Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 35

உனக்கென நான் 35

“நானும் ஒரு பொண்ண லவ் பன்றேங்க அவளை மறந்துட்டு உங்ககூட வாழமுடியாது” என்று சந்துரு கூறியதும் அன்பரசிக்கு உலகமே இருண்டது போலானது.

ஆனால் சந்துருவின் மனதில் ஓடி கொண்டிராந்தன அந்த இருகேள்விகள் மனதை ஆழ்துளையிடும் கருவியாய்.

ஒன்று- அட குறும்புகாரி நான் எப்பவும் லவ் பன்றது அன்பரசிய இல்ல. அன்பயசகங்குற உடம்புக்குள்ள ஒளிஞ்சுகிட்டு என்ன நடந்தாலும் சிரிச்சுகிட்டு எதபத்தியும் கவலைபடாம புதுசா பிறந்த மான்குட்டிமாதிரி துள்ளி கிட்டு திரியுற அந்த அரிசியதான். ஆமா நான் அரிசியதானே காதலிச்சேன் அன்பரசிய இல்லையே. அரிசிதான் என் வாழ்கைக்கு ஒரு பாதை போட்டுகுடுத்தா. அந்த வாயாடிய எனக்கு பிடிக்குமா இல்ல எப்பவும் சோகமா இருக்குற உன்ன எனக்கு பிடிக்ககுமா நீயே சொல்லு அன்பு அரிசி? என மனதில் ஓட வாய்வரை அது வந்தது நின்றது.

ஒரு நொடி நான் வேண்டும் துவங்காவதற்கு அதற்குள் இரண்டாவது கேள்வி வந்து நின்றது.

“ஐயோ அரிசிக்கு ஆசபட்டு அன்பரசிய கல்யாணம் பன்னா அவளோட வாழ்கை பாதிச்சிடுமே அதுவும் இல்லாம அவ இப்போ யாரையோ லவ் பன்றேன்னு சொன்னாளே?! என்று தன் மனதில் அனைபோட்டான்.

அதற்குள் அன்பரசிக்கோ தன்னவனின் தன்னவள் யார் என அறியும் ஆவளில் வார்த்தை வந்து விழுந்தது. “யாரு அவங்க உங்கள நல்லா பாத்துப்பாங்களா” என கேட்டாள்.

தன்மீது எப்பொழுதும் இவளுக்கு சிறிது பாசம் உள்ளது என நினைத்தவன் “இல்லைங்க அவள நான் பாத்து ரொம்ப நாள் ஆச்சு ஆனாலும் அவகூட இருந்த அந்த கொஞ்சநாளை நினைச்சே வாழ்ந்துடுவேன்” என அரிசியை கண்ணில் நிறுத்தி கூறினான்.

நினைவுகளில் வாழ்வது சுகம் என்று வெளியில் சொன்னாலும் அவ்வாறு வாழ்பவர்களுக்கே தெரியும் அதன் வலி. ராஜேஷ் ஜெனி விசயத்தில் நான்கு வருடங்களாக அந்த வலியை உணர்ந்தவள் அன்பரசி. அதனால் தன்னவன் மனதில் ஏற்படப்போகும் ரணங்களையும் தூக்கமில்லாத இரவுகளையும் அவளால் தாங்கிகொள்ள இயலவில்லை.

“ரொம்ப நாள் ஆச்சா?! ஃபோன் பன்னியாவது பேசுனீங்களா” என்றாள் அவளிடம் தன்னவனை சேர்க்கும் ஆவளில்.

‘நான் பேசிகிட்டுதான் இருக்கேன் அவதான் ஒழிஞ்சிகிட்டு வரமாட்டேங்குற’ என நினைத்தவன் “அவகிட்ட ஃபோன்லாம் இல்லைங்க” என்றான். (மனதில் இருக்கும் குறும்பு பெண்ணிடம் கைபேசி எப்படி இருக்கும்).

“அவங்க எங்க இருப்பாங்க?” என அவனை அவளுடன் சேர்த்துவிட்டு இரண்டாம் (முதல்) காதல் நினைவின் வலியை தன்னவனுக்கும் சேர்த்து சுமக்கலாம் என முடிவு செய்தாள்.

“அவ இந்த உலகத்தவிட்டு போயிட்டானு நினைக்குறேன்ங்க இனி அவழை பாக்க முடியாதுனு நினைக்குறேன். அவ நினைவு போதுங்க எனக்கு” என சந்துருவின் குரல் அழுகை கலந்து வருவது தெரிந்தது.

தன்னவன் அழுகிறான் என்பதை அன்பரசியால் உணரமுடிந்தது. அவள் மனமும் கலங்கியது.”என்னங்க ஆச்சு” என்றாள்.

“ஒன்னுமில்லைங்க சும்மா கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன்” என்றான்.

அவன் அருகில் இருந்து அவனது கண்ணீரை துடைக்க வேண்டும் என்று மனம் துடித்தது. அது காலத்திற்கும் வேண்டும் என உள்ளிருந்து அரிசி பலகாயங்களுடன் சோகமாக கூறினாள்.

“சரி என் கதையை விடுங்க நீங்க இப்போ யாரை லவ்பன்றீங்க?!” என்றான் சந்துரு. அன்பரசியை அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லவா அவன்.

சந்துருவின் காதலை பற்றி கேட்டவளுக்கு அவனிடம் கூற தைரியம் இல்லை ‘உன்னத்தான்டா’ என்று. “இல்லைங்க இது ஒன்சைட் லவ் அவர் என்ன லவ் பன்னல”

“ஏங்க உங்க லவ்வ ஏத்துகலையா?!”

“இல்லைங்க நான் லவ்வ சொல்லவே இல்லை. சொன்னாலும் ஏத்துகுற நிலையில அவரு இல்ல” என்றாள் மனதில் இருந்த டவுசர் அணிந்த சிறுவயது சந்துருவை நினைத்துகொண்டு.

“ஏங்க சொல்லல நான் வேணா உங்களுக்கு பதிலா பேசிபாக்குறேன்”

“இல்லைங்க அவர் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்காங்க”

“அப்போ காலம் முழுசா இப்புடிதான் இருக்க போறீங்களா?!” என்றான்.

‘உன்ன நினைச்சுகிட்டே என்னால வாழமுடியும் சந்துரு ஆனா நீ இந்த உலகத்துலயே இல்லாதவள நினைச்சு வாழகூடாது அது நரகத்த விட கொடுமையா இருக்கும். நான் அழாம தூங்குன நாள் நீ எங்க வீட்டுக்கு வந்த இந்த மூன்று நாள்தான். காதலர்கள் ஒருத்தர் ஒருத்தருக்காக காத்திருந்து நினைச்சுகிட்டிருந்தா சுகம்தான். ஆனால் ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் மட்டும் நினைச்சுகிட்டு வாழ்ந்தா’ என அன்பரசியின் கண்ணில் கண்ணீர் வடிந்தது. தன்னவனுக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது என நினைத்தாள்.

“அப்போ இந்த கல்யாணத்துல உங்களுக்கு..?!” என நிறுத்தினாள் அன்பரசி.

“இது எங்க அம்மாவோட விருப்பம்ங்க நீங்க பிறந்தப்போவே முடிவு பன்னி இருந்திருக்காங்க எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு. டேய் உனக்குனு ஒரு பொண்ணு காத்துகிட்டு இருக்கா அப்புடின்னு. ஆனா என்ன பன்றது இந்த காதல் வந்து எல்லாத்தையும் !!!” என அன்பரசியின் காதலை பற்றி கூறினான்.

அவளோ சந்துருவின் காதலாக அதை எடுத்து கொண்டாள். இரண்டு காதலும் ஒன்றுதான் என்பதை காதல் தேவன் மட்டுமே அறிவான்.

சந்துருவை விட்டுகொடுக்க மனம் விரும்பாத அரிசி காயத்துடன் இதயத்திலிருந்து வெளிவந்தாள். “ஏங்க நான் ஒன்னு சொல்லவா?!” என்றாள்.

“ம்ம் சொல்லுங்க”

“இல்ல இந்த கல்யாணம் நடக்கலைனாலும் சொன்னாலும் எங்க அப்பா எப்புடியும் வேற யாருக்காவது கல்யாணம் பன்னி வச்சுடுவாறு. அதான் நாம கல்யாணம் பன்னிகலாம். அப்புறம் நாம நினைவுகளோடையே வாழ்நதுக்கலாம்” என்றாள் ‘இந்த சட்டைய எங்க அம்மா பாக்குறதுக்கு முன்னாடி கழட்டி போட்டு வேற சட்டை மாட்டிகுவேன் எங்க அம்மா கண்டுபிடிக்காது’ என்று களவாணி தனமான அரிசி இன்றும்.

அரிசிதான் பாக்கமுடியாது சரி அம்மா ஆசைபடியும் உள்ளே இருக்குற அரிசி என்னைக்காவது தன் காதலை புரிஞ்சுக்குவாள் என்ற எண்ணத்துடன் அவளை தன் பக்கத்திலேயே வைத்துகொள்ள நினைத்து “சரிங்க நீங்க சொல்றதும் சரிதான்” என்றான்.

தன்னவனின் நினைவில் வாழ்வதைவிட அவனை பார்த்துக்கொண்டே இருந்து அவனுக்காக வாழ்ந்தாலே போதும் என உள்ளே இருந்த அரிசி தன் வாலினை சுருட்டிக்கொண்டு அமர்ந்தாள். அரிசியின் வேண்டுகோளை அன்பரசியும் ஏற்றாள்.

இரண்டு செடியிலும் அழாகான காதல் பூ பூத்திருந்தது. ஆனால் நடுவில் ஒரு மதில்சுவர் அதை மறைத்து கொண்டிருந்தது. அது தகறும்நாள் காதல் வண்ணத்துபூக்கள் வானில் சிறகை விரிக்கும்.

“ஹலோ ஹலோ” இது அந்த இருவருக்கும் இடையில் மூன்றாவது ஒரு குரல்.

“ஹலோ யாரு அது” என்றான் சந்துரு.

“ஹா ஹா என்னப்பா அதுக்குள்ள மறந்துட்ட” என்றது அந்த குரல்.

அது அந்த மிரட்டல் அழைப்புகாரன் என்பது புரிந்தது.

“டேய் உனக்கு என்னடா வேணும்” என அரிசி கூற நினைக்கும் முன் சந்துரு கூறியிருந்தான்.

“ஹே கூல்ப்பா! ஹாப்பி மேரிட் லைஃப் ஹா ஹா ஹா”

“டேய் நீ என் கையில மாட்டுற அன்னைக்கு இருக்குடா” என்றான். “இருக்குடா இல்லப்பா இருக்குடி! சரி அதை விடு உன் பொண்டாட்டிக்கு தெரியும்!” அன்பரசிக்கு எண்ணம் சுவேதாவை நோக்கி சென்றது “ஒரு முக்கியாமான விசயம் மறந்துட்டேன் பாத்தியா இப்போ கல்யாணம் ஆன அடுத்த நாளே உங்கள்ள ஒருத்தர கொண்ணுட்டா கிக் இருக்காதாம் அதான் ரொம்ப நேரம் யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க சந்தோஷமா இருங்க ஒரு வருசத்துல குழந்தை பொறந்ததா அன்பரசி செத்துடுவா அப்புடி பிறக்கலைனா நீ செத்துடுவ எப்புடி இந்த கேம் நல்லா இருக்குல ஹா ஹா ஹா”

“ஆமாம்பா இன்னொரு விசயம் இந்த ஜெனி அப்புறம் அவளோட பாட்டி அப்புறம் உன் தங்கச்சி யாரு அவ எழிலரசி! அந்த வரிசையில் அடுத்து சுவேதா பார்வதி அப்புறம் உங்க அப்பா சன்முகம் அன்ட் போஸ் கடைசியாக உங்க ரெண்டுபேத்துல யாருனு நீங்க முடிவு பன்னிக்கோ இது எனோட கேம் செஸ்பிளேயர்ஸ் ஹா ஹா ஹா” என சிரித்தாள்.

“ஓ கடைசியா யாருசாகனும்கிறது குழந்தை பிறக்குறத பொருத்து இருக்குள்ள சாரி மறந்துட்டேன். பொறந்தா அன்பு காலி இல்லைனா சந்துரு காலி டிக்டாக். அதுவறைக்கும் மத்தவங்க சாவ போனஸா என்ஜாய் பன்னுங்க டியர்ஸ்” என்றாள்.

“ஏய் எழிலரசிய நீதான் கொண்ணியா ஏன்டா கொண்ண ஏண்டி கொண்ண அடுத்து சுவேதாவா ஏய் அவ இன்னசென்ட்டி உனக்கு என் கையிலதான்டி சாவு” என கத்திகொண்டிராந்தான் ஆனால் அதை கேட்டுகொண்டிருப்பது அன்பரசி மட்டுமே கண்ணீருடன்.

“ஏங்க அழாதீங்க அவ ஏதோ சும்மா பயமுறுத்திட்டு போறா” என சந்துரு சமாதானம் செய்தாலும் நிலைமையின் தீவிரம் இப்போதுதான் அவனுக்கு விளங்கியது.

“இல்ல அவ உங்களையும் கொண்ணுடுவேன்னு சொல்றா” என அழுதாள்.

“அது சும்மா சொல்றா நீங்க அழாதீங்க”

“இல்லைங்க நான் செத்தாலும் பரவாயில்லை நீங்க ஏன் சாகனும்” என்றாள்.

‘நீ செத்தா மட்டும் என்னால தாங்கமுடியுமாடி லூசு மாதிரி பேசாதடி’ என மனதில் நினைத்தவன் “அப்புடி யெல்லாம் ஒனும் ஆகாதுங்க” குழந்தை பொறந்தாதான அன்பரசிய கொல்லுவ அதான் அதுக்கு வாய்பே இல்லையே என்று மனதில் அரிசியை காப்பாற்றிய மகிழ்ச்சி. சந்துருவின் உயிர் நீருக்கடியில் அவள் போட்ட பிச்சை அல்லவா அதை அவளுக்காக கொடுப்பதில் சுகமே.

“இங்க பாருங்க அவளை கண்டு பிடிச்சு நான் உங்க முன்னாடி நிறுத்துறேன் உங்க பாட்டிய கொண்ணதுக்கு என்ன தண்டனை குடுக்க முடியுமோ குடுத்துகோங்க” என ஃபோனை வைத்தான்.

ஃபோனை வெறித்து பார்த்தவள் மனதில் ‘சந்துரு உன்ன என்னால சாகவிடமுடியாது குழந்தை பொறக்கலைனாதானே கொல்லுவா நமக்கு பிறக்கும் சந்துரு. நீ அந்த குழந்தைய நான் செத்ததுக்கு அப்புறம் நல்லா பாத்துக்கோ’ என நினைத்தாள்.

இந்த காதல் பூ மதில் மறுமுனையில் உள்ள காதல பூவுக்காகா ஏங்கிகொண்டிருந்தது.

சந்துரு ஃபோனை எடுத்தான். “ஹலோ சுகு நான் சந்துரு டா”

“சொல்லு மச்சி சுவேதாவும் நீயும் ஒரே பிளைட்லதான் போனீங்களாம்”

“டேய் அதவிடு இப்போ நான் அன்பு கூட பேசும்போது ஒரு கிராஸ் கால் வந்துச்சு அவ அன்பரசியையும் என்னையும் கொண்ணுடுவேன்னு மிரட்டுறா”

“டேய் யாராவது கலாய்ப்பாங்கடா! நாம ஏற்கனவே கார்த்திக் கல்யானத்துல பன்னதுக்கு டேய் சுகு சந்துரு வந்தா கொண்ணுடுவேன் ட்ரீட் வேணும்னா கேட்டு தொலைங்காடான்னு அவன் நம்மள கலாய்ச்சது நியாபகம் இல்லையா உனக்கு”

“டேய் பேசுனவ எழிலரசியபத்தி சொன்னா!” என்றான். மறுமுனையில் சுகுவோ அதிர்ச்சியானான்.

“மஞ்சு உன்கிட்ட லேப்டாப் இருக்குள்ள கொஞ்சம் எடுத்துட்டு வா அப்புறம் நல்ல ஸ்பீடான நெட் எனக்கு வேணும்” என்று அங்கு பேச! சந்துருவோ ஃபோனை காதில் வைத்து காத்திருந்தான்.

“சந்துரு நான் பாத்துட்டு சொல்றேன் அந்த கல்பிரிட் யாரா இருந்தாலும் அவனுக்கு என் கையால் தான்டா சாவு” என்று கூறி ஃபோனை வைத்தான் சுகு.

அன்று நடந்த சம்பவம் அப்படி.

இரண்டு புது மெயில்கள் வந்திருக்கவே சந்துரு அதை திறந்து பார்த்தான். அவன் மனதில் எழிலை காணவில்லை என்ற கவலையில் சோர்வாக அமர்ந்திருந்தான். அவளை தேடி அழைத்த களைப்பும் தொற்றிகொண்டுருந்தது.

மெயில்களை திறக்க அதில் ஒரு லிங்க் இருந்தது‌ அதை அழுத்தியதும் சந்துருவின் கைபேசி சற்று திணறியது.

சிறிதுநேரத்தில் ஒரு வீடியோ ஓடியது. அதில் எழிலரசி தெரிந்தாள். அவள் பின்புறம் அடர்ந்த காடு அந்த இருட்டிலும் ஏதோ ஒரு கைபேசியின் வெளிச்சம் அவள்மீது பட்டுகொண்டிருந்தது.

அவள் எதிரில் நிற்பவனை பார்த்து பயந்திருந்தாள். “என்ன விட்டுடுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சிகொண்டிருந்தாள்.

“உன்ன விடுறதுக்காடி தூக்கிட்டு வந்தோம்” என்றது ஒரு குரல். பின்னால் இருந்த ஒரு குரல் “அக்கா இவ அழகா இருக்கா நான் ஒரு தடவை” என்று கெஞ்சியது. “அக்காகிட்ட கேக்குற கேள்வியாடா இது போ எடுத்துகோ ” என்றது அந்த குரல்.

அப்போது சுகு “டேய் கம்ப்ளைன்ட் குடுத்துட்டேன் சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவாங்க” என உள்ளே நுழைந்தான். சந்துரு சிலையாக அமர்ந்திருந்ததை பார்த்து “என்னடா பாக்குற?!” என வந்து அமர்ந்தான் அவனுக்கும் அதிர்ச்சியே.

அதற்குள் எழிலரசி ஓட முயன்றாள். ஆனால் இந்த மர்ம பெண்ணின் கையில் இருந்த ஓர் பழைய போர் வாள் அவளது கனுகால் நரம்பை வெட்ட கீழே விழுந்து வலியால் துடித்தாள்.

அதன்பின் இரண்டு கத்திகள் இயேசய்யாவை சிலுவையில் அறைந்தது போல கையில் குத்தினர்.

பின் கத்தியால் அவளது உடைகள் கலைக்கபடவே சந்துரு கைபேசியை கீழே போட்டான். அது கீழே விழுந்து இயங்கியது‌. “டேய் என்ன கொன்னுடுடா” என எழில் கதறுவதும் அந்த கொடூரன் “ஏய் நீ சாகதான்டி போற அதுக்கு முன்னாடி என்ன சந்தோஷ படுத்துடி” என்றான். சந்துரு ஃபோனை எடுத்து சுவற்றில் அடித்தான் அது சில்லுசில்லாக சிதறியது.

மறுநாள் போலிஸ் கண்டுபிடித்தது அவளது சடலத்தின் சில துண்டுகளை தான். இது புலிகள் உழவும் ஏரியா எனவும் புலி அடித்துதான் எழில் இறந்தாள் எனவும் அனைத்திலும் இடம்பெற்றது அதை நினைக்கும்போது சந்துருவிடம் கண்ணீரும்.

-தொடரும்.

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: