Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 49

உனக்கென நான் 49

சுவேதாவின் மீது கோபமாக இருந்தான் சந்துரு பின்ன அண்ணா அண்ணானு சுத்தி சுத்தி வந்தவ அந்த வார்த்தைக்கு அர்த்தம் குடுக்குற நேரத்துல காணாம போனா யாருக்குதான் கோபம் வராது. ஆனால் பாவம் சுகுவின் பயத்திற்கு முன்னால் சுவேதா என்ன செய்வாள். தன் அண்ணாவினை கலகிய கண்களோடு பார்க்க மட்டுமே முடிந்தது.

“டேய் சுவேதா அழறாடா” சுகு வந்தான் தன் நண்பன் அருகில்.

“டேய் இவதான் என தங்கச்சினு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க வேண்டிய நேரத்துல வராம இப்ப அண்ணானு வந்தா! போட டேய்! நான் தான் அவள தங்கச்சியா நினைக்குறேன் அவ அப்புடி நினைக்கலடா”

“டேய் நான்தான்டா அதுக்கு காரணம் அவ பாவம்டா”

“நீ என்ன சொன்னாலும் சரிடா நான் பேச மாட்டேன்” தன் முடிவில் ஐயம் இல்லை சந்துருவுக்கு.

“டேய் முகூர்த்த நேரத்துல அவளுக்கு வலிப்பு வந்துடுச்சுடா அதான் நான் அவள சரி பன்னேன் அப்புறம் மயங்கிட்டா அதான் உன்னோட கல்யானத்த பாக்க முடியலடா சாரிடா” என்று சுகு சோகமாக கூறினான்.

சந்துருவுக்கு கோபம் வந்தது.”ஏய் லூசு டேப்லட் போடலையா” என்றான் சுவேதாவை பாரத்து. அவள் இன்னும் அழுதுகொண்டுதான் இருந்தாள்.

“ஏய் அண்ணா உன்கிட்ட கோவிச்சுக்ககூடாதா வா” என அன்பிடமிருந்து அவளை வாங்கி அனைத்துகொண்டான். அவள் இன்னும் அழுகை விடவில்லை.

“ஏய் என்னடா அழாதடா” என்று சமாதானம் செய்தான். ஆனால் பலனில்லை. அவன் வழியில்லாமல் தன் மனைவியை பார்த்தான். தன்னவனின் பார்வையை புரிந்துகொண்டு “அன்னி வாங்க அண்ணாகூட சண்டை போட்டுடலாம்” என தன்னவனை தள்ளிவிட்டாள்.

“ம்ம் வேணாம் அன்னி” என கண்ணீரை துடைத்துகொண்டாள். “ஐ சுவேதா அன்னி சிரிசுட்டாங்க” என கூச்சம் ஏற்படுத்தினாள். சுவேதாவும் சிரித்துகொண்டு “அன்னி அண்ணாவவிட்டு நீங்க பேச்சுக்குகூட பிரியகூடாது” என்றாள்.

“அப்போ நீங்க அழாம இருக்கனும்” இது அன்பு

“சரி இன்னொரு கல்யானம் பன்னிகிரூங்களா?” என சுவேதா கூற அனைவரும் திடுக்கிட்டனர். “அட நான் உங்க கல்யானத்த பாக்க முடியலப்பா அதான் இன்னொரு தடவ கல்யானம் பன்னிகோங்க” என கூற “என்ன ரெண்டு தாலியா” என்று பதறினான் சந்துரு.

“ஆமா விட்டா நீ அன்னிமேல வச்சுருக்குற பாசத்துக்கு ஆயிரம் தாலி கட்டுவடா அண்ணா! இந்தா இத கட்டு” என தன் கழுத்திலிருந்த அன்று பீச்சில் சந்துரு வாங்கி கொடுத்த அந்த அழகிய பாசியை சந்துருவின் கையில் கொடுத்தாள்.

“அத ஏன்டி கழட்டுற”

“நீ பேசாதடா நீ என்ன திட்டிட்ட நான் அன்னிகூட மட்டும்தான் பேசுவேன்” என்றாள் செல்ல கோபத்துடன். சந்துரு அமைதியாக அதை வாங்கி தன்னவளுக்கு இரண்டாவது தாலிகட்ட அங்கிருந்த பூவை எடுத்து இருவர் மீதும் போட்டாள்.

“இந்த ஜோடி நூறு வருசம் நல்லா இருக்கனும்” என வாழ்த்தினாள் அந்த பெரிய மனுசி.

“சரிம்மா பெரிய மனுசி” என சந்துரு கூற “அண்ணா எனகூட பேசாத” என்றாள். உடனே அரிசி “அன்னி உங்க அண்ணாக்கு எதாவது தண்டனை குடுத்து மன்னிச்சுவிட்டுருங்க” என்றாள். “ரெண்டுபேரும் என்ன டார்கெட் பன்னிட்டீங்களா” என்றான் சந்துரு.

“ம்ம் அண்ணா அன்னி அப்புடியே எனகூட சேந்து எஸ்கேப் ஆக பாக்குறாங்கடா! நீங்க டான்ஸ் ஆடனும் நியாபகம் இருக்கா” என்று தன் அண்ணன் பக்கம் சேர்ந்துகொண்டாள்.

“ஐயோ அண்ணி எல்லாரும் பாப்பாங்க”

“அதெல்லாம் முடியாதுப்பா டீல்னா டீல்தான்”

“நான் இன்னொருநாள் ஆடுறேன் அன்னி” என உத்தரவு வாங்கவே “கன்டிப்பா ஆடனும்” என சத்தியம் வாங்கிகொண்டாள். சுவேதா.

அதன்பின் நடந்த விளையாட்டுகள்; பெரியவர்களின் ஆசிர்வாதம் என அந்த வீடு கலைகட்டியது. அதிலும் சந்துரு தன் மனைவிக்கு ஊட்டிவிட “டேய் அண்ணா இனி எனக்கெல்லாம் ஊட்டிவிட மாட்ட?” என சுவேதா கூற அவளுக்கும் அதே செய்துவிட்டு “நீ எங்க மூத்தபிள்ளைடா சுவேதா! என்ன அன்பு நான் சொல்றது சரியா” என கூற சுவேதாவின் மனம் நிறைந்தது.

பழைய படத்தின் கிளைமேக்ஸ் போல கல்யானத்தான் இறுதி என காத்திருந்த பலர் ஏதோ இந்த கல்யானம் தன்னால்தான் நடந்தது என பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தனர். அதிலும் மனமக்களை வாழ்த்த வந்த வாய் வயிறாற இருந்தலும் அதையும் தாண்டி கல்யானத்தின் அர்த்தம் என்ன என்று கேட்டால் சாப்பாடு என்று கூறுமவிற்கு வந்து அனைத்து பந்தியிலும் கலந்துகொண்வர்களும் அவர்களையும் புன் முகத்துடன் கவனித்த அந்த ஊர் மக்களின் விருந்தோம்பலும் என மாலை சூரியன் மழை மேகங்களுக்கிடையே இருந்து ரசித்து வந்தான்.

மேற்குதொடர்ச்சி மலையின் உதவியால் தன்னை மறைத்துகொண்ட ஆதவன். கூடவே அன்பின் அறை காதல் ஜோடிகளின் அறையாக மாறிகொண்டிருந்தது. அன்பரசிக்கு அலங்காரங்கள் செய்யபடவே

“அன்னி எங்க அண்ணா இதுல எல்லாம் ரொம்ப வீக்கு நீங்கதான் சொல்லிதரனும்” இது சுவேதாவின் வழக்கமான கிண்டல். அதற்கு பதில் பேசமுடியாமல் வெட்கத்தில் திணறினாள் அரிசி.

“என்ன அன்னி நீங்க முழிக்குறத பாத்தா உங்களுக்கும் எதுவும் தெரியாது போல” என்று கன்னத்தை கிள்ளினாள்.

“ஆமா இவ பத்துகோர்ஸ் முடிச்சுருக்கா” என மஞ்சு சுவேதாவடன் வம்பிழுத்தாள்.

“அன்னி உங்க ஊர்ல ஒரு பழமொழி சொன்னாங்க காலையிலதான் கேட்டேன். ஊமை ஊர கெடுக்குமாம்னு” என்று மஞ்சுவை பார்த்தாள்.

“ஏன்டி சும்மா இருடி அன்னி முன்னாடி” என சினுங்கினாள்.

ஆனால் தன்னை வம்பிழுத்த தோழியை சும்மா விடுவதாய் இல்லை சுவேதா “நானாவது பரவாயில்ல அன்னி இவ இருக்காளே கடைசி வரைக்கும் எதுவுமே பன்னாத மாதிரி இருந்தா திடிர்னு பாத்தா இவளுக்கும் பாலாஜிக்கும் கல்யானம் முடிஞ்சுதான் சந்துரு கூட்டிபோறான் அப்பதான் எனக்கே தெரியும்னா பத்துகோங்க! அதுவும் சாட்சி கையெழ்த்துபோட! அது மட்டுமா உங்க ஆளு அதான் சந்துரு இந்த மஞ்சுவோடு அப்பாகிட்ட வாங்குன் அந்த அறை இப்ப நினைச்சாலும் எனக்கு காது வலிக்குது” என்று காதை பொத்தினாள்.

“என்ன அவர அடிச்சாங்களா” என்று பதறினாள் சுவேதா.

“ஆமா ஆனா அதுக்கு அப்புறம் சந்துரு பேசி அவரை சமாதானம் செஞ்சது நீங்க பாத்துருக்கனுமே! நானே அசந்துட்டேன். அடுத்த லவ்வுக்கெல்லாம் ஹெல்ப் பன்னவன் உங்க்கிட்ட லவ் சொல்றதுக்குள்ள ஐயோ அப்பா” அரிசியின் முகத்தில் புன்னகை தாழம்பூ போல பூத்தது.

“ஆனா இந்த மஞ்சு இவ மாசமா இருக்குறத இன்னு அவன்கிட்ட சொல்லாமா இருக்கா! அவனுக்குதெரிஞ்சா எவ்வளவு சந்தோஷபடுவான் தெரியுமா”

“ஏன் அன்னி இன்னும் சொல்லல” இது அன்பு

“இல்ல அன்னி ஏற்கனவே மாசமா இருந்தப்போ சொன்னேன் அவன் சந்தோஷபட்டான். ஆனா குழந்தை என வயித்துல தங்கள அது தெரிஞ்சு அழுதுட்டான். அவன் என்னால அழ வைக்கமுடியாது அன்னி. அதான் இந்த முறை என்னால சொல்லமுடியல.” என்று மேலே பார்த்தாள். மஞ்சுவின் கன்னில் நீர் காத்திருக்க.

“ஏய் மஞ்சு அன்னிக்கு எதாவது டிப்ஸ் இருந்தாகுடு” என சுவேதா அந்த இடத்தின் நிலையை மாற்றினாள். “ச்சீ போடி” என மஞ்சு சிணுங்க அந்த இடத்தில் சிரிப்பு குடிகொண்டது.

சந்துருவின் மனதில் ‘அந்த ஜான்சி அவ்வளவு அழுத்தமா சொன்னாளே!  யாருக்குதமே கெடுதல் நினைக்காத எழிலரசியவே கருனையில்லாம கொண்ணங்க அப்போ குழந்தை பிறந்தா அன்பையும் சொன்னமாதிரியே கொண்ணுடுவாங்களோ. இல்ல அரிசி என்னோட உயிர் உனக்குதான் சொந்தம் நீ வாழ்ந்தா போதும் எனக்கு நான் செத்தாலும் பரவாயில்ல. நமக்குள்ள இது நடந்தாதான குழந்த! நடக்காது அன்பு என்ன மன்னிச்சிடு” என மனதில் புலுங்கிகொண்டிருந்தான். அந்த நேரம் “ஹாப்பி பர்ஸ்ட் நைட் விஷ்ஸஸ் பை ஜான்சி” என ஒரு குறுஞ்செய்தி வர சந்துரு சற்றுபதறினான்.

அப்போது பின்னாலிருந்து ஒரு கை அவனது கைபேசியை பிடுங்கியது.”டேய் உள்ள ஃபோன் அனுமதி இல்ல” என்றாள் சுவேதா.

“ஏய் லூசு ஒரு இம்பார்டன்ட் கால் வரும்டி அதான் வெயிட் பன்றேன்”

“அன்னி உனக்கு வெயிட் பன்றாங்க பரவாயில்லையா! இனிமே அவங்கதான் இம்பார்டன்ட் உனக்கு முதல்ல போ” என்று சுவேதா கூற உள்ளே அன்பரசி நின்றுகொண்டிருந்தாள்.

என்றுமில்லாமல் இன்று கொள்ளை அழகுதான். சந்துருவால் அவனது கண்களை எடுக்க முடியவில்லை அவளிடமிருந்து. அவன் வந்ததும் அவள் எழுந்துகொண்டு தலைகுணிந்துநின்றாள். நாட்டிற்கே அரசியாக இருந்தாலும் தன் மன்னவன் முன்னிலையில் ஓர் குழந்தையாக இருப்பது தமிழ்பெண்களின் ஓரு பன்பு. அரிசியும் அப்படியே.

“ஏய் என்ன அரிசி இதெல்லாம் உட்காரு” என்றான்.

“இல்ல நீங்க உட்காருங்க”

அவளருகில் அவன் வந்தான் அவளுது இதயதுடிப்பு அதிகமாகியது. தலையை கீழே குனிந்துகொண்டாள்.

‘எப்படி கூறுவது இவளிடம் பேசாமல் கலைப்பா இருக்குனு சொல்லிட்டு தூங்கிடாலாமா? இல்ல வேனாம்” என ஒரு திட்டம் தீட்டினான்.

அவளது கன்னத்தைபிடித்து நிமிர்த்தியவன் அவளை கட்டிலில் அமர வைத்தான். அவள் மீண்டும் தலைகுனிந்தாள். அவள் கண்ணில் ஜெனியின் மரணமும் கூடவே அந்த ஜான்சியும் வந்து சென்றனர். “சந்துரு சாககூடதுனா நீ குழந்தை பெத்துகிட்டு சாகனும்” எனற அந்த வார்த்தை எதிரொலித்தது.

“அரிசி என்க்கு ஒரு ஆசை அத நிறைவேத்துவியா”

அவள் குழப்பதுடன் நிமிர்ந்துபார்த்தாள். “ம்ம்” என தலையாட்டினாள்.

“இல்ல எனக்கு லவ் பன்னனும்னு ஆசை! சுத்தமான லவ் அதுவும் உன்ன மட்டும்! சின்ன வயசுல உன்கூட இருத்துட்டு பிரிஞ்சுபோனப்போ ஏதோ ஒருமாதிரி இருந்துச்சு! அது காதல்னு எனக்கு அப்போ தெரியல அரிசி. நான் உன்ன மட்டும்தான் நினைச்சுகிட்டு இத்தன நாள் வாழ்ந்தேன். இப்ப இங்க நான் வந்தது கூட நீ யாரையாவது கல்யானம் பன்னிருப்ப உன்ன ஒருதடவ பாத்துட்டு உன் குட்ட ஏன்ஜல கொஞ்சிட்டு போகலாம்னுதான் வந்தேன் ஆனா உனக்கு கல்யானம் ஆகலை! உண்மைய சொல்லனும்னா எனக்கு கொஞ்சும் சந்தோஷமா இருந்துச்சு! அப்புறம் உன் லவ் பத்தி எனக்கு தெரிஞ்சது அன்பு” என்று வார்த்தைகளை விழுங்கினான்.

அவள் குற்ற உணர்வில் அவனை பார்த்தாள். “இல்ல அன்பு என்ன மன்னிச்சிடு என்னால உன்கிட்ட எந்த உண்மையும் மறைக்க முடியாது அதான் சொன்னேன் எதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சிடுடா” என அவளை பார்த்தான்

அன்பு அவனது மனதைபார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் அவன்மீது சாய்ந்துகொண்டாள். “சாரிடா அரிசி” என அவள் தலைமீது கை வைத்தான்.

“இல்லைங்க நான்தான் தப்பு பன்னிட்டேன்” என அவள்கூற

“இது இந்த வயசுல வரரதுதான்டா அதுக்கு நீ என்ன செய்வ! என்னால உன்மேல எந்த மாசும் நினைக்க முடியாது”

அவள் அமைதியாக இருக்க “ஏய் அரிசி என்ன என்னோட ஆசைனு கேக்க மாட்டியா”

“ம்ம்”

“என்ன ம்ம்! வாய தொறந்து கேட்டாதான் சொல்லுவேன்” என அவளை மார்பில் அனைத்தபடி கேட்டான்.

“சொல்லுங்க”

“இப்புடி இல்ல! அரிசி மாதிரி கேளு”

“சொல்லுடா ஓலைபட்டாசு” என்று செல்ல கோப்பட்டாள்.

“இதுதான்டி என் அரிசி! ம்ம் நான் காலேஜ் படிக்கும்போது எல்லாரும் ஜோடியா சுத்திகிட்டு இருப்பாங்கடி எனக்கும் அத பாக்கும்போது மனசுல ஒரு ஆசை வந்திச்சு” என்று அவன் முடிக்கும் முன்னே “நீ யாரையாவது லவ் கிவ் எதுவும் பன்னியா” என்றாள்.

“ஆமாடி” என்றான்

அவனுது கையை பிடித்து கிள்ள “வலிக்குதுடி”

“என்ன தவற யாரையவது நினைச்ச”

“அதான் நீ பொறந்ததும் உனக்கு நான் தான்னு முடிவுபன்னிடாருடி கடவுள் அப்பறம் எப்புடிடி!”

“அவரு வந்து உங்கிட்டு சொன்னாராக்கும்”

“இல்லையா பின்ன! அப்புடி இருக்க போயிதான் எனக்கு வந்த லவ் லட்டர்லாம் திரும்ப அனுப்பிட்டேன்.”

“ஆமா எத்தன வந்துச்சு”

“அது ஒரு நூறு இருக்கும் நான் எனக்கு கல்யானம் ஆகிருச்சுங்க அப்புடின்னு சொல்லி திரும்ப அனுப்பிட்டேன்”

“என்ன உங்களுக்கு ஏறகனவே கல்யானமாகிருச்சா?!”

“அட என அரிசி தாலிகட்டுனாதான் கல்யானமா! உன்ன நினைச்சுகிட்டு இருந்தாலும் அதுக்கு அதுதானடி அர்த்தம்! உள்ள உன்கூட வாழ்ந்துட்டு வெளிய எப்புடி”

“ம்ம்” என சிரித்தாள்.

“ஆமா சொல்ல வந்த விசயத்த மறந்துட்டேன் பாத்தியா! எனக்கு உன்ன லவ் பன்னனும்டி அப்புறம் இதெல்லாம் வச்சுகலாமே ப்ளீஸ்டா அரிசி” என்றான்.

அவனது ஆசை மொழியில் சற்று மயங்கிபோனவள் “ம்ம் சரிங்க” என்றாள் உள்ளிருந்து. அதன்பின்தான் உணருந்தாள் ஜான்சி என்ற பெயரை.

“சரி அரிசி செல்லம் நீ தூங்கு” என அவளுளை பார்த்தான்.

வார்த்தை இல்லாமல் “நீங்க தூங்களையா” என்றால்.

“எனக்கு லேட் ஆகும் அரிசி நீதான் டயர்டா இருப்ப” என அவளை சாய்த்தான். அவள் அவனை ஏக்கமாக பார்த்துகொண்டிருந்தாள்.

“ஒழுங்கா தூங்கனும் இப்புடி அர கண்ணு மூடுற வேலைலாம் வச்சுக்கூடாது நான் உன்ன பாத்துகிட்டுதான் இருப்பேன். தூங்குறதுலையும் சரி சாப்பாட்டு விசயத்துலையும் சரி நான் உனக்கு புருஷனாதன் நடந்துகுவேன் பாத்துக்க! கண்ண மூடு” என அவன் கூற

“சரிங்க” என சிரித்துகொண்டே போலியாக கண்ணை மூடினாள்.

“என்ன சிரிப்பு” என்றான். தன் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்துவிட்டான்.

அன்பரசி சிறிதுநேரத்தில் உறங்கிபோக அவளை தூங்கும் அழகை ரசித்துகொண்டிருந்தான். பின் அவன் போர்வையை எடுத்து தன் காதலிக்கு போர்த்திவிட தன்னவனுடன் நிகழ்வில் இல்லாமல் கனவில் வாழ்ந்துகொண்டிருப்பாள்போலும் அந்த போர்வையை இருக்கமாக கட்டி அனைத்து குழந்தை மாதிரி உறங்கினாள்.

“என்ன மன்னிச்சிடு அரிசி” என அவள் தலையை கோதியவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு வெளியே நடந்தான். அவன் போனதும் கண்கள் திறந்தவள் அவன் செல்வதை பார்த்துகொண்டிருந்தாள்.

“ஏன்டா நீ செத்தா நான் மட்டும் உயிரோட இருப்பேன்னு நினைக்குறியாடா” என மனதிற்குள் கண்ணீர் வடித்தாள். அவன் முத்தம் வைத்த இடத்தை தொட்டுபார்த்தாள்.

அனைவரும் உறங்கிகொண்டிருக்க வெளியில் வந்தான். அந்த பந்தலில் ஒரு நபர் மட்டும் அமர்ந்திருப்பது தெரிந்தது.

“என்னப்பா இங்க உட்காந்துருக்கீங்க தூங்கலையா”

:”இல்ல தூக்க வரலப்பா! ஆமா நீ அன்புகூட இல்லாம இங்க என்ன பன்னுற” இது சன்முகம்.

“இல்லப்பா அவ ரொம்ப டையர்டா இருக்கா. அதான் தூங்குறா எனக்குதூக்கம் வரல அதான்” என்றான்.

அவனை பார்த்தவர் மீண்டும் அமைதியானார்.

“என்னப்பா காலையில இருந்து ஒருமாதிரி இருக்கீங்க நான் கவனிச்சிகிட்டுதான் இருக்கேன். கம்பெனில எதாவது பிரட்சனையா”

“இல்லப்பா உங்க அம்மா நியாபகம் அதான்” என அழ சந்துரு அமைதியாக இருந்தான்.

“அதான் அம்மாவா அன்பு வந்துட்டாளப்பா இனி ஏன் கவலை படுறீங்க! உங்கள நல்லா பாத்துப்பா”

“அவளுக்கு எதாவது ஆகிடுமோனு பயமா இருக்குப்பா” என்றார் சன்முகம்.

“என்னப்பா சொல்றீங்க”

“ஆமாப்பா காலையில அந்த ஜான்சின்னு ஒருத்தி வந்தா தெரியுமா”

“யாரு” என சிந்தித்தவன்.”ஆமா கூட ஒரு பையன் வந்திருந்தானே வளர்மதிகிட்டகூட கடலை போட்டானே அவங்களா” என்று சமாளித்தான்.

“அவதான்பா நான் யாருக்கு தெரியாம உன்ன வளக்கனும்னு நினைச்சேனோ அவதான் அது. இப்ப உங்க கல்யானத்துல வந்துருக்கா. அதுவுமில்லாம. சந்துரு எனக்கு தேவையில்ல அன்புதான் என்னொட டார்கெட்னு சொல்லுறா அதான் பயமா இருக்கு”

“என்னப்பா சொல்றீங்க எனக்கு புரியலை”

“அவங்க அப்பாதான் உங்க அம்மா பார்வதிமேல கார் ஏத்தி கொண்ணாங்க” என்று அழுதார்.

“என்னப்பா சொல்றீங்க ஏன் அம்மா நல்லவங்கப்பாஅவங்களுக்கு என்ன பன்னிருப்பாங்க”

“அம்மா நல்லவங்கதான்பா ஆனா தொழில்ல போட்டியவிட பொறாமை அதிகமா இருந்த காலம்பா அது.”

“அதுக்கு அம்மாவ கொல்ல எப்புடிப்பா மனசு வந்துச்சு” என சந்துரு கண்கலங்கினான்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: