Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 28

பாகம் – 28

வ்வொரு மனிதருக்கும் அவர்களுடைய வாழ்க்கை முறை, வாழ்வின் குறிக்கோள் எல்லாம் அவர்களின் தனிப்பட்ட தேவைகளை பொறுத்து வேறுபடும். ஆரவ் வாழ்க்கையில் பணம், புகழ், ஏன் கிரிக்கெட்டை விட அவனுக்கு கிடைக்கும்  சிறிதளவு அன்பே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குருவினை பொறுத்தவரை தன் வாழ்க்கையை கிரிக்கெட்டிற்கே அர்ப்பணித்து வாழ்பவர். குடும்பம், குழந்தைகள், நட்பு எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சத்தில். மற்ற வீரர்கள் எல்லாம் வேறு துறையில் சைடு பிஸினஸ் ஒன்றை கையில் வைத்திருக்க, குருவோ டெல்லியில் கிரிக்கெட் அகேடமியை நடத்தி வருகிறார். அவருக்கு ஆரவ்வின் மேல் தனி அன்பு இருந்தாலும் அதை இதுவரையில் சொல்லி காட்டியதே இல்லை. ஆனால் தன் செயலின் மூலம் பல முறை அவனுக்கு உணர்த்தி இருக்கிறார், ஆரவ்வை கேப்டன் பொறுப்பிற்கு சிபாரிசு செய்ததே குரு தான். ஆரம்ப காலத்தில் அவன் பிரச்சினைகளால் தடுமாறிய தருணங்களில் தேடி போய் சரியான வழியை காட்டிவிட்டு, அதன் பின் அதற்கு சம்பந்தமில்லாத ஆளைப்போல் அவனை முடிவெடுக்க விட்டுவிட்டு நகர்ந்து வந்துவிடுவார். இப்போது கூட டீம் மெம்பர்ஸ் அனைவரும் லஞ்ச் வந்ததும் அதை தேடி ஓடிவிட, அவரோ இத்தனை வயதிற்கு பின்னும் பிராக்டீஸ் தான் முக்கியம் என்று காலில் பேடை கட்டி கொண்டிருக்கிறார்.

 

ஆரவ், “குரு எப்டி இருக்கீங்க?”

 

“வாடா… நான் நல்லா இருக்கேன். உனக்கு ஒண்ணும் இல்லையே? திரும்பி வந்ததுல இருந்து எனக்கு ஒரு போன் கூட பண்ணல நீ. போன் நம்பர் வேற மாத்திட்ட, இல்லனா நானே உன்ன கூப்பிட்டு பேசி இருப்பேன்.”

 

“இல்ல ஜி… கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன், இனிமே அடிக்கடி போன் பண்றேன்.”

 

“அடிக்கடி போன் பண்ணி என்னை என்ன லவ் பண்ண போறியா? டச்ல இருந்தாலே போதும். உனக்கு தான் உடம்புக்கு ஒண்ணும் இல்லைல, அப்புறம் என்னடா? உன் பேரு லிஸ்ட்ல இருக்குன்னு தெரிஞ்சும், வந்து மேட்சுக்கு ஜாய்ன் பண்ணாம ஊர சுத்திட்டு இருக்க? “

 

“அது.. வந்து… ஸ்ட்ரெய்ட்டா நெக்ஸ்ட் வீக் ஐபிஎல்க்கு வரலாம்னு வெய்ட் பண்ணேன்.”

 

“நீயே இப்டி சொன்னா மத்தவங்க எப்டிடா ஒழுங்கா இருப்பாங்க. சரி.. சரி.. கோச் கூட உன்ன பாக்கனும்னு சொல்லிட்டு இருந்தாரு, நீ அவரை போய் பாரு. ஏற்கனவே பசங்க கொஞ்ச பேரு டைனிங் ரூம்க்கு போயிட்டானுங்கனு நினைக்கிறேன். நீ இனிமே வெளியில சுத்தும்போது கொஞ்சம் பாத்து இருந்துக்கோ”

 

“ஓகே ஜி” என்ற ஆரவ் அடுத்து கோச்சை தேடி சென்றான். அவரும் சில நிமிடங்கள் நலம் விசாரித்து விட்டு நகர்ந்து விட, திரும்பி வரும் வழியில் ரிஷிக்கு பார்பியை பற்றி முழுவதும் சொல்லி முடித்துவிட்டான்.

 

ரிஷி, “அதான் அவ பழச மறந்திட்டாள்ல, அப்புறம் எதுக்குடா கார்டியன்னு சொன்ன? ‘வீ ஆர் லவ்வர்ஸ் வா சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்’னு சொல்லி தொலைக்க வேண்டியதுதான…”

 

“ஏன்டா என் மேல அவளுக்கு லவ் வரவே வராதுன்னு நினைக்கிறியா?”

 

“அப்டி இல்ல ஆரவ், ஈசியா முடிய வேண்டியத நீ தேவை இல்லாம தலைய சுத்தி மூக்க தொடுற மாதிரி இருக்கு.”

 

“அவளுக்கு அவ பேமிலினா உயிருடா. அவங்கள பிரிய முடியாமதான் அந்த பாரின் கல்யாணமே வேண்டாம்னு நினைச்சா. நாளைக்கே அவளுக்கு பழைய நியாபகம் வந்தா, ‘என்ன ஏமாத்தி ஏன் கல்யாணம் செஞ்ச? ஏன் நம்ம கல்யாணத்த கூட என் குடும்பத்து ஆளுங்க யாரும் பாக்க முடியாம இவ்ளோ அவசரமா நடத்திட்ட?’ன்னு கேட்டா நான் என்ன சொல்ல?”

 

“நீ முடிவெடுத்துட்ட, இனிமே நான் சொன்னா கேக்க மாட்ட, அட்லீஸ்ட் சீக்கிரமா லவ் ப்ரபோஸ்ஸாவது பண்ணிரு.”

 

“ட்ரை பண்றேன்…”

 

பார்பி ஸ்கார்ப்பை மீண்டும் கட்டி கொண்டு அந்த சிறிய இடத்தையை நூறாவது முறையாக சுற்றி கொண்டிருந்தாள். நேரம் ஆக ஆக பார்பியின் பொறுமை கொஞ்ச கொஞ்சமாக குறைய தொடங்கியது. ஆரவ்விற்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக கழிய, தூரத்தில் இருவர் தன்னை நோக்கி வருவதை பார்த்தாள். “நம்ம டீம் ஜெர்ஸி தான் போட்டுட்டு வர்றாங்க. இவங்ககிட்ட ஆரவ் எப்போ வருவான்னு கேட்டு பாக்கலாமா” என்ற யோசனையும் தயக்கமுமாய் நின்றிருந்தாள்.

 

அங்கே வந்து கொண்டிருந்தது யஷ்மித்தும் பிரித்வியும். யஷ்மித், “வர வர இந்த பொண்ணுங்க தொல்லை தாங்க முடியலடா… நேத்து நைட் மட்டும் ஏழு பொண்ணுங்க கால் பண்ணிட்டாங்க. ஒருத்தி போன் பண்ணி ஐ லவ் யூ ன்னு அழுறா, இன்னொருத்தி என்னடான்னா இன்னிக்கு நைட் ப்ரீயான்னு கேக்குறா… சே..சே..சே.. ஒரு பையன் கொஞ்சம் அழகா இருந்தா இப்டியா? எத்தன பேர தான்டா நான் ஒருத்தனே சமாளிக்கிறது.”

 

பிரித்வி, “அடடடடா, டேய் பேச்ச கொறடா. எனக்கு காதுல ரத்தமே வருது, நீ யாரு எப்பேர்ப்பட்ட ஆளுன்னு எனக்கு தெரியாதாடா? பொம்மைக்கி பொடவை கட்டியிருந்தாலும் யோசிக்காம டேட்க்கு கூப்பிடுற உத்தமன்ல நீ…”

 

“உனக்கு பொறாமையா இருக்குல்ல… இன்னிக்கு கூட டேட்டிங் பத்தி பேசுறதுக்காக ஒருத்தி என்ன பாக்க வர்றதா சொல்லிருக்கா மச்சி. அவள வேணும்னா உனக்கு செட் பண்ணி விடவா”

 

பிரித்வி, “வேண்டாம் நீ மூடிட்டு இரு… டேய் யஷ்மித் அங்க பாரு ஒரு பொண்ணு நம்மளயே வச்ச கண்ணு வாங்காம பாக்குது.”

 

“தப்பா சொல்லாதடா நம்மள இல்ல, என்னை. அவ போன்ல பேசின பொண்ணாதான் இருக்கும். இப்ப போய் நான் எப்டி ரொமான்ஸ் பண்றேன்னு நீ தூரத்தில இருந்து வேடிக்க பாத்தே சாவு.”

 

“சிங்கிள்ஸ் சாபம் உன்னெல்லாம் சும்மா விடாதுடா”

 

யஷ்மித் விருவிருவென பார்பி அருகில் சென்று, “ஹாய் பேபி… எனக்காக ரொம்ப நேரமா வெய்ட் பண்றயா?” என்றான்.

 

பார்பி, ‘ஆரவ் என்ன பத்தி சொல்லி இவங்கள அனுப்பி இருப்பானோ?’ யோசனையோடு “ஆமா..” என்றாள்.

 

“அங்க பாரு அவனும் என்னோட பிரன்ட் தான், அவன வேணும்னா நீ ட்ரை பண்ணி பாக்குறியா?” அவள் ஒன்றும் புரியாமல் திருதிருவென முழிக்க “டேய்.. பிரித்வி இங்க வா. இவங்களுக்கு நீ ஓகே வாம்” என்றான்.

 

பிரித்வி அருகில் வந்து , “அவன் ஏதோ விளையாட்டுக்கு சொல்றான். ப்ளீஸ் நீங்க போங்க” என்றான்.

 

பார்பி குழப்பத்தின் உச்சியில் யஷ்மித்திடம், “நீங்க பேசுரது எதுவுமே எனக்கு புரியல”

 

“ஓகே.. ஓகே.. கூல். அவன உனக்கு பிடிக்கலனா விட்ரு பேபி. நாம ரெண்டு பெரும் நாளைக்கு டேட் பண்ணி பாக்கலாமா?”

 

“இல்ல உங்க ரெண்டு பேரையும் யாருன்னே எனக்கு தெரியல. என்ன சொல்ல வர்ரீங்கனும் புரியலங்க ஸாரி…”

 

“என்னது என்னோட பேரு தெரியாதா உனக்கு?”

 

“தெரியலங்க…”

 

பிரித்வி யஷ்மித்தை பார்த்து கேவலமாக சிரிக்க, அவனோ தன் சோதனையை சாதனையாக்க முயற்சித்தான்.

 

“ஸோ வாட்? இப்ப தெரிஞ்சுக்கோ பேபி… என்னோட பேரு யஷ்மித், எல்லாரும் என்னை செல்லமா சோட்டா குருன்னு சொல்வாங்க கேள்வி பட்டிருப்பீங்களே”

 

“இல்லங்க எனக்கு தெரியல…”

 

பிரித்வியின் சிரிப்பு எல்லை கடந்து போக, யஷ்மித், “சரி விடு… நம்ம குரு இருக்கார்ல, நான் அவரோட சிஷ்யன் மாதிரி”

 

பார்பி, “குரு யாரு”

 

யஷ்மித், “அடிங் கொக்காமக்கா… நானும் பாத்துகிட்டே இருக்கேன், எதச்சொன்னாலும் தெரியாது தெரியாதுன்னுட்டா இருக்க. இன்னிக்கி உன்ன சும்மா விட்டேன்னா என் பேரு யஷ்மித் இல்ல” என ஆர்ப்பரித்தான்.

 

திடீரென அவன் சத்தம் போட்டு ஆக்ரோஷமாக கத்தவும் அவள் பயத்தில் செய்வதறியாது திரும்பி ஓட தொடங்கினாள். அவனும் விரட்டிவர லிப்ட்டிற்கு அருகில் வந்தவள் அதற்குமேல் போக வழியின்றி அங்கேயே நிற்க, ‘தடத்தட’ என்ற சத்தத்தோடு லிப்ட் திறக்கவும் யோசிக்காமல் சரேலென உள்ளே தாவி விட்டாள். லிப்ட்டிற்குள் மப்டியில் வந்த ஆஞ்சநேயர் போல ஒருவனை கண்டதும் அவன் கையை பிடித்து கொண்டு, ‘என்ன காப்பாத்துங்கண்ணா… அவர் என்ன அடிக்க வர்றாரு. நான் எதுவுமே பண்ணல, ப்ளீஸ் காப்பாத்துங்கண்ணா’ என்றதும் லிப்ட் மீண்டும் மூடிக்கொண்டது, கூடவே பயத்தில் யஷ்மித்தின் வாயும் தான்.

 

பிரித்வி சண்டை ஆரம்பித்த இடத்தில் இன்னும் அடங்கா சிரிப்புடன் நின்று கொண்டிருக்க ஆரவ்வும் ரிஷியும் இப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தனர். ஆரவ் பார்பியை அங்கே காணாமல் பிரித்வியிடம், “இங்க இருந்த பொண்ண பார்த்தயாடா?” என்றான். அப்போது அங்கே ஓடி வந்த யஷ்மித் அதுவரை அங்கு நடந்ததெல்லாம் கூறியதும் ரிஷி, “அட கருமம் புடிச்சவனுங்களா… அந்த பொண்ணுக்கு அம்னீஷியாவாம். அவளுக்கு அவ பேரே தெரியாது, நீ அவகிட்ட போய் உம்பேர கேட்டியாக்கும்?” என்றான்.

 

பிரித்வி இப்போது சிரிப்பை அடக்க முடியாமல் தரையில் விழுந்து உருண்டு புரண்டு சிரித்து கொண்டிருந்தான்.

 

ஆரவ், “இப்ப எங்கடா அவ?”

 

யஷ்மித், “அவளா சிறுத்தைகிட்ட இருந்து தப்பிச்சு டைனோசர் கிட்ட போய் மாட்டிக்கிட்டா. அதுவும் வார்த்தைக்கு வார்த்தை அவன ‘அண்ணா’ன்னு வேற சொல்லிட்டா. சீக்கிரமா போய் ரெண்டு பேரையும் தேடுவோம் வாங்க.”

 

ஆரவ்வும் ரிஷியும் தலைதெறிக்க கீழ் தளத்தை நோக்கி ஓட, அவர்கள் பின்னாலேயே பிரித்வியும் யஷ்மித்தும் ஓடி வந்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: