Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 30

நேரம் நள்ளிரவை தாண்டி சென்று கொண்டிருக்க மும்பையின் நகர வீதியில் ஆரவ்வின் கார் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தது. பார்பிக்கு காலையில் யஷ்மித்துடன் பிரச்சினை, மாலையில் கிரிக்கெட் மேச் பார்த்தது, என இன்றைய நாளின் அலைச்சல் அதிகமாக இருந்ததால் மொத்த அசதியும் சேர்ந்து பார்பியை தாக்க, அவள் காரில் ஏறியதும் அயர்ந்து தூங்கி விட்டாள். அவனுக்குதான் அவளருகில் இருக்கையில் தூக்கம் வருவேனா என சதி செய்தது. எப்போதும் போல அவளை இப்போதும் தன் தோளில் அவளை இழுத்து சாய்த்து அணைத்து கொண்டான். முதல் நாள் பார்த்ததை போலவே இப்போதும் அவள் தாமரை முகம் ஒரு சின்ன சிரிப்புடன் மலர்ந்திருக்க, இருளோடு கலந்திருந்த அந்த நிலவின் ஒளியில் அவன் கண்களுக்கு அவள் சந்தன நிற தேவதையாக தெரிந்தாள்.

 

ஆரவ் மனதில் ‘எப்பவும் நான் மட்டும் தனியா இருக்குறதா எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு சொல்லிகிட்டே இருக்கும். ஆனா நீ வந்ததுக்கு அப்புறமா என் தனிமையே என்ன விட்டு தள்ளி நிக்குதுடா. இப்ப என் மனசு முழுக்க நீ நிறைஞ்சு இருக்க தெரியுமா செல்லகுட்டி? நீ முழுசா எனக்கு மட்டும் தான் சொந்தம், எப்பவும் என்கூடவே இருக்கனும். உன்னோட பேமிலியே வந்து கேட்டா கூட நான் உன்ன திருப்பி குடுக்க மாட்டேன். நான் அவங்கள தேட ஏற்பாடு பண்ணதே நீ அவங்கள பாக்க ஆசைபடுறதாலதான், உன்ன இங்க இருந்து அனுப்புறதுக்கு இல்ல. இந்த வஜ்ராக்கு எவ்ளோ தைரியம் இருந்தா உன்ன அவன் என்கிட்ட இருந்து பிரிக்க நினப்பான். இன்னிக்கு மதியம் அவன்கூட சண்டை போடனும்னுதான் நான் எந்திருச்சேன். அதுக்கு முன்னாடி நீயே உனக்கு நான் தான் முக்கியம்னு அவனுக்கு மண்டைல உறைக்கிற மாதிரி செஞ்சு காட்டிட்ட, அது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமாடா. நீ எனக்கே எனக்குன்னு என்ன தேடி வந்திருக்கிற ஏஞ்சல்டா…’ என்றவனுக்கு இப்போதும் அந்த சந்தோஷம் மனமெங்கிலும் நிறைய அவள் கையை தன் கைகளோடு இணைத்து பிடித்து கொண்டான்.

 

ஜில்லென இருந்த அவள் விரல்களின் மென்மையை சில நிமிடங்களுக்கு வருடி ரசித்தான். அவனிதழ்கள் பரபரவென்று ஊற, திரும்பி டிரைவரை ஒருமுறை திருட்டு தனமாக பார்த்துவிட்டு, பின் மெதுவாக தன் ஈர இதழை அவள் உள்ளங் கையினில் அழுத்தமான முத்திரையாக பதித்தான். அவளுக்கென தனி வாசனை இருக்கும் போல, கைகளில் பரவி இருந்த அந்த மந்தகாசன வாசனை அவன் நாசியை துளைக்க அது தந்த போதையில் கிறங்கி முத்தம் முடிந்த பின்னும் அவள் விரல்களை விடாமல் அதை நுகர்ந்தபடியே இருந்தான். இதுவரை அவள் விழிக்காமல் இருந்ததால் மனம் ஆசைகொண்டு அடுத்த நிலைக்கு அவனை உந்தி தள்ளியது. அவள் கையை தன் கையோடு சேர்த்து பிடித்து கரகரப்பான தன் கன்னத்தில் தவழ விட்டான். மனமோ இதுமட்டும் போதாது எனக்கு இன்னும் வேண்டும் என முரண்டு பண்ண, கன்னத்தை தாண்டி அந்த இரு கைகளும் வருடியபடி கழுத்தின் வழியே வழுக்கி பின் மார்பினில் இறங்க அவற்றை அங்கேயே சிறைப்பிடித்து அணைத்து கொண்டான். ‘மனமே இன்னைக்கி இதுவே போதும்’ என்றான், ‘முடியாது’ என மனம் மிஞ்சி செல்ல ‘அவள இப்டி தூங்கும்போது டிஸ்டர்ப் பண்றது தப்பு, செல்ப் கன்ட்ரோல் வேணும் உனக்கு’ என மனதோடு பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தான்.

 

ஆரவ்விற்கு அவள் மேல் உருவான ஆசை மோகம் நாளுக்கு நாள் சுய கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி கொண்டு, அணையின் நீர் மட்டம் போல் அதிகரித்து கொண்டே வருகிறது. வெள்ளத்தின் அளவுகள் கூடினால் அணையின் நிலை என்ன ஆகும்?… என்றாவது ஒரு நாள் அணையினை பெயர்த்து எறிந்து விடுமல்லவா…

 

கார் நள்ளிரவு மூன்று மணிக்கு வீட்டை அடைந்ததும் தன் தோளில் தொய்ந்து கிடந்த அவளை நேரே நிமிர்த்தி அமர வைத்து நெற்றி முடியை ஒதுக்கி அங்கே மீண்டும் ஒரு முத்தமிட்டு மனமே இன்றி அவளை எழுப்பினான்.

 

“பார்பி… வீடு வந்திருச்சுடா, எந்திரிக்கிறியா?” என்றவனது வார்த்தைகளில் இன்னமும் கிறக்கம் குழைந்து இருந்தது.

 

அவளோ சிரமப்பட்டு கண்களை  திறந்து, “ஹான்…. வீட்டுக்கு வந்திட்டோமா… சாரி ரொம்ப டயர்டா இருந்துச்சு. அதான் அசந்து தூங்கிட்டேன்.”

 

“ரூம்க்கு போவோமா?”

 

“ம்…”

 

காரிலிருந்து இறங்கி அரைகுறை தூக்கத்தில் ஆடிக்கொண்டே அவள் தன் அறைக்கு செல்ல, ஆரவ் அவள் பின்னாலேயே அவளின் ஆட்டங்களை கண்களில் படம்பிடித்து கொண்டே வந்தான். அவள் தன் அறைக்குள் சென்று கதவை மூடிவிட, அவன் அங்கேயே நின்றபடி தன்னிலை மறந்து அந்த கதவுகளையே சில வினாடிகள் பார்த்து விட்டு தன் அறைக்கு நகர்ந்தான்.

 

அறையில் படுக்கையில் விழுந்தவள் மனது, ‘ஆரவ் ரொம்ப நல்லவன். இவ்ளோ பேரும் புகழும் இருந்தாலும் என்கிட்ட எவ்ளோ சாதாரணமா பழகுறான், யார் என்கிட்ட பிரச்சன செஞ்சாலும் முன்னாடி வந்து நின்னு என்னை காப்பாத்துறான். அவன் என்ன செஞ்சாலும் அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்குது, நான் இனிமே ஆரவ்வ சும்மா சும்மா சந்தேக பட கூடாது. அவன் என் பேமிலி வர்ற வரைக்கும் என்ன பத்திரமா பாத்துக்குவான்’ என எண்ணிக்கொண்டே தூங்கிப்போனாள். ஆரவ்வோ அவன் அறையில் படுக்கையில் குப்புற படுத்து, லேப்டாப்பில் அவளை பார்த்து கொண்டே ‘நான் இங்க தூக்கம் வராம புரண்டு கிட்டு இருக்கேன், நீ மட்டும் எப்டிடி இப்டி தூங்குற? என் கையில உன் வாசனை கொஞ்சம் ஒட்டி இருக்குது பாரேன், அது என்னை என்னென்னவோ பண்ணுதுடா. எனக்கு நீ இப்பவே வேணும்னு ஆசையா இருக்குடா செல்லம், நான் அங்க வரட்டுமா? நான் அங்க வந்தா நீ எனக்கு என்ன தருவ? ஐயோ என்னால முடியலயே…’ பித்தம் தலைக்கேற தனியாக பிதற்றி கொண்டிருந்தான்.

 

இரவு முழுவதும் லேப்டாப்பை தன் தலைக்கு அருகிலேயே வைத்து தூக்கத்தில் அடிக்கடி எழுந்து அவளை பார்த்து கொண்டான். இந்த விளையாட்டு அவள் தன்னருகில் படுத்திருப்பதாகவே அவன் மனதில் ஒரு நிம்மதியை பரவ செய்தது. அடுத்த நாளே அபீசியலுக்கென வேறொரு லேப்டாப்பை வாங்கிவிட்டு, இதை பர்சனலுக்காக ஒதுக்கிவிட்டான். அதன்பின் அவன் அறையில் நாள் முழுவதும் அந்த பர்சனல் லேப்டாப்பிற்கு ஓய்வில்லாமல் போனது. பிறகு வந்த ஐந்து நாட்களும் ஆரவ் அறைக்கு வெளியே மீட்டிங், அவுட்டிங் என்று ராமனாக உரு கொண்டு பார்பியுடன் ஊர் சுற்றுவதும், அறையினுள் ராவணனாக மாறி லேப்டாப்பில் அவளை பார்த்து அணு அணுவாக ரசிப்பதுமாய் நகர்ந்தது. நாளை ஏழாவது நாள் ஐபிஎல் ஓப்பனிங் செரிமனி மும்பையில் நடக்க இருப்பதால், இன்று ஆறாவது நாள் முழுதும் அவளுக்காக என ஒதுக்கி விட்டான்.

 

“பார்பி இன்னிக்கு புல் டே உன் கூடதான். உனக்கு மும்பைக்குள்ள எங்கயாவது போகணும்னு ஆசையா இருந்தா சொல்லு கூட்டிட்டு போறேன். “

 

“டக்கினு எதுவும் தோணலயே, ஆமா ஏன் கேக்குறீங்க?”

 

“நாளைக்கு ஐபிஎல் ஸ்டார்ட் ஆகப்போகுதில்ல, இனிமே நம்ம ரொம்ப பிஸியா இருப்போம். உன்கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ண முடியாதுடா. இன்னிக்கி நைட்டே எல்லா டீம் ப்ளேயர்ஸும் ஹோட்டலுக்கு வந்திடுவாங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர்ல மேச் நடக்கும். ப்ராக்டீஸ், மேச்க்கு டிராவல்னு டைம் போய்கிட்டே இருக்கும்”

 

“ஓகோ… எத்தன டீம் இருக்கு? உங்க டீம் எது?”

 

“மொத்தம் எட்டு டீம்டா, நானும் ரிஷியும் சென்னை டீம். சென்னைல எங்க கெத்து வேற லெவல்ல இருக்கும் தெரியுமா…”

 

“அப்போ மத்தவங்க எல்லாம் வேற டீம்மா?”

 

“ம்.. ஆமா…”

 

குழப்பமாக, “அப்புறம் ஏன் அவங்களுக்கு இன்ட்ரோ குடுத்தீங்க. ஸ்ட்ரெய்ட்டா சென்னை டீம்க்கு இன்டரோ குடுக்க கூட்டிட்டு போயிருக்கலாமே…”

 

“நம்ம பசங்ககிட்ட சேட்டை மட்டுமில்ல பாசமும் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும், ஒரு விஷயம் அவங்களோட பொறுப்புனு வந்துட்டா ரொம்ப சின்சியரா இருப்பாங்க. இப்ப பிரிஞ்சு போனாலும் எல்லா டீம்லயும் நம்ம பசங்க ரெண்டு பேர் கண்டிப்பா இருப்பாங்க. நான் கிரவுண்ட்ல இருக்கும் போது, அவங்க நீ எங்க இருந்தாலும் உனக்கு துணையா வந்து நிப்பாங்க. புது ஆளுங்களவிட நம்ம டீம் பசங்க எவனாது ஒருத்தன் உன் கூட இருந்தாலும் உனக்கு அதுதான் ஸேப்.”

 

“ம்… எவ்ளோ நாள் மேச் நடக்கும்?”

 

“ஒன்றரை மாசத்துக்கு மேச் இருக்கும்.”

 

“8 டீம் தான இருக்கு, ஒருவாரம் இல்ல பத்துநாள் போதும்ல”

 

“அது அப்டி இல்ல. நாம மத்த 7 டீம் கூடவும் இரண்டுதடவ மேச் ஆடனும். மோத்தம் 14 மேச். அதுக்கப்புறம் செமி பைனல், பைனல் எல்லாம் கொஞ்சம் கேப் விட்டு வரும், புரியுதா?”

 

“லைட்டா புரியுது”

 

“உனக்கு போக போக நல்லா புரியும்” சொல்லி கொண்டிருக்கும் போதே ஆரவ் போன் அடித்தது.

 

ரிஷி, “ஆரவ் பிஸியா இருக்கியாடா?”

 

“இல்ல… இன்னிக்கு புல்டே ப்ரீதான் சொல்லு”

 

“இன்டியன் ப்ளேயர்ஸ் எல்லாரும் காலைலயே ஹோட்டலுக்கு வந்திட்டோம். நைட் அவுட்டிங் போகலாம்னு ப்ளான் போடுறானுங்க, நீயும் வர்றியா?”

 

“பப், டிஸ்கோ மாதிரினா நான் வரல, ஷாப்பிங்னா வர ட்ரை பண்றேன்.”

 

“ஷாப்பிங்தான்டா, பீனிக்ஸ் மால் போகலாம்னு இருக்கோம்.”

 

போனை கையால் மூட்விட்டு பார்பியிடம், “இன்னிக்கு நைட் நம்ம பசங்க ஷாப்பிங் மால் போறாங்களாம், நம்மள வர சொல்லி ரிஷி கேக்குறான். என்ன சொல்ல? உனக்கு போனும்னு இருக்கா?”

 

இதுவரை அவள் ஷாப்பிங் மால் பார்த்ததே இல்லை, மால் பார்க்கும் ஆசைவர, “ம்… போவோம்” உற்சாகமாக தலையாட்டினாள்.

 

அவள் சந்தோஷம் அவனுக்கும் ஒட்டிக்கொள்ள போனை மீண்டும் காதில் வைத்து, “ரிஷி… நாங்க…”

 

அவன் முடிக்கும்முன் ரிஷி, “கேட்ருச்சு கேப்டன்ஜி…. இங்க வரைக்கும் நீ பர்மிஷன் வாங்குற விஷயம் கேட்ருச்சு. அடுத்த தடவ உன்ட்ட கேக்காம அந்த பொண்ணுட்டயே ஸ்ட்ரெய்ட்டா கேட்டுக்குறேன். நைட் பதினோரு மணிக்கு கிளம்புறோம், நீங்களும் வந்து சேருங்க, வச்சிடுறேன்.”

 

ஆரவ் புன்சிரிப்போடு, “பார்பி இப்போ கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோடா நைட் தூங்க லேட் ஆகும்” என்று தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

 

ரிஷி மூக்குமேல விரலவச்சு ‘ஒரு பொண்ணுக்கு இவ்ளோ பவரா இருக்கும்? ஆளே இப்டி டோட்டலா மாறிட்டானே…’

 

பார்பி தன் அறையில் மல்லாக்க படுத்துக்கொண்டு, ‘இன்னிக்கி மால்ல ஆரவ்வ விட்டு ஒரு அடி கூட நான் நகர கூடாது. பர்ஸ்ட் டைம் இந்த வீட்ல நான் தனியா இருந்தேன் சாரதாம்பாள் வந்து பிரச்சன பண்ணாங்க. ஸ்டேடியத்துக்கு போய் பர்ஸ்ட் டைம் தனியா இருந்தேன், யஷ்மித் வந்து பிரச்சன பண்ணிட்டான். இப்போ மால்க்கு பர்ஸ்ட்டைம் போக போறேன்… இன்னிக்கு எனக்கு எந்த பிரச்சனையும் வந்திட கூடாது ஆண்டவா’ என்று ஆண்டவனிடம் அப்ளிகேஷன் போட்டு கொண்டிருந்தாள்.

 

ஆரவ் லேப்டாப்பின் முன் குப்புற படுத்து கொண்டு, ‘இவ ரூம்ல இன்னும் ரெண்டு கேமரா வச்சா என்ன? தூரத்தில இருந்து பாத்தா எதுவுமே சரியா தெரியலயே. நாளைக்கி ஈவ்னிங் பங்சன்க்கு அவளோட வெளியில கிளம்பினதும், யாருக்கும் தெரியாம நிதிஷ்கிட்ட சொல்லி பெட்ட சுத்தி ரெண்டு கேமரா வைக்க ஏற்பாடு பண்ணனும். சீ… வர வர நான் நல்லவனா கெட்டவனான்னு எனக்கே தெரியலயே’

 

இரவு பத்தரைமணிக்கு பார்பி அறையிலிருந்து பிளாக் கலர் குர்தாவில் வெளியேற, அதே நேரம் ஆரவ் பிளாக் டீசர்ட்டோடு அறையைவிட்டு வெளிவந்தான். “ஹை சேம் பிஞ்ச் ஆரவ். எனக்கு நீங்க சாக்லேட் வாங்கி தரனும் ” என்றாள் துள்ளளோடு. அவனுக்குதானே தெரியும் இதுநேரம் வரை அவன் அறைக்குள் என்ன செய்தானென்று. இருவரும் மால்க்கு வந்து சேர பதினோரு மணிக்கு மேல் ஆனது. வந்ததும் உள்ளே செல்லாமல் காரிலேயே அவர்கள் காத்திருக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் மற்றவர்கள் அனைவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

 

ஸ்கார்ப்பை கட்டிக்கொண்டு அவள் இறங்க, வஜ்ரா அவளிடம் வந்து, “ஹாய். இது உனக்காகதான் சோனு” என்று தன் கையில் வைத்திருந்த ரோஜா பூங்கொத்தை நீட்டினான்.

 

பார்பி தயங்கிபடி வாங்கி திக்கி திணறி “தேங்க்யூ” என்றாள்.

 

ஆரவ் அவளருகில் வந்து தோளில் கை போட்டு கிட்டத்தட்ட தன்னோடு அணைத்து “அவ பேரு சோனு இல்ல பார்பி” என்றதும் வஜ்ரா அவனை முறைத்து கொண்டு நிற்க,

 

பிரித்வியிடம் வம்பிழுத்துவிட்டு அடிவாங்காமல் தப்பி துள்ளி ஓடி வந்த யஷ்மித் பார்பியை பார்த்ததும் ஒரு சடன் பிரேக் போட்டு, “ஹேய் டோரா…. நீயும் வந்திருக்கியா… நீ வர்றனு ஏன் என்கிட்ட யாருமே சொல்லல…” என்றான்.

 

யஷ்மித் முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு பிரித்வி, “ஹாய் பாரதி ஹவ் ஆர் யூ?”

 

ஆரவ்வும் வஜ்ராவும் திரும்பி மற்ற இருவரையும் முறைக்க, யஷ்மித் “அடடடடா இவனுங்க வேற எப்ப பாத்தாலும் வெறப்பா நின்னுகிட்டு… ஏன்டா நீங்க ஜாலியாவே இருக்க மாட்டீங்களா? டேய் ரிஷி இங்க வந்து பாரேன், ரெண்டு ஸ்டேச்சுவ என்ட்ரன்ஸ்ல வைக்குறதுக்கு பதிலா இங்க தப்பான இடத்துல வச்சிருக்காங்க.”

 

பிரித்வி, “இவங்க எல்லாம் 90’ஸ் கிட்ஸ் மச்சி. ஓவரா கடமை உணர்ச்சி பொங்க இப்டிதான் இருப்பாங்க.”

 

குருவிடம் பேசிக்கொண்டு இருந்த ரிஷி, “இறங்கி அஞ்சு நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள ஏதோ ஏழ்ரைய இழுத்துட்டானுங்க. வாங்க குரு என்னன்னு போய் பாப்போம்…”

 

யஷ்மித், “அங்க பாரு 80’ஸ் கிட்ஸ் ஒண்ணு வருது.”

 

குரு, “இப்ப என்னடா பிரச்சனை”

 

ஆரவ், “குரு பார்பிக்கு ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்கல சொல்லிட்டேன்.”

 

வஜ்ரா, “அவன் என்னை என்ன வேணா செய்யட்டும், நான் அவள சோனுன்னு தான் கூப்பிடுவேன். “

 

யஷ்மித், “அப்போ உன் பேரு டோரா இல்லயா?”

 

குரு, “அதான் அன்னிக்கே சொல்லிட்டேன்லடா, யாருக்கு எப்டி இஷ்டமோ அப்டி கூப்பிடுங்கனு. இன்னுமாடா அதையே பிடிச்சு தொங்குறீங்க?”

 

ஆரவ், “பார்பிதான்”

வஜ்ரா, “சோனுதான்”

யஷ்மித், “டோராதான்”

பிரித்வி, “இன்னிக்கி சங்குதான்”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: