Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39

உனக்கென நான் 39

” நீ ஏண்டி வந்த ” என்ற தாயிடம் தன் தந்தையிடம் வாங்கி வந்திருந்த அனுமதி கடித்ததை ஓப்பித்தாள். ” மறுபடியும் உனக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சுட்டாரா அவரு! கேட்டா என் பொண்ணுக்கு நான் செல்லம் குடுப்பேன் உனக்கு என்னடி? அப்புடினு சொல்லி என்னை வேற கட்சில சேத்துவிட்டுருவீங்க அப்பாவும் மகளுமா சேந்துகிட்டு சரி வா ” என ஒரு வழியாக அழைத்து சென்றார். அன்பரசியும் உள்ளே இருந்த அரிசியும் ஆடிகொண்டெ வந்தனர்.

ஊரின் நடுவில் இருந்த தாத்தாவின் வீட்டை அடைந்தனர். சிறுவயதில் இங்கு மலையுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட தருணங்கள் அவளால் மறக்கமுடியாதவை. அந்த நினைவுகளுடன் நின்றிருந்தாள்.

“என்னடி பறாக்கு பாத்துகிட்டு நிக்கிற போய் அம்மாசி பாட்டிகிட்ட துடைப்பம் வாங்கிட்டு வாடி ” என்று அவளது கனவை கலைத்தார் பார்வதி. ” அம்மா நீயே போம்மா அந்த பாட்டி நான் சின்னபுள்ளையா இருந்த்தப்போவே எனக்கு கல்யானம் பன்னி வைக்கனும்னு சொல்லும் இப்போ.! போம்மா நான் போகலை. ” என்று வெட்கபட்டாள். அந்த சுட்டி பெண்களின் ஆட்டம் தாங்காமல் கூறிய கூற்று அது. அதை நினைத்து இன்று வெட்கபடும் மகளை பார்த்த பார்வதிக்கு தன் மகள் வெட்கபடுகிறாளா என்று உள்ளம் பூரித்துபோனார்.

“சரிடி இந்தா சாவி கதவ தொறந்து உள்ள போ. நான் போயி வாங்கிட்டு வந்துடுறேன்” என பார்வதி செல்ல தன் கையிலிரந்த அந்த இரும்பு ஆதிகால கடவுச்சொல்லை பார்த்தாள். சிறுவயதில் அந்த சாவியை கொண்டு கதவுடன் மலையும் அரிசியும் செய்த நினைவுகள் ஏராளம்.

“அன்பு நீயும் மலையும் போயி அந்த ஏணி எடுத்துட்டு வாங்க;! அன்பு தாத்தா வீட்டுல போயி இத வச்சுடு குட்டி; அன்பு அங்க ஒரு போட்டோ இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க” என்று போஸ் கூறுமபோதெல்லாம் அவர்களுக்கு மிட்டாய் வாங்க காசு கொடுப்பது போஸின் வழக்கம். ஆனால் இந்த அடங்கா தோழிகளுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அந்த பெரிய ராட்சசன் தான். வெள்ளை கருப்பு காலத்திலிருந்து இன்றுவரை தாங்கி உழைக்கவைண்டும் என்றால் அவ்வளவு வலிமை தேவைதான். நல்ல தேக்கில் கலைவண்ணத்துடன் இழைத்து அந்த கதவினை செய்திருந்தார் அரிசியின் தாத்தா.

போஸ் மறக்காமல் சாவியையும் கொடுத்து விடுவது வழக்கம். ஒருமுறை தோட்டத்து சாவி இல்லை ஆனால் பம்பு போடனுமே என்று கதவில் தீமூட்டியவர்கள்தானே இவர்கள். நல்லவேளை மாரியம்மாள் வந்ததால் கதவு தப்பித்தது. அதனால் இந்த பாரம்பரிய வீட்டின் சாவி வேலையுடன் சேர்த்தே வழங்குவது போஸின் வழக்கம்.

அந்த சாவியை திறக்கமுடியாமல் இரண்டுபேரும் அந்த கதவின் முன் பல குரளி வித்தை செய்வர். இருவரும் கயிறு கட்டி அந்த சாவியில் தொங்குவது. இல்லை என்றால் ஒருவர் தோளில் ஒருவர் ஏறிகொண்டு வாயால் கடித்து திறக்கிறேன் என்று அரிசிக்கு சிறுவயது பல்கொட்டும் அத்தியாயம் ஆரம்பித்த கதையும் உண்டு. சாவியில் நேரடியாக தலைகீழாக தொங்கி சாவியும் துவாரத்திலிருந்து நழுவி இருவரும் கீழே விழுந்து சிராய்த்துகொண்ட சுகமான தருணங்கள் அன்பரசிக்கு சிரிப்பை வரவைத்து. கூடவே அந்த பல் இருந்த இடத்தை நாக்கால் தடவி பார்த்தாள். நல்ல வேளை புதிய பல் முளைத்துவிட்டது. அது தெரிய தலையில் டித்து கொண்டே சிரித்தவள் சாவியை எடுத்தது கதவின் இதயத்தில் புகுத்தினாள்.

நீண்ட நாளாக அன்பரசியை பார்க்காத கதவு “ஏய் சுட்டி பொண்ணு இத்தனை நாள் என்ன பாக்காம எங்க போன?! போ நான் உன்கூட சண்டை” என்பது போல் பூட்டில் துருபிடித்து அவளை திறக்க விடாமல் செய்தது.

தன் பால்கரங்கள் சிவக்கும் அளவுக்கு முயற்சி செய்து பார்த்தால் அவளால் முடியவில்லை. அம்மா திட்டுவாங்களே என்ற பயமும் தொற்றிகொள்ள விழித்தாள். மீண்டும் முயற்சி செய்து பார்த்தாள். உள்ளிருந்த அரிசியோ “ஐயோ லூசு வாயால கடிச்சு தொறடி ஏற்கனவே தொறந்துருக்கியே” என திட்டினாள்.

இந்த வாண்டு பேச்ச கேட்டா சந்துருமுன்னாடி சிரிக்க முடியாமயே போயிரும்டி என பல்லை மீண்டும் சரிபார்த்தாள்.

“என்னடி நீ இன்னுமா நின்னுகிட்டு இருக்க தொறக்கவே இல்லையா” என கையில் ஒரு துடைப்பானுடன் நின்றார் பார்வதி.

“அம்மா தொறக்க முடியலமா! தாத்தா உள்ள இருந்து சாவிய சுத்தவிடாம பிடிச்சுகிறாருனு நினைக்குறேன்” என மனதில் நினைத்ததை வெளியில் எப்படி சொன்னாள் என்று தெரியவில்லை.

“ஆமாடி என் மாமனாருதான் வந்து இங்க உட்காந்துகிட்டு இருக்குறாரு அவரு இன்னாரம் இந்த உலகத்துல மறுபடியும் பொறந்து உன் வயசுல இருப்பாரு” என சாவியை வாங்கினார்.

“இருடி வாரேன்” என சாவியை எடுத்துகெண்டு மீண்டும் எங்கோ கிளம்பினார். அன்பரசி வீட்டின் வாசலில் அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் திரும்பிய பார்வதியின் கையில் ஒரு விளக்கென்னை பாட்டில் இருந்தது. பின்னர் அதை சாவியில் தடவி ஒருவழியாக திறந்தார்.

அதை பார்த்த அன்பரசி “ஏம்மா நீ ஏன் இஸ்ரோக்கு அபளே பனனகூடாது” என்றாள். அதுக்கு பார்வதி “அப்புடினா என்னமா?!” என்றாள். அதற்குமேல் எதுவும் பேசுவதற்கு இல்லை.

திடீரென தன் நாட்டுக்குள் படையெடுத்த இரண்டு பெண்களை பார்த்த உயிரினங்கள் தெரிந்து ஓடின. ஒட்டைகளும் எலிகளும் பல்லிகளும் புகுந்து விளையாடி இருந்தன. அதில் இரண்டு தேள்களும் சேரத்து கொள்ளுங்கள்.

அன்பரசி உள்ளே நுழைய பரணில் இருந்த ஒரு எலி பயத்தில் ஓட வழியில்லாமல் அன்பரசியின் தலையில் குதித்து ஓடியது.

“ஐய்யோ அம்மா எலி…” என கத்திகொண்டே தன் தாயின் பின்னால் ஓடி ஒழிந்து கொண்டாள். சாரைபாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு வந்து “அம்மா நீதான சொன்ன இந்த பாம்ப கையால உருகி விட்டா நல்லா சமையல் வரும்னு அதான் உனக்காக வைக்கோல் போர்ல இருந்து பிடிச்சுட்டு வந்தேன். நேத்தகூட ரசம் நல்லா இல்லைனு அப்பா திட்டுனாரு. நீ வைக்குற தேங்காய் சட்டினியும் வரவர சரியில்லை. இந்தா இதை பிடி” என கழுத்திலிருந்த பாம்பை தூக்கி போட பார்வதி பயந்துபோய் போஸின் பின்னால் ஒழிந்தாள்.

“ஏங்க அவள பாருங்க”

“எனக்கு தெரியாதுப்பா நீதான் சொல்லிருக்கு சமையல் நல்லா பன்னும்னா சாரைபாம்ப பிடிக்ககனும்னு இனி நீயாச்சு உன் பெண்ணாச்சு என்னை ஆள விடுங்க” என்று நழுவியதும். ஒரு வழியாக அரிசியை மிரட்டி தப்பித்தாள் பார்வதி.

அப்படி இருந்த தன் பொண்ணு ஒரு எலி மேலே குதித்தற்கே இநத துள்ளு துள்ளளுகிறாள். ஓ இதுதான் பெண்மையின் இயல்பா என சிந்தித்து கொண்டு “அது உன்ன என்னடி பன்னுச்சு சும்மா கத்திகிட்டே இருக்காத” என திட்டும்போது தன் குழந்தையின் முகத்தில் சிறிய வாட்டம் கானவே பார்வதிக்கு சிரிப்பு வந்துவிட்டது‌. அதை கட்டுபடுத்திகெண்டார்.

“சரிடி இந்த இந்த ஒட்டடையெல்லாம் அடி” என்று பார்வதி கூறவே ஆயுதத்தை எடுத்துகொண்டு புறப்பட்டாள். பார்வதியோ உடைந்து கிடந்து பொருட்களை எடுத்து வைத்து குப்பையாக மாற்றிகொண்டிருந்தார்.

“அம்மா உயரமா இருக்கு எட்டமாட்டேங்குது” சிறுவயது அரிசி என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள். “நீ எட்டற வரைக்கும் அடிடி” என்று கூறிகொண்டிருக்கும்போது இரண்டு சிறுவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் அந்த அம்மாசி பாட்டியின் சாயலில் இருந்தனர்.

அன்பரசியின் அருகில் வந்த அரை டவுசர் அணிந்திருந்த ஒருவன் “அத்தை குடுங்க நான் பாத்துக்கிறேன்” என்றான். தன்னை அத்தை என்று ஒருவன் அழைப்பதை அன்றுதான் பார்த்தாள். சிறிது மகிழ்ச்சியாகவே இருந்தது. இப்போதுதான் புரிந்தது பார்வதி ஏன் சந்துரு சந்துரு என்று கிடக்கிறாள் என்று அன்புக்கு.

பல பொருட்கள் நொருங்க சில சத்தங்களும் ஏற்பட்டன. மணிமுள் வேகமாக சுற்றி நின்றது. அன்பரசி வேலை தீவிரத்தில் மதிய சாப்பாட்டை மறந்தாள்(ஆமா அவள் என்னைக்குதான் சாப்பிட்டுருக்கா). அந்த முட்களின் ஓட்டத்திற்கு இனங்க பல எலிகளும் இரு தேள்கள் பல்லிகள் என சொர்கத்திர்கு பார்சல் செய்யப்பட்டன அந்த சிறுவர்களால். அதை பார்க்கும்போது அன்பரசிக்கு சிறிது வேதனையாக இருந்தது. இருந்தாலும் சந்துருவுக்காக பொருத்து கொண்டாள்.

ஒருவழியாக பத்துமணி நேர போராட்டத்தின் பயனாக அந்த வீடு இயல்புநிலைக்கு திரும்பியது. அந்த இடைவெளியில் போஸ் மூன்று கட்டில்கள் ஏற்பாடு செய்து உள்ளே போட்டுவிட்டு கல்யாண வேலையாக சென்றுவிட்டார்.

“இதுக்கு ஒரு புது வீடே கட்டிருக்கலாம்மா” என நெற்றியை துடைத்தாள் அன்பு. அவளது சேலை வியர்வையால் ஊறிபோயிருந்தது. கூடவே முகமோ கரிபூசி இருந்தது. தலையில் முழக்க தூசி தான். உடலளவில் அரிசியாக நின்றிருந்தாள்.

பின் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு உடல் அசதியால் துயில் கெண்டாள். பெரிய பெண் ஆனதுக்கு அப்புறம் அதாவது அரிசியிலிருந்து அன்பரசியானபிறகு இவ்வளவு வேலை செய்ததில்லை. எலும்புகள் வரை அந்த அசதி எதிரொலித்தது. மெத்தையில் சரிந்து உறங்கி விட்டாள். இரவு சாப்பாட்டை அரை தூக்கத்துடன் விழுங்கிவிட்டு மீண்டும் உறங்கினாள்.

மறுநாளும் விடிந்தது‌. வாசலில் இருந்த பந்தல்கள் அன்பரசியை சைட் அடிக்கும் சூரிய ஒளியை தடுத்தன. “இவ சந்துரவோட சொத்து” என்று கூறியிருக்கும்போல சூரியன் சோகமாக இருந்தான்.

“ஏண்டி ஒருநாள் வேலை செஞ்சதுக்கே இவ்வளவு நேரம் தூங்கிட்ட போற வீட்டுல இப்புடி தூங்கி வழியாதடி” என அசோசியேசன் மெம்பர்சிப் வேலை செய்தது.

அரை தூக்கத்தில் எழுந்தவர் “அம்மா வேண்மனா நீயும் என்கூட இலவசமா வந்துடுமா நான் தூங்குவேனாம் நீ சமையல் பன்னிடுவியாம்” என மெதுவாக கூறினாள். அவள் சந்துருவை மனதில் வைத்து சிறிது சிறிதாக அரிசியாக மாறிகொண்டிருந்தாள். இல்லை அன்பரசி என்ற முகமூடியை கழற்றி கொண்டிருந்தாள்.

“உன் அத்தை இருந்துருக்கனும்டி நல்லா வாயிலையே குத்தி வேலை வாங்குறதுக்கு” என தன் மாமியாரை நினைத்துகொண்டு கூறினாள்.

அப்போது வந்த போஸ் “ஆமா தங்கச்சி இருந்திருந்தா இவளுக்கு இன்னும் செல்லம் குடுத்திருக்கும் வேலையே செய்ய விட்டிருக்காது” என காவேரியை நினைத்து கூறி பீரோவில் இருந்து பணத்தை எடுத்தார்.

‘எல்லாரும் காவேரி காவேரிங்குறாங்க அவங்களை பாக்கதான் எனக்கு குடுத்து வைக்கல’ என மனதில் நினைத்தாள்.

“ஆமாங்க காவேரி இருந்தா இப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்துருக்கும் இனிமே பாக்கவே முடியாது” என வருந்தினார் பார்வதி அன்பரசிக்கு பூஸ்ட் கலக்கிகொண்டே. மகள் வேறு வீட்டிற்கு செல்லும்போது தாய்களுக்கு ஏற்படும் இயல்பான பாசம் இது.

“அதான் சந்துருவ பாக்குறியே குணத்துலேயும் சரி உருவத்துலேயும் சரி அப்புடியே காவேரி தான்” என்று போஸ் கிளம்பினார். அன்பரசிக்கோ சந்துருவின் வடிவில் காவேரியை பார்க்க ஆசையாய் இருந்தது. அவன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள் தலையனையில் கிடந்தஅந்த டைரியுடன்.

மதுரை விமானநிலையம் சந்துரு சன்முகம் சுவேதா மூவரும் வந்திரங்க அங்கே மஞ்சு சுகு பாலாஜி இருந்தது சந்துருவை சற்று வாரியது.

சுகுவை தனியாக இழுததவன் “டேய் நான்தான் உங்கள நேத்தே போகசொன்னேனடா ஏண்டா இன்னும் போகாம இருக்கீங்க” என்று சுவேதாவின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டான்.

பின்னாலிருந்து ஒட்டுகேட்ட மஞ்சு “நான் சொன்னேன் அன்பு தனியா இருக்கா வாங்க போய் கம்பெனி கொடுக்கலாம்னு ஆனா இந்த சுகுதான் வரமாட்டேன்னு சொல்லிட்டான்” என்றுகூறவும் தங்களது ரகசிய மாநாடு ஏன் விமானநிலையத்தில் பொய்த்துபோகிறது என யோசித்தான் சந்துரு.

சரி யாருக்கும் எந்த பிரட்சனையும் இல்லை என்று நிம்மதி அடைந்து காரை எடுத்து கிளம்பினர்.

கார் அன்பரசியின் இல்லத்தை அடைந்தது. அனைவரையும் வரவேற்றார் பார்வதி.

அன்பரசியோ பூஸ்டை ருசித்துகொண்டிருந்துநேரம் காரும் புகுந்தது. பதட்டத்தில் அன்பரசிக்கு ஒரு பூஸ்ட் மீசை வரையபட்டது‌. சந்துரு சிரித்துகொண்டே பார்த்தான் அரிசியை.

“ஐய்யோ அரிசி இப்புடி பன்னிட்டீயடி” என்றுது மனது.

சிறிதுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க சந்துரு மட்டும் வெளியில் சென்று பந்தல் கட்டுமானத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது அன்பரசி “அம்மா உங்கள சாப்பிட கூப்பிட்டாங்க”

“அப்போ நீங்க கூப்பிடமாட்டீங்க என்றான் சந்துரு.

-தொடரும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: