Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 58

உனக்கென நான் 58

அன்பரசியின் குழந்தை உள்ளத்தை ரசித்துகொண்டே தூக்கதை தொலைத்த சந்துரு காலத்தின் ஓட்டதை உணர்ந்திருக்கவில்லை. அவனுக்கு அது தேவைபடவில்லை எனபதே உண்மை. மணிமுள் ஐந்தை அடைய அன்பரசி விழித்துகொண்டாள்.

“தூங்கு அரசி நாலுமணிதான் ஆகுது” என்று அவன் கூறியதன் அர்த்தம் இந்த வீட்டில் தன் உரிமை அவ்வளவுதான் என அவள் நினைத்து அழுத அந்த நிமிடத்தால்தான்.

“இல்லைங்க நான் எழுந்திருகுற நேரம்தான்” குரலில் சுரத்தை இல்லை.  எல்லாம் அந்த டைரி பன்னிய வேலைதான். “இல்லமா தூங்கு நைட் நீ லேட்டாதான தூங்குன” என்று அவனும் விடவில்லை.

“அம்மா திட்டுவாங்க நான் எதாவது அம்மாக்கு வேலை செய்றேன்” என அவள் கூற அதுவரை இல்லாத அம்மா என்ற பாசம் தெரிந்தது. ஒரு பொருள்தன்னை விட்டு போகும் போதுதான் அதை பாசமாக பார்த்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் இயல்பு போல.

“அத்த எதுவும் சொல்லமாட்டாங்க”

அவள் மௌனமாக இருந்தாள். “அரசி நீ ஏன் டல்லா இருக்க” என்றான் அவள் முகத்தை வைத்து. அவள் எப்பிடி கூறுவாள் அந்த டைரியை பற்றி. அப்படி அவனுக்கு தெரிந்தால் குழந்தைக்கு ஒத்துகொள்ள மாட்டான். “ஒன்னுமில்லைங்க” என்று சமாளித்தாள்.

“நான் ராத்திரில இருந்து பாத்துகிட்டுதான் இருக்கேன் அன்பு ஏதோ பேசிகிட்டு வேற இருந்த ஜெனி ஜெனின்னு யாரு அது” என்றான். உடனே கண்ணீர் வந்தது. எதுவும் கூறமால் அழ சந்துருக்கு நிலைமை உண்ர்ந்து.

“ஒன்னுமில்லம்மா” என அவளை மடியில் சாய்த்துகொண்டான், அவள் அவனிடத்தில் அழுது தீர்த்தாள். அடக்கி வைத்திருந்த சோகங்கள் அனைத்தும் வெளியேற ஒரு வடிகால் அமைத்துகொடுத்தான்.

அந்த நேரம் பார்வதி வர தன்கையை வாயில் வைத்து பார்வதியை அமைதியாக்க அவர் அமைதியாக சென்றார். தன் மகளது அழுகை அவரை ஏதோ செய்ய முதல் பிழையாக டீயில் உப்பின் அளவு கூடியது.

“டேய் இது டீ இல்லடா குடிக்காத” என போஸ் தன் நண்பரை காப்பாற்ற “ஏன்டா” என்றார். அந்த குவளையையும் வாங்கிகொண்ட போஸ் உள்ளே வந்து “என்னமா பிரட்சனை” என்றார்.

“இல்லங்க அன்பு அழறா மாப்பிளகிட்ட”

“என்ன?”

“அவ இப்புடி அழறது எனக்கு என்னமோ மாதிரி இருக்குங்க”

“விடு நான் கேக்குறேன் என்னனு” என்று அமைதியானார்.

சிறிதுநேரம் செல்ல அன்பு எழுந்து கண்ணீரை துடைத்துகொண்டு குளியலறை புக சந்துரு கிச்சனுக்குள் வந்தான். அங்கே விசாரனை ஆரம்பம் சன்முகம் போஸ் பார்வதி முன்னிலையில்.

“மாப்ள எதுவும் பிரட்சனையா அன்பு ஏன் அழுதுச்சு”

“இந்த ஊர்லயே வளந்திட்டாள மாமா அதான் பிரிய மனமில்லாம அழறா நானும் சமாதானபடுத்தி பாத்தேன் ஆனா முடியல சரி அழுதாவாது ரிலாக்ஸா இருக்கும்னு விட்டுடேன். இப்ப கொஞ்சம் பரவாயில்லனு நினைக்குறேன்”

“அதுக்குதான்பா இங்க வீடு கட்ட பிளான் பன்னிருந்தேல அப்புறம் என்னப்பா” இது சன்முகம்.

“அது வந்துப்பா” என சந்துரு இழுத்தநேரம் “இல்லடா எல்லாருக்கம் அப்புடிதான் இருக்கும் இந்தா இவள பாரு உள்ளூர்குள்ளதான் வீடு ஆனா எப்புடி அழுது நாடகம் போட்ட தெரியுமாடா! அதுல இவக ஆத்தாவ பாக்கனுமே முடியலடா” என போஸ் சிரித்துகொண்டே சென்றார் கூடவே நண்பரை அழைத்துகொண்டு.

“சரி அத்த காஃபி அப்புறம் அன்புக்கு பூஸ்ட்” என சந்துரு எடுக்க “மாப்ள அதுல கடல்தண்ணி கலந்துட்டா உங்க அத்த” என போஸ் கூறி கிண்டல் செய்துவிட்டு செல்ல “கொஞ்சநேரம் இருங்க மாப்ள நான் போட்டு எடுத்துட்டு வாரேன்.

“சரி இந்த சுவேதா இன்னுமா தூங்குறா” என சந்துரு கேட்க “அவ எங்க தூங்கனா ஊர சுத்திபாக்கனுமாம் அதனால கன்மாய் பக்கம் போயிருக்கா”

“ஐயோ தனியாவா”

“தனியாதான் போனா ஆனா சுகு தம்பி கூட போயிருக்கு”

“சரி அத்த” என உள்ளே சென்று அந்த டைரியை பார்த்தான். “அப்புடி என்ன எழுதிட்டு இருக்க இதுல” என்று.

பார்வதிக்கு ஏதோ மாதிரி இருந்தது. தனது கல்யான நாளில் மனதில் வந்த அந்த கலக்கம். இனி அம்மாவிடம் சன்டையிட முடியாது. “பொட்ட புள்ள இன்னும் தூங்குற ஏன்டி எழுந்திரிடி” என அம்மாதிட்டிகொண்டே எழுப்ப சோம்பலுடன் எழுந்து அமர கன்டிப்பாக காலையில் ஒரு அடி விழுந்துவிடும். அதிலும் “இந்தாடி உனக்குதான் சீலை இல்லைல இத எடுத்துகோ அப்புறம் உங்க அப்பாரு என்ன திட்டுவாரு” என அந்த பழைய சீலையை கட்டிகொண்டு புதிது மகளுக்கு எடுத்துகொடுக்கும் அந்த பாசம் இனி இல்லை.

“அம்மா மாமா உங்கள கேட்டுச்சு” என உளறி வைக்க “ அவகள எங்கடி பாத்த கல்யானத்துக்கு முன்னாடி பாக்ககூடாதுனு சொல்லிருக்கேன்ல” என அந்த கன்டிப்பு.

உடல்கோளாறு செய்தால் “டீகுடிச்சுட்டு தூங்குடி நீ எந்திரிச்சாலும் எந்த வேலையும் செய்யமாட்ட சும்மா வீட்ட பெருக்கிட்டு உங்க அப்பாகிட்ட என்ன திட்டுவாங்கிகொடுக்குறதுக்கா நீ போயிதூங்குமா” என அந்த கன்டிப்புடன் கூடிய அக்கறை.

அதிலும் “பொண்ணு சாப்பிடடும்ங்க நான் திங்காததா” என்று தனக்கு பிடித்த பால்கோவை தன் மகளுக்கு கொடுக்கும் அந்த தாய் பாசம்.

“பார்வதி வா திருவிழாக்கு போகலையாமா” என்று தன் அன்னையின் கட்டை அவிழ்த்துவிடும் அந்த தந்தை பாசம். “அம்மா அக்கா அடிக்குதும்மா” என்று கோர்த்துவிடும் தம்பி.

தம்பிக்காக தின்பன்டங்களை ஒழித்துவைத்து கொடுக்கும் போது “இது என்க்கு பிடிக்காது நீயே தின்னு” என தன் அக்காவுக்கு பிடிக்கும் என விட்டுகொடுக்கும் தம்பி.

பிறந்தவீட்டின் ஒவ்வோரு செங்கலிலும் தன் அன்பை கையெழுத்தாக இட்டு வாழ்ந்த இடத்திலிருந்து ஒரு வாழை மரத்தை அடியோடு பெயர்த்து எடுக்கும்போது அந்த வாழைமரத்தின் மனதுக்குமட்டுமே வலி தெரிகின்றது. அந்த தருனங்களை நினைக்கும்போது பார்வதிகண்ணீருடன் காஃபியை கலக்கினார்.

‘அன்பு சுட்டி பொன்னுதான் அதநாளதான் இந்த ஊருல்ல உள்ள எல்லாருக்கும் அவள பிடிக்குது. வீட்டுகுள்ள அடஞ்சுகிடந்த எனக்கே அப்படி மனசு வலிச்சதுன்னா அன்புக்கு எப்புடி இருக்கும்’ என நினைக்கும்போது பார்வதியால் மனதை நிலைபடுத்த முடியவில்லை. அதிலும் ஊரைவிட்டோ வேறுஇடம் செல்கிறாள் அல்லவா.

“அத்த” என சந்துரு வந்த நேரம் அவர் கண்ணீரை துடைக்க.

“என்ன அத்த ஏன் அழறீங்க”

“மாப்ள அன்ப நல்லா பாத்துகோங்க அவ வாலுதான் ஆனா அப்பாவி. அவ எதுகேட்டாலும் முகம் சுன்டி மட்டும் பேசிடாதீங்க அவ நொறுங்கிபோயிடுவா” என பார்வதி அழ.

“அத்த அவள நல்லா பாத்துகிறது என் பொறுப்பு. அப்புறம் அவ கேட்டு நான் எத இல்லைனு சொல்லபோறேன். அவ கேட்ட நான் எதானாலும் தருவேன் இது சத்தியம்” என தன் அம்மாவை சமாதான்ம் செய்தான்.

பின் அன்பு வர பூஸ்ட் என குடுக்க அவள் கட்டிலில் அம்ர்ந்துகொண்டு சோகமாக இருந்தாள். அந்த பூஸ்டும் ஆறிவிட்டது. பின் சுவேதா “அன்னி இந்தாங்க புளியங்கா நான் கஷ்டபட்டு பறிச்சேன்” என கூறியும் வெற்று புன்னகையுடன் அதை வாங்கிகொள்ள அவள் சந்துருவை பார்க்க “அவ இந்த ஊரவிட்டு பிரியபோறான்னு வருத்தமா இருக்கா”

“ஓஓ சரிடா” என சுவேதா அகன்றாள்.

சிறிது நேரத்திரல் சாப்பாடு காத்திருக்க அனைவரும் அமர அன்பரசி பறிமாற நின்றாள்.

“அன்பு மாப்பிள்ளகூட உட்காரும்மா அம்மா பறிமாறுறேன்” என பார்வதிகூற தன் மகளுக்கு தன் கையால் ஒருமுறை பறிமாற ஆசை அவருக்கு.

சாப்பிடும்போது பேசகூடாது எனபது கார்பொரேட் லாஜிக் அதை உடைக்கும் கூட்டுகுடும்ப சாப்பாட்டுநேரம் அவ்வளவுகலகலப்பாக இருக்கும் ஆனால் இன்று எல்லாரும் அமைதியாக இருந்தனர்.

முதலில் அமைதியை குலைக்கும் சுவேதாவும் தன் அன்னி முகத்தை பார்த்து சோகமாக மாறினாள். பின் சாப்பாடு முடிய சுகுமார் காரை எடுத்துகொண்டுவந்தான்.

அன்பரசிக்கு அந்த அழகிய பட்டுபுடவை கட்டிவிட்டு தன் கழுத்திலிருந்த அந்த பரம்பரை சங்கிலியை தன் அடுத்த தலைமுறைக்கு அணிவித்தாள் பார்வதி.

“நேரம் ஆச்சுமா ஃபிளைட் விடபோறீங்க பாருங்க” என போஸ் கத்திகொண்டிருக்க அனைவருக்கும் மனதிலிருந்த ஓர் சிறிய ஆசை அதுதான்.

மனமக்கள் இருவரும் போஸ் மற்றும் பார்வதியின் காலில் விழ பின் சன்முகத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். போஸ் சாமிக்கு சூடம் காட்டிவிட்டு திருநீரை எடுத்து தன் மகளுக்கும் மறுமகனுக்கும் பூசிவிட்டார்.

பார்வதியும் குங்குமத்தை வைத்துவிட்டு “அங்க இருக்குறங்கள அனுசரிச்சு நடந்துகனும்டி. அப்பாக்கு கெட்ட பேர் வராம பாத்துகோ. எதுனா அம்மாவுக்கு ஃபோன் பன்னு. தினமும் ஃபோன் பன்னுடி” என பார்வதி கூறிவிட்டு “மாப்ள பாத்துகோங்க” என சந்துருவிடம் கூறினார்.

“அண்ணா பொண்ணு எதுனா தப்பு பன்னா திட்டாதீங்க எடுத்து சொல்லுங்க கேட்டுகுவா! பத்திரமா பாத்துகோங்க அண்ணா” என சன்முகத்திடம் கூற “காவேரி இருந்தா எப்புடி பாத்துகுவாளோ அப்புடி பாத்துகுறேன்மா அன்பு என் மகமா அவள நான் பாத்துக்க மாட்டேனா?”  என சன்முகம் கூற அனைவரும் வண்டியை நோக்கிவர அன்பு அழுதுவிட்டாள்.

“அம்மா போயிட்டு வாரேன்மா” என அவள் கூற அந்த வார்தையை தாங்கும் சக்தி இல்லாமல் பார்வதி அழுதுவிட்டார். “ஏய் பொண்ணு புதுவீட்டுக்கு போகும்போது இப்புடி கண்ணீர் வடிக்குற” என போஸ் திட்ட கண்ணீரை துடைத்தாள். அதற்குள் அன்பு கண்ணீர்வடிக்க சந்துரு துடைத்துவிட்டான்.

“பாத்து ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா” என பார்வதி கூற ஓடி வந்து தன் தாயை கட்டி பிடித்துகொண்டாள். “அம்மா நீயும் வாம்மா எனகூட” என்றாள் அழுதுகொண்டே

“இல்லமா அப்பாவ பாத்துகனும்ல”

“நான் இங்கயே இருந்துடுறேன்மா” என அழுதாள்.

“இங்க பாரும்மா இது பொண்ணுங்க வாழ்கைல நடக்குறதுதான் நீ ஏத்துகிட்டுதான் ஆகனும் அழாத”

“இல்லமா கொஞ்சநாள் நீயும் அப்பாவும் என்கூட இருங்கம்மா”

பார்வதிக்கு இதயத்தை சுரண்டுவதுபோல இருக்க தன்னவனை பார்த்தார். “பார்வதி நீ வேனும்னா அன்புகூட போயிட்டு கொஞ்சநாள் இருந்துட்டுவா”

“அப்ப நீங்க”

“தோட்டத பாக்கனும்லமா நீ போயிட்டு வா நான் கலப்புகடைல சாப்புட்டுகிறேன் இல்லைனா ராசு சித்தி வீடு இருக்குள்ள அங்க சாப்புட்டுகிறேன்”

“அம்மா வாம்மா”

பார்வதிக்கு ஆசையாக இருந்தாலும் தன்னவன் மிக தனிமையாக இருப்பார் என நினைக்கும்போது மனம் வருந்தியது. ஒருவழியாக பார்வதியை சந்துரு சம்மதிக்க வைத்துவிட்டான். “அத்த வாங்க அன்பு ஆசை படுதுல”

கார் மிகுந்த சொத்தை எடுத்துகொண்டு புகையை மட்டும் அங்கு பரப்பிவிட்டு செல்ல போஸ் அந்த தின்னையில் சரிந்து அமர்ந்தார்.

தன்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்தது. “அப்பா போப்பா போன பிறந்தநாளுக்கு நீ ஏன் வரல” என்று அடம் பிடிச்ச அந்த சின்ன அன்பரிசி அவர் மடியில் அமர்ந்திருப்பதாக தோன்றியது. ஊரில் இல்லத வம்பை இழுத்துவிட்டு “நான் ஒன்னும் பன்னலப்பா அவன்தான் என்ன முதல்ல அடிச்சான் அதான் நான் அவன் வாயில குத்திட்டேன்” என பாவம்போல் முகத்தை வைக்கும் மகளுக்கு வக்காலத்துவாங்காத தந்தை இருக்க முடியாது. வயதிற்கு வந்த அன்று தன் மகள்பட்ட அந்த வெட்கமும் பின் அந்த ஓலை சுவருக்குள் அவளை அடைத்துவிட்டு அவளை மூன்று நாட்கள் பார்க்கவிடாம் செய்த அந்த ஊரின் மீது கோபம் அவருக்கு அப்படி வந்தது.

வேலைவிட்டு திரும்பும்போது அப்பா என கழுத்தைகட்டிகொள்ளும் அந்த அட்டை அன்பு வயதுக்கு வந்த பிறகு ஒரு ஆசையில் ஓடிவர தாயின் கண் அசைவில் தனது பெட்டியை மட்டும் வாங்கிகொண்டு அப்பா என அழைத்ததும். கேட்டாள் பெரிய மனுசியாம்.

ஸ்கூட்டர் வாங்கி தாப்பா என அடம்பிடிக்கும்போது அந்த ஸ்கூட்டரிலிருந்த அவள் விழுந்த காட்சி நினைவுக்க வர “ஸ்கூடர்லாம் இல்ல அப்பாகிட்ட காசு இல்ல இப்ப நீ சைக்கிள காலேஜ் போ” என்று திட்ட செல்லமாக கோபித்த அன்பரசி.

தன் மனதில் வலியை வைத்துகொண்டு தந்தைக்காக சிரித்து வாழ்ந்த அந்த தருனம் என போஸின் நினைவுகள் அவரை வாட்டி எடுக்க கண்ணீர் பூமாதேவியை நனைத்தது.

“சந்துரு அன்கிள் முகத்த பாத்தீயாடா பேசாம அவரையும் கூட்டிகிட்ட வந்திருக்கலாம்டா”

“ஆமா சுவேதா அரிசிய அவரால பிரிய முடியலடா”

“கொஞ்ச நாள்ள திரும்ப இங்க வந்திடனும் நீயும் அன்பும் அந்த கம்பெனிய நடத்துங்க”

“அப்பா பாசம்னா இதுதானாடா” என்று சுவேதா சந்துரு சொன்ன எதையும் காதில் வாங்காமல் கூறினாள்.

“ம்ம் பாசமா வளத்த பொண்ண பிரியும்போது அப்புடிதான் மனசுல ஏதோ பன்னும்.”

“எனக்கு அந்த குடுப்பனைலாம் இல்லடா” என சுவேதாவின் கண்ணில் நீர் வர அந்த கண்ணாடவழியே பார்த்தான்.

“சுவேதா அதான் சன்முகம் அப்பா இருக்காருல உனக்கு” என தன் தந்தையை கூறி தேற்ற முயன்றான். ஆனால் சுவேதா புலம்ப ஆரம்பித்தாள்.

“எங்க அப்பா என்னயும் அம்மாவையும் கொடுமை படுத்துனாலும் வெளிய இருந்து யாரும் எங்கள தொந்தரவு பன்னவிடமாட்டாரு. அவருக்கு நாங்க அவங்களுக்கு மட்டும்தான் சொந்தம்னு ஒரு எண்ணம் அதனாள எங்கள விட்டுகொடுக்க தயாரா இல்லடா! எனக்கு அவருமேல வெறுப்பு இன்னும் இருக்கு ஆனா அவர் கொஞ்சநாளா வீட்டுக்கு வரல. எனக்கு என்னமோ வாழ்கைல குறைஞ்சமாதிரி ஆகிறுச்சு. அவர பாக்கனுபோல இருந்துச்சு. ஆனா அவரு வரவே இல்லடா! அப்புறம் ஒருநாள் அவரு அனுப்புன ஒரு வக்கில் வந்தாரு அதுல எங்க அம்மாவ அபியையும் நந்தினியையும் என்னையும் வாரிசா போட்டு இப்ப இருக்குற அபி மில்ஸ் என்போருல எழுதி இருந்துச்சு. என்ன இருந்தாலும் குடிச்சமட்டும்தான் அவரு அப்புடி மிருகமா மாறிடுறாரு. ஒரே ஒருநாள் நான் ரூம்குள்ள இருந்தப்ப ஒரு டெடி வாங்கி உள்ள தூக்கிபோட்டுட்டு சுவேதா குட்டி இந்தாங்க பிறந்தநாள் கிப்ட் அப்புடின்னாரு. அன்னைக்கு குடிக்கலடா. அப்ப எங்க உண்மையான அப்பாவ பாத்தேன். என்ன இருந்தாலும் எனமேல அவருக்கு பாசம் இருக்கடா. இப்ப எப்புடி இருக்காரு எங்க இருக்காருன்னு தெரியலடா. என்னதான் தப்பானவரா இருந்தாலும் எங்கள நடுத்தெருல விட அவருக்கு மனசு வரல” என பெருமூச்சுவிட்டாள். தன் தந்தைபற்றி தனது அந்த வெள்ளை பக்கதை காட்டினாள்.

அவள் கூறிகொண்டிருக்க விமானநிலையத்தை அடைந்தனர். மஞ்சுவின் தந்தை காரை எடுக்க வந்திருக்க “அப்பா மஞ்சுவுக்கு டுவின்ஸாம்” என்றுகூற “இந்தமுறையாவது கரு தங்கனும்மா அந்த கடவுள்கிட்ட வேன்டிருக்கேன்! அவ ஓடிபோனப்போ நாங்க விட்ட சாபம்தான்மா எங்கள வாட்டுது” என வேதனைபட்டார். அவரை சமாதானம் செய்து விமானத்தில் ஏற சந்துருவின் அருகில் அன்பு அம்ர்ந்துகொண்டாள். சுவேதாவின் பக்கத்தில் சுகு வரவே சுவேதா எழுந்து பார்வதியின் அருகில் அம்ர்ந்துகொண்டாள் சுகுவைமுறைத்துகொண்டே.

அவனும் ஏதும் பேசாமல்செனெறு அம்ர்ந்தான். தன் அண்ணன் திருமனத்தை பாக்கவிடாமல் செய்த தன்டனை அவனுக்கு.

“அன்பு இதுக்குமுன்ன ஃபிளைட்ல போயிருக்கியா”

அவள் தன்னவனை சோகமாக பார்த்தாள்.

சிறிது நேரத்தில் விமானம் பறக்க அன்புக்கு ஏதோ அடிவயிற்றில் ஓர் உணர்வு “தன்னவனின் மார்பில் சாய்ந்துகொண்டு பயத்தை விரட்டினாள் கவைலகலை அல்ல.

-தொடரும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: