Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 29

பாகம் – 29

லிப்ட்டிற்குள் வந்த பிறகு ஸ்கார்ப்பை கழட்டி விட்டு அழுகையோடு நடுங்கி கொண்டே பார்பி நின்றிருக்க, அருகில் இருந்தவனோ அதிர்ச்சியோடு அவள் முகத்தை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான். வஜ்ராவின் கண்களுக்கு குழந்தையாக தெரிந்த அவளை, அவன் கண்ணீரை துடைத்து விட்டு, “சோனுகுட்டி அழாதடா….” என்றான்.

 

அவள் அழுகையினூடே, “நான் சோனு இல்ல, என் பேர் பார்பி. நான் ஆரவ்வோட பிரண்ட், அவரு கூடதான் இங்க வந்தேன். இவங்க யாருன்னே எனக்கு தெரியல, பேசிகிட்டு இருக்கும் போதே திடீர்ன்னு அடிக்க வந்துட்டாங்க, எனக்கு பயம்மா இருக்கு. ப்ளீஸ்ங்க என்ன ஆரவ் கிட்ட கூட்டிட்டு போறீங்களா?”

 

ஆரவ்வும் ரிஷியும் படிகளில் தாவி இறங்கி ஓடி வந்து வலது புறமிருந்த கிரவுண்ட், என்ட்ரன்ஸ் என தேட, பிரித்வியும் யஷ்மித்தும் இடதுபுறம் தற்காலிகமாக டைனிங் ரூமாக மாற்றப்பட்டு இருந்த அறைக்கு சென்று தேடினர். ஆரவ்வும் ரிஷியும் அந்தபக்கம் வஜ்ராவும் பார்பியும் இல்லாமல், அவர்களை தேடி எதிர் திசைக்கு வர அங்கே டைனிங் ரூம்க்கு வெளியே கதவுக்கு அருகில் இருந்த சுவற்றில் பல்லியை போல் ஒட்டிக்கொண்டு இருந்த யஷ்மித், “ரெண்டு பேரும் இங்கதான் இருக்காங்க. நீங்க உள்ள போங்க, நான் இங்கயே இருக்கேன்…” என்றான்.

 

ஆரவ் விருவிருவென உள்ளே சென்று பார்க்கையில் அங்கே டேபிளில் வஜ்ரா இரண்டு ஜூஸ் கிளாஸ்ஸோடு அவள் அருகில் அமர்ந்திருந்தான். ஆரவ் பதட்டத்தோடு “பார்பி என்ன ஆச்சு? ஆர் யூ ஆல்ரைட்?” என்றான்.

 

பார்பி தலை சாய்த்து மென் புன்னகையோடு, “எனக்கு ஒண்ணுமில்ல ஆரவ். இவரு நான் ஜூஸ் குடிச்சதும் என்னை உன்கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு அதான் இங்க வந்தேன்” என்றாள்.

 

இதற்குள் யஷ்மித் ஒரு பெண்ணிடம் வம்பு செய்வதாக குருவுக்கு இதர டீம் மேட்ஸ் தகவல் தர, அனைவரும் அவனை தேட தொடங்கினர். ஒருவர் பின் ஒருவராக தன்னை தேடி வருபவர்கள் எல்லாம் யஷ்மித் ‘உள்ள போய் அந்த பொண்ண பாருங்க, அப்புறமா நான் நடந்தத சொல்றேன்’ என்று உள்ளே தள்ளினான். இறுதியாக குருவும் வந்துவிட ‘இனிமேல் என் நிலமை அவ்வளவு மோசமில்லை’ என்றறிந்து யஷ்மித் கூட்டத்தில் கலந்து மெதுவாக உள்ளே வந்தான். அவனை பார்த்த அடுத்த நொடி பார்பி எழுந்து, “இவருதான் என்கிட்ட வந்து பிரச்சன பண்ணாரு. அவரு என்ன பேசுராருன்னே புரியலன்னு நான் சொன்னதுக்கு என்னை அடிக்க வர்றாரு” என்று வசம்மாக அவர்களிடம் மாட்டிவிட்டாள்.

 

பிரித்வி ரகசியமாக, “நல்லவேள அவளுக்கு புரியலயாம்டா, தப்பிச்சிட்டடி மாப்ள…”

 

குரு, “யாரு இந்த பொண்ணு?”

 

ஆரவ், “இது பார்பி… காட்டுல என்கூட இருக்கும் போது மனிஷ் ஆளுங்க எனக்கு பதிலா இவள ஷூட் பண்ணதில, கீழ விழுந்து அடிபட்டு இவளுக்கு மெமரி லாஸ் ஆகிடுச்சு. இந்த பொண்ணோட பேமிலி பத்தி இன்னும் எந்த தகவலும் கிடைக்கல. நானும் முடிஞ்ச அளவு சைடுல அவங்கள தேட ட்ரை பண்ணிகிட்டே இருக்கேன், இப்போதைக்கு அவளுக்கு என்ன தவிர வேற யாரையும் தெரியாது. பிரச்சின என்னன்னா இவளை இப்போ மனிஷ் கொல்ல ட்ரை பண்றான், வெளியில இருக்குறது ஸேப் இல்ல. இனிமே எப்பவும் என்கூட, அதாவது நம்ம கூடதான் இருக்க போறா. உங்க எல்லாருக்கும் இன்ட்ரோ குடுக்கத்தான் இன்னிக்கு நான் இங்க கூட்டிட்டு வந்தேன். நம்ம எல்லாரும் இவ பக்கத்துல இருக்குற வரைக்கும் வெளி ஆளுங்க யாரும் இவள நெருங்கமுடியாது.”

 

யஷ்மித், “வெய்ட்.. வெய்ட்.. வெய்ட். உன்னோட ப்ளாஷ் பேக்ல ஏதோ மிஸ் ஆகுதே… சட்டப்படி உன்னத்தான மனிஷ் ஆளுங்க இப்ப மறுபடியும் கொல்ல ட்ரை பண்ணணும். எதுக்கு இவள கொலை பண்ண விரட்டுறாங்க? “

 

ஆரவ் யஷ்மித்தை முறைத்தபடி, “நீயே இத மனிஷ்கிட்ட ஜெயிலுக்கு போய் கேட்டுட்டு வாயேன்”

 

டீம் மேட்ஸோ, “அது அவங்க பிரச்சன மச்சி, இப்ப நம்ம இங்க நடந்தத பத்தி பேசுவோமா. அந்த பொண்ண நீ அடிக்க விரட்டி இருக்க இல்ல?” இதுநாள் வரை அவனால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் அனைவரும் ஒன்றினைந்து, அவனை அடிக்க கிடைத்த வாய்ப்பை தவர விடாமல் அவனை சுற்றி வளைக்க தொடங்கினர். ‘அடப்பாவிகளா இதுக்குனே இத்தன நாள் வெய்ட் பண்ணீங்களாடா. சிக்கினா துவம்சம் செஞ்சிடுவானுங்களோ… எப்டி தப்பிக்க?’ சட்டென்று ஒரு ஐடியா அவன் மூளையில் உதிக்க யஷ்மித் பாவமாக முகத்தை வைத்து கொண்டு, “என்ன அடிங்க நான் வேண்டாம்னு சொல்லல. ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயத்தை தெரிஞ்சுகிட்டே ஆகனும். ஏம்மா டோரா (அவன் பார்பியத்தான் பேரை மறந்துட்டு டோரான்றான்), லிப்ட்ல வஜ்ராவ அத்தன தடவ அண்ணா அண்ணான்னு சொண்ணியே. அதுக்கு அவன் ஒண்ணும் சொல்லலயா?”

 

பார்பி, “ம். சொன்னாரே.. நீ இனிமே எப்பவும் என்ன அண்ணாண்ணே கூப்பிடுன்னு”

 

அவளின் வார்த்தைகளால் மெல்லிய புன்சிரிப்பு ஒன்று வஜ்ரா முகத்தில் தோன்றி மறைய, இதுவரை காதால் கேட்டதையும் கண்ணால் கண்டதையும் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் திணறிப்போனது மற்றவர்கள் மட்டுமல்ல, வஜ்ராவை நன்கு புரிந்து வைத்திருக்கும் குருவும்தான்.

 

குரு, “வஜ்ரா நிஜம்மாவாடா?”

 

வஜ்ரா, “ம்… என் தங்கச்சி பேரு சோனாலி. எனக்கு எட்டு வயசு இருக்கும்போது அவ உடம்பு சரியில்லாம இறந்துட்டா. இந்த பொண்ண பாக்கும்போது அச்சு அசலா என் சோனாலி மாதிரியே இருக்கு குரு. இதுவரைக்கும் யாரோ ஒரு பொண்ணு என் தங்கச்சி மாதிரி இருக்குனு நெனச்சேன், ஆனா என் தங்கச்சியே எனக்கு மறுபடியும் கிடைச்சிருக்கான்னு இப்ப புரிஞ்சுகிட்டேன். இந்த நிமிஷத்தில இருந்து இவ எனக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் சோனாலிதான். இனிமே யாராவது இந்த பொண்ணுகிட்ட வம்பு பண்றத பாத்தேன் கொன்றுவேன்” என யஷ்மித் பக்கம் திரும்பி பார்க்க அங்கே அவன் இருந்தால் தானே. இந்த டாப்பிக்கை ஓப்பன் பண்ணிவிட்டு அனைவரும் அசந்த ஒரு நொடியில் ஆள் எஸ்கேப்.

 

“எங்க அவன் ஓடிட்டானா? அவனுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் சொல்றேன், இனி அவளுக்குனு அண்ணன் நான் இருக்கேன். ஆரவ், இன்னிக்கு மேச் முடிஞ்சதும் இவள என்கூடவே எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அவளோட பேமிலி கிடைச்சதும் எனக்கு இன்பார்ம் பண்ணு, அதுக்கப்புறம் நான் திருப்பி கூட்டிட்டு வர்ரேன்.”

 

ஆரவ் கோபத்தோடு அழுத்தம் நிறைந்த அடிகுரலில் பார்வையை கூராக்கி வஜ்ராவிடம், “என்ன வஜ்ரா உளறிகிட்டு இருக்க? என்ன கேக்காம நீயா உன் இஷ்டத்துக்கு அவளபத்தி முடிவு பண்ணிட்டு இருக்க”

 

“உன்கிட்ட நான் எதுக்கு கேக்கனும்?”

 

“என்கிட்டதான் நீ கேக்கனும், இவளுக்கு லீகல் கார்டியன் நான். என் பொறுப்புல இருக்குறவள ஒரு நிமிஷம் கூட வேற யாருகிட்டயும் விடுறதா எனக்கு ஐடியா இல்ல. இந்தமாதிரி அவளுக்கு பேரு வைக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு போய் உன்னோட வேலைய மட்டும் பாரு”

 

வஜ்ரா விருட்டென எழுந்து ஆரவ் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்து, “என்னடா யாருகிட்ட பேசிட்டு இருக்கன்னு மறந்திடுச்சா? நான் ஒண்ணும் உன்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு நிக்கல, நீ சொல்றத அப்டியே கேட்க. அவ என்னோட சோனு…”

 

ஆரவ் கண்கள் கோபமாக முறைக்க, இதழ்களோ கோபத்திற்கு பதிலாக வெற்றி புன்னகை சூடிகொண்டிருந்தது. காரணம் வஜ்ரா ஆரவ்வின் சட்டையை பற்றிய அடுத்த நொடி பார்பி துள்ளி எழுந்து ஆரவ்வின் ஒரு கையை பற்றியபடி அவன் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள்.

 

குரு, “டேய் வஜ்ரா என்ன பண்ற? முதல்ல அவன் சட்டைல இருந்து கைய எடு. ஏண்டா சீனியர்ஸ் நீங்க ரெண்டுபேரும் இப்டி சண்ட போட்டா பாக்குற சின்ன பசங்க எல்லாம் என்னடா நினைப்பாங்க? யாருக்கு எப்டி இஷ்டமோ அப்பிடியே கூப்பிட்டுட்டு போங்கடா… அத விட்டுட்டு இப்பிடியா சின்ன விஷயத்துக்கு போய் மல்லு கட்டிக்கிட்டு. பாரு அந்த பொண்ணு வேற பயந்திடுச்சு, ஆரவ் நீ அவள கவனி. பார்பி நீ பயப்படாம போய் கொஞ்சம் ஜூஸ்ஸ குடிம்மா.”

 

குரு அனைவரையும் அங்கிருந்து நகற்றினார். அவள் கண்களில் தெரிந்த பயம் வஜ்ராவை சற்றே இளக வைத்திருக்க குரு, “ஆரவ்தான் தெளிவா அந்த பொண்ணோட பிரச்சனைய சொல்றான்லடா, ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிற வஜ்ரா? என்று சாதாரண வார்த்தையையே உத்தரவாய் சொன்னார்.

 

“குரு… அவ என்னோட சோனு தான், எனக்கு அவ வேணும்.”

 

“அவளுக்கு ஆரவ்வ தவிர நம்ம எல்லாரும் புதுசுடா, எப்டியும் இனிமே நம்ம கூடதான இருக்க போறா. சின்ன பொண்ணு கொஞ்ச நாள் கழிச்சு சகஜமாயிடுவா. இதுக்கு போயா மூஞ்சிய இப்டி தூக்கி வச்சிருக்க.”

 

“எனக்கு கஷ்டமா இருக்கு அவ என்ன பாத்து பயப்படுறது…”

 

“நீ இப்டி கோபப்பட்டா எனக்கே பயம்மா இருக்கு. நீ கோபத்த குறைச்சுக்கோ, அவளே உன்ன தேடி தானா வருவா”

 

“அவளுக்காக நான் கோபத்த குறைக்க முயற்சி பண்றேன் குரு…”

 

எல்லாம் பழையபடி மாற அடுத்த அரைமணி நேரத்தில் மேச் ஆரம்பிப்பதற்கான வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்க தொடங்கியது. ஆரவ் பார்பியுடன் அருகில் இருந்த தன்னுடைய பைவ்ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றுவிட்டான். முதலில் பேட்டிங்கிற்காக களம் இறங்கிய இலங்கை அணி 237 ரன்கள் எடுக்க, அடுத்து இந்திய அணி களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக குருவும் ரிஷியும் அணிக்கு நல்ல துவக்கம் தர டீம் ஸ்கோர் 43 இருக்கையில் குரு அவுட். அதன் பின் யஷ்மித்தும் ரிஷியும் இணைந்து ஆட 107ல் ரிஷி அவுட். இதற்கு பிறகு வஜ்ரா வந்தான். வஜ்ராவும் யஷ்மித்தும் மதியத்திற்கு பிறகு இப்போதுதான் நேருக்கு நேராக சந்திக்கின்றனர். யஷ்மித் பயத்திற்கு வேலை வைக்காமல் வஜ்ரா அமைதியாக ஆட, ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. ரசிகர்கள் வஜ்ராவின் பெயரையும் யஷ்மித்தின் பெயரையும் சொல்லி கத்தியது, சற்று தொலைவில் ஸ்டேடியத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஆரவ், பார்பி, நிதிஷ் மூவருக்கும் கேட்டது.

 

ஆரவ் கார் ஸ்டேடியத்திற்குள் நுழைந்ததும் நிதிஷ்ஷிடம், “நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க, நான் ஒரு பைவ் மினிட்ஸ் கழிச்சு வர்ரேன்” என்றான்.

 

பார்பி, “ஏன்? நாம சேர்ந்தே போவோமே”

 

“வேண்டாம்டா, நீ முதல்ல உள்ள போய் மேச்ச பாரு, நான் கொஞ்ச நேரத்தில பின்னாடியே வந்திடுவேன்.”

 

அவளுக்கு அவனை எதிர்த்து பேச மனமின்றி, வழக்கம்போல தன் ஸ்கார்ப்பை கட்டிகொண்டு விஜபி பிரிவில் நிதிஷ்ஷுடன் சென்று அமர்ந்து கொண்டாள். காலையில் ஆட்களின்றி பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் கிரவுண்ட் ரொம்பவே வித்யாசமாக இருந்தது. திருவிழாவை போல கொண்டாட்டமும் கூச்சலுமாய் உற்சாகம் ததும்ப ஆயிரக்கணக்கான பேர் குழந்தை குட்டிகளுடன் அங்கே குழுமி இருந்தனர். ஆச்சரியத்தோடு ‘நிதிஷ் அண்ணா இங்க இத்தன பேர் இருப்பாங்கன்னு நான் எதிர்பாக்கல’ என்றாள்.

 

இதற்குள் யஷ்மித் சென்ட்சுரி அடித்துவிட, ‘பார்த்தாயா என் புஜபல பராக்கிரமத்தை’ என்பதைப்போல அவளை நோக்கி தன் இரு கைகளையும் உயர்த்தி காட்டினான்.

 

‘அடப்பாவி, நான் வந்தத இவன் எப்டி பார்த்தான்?’

 

சில நிமிடங்களுக்கு பிறகு ஆரவ் ஒரு ஸ்பெஷல் என்ட்ரன்ஸ் வழியாக உள்ளே நுழைந்தான். கமென்ட்டர்ஸ் அவனை வரவேற்று வாழ்த்தி பேச, கேமராக்கள் அனைத்தும் அவனையே சுற்றி வர, மேலே தொங்கி கொண்டிருந்த பெரிய ஸ்கிரீனில் அவன் முகமே சில வினாடிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. அவனை கண்ட மகிழ்ச்சியில் ரசிகர் கூட்டத்தினரோ ஆர்வ மிகுதியில் “ஆரவ்… ஆரவ்” என்று கத்தி கூச்சலிட்டனர். அந்த சத்தம் அவள் வெளியில் இருந்தபோது கேட்டதை விட இப்போது நூறு மடங்கு அதிகமாக விண்ணை பிளக்கும் படியாக ஒலிக்க பார்பியின் முகம் பேயரைந்ததை போல் ஆனது. இதுவரை இருட்டிலும், மற்றவர்கள் கண்களுக்கு படாமல் முகமூடியுடனும் அவளோடு சுற்றி வந்தவன், இன்று முதன் முதலாக ரசிகர்கள் முன் பகிரங்கமாக பிரவேசிக்கவும் உருவான பிரம்மாண்ட புகழை கண்டதும், பார்பிக்கு ஒருபுறம் அவனை நினைத்து பெருமையும் மற்றோரு புறம் அவன் உயரத்திற்கு முன்னால் ஒரு சிறு புள்ளியாக தன்னை நினைத்து சிறுமையும் தோன்றியது.

Leave a Reply

%d bloggers like this: