Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 31

பாகம் – 31

ஷாப்பிங் மால் மேனஜரும் அவரோடு மற்ற பணியாளர்கள் இருவரும் சேர்ந்து அணியினரை வரவேற்க வாசலிலே நிற்க, இவர்களோ உள்ளே போகாமல் வெளியே நின்று கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர்.

 

இறுதியாக குரு, “உங்க இஷ்டத்துக்கு பேரு வக்கிறீங்களே, முதல்ல அந்த பொண்ணுகிட்ட இந்த பேரு புடிச்சுருக்கான்னு ஒருத்தனாவது கேட்டீங்களாடா? இன்னும் அஞ்சு நிமிஷத்தில இத பத்தி பேசி முடிச்சுட்டு உள்ள வர்றீங்க” என்று உத்தரவாக சொல்லிவிட்டு சென்றார்.

 

ஆரவ் மனதில் அந்த கேள்வி சுருக்கென தைக்க ‘சே… நானும் இத பத்தி யோசிக்கலயே. நான் பர்ஸ்ட் டைம் பார்பின்னு கூப்பிட்டப்போ, அவ இந்த பேரே புடிக்கலன்னு சொன்னாளே. அடுத்தவங்கிட்ட இப்ப பிரச்சினை பண்றேனே நானும் இதே தப்பதான அன்னிக்கி செஞ்சேன். இப்ப வரைக்கும் நான் அவகிட்ட மத்தவங்க வச்ச பேரு புடிச்சிருக்கா புடிக்கலையான்னு ஒரு வார்த்தை கூட கேக்கலயே….’

 

இதற்கிடையில் வஜ்ரா பார்பியை பார்த்து, “ப்ளீஸ் நான் மட்டும் உன்ன சோனுன்னே கூப்பிட்டுகிறேனே…” என்றதும் அவள் திரும்பி ஆரவ்வை இறைஞ்சும் பார்வை பார்த்தாள். வஜ்ராவிற்கு ஆரவ் அனுமதியின்றி பார்பி எதுவும் செய்வதில்லை என புரிய ஆரவ்விடம், “ப்ளீஸ்” என்றான்.

 

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்தவன், தன் அனுமதிக்காக அவர்கள் இருவரும் காத்திருப்பதை கண்டதும் இன்னும் உருகிப்போய் “ம்..” என்று புன்னகையோடு தலையாட்டினான். அதன்பின் அனைவரும் மால் உள்ளே உற்சாகமாக செல்ல ஆரம்பிக்கவும் வஜ்ரா மட்டும் பார்பியின் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். அவனை பார்த்து ஆரவ்விற்கு அவன்மீது பரிதாபமாகி போனது, ‘இதுவரைக்கும் இவன் யாருகிட்டயும் இவ்ளோ பொறுமையா நின்னு பேசினதே இல்ல. இன்னிக்கி என்னடான்னா பொக்கே தர்றான், அவளுக்காக என்கிட்ட ப்ளீஸ்ன்றான், குணா கமல் மாதிரி சோனு சோனுன்னு இவ பின்னடியே வர்றானே. இவ கிட்ட ஏதோ பவர் இருக்கு, அதான் எல்லாரும் இவள தன் கூடவே வச்சுக்க நினைக்கிறாங்க…’ பார்பியோ இது எதையும் கவனிக்காமல் ஆரவ் கையை கெட்டியாக பிடித்தபடி வேடிக்கையே தன் முக்கிய வேலையாக செய்து கொண்டிருந்தாள்.

 

பார்பி, “ஆரவ், நான் டீவில பாத்தப்போ மால்னா ரொம்ப கூட்டமா இருக்குற மாதிரி காமிச்சாங்க, இங்க என்ன யாருமே இல்ல.? அதுவுமில்லாம ஏன் எல்லா கடையிலயும் ஒரே ஒர ஆள் மட்டும் சேல்ஸ்க்கு நிக்கிறாங்க.”

 

ஆரவ், “நாம எல்லாம் விவிஐபி. அதுனால நமக்காக அன் டைம்ல(un time) ஓப்பன் பண்ணி இருக்காங்கடா, அதான் கூட்டமே இல்ல. செக்யூரிட்டிக்காக கடைல வொர்க் பண்ற மத்தவங்கள போக சொல்லிட்டு ஒரு ஆள மட்டும் இருக்க சொல்லிருப்பாங்க. உனக்கு எதாச்சும் வேணும்னா கேளுடா, வாங்கி தர்ரேன்.”

 

“எனக்கு சாக்லேட் சாப்பிடனும்னு தோணுது, இங்க இருக்குமா?”

 

வஜ்ரா ஆச்சரியமாக அவளை பார்க்க அதை கண்ட ஆரவ், “வஜ்ரா இவ இப்டிதான். ஸ்வீட்னா விரும்பி சாப்பிடுவா, ரொம்ப இன்னொசன்ட், உலகம் தெரியாத குழந்தைமாதிரி. சின்ன விஷயத்துக்கு கூட பயந்து அழுதிடுவா. தப்பான ஆளுங்க வேற யாரும் நெருங்காம நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கனும்”

 

இவ்ளோ மட்டமா நம்மள பத்தி சொல்லிட்டானேன்ற ஆதங்கத்தில், “அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் தைரியமான பொண்ணுதான், அழல்லாம் மாட்டேன்” என்றாள்.

 

“ஓ… சாரிடா பார்பி, தப்பா சொல்லிட்டேன். வஜ்ரா இவ ரொம்ப ரொம்ப தைரியசாலி. நம்மதான் வேற யாரும் இவகிட்ட வம்பிழுத்து அடிவாங்காம பாத்துக்கனும்”

 

“வேணும்னே நீங்க என்ன கலாய்க்கிறீங்கல்ல” என அவனை பார்பி அடிக்க, அதை சந்தோஷமாய் வாங்கிய ஆரவ்வின் அன்பை கண்டு வஜ்ராவிற்கு அவன் மேல் இருந்த கோபமெல்லாம் வடிந்து போனது.

 

வஜ்ரா “நான் உனக்கு சாக்லேட் வாங்கி தரலாமா?” என்றதும் பார்பி ஆரவ்வின் முகத்தை கேள்வியோடு பார்த்தாள்.

 

ஆரவ், ‘இவன் அண்ணனா இருக்கத்தான ஆசைப்படுறான். என்ன இருந்தாலும் நமக்கும் மச்சான் துணை வேணும்’ என மனது சொல்ல, “ம் சரி, வாங்கிக்கோ” என்றான்.

 

அவளுக்கு ஒரு பெரிய சைஸ் சாக்லேட்டும், தங்களுக்கு மில்க் ஷேக்கும் எடுத்து கொண்டு மால் முழுவதும் மூவரும் சுற்றி வந்தனர். பார்பி வழக்கம்போல, “இது என்ன? அது ஏன் இப்டி இருக்கு?” என கேள்விகளை அடுக்க ஆரவ் பதில் சொல்லும் வேலையை வஜ்ராவிடம் ஒப்படைத்து விட்டான். அவள் அப்பாவித்தனமான கேள்விகளால் சில நேரங்களில் இருவரும் வாய்விட்டு சிரிக்க, அதை தேர்ட் ப்ளோரில் இருந்து பார்த்து கொண்டு இருந்த குரு, ‘இவனுங்க ரெண்டு பேரும் இப்டி சிரிச்சா பாக்கவே எவ்ளோ நல்லா இருக்கு. இனிமேயாவது இவனுங்க பழச எல்லாம் மறந்து சந்தோஷமா இருக்கனும். இதெல்லாம் அந்த கள்ளம் கபடமில்லாத பொண்ணாலதான்’ என நினைத்து கொண்டார்.

 

ஆடைகளுக்கான ஒரு கடைக்குள் மூவரும் நுழைந்தனர். ஆரவ்விற்கும் வஜ்ராவிற்கும் குடித்த மில்க் ஷேக் கீழிறங்கி அடி வயிற்றை முட்ட, கடையின் வேறு பக்கத்தில் ஆடைகளை பாடாய் படுத்தி கொண்டிருந்த யஷ்மித்திடம் போய், “டேய்… பார்பி லேடிஸ் செக்சன்ல இருக்கா, நாங்க ரெஸ்ட்ரூம் போய்ட்டு வர்ரோம். நாங்க வர்ற வரைக்கும் நீ சேட்டை எதுவும் பண்ணாம அவகூட இருந்து பத்திரமா பாத்துக்கோ” என சொல்லிவிட்டு நகர,

 

யஷ்மித், ‘இங்க பார்ரா வடதுருவமும் தென்துருவமும் சேர்ந்து வந்துட்டு போகுது, இவனுங்க வந்து சொன்னா நம்ம உடனே கேக்கனுமா என்ன? போங்கடா… ஆமா, பார்பி தனியா இருக்கான்னு சொன்னானுங்கல்ல, இந்தா வந்துட்டேன்…’ அடுத்த நிமிடம் கடையின் அடுத்த மூலையில் இருந்த அவளிடம் வந்து, “ஓய்… இங்க வா, எவ்ளோ தைரியம் இருந்தா என்னை அன்னிக்கி எல்லார்கிட்டயும் மாட்டிவிடுவ? உன்னால அன்னிக்கி எனக்கு எவ்ளோ கஷ்டம்னு தெரியுமா? குரு என்ன கேவலமா திட்டி தீத்துட்டாரு. இதுக்கெல்லாம் நீ தான காரணம் அதுனால நான் உனக்கு இப்ப பனிஷ்மென்ட் தரப்போறேன்.”

 

கழுகு பார்வையோடு அவன் நின்றிருந்த தோரணையே அவளுக்கு பயத்தை தர, “ஆரவ் ஆரவ்……” என கத்த தொடங்கினாள்.

 

‘ஐயயோ… ஆரவ் கூடவே அந்த டைனசோரும்ல இருக்கும்’ என்ற பயத்தில் அவளருகில் ஓடிவந்து சுவற்றோடு சேர்த்து அழுத்தி அவள் வாயை கை வைத்து மூடி, “கத்தினன்னு வச்சிக்கோ என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றான்.

 

அவன் நெருங்கிய விதம் அவள் அடிவயிற்றில் கிலி கவ்வச்செய்ததால் பயத்து நின்ற அவளுடைய கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்க்கவும், யஷ்மித் மனம் இறங்கி “ஹேய்… இதுக்குபோய் ஏன் அழுற? நான் கைய எடுத்திடுறேன்மா. ப்ளீஸ் கத்திடாத நான் சும்மாதான் வம்பிழுத்தேன், நான் உன்ன ஒண்ணும் பண்ண மாட்டேன்” என்று கையை மெல்ல எடுத்தான். அவள் கத்தவில்லை என்றதும் உடனே அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்துவிட்டான்.

 

“ஆரவ், வஜ்ரா எங்க இருக்கீங்க…” அந்த கடை முழுக்க தேடி பார்த்தும் அவர்களை காணாமல் கடைக்கு வெளியே தேடி வந்தாள். அங்கே தூரத்தில் ரிஷி வந்து கொண்டிருக்க அவனிடம் ஓடி சென்று, “ஆரவ் எங்க?” என்றாள்.

 

“இங்கதான் உள்ள ரெஸ்ட்ரூம்ல இருக்கான்.”

 

அவள் விருவிருவென அங்கே போக முயற்சிக்கவும், “ஏய்…. நில்லுமா அது ரெஸ்ட்ரூம், என்ன ஆச்சுன்னு என்கிட்ட சொல்லு”

 

“மறுபடியும் யஷ்மித் என்கிட்ட வம்பு பண்றான்.”

 

“இவ்ளோதானா. இங்க பாரு, இது யஷ்மித் எப்பவும் பண்றதுதான், இதப்போய் பிரச்சினை பண்ணாத…”

 

“அவன் என்ன செஞ்சான் தெரியுமா? நான் ஆரவ்கிட்ட செல்லுவேன்”

 

“யஷ்மித்க்காக நான் சாரி சொல்றேன், ப்ளீஸ் இந்த ஒரு தடவ அவன விட்ரு.”

 

“அச்சச்சோ..  நீங்க போய் என்கிட்ட சாரி… எல்லாம்… வேண்டாம்… வேண்டாம்… அந்த யஷ்மித் ஏன் இப்டி இருக்கான்?”

 

“அவன போறுத்த வரைக்கும் வாழ்க்கைய சந்தோஷமா வாழனும், இல்லனா வாழவே கூடாது. அவங்க அப்பா ஒரு ஆர்மி மேன். அவனுக்கு அவங்க அப்பா இருந்த வரைக்கும் அவங்க வீடு ரொம்ப ஸ்டிரிக்டா இருந்துச்சாம், அவன் ஆசை பட்டது எதையுமே செய்ய விடமாட்டாராம். அவனயும் ஆர்மி மேன் ஆக்க ட்ரை பண்ணாறாம். ஆறு வர்ஷத்துக்கு முன்னாடி அவர் இறந்ததும் அவங்க அம்மா அவன் இஷ்டப்படி கிரிக்கெட்ல சேத்தாங்களாம். அதுக்கப்புறமா தான் இவ்ளோ கலகலப்பா ஆனானாம். இப்போ எப்டி விளையாடுறான்னு நீயே பாத்தல்ல… அவனுக்கு கிரிக்கெட்ல நல்ல ப்யூச்சர் இருக்கு” என்று ரிஷி சொல்லி முடிக்கவும் ஆரவ், வஜ்ரா வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.

 

ரிஷி, “டேய் இவளுக்கு முதல்ல ஒரு செல்போன் வாங்கி குடுடா. நான் இங்க இல்லனா இந்நேரம் உன்னதேடி உள்ள வந்திருப்பா.”

 

ஆரவ் ‘என்ன காணும்னா நீ இவ்ளோ தூரம் டென்ஷன் ஆவியாடா செல்லக்குட்டி…’

 

பார்பி, “ஏற்கனவே என்கிட்ட போன் பத்தி ஆரவ் கேட்டிருக்காரு, நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். போன்ல நான் யாருகிட்ட பேச போறேன்…”

 

ஆரவ், ‘நான் கேட்டதில்லையேடா, இருந்தாலும் என்ன விட்டு குடுக்காம நீ பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பட்டுக்குட்டி’

 

ரிஷி, “ஏம்மா, எங்கள எல்லாம் உன் பிரண்ட்டா ஏத்துக்க மாட்டியா?” என்றதும் அவள் புன்னகைக்க, நால்வரும் ஒரு செல்போன் கடைக்குள் பெரிய ஆபரேஷன் செய்வது போல போனை தேடினர்.

 

வஜ்ரா, “உனக்கு எந்த மாதிரி போன் வேணும் சோனு?”

 

“எனக்கு தெரியலண்ணா, நிறைய கேம்ஸ் இருக்குற மாதிரி ஒரு போன் வாங்கலாம்.”

 

ரிஷி, “மெமரி நிறைய இருக்குற மாதிரி எடு ஆரவ்.”

 

எதை எடுத்தாலும் வேண்டாம் என்றவள் இறுதியில் ஒரு வெள்ளை நிற மொபைலை தனக்கு பிடித்ததாக சொல்ல, அந்த ஆபரேஷன் முடிவுக்கு வந்தது. அனைவரும் தங்களது பெர்சனல எண்ணை அவளுக்கு தர யஷ்மித் மட்டும் தரமாட்டேன் என்று முறுக்கி கொண்டான். அடுத்ததாக வஜ்ரா “உனக்கு நான் ஒரு நெக்லஸ் வாங்கி தர்ரேன் சோனு…” என அவள் வேண்டாமென மறுக்க மறுக்க விடாமல் அழைத்து சென்றான்.

 

வஜ்ராவும் ரிஷியும் கடை முழுக்க தேடி துழாவியும் அவளுக்கு பொறுத்தமாக எதுவும் கிடைக்காமல் சோர்ந்திட, ஆரவ் சத்தமில்லாமல் ஒரு டைமன்ட் செட்டை எடுத்து முன்னால் வைத்தான். பூங்கொத்தை போன்ற ஜிமிக்கி அவள் காதில் ஊஞ்சல் நாட்டியம் ஆடுவதை போலிருக்க, அந்த வைர நெக்லஸ் அவள் சங்கு கழுத்திற்கு எத்தனை பொருத்தமாக இருந்ததென்றால், மூவரும் மெய் மறந்து சில நிமிடங்கள் அவளையே பார்த்து கொண்டிருந்தனர். மற்றவர்கள் நிதானமான பிறகும் கூட, ஆரவ் கண்களுக்கு அவளை தவிர வேறு எதுவும் தெரியாமல் போக காதல் கொஞ்சும் தன் கண்களை மறைக்க திணறித்தான் போனான்.

 

தனியாக சற்று ஒதுங்கி வந்த ஆரவ் நிதிஷ்க்கு போன் போட்டு, “நிதிஷ் நான் பார்பிக்கு ப்ரபோஸ் பண்ண போறேன். பட் இது வரைக்கும் யாருமே குடுக்காத கிப்ட், அதுவும் ரொம்ப கிராண்ட்டா ஒண்ணு குடுக்கனும். உனக்கு டென் டேய்ஸ் டைம் தர்ரேன், அதுக்குள்ள கிப்ட்டுக்கு ஒரு நல்ல ஐடியா சொல்லு…”

 

நிதிஷ், “கிராண்ட்டானா எவ்ளோ பட்ஜெட்ல சார்?”

 

“ஒரு ஐம்பது கோடிக்கு மேல வர்ற மாதிரி பாரு”

 

“சா……ர்…..”

 

“ம்… பாத்துட்டு சொல்லு. எனக்கு ஐபிஎல் முடியும் போது அவ என்னோடவளா இருக்கனும்.”

 

ஆரவ் மனதினுள், ‘உன் அழகு என்னை மயக்குது பார்பி, என்னால வெய்ட் பண்ண முடியலடா. இதெல்லாம் உன்னாலதான், உன் அழகால தான்டி செல்லம்…’

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: