெரியும் நீங்க கோவமா இருக்கீங்கனு…திட்ட தான் செய்வீங்கனு நினைச்சேன்…அடிப்பீங்கனு நினைக்கல…

அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளை இறுக்கமாய் வாரி அணைத்துக் கொண்டே சாரி செல்லம் எனக் கூறியவாறே அவன் அடித்த கன்னத்தில் அழுத்தமாய் முத்த மழை பொழிந்தபடி…இனி வலிக்காது…அவள் நாணத்துடன் புன்னகைக்க உங்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த கன்னக்குழி சிரிப்பு தான்…

ஓ அதான் கன்னத்தில அடிச்சிங்களோ என அவள் நக்கலாய் கேட்க…

ஹேய்…லவ் யூ டி கண்ணம்மா

“உன் விழியின் காதலில் சிறையுண்டு நித்தமும் உன்னில் கரைந்திட ஆசை….” ️
பின்குறிப்பு:

நிறைய பேருக்கு படிக்கிறப்போ அந்த சுசியம் நா என்னன்னு ஒருவேளை தெரிஞ்சுக்கனும்னு தோணிருக்கலாம்…அதைப் பற்றி மட்டும் ஒரு சில வரிகள்… அது தென் மாவட்டங்களில் செய்யக்கூடிய ஒரு பழமையான இனிப்பு வகை…குறிப்பா திருநெல்வேலி மற்றும் நாஞ்சில் நாட்டுல ரொம்ப செய்வாங்க…ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு பெயரில விளிப்பாங்க…(சுசியம்…சுகி யன்…சுழியம்…இந்த மாதிரி)…

— ராஜிபிரேமா  ️

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: