Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 36

பாகம் – 36

இரவு தொட்டிலின் தாலாட்டினால் விடிந்த பின்னும் விரசமில்லாத நித்திரை கொண்டிருந்த புன்னகை இளவரசியின் துயிலெழும் நாளிகைக்காக காத்திருந்தன தலைமேல் பனியினை சூடிய பால்கனி மலர்கள். அடுத்த அறையில் ஆரவ் தன் தூக்கம் தின்று போனவளை சமாதான படுத்த முயன்று உறக்கத்திலும் உளறி கொண்டிருந்தான்.

 

“சாரிடா செல்லம்… நான் இனிமே உன்ன திட்டவே மாட்டேன். ஒரே ஒரு தடவ…” ன்னு உதட்டை குவிக்க, அங்கே டிரஸ்ஸிங் டேபிளின் முன்னால் தலை வாரி கொண்டிருந்த வஜ்ரா, ‘ஐயோ பாவம்… யாரு பெத்த புள்ளயோ? பைத்தியம் முத்திப்போய் தூக்கத்திலயே உளருது’ என்று தன் நண்பனுக்காக அனுதாப பட்டான். அவன் ஆரவ்வின் நிலமையை நினைத்து சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வர, அம்மா அப்பாவின் அறைக்குள் ஒரு ப்ரளயமே நிகழ்ந்திருந்தது. அவன் உள்ளே நுழைந்ததும், “என்னம்மா என்ன ஆச்சு. ஏன் காலங்காத்தால இவ்ளோ கோவமா கத்திட்டு இருக்கீங்க?”

 

அம்மா கோபமாக வந்து, “வஜ்ரா நீயே கேளுடா… அப்பா அவரு பிரண்டுகிட்ட நம்ம சோனுக்கு வேலை கேக்க மாட்டேன்னு சொல்றாரு. சோனுவே நம்ம கூட இங்க இருக்க ஆசை படுறாள்ல. நாம ஒண்ணும் அவள கட்டாய படுத்தலயே, அவளா தானடா வேலை வேணும்னு கேட்டா. வெண்ண திரண்டு வரும்போது நாம வேண்டாம்னு சொல்லலாமாடா? நாம எல்லாம் புதுசுனால இப்ப நம்மளோட பழக தயங்குறா, கொஞ்ச நாள் ஆனா நல்லா ஒட்டிக்குவா. நம்ம சோனு நமக்கு வேணும்னா நான் சொல்றத நீங்க ரெண்டு பேரும் கேளுங்களேன். முதல்ல அவ ஆசைபட்ட படி ஸ்கூல்ல ஒரு வேலைல சேக்கனும்டா. அதுக்கப்புறம் நம்ம வீட்டுக்குள்ள சேர்த்து நம்ம பொண்ணா ஆக்கிக்கிட்டு, நம்ம கூடவே இருக்க வச்சுக்கனும்னு சொன்னா உங்க அப்பா கேக்க மாட்டிக்கிறாரு.”

 

அப்பா நிதானமாக, “ஆரவ் நமக்காக பரிதாபப்பட்டு அந்த பொண்ண இங்க ரெண்டுநாள் இருக்க விட்ருக்கான். அவனுக்கு சொந்தமான பொருள அவன்கிட்ட பத்திரமா திருப்பி குடுக்குறது தான் நமக்கு மரியாதை. வயசுக்கு தகுந்த மாதிரி நாம மரியாதையா நடந்துக்கனும்னு நான் நினைக்கிறேன் நீ மாட்டேன்னு அடம்புடிக்கிற.”

 

அம்மா கெஞ்சலாய், ” டேய் வஜ்ரா, நீயே உங்க அப்பாக்கு புரிய வைடா. அவள நாம நல்லா பாத்துக்குவோம்னு, ஆரவ்கிட்ட ஒருவாட்டி பேசி பாக்கலாம்டா…”

 

அப்பா கோபமாக, “நான் அடிச்சு சொல்றேன், உங்களால நிச்சயமா ஆரவ்கிட்ட பேசி இதுக்கு சம்மதிக்க வைக்க முடியாது. அவன் அவள காதலிக்கிறான்டி யாருக்கும் விட்டு குடுக்கமாட்டான், புரிஞ்சுக்கோ”

 

அம்மா “பொய் சொல்லாதீங்க…”

 

அப்பா, “நான் எதுக்காக பொய் சொல்லனும்? கொஞ்சம் யோசிச்சு பாரு நேத்து ஆரவ் வரும்போது முழுசா நனைஞ்சு சொட்ட சொட்ட வந்திருந்தான். ஆனா அவன் வர்றதுக்கு அரைமணி நேரம் முன்னாடியே மழை நின்னிடுச்சு, பைக்ல வர்றவன் உடம்பு கொஞ்சமாவது உலர்ந்து இருக்கனும்ல. அப்டினா என்ன அர்த்தம்? அவன் மழை நிக்கிறதுக்கு முன்னாடியே வந்து இங்க எங்கயோ நின்னுட்டு இருந்திருக்கான். ஆரவ் சோனுவ பார்க்குற பார்வையில அளவுக்கதிகமான காதல் இருக்குறது எனக்கு புரியுது. சோனு வேலைக்கு போறேன்னு சொன்னதும் அவன் முகத்த நீ பாத்திருக்கனுமே… நீ அதையெல்லாம் எங்க கவனிச்சு இருக்க போற? நீ கேக்க நினைச்சத அவ கேட்டதில தலைகால் புரியாம மிதந்துகிட்டு இருந்த. அத விடு நீ இப்ப என்ன சொன்ன? நீங்க ஆரவ் மாதிரி பத்திரமா பாத்துக்குவீங்களாக்கும்? அன்னிக்கி மாடில இருந்து அவ விழும்போது உன் அருமை புள்ளயா கூட விழுந்தான்? ஆனா ஆரவ் விழுந்திருக்கான்னா அவனுக்கு சோனு எவ்ளோ முக்கியம்? தேவை இல்லாம ஆரவ்வ பகைச்சுகிட்டா இனிமே சொனுவ நம்ம கண்ணுலயே காட்ட மாட்டான் சொல்லிட்டேன்.”

 

வஜ்ரா தன் அம்மாவை பெட்டில் உட்கார வைத்து, “அப்பா சொல்றதுதான்மா கரெக்ட். ஆரவ்க்கு மட்டுமில்ல சோனுக்கும் அவன புடிச்சிருக்குமா, நான் பார்த்தேன். நேத்து நைட் திடீர்னு சோனு கத்தின சத்தம் கேட்டு நான் பால்கனிக்கு போனேன். அங்க அவங்க ரெண்டு பெரும் எப்டி கட்டி புடிச்சிகிட்டு நின்னுட்டு இருந்தாங்க தெரியுமா… அவன்கூட சோனு சண்டை போட்டு இருக்காபோல, அவன் இன்னும் தூக்கத்தில அவகிட்ட கெஞ்சிட்டு இருக்கான். அவன் அவளுக்காக ஒரு ஐலேண்ட் வாங்க போறேன்னு போன்ல சொல்லிட்டு இருந்தான்மா. அவளுக்காக என்ன வேணாலும் செய்ற அளவுக்கு அவமேல உயிரையே வச்சிருக்கான்மா”

 

அப்பா கெஞ்சலாய், “ஆரவ் ரொம்ப நல்ல பையன்டி, அவனுக்கு நம்ம சோனுவ குடுத்தா நிச்சயமா நல்லா பாத்துக்குவான். நம்ம சோனுவா இருந்தா இப்டி கல்யாணம் பண்ணாம வீட்டுக்குள்ளயே வச்சிருப்பியா? உன்னோட சந்தோஷத்துக்காக ஒண்ணும் தெரியாத சின்ன பொண்ணோட சந்தோஷத்த பறிக்கிறியே இது நியாயமா?”

 

அம்மா வெறுப்பாக, “என்னமோ போங்க, கைல கிடைச்ச பொண்ண மறுபடியும் தவற விடுறோம்னு தோணுது.”

 

வஜ்ரா, “இல்லம்மா அவன்கிட்ட ஒப்படைக்கிறோம்.”

 

“இன்னிக்கி என் கூட கோவிலுக்காவது நான் கூட்டிட்டு போலாமா, இல்ல அதுவும் கூடாதா?”

 

அப்பா “போலாம் போலாம்….” என்று சொல்லி கொண்டே வெளியே போக, அம்மாவும் இப்போதைக்கு இந்த பேச்சை நிறுத்திட்டு வீட்டு வேலையை பார்க்க எழுந்தார். இது நேரம் வரை அவர் முகத்தில் இருந்த அத்தனை சந்தோஷமும் நொடியில் வடிந்து போனதை கண்டு வஜ்ராவிற்கு வருத்தமாக இருந்தது, ஆனால் இரண்டு நாள் பிரிவையே தாங்காமல் அவளைத் தேடி வந்து நிற்பவனிடம், என்னவென்று சொல்லி அனுமதி கேட்க முடியும்?

 

ஆரவ் தூங்கி எழுந்ததுமே பார்பியை தேடி அவள் அறைக்கு போய் பார்த்தான், அவள் இன்னும் எழுந்திரிக்கவில்லை. ‘எப்போபாரு அடிச்சு போட்ட மாதிரி இப்டி தூங்குறடி. தூங்கு தூங்கு இப்பவே நல்லா தூங்கிக்க, இன்னும் கொஞ்ச நாள்ல நான் உன் தூக்கத்த கெடுக்குறேனா இல்லையானு பாரு…’ என்று பூட்டி இருந்த கதவுக்கு சவால் விட்டுட்டு, தனது அறைக்கு வந்து தயாராக தொடங்கினான். ஆரவ்வும் வஜ்ராவும் கார்டனில் டீ குடித்துக்கொண்டே பொதுவான விஷயங்கள் குறித்து பேசியிருக்கையில், மகாராணி ஆடி அசைந்து எழுந்து வந்தாள். பிங்க நிற சுடிதார், குளிரால் சிவந்திருக்கும் அவள் முகத்தோடு போட்டி போட, பறக்கும் துப்பட்டாக்கள் சிறகுகளாய் மாய தோற்றம் தர துள்ளி துள்ளி ஓடி வந்தாள் அந்த குறும்புக்கார தேவதை.

 

கார்டனில் இருந்த இருவரது கண்களும் அவள் மேலேயே இருக்க, அவர்கள் பார்வையின் கோணம் மாத்திரம் அவள் மேல் வேறு மாதிரி பதிந்தது. ஆரவ்வும் வஜ்ராவும் எதிரெதிராய் உட்கார்ந்திருந்த அந்த நீளவாக்கான பெஞ்ச்சில், வேண்டுமென்றே வஜ்ராவை இடித்துக்கொண்டு அமர்ந்தவள் சலுகையாய் அவன் கைகளை பற்றி கொண்டு, “குட் மார்னிங் அண்ணா… என்றாள் கண்கள் சிமிட்டி. அவள் சொன்னதை கேட்டு ஆரவ், ‘என்னை வெறுப்பேத்துறாளாம்மா…’ என தனது சிரிப்பை மறைக்க டீ கப்புக்குள் ஒளிந்து கொண்டான்.

 

எல்லாத்தையும் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்த வஜ்ரா, “நான் போய் உனக்கு டீ எடுத்துட்டு வரவா சோனு?” என்றான் பாசமலராய்.

 

“வேணாம்ண்ணா எனக்கு காபி வேணும். நானே போய் அம்மாட்ட கேட்டு வாங்கிக்குறேன்.”

 

அவள் உள்ளே போன மூன்று நிமிஷத்திற்குள் ஆரவ், “நான் போய் கப்ப கிச்சன்ல வச்சிட்டு வர்றேன்டா” என எழ, ‘போ போ நீ எதுக்கு போறன்னு எனக்கு தெரியாதா…’ என்று நினைத்த வஜ்ரா அங்கேயே இருந்துவிட்டான். கிச்சன் வாசல் வரை வந்த ஆரவ் அம்மாவும் பார்பியும் பேசுவதை கேட்டு உள்ளே போகாமல் அங்கேயே நின்றான்.

 

அம்மா, “சோனு, நான் இன்னிக்கி உன்ன கோவிலுக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன். உனக்கு இன்னிக்கி ஒண்ணும் நாள் பிரச்சனை இல்லையே.”

 

“இல்லம்மா அதெல்லாம் ஒண்ணுமில்ல”

 

ஆரவ்விற்கு இப்போதுதான் அதை பற்றிய ஞாபகமே வர, தனியாக வந்து ஷர்மா அங்கிளுக்கு போன் போட்டான்.

 

“ஹாய் அங்கிள் எப்டி இருக்கீங்க?”

 

“நல்லா இருக்கேன்டா, நானும் மிருதுளாவும் இப்ப காசிக்கு வந்திருக்கோம். நீ எப்டி இருக்க? பார்பி எப்படி இருக்கா? அதிசயமா போன் பண்ணிருக்க, எதும் முக்கியமான விஷயமா?

 

“அது வந்து, பார்பிக்கு இன்னும் பீரியட்ஸ் வரவே இல்லையே. எதாவது பிரச்சனை இருக்குமா?”

 

“அவளுக்கு ஹெவி ப்லட் லாஸ் ஆனதால லேட் ஆகி இருக்கலாம். எதுக்கும் நான் வந்ததும் ஒரு தடவ செக் பண்ணிடுவோம்.”

 

“எப்ப வருவீங்க? எனக்கு பத்துநாள் கழிச்சு ஆஸ்ட்ரேலியா போகனும்.”

 

“நான் வர பனிரெண்டு நாள் ஆகுமே. ஒண்ணு பண்ணு நீ வெளியில செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட்ட அனுப்பு.”

 

“ம்”

 

மிருதுளா, “ஏங்க என்னவோ போல ஆயிட்டீங்க, எதாச்சும் பிரச்சினையா?”

 

ஷர்மா, “பிரச்சினை இருக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன், பாக்கலாம்.”

 

பார்பி கோவிலுக்கு போகும் வழியெல்லாம் ஆரவ்வை வெறுப்பேற்ற வஜ்ராவுடன் தொண தொணவென்று பேசி வந்தாள். ஆரவ்விற்கு அவள் பேச்சிலேயே வம்பிழுப்பது புரிய எதுவும் பேசாமல் அமைதியாக, ‘நீ என்கிட்ட மாட்டாமலேயா போயிடுவ’ங்கிற லுக்கிலேயே இருந்தான். கோவில், பூஜை, செல்பீ, ஸ்னாக்ஸ் என பார்பி கலகலப்பாய் சுற்றியதால், அவளோடு சேர்ந்து அனைவருமே சந்தோஷமா இருக்க, ‘நேத்து எப்டி இருந்தவ, அவன் வந்த பிறகு இப்டி மாறிட்டாளே’னு வஜ்ராவின் அம்மாவிற்கும் அவள் மனம் புரிய ஆரம்பித்தது. கோவிலில் இருந்து திரும்பி வரும் நேரம் மழை விடாமல் அடிக்க, வண்டி திடீரென மக்கர் பண்ணியது.

 

அப்பா, “மெக்கானிக்கதான் வர சொல்லனும் போல, போன்ல சிக்னலும் இல்ல. வண்டில ரெண்டு குடை மட்டும்தான் இருக்கு, இப்ப என்ன பண்றது?” என யோசனையோடு இருக்கும்போது, அந்த பக்கமாக காரில் அப்பாவின் பிரண்டும் அவருடைய மனைவியும் வர, அம்மாவையும் அப்பாவையும் அந்த காரிலேயே ஏறி போக சொல்லி விட்டார்கள். வீடு பக்கம் என்பதால் இளையவர்கள் மூவரும் குடையுடன் நடந்து போக முடிவெடுத்தனர். ஒரு குடை முழுக்க வஜ்ராவே நிறைந்து விட்டதால் மற்றொரு குடையை கையில் வைத்துக் கொண்டு பார்பி விழிபிதுங்க நின்றிருந்தாள்.

 

வஜ்ரா, “நான் முன்னாடி போறேன். நீங்க ரெண்டு பேரும் மழைல நனையாம வந்திடுவீங்களா? டேய் பயமுறுத்தாம பாத்து கூட்டிட்டு வாடா…” என டபுள் மீனிங்கில் சொல்லிவிட்டு போக, “அண்ணா… அண்ணா…” என அவள் கத்தியதெல்லாம் வீண்தான்.

 

‘என்னை என்ன பாடு படுத்தின? இப்ப மாட்டினயா… மூஞ்சிய மூஞ்சூரு மாதிரி வச்சிருந்தா பாவம்னு விட்ருவேனா?’ ஆரவ்விற்கு அவள் முகத்தை பார்க்க பார்க்க சிரிப்பை அடக்க முடியவில்லை. குடைக்குள் வந்தவன் வேண்டுமென்றே அவளை இடித்துக் கொண்டு நிற்க, “தள்ளி நில்லுங்க ஆரவ், என் மேல மழை விழுது” என்று அவனை தள்ளி விட்டாள்.

 

“சரிதான்… இந்த இத்துனூண்டு குடைக்குள்ள நான் இடம்வேற விட்டு நிக்கனுமா? வேணும்னா நீயே குடைய வச்சுக்கோ, நான் நனைஞ்சுட்டு வர்றேன்…?”

 

“வேணாம்… வேணாம்… உள்ளயே இருங்க.”

 

“ஏன்டா என்கிட்ட இவ்ளோ கோவமா இருக்க? நான் தெரியாம திட்டிட்டேன், என்னை நீ பதிலுக்கு திட்டிருக்கலாம்ல. எனக்கு இங்க செட்டே ஆகலடா. இன்னிக்கி நைட் ப்ளைட்க்கு டிக்கெட் புக் பண்ணவா? நாம நம்ம வீட்டுக்கு போவோமா?”

 

“வேணாம்… நான் உங்க கூட வரல, இங்கயே வேலைக்கு போக போறேன்.”

 

“இப்டி பேசாதடா கஷ்டமா இருக்கு. இப்பவும் உன் கோபம் குறையலன்னா என்ன ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ. வேணும்னா மும்பைல நான் உனக்கு ஒரு ஸ்கூலே வாங்கி தர்றேன்டா”

 

“வேணாம்….”

 

அவளை இழுத்து பிடித்து முன்னால் நிறுத்தி, “பார்பி நான் சொல்லிட்டே இருக்கேன் ஏன் கேக்க மாட்டேன்னு அடம்புடிக்கிற?”

 

தலைகுனிந்து, “ஏன்னா அடுத்த தடவ யாராவது என்னை திட்டும்போது, ஏன் திட்டுறீங்கனாவது என்னால கேக்க முடியணும்ல.”

 

“உன்ன திட்ட எனக்கு உரிமை இல்லையா?”

 

“திட்டுறதுல உரிமை பாக்குற நீங்க இதுவரைக்கும் ஒரு ஸாரி சொல்லலியே.” அவன் ஏதோ சொல்லவர வேண்டாமென கையால் காட்டிவிட்டு, “ஐபிஎல் ஆரம்பிச்சதுல இருந்து நீங்க ரொம்ப பிஸியா இருக்குறீங்க ஆரவ். எந்த அளவுக்குன்னா நான் பேசுரத கேக்குரதுக்கு அஞ்சு நிமிஷம் ஒதுக்க முடியாத அளவுக்கு. எப்பவுமே நீங்க சொல்ல வர்றத மட்டும் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கீங்க.”

 

‘அவ சொல்றது சரிதான். எப்பவும் மத்தவங்களுக்கு ஆர்டர் போட்டு போட்டு மனசு அப்டியே செட் ஆகிடுச்சு போல. என் காதலினா மத்தவங்களுக்கு இல்லாத உரிமை இருக்குற அளவு ஸ்பெஷல்னு ஏன் என் அறிவுக்கு இத்தன நாள் எட்டல. நீ சொன்னா கேட்பேன்னு மனசுக்குள்ளயே நினைச்சேனே தவிர, நான் உன்ன எதுவும் சொல்லவே விடலைனு இப்பதான் புரியுது.’

 

திடீரென்று காற்று பலமாக வீச தொடங்க பார்பி குடையினை பிடிக்க முடியாமல் திணறினாள். “ஆரவ் பிடிங்க, இத பிடிங்க” என அவள் கத்தியதை கேட்டு சுதாரித்து அவன் குடையை பிடிப்பதற்குள்  மழைச்சாரல் இருவரையும் முக்கால்வாசி குளிக்க வைத்து விட்டது. மெல்லிசான அவளது சுடிதார் மழைநீர் பட்டதில் உள்ளாடைகள் வரை வெளிச்சம் போட்டு காட்ட, அதை முதலில் கவனித்தது ஆரவ்தான். குடைமேல் கவனத்தை வைத்திருந்தவள் ஆரவ் முகத்தை பார்க்க, அவன் பார்வை இடம் மாறியதை உணர்ந்ததும் குனிந்து தன் உடலை பார்த்தாள். அதிர்ச்சியில் குடையை விட்டுவிட்டு தன்னுடலை கைகளால் மூடி மறைக்க முயற்சித்தவளை, இப்போது மழை இன்னும் நன்றாக நனைத்து விட்டு சென்றது.

 

கொட்டும் மழையில்

குடையில்லாமல்

நனைகிறாய் நீ….!

 

ஈர உடை மறைக்கவியலா

உன் தேகமெல்லாம்

கண்டுகளிக்கிறேன் நான்…!

 

உன்னில் நனைந்திட்ட துளிகள்

மலையுச்சி தாண்டியதனால்

நதியாகிப்பாயும் இடையோரத்தில்…!

 

பன்னீர் குடமுடைந்தவனாய்

குடையிருந்தும் நனைகின்றேன்

நான் மோகத்தில்…!

 

“ஏதாச்சும் பண்ணுங்க ஆரவ்…” என்றாள் குனிந்த தலை நிமிறாமல்.

 

‘சரியாத்தான் என் காதுல விழுந்ததா. என்ன செய்யலாம்?’ கை பரபரவென ஊற கட்டியணைக்க கை தூக்கியவனை, “யாராச்சும் வந்திட போறாங்க ஆரவ் சீக்கிரம்…” என்று அவள் சொன்னதும் தாங்கள் இருவரும் நடு ரோட்டில் நிற்பதே அவனுக்கு ஞாபகம் வந்தது.

 

வேக வேகமாக அவளது துப்பட்டாவினை உருவி உடலை சுற்றி மூடி விட்டு தொலைந்து போன குடையை தேடாமல் இருவரும் விரைவாக வீட்டை நோக்கி நடந்தார்கள். பார்பி ஆரவ்வை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வர, அவள் என்னவோ கேட்க நினைக்கிறாளென புரிந்த ஆரவ், “என்கிட்ட எதாவது கேக்கனுமாடா?” என அவனே முன்வந்து கேட்டான்.

 

“அது வந்து… நாம… இல்ல… ஒண்ணுமில்ல…” ஒரு பெண்ணால் எப்படி கேக்கமுடியும், ‘என்னை இந்த கோலத்தில இதுக்கு முன்னாடியும் பாத்திருக்கியா?’ என்று. ஏதேதோ யோசித்து அவள் முகம் இன்னும் செக்கச்சிவந்து போனதை கண்ட ஆரவ் அதற்குமேல் எதுவும் கேக்காமல் விட்டுவிட்டான். வீட்டிற்கு வந்ததும் வஜ்ரா ஆரவ்வை பார்த்த பார்வையே சரி இல்லை. ஆடைகளை மாற்றிவிட்டு வந்த பார்பி தும்மல் மேல தும்மல் போட, அவள் உடல் லேசாக சுட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்திலயே அவளுக்கு நூறு டிகிரிக்கும் மேல் காய்ச்சல் வந்து விட்டதால் டாக்டர் வந்து இன்ஜெக்ஸன் போட்டுவிட்டு, “ஹெல்த் கொஞ்சம் வீக்கா இருக்காங்க போல. அதான் லேசா நனைஞ்சதுக்கே காய்ச்சல் வந்திருக்கு. ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தா நார்மல் ஆகிடுவாங்க. புட் மட்டும் கொஞ்சம் பார்த்து குடுங்க” என்றார்.

 

வஜ்ரா, “நீ போய் ஐபிஎல் பைனல் ஆடு ஆரவ். ஆஸ்ட்ரேலியா சீரிஸ்க்கு நெக்ஸ்ட் வீக் நான் வரும் போது அவள என்கூடவே மும்பைக்கு கூட்டிட்டு வர்றேன்” என்றான்.

 

“இந்த நிலைமையில ட்ராவல் பண்ணி போனா வீட்லயும் பாத்துக்க யாரும் இல்ல, ஹோட்டல்ல தங்கவும் முடியாது. இங்க இருக்குறதுதான் அவளுக்கு நல்லது” என்பதால் ஆரவ் மனதே இல்லாமல் சரி என்றான்.

 

பார்பியை அவளுடைய அறைவரைக்கும் தூக்கி சென்று படுக்கையில் படுக்க வைத்தவன், நொடிப்பொழுது கூட அவளைவிட்டு விலகாமல் அவள் அருகிலேயே கழித்தான். அடிக்கடி வஜ்ராவின் அம்மா வந்து கஞ்சியை புகட்டிக் கொண்டே இருக்க, அதன் பின் காய்ச்சல் விட்டுவிட்டு வந்தது. மாலை காய்ச்சல் நன்றாக குறைந்து விட்டிருக்க அதன்பிறகே ஆரவ் தனது பயணத்திற்கு தயாராக தொடங்கினான்.

 

வஜ்ரா, “எத பத்தியும் யோசிக்காதடா, நாளைக்கு நல்லா மேச் ஆடு. டெய்லி அவள பேச சொல்றேன், ஒன் வீக்ல கூட்டிட்டு வந்திடுவேன்.”

 

“கண்டிப்பா கூட்டிட்டு வந்திடுவேல?” பாவமாய் கேட்டவனை பார்த்து, “ஏன், நான் வரலன்னா நீ விட்ருவியா என்ன?”

 

ஆரவ் சிரித்து கொண்டே, “சரி நான் போய் அவள பார்த்துட்டு வர்ரேன்.”

 

லேசான மஞ்சள் வெளிச்சம் அந்த அறை முழுக்க பரவி இருக்க, தூங்கி கொண்டிருந்த அவள் காலடியில் அமர்ந்து, ” ஸாரிடா, இனிமே லைப்லாங் உன்ன தப்பி தவறி கூட திட்ட மாட்டேன். எனக்குன்னு இருக்குற ஒரே ஒரு உறவு நீதானடா… நீயே என்னவிட்டு போறேன்னு சொன்னா எப்டிடா? நீ வருவன்ற நம்பிக்கைல இங்க இருந்து நான் கிளம்புறேன், கண்டிப்பா என்கிட்ட வந்திடனும். பாய் செல்லம்” என அவள் தூங்குவதாய் நினைத்து அவன் உளறிவிட்டு போக, தூங்காமல் அனைத்தையும் அமைதியாக கேட்டு விட்டிருந்தாள் பார்பி…

1 Comment »

Leave a Reply

%d bloggers like this: