Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 3

அத்தியாயம் – 3

“என்னது?” காதில் விழுந்தது உண்மையா பொய்யா என்று நம்ப முடியாமல் திகைத்தவளிடம் திரும்பவும் அதே கேள்வியை வேறு வார்த்தைகளால் கேட்டான்.

“உன் ஷிப்ட் எப்ப முடியுது. நீ எந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போனா சந்தோஷப்படுவ”

அவ்வப்போது பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல வரும்போதெல்லாம் அவளைப் பார்ப்பான். அவன் மட்டுமல்ல ஆண்கள் நிறைய பேர் செய்வதுதான். அதையெல்லாம் நினைத்து தயங்கினால் வாழ்க்கையில் அப்படியே தேங்கி விட வேண்டியதுதான். இவன் என்னடாவென்றால் பேசாமல் இருந்தது கண்டு அத்துமீறிப் போகிறான். இத்துடன் இதை நிறுத்தாவிட்டால் இன்னும் அதிகம் போகும்.

இவனையும் வாய் மூடச் செய்ய வேண்டும் அதே சமயம் சாப்பிடும் மற்றவர்களின் கவனமும் இங்கு திரும்பக் கூடாது. சுவாசத்தை நிதானப் படுத்திக் கொண்டு, அவனிடம் இந்தப் பேச்சை நிறுத்திவைக்கும் உத்வேகத்துடன் சொன்னாள்

“இங்க பாருங்க மிஸ்டர்… நான் இருபத்திநாலு மணி நேரமும் இங்கதான் வேலை பாக்குறேன். சாப்பாடு, தூக்கம் எல்லாம் இதே இடத்தில்தான். அப்படியே எங்காவது போனா கூட உன்னை மாதிரி முன் பின் தெரியாதவங்க கூடப் போற உத்தேசமில்லை

வேறு உணவு வேணும்னா மட்டும் சொல்லுங்க”

அவளது வார்த்தைகள் அவன் முகத்திலிருந்த புன்சிரிப்பை சில வினாடிகள் கூட வாட வைக்கவில்லை. அவன் கண்கள் அவள் முகம் முழுவதும் அலைபாய்ந்த அந்த சில வினாடிகள் சில வருடங்களாய் கடந்தது.

“உணவு பிரமாதம். தாங்க்ஸ்” என்றபடி அவளது வார்த்தைகளின் தாக்கம் கூடத் தெரியாமல் சொல்லி முடித்தான். அதன்பின் அவள் கொண்டு வந்த காப்பியை எடுத்து அருந்தத் தொடங்கினான்.

சலித்தபடி சமையல் அறையில் நுழைந்தவளிடம் “இந்தக் கருமீன் கண்ணாளை அப்செட் செய்த அந்த ஹாண்ட்சம் யாரோ? அவன் யாரோ?”

“உதைபடப் போற மாயா” கத்தினாள்.

“பாருடி.. உன் ரோஜா நிறத்தோட பார்க்கும்போது அந்தாளு கொஞ்சம் கலர் கம்மிதான். ஆனால் என்ன ஹாண்ட்சம்… இத்தனை மாசமா உன்னைக் கண்ணாலே தின்னுட்டு இருந்தவன், என்ன ஒரு டீசென்ட்டா அப்ரோச் பண்றான். இதுக்கு மேல உன் காலைப் பிடிச்சுக் கெஞ்சணும்னு எதிர்பார்க்கிறியா?”

“அப்படிக் கெஞ்சினாலும் என்கிட்டே பாட்சா பலிக்காது”

எரிச்சலாய் “சரியான பைத்தியக்காரிடி நீ. உன்னோட சேர்ந்தா நானும் சாமியாராத்தான் போகணும். உனக்கு வேண்டாம்னா போ நான் போய் அவன்கிட்ட என்னோட ஷிப்ட் முடிஞ்சதை சொல்லிட்டு அதுபத்தி அவனோட ஒப்பினியனைக் கேட்டுட்டு வர்றேன்” என்றபடி அவனை நோக்கிச் சென்றாள்.

“போ.. போ… ஒரு லூசுக்கு இன்னொரு லூசுதான் லாயிக்கு. அந்த வகையில் நீங்க ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடியாவே இருப்பிங்க” என்றாள் கிண்டலாக.

காதலிப்பதும் காதலிக்கப் படுவதும் சுகம்தான். இவனும் அழகாகத்தான் இருக்கிறான். நேர் பார்வை பார்க்கிறான். அணியும் உடைகள் ஓரளவு வசதியானவாகவே காட்டுகிறது. ஆனால் அவள் விஷயத்தில் நடந்த முதல் கோணல் காதல் என்ற எண்ணமே அவள் மனதில் தோன்றிவிடாதபடி அணை போட்டு விடுகிறது.

போன மச்சான் திரும்பி வந்தான் கணக்காக போன சுருக்கில் திரும்பினாள் மாயா.

“என்ன வொர்க் அவுட் ஆனதா?”

“அவனுக்கு நீதான் வேணுமாம். சொல்லிட்டான்… இன்னொரு விஷயம் கிட்டக்க இன்னமும் அழகா இருக்கான். அவனைக் கலர் கம்மின்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன். கருப்பே அழகு, காந்தலே ருசி”

அவன் பெயரே தெரியாது நினைவுக்கு வர, “ஆமாம் அந்தக் கேசர்பாத் பேரென்னடி” என்றாள்.

“யாருக்குத் தெரியும்?” என்றாள் அலட்சியமாக.

“தெரியாமலேயே அவன் கூட பேசப் போறியே… “

“அதை விடு, நான் கிளம்புறேன் இன்னைக்கு என் காலேஜ் கிளாஸ்மேட்ஸ் கூட சினிமா போறேன். அதில் ஒருத்தன் என்னைப் ப்ரபோஸ் பண்ணிட்டு வருஷக்கணக்கா வைட் பண்றான். கேசர்பாத் அளவுக்கு ஸ்மார்ட் இல்லை. இருந்தாலும் அவனை விட்டா எனக்கு வேற வழியும் இல்லை. உன் சகோதரி வாழ்க்கை வெற்றி பெற வீரத் திலகமிட்டு அனுப்பு பார்க்கலாம்”

வெளியே பார்த்தாள். கேசர்பாத் மட்டும் காப்பியைப் பருகியவண்ணம் மொபைலில் விளையாடிக் கொண்டிருந்தான். சந்தானம் அங்கிளைக் கூடக் காணவில்லை. நேரமாகிவிட்டதால் அனைவரும் சென்றுவிட்டனர். இவளும் கேசர்பாத்தும் மட்டுமா… ஏதோ தொண்டையில் அடைத்துக் கொண்டதைப் போல கஷ்டமாய் இருந்தது.

“ஏய் கொஞ்ச நேரம் நில்லுடி”

“இப்ப போனாலே இன்டர்வல் வந்துடும். கேசர்பாத் பெரிய டம்ளர் காப்பி வேற வாங்கிருக்கான். அந்த காபி குடிச்சு முடிக்கிறதுக்குள்ள படம் முடிஞ்சுடும். என்னை விட்டுரு”

அதற்குள் மாயாவின்  நண்பன் வெளியே நின்று பொறுமை இல்லாது கார் ஹார்னை அலறவிட, மாயா இன்னொரு முறை டேபிளைப் பார்த்தாள்.

“இந்த கேசர்பாத் சாப்பிடுற தயிர் அளவின் படி பார்த்தால் சாத்வீகம் கேட்டகிரிலதான் வருவான். விரல் நகம் கூட உன் மேல படாம ஜாக்கிரதையா இருப்பான். நீ பயப்படுறதில் அர்த்தமே இல்லை. இருந்தாலும் சந்தானம் அங்கிள் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுறேன். பத்து நிமிஷத்தில் இங்க வந்துடுவார்” என்று தைரியம் கொடுத்தாள்.

அஞ்சலி எரிச்சலோடு டேபிளில் இல்லாத அழுக்கைத் துடைத்தாள். சமையலறையில் பாத்திரத்தை சத்தேமெழுப்பி வைத்தாள். ம்ஹ்ம்… அவன் எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை.

 

“கல்லூளிமங்கன்” வாய்க்குள் திட்டியபடியே மற்ற மின் விளக்குகளை நிறுத்த ஆரம்பித்தாள். உணவகம் மூடியாகிவிட்டது என்பதை உணர்த்தும் கடைசி ஆயுதம் அதுதான். அவனிருக்கும் இடத்தில் மட்டுமே ஒரு மின் விளக்கு ஒளிர்ந்தது.

 

அப்பாடா காபியைக் காலி செய்து கப்பை வைத்துவிட்டான். காப்பி கிளாஸைக்  கழுவப்  போட்டுவிடலாம் என எடுத்தாள்.

 

பேசிக் கொண்டிருந்த மொபைலை கை வைத்து மறைத்தபடி

“கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” காலி ஜக்கைக் காட்டிக் கேட்டான். அடப்பாவி… ஒரு முழு ஜக் தண்ணியையும் ஒத்தை ஆளா காலி பண்ணிருக்கான்.

 

இரண்டையும் எடுத்துக் கொண்டு சமயலறைக்குள் நுழைந்தாள். தண்ணீர் பிடிக்கும் முன்பு எதோ உள்ளுணர்வு தோன்றத் திரும்பிப் பார்த்தவள் அவன் சமையலறையின் வாசலில் நிற்பதைப் பார்த்து பதட்டத்தை மறைத்துக் கொண்டு

“மிஸ்டர் வெளிய போங்க நானே தண்ணியைக் கொண்டு வந்து தரேன்” கிட்டத்தட்ட சீறினாள்.

 

எங்கே சந்தானம் அங்கிள் இன்னமும் காணோம் பதட்டத்தோடு பார்த்தவள்  கண்களில் சமையலறைக்கு வெளியே அனைத்து விளக்குகளும் நிறுத்தப்பட்டிருந்ததைக் காட்ட… விளக்குகள் நிறுத்தப்பட்டதால் உணவகம் மூடி விட்டதாய் நினைத்து அங்கிள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றிருப்பார். ஒரு பயம் பரவி குப்பென உடல் முழுவதும் வியர்த்தது. அப்படியென்றால் எதோ திட்டத்தோடு தான் இதை நடத்தியிருக்கிறான். அனல் பறக்கும் பார்வையை அவன் மீது வீசினாள்.

 

ஆனால் அந்த சாத்வீகம் அவளது கோபத்தைப் பொருட்படுத்தாது அவளை நெருங்கியது. ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்ல, சமையலறை வழியே பின்கட்டுக்கு செல்லும்  கதவுகளை மூடிவிட்ட தனது சாமர்த்தியத்தை மெச்சியவாறு அவள் நின்றிருக்கையில் மின்னல் வெட்டும் நேரத்தில் சமையலறை விளக்கையும்  நிறுத்திவிட்டு அவளைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்திருந்தான். அவனைத் தள்ளி நிறுத்தும் அளவுக்கு பலம் இல்லாததை உணர்ந்து பின்னாலே சென்றவள் அதற்கு மேல் செல்ல முடியாது சுவரில் பல்லி போல ஒட்டிக் கொள்ள, அவளை நகர முடியாது பிடித்துக் கொண்டவனின் முகம் தெருவிளக்கில் ஒளிர்ந்தது.

 

“ஏய் என்னை விடுடா…” கத்தியவாறு திமிறினாள்.

 

ஒரு கையால் அவளை லாவகமாக அடக்கியவன் மறு கையால் அவளது வாயை மூடினான்.

“முதல் விஷயம் நான் டா இல்லை. என் பெயர் ஜெய்ஷங்கர். என்னை நீ ஜெய்ன்னு கூப்பிட்டா தப்பில்லை. ரெண்டாவது நீ என்னைப் பாத்து பயப்படுற அளவுக்கு இங்க பெரிய சம்பவத்தை நிகழ்த்தும் உத்தேசம் இல்லை. மூணாவது இது வரைக்கும் எனக்குத் தெரிஞ்சத்திலேயே மிக மிக அழகான பெண் நீதான்…”

 

வெளியே ஏதோ  வாகனத்தின் ஓசை கேட்க, அதில் கவனம் சிதறப்பெற்று அவன் கைகளை சற்று தளர்த்தினான். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க முயன்றதும் அதை உணர்ந்தாற்போல முன்னிலும் பலத்தோடு அவனது கரங்கள் அவளை சிறைபிடித்தன. ஒரு கையை வாயை மூடினான்.

 

“இந்த ஒழுங்கீனத்துக்கு தண்டனை தரணுமே” என்ற அவன் முகம் அவளை நெருங்கியது. அந்த அழுத்தமான முகமும் முரட்டு இதழ்களும் மென்மையாய் அவளது நெற்றியில் பதிய விக்கித்து நின்றாள் அஞ்சலி. அவளது முகத்தை வருடியபடியே வந்த இதழ்கள் சேர நினைக்குமிடம் செல்ல உதவியாக அவளது இதழ்களை மூடியிருந்த அவன் கரங்கள் விலகின.

 

“நோ… வேண்டாம் என்னை விட்டுடு ” பலவீனமாய் ஒலித்தது அவளது குரல்.

கடைசி நிமிடத்தில் விலகினான் “சரி விட்டுட்டேன்”

 

அவளது ரோஜா இதழ்களை பார்த்தவன் “எங்கிட்ட கிஸ் வாங்கத்  தயாரானவுடனே  சொல்லு” என்றான்.

 

அவ்வளவு நேரம் முகத்தை மூடியிருந்தது கிறுகிறுவென தலை சுற்றியது.

அவனது வேகத்தை வெறுத்த மனம் அவனது தன்னம்பிக்கையான அணுகுமுறையை விரும்பியதைக் கண்டு திகைத்தாள். மனதின் குழப்பமும், உடலின் அயர்ச்சியும் ஒன்று சேர்ந்து தாக்க நின்ற இடத்திலேயே மயங்கி அப்படியே மடிந்து தரையில் விழுந்தாள்.

12 Comments »

  1. Hi Tamil,
    Please update the site…. It is very difficult to navigate….

    For example, if I need to read your other story “Un Idhayam pesugiraen” how to navigate???

    Thanks

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: