Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 42

பாகம் – 42

 

எப்போதும் கேள்விகளுடனே வலம் வரும் வளர்ந்த குழந்தை என்னவள்… உணவினை கண்டதும் உலகினை மறப்பவள்… நிழலைப்போல ஒவ்வொரு நிமிடங்களும் என்னுடன் இருப்பவள்… கனவிலும் நினைவிலும் அவள் முகமே என் உயிரில் ஓங்கி ஒலிக்கும்… தவமின்றி எனக்கு கிடைத்த வரம் அவள்… இதுவரை என் வாழ்வில் அனுபவிக்காத சந்தோஷ பூங்காற்றின் இதத்தை கடந்த சில மாதங்களாகத்தான் அவளருகாமையில் அனுபவிக்கிறேன்… என் ஊன், உயிர், உறவு, உலகமாய் இருப்பவளை என்னால் முடிந்தவரை பொத்தி பொத்தி பாதுகாத்திருந்தும், அதையும் மீறி வந்து தொட்டவன் கையை நான் வெட்டிவிட மாட்டேனா?…

 

மனிஷ் இறந்த செய்தியை கேட்டதும் பார்பிக்கு செய்தது யாரென புரிந்துவிட்டது, ஆனால் ஏன் இத்தனை நாள் காத்திருந்து இப்போது செய்திருக்கிறான், அவன் அண்ணனை எதற்காக உள் இழுத்து விட்டான் என்பது மட்டும் அவளுக்கு புரியாத புதிராகி போனது. அவனையே சந்தேகமாய் முறைத்து பார்த்து கொண்டிருந்தவளிடம், அவன் குறும்பு சிரிப்போடு, “என்ன பார்பி இப்டி பாக்குற, பாப்கார்ன் வேணுமா?” என்றான்.

 

“நீங்க செய்யாத தப்புனு எதாச்சும் இருக்குதா ஆரவ்?”

 

அவள் கோபத்தின் காரணம் புரிய, “பார்பி இப்ப இருக்குறது மனுஷன்ற போர்வையில மிருகம் வாழ்ற உலகம். என்னை கொல்ல வர்ற மிருகத்துக்கு நான் இரையாகாம இருக்கனும்னா அதவிட கோரமிருகமா நான் மாறனும், இல்லன்னா சாகனும். எனக்கு சாகுறதுல விருப்பம் இல்ல பார்பி… நீ இதுவரைக்கும் பாதுகாப்பான பாசமான குடும்ப சூழல்ல வாழ்ந்ததால உனக்கு இதெல்லாம் புதுசாவும் பயங்கரமாவும் தெரியுது. ஆனா நிறைய பேருக்கு இது ஒரு யதார்த்தம்.”

 

போலியான ஆச்சரியத்துடன், “ஓ….. உங்க யதார்த்தத்தோட லிமிட் என்ன ஆரவ்?”

 

“அது காலம் போற வேகத்தை பொறுத்து மாறும்”

 

“என்னை உங்க யதார்த்த வாழ்க்கைல எவ்ளோ லிமிட் வச்சிருக்கீங்க? காலத்தோட வேகத்தால ஆரம்பத்தில பாசம், அப்புறம் காதல், அதுக்குபிறகு மயக்கத்துல இருக்குறவகிட்ட காமம், இப்போ கைதில வந்து நிக்குது, அடுத்து?”

 

அவன் அவள் தோள்களை தன் கையால் சுற்றி வளைத்து அணைத்தபடி “முதல் மூணு கரெக்ட், பட் நாலாவது தப்புடா, நவ் யூ ஆர் நாட் எ ஸ்லேவ்” சோகம் வழிந்த கண்களை பார்த்து கன்னம் வருடி, “யூ ஆர் மை சைல்டு. உன்னை எப்பவும் இதே மாதிரி செல்லமா என் கைக்குள்ளயே வச்சுக்குவேன். நான் குடுகுடு கிழவனா ஆனாகூட, அப்பவும் என் பாசத்தோட அளவு இம்ரூவ் ஆகுமே தவிர குறையவே குறையாது” என்றான்.

 

அவன் சொல்லி முடித்த பின்னும் மறந்து போய் அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க, அவசர முத்தமொன்றை அவள் பட்டு கன்னத்தில் வைத்துவிட்டதை அவள் உணர்ந்ததும் அதை அழுந்த துடைத்து கன்னத்தை சரி செய்து கொண்டாள்.

 

‘என் முத்தத்த அழிச்சுட்டாளாம்மா’ என மனதில் சிரித்தும் வெளியில் அழுதும் ஆரவ் தன்னுள்ளிருந்த நவரசத்தை காட்டினான். வழக்கம்போல அவள் கோபித்து கொண்டு செல்ல, வழக்கம்போல தன் காதல் பேச்சால் அவன் அவளை குழப்பிவிட அவர்களுக்கான கணவன் மனைவி வாழ்க்கையின் முதல்நாள் நல்லபடியாக நிறைவடைந்தது. அடுத்தநாள் காலை சாப்பாட்டு நேரம் அவளுக்கு ஊட்டி முடித்துவிட்டு தான் உண்ண தொடங்கியபோது போன் அடிக்க, அருகிலிருந்த பார்பிக்கு அவன் பேசியதெல்லாம் நன்றாகவே கேட்டது.

 

“செல்லுடா, எப்டி இருக்க?”

 

“நான் நல்லா இருக்கேன்டா, நியூஸ் பாத்தேன். ஸோ இனிமே சோனுக்கு பிரச்சனையே இல்லைல.”

 

“ம்… ஆமாடா…”

 

“நான் சும்மாதான் சோனுகிட்ட பேசலாம்னு போட்டேன். இப்ப சோனு எங்க? ”

 

“அவ தூங்குறாடா வஜ்ரா…”

 

வஜ்ராவின் பெயரை கேட்டதும் பார்பி அவன் கையிலிருந்த போனை வெடுக்கென பிடுங்கி, “வஜ்ராண்ணா என்ன காப்பாத்துங்க, எனக்கு பழசெல்லாம் நியாபகம் வந்திடுச்சு. ஆனா ஆரவ் என்ன வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்கான். நான் தப்பிக்க ட்ரை பண்ணினா என் பேமிலய கொன்றுவேன்னு சொல்லி பயமுறுத்துறான். ப்ளீஸ், நீங்க இங்க வாங்கண்ணா எனக்கு பயமா இருக்கு”

 

எதிர்முனை வார்த்தைக்காக அவள் எதிர்பார்ப்போடு காத்திருக்க, வஜ்ரா, “இன்னுமா தூங்குறா? எப்பவும் எதாவது கேள்வி கேட்டுகிட்டே இருப்பா, அதான் இப்ப ரெண்டு நாள்ல நான் அவள ரொம்ப மிஸ் பண்ணிட்டேன், எழுந்ததும் ஒரு தடவ பேச சொல்லு. பாய்டா” என்று காலை கட் பண்ணிவிட, நடந்தது எதுவுமே புரியவில்லை பார்பிக்கு.

 

ஆரவ் பொறுமையாய் வாயிலிருந்ததை எல்லாம் முழுங்கிவிட்டு கையில் தண்ணீரை எடுத்து கொண்டு, “இப்ப பேசினதுல இருந்து உனக்கு என்ன புரிஞ்சது?” என்றிட, அவளோ ரொம்ப சீரியஸ்ஸாக, “ஆரவ், நான் செத்து போயிட்டேனா? என்னோட குரல் உனக்கு மட்டும்தான் கேக்குதா?” என்றதும் குடித்த தண்ணீரை குபுக் கென கொப்பளித்துவிட்டு ஆரவ் பொறை ஏறியதோடு விழுந்து விழுந்து சிரித்தான்.

 

“உன்னால மட்டும் எப்டிடி இப்டியெல்லாம் யோசிக்க முடியுது? அந்த போன்ல என்னோட வாய்ஸ் மட்டும் அக்செப்ட் பண்ற மாதிரி செட்டிங்ஸ் செஞ்சிருக்கேன்டா.”

 

“ஏன்?”

 

“கிரவுண்ட்ல கூட்டமா இருக்கும்போது நான் பேசுறது ஆப்போசிட்ல இருக்குறவனுக்கு புரியனும்ல அதான்.”

 

“இன்னும் என்னெல்லாம் டிப்ரென்ட்டா செஞ்சு வச்சிருக்கீங்க?”

 

“என்னோட லேப்டாப் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ என் பேஸ்ஸ ஆட்டோ மேட்டிக்கா ஸ்கேன் பண்ணிக்கும். என்ன தவிர வேற யாரும் டென் மினிட்ஸ்க்கு மேல யூஸ் பண்ண முடியாது. இந்த ரூம்க்கு வேற ஆளுங்க வர்றது எனக்கு பிடிக்காது. ஸோ கிளீன் பண்றதுக்கு டெய்லி பைவ் மினிட்ஸ்தான் டைம் தருவேன். குரூப்பா உள்ள வந்து படபடன்னு வேலைய முடிச்சுட்டு போயிடுவாங்க. ஏன்னா எனக்கு ப்ரைவஸி ரொம்ப பிடிக்கும்,   உள்ள வந்து சாப்பாடு தர்றது கூட எனக்கு டிஸ்டர்பென்ஸ் மாதிரி இருக்கும், ஸோ அதுக்கும் ஒரு மெத்தட் வச்சிருக்கேன். அந்த மெயின் டோர்க்கு ரைட் சைடு சின்ன கபோர்டு மாதிரி இருக்குல்ல அது ஒரு வித்யாசமான ஓவன், அதுக்குள்ள புட் வச்சிட்டு ஆன் பண்ணிட்டு போயிடுவாங்க. நான் எப்போ எடுத்தாலும் சூடா இருக்கும், அது டபுள் சைடு டோர், பட் அட் த டைம்ல ரெண்டையும் ஓப்பன் பண்ண முடியாது. வெளியில இருந்து புட் வச்சதும் உள்ள ரெட் லைட் எறியும், நான் போய் எடுத்துக்குவேன். அப்புறம் பெட்க்கு பின்னாடி இருக்குறது கண்ணாடி இல்ல அதுவும் ஒரு டோர்.”

 

அவன் சொல்லி முடிக்கும் முன் துள்ளி எழுந்து, “என்னது டோரா….” என அருகில் சென்று தள்ளி பார்த்தாள்.

 

“ஓப்பன் ஆகாது, என்னோட பிங்கர் பிரின்ட் வச்சாதான் ஓப்பன் ஆகும்” என்று செய்துகாட்டினான். உள்ளே படிக்கட்டுகள் இருந்தது. “இது நேரா கீழ பேஸ்மெண்ட் போகும். அங்கதான் நான் பிராக்டீஸ் பண்ண ஒரு மினி கிரவுண்ட் இருக்கு.”

 

‘அடப்பாவி, இதென்ன வீடா இல்ல பூத் பங்ளாவா?’ என்ற பார்பியின் எண்ண ஓட்டம் அவன் காதுக்கு தெளிவாக கேட்டது. எல்லாத்தையும் சொன்னவன் வீட்டுக்குள் கேமரா இருப்பதை மட்டும் அவளுக்கு சொல்லாமல் மறைத்து விட்டான். அடுத்த மூன்று நாட்களும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை பின் சமாதானம் அப்பப்போ அவள் அழுகை, இடையிடையே அவன் திருட்டு முத்தம் என்று பெரிய வித்யாசமின்றி நகர்ந்தது. அப்பப்போ ‘நம்ம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்டா, ப்ளீஸ்’ என கெஞ்சியதற்கு தான் பலனே இல்லை. மூன்று நாள் அவளை விட்டு இம்மியும் நகராதிருந்தவன், அதன்பின் சின்ன சின்ன வேலைகளுக்காக வெளியே செல்ல தொடங்கினான். அவன் அருகிலிருந்தவரை அவளை யோசிக்க விடாமல் பார்த்து கொண்டதால், அவன் இல்லாத நிமிடங்களில் தனிமை தந்த தாக்கத்தில் அவள் பழைய நியாபகங்கள் வந்து அடிக்கடி அழுவது தெரிந்தது. அவள் தனிமையை போக்கும் விதமாக சில மாறுதல்களை பார்த்து பார்த்து செய்து, அவள் உடல் நிலையோடு மனநிலையையும் சேர்த்து கவனித்து கொண்டான். வேடிக்கை பார்க்க வசதியாய் அமைக்க பட்டிருந்த முழுதும் கண்ணாடி சுவர்களால் ஆன அந்த, அகன்ற அரை வட்டவடிவ குடுவை போன்ற பால்கனியில் ஒரு போர்டு, பெயிண்ட், பிரஷ் கொஞ்சம் பூச்செடிகள் வைத்தான். அவளுக்கு பிடித்தமான பாடல்களை பென்டிரைவ்ல் ஏற்றி விரும்பும்போது கேட்க வசதியாய் ஸ்பீக்கர்ஸ்ஸில் போட்டான். முக்கியமாக டீவியில் கிட்ஸ் பேக் கனெக்ஷன் செய்து தந்தபின் அவள் அதில் மெய்மறந்து மூழ்கிவிட்டது அவனுக்கு ஓரளவு நிம்மதி.

 

சலனமின்றி பத்து நாட்கள் நகர்ந்திருக்க இன்று அவளை செக்கப்பிற்கு ஷர்மா அங்கிளிடம் அழைத்து செல்ல வேண்டும். ஆரவ் மனதில் லேசான பயம் இருந்தாலும், அவளும் பயந்து விடுவாளென அவன் அதை வெளியில் காட்டவில்லை. பார்பிக்கு மூன்று முறை ப்ளட் டெஸ்ட் எடுக்கபட்டது, ஒவ்வொரு முறை ரத்தம் எடுக்கும்போதும் வலிதாளாமல் அழும் அவளைவிட, கண்முன்னே அவள் படும் கஷ்டத்தை பார்த்து ஆரவ்விற்கே அது அதிகமாக வலித்தது.

 

“என் உடம்புக்கு என்ன ஆச்சு?” என்று பார்பி அவனிடம் அடிக்கடி கேட்க, ஆரவ் “மூளை இருக்க வேண்டிய இடம் எம்ப்டியா இருக்குதாம். அதான் என்ன பண்ணண்ணு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்” என்றதும் பேசமாட்டேன் என திரும்பியவள்தான், கடைசி வரை வாயை திறக்கவில்லை. செக்கப் எல்லாம் முடிந்ததும் பார்பி சீக்கிரமே அசந்து போய் சுணங்கி உறங்கிவிட அவளை ஆதரவாய் அணைத்தபடி ரிப்போர்ட்க்காக ஷர்மா அங்கிள் ரூம்மில் ஆரவ் காத்திருந்தான்.

 

ஷர்மா உள்ளே வந்ததும், “ஆரவ் வெல்டன்டா, பார்பி பிளட்ல இம்ரூவ்மென்ட் இருக்குது. சர்ஜரி தேவை இல்லன்னு நினைக்கிறேன். இதேமாதிரி நல்லா பாத்துக்கிட்டா எதிர்பாத்ததவிட சீக்கிரமா சரி ஆகிடுவாடா” என்றதும் தான் அவனுக்கு மூச்சே முழுசாக வந்தது.

 

“எதுக்கும் நான் ஸ்பெஷலிஸ்ட் கிட்டலாம் காட்டிட்டு நாளைக்கு உன்கிட்ட பேசுறேன். நீ இப்டியே அவள பாத்துக்கோ” என்றார். மகிழ்ச்சியில் அவருக்கு பதிலாய் வேகமாக மண்டையை ஆட்டியவன், உறங்கியவளை அவர் பொறுப்பில் விட்டுவிட்டு, அவளுக்கென சின்ன சின்ன பரிசுகள் வாங்கிகொண்டு வந்து, காரின் பின்புறம் மறைத்து வைத்தான். இதற்குள் அவள் தூங்கி எழுந்துவிட ஷர்மா அங்கிளிடம் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.

 

ஆரவ் சந்தோஷம் துள்ளி விளையாடும் முகத்தோடு வீட்டிற்கு வர அங்கே நடுவீட்டில் பழங்களும் இனிப்புகளும் குவிந்திருந்தது. முன்பின் தெரியாத பத்து பதினைந்து பேர் பிரியங்காவுடனும், சாரதாம்பாளுடனும் சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டு இருந்தனர். ஆரவ்வை கண்டதும் பிரியங்கா ஆரவ் அருகில் வந்து குரலை குறைத்து, “உண்மையிலே உனக்கு என்மேல பாசம் இருந்தா கொஞ்ச நேரம் எந்த பிரச்சனையும் பண்ணாம அமைதியா இரு” என்று அவனை இழுத்துசென்று சோபாவில் அமர்த்தினாள். பார்பி வீட்டின் சூழ்நிலை புரிந்ததும் தான் இருக்கும் இடம் தெரியாமல் ஒரு மூலையில் ஒதுங்கி நின்று கொண்டாள்.

 

கூட்டத்தில் ஒருவர், “மாப்பிள்ள வந்தாச்சு, வாங்க செய்ய வேண்டிய சடங்கெல்லாம் செய்யலாம்” என்றதும் அனைவரும் அவனை சுற்றி ஒன்றாக கூடினர்.

 

ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவர், “என் பொண்ண உங்களுக்கு குடுக்க எங்களுக்கெல்லாம் மனப்பூர்வ சம்மதம். என்னோட மகளும் உங்க நினைப்பாவே இருக்குறா, நீங்க சரின்னு சொன்னா இப்ப நடக்கப்போற இந்த நிச்சயத்து கூடவே கல்யாண தேதியையும் குறிச்சிடலாம்” என்றார்.

 

ஆரவ் பிரியங்காவின் மீது அனல் பார்வையை வீசிவிட்டு அவரிடம், “நான் வேற ஒரு பொண்ண விரும்புறேன். சாரி, தெரிஞ்சிருந்தா உங்கள முன்னாடியே வர வேண்டாம்னு சொல்லி இருப்பேன், நீங்க கிளம்பலாம்.”

 

அவர் அவனை நெருங்கி வந்து ரகசியமாய், “கேள்விப்பட்டோம். அந்த ஊர் பேர் தெரியாத அனாதை பொண்ணத்தான சொல்றீங்க. உங்க தங்கச்சி எல்லாத்தையும் ஏற்கனவே தெளிவா சொல்லிட்டாங்க. உங்க ஸ்டேட்டஸ்க்கு போயும் போயும் அப்டிபட்ட பொண்ணயா காதலிக்கிறீங்க? பேசாம நீங்க என் மகள கல்யாணம் பண்ணிக்கோங்க, உங்களுக்கு அந்த அனாத பொண்ண ரொம்ப புடிச்சிருந்தா, அவள சைடுல வேணும்னாலும் வச்சுக்கோங்க, எவன் வந்து கேக்க போறான்?” என்றதும் அவன் பல்லை கடித்துக்கொண்டு கையை முறுக்கி பார்த்த பார்வையிலேயே அவர் பயந்து நகர்ந்துவிட்டார்.

 

ஆரவ் பொறுமையை வரவழைத்து கொண்டு அவர்கள் அனைவரையும் பார்த்து, “இதுலெல்லாம் எனக்கு இஷ்டமில்ல, மரியாதையா சொல்றேன் நீங்க எல்லாரும் வெளியில போங்க” என்றதும் உள் அறையிலிருந்த தீபாலி விருட்டென வெளியே வந்து, “ஏன் ஆரவ் என்னை உனக்கு பிடிக்கல, அன்னிக்கி நைட் நாம ரெண்டு பேரும் தனியா இருந்தப்போ ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன, இன்னிக்கி என்ன ஆச்சு?” என்றாள்.

 

துளியும் வெட்கமின்றி பெற்றோர்கள் உறவினர்கள் உடனிருக்க தீபாலி அவ்வாறு பேசியதை கேட்டு ஆரவ் அவளை அறுவெறுப்பாய் பார்க்க, மற்றவர்களோ அவள் ஏதோ முக்கியமான பாய்ன்ட்டை கண்டுபிடித்து சொன்னதைப்போல பெருமையாக அவளை பார்த்தனர்.

 

ஆரவ் இதுக்கு பிறகும் நான் சும்மா இருந்தா அதுதான் என் தப்பு என்று, “அன்னிக்கி உனக்கு பணம் கொடுத்தேன், நீ வந்த… இனிமேலும் தேவைன்னா பணம் குடுத்து கூப்ட்டுக்கிறேன், இப்ப நீ போலாம்.” என்றதும் அனைவரும் ஆர்பறிக்க, அவனோ சாதரணமாக, “அதான் உங்க பொண்ணே அன்னிக்கி பணத்துக்கு வந்தத ஒத்துக்கிட்டாளே, நீங்க எதுக்கு தேவையில்லாம கத்துறீங்க?” என்று குரலிலேயே அடக்கினான்.

 

தீபாலியோ திமிராக தூரத்தில் எதுவும் புரியாமல் நின்ற பார்பியை இழுத்து வந்து, “இவளுக்கு எவ்ளோ பணம் குடுத்து கூட்டிட்டு வந்திருக்க?” என்றாள்.

 

“லூசு, பொண்டாட்டிக்கெல்லாம் எவனும் பணம் குடுத்து கூப்பிடமாட்டான், மனசத்தான் குடுப்பான். நீ வேணும்னா ஒண்ணு பண்ணு, உனக்கு அவ்ளோ ஆசையா இருந்தா உன்ன வேணும்னா சைடுல வச்சிக்கவா? இதுகூட உங்க அப்பா சொன்ன ஐடியாதான், நான் கொஞ்சம் ஆள ஆல்ட்டர் பண்ணி சொன்னேன், அவ்ளோதான்” என்றதும்,

 

“சீ…. ஒரு பொண்ணுகிட்ட இவ்ளோ அசிங்கமா பேசுவியா ஆரவ்?” என கோபமாக சொன்னது… நம் பார்பி. அதுவரை அவர்கள் பேசியது எதுவும் அவளுக்கு கேட்காததால், ஆரவ்வை தவறாக நினைத்து திட்டிவிட்டு அவள் வேகமாக தங்கள் அறைக்கு ஓடிவிட, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தீபாலியும் பிரியங்காவும் தங்களுக்குள் சிக்னல் செய்து சிரித்து கொண்டனர்.

 

தீபாலி, “உன் கேரக்டர் சரி இல்லன்னு இப்போ அவளுக்கு தெரிஞ்சிருக்குமே, அச்சோ பாவம் நீ” என்றவளை அவன் பார்க்ககூட பிடிக்காமல் பிரியங்காவின் பக்கம் திரும்பி,

 

“உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு, அணுகுண்டையே அசால்ட்டா தாண்டி போயிட்டு இருக்கேன், திம்மத்தூண்டு ஊசி பட்டாச கொழுத்தி போட்டுட்டு பெரிய வில்லி ரேஞ்சுக்கு போஸ் குடுக்குறீங்க. நான் கொலையே செஞ்சாலும் அவள எப்டி சமாதான படுத்தனுமோ அப்டி சமாளிச்சிடுவேன். உன்ன மாதிரி எல்லாம் கிடையாது என் பொண்டாட்டி, நான் நில்லுன்னா நிப்பா உக்காருன்னா உக்காருவா. எனக்கு ஆல்ரெடி பெரிய பெரிய வில்லனுங்க எல்லாம் வெய்ட் பண்றாங்க, ஸோ இந்தமாதிரி டீவி சீரியல் வில்லத்தனத்தை எல்லாம் என்கிட்ட காட்டாதீங்க ஓகே…” என்று வடிவேலு பாணியில் ஆரம்பித்து விஜய் ஸ்டைலில் முடித்துவிட்டு, விசிலடித்து கொண்டே அவன் மாடிபடி மேல் ஏறிச்செல்ல தீபாலியும் பிரியங்காவும் செய்வதறியாது அவனை பார்த்து கொண்டிருந்தனர்.

 

ஆரவ் ரூமில் நுழைந்ததுமே அஸ்வத்துக்கு போன் போட்டு, “அஸ்வத் நீங்க பிரியங்காவ கவனிச்சுக்கிறேன்னு சொன்னதாலதான் நான் சும்மா இருந்தேன். இப்ப அவ மறுபடியும் இங்க வந்து பிரச்சினை பண்ணிட்டு இருக்கா பாருங்க.”

 

அஸ்வத் (பிரியங்காவின் கணவன்), “இப்ப கோவிலுக்கு போறததா தான என்கிட்ட சொல்லிட்டு போனா, அங்கேயா வந்திருக்கா?”

 

ஆரவ், “ஆமா, நான் வந்தப்போ இங்க எனக்கு என்கேஜ்மென்ட் நடந்திட்டு இருந்தது, அதுவும் எனக்கே தெரியாம. உங்களுக்காகவும் அஸ்விகா பாப்பாக்காகவும் தான் நான் இன்னிக்கி பொறுமையா இருந்தேன், அவ இன்னோருதடவ எதாவது செஞ்சா நான் கண்டிப்பா சும்மா இருக்க மாட்டேன், அதுக்கப்புறம் நீங்க எம்மேல வருத்தப்பட்டு எந்த ப்ரயோஜனமும் இல்ல…”

 

“வெரி சாரி ஆரவ். நான் எதாவது சொன்னா ‘எங்க அண்ணண நான் பார்பிட்ட இருந்து காப்பாத்துறேன். நீங்க பேசாம இருங்கன்’னு சொல்லி உளறிட்டு இருக்கா. அவ இனிமே அங்க வராம நான் பாத்துக்குறேன்.”

 

“ம். நான் உங்க வார்த்தைய நம்புறேன்.”

 

வீட்டிற்கு போனதும் பிரியங்காவை அஸ்வத் திட்டி தீர்த்து விட்டார். ஏற்கனவே வந்திருந்தவர்கள் அனைவரும் வசைபாடிவிட்டு சென்றதால் அவமானத்திலிருந்த அவள் அஸ்வத்தின் கோபத்தால் இன்னும் வெறி ஏறிப்போக ‘இதுக்கெல்லாம் காரணம் அவதான், இன்னும் ஒரு வாரத்தில உன்ன இங்க இருந்து விரட்டுறேனா இல்லையான்னு பாரு…’ என கறுவினாள்.

 

ஆரவ் பேசி முடித்தபின் பார்பியை கவனிக்க, அவளோ கோபமாய் பெட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.

 

‘அதென்ன இப்டி ஒரு வார்த்தை சொல்றது? அதுவும் ஒரு பொண்ணுகிட்ட. கொஞ்சமாவது தகுதிக்கேத்த மாதிரி மேனர்ஸ்ஸோட நடந்துக்குறானா பாரு. எப்ப பாத்தாலும் ரௌடி பய மாதிரி எதாவது ஒண்ணுல பிரச்சன பண்ணிட்டு இருக்கான். எப்டியும் என்னை பேசி சரிக்கட்ட என்கிட்ட வந்துதான ஆகனும். இன்னிக்கி நான் அவன் எப்டி பேசினாலும் ஏமாற கூடாது…’ என்று காத்திருக்க அவனோ வேண்டுமென்றே ரூமை சும்மா சுற்றி வந்தபடி அவளை சமாதானம் செய்யாமல் போக்கு காட்டினான்.

 

பொறுமை மீறி அவள் தலையணையை போட்டு அடித்ததை கண்டு, அதன் மேல் பரிதாபப்பட்டு ஆரவ் அவளருகில் வந்தான்.

 

“நீங்க என்கிட்ட சாரி ஒண்ணும் சொல்ல வேண்டாம். இப்டி அசிங்கமா பேச யாருகிட்ட கத்துகிட்டீங்க? உங்கள ரோல் மாடலா நிறைய பேரு நினைச்சிட்டு இருக்காங்கன்றது கொஞ்சமாவது மனசில இருந்தா இப்டி எல்லாம் செய்வீங்களா? தயவுசெஞ்சு என்கிட்ட வந்திராதீங்க, உங்க மேல அவ்ளோ கோபமா இருக்கேன்.”

 

“நான் சாரி சொல்ல வரலடா, ஒண்ணு குடுக்க வந்திருக்கேன். இங்க பாரு” என அவன் வாங்கிய கிப்ட் எல்லாம் எடுத்து நீட்டினான். ஒரு குலோப் ஜாமூன் டப்பா, ஒரு ரோஸ் பொக்கே, சின்ன ஹார்ட் ஷேப் குஷன், சில பலூன், கொஞ்சம் விளையாட்டு ஜாமான். அத்தனையும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதை பார்த்ததும் அவள் மூஞ்சி போன போக்கை பார்க்க, இரண்டு கண் போதாது. பழைய கோபத்தை மறந்து புதிய கோபத்தை தலையில் ஏற்றி கொண்டாள் அந்த விவரமில்லா பேதை.

 

“இவ்ளோதானா இன்னும் வேற எதாவது இருக்கா?”

 

“ஒரு முக்கியமான கிப்ட் ஒண்ணு இருக்குது. பட் நான் அத குடுக்கனும்னா எனக்கு நீ ரிட்டர்ன் கிப்ட் எதாவது குடுக்கனும், டீலா?” என்று கேட்டான்.

 

“ம்.. பாக்கலாம். பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லிடுவேன்.”

 

‘அப்டி என்னவா இருக்கும்? என்ன வாங்கிருக்க போறான், எதாச்சும் நகையாவோ டிரஸ்ஸாவோ இருக்கும்…’ என்ற யோசனையோடு அவன் பின்னால் சென்றாள். ஆரவ் டீவியை ஆன் செய்து, போனில் இருந்து சில போட்டோக்களை அதில் தோன்ற செய்தான்.

 

முதல் போட்டோ அவள் கிராமம்.

இரண்டாவது அவள் வீடு.

மூன்றாவது அவள் தாத்தா தெருவில் யாருடனோ பேசிக்கொண்டு செல்கிறார்.

அடுத்தது அவள் தம்பி தங்கைகள் ஸ்கூல் காலேஜ்க்கு செல்வது.

அடுத்தது பாட்டி, அம்மா, சித்தி, அத்தை எல்லோரும் கோவில் வாசலில் பேசிக்கொண்டு நிற்பது.

 

இந்த பத்து நாட்களில் எடுத்த முப்பது போட்டோக்கள் வரிசையாக வர, பார்த்து கொண்டு இருந்த பார்பி ஏக்கத்தில் அழுதுவிட்டாள். “எனக்கு வீட்டுக்கு போகனும்… எல்லாரையும் பாத்து பேசனும்… நான் சாரி செல்லனும்…” என்று ஏதேதோ புலம்பியவள், சட்டென நினைவு வந்தவளாய், “அங்க யார அனுப்பி இருக்கீங்க? எப்டி போட்டோ எடுத்தீங்க? எதுக்கு எடுத்தீங்க? அவங்க யாரையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்லி இருந்தீங்கள்ல” என்றாள்.

 

“ஒருவேள நீ சொன்ன பேச்சு கேக்கலைனா, என் அடியாளுங்கள வச்சு உன் வீட்டு ஆளுங்கள தூக்கிட்டு வர வேணாமா? அதுக்குத்தான் இந்த ஏற்பாடு. முதல்ல சொன்னத இப்பவும் அப்டியே செய்ய நான் ஒண்ணும் நல்லவன் இல்லையே, பொறுக்கி ராஸ்கல்தான… இங்க நீ சமத்தா இருந்தா எவ்ரி மன்டே அவங்க போட்டோஸ் வரும், நீ அவங்கள இங்கிருந்தே பாத்துக்கலாம். ஏதாச்சும் சேட்டை பண்ணிணா அடுத்த நாள் அவங்களே இங்க வந்திடுவாங்க, மேடம்க்கு எப்டி வசதி?”

 

‘இவன் பேச்சை மீறி இதுவரைக்கும் நான் எதுவுமே பண்ணலயே, இருந்தும் என்னை நம்பாம இப்டி செஞ்சுட்டானே’ என்றவள் கண்ணை கசக்கி கொண்டு, அவன் சொன்னதெல்லாம் உண்மை என்று அப்படியே நம்பினாள்.

 

அவனோ உள்ளுக்குள், ‘என்ன சொன்னாலும் இப்டி நம்பிடுவியா செல்லம்? உன் குடும்பம் இனிமே எனக்கும் சொந்தமில்லையா. அதான், உன் குடும்பத்தோட பாதுகாப்புக்காக பத்து பாடிகார்ட்ஸ் அனுப்பி இருக்கேன். அந்த சாகர்க்கு ஹைதராபாத்ல ஒரு அன்டர் கிரவுண்ட் தாதா கூட லிங்க் இருக்கு. சாகர் அவங்க கிட்ட உன்ன பத்தி விசாரிக்க சொல்லி இருக்கான், அதான் மத்தவங்களுக்கு சந்தேகம் வராதபடி ஒரு ஆபீஸ் செட்டப் போட்டு உங்க வீட்டுக்கு பக்கத்திலயே என் ஆளுங்கள தங்க வச்சிருக்கேன். உன் குடும்பத்து ஆளுங்களுக்கு தெரியாம அவங்கள சுத்தி எப்பவும் பாடிகார்ட்ஸ்ல யாராவது ஒருத்தர் இருந்துட்டே இருப்பாங்க. நான் இந்த உண்மைய சொன்னா ‘என்னாலதான் இப்டி எல்லாம் ஆகுது’ன்னு நீ மறுபடியும் எதாச்சும் தப்பு தப்பா யோசிப்ப, உனக்கு பொய்தான் சரிப்பட்டு வரும்’ என்ற எண்ணம் ஓடியது.

 

அர்த்த ஜாம திருடன் போல

அதிர்ந்து பேசேன்…

காமம் தீரும் பொழுதிலும் எந்தன்

காதல் தீரேன்…

 

மாத மலர்ச்சி மலரும் வயதில்

மார்பு கொடுப்பேன்…

நோய்நொடியுடன் நீ விழுந்தால்

தாய்மடியாவேன்…

 

சுவாசம் போல அருகில் இருந்து

சுகப்பட வைப்பேன்…

உந்தன் உறவை எந்தன் உறவாய்

நெஞ்சில் சுமப்பேன்…

 

உன் கனவுகள் நிஜமாக

எனையே தருவேன்!

உன் வாழ்வு மண்ணில் நீள

என்னுயிர் தருவேன்!

 

கண்ணே கனியே உன்னை கைவிடமாட்டேன்…

சத்தியம் சத்தியம் இது சத்தியமே!

மாலை சூடிய காலை கதிரின் மேலே,

சத்தியம் சத்தியம் இது சத்தியமே!!!

Leave a Reply

%d bloggers like this: