Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 34

பாகம் – 34

 

உன் பேரை சொன்னாலே

உள்நாக்கில் தித்திக்குமே

போகாதே போகாதே

உன்னோடு சென்றாலே

வழியெல்லாம் பூப்பூக்குமே

வாராயோ வாராயோ

மெய்யெழுத்தும் மறந்தேன்

உயிர் எழுத்தும் மறந்தேன்

ஊமையாய் நானும் மாறினேன்

கையைசுடும் என்றாலும்

தீயை தொடும் பிள்ளைபோல்

உன்னையே மீண்டும் நினைக்கிறேன்

 

பார்பி ஆரவ் முகத்த கூட பாக்காமல் நடக்க, அவளுடைய ஒதுக்கத்தினால் ஆரவ் சுத்தமாக உடைந்து போனான். ‘உனக்கு என்மேல கொஞ்சமாவது பாசம் இருந்திருந்தா இப்டி விட்டுட்டு போக நினைச்சிருப்பியா? நீதானடி என்னோட சந்தோஷம்… இந்த உலகத்தில நீ எந்த மூலைக்கு போனாலும் எப்பவுமே என்னோட பார்பிதான். நீ போறேன்னு சொன்னா உடனே நான் விட்ருவேன்னு நினச்சியா?’ என திரும்பி பார்க்க அங்கே அவள் இல்லை. போய் விட்டாளென்று இப்போதுதான் அவனது புத்திக்கு உரைத்தது. ஆரவ் வேகமாக அவர்களை தேடி கீழே லாபிக்கு ஓடிவர, அவன் வருவதற்கு முன்பே கார் நகர தொடங்கி விட்டது.

 

கார் ஹோட்டலுக்கு வெளியே வரும்போது சைடு மிர்ரரின் மூலம் ஆரவ் ஹோட்டலின் உள்ளிருந்து ஓடி வருவதை கண்ட வஜ்ரா, அவசர அவசரமா காரின் வேகத்தை கூட்டி எவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து வேகமாக, தூரமாக வர முடியுமோ அவ்வளவு தூரம் வந்துவிட்டு அதன்பின் வேகத்தை குறைத்தான். அதோடு விடாமல் ஆரவ் தொடர்ந்து தன் போனுக்கு கால் செய்வதை பார்த்ததும், மெதுவாக யாருக்கும் தெரியாம அதை சைலன்ட்மோடில் போட்டு விட்டு, பார்பிக்கு தன் ஊரை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

 

ஆரவ் ஹோட்டல் வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றுவிட்டு, ‘என்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு போகனும்னு கூட உனக்கு தோணலைல. என் முகத்த கூட பாக்க இஷ்டம் இல்லாம போறியா பார்பி?’ என மனமுடைந்து தனது ரூம்மிற்கு திரும்பி போக நினைக்கும் போது, அங்கே  யஷ்மித் ஒரு காரில் வந்து இறங்கினான். அவன் ஆரவ்விடம், “ஹாய் ஆரவ், குட் மார்னிங். வெளியில நின்னு என்ன பண்ணிட்டு இருக்க? பார்பி எங்க?” என்றான் சாதாரணமாக.

 

ஏற்கனவே அவன் மேல் செம கடுப்புல இருந்த ஆரவ்வோ, “உனக்கு தான் இங்க மேச் இல்லைல, நீ எதுக்கு இங்க வந்திருக்க?” என்றான்.

 

தன்னுடைய போனை நோண்டி கொண்டே பேசியதால் அவனை கவனிக்காத யஷ்மித், “எனக்கு இங்க ஒரு ஆட்(Ad) ஷீட் இருக்கு. சரி நான் குடுத்த போன் உனக்கு பிடிச்சிருந்ததா ஆரவ்?”

 

“நீ அவளுக்குதான குடுத்த. என்கிட்ட எதுக்கு பிடிச்சிருக்கானு கேக்குற?” என்று சொல்லிவிட்டு வேகமா அங்கிருந்து நகர நினைக்கையில்,

 

“நானும் இதையேதான் அவகிட்ட நேத்து கேட்டேன். நீ சரின்னு சொன்னாதான் அத வாங்கிக்குவாளாம், உனக்கு பிடிக்கலனா திருப்பி குடுத்திடுவேன்னு சொன்னா. அதான் உன்கிட்ட கேக்குறேன்…”

 

முதுகில சுளீர்ரென்று ஒரு அடி விழுந்ததை போல் வலிக்க அப்படியே நின்ற ஆரவ் யஷ்மித்திடம், “நான் உன்கூட அப்புறமா பேசுறேன் பாய்டா” என்றுவிட்டு விருவிருவென தன் அறைக்கு வந்துவிட்டான்.

 

‘என்கிட்ட கேக்கனும்னு சொன்னாளா. நான் தான் அவள தப்பா நினைச்சுட்டேனா? அதுக்குதான் நேத்து அத நல்லா இருக்கான்னு எனக்கு காட்ட வந்தாளா’ என யோசனையோடு டேபிள் மேல் கிடந்த அந்த போனை எடுத்து பார்த்தான். அதன் வால் பேப்பரில் ஆரவ் பேட்டிங் செய்யும் ஒரு போட்டோ இருந்தது. அது நேற்று காலை ப்ராக்டீஸ்ஸின் போது எடுக்கபட்டிருந்த போட்டோ என பார்த்ததும் புரிந்தது. போன் கேலரியில் போய் பார்த்தால், அதில் இருந்தது எல்லாமே ஆரவ்வின் புகைப்படங்கள் மட்டுமே, எந்த செல்பியும் அவள் யஷ்மித்துடன் எடுத்திருக்கவில்லை.

 

ஆரவ் மறுபடியும் வஜ்ராக்கு போன் செய்து பார்க்க, அவனும் போனை எடுப்பதாகவே இல்லை. ஆரவ் வேகமாக ரிஷியின் அறைக்கு சென்று நன்றாக அசந்து தூங்கி கொண்டு இருந்தவனை அடித்து எழுப்பி, “உன் போன குடுடா” என்று கேட்டான். ஆழ்ந்த நித்திரையில் இருந்த ரிஷி பதறி எழுந்து நேற்றிரவு பெட்டில் தொலைத்திருந்த தனது போனை தேடி எடுத்து தந்ததும், அதில் இருந்தும் வஜ்ராவிற்கு போன் போட்டு பார்த்தான். அதையும் அவன் அட்டர்ன் செய்யாமல் தவிர்த்து விட ஆரவ் சோர்ந்து போய் அப்படியே பொத்தென்று மெத்தையில் அமர்ந்தான்.

 

ரிஷி தொலைந்த தன் தூக்கத்தை தேடி மறுபடியும் பெட்டில் ஏறி படுத்து, தூக்க சடைவுடன் “என்ன ஆச்சுடா? ஏன் இப்டி காலங்காத்தால வந்து என்ன தொல்ல பண்ற? பார்பி இன்னும் தூங்கி எழுந்திரிக்கலையாக்கும்?” என்றான்.

 

“அவ காலைலயே எந்திரிச்சு குளிச்சு கிழிச்சு வஜ்ரா பேமிலிகூட அவங்க வீட்டுக்கு கிளம்பி போயிட்டா…”

 

ரிஷி இப்போது நன்றாக வசதியாய் குப்புற படுத்து கொண்டு, “ஏன்டா… நீ கூட போகாம இப்டி தனியாவா அவள அனுப்புவ? அவதான் நீ இல்லாம எதுவுமே செய்ய மாட்டிக்கிறாள்ல. நேத்து மதியம் நான் எவ்ளவோ ட்ரை பண்ணியும் என்னால அவள கன்வின்ஸ் பண்ணவே முடியல தெரியுமா?”

 

“நீ எதுக்கு அவள கன்வின்ஸ் பண்ண?”

 

ரிஷிக்கு கண்ணெல்லாம் சொருக பாதி கண்கள் மூடியடி தூக்க கலக்கத்திலேயே, “நேத்து மதியம் நான் ஹோட்டலுக்கு உள்ள வரும் போது கீழ லாபில பார்பிய பார்த்தேன். எவனோ ஒரு ராஸ்கல் அவ தள்ளி தள்ளி போனாலும் அவகிட்ட வந்து தொல்லை பண்ணிட்டே இருந்தான். நான் அவ கிட்ட போய் நின்னதும் அவன் அங்கிருந்து ஓடி போயிட்டான். நீதான் அங்க போய் அவள தனியா வெய்ட் பண்ண சொன்னயாக்கும்? உனக்கு அறிவே இல்லடா. நீ சொன்னன்ற ஒரே காரணத்துனால, நான் எவ்ளவோ கெஞ்சி கூப்பிட்டும் அங்க இருந்து அவ வரவே இல்ல தெரியுமா. அப்பத்தான் யஷ்மித்தும் ஷூட்டிங் முடிச்சுட்டு உள்ள வந்தான். அவனோட புது போன வச்சிருக்க சொல்லி அவகிட்ட குடுத்திருந்தானாம், அத திருப்பி குடுக்க அவன் பின்னாடியே பார்பி டைனிங் ஹால்க்கு போனாளா. அவள அப்டியே மடக்கி நாங்க ரெண்டு பேரும் அங்கயே இருக்க வச்சுகிட்டோம். யப்பா அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதடவையாவது ‘ஆரவ் வந்துட்டானான்னு போய் பாருங்க… ஆரவ் வந்துட்டானான்னு போய் பாருங்க…’னு எங்க உசுர வாங்கிட்டா. ஏன்டா அவள காணும்னு நீ அப்டியே தேடி தவிச்சு போயிடுவியாக்கும்? அப்புறம் கொஞ்ச நேரம் உனக்கு வெய்ட் பண்ணி பார்த்தோம், நீ வரவே இல்ல. எனக்கு வேற பசியில உயிரே போக ஆரம்பிச்சிடுச்சு. டைம் ஆயிடுச்சுனு நாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்னு சொன்னோம். நீ அவ கூட சாப்பிடுறதா சொல்லி இருந்தியாம், அதுனால எங்க கூட சாப்பிட மாட்டவே மாட்டேன்ட்டா… பாவமா உன்ன தேடி அடிக்கடி வெளியில எட்டி பாத்துட்டே இருந்தாடா, கடைசியில ரொம்ப பசிச்சிருக்கும் போல ஒரு ஐஸ்கிரீம் மட்டும் எடுத்து சாப்பிட்டா. அதுக்கு பிறகும் நாங்க சொன்னத கேக்காம லாபில ‘ஆரவ்க்கு வெய்ட் பண்ண போறேன்’னு போய் உக்காந்துகிட்டா தெரியுமா…”

 

ரிஷி சொல்லி முடித்ததும் ஆரவ் தலையை பிடித்து கொண்டு, ‘எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்… எந்த தப்பும் பண்ணாதவள எவ்ளோ அசிங்கமா திட்டிட்டேன், இப்டி செஞ்சா அவ கோச்சுகிட்டு போகாம என்ன பண்ணுவா.’

 

ஆரவ் தன் அறைக்கு வந்து மறுபடி மறுபடி வஜ்ராக்கு தொடர்பு கொள்ள முயன்று தோற்றதும், கொஞ்ச நேரத்தில் கடுப்பாகி போனை தூக்கி பெட்டின் மேல் எறிந்து விட்டு, பெட்டில் பொத்தென விழுந்தான். கையில் கிடைத்த ஒரு தலையணையை கட்டி அணைத்தபடி, ‘சாரிடா நான் தெரியாம திட்டிட்டேன், அதுக்காக இப்டியா என்ன விட்டு போறது? என் கூட இருந்தே சண்ட போட்ருக்கலாம்ல? அட்லீஸ்ட் என்ன நடந்துச்சுனு சொல்லி இருக்கலாம்ல. வேணும்னா என்னை ரெண்டு அடி கூட அடுச்சிருக்கலாம்ல. கோபத்துல இப்டி விட்டுட்டா போவாங்க.’ என்று பில்லோவை பார்பியாக நினைத்து சமாதான படுத்தி கொண்டிருந்தான்.

 

ஒரு மணி நேரம் கழித்து ஆரவ்விற்கு வஜ்ராவிடம் இருந்து போன் வர, போனை எடுத்ததும் முதல் வார்த்தையாக, “எதுக்கு இப்டி செஞ்ச வஜ்ரா?” என, இத்தனை நேரம் அவன் தன் அழைப்புகளை எடுக்கவில்லை என்ற கோபத்தில் கத்தினான்.

 

வஜ்ரா, “ஆரவ், சாரி… கோச்சுக்காதடா. நீ எங்க வீட்டுக்கு சோனுவ அனுப்பமாட்டேன்னு சொல்லிட்ட. அதான் அவள பாக்க அம்மா அப்பாவ ஹோட்டலுக்கே வரவழைச்சேன். அவங்க சோனுவ ஒருநாள் முழுக்க அவங்க கூடவே வச்சுக்க ஆசை பட்டாங்க. அவ என்னடான்னா ‘நீங்க ஆரவ்கிட்ட கேளுங்க, ஆரவ் சொன்னாதான் நான் உங்க கூட வரமுடியும்’னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா. அதான் நீ சோனுவ எங்க கூட ரெண்டு நாள் இருக்க சொன்னேன்னு பொய் சொல்லி அவள கூட்டிட்டு வந்துட்டேன், இப்பதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ஏன்னே தெரியல அவ இன்னிக்கி காலைல இருந்தே ரொம்ப சோகமா இருக்கா, நார்மலாவே இல்ல. நானும் அவள டைவர்ட் பண்ண எவ்ளவோ ட்ரை பண்ணிட்டேன், ஆனா முடியல. நான் என்ன செஞ்சா அவ நார்மல் ஆவா?”

 

“அப்போ அவ உன்கிட்ட எதுவுமே சொல்லலியா? “

 

“சொல்லலியே. ஏன் என்ன ஆச்சு?”

 

வந்த கோபத்த அடக்கி கொண்டு, “ஒண்ணுமில்ல விடு… உங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு பால்ஸ்(falls) இருக்குல, அங்க அவள கூட்டிட்டு போ. அவ தண்ணியில விளையாட ஆரம்பிச்சா நார்மல் ஆகிடுவா. பட் பூச்சி புழுக்கு எல்லாம் ரொம்ப பயப்படுவா, கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கோடா ப்ளீஸ்… அப்புறம் உங்க வீட்டு அட்ரஸ் லேண்ட் மார்க் எனக்கு வாட்ஸப்ல அனுப்பு. இங்க எனக்கு இன்னிக்கு மதியம் ஒரு மீட்டிங் இருக்கு, அத முடிச்சிட்டு நானும் கிளம்பி வர்ரேன்.”

 

“ம்… நீ எப்ப வேணாலும் வந்துக்கோ, போய்க்கோ. ஆனா அவள மட்டும் நாளைக்கி தான் நாங்க திரும்ப அனுப்புவோம் சொல்லிட்டேன்.”

 

“சரி சரி…” என்று மறுபடியும் அங்கே அடி வாங்கியது ஆரவ்வின் போன்தான். போனை தூக்கி எறிந்துவிட்டு, ‘ஏன்டா இப்டி பண்ணறீங்க… எனக்குன்னே வருவீங்களாடா? எல்லாரோட லவ்வுக்கும் ஒரு வில்லன் இருப்பான். ஆனா என்னோட லவ்வுக்கு மட்டும் ஊரு முழுக்க வில்லனா இருக்கானுங்க. இனி நான் என்ன சொல்லி, எப்டி சமாதான படுத்தி அவள கூட்டிட்டு வர போறேனோ…’ என்று புலம்பி தள்ளினான்.

 

வஜ்ரா சோனுக்கு பால்ஸ்ஸை(falls) காட்டியதுமே அவள் குழந்தை போல குஷி ஆகிவிட்டாள். அந்த அழகிய அருவி அளவில் சின்னதாக குளிப்பதற்கு வசதியாக  அதுவும் வீட்டிற்கு அருகிலேயே இருந்தது அவளுக்கு பிடித்துப் போனது. அவளை நீரில் விளையாட விட்டுட்டு வஜ்ரா கொஞ்சம் தள்ளி இருந்த பாறை மேல் முதுகை காட்டியபடி அமர்ந்து கொண்டான். கொஞ்ச நேரம் ஆடி ஓடி விளையாடி ஓய்ந்தவள் கடைசியில் காலை நனைக்கும் படியான ஒரு பாறைமேல் அமர்ந்ததும், மனது மீண்டும் காலையில் நடந்ததெல்லாம் நினைக்க தொடங்கியது.

 

காலையில் அவர்களுடன் கிளம்பிய நேரம் ஆரவ் தன்னைத் தேடி வருவானா என்று பார்பி திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வாசல்வரை நடந்தாள். நிச்சயமாய் வருவான் என்று மனது கிடந்து அடித்துக் கொண்டே இருக்க, அனைவரும் காரில் ஏறிய பின்பும் அவள் ஏறாமல், அவன் வரும் வழி பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

 

வஜ்ரா, “டைம் ஆச்சு சோனு வா… நீ முன்னாடி சீட்க்கு வந்து ஏறு. நம்ம ட்ராவல் பண்ண போற பாதை புல்லா கிரீனியா செமய்யா இருக்கும், உனக்கு ரொம்ப பிடிக்கும். முன்னாடி சீட்ல இருந்தா நல்லா வேடிக்கை பாக்கலாம் வாடா…” என்று கிட்டத்தட்ட அவளை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றினான். அப்போதும் பார்பி ஆரவ் வருகிறானா என்று ஒருமுறை வெளியே எட்டிப் பார்த்தாள், அவன் வரவே இல்லை.

 

கண்களை முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை மற்றவர்கள் அறியாமல் மறைக்க நினைத்தவள், தலையை குனிந்து கொண்டு, ‘நான் என்ன தப்பு செஞ்சேன் ஆரவ்? எதுக்காக என்னை அப்டி திட்டிட்டீங்க? உங்க ப்ரன்ட்ஸ் கூட பேசுறது அவ்ளோ பெரிய தப்பா? மறுபடியும் நான் அவங்க கூட பேச கூடாதுன்னு தான் என்ன இங்க இருந்தே போக சொல்லிட்டீங்களா? வழி அனுப்ப கூட நீங்க வரவே இல்ல, என்மேல அவ்ளோ கோபமா உங்களுக்கு? என்னை மறுபடியும் கூப்பிடுவீங்களா இல்ல, விட்டது சனியன்னு அப்டியே தலை முழுகிடுவீங்களா? நான் இப்ப மறுபடியும் முதல்ல இருந்து ஒரு புது குடும்பத்தோட வாழ கத்துக்கனுமா? இவங்க வீட்டுல எத்தன நாள் என்ன வச்சிருப்பாங்க? ஒருவேள இங்கயும் ஏதாவது பிரச்சன வந்தா எனக்கு யாரு உதவி செய்வா? அடுத்து என்னை எங்க அனுப்புவாங்க?’

 

நினைவில்லை என்பாயா?

நிஜமில்லை என்பாயா?

நீ என்ன சொல்வாய் அன்பே?

உயிர் தோழன் என்பாயா?

வழிபோக்கன் என்பாயா?

விடை என்ன சொல்வாய் அன்பே?

சாஞ்சாடும் சூரியனே

சந்திரனை அழவைத்தாய்

சோகம் ஏன் சொல்வாயா?

Advertisements

2 Comments »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: