Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45

உனக்கென நான் 45

“ம்ம் அன்னிய இம்பிரஸ் பன்னுங்க” என சுவேதா கூற அன்பரசி “வேணாம் அன்னி என்று பதறினாள். சந்துருவோ “ம்ம் சரி நான் பன்னுறேன்! ஆனாஙஎன்ன கிப்ட் கொடுப்காங்க உங்க அன்னி” எனறான்.

“எங்க அன்னியே உனக்கு கிப்ட்தான்டா அண்ணா! அதுக்குமேல என்ன வேனும்” என்று அன்பின் கன்னத்தை கிள்ளினாள்.

“இது போங்குப்பா எதாவது பந்தயம் இருக்கனும்” என்று அவன் விடுவதாய் இல்லை.

“சரி என்ன வேணும் சொல்லு எங்க அன்னி பன்னுவாங்க”

“ம்ம்” என சிறிது யோசித்தவன்.”உங்க அன்னி என்கூட டான்ஸ் ஆடனும் சரியா டீல் ஓகேவா?!” என தன்னவன் கூற அன்பின் உள்ளம் உள்ளூர மகிழ்ந்தாலும் சிறிய தயக்கம் அவளை தொற்றிகொள்ளவே வேண்டாம் என வாய் திறந்தாள். அதற்குள் “சரிடா மேரேஜ் அன்னைக்கு உன்கூட ஆடுவாங்க” என சுவேதா முழுவதுமாக மாட்டிவிட்டாள் அன்பை.

“ஐயோ அன்னி” என பதறினாள்.

“அதெல்லாம் முடியாது நாங்க பழைய அரிசிய பாக்கனும் அதான் இந்த திட்டம்” என சுவேதா கண்ண்டித்தாள். ‘ஆக இதெல்லாம் திட்டமிட்டு நடந்த சதியா’ என மனதில் நினைத்துகொண்டு வெட்கபட்டாள்.

“சரிடா ஆரம்பி” என்பது சுவேதாவின் உத்தரவு.

அவனோ அன்பின்முன் மண்டியிட்டான். அவள் தலைகுணிந்து அமர்ந்திருந்தாள். “அரிசி” என அழைத்தான். அவள் வெட்கத்தை சிந்தினாள்.”நீச்சல் கத்து தர்ரீங்களா மிஸ்” என கன்னத்தை தடவிகொண்டே கேட்க அதை புரிந்த அவள் சுவேதாவின் கட்டில் இருந்து பறந்த பறவையாக நாணம் எனும் சுத்தியால் தகர்த்துவிட்டு ஓடினாள் அவள் அறைக்கு.

“டேய் என்னடா அது நீச்சல்” என்றாள் சுவேதா அங்கு நடந்தவற்றை பார்த்துவிட்டு. “அது அவளுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் அதான் உனக்கு சுகு இருக்கான்ல அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ” என்று வாய் தவறி சொல்லிவிட்டான்.

“என்னடா சுகுவா அவனுக்கு என்ன” சமாளித்தாள் சுவேதா.

“அம்மா என தங்கச்சி எனக்கு எல்லாம் தெரியும் இதுக்குமேலயும் சமாளிக்க வேணாம். சும்மா சிங்கிள் அப்புடின்னு ரெண்டுபேரும்ஊர ஏமாத்திட்டு சுத்துரீங்களா” என தலையில் கொட்டினான்.

“எப்புடிடா கண்டுபிடிச்ச”

“ஆமா இதுக்கு டிடக்டிவ் வப்பாங்களா! நீங்க ஹாஸ்பிட்டல்ல பன்ன ரொமான்ஸ்தான் ஊரே பாத்துச்சே. இந்த மேடம் சாப்புடலைனு அந்த சார் அழுவாறாம் அப்புறம் ஊட்டிவிடவாராம். அவங்க அழுதுட்டே சாப்புடுவாங்களாம். அப்புறம் யாருக்கமே அடங்காத என தங்கச்சி அந்த சுகு திட்டும்போது அமைதியா இருப்பாங்களாம் இது போதாதா! ஏன் எங்க்கிட்ட சொல்ல என்ன தயக்கம்.”

“என்னடா எல்லாம் தெரிஞ்சும் நீ இப்புடி கேக்குற” என சோகமாக மாறினாள்.

அருகிலிருந்த மஞசு அவளுக்கு வயிற்றில் கூச்சம் ஏற்படுத்திவிட அவளோ நெளிந்தாள்.”ஏய் சும்மா இருடி மஞ்சு ஹா ஹா..” என சிரித்தாள்.

“பின்ன என்னடி எப்ப பாத்தாலும் சோகம்தானா அதான் சுகுவ லவ் பன்றேல்ல அப்புறம் என்னடி நீ சந்தோஷமா இருந்தாதாண்டி நாங்க நிம்மதியா இருப்போம்” என மேலும் கூச்சம் ஏற்படுத்தினாள்.

இவர்களின் அரட்டை சத்தம் வீட்டின் சுவற்றில் முட்ட பார்வதி வெளியே வந்து “சரி அரட்டை அடிச்சது போதும் வந்த சாப்பிடுங்க” என கூறிவிட்டு “யேய் அன்பு வந்து பாத்திரத்த எடுத்துவைடி” என்று சத்தமிட “அம்மா அன்னிய வேலை வாங்காதீங்க நான் எடுத்து வைக்கறேன் வா மஞ்சு” என அவளையும் துனைக்கு அழைத்துகொண்டாள். பின் சந்துருவும் அதில் கலந்துகொள்ள தாமதமாக வந்த அன்பரசிக்கு வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

அன்பும் பார்வதியும் பறிமாற துவங்கினர். ஒருவழியாக திருமன ஜோடிகளை கலாய்த்துகொண்டே சாப்பிட்டு முடித்தனர். பின் சந்துரு கிளம்பி செல்ல ஜன்னல் வழியே பார்த்துகொண்டு நின்றாள். அவன் திரும்பிகூட பார்க்காமல்போனது வருத்தம்தான் அவள் முகத்தில் கவலை குடிகொண்டது.

அவளை பின்னாலிருந்து ஒருகை உசுப்பியது “என்ன அரிசி ஃபீலிங்கா! அவன் இப்போ உனக்கு ஃபோன் பன்னுவான் பாரு” என சுவேதா கூறிய வார்த்தை பொய்க்கவில்லை. அடுத்த நொடியே அழைத்தான். எடுத்துபேச ஆரம்பித்தாள்.

சுவேதாவோ “இதுக்குதான்பா இந்த லவ் பன்றவங்க கூட இருக்ககூடாது” என தலையில் அடித்துகொண்டு தன் ஆறாம் விரலான மொபைலை எடுத்தாள். அடுத்த நொடி அதில் சுகுவின் எண்.

“ம்ம் சொல்லுங்க”

“என்ன அரிசி நான் உனக்கு ஊட்டிவிடலாமுனு பாத்தேன் ஆனா நீ பறிமாறுறேன்னு கெடுத்துட்டியே!”

“ஐயோ அம்மா இருக்காங்க”

“நான் அத்தைகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் அதுக்கு அவங்க அவ சாப்புடுற கிளி சாப்பாட்டுக்கு நீ ஊட்டிவேற விடனுமாக்கும் அப்புடின்னு சொல்லிட்டாங்க ஆமா நீ ஏன் ஒழுங்கா சாப்புட மாட்டேங்குற?”

“இல்லைங்க நான் நல்லாதான் சாப்புடுறேன்”

“அன்னைக்குதான் பாத்தேன்ல என கன்னு முன்னாடிதான டிபன்ல இரண்டு இட்லிய எடுத்துட்டு போன நல்லவேலை உங்க மாமா அதான் என் அப்பாதான் இருந்து உன்னை சாப்பிட வச்சாரு”

அன்புக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“இனிமே நீ ஒழுங்கா சாப்புடாம இரு உன்னை வச்சிகிறேன்” என அவன்கூற “டேய் கட்டிக்க போறவள வச்சிகிறேன்னு சொல்லுற” என அரிசி ஆட்டம்போட்டாலும் அன்பு அதை வெளியே சொல்லாமல் தடுத்தாள்.

“பக்கத்துல யாராவது இருக்காங்கலா” என்றான் ரகசியமாக அவள் சற்று ஏக்கத்துடன் “ம்ஹூம்” என்றாள் மெதுவாக.

“அப்புறம் ஏன்டி லூசு இப்புடி காசுகுடுத்தாதான் பேசுவேன் அப்புடிங்குற மாதிரி பேசற” என திட்டினான்.

அவன் திட்டம் செயல்பட்டது “யாரு நானா அப்புடி பேசறேன் நீதான் ஒருத்தி லவ் பன்றான்னு தெரியாம இருந்துகிட்டு ஏதோ இங்க சாமிகும்பிட வந்த மாதிரியே சுத்துன இதுல பிறந்தநாளுக்கு கேக் வேற வாங்கிகொடுத்துட்ட. அத ஊட்டிவிடனும்மாதும் தோனுச்சா! இந்த லட்சனத்துல இவரு அம்மா முன்னாடி சாப்பாடு ஊட்டிவிடுறாறாம்” என்று பொறிந்து தள்ளவே அலைகற்றையின் அடுத்தபுறம் இருந்த சந்துருவின் சிரிப்பு சத்தம் இவளை அடைந்தது.

“ஏன்டா சிரிக்குற ஓலைபட்டாசு”

“ஒன்னும் இல்லைடி சும்மாதான் எனக்கு முப்பத்திரண்டு பல்லுனு சொன்னாங்க அதான் சரியா இருக்கானு எண்ணிபாக்குறேன்”

“நான் வந்து எண்ணிவிடட்டுமா?” என்றாள் மீண்டும் முழுதாக மாறிவிட்டாள் அரிசியாக அதை சந்துரு ரசித்துகொண்டுருந்தான்.

“இல்லடி நானே எண்ணிட்டேன் சரியாதான் இருக்கு நீ போ போய் அந்த ரூம்குள்ள அடஞ்சிக்கோ” என்றான்.

“ஆமா வேற எங்க போறதாம்”

“ஏண்டி ஒருத்தன் உன்னையே நினைச்சு வாழ்ந்துட்டு வந்தானே. சரி அத்த பொண்ணு இருக்கானு இங்க ஃபேக்டரியே கட்ட முடியாத இடத்துல நான் கட்டியே தீருவேன்னு வந்தானே அவன்கூட நாலு வார்த்தை பேசவேணாம். ஒரு சின்ன சிரிப்ப அதுகூட இல்ல சரி அத விடு ஏதோ திருடன் வந்த மாதிரி ஏண்டி என்ன அப்புடி பாத்த”

“இத்தன நாள் ஒருஃபோன் கூட பன்னாம இருந்துட்டு இப்போ வந்து கேக் வாங்கிகுடுத்து ஃபேகடரி கட்டுனா மயங்கிடுவாங்கலாக்கும்.” என்றாள் அவள் தன்னவனின் அரவனைப்பில் தன்னை மறந்து பேசிகொண்டிருந்தாள்..

“அப்போ நான் உன்ன பாக்க வராம இருந்திருந்தா என்னடி பன்னிருப்ப?” என அவன் கேட்டதும் அவளால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. சந்துரு அந்த அளவுக்கு அவளை மாற்றியிருந்தான்.

“அப்புடியெல்லாம் பேசாதீங்க” என மீண்டும் ங்க சேர்த்தாள் அன்பரசி.

“சரிங்க அன்பு மேடம் அரிசி வந்ததும் சொல்லுங்க நான் கிளம்புறேன்” என வைத்தான். அதற்கு முன் ஒரு முத்தம் வந்துசேர்ந்தது அவளிடமிருந்து அதை அவன் எதிர்பார்க்கவில்லை.

பதிலுக்கு ஒருமுத்தம் கொடுக்க நினைத்து பார்த்து திரும்ப அருகில் ஒரு பாட்டி நின்றுகொண்டு  குறுகுறன்னு பாத்துகிட்டு இருக்க “என்ன பாட்டி” எனறான்.

“இல்ல ஒன்னுமில்லைபா” என நடந்தார்.போகும்போது திரும்ப திரும்ப வேறு பார்த்துகொண்டார். ‘என்னடா அச்சு இந்த ஊருக்கு’ என்று நடக்கும்போதுதான் தெரிந்தது அந்த பாட்டி இவன் தனியாக பேசியதை பார்த்து பச்சை சட்டைகாரன் என நினைத்திருக்குமென்று.

தலையில் மெதுவாக தட்டிகொண்டு அப்படியே தலையை கோதிகொண்டு அழகாக நடந்தான். அங்கிருந்த சில மங்கைகளின் கண்கள் அவனை ரசிக்காமல் இல்லை. நல்லவேலை அரிசிக்கு தெரியாது.(நீங்களும் சொல்லிடாதீங்க)

தாத்தா வீட்டினை அடைய அங்கு சுகு உறங்கிகொண்டிருந்தான். இல்லை நடித்துகொண்டிருந்தான். அருகில் இருந்த கைபேசியில் முப்பது மிஸ்ட்டுகால். ஆனால் அந்த கைபேசியின் ஒலி பறிக்கபட்டிருந்தது.அதனால் அவனுக்கு தெரியவில்லை.

அந்த மொபைலை எடுக்க அதில் முப்பதும் சுவேதாதான். பார்த்துகொண்டிருக்கும்போதே மீண்டும் ஒலித்தது. “டேய் சுகு சுவேதா கால் பன்றாடா” என்று அவளை எழுப்பினான்.

“அவகிட்டக்காடா லூசு நீ போய் வேற வேலைய பாருடா” என கண்களை திறக்காமல் புரண்டு படுத்தான்.

சந்துருவுக்கு மனம் பொறுக்கவில்லை. “ஹலோ” என்றான்.

“ஏன்டா ஃபோன் கட் பன்ற எதாவதுகோபம்னா வந்த அடிச்சிறுடா அத விட்டுட்டு இப்புடி பேசாம இருந்தா நான் அபி அம்மாகிட்ட போயிடுவேன்! இப்ப என்ன நீசொல்றத நான் கேக்கனுமா! சரிடா நீ சொன்ன மாதிரியே செய்றேன் ஆனா சாவுகூட சந்துரு அண்ணா கல்யானத்துக்கு அப்புறம்தான் செய்வேன்” என்றுபேசும்போதே அழுதாள்.

“சுவேதா நான் சந்துரு! ஆமா என்ன பிரட்சனை உங்களுக்கு”

“இல்லனா ஒன்னும் இல்லை சும்மா சாதாரன சண்டைதான்” என கட் செய்தாள். எதுவாக இருந்தாலும் பட்டென கூறும் சுவேதா ஏதோமறைக்கிறாள்.என்பதுமட்டும் சந்துருவால் ஏற்கமுடியவில்லை.அவளாக கூறுவாள் என போய் அமர்ந்தான்.

 

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் வரம் யாசித்தேன் – final partகாதல் வரம் யாசித்தேன் – final part

ஹாய் பிரெண்ட்ஸ், ‘காதல் வரம் யாசித்தேன்’  கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் கருத்துக்களைப் பதித்து என்னை ஊக்குவித்த  தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ராணி இதழில் தொடர்கதையாக வெளி வந்த காதல் வரத்தை சில தோழிகள் கேட்டுக் கொண்டதற்காக ப்ளாகில் அப்படியே பதிவுகளாகத்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41

41 – மனதை மாற்றிவிட்டாய் அர்ஜுன் வர இருந்த நாட்களில் வேலை முடியாததால் இன்னும் அங்கேயே தங்கவேண்டியதாக போய்விட்டது. அர்ஜுனிடம் பேசிய எவரும் அவனிடம் இதை கூறவில்லை. அவன் நேரில் வந்த பின்பு கூறிக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர். அம்முவிற்கும் அதுவே சரியென