Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 38

பாகம் – 38

கருங் குழலழகும் காதின் தூக்கலும்

அருஞ்சிறு புருவ அஞ்சன அழகும்

பெருத்து நீண்ட பெண்ணுன் மூக்கும்

வரித்து இழுக்குதே வடிவே வாடி!

 

அம்மன் சிலைபோல் அழகுருக் கனியே!

இம்மண் வாழ்வில் என்னவள் நீயே!

அம்மா அப்பா அத்தனை உறவையும்

உம்மால் முடியும் உம்வச மாக்கிட!

 

ஊனு மிழந்தேன் உறக்கமு மிழந்தேன்

தேனே எந்தன் தெவிட்டா அமுதே

கானம் பாடியே கலைக்கிறே னுந்தனை

வானத் தேவதை! வாழ்ந்திட வருவயோ?

 

காதலின் அளவைவிட காமத்தின் அளவு கூடிப்போக தன் வசம் இழந்தவன் அவளை தன்னவளாக்கிவிட்டான். எத்தனை மணி நேரம் விளையாடி தீர்த்தானோ அவனுக்கே தெரியாது. விடிந்தும் விடியாத காலை நேரம் போன் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தமர்ந்தான்.

 

நிதிஷ், “சாரி பார் த டிஸ்டர்ப் சார், ஷர்மா சார் போன் பண்ணிணாரு. அவரு உங்களுக்கு போன் பண்ணிணா நீங்க எடுக்கலயாம். மேடம் ப்ளட் டெஸ்ட் இன்னும் ஏன் எடுக்கலன்னு சத்தம் போட்டாரு. உங்கள அங்கயே ஒரு ஹாஸ்பிடல்ல சீக்கிரமா எடுத்து அனுப்ப சொன்னாரு.”

 

“லாஸ்ட் வீக் புல்லா டைம்மே இல்ல நிதிஷ். இந்த வீக்ல நான் அவருக்கு ரிப்போர்ட் எடுத்து அனுப்பிட்டு, அவருக்கும் நானே இன்பார்ம் பண்ணிடுறேன்” என்று போனை வைத்து விட்டு மீண்டும் படுத்து கொண்டான்.

 

தூக்கம் வந்த நேரம் வெளியில் நசநசவென்று பேச்சு சத்தம் அதிகமாக கேட்க ஆரவ் தூக்கம் கலைந்து மெல்ல எழுந்தான். அவன் அருகில் இன்னும் மயக்கம் தெளியாமல் பார்பி அரைகுறையாக இருக்க, ஆரவ் அவசர அவசரமாக எழுந்து அவள் ஆடைகளை எல்லாம் தேடி எடுத்து போட்டுவிட்டு அவளை சரி செய்தான். தான் வந்த சுவடே தெரியாமல் அனைத்தையும் இரண்டு நிமிஷத்திற்குள் மாற்றி வைத்துவிட்டு சத்தமில்லாமல் கதவை திறக்க, எதிர் அறையிலிருந்து ரிஷியும் அதே நேரம் வெளியேறினான்.

 

ரிஷி சந்தேகமாக, “இது பார்பிக்கு குடுத்த ரூம்தான, இந்த நேரத்துல இங்க என்ன பண்ற நீ? ” என்றவனுக்கு பதில் சொல்லாமல் ஆரவ் வேகமாக ரிஷியை தள்ளி கொண்டு அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

“ஆரவ்… கேக்குறேன்ல பதில் சொல்லுடா? அங்க எதுக்கு போன நீ?”

 

“முதல்ல வெளியில என்ன பிரச்சனன்னு பார்த்துட்டு வாடா.” ஆரவ்வின் வாய் செல்லாமலேயே சிவந்திருந்த கண்களும் நேர்பட பேசாத முகமும் நேற்று என்ன நடந்திருக்கும் என்று ரிஷிக்கு கொஞ்சம் புரியவைக்க கோபத்தில், “நான் வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்” என்று வெளியேறினான்.

 

வெளியே ஐந்தாறுபேர் கூடி நின்று ஆரவ் நேற்று தங்கி இருக்க வேண்டிய அறையை எட்டி பார்த்து கொண்டு இருந்தனர். ரிஷியும் அவர்களிடையே நுழைந்து உள்ளே எட்டி பார்க்க அந்த ஹோட்டல் ரூம் செர்வீஸ் பாய் ஒருவன் உள்ளே இறந்து கிடந்தான்.

ரிஷி பதறியடித்து ஆரவ்விடம் வந்து சொல்ல, ஆரவ்வும் விருவிருவென போய் பார்த்தான். இறந்தவனது நடு மார்பில் குண்டு பாய்ந்திருக்க, கொலை செய்தவன் ஜன்னல் வழியாக வந்து சென்றிருப்பது அப்பட்டமாக தெரிந்தது. சில நிமிடங்களில் ஹோட்டல் மேனேஜர், போலீஸ் என அனைவரும் கூடிவிட விசாரணைக்காக ஆரவ் தனி அறைக்கு அழைத்து செல்லபட்டான்.

 

போலீஸ், “இந்த கொலை உங்க ரூம்ல நடந்திருக்கு. இதப்பத்தி நீங்க என்ன சொல்றீங்க?”

 

ஆரவ், “இது என்னை கொல்றதுக்காக போட்ட ப்ளான். ஏற்கனவே என்னை ரெண்டு மாசம் முன்னாடி கடத்தி கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க. அவங்கதான் இதையும் செஞ்சிருக்கனும். நேத்து நைட் நான் ரூம் கீயை டோர்ல மறந்து வச்சதுதான் என்னோட தப்பு. அதனால சந்தேகபட்டு செர்வீஸ் பாய் உள்ள போய் பார்த்திருக்கலாம். கொலைகாரன் நான்னு நினைச்சு அவன சுட்ருக்கலாம்.”

 

“நேத்து நைட் நீங்க எங்க தங்கி இருந்தீங்க?”

 

“இதே ஹோட்டல்ல, பக்கத்து ரூம்ல என் காதலி கூட இருந்தேன். நேத்து அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அதான் அவ கூடவே இருந்துட்டேன். பட் இந்த காதல் விஷயத்த இப்போதைக்கு லீக் பண்ண நான் விரும்பல. அவள பத்தி இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நானே லீகலா அனவுன்ஸ் பண்ணலாம்னு இருக்கேன். உங்களுக்கு தேவைன்னா நேத்து நடந்ததெல்லாம் சிசிடிவி புட்டேஜ்ல செக் பண்ணிக்கோங்க. பட் அவளோட போட்டோ மட்டும் கண்டிப்பாக வெளிய லீக் ஆக கூடாது. அப்டி லீக் ஆச்சுன்னா உங்களுக்கு அகெயின்ஸ்டா நான் லீகலா பண்ண வேண்டியத பண்ணிடுவேன்…” அவன் பக்கம் அத்தனை ஆதாரமும், மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும், பண பலமும் பதவியும் இருக்க, தங்கள் நாட்டின் அதிமுக்கிய கெஸ்ட்டாக வந்து இருப்பவனை தேவையில்லாமல் பகைத்து கொள்ள அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லையே. ஆரவ் ரிஷி அறையில் இருந்ததாக வெளியே ப்ரஸ்க்கு அறிவித்துவிட்டு, போலீஸ் ரெக்கார்டில் மட்டும் ஆரவ் அனுமதியோடு உண்மை எழுதபட்டது.

 

மதியத்திற்குள் பாதுகாப்பு தருவதாய் போலீஸ் தரப்பிலிருந்து மெஸேஜ் வந்துவிட தற்சமயம் வீரர்கள் வேறு ப்ளோருக்கு மாற்றபட்டனர். பார்பி இன்னும் தூங்கிவழிய ஆரவ் அவளை தூக்கி சென்று புது அறைக்கு மாற்றிவிட்டு எதிரிலிருந்த தன் அறைக்கு வருகையில், அங்கே குருவும் ரிஷியும் அவனுக்காக தயாராக காத்திருந்தனர்.

 

குரு, “உனக்கென்ன பைத்தியமாடா? நான் நேத்து அவ்ளோ தூரம் சொல்லியும் நீ கேக்கலைல. இதுக்கு முன்னாடி நீ பொண்ணுங்க விஷயத்தில தடுமாறினப்போ கூட நான் ஒண்ணும் சொல்லலடா. ஆனா இவ அவங்கள மாதிரி இல்ல, சின்ன பொண்ணு, யாரும் இல்லாதவ, இப்டி பண்ணிட்டியேடா, சே….”

 

ரிஷி, “கொஞ்சம் பொறுமையா இருங்க குரு, இதெல்லாம் நடக்கனுங்கிறது விதி. நேத்து இவன் பார்பி ரூம்ல தங்கலன்னா இந்நேரம் செத்திருப்பான். இப்பல்லாம் லிவ்விங் டூ கெதர் சாதாரணம் ஆகிப்போச்சு. அவளுக்கும் இவன பிடிச்சிருக்குல, இது அவங்களோட லைப், அவன் நிச்சயமா அவள கைவிட மாட்டான்.”

 

“என்ன இருந்தாலும் அவன் அவள கல்யாணம் பண்ணாம, இப்டி பிகேவ் பண்ணி இருக்க கூடாது ரிஷி.”

 

ஆரவ், “கல்யாணம் என்ன லைசென்ஸா? எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. என் மனசில அவதான் இருக்கா, ஒரு சின்ன கயிறுதான் அவ மேல எனக்கு இருக்குற உரிமைய நிரூபிக்குமா? ஏன் இத்தன நாளா நான் அவளுக்காக பாத்து பாத்து ஒண்ணொண்ணும் செஞ்சேனே, இது கணவனுக்கான தகுதி இல்லையா? என்ன பொறுத்தவரை அவ எப்பவுமே என் பொண்டாட்டிதான். யாருக்காகவும் எதுக்காகவும் நான் அவமேல இருக்குற உரிமைய குறைச்சுக்க மாட்டேன்.”

 

குரு, “பல்ல தட்டிடுவேன். என்ன பேசிட்டு இருக்க நீ? உன் இஷ்டப்படி வாழ்றதுக்கு பேரு வாழ்க்கை இல்ல. அது உனக்கு மட்டுமில்ல அவளுக்கும் சேர்த்து கெட்ட பேர வாங்கி குடுக்கும். ஒழுங்கா சீக்கிரம் கல்யாணம் பண்றதா இருந்தா அந்த பொண்ண கூட்டிட்டுபோ, இல்லன்னு வச்சுக்கோ என்னோட பவர யூஸ் பண்ண எனக்கும் தெரியும்…” அவர் சொல்லி முடிக்கையில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

 

ரிஷி ஓடிப்போய் கதவை திறக்க பார்பி கண்களை கசக்கி கொண்டே தூக்க கலக்கமாய் வந்து நின்றிருந்தாள். தன்னுடலில் வித்யாசமாக  எந்த மாற்றத்தையும் உணராததால் அவள் சாதாரணமாக, “ஆரவ் எனக்கு இன்னும் தலைவலி போகமாட்டிக்குது, ரொம்ப டயர்டா இருக்குது.” என்றாள்.

 

ஆரவ், “நீ கொஞ்ச நேரம் உன் ரூம்லயே இருடா நான் இப்ப வர்ரேன்.”

 

“எதுக்கு வெளியில போலீஸ் நிறையபேர் நிக்கிறாங்க? நான் நேத்து எதாச்சும் தப்பு பண்ணிட்டேனா? எனக்கு நைட் என்ன நடந்ததுனு ஞாபகமே இல்ல”

 

குரு கண்கள் சிவக்க ஆரவ்வை முறைத்ததை பார்த்து, ரிஷி வேகமாக பார்பியை அங்கிருந்து வெளியேற்றி அவள் அறைக்குள் தள்ளினான்.

 

குரு, “நைட் அவளுக்கு கான்சியஸ் இல்லையா ஆரவ்?”

 

ஆரவ் தலைகுனிந்து “இல்ல….” என்றதும், குரு டேபிளில் இருந்த நோட்பேடை அவன்மேல தூக்கி எறிந்து, “இனிமே என் மூஞ்சிலயே முழிக்காதடா ராஸ்கல். உன்ன போய் நம்பினேன் பாரு….” என கத்திவிட்டு வெளியேறி போக, திமிராக நின்றவனை பார்த்து ரிஷிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

 

ரிஷி, “அவர் என்ன சொன்னாலும் அது நம்ம நல்லதுக்குதான் இருக்கும். பலதடவை சொல்லியும் நீ கேக்கலைன்ற கோபத்தில திட்டிட்டாரு, எதையும் மனசுல வச்சுக்காத. இப்ப நீ போய் பார்பிய பாரு, மத்ததெல்லாம் சீக்கிரமே சரியாகிடும்.”

 

அடுத்தடுத்து வந்த நாட்களில் ஆரவ்வும் ரிஷியும் மட்டும் தனியாக ஒருபுறம் இருக்க, குருவோ யாருடனும் நெருங்காமல் கோபமாக மற்றொரு புறம் இருக்க, மற்றவர்களும் இந்த சண்டையை கண்டும் காணாமல் ஒதுங்கி இருக்க, நடப்பது எதுவுமே பார்பிக்கு விளங்கவில்லை. ஆனால் ஆரவ் வழக்கத்தை விட தன்மீது அளவுக்கதிகமாக அக்கறை எடுத்து கொள்ளவது மட்டும் நன்றாகவே புரிந்தது. பார்பி பலமுறை கேட்டும் ரிஷி வாயை திறக்கவே மாட்டேன் என்றுவிட்டான், மற்றவர்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியவில்லை.

 

பொறுத்து பொறுத்து பார்த்த பார்பி இறுதியில் நேரடியாக குருவிடமே சென்று, “ஏன் நீங்க இவ்ளோ கோவமா இருக்கீங்க? நான் தப்பு பண்ணி இருந்தா சொல்லுங்க திருத்திக்கிறேன். ப்ளீஸ், நீங்க இப்டி ஒதுங்கி இருக்குறது என்னவோ மாதிரி இருக்கு.” என கெஞ்ச, அவருக்கு அவள்மேல் பரிதாபமும் ஆரவ்மேல் கோபம் இன்னும் கூடியதே தவிர குறைந்த பாடில்லை.

 

“நான் இனிமே யாருக்கும் அட்வைஸ் பண்ற மாதிரி இல்லம்மா. உனக்கு தான் கடைசியா சொல்றேன், சீக்கிரமா ஆரவ்வ கல்யாணம் பண்ணிக்கோ, லேட் பண்ணாத. இவ்ளோ அப்பாவியா இருக்குறியே, உன் லைப் நல்லா இருக்கணும்னுதான் நான் ஆசை படுறேன், பாக்கலாம்…” என முடித்துவிட அதற்கு மேல் அவரிடமிருந்து அவளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. தெளிவாய் சொன்னாலும் கூட பாதிக்கு பாதி புரியாமல் தலையை சொறிந்தபடியே குழப்பத்தோடு ஆரவ் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

மூன்று ஒன்டே மேச்சும், ஒரு டுவென்டி டுவென்டி மேச்சும் கொண்ட அந்த சீரிஸ் சரிக்கு சமமான அணிகளின் ஆட்டத்தினால் விருவிருப்பாக நிகழ்ந்தேற 3-1 என்ற விகிதத்தில் இந்தியா ஒன்டே சீரிஸை வென்றது. நாளை ஒரு டுவென்டி டுவென்டி மட்டும் இருக்கிறது. அதற்கு மறுநாள் குரு பேர்த் டே வருகிறது, வழக்கமான உற்சாகமின்றி அவர் இருப்பது அனைவருக்கும் கவலை தர, பார்பி யாருக்கும் தெரியாமல் ஒரு ப்ளான் போட்டாள். அடுத்த நாள் காலை அனைவரும் ப்ராக்டீஸில் இருக்கும்போது யஷ்மித்தும் பார்பியும் நேருக்குநேர் நின்று சரமாரியாக திட்டியபடி ஒருவரையொருவர் முறைத்து கொண்டு சண்டை போட்டிருக்க, அனைவரின் கவனமும் அவர்கள் மீது திரும்பியது.

 

வஜ்ரா வந்ததுமே யஷ்மித்தை, “ஏன்டா எப்ப பார்த்தாலும் அவகிட்ட வம்பு பண்ணிகிட்டே இருக்க. சும்மாவே இருக்க முடியாதாடா உன்னால?” என பாய்ந்தான்.

 

ரிஷி, “ஏற்கனவே இங்க நிலமை சரி இல்ல, நீயும் ஏன்டா சேட்டை பண்ணிட்டு இருக்க?”

 

யஷ்மித், “அடங்கப்பா… டேய்… நிறுத்துங்கடா. நான் எப்படா சிக்குவேன்னு இருப்பீங்களாடா நீங்கள்ளாம்? நானே சும்மா இருந்தாலும் வந்து சண்டைக்கு இழுக்குறாளே அவள யாரும் என்னன்னு கேக்க மாட்டீங்களாடா?”

 

வஜ்ரா, “என்னம்மா பிரச்சன?”

 

யஷ்மித், “இன்னும் கொஞ்சம் செல்லமா கேளுடா, பாவம் பாப்பாவுக்கு காது வலிச்சிட போகுது.”

 

பார்பி அவனை வக்கனைத்துவிட்டு, “இவனத்தான இப்போதைக்கு சூப்பர் ப்ளேயர்னு எல்லாரும் பாராட்டுறாங்க, அப்டி இவன் என்ன பண்ணிட்டான்னு கேட்டேன், இது ஒரு தப்பா?”

 

குரு, “நீ நினைக்கிற மாதிரி கிரிக்கெட் அவ்ளோ ஈசி இல்லம்மா, திறமை இருந்தா மட்டும்தான் நின்னு விளையாட முடியும். உனக்கு எப்டி புரியிர மாதிரி சொல்றதுனு தெரியல. நம்ம யஷ்மித்க்கு இருக்குற திறமைக்கி பியூச்சர்ல அவன் கேப்டன் ஆகவும் சான்ஸ் இருக்கு.”

 

யஷ்மித் தோள்களை குலுக்கி முகத்தை அளவிற்கும் சற்று அதிகமாக பெருமையாய் உயர்த்திக்கொள்ள, “கேப்டன் ஆகுறதுக்கு திறமை மட்டும் போதாது குரு, கொஞ்சம் அறிவும் வேணும். இவனுக்கு மண்டைல மசாலா கம்மின்னு நான் சொல்றேன். யாரெல்லாம் இத ஒத்துக்கிறீங்க?” என்றதும் முதல் ஆளாய் பிரித்வி, “இதை நான் வழி மொழிகிறேன்” என்றான்.

 

யஷ்மித், “வேற யாரெல்லாம் இத மொழுக போறீங்க?” என்றதும் வம்புக்காக சிலர் கை தூக்கிட, “பாரு உனக்கு இங்கயே டெபாசிட் கம்மியா இருக்கு” என்றான்.

 

“அரசியல்வாதி மாதிரி பேசாம, என்னை ஜெயிச்சு காட்டு அப்ப ஒத்துக்குறேன்”

 

“என்ன பண்ணணும், பேட்டிங்,பவுலிங், பீல்டிங் ஆல் ஏரியா ஐயா கில்லி.”

 

“எனக்கு தெரியாததா சொன்னா எப்டி? தெரிஞ்சதா ஈசியா ரேஸ் மாதிரி எதாச்சும் சொல்லு ஒத்துக்குறேன்.”

 

“ஓகே ரேஸ் வச்சுக்கலாம்.”

 

“இப்ப நம்ம கிரவுண்டோட இந்த கார்னர்ல நிக்கிறோமா, ஸ்ட்ரெய்ட் ஆப்போசிட்ல அந்த கார்னர்க்கு போகனும். இதான் கேம். இதுல யார் வேணும்னாலும் கலந்துக்கலாம். வின் பண்றவங்களுக்கு தோக்குறவங்க எல்லாரும் தலைக்கு 10000 குடுக்கனும். நடுவுலயே ஓட முடியாம நின்னாலும் அவுட்டுதான். யாரெல்லாம் வர்றீங்க என்கூட போட்டி போட?”

 

வஜ்ரா கொஞ்சம் ஓடுறதுல சோம்பேறி, அதனாலேயே அடிக்கடி பவுன்டரிக்கு பாலை விரட்டி விடுவான். ஆதலால் அவன் போட்டியை விட்டு ஒதுங்கிவிட்டான். வேகத்தில் பிரித்வியை அடிக்க ஆளே இல்லையென அனைவருக்கும் தெரியும். எனவே பிரித்வி, “நான் ரேஸ்க்கு வரல, யார் வின் பண்ணாலும் அவங்களுக்கு நானும் 10000 தர்றேன்” என்றதும், அவள் எதிர் பாராதவகையில் பாதிக்கும் மேல் ஆட்கள் வந்து சேர்ந்தனர். ஆனால் பார்பியோ இவர்களுக்கு முன்னால் ஒரு கத்துக்குட்டி.

 

அவள் முன்னால் போய் நின்று கொண்டு, “போட்டிக்கி வர்றவங்க வரலாம்” என்றாள். யஷ்மித், ஆரவ் முன்னால் வந்து நிற்க, ஆரவ் ரகசியமாய் அவளிடம், “கீழ விழுந்திடாம பாத்து ஓடு, முடியலன்னா நின்னுடுடா” என்றதும் அவனுக்கு பரிசாக அவள் தன் புன்னகையை சிந்தி சென்றாள்.

 

யஷ்மித் பிரித்வியை இடித்துதள்ளி, “தள்ளி நில்லுடா பக்கி, நீங்க எல்லாரும் கேட்டுக்கோங்க, நான் இப்ப தீயா ஓடப்போறேன், குறுக்க மறுக்க எவனாது வந்தீங்க பல்லு பேந்திடும் ஜாக்கிரத” என்றான்.

 

குருவை ஜட்ஜ் ஆக்கிவிட்டு அனைவரும் தயாராக நிற்க, 1,2,3 சொல்லும் பெரிய பொறுப்பை பிரித்வி எடுத்து கொண்டான். அனைவரும் கை கால்களை உதறிவிட்டு தயாராக நிற்க, வேடிக்கைக்கு என சிலர் ஒதுங்கி நிற்க, இன்னும் சிலர் கேமராவோடு எதிர்திசைக்கு சென்று தயாராக இருக்க, பிரித்வியின் குரல் அங்கே ஓங்கி ஒலித்தது. “கெட் ரெடி, 1,2,3 கோ…” என்றதும் அனைவரும் புயல்வேகத்தில் பாய்ந்து ஓட, அனைவருக்கும் முன்னதாக ஆரவ்வும் யஷ்மித்தும் இருந்தனர். கிரவுண்டின் பாதி தூரத்தை அனைவரும் கடந்திருக்கும் போது விர்ர்….ரென பைக்கில் பார்பி பின்னால் பார்க்கும் படி திரும்பி அமர்ந்து கொண்டு ஒரு போலீஸ் அதிகாரியுடன் அவர்கள் முன்னால் பறந்து சென்றாள்.

 

வாயெல்லாம் பல்லாய் “பாய்…..” என கைகளை ஆட்டி டாட்டா காட்டி செல்பவளை கண்டு, “ஏய் இது சீட்டிங்” என சிரித்து கொண்டே மற்றவர்கள் எல்லாம் அங்கேயே நின்றுவிட, ஆரவ்வும் யஷ்மித்தும் மட்டும் விடாமல் பைக் வேகத்திற்கு ஈடு கொடுத்து விரட்டினர். அவர்களுக்கு பழிப்புகாட்டி, “நான் தான் வின் பண்ண போறேன், தேவையில்லாம நீங்க கஷ்ட படுறீங்க” என்று கத்தினாள். அவளுக்கு ஒரு அடி இடைவெளியில் மூச்சிறைக்க விடாமல் இறுதிவரை துரத்தும் அவர்களை பார்த்து, கேலியை நிறுத்திவிட்டு ஆச்சரியமாக பார்க்க ஆரம்பித்தாள். அவள்தான் முதலில் கோட்டை தாண்டினாள், இருந்தும் அவளுக்கு பின் அடுத்த நிமிடமே கோட்டை தாண்டியவர்களை பார்த்து அவளால் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. ஓடி வந்த அசதியில் மூச்சுவாங்க இருவரும் அமர்ந்து விட, மற்றவர்கள் அனைவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

 

பார்பி “தோத்திடுவீங்கன்னு தெரிஞ்சே ஏன் ஓடி வந்தீங்க?”

 

யஷ்மித் மூச்சிறைத்தபடியே “கடைசி வரைக்கும் போராடி பாக்குறதுன்றது… சிலபேருக்கு மட்டுமே இருக்குற ஒரு குணம்… அத நான் ஆரவ்கிட்ட இருந்துதான் கத்துகிட்டேன்…. என்னால எவ்ளோ தூரம் முடியும்னு… இன்னிக்கி ட்ரை பண்ணி பார்த்தேன்…”

 

ஆரவ், “அது இருக்கட்டும் நீ எதுக்காக இந்த டிராமாவ கிரியேட் பண்ண?”

 

“அத அப்புறமா சொல்றேன். முதல்ல தோத்தாங்கொள்ளி எல்லாம் வரிசையா வந்து பைன் கட்டுங்க”

 

மற்றவர்கள், “நீ ஏன் சீட்டிங் பண்ணிண?”

 

பார்பி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, “நானா? சீட்டிங்கா? உங்களையா? சீ சீ… நான் ஆரம்பத்தில இருந்து ரேஸ்ன்னுதான் சொன்னேனே தவிர ஒரு தடவ கூட ஓடனும்னு சொல்லவே இல்லையே. டோட்டல் டீமும் இப்டி தத்தியா இருந்தா நான் என்ன செய்ய?” என்றாள்.

 

குரு வாய்விட்டு சிரித்தபடி, “ஒரு சின்ன பொண்ணு உங்க எல்லாரையும் ஈசியா டக் அவுட் பண்ணிட்டா, போங்கடா டேய்….” என்றார்.

 

யஷ்மித், “என்ன குரு இவ்ளோ நேரம் சின்ன பையன் மாதிரி கோச்சுகிட்டு, ஓரமா நின்னு ஒப்பாரி வச்சுட்டு இருந்தீங்க. இப்ப திடீர்னு இப்டி அந்நியன் மாதிரி கெட்டப் மாறிட்டீங்களே?”

 

பார்பி, “பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க, டோட்டலா 80000 வந்திருக்கு. எல்லாரும் இன்னும் ஒன் ஹவர்க்குள்ள வஜ்ராகிட்ட பணத்த குடுத்திடனும். இல்லனா வஜ்ரா அவன் கையால வசூல் பண்ணிடுவான்.”

 

யஷ்மித், “அவ்ளோ அவசரமா பணத்த வாங்கி என்ன பண்ண போற பார்பி?”

 

பார்பி, “நான் இன்னிக்கு நைட் நம்ம குரு பேர்த்டேக்கு கேக் வாங்க போறேன்.”

 

யஷ்மித், “இத முதல்லயே சொல்லி இருந்தா வரிசையா வந்து மொய் எழுதியிருப்போம்ல, எதுக்கு இப்டி எங்க எல்லாரையும் லொங்கு லொங்குனு மூச்சுவாங்க ஓட விட்ட?”

 

பார்பி, “நீயா குடுத்தா அது உன்னோட பணம். இப்ப இது நானே ஜெயிச்சு சம்பாதிச்ச என்னோட பணம். நான் பெரிய கேக்கா ஆர்டர் குடுக்கபோறேனே…” என்று ஆரவ் போனை வாங்கி கொண்டு போய் ஓரமாய் அமர்ந்து கொண்டாள். அவளது விளையாட்டில் சகஜமாய் மாறி இருந்த குரு, “இன்னிக்கி மேச்ல வின் பண்ணீங்கனா செலபிரேட் பண்ணலாம். இல்லனா அவ்ளோதான்” என்றார்.

 

நேரம் இரவு 11.30 மணியை நெருங்கி இருக்க, எதிர்பார்ப்பை வீணாக்காமல் மேச்சில் நம்ம டீம் வென்றுவிட்டது. குரு, “இனிமே ஹோட்டலுக்கு போய் செலபிரேட் பண்ணினா லேட் ஆகும், ஸோ கேக்க இங்கயே வரவச்சு டிரஸ்ஸிங் ரூம்லயே கேக் கட் பண்ணலாம்” என்றதும் அதற்கான ஏற்பாடு நடந்தது. ப்ளேயர்ஸ் தவிர மற்றவர்கள் டிரஸ்ஸிங் ரூம் வருவது தவறு, இருந்தும் யாருக்கும் தெரியாமல் பார்பியும் அழைத்து வரப்பட்டாள். சரியாக பனிரெண்டு மணிக்கு குரு கேக் கட் பண்ணிணதும் யாருமே அதை சாப்பிடாமல் ஒருவர் மேல் ஒருவர் பூசி விளையாடி அந்த ரூமையே நாஸ்தியாக்கி விட்டார்கள். தான் கஷ்டப்பட்டு வாங்கிய கேக்கை ‘வட போச்சே’ன்ற மாதிரி, பார்பி கன்னத்தில் கை வைத்து சோகமாக பார்த்திருக்க குரு அவளருகில் வந்து, “இது எப்பவும் இவனுங்க பண்றதுதான்மா, சொன்னாலும் கேக்க மாட்டானுங்க. எனி வே தேங்க்ஸ் பார் யுவர் கேக்” என்றார்.

 

அடுத்த நாள் அனைவரும் தாமதாகவே எழுந்திரிக்க, பிரேக்பாஸ்ட்டின் போது குரு, “நம்ம டீம் கூட நான் செலபிரேட் பண்ற லாஸ்ட் பேர்த்டே இது. சோ கொஞ்ச தூரத்தில இருக்குற பாரஸ்ட் ஹோட்டல்ல எல்லாருக்கும் இன்னிக்கி பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணி இருக்கேன்” என்றதும் அனைவரும் குஷியாகிவிட, மதியமே அந்த பாரஸ்ட் ஹோட்டலை நோக்கி நம் படை கிளம்பியது. அழகாக பால்ஸூடன் அதை ஒட்டினார் போல் இருந்த உயர்தர ஹோட்டல் பார்க்கவே அட்டகாசமாய் இருந்தது.

 

டீம் மேட்ஸ் எல்லாம் தண்ணீரில் நெடுநேரம் ஆடி கழித்துவிட்டு மாலை மங்கும் நேரம் வேறு வகை தண்ணிக்கு நகர, ஆரவ்வும் பார்பியும் மட்டும் தனித்து விடப்பட்டனர். வந்த நாளிலிருந்து தனிமை தராமல் ரிஷி அவர்கள் இருவருடனே இதுவரை இருந்ததால், அவளுக்கும் இந்த தனிமை ரொம்பவே பிடித்திருந்தது. இருவரும் இப்போதிருந்த தாப மனநிலை போலவே நீரும் அவர்களை தழுவியிருந்தது, பாறைமேலிருந்த பார்பி கால்கள் மட்டும் நீரில் நனைய விட்டு விளையாண்டிருக்க, அவனோ நீரில் மூழ்கி முழுதும் நனைந்துவிட்டு அவளருகில் வந்தமர்ந்தான். ஈரம் சொட்ட சொட்ட வந்தவனை நிமிர்ந்து பார்க்க மனம் வராமல் அவள் தலை குனிந்து கால்களை தண்ணீரில் குழைத்து விளையாட ஆரவ் அவளிடம், “உனக்கு இந்த பால்ஸ்ஸ பார்க்கும்போது எதாவது ஞாபகம் வருதாடா?”

 

“இல்லயே….”

 

“இதே மாதிரி ஒரு இடத்திலதான், நாம மேல இருந்து கீழ குதிச்சோம்.”

 

“அச்சச்சோ… அப்புறம்”

 

“தண்ணிக்கடியில இருந்த ஒரு குகைக்கு போனோம். அங்க….” என அவன் நிறுத்திவிட்டு அவள் கண்களை பார்க்க, இதுவரை கவனமாக கேட்டவள் அவன் பார்வையின் கூர்மை தாங்காமல் திரும்பிக்கொண்டாள்.

 

“பார்பி நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு ரொம்ப நாளா தவிச்சுகிட்டு இருக்கேன்….” என்றதும் கன்னம் பழுப்பேற இமை குடைகள் தாழ்ந்து இதழ் புன்னகைசூடி அவனுக்காக பதில் வார்த்தை சுமந்து ஆசையாக அவள் காத்திருந்தாள். அவனோ, “ஆனா இப்ப சொல்ல மாட்டேன். நாளைக்கு நாம இன்டியா போனதும், உன்ன வேற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போவேன், அப்ப சொல்றேன்” என்றான்.

 

‘அடச்சீ… இவ்ளோதானா… இதுக்கு போய் இப்டி வழிஞ்சிட்டேனே’ என முகம் வாடியவளை பார்த்து ஆரவ் சிரித்துவிட, அவமானம் தாங்காமல், “போங்க சிரிக்கிறீங்க… நான் போறேன்…” என தண்ணீரில் இறங்கி வேகமாக நடந்தாள்.

 

ஆரவ் குறும்பாய், “ஹேய் போகாத… இங்க வா… உனக்கு கேட்க அவ்ளோ ஆசையா இருந்தா இப்பவே சொல்றேன், கிட்ட வா…” என்றழைக்க அவளோ நீரை அள்ளி அவன் மேல் தெளித்து, “சீ…..” என்று ஓடிவிட்டாள். பார்பி ஹோட்டலை வந்து சேரும்வரை ஆரவ்வின் சிரிப்பு சத்தம் மட்டும் அவளை பின்னாலேயே விரட்டிக்கொண்டே வர, இதுவரை இல்லாத இனிய பரவசநிலையில் இருவர் மனமும் மூழ்கி விட்டிருந்தது. பாவம் அவர்களுக்கு தெரியாது இதுதான் அவர்கள் அனுபவிக்கும் சந்தோஷமான கடைசி நாள் என்று.

 

பார்பி போன பிறகு ஆரவ்க்கு அடுத்தடுத்து வந்த மூன்று போன் கால்களினால் அவன் முகம் அதிர்ச்சியின் விளிம்பில் வெளிறி நின்றது…..

Leave a Reply

%d bloggers like this: