Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 34

உனக்கென நான் 34

அயல்நாட்டு நுழைவுசீட்டினான பாஸ்போர்ட் அவன் வைத்த இடத்தில் இல்லை. நிச்சயமாக தெரியும் அப்பாதான் அதை எடுத்துள்ளார்.

வேகமாக படியிலிருந்து கீழே இறங்கினான். சன்முகமோ ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் எதிரில் இருந்த மேஜையில் சந்துருவின் பாஸ்போர்ட் இருந்தது.

“அப்பா!” என்றான்.

சன்முகம் மெதுவாக நிமிர்ந்துபார்த்தார்.

“பாஸ்போர்ட்..!” என இழுத்தான்.

லேசாக நிமர்ந்து ஒரு ஏமாற்ற பார்வையுடன் சிரித்தவர் “எம்பா பூனை கண்ண மூடிருச்சுனா உலகமே இருண்டுருமாப்பா?!” என்றார் சன்முகம்.

“என்னப்பா சொல்றீங்க” என்றான் அமைதியான குரலில்.

“நீ ஏர்போர்ல உன் பிரண்ட்கிட்ட பேசுனத நான் கேட்டேன்ப்பா! ஏன் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமில்லையா?”

“அப்படி இல்லப்பா இன்னும் கொஞ்சநாள் கழிச்சு பன்னிக்கலாம்னு…”

“அன்பரசிய உனக்கு பிடிக்கலையா இல்ல கிராமத்து பொண்ணு உனக்கு லைஃப் பார்ட்னரா வர்ரது இஷ்ட் இல்லையா” என்றார் சந்துரு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

அவனது அமைதியை சம்மதம் என எடுத்தார் தான்கேட்ட கேள்விக்கு அந்த நொடி சன்முகத்தின் கண்ணில் விரிந்தது அந்த காட்சிகள்.

கைக்குழந்தையாக சந்துரு இருக்க பார்வதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார். போஸ் பதட்டத்துடன் வெளியில் அமர்ந்திருக்க இருவரும் போஸின் அருகில் சென்றனர்.

“டேய் எதுவும் பிரச்சனை இல்லையே?!” என்றார் சன்முகம். “இல்லடா எந்த பிரட்சனையும் இல்ல சுகபிரசவம்தான் அதான் அவ கஷ்டபடுறத என்னால தாங்க முடியலடா அதான் மனசு ஒரு மாதிரி இருக்கு” என்று இரும்பு மனிதனின் இதயத்தில் இருந்த ஈரம் வெளிப்பட்டது. காவேரி போஸை பார்த்து “பயப்படாதீங்க அன்னே அன்னிக்கு எதுவும் ஆகாது” என ஆறுதல் கூறவே கையிலிருந்த சந்துருவும் போஸை ஏக்கமாக பார்த்தான். அவனது பார்வை போஸின் மனதில் சிறிது நம்பிக்கை அளித்தது.

சிறிதுநேரத்தில் பார்வதியின் குரல் கேட்கவே போஸின் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. அதை பார்க்க முடியாமல் சன்முகம் வேதனைப்பட்டார். காவேரியோ இருவருக்கும் ஆறுதல் சொல்லமுடியாம்ல முகத்தை சுருக்கிகொண்டு இருந்தாள்.

அன்பரசி குறும்புகாரிதான் பிறக்கும்போதே பார்வதியை படாதபாடு படுத்திவிட்டாள். பார்வதியின் அலறல் சத்ததுடன் புதிதாக ஒருகுரலும் கேட்க அன்பரசி உதித்த நாள் அன்று. அவளது அழுகையை கேட்டதும் சந்துருவும் கோரஸ் பாட ஆரம்பித்துவிட்டான்.

“குழந்தைய பட்டினாயா இருக்கான்போல காவேரி” என்றார் சன்முகம். உடனே காவேரி தனித்துசென்றாள். போஸும் சன்முகமும் அந்த பிரசவ அறையின் வெளியே நிற்க வந்தார் டாக்டர்.

“தம்பி மகாலட்சுமி பொறந்துருக்கா இரண்டுபேரும் நல்லாதான் இருக்காங்க என்ன பார்வதிதான் கொஞ்சம் கஷ்டபட்டுட்டா அதான் ரொம்ப களைப்பா இருக்கா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். குழந்தைய சிஸ்டர் எடுத்துட்டு போயிருக்காங்க இன்னும் ஒரு மணிநேரம் வெயிட்பன்னுங்களேன் ” என்றார் மருத்துவர் ஆம் அவர் போஸின் தூரத்து சொந்த சகோதரி அதனால்தான் உரிமையாய் சொல்லிவிட்டு சென்றார்.

சிறிதுநேரத்தில் காவேரி தன் மகனின் பசியை அமர்த்திவிட்டு வந்து சன்முகத்தின் தோளில் கை வைக்க “ஒரு மணிநேரம் வெயிட் பன்ன சொல்லிருக்காங்க காவேரி” என்றதும் அமைதியானாள்.

சிறிதுநேரத்தில் ஒருமணிநேரம் வந்தாலும் மூவருக்கும் அது ஒரு யுகம் அந்த யுகம் முடியவே கட்டவிழ்த்துவிட்ட குதிரைபோல மூவரும் உள்ளே நுழைந்தனர். பார்வதி போஸை பார்த்து சிரித்தார்.

“அன்னி அழாகா இருக்கா உங்களமாதிரியே” என காவேரி குழந்தையின்முன் மன்டியிட்டாள். அவளை தூக்க ஆசையாக இருந்தது ஆனாலும் மாரியம்மாள் பேசிய வார்த்தைகள் கண்ணுக்குள் வந்து நிற்கவே ஜாதியின் அடிப்படையில் விலகி மண்டியிட்டபடி அமர்ந்தாள்.

ஆனால் சந்துரு கைகளை நீட்டி அன்பரசியை தொட்டு பார்த்துவிட்டான். அவளோ தூங்கிக்கொண்டிருந்தாள்.

“உங்களமாதிரியே அன்புக்கே அரசியா இருப்பா அன்னி” என் காவேரி கூறினாள்.

பார்வதி காவேரியின் தயக்கத்தை உணர்ந்தாள். “அன்னி அப்போ அன்பரசினே வச்சிடலாம்” என பெயர்சூட்டபட்டது. “சரி உங்க மருமகளுக்கு பேர்வசசாமட்டும் போதுமா பேர் வச்சவங்க ஒரு முத்தம் கொடுங்க” என காவேரியின் ஏக்கத்தை விரட்டினாள். சன்முகமோ தன் மகனை வாங்கிகொண்டு “சும்மா தூக்கு இவளும் உன் குழந்தைதான்” என கூறவே போஸ் “தூக்குமா தங்கச்சி அண்ணன் குழந்தைய தூக்குறதுல உனக்கு என்ன தயக்கம்?” என அனைவரும் அனைகட்டவே கைகளை ஆவலாக கொண்டு சென்றாள்.

அப்பொழுது கதவு திடீரென திறக்கபடவே காவேரி விலகி நின்றாள். காவேரியை முறைத்து கொண்டே உள்ளே நுழைந்தார் மாரியம்மாள். அவரை பார்த்ததும் காவேரிக்கு பயம் தொற்றிகொள்ளவே விலகி நின்றாள்.

“ஏன்டா உன் நான் ஒருத்தி இருக்குறதே உனக்கு தெரியலைல அப்போ நான் செத்தா போயிட்டேன்” என பொரிந்து எடுத்தார்.

சன்முகம் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றார். அப்போது காவேரிக்கு பயத்தில் முகம் மாறியது எங்கே தன்னை மீண்டும் எதாவது சொல்லிவிடுவார்களோ என்று அதை காவேரியின் காதலன் உணர்ந்தார்.

“டேய் சரிடா நாங்க இன்னொரு நாள் வாரோம் மில்லுல ஒர்க் அப்புடியே இருக்குடா!” என்றார் தன் நண்பனின் காதில் சன்முகம்.

“டேய் இருடா என்ன அதுக்குள்ள கிளம்புற” என்றார் போஸ்.

“நீ வேனா போடா தங்கச்சி இங்க இருக்கட்டும்” என்றார் கோபமாக.

“அவளுக்குதான்டா வேலை இருக்கு சொன்னா புரிஞ்சுக்கோடா” என சன்முகம் ஏதேதோ பேச இறுதியில் அரை மனதுடன் அனுமதித்தார் போஸ். காவேரியோ அன்பரசியை தொடக்கூட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் கிளம்பினாள்.

போகும் வழியெல்லாம் அன்பரசியின் புராணம்தான் “ஏங்க அழகா இருக்கால அன்பரசி”

“ம்ம்”

“அன்னி என்ன சொன்னாங்கனு கவனிச்சீஙகளா!”

“என்ன சொன்னாங்க”

“என்னோட மருமகனு சொன்னாங்கல்ல?!” என சிரித்தாள் சன்முக்ததை பார்த்து.

“ஆமா அவ உனக்கு மருமகதானே கரெக்டாதான் சொல்லியிருக்காங்க”

“நம்ம பையனுக்கு தருவாங்களா அன்னி எவ்வளவு பாசமா இருக்ககாங்க நம்ம மேல அதுமாதிரி அன்பரசிய பாத்துகலாம்ங்க” என ஆசையாக கூறினாள்.

“அதுக்கு என்ன போஸாகிட்ட இப்போவே பேசிடுவோம் முடியாதுனு சொல்லிடுவானா அவன்”

இப்போது காவேரியின் முகத்தில் கவலை குடிகொண்டது. “ஏங்க நான் அந்த ஜாதில இல்லாம இருந்திருந்தா அன்பரசிய தொட்டுருக்கலாம்ல?!” என்று கண்ணின் ஓரத்தில் கண்ணீர் இருந்தது.

“நம்ம பையனுக்கு அனபரசியதான் கல்யாணம் பன்னனும் அதுக்கு நான்தான் தடைன்னா நான் வேனா செத்துடட்டுமா?!” என்று அழுதாள்.

அந்த தருணம் சன்முகத்தின் மனத்திரையில் ஓடவே சந்துருவின் மௌனமும் அவரை வாட்டவே கண்ணில் நீர் வந்தும் அடக்கிகொண்டார்.

“சொல்லுடா அன்பரசிய உனக்கு பிடிக்கலையா?!” என்று குரலில் அழுத்தம் இல்லை.

“அதில்லப்பா..” என சந்துரு கூறும்முன்னே “இங்க பாரு இந்த வீட்டுக்கு அன்பரசி வரனும் அதுதான் எனக்கு முக்கியம் கல்யாணம் பன்னிட்டு அவளை இந்த வீட்டுக்கு அரசியாக்கிட்டு நீ எங்கவேணா போய்க்கோ எனக்கு பிரச்சனையில்லை” என காவேரியின் ஆசையை நிறைவேற்ற தீர்மானித்தார்.

“இல்லப்பா அன்புக்கு..” என சந்துரு கூறும் முன் காவேரியின் புகைப்படம் ஒன்றை எடுத்து அந்த பாஸ்போர்ட்டின் மீது வைத்து “அன்பு இங்க வந்து வாழனும் அதுதான் உங்க அம்மாவோட விருப்பம் அதுல உனக்கு மாற்று கருத்து இருந்தா உங்க அம்மாவோட போட்டோவ கிழிச்சு போட்டுட்டு பாஸ்போர்ட்ட எடுத்துட்டு போ” என்று தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

சந்துருவுக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை தன் அன்னையின் கண்களை பார்த்தான். அந்த சிரிப்பு இவனுக்கு அழுகையை வரவழைத்தது. அமைதியாக தன் அறைக்கு சென்றான். உள்ளே சென்று ஃபோனை எடுத்தவன் “டேய் நான் சந்துருடா”

“சொல்லுடா பாஸ்போர்ட் நம்பர் சீக்கிரம் சொல்லு”

“இல்லடா நான் அமெரிக்கா வரலைடா”

“ஏன்டா என்ன ஆச்சு”

“இல்லடா எங்க அம்மாகூடதான் எனக்கு வாழ குடுத்துவைக்கல எங்க அம்மாவுக்கு பிடிச்ச பொண்ணையே கல்யானம் பன்னிக்க போறேன்”

“ஹேய் என்னடா பேசற நீ அடுத்தவங்களுக்காக எப்புடி தான் வாழுறாங்களோ உங்க நாட்டுல” என்று ஃபோனை வைத்தான்.

தொடுதிரையை மனதில் இருந்த குழப்பத்துடன் தொட்டுபார்க்கும் போதுதான் கவனித்தான். அதில் அரிசி 8 missed call என இருந்தது.

“அன்பு போகலாமா?!” என்று போஸ் கேட்க மூவரும் பள்ளியில் தகவல் தெரிவிக்க ஆயத்தமாக கிளம்பினர்.

“போகலாம்பா!” சஞ்சீவை பார்க்கப்போகும் ஆவலில் அன்பரசி.

“கொஞ்சம் இருங்க இந்த பின் குத்திட்டு வந்துடுறேன்” இது பார்வதி.

“கால்யண பொண்ணே வந்துட்டா இவ இன்னும் சீவிசிங்கரிச்சுட்டு இருக்கா ஏன்டி நான் உன்ன பொண்ணு பாக்க வந்தமாதிரி நீ என்ன என்னை மாப்பிள்ளை பாக்கவா போற சீக்கிரம் வாடி” என காலில் சக்கரம் கட்டி நின்றார்.

சிறிதுநேரத்தில் மூவரும் ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்பினர். அங்கு சென்று தலைமை ஆசிரியரிடம் சென்றனர்.

“வணக்கம் அம்மா” என போஸ் முன்னாடி நின்றார். “ம்ம் போஸ் வாங்க என்ன விசேஷம்” என்றார் அப்போது பின்னாலயே தட்டில் சில பழங்களும் இனிபுபுகளும் வைத்துகொண்டு நின்றார் பார்வதி. பார்வதியின் பின்னால் ஒளிந்திருந்தாள் அன்பரசி.

“அன்புக்கு கல்யாணம் பிக்ஸ் பன்னிருக்கோம் நீங்க கன்டிப்பா வரனும்” என போஸ் கூறவே மனோரமாவோ “ஏய் புதுபொண்ணு இங்க வாங்க” என்றார்.

அன்பரசி வழக்கமான மரியாதையுடன் வந்து நிற்க “புதுபொண்ணாதும் வெட்கம் வந்துடும்மா” என பார்வதியை பார்த்தார். பார்வதியும் சிரித்துகொண்டே நின்றார்.

பின் தன் பையிலிருந்து விபூதியை எடுத்தவர் தனக்கு பிடித்ததெய்வமான மதுரை மீனாட்சி அம்மனை வணங்கிவிட்டு அன்பரசியின் நெற்றியில் வைத்துவிட்டு தன் பையிலிருந்து ஒரு புது பேனாவையும் ஒரு புத்தகத்தையும் கொடுத்தார். அதை அன்பரசி வாங்கிகொண்டாள்.

பார்வதி அந்த தட்டினை மனோரமா முன் வைக்க அங்கு நுழைந்தார் டீச்சர் இந்திரா. “என்ன அன்பு புது செயின் கலக்குறியே தங்கமா?!” என தடவி பார்த்தாள் சுவேதா கொடுத்த அந்த சங்கிலியை.

“அன்பு இப்போ கல்யாண பொன்னுமா” என மனோரமா கிண்டல் செய்ய “அப்புடியா காங்கராட்ஸ் அன்பு” என அன்பின் தோளில் செல்லமாக தட்டினாள் இந்திரா.

பின் “ட்ரீட் இருக்கா அன்பரசிமேடம்” என கூற “கல்யாணத்துக்கு வாங்க டீச்சர் விருந்தே வைக்குறோம்” என போஸ் சிரித்தார்.

“கன்டிப்பா வந்துடுறேன் சார் என் தங்கச்சி கல்யானம்ல நான் இல்லாம எப்புடி” என்றாள் இந்திரா. அனைவரும் சிரிக்க “மேம் நான் கிளாஸ்ல சொல்லிட்டு வந்துடுறேன்” என மெதுவாக வாய் திறந்தாள் அன்பரசி அப்போதானே சஞ்சீவை பார்க்க முடியும்.

“ஆமா மேடம் நானும் போயிட்டு வந்துடுறேன்” என இந்திராவும் அன்பும் அந்த வகுப்பை நோக்கி படையெடுத்தனர்.

அங்கே காலையிலிருந்து வராத தங்கள் அன்பு தேவதை வந்ததும் அனைவரும் கூச்சலிட்டனர்.

“ஏய் எருமைங்களா அமைதியா இருங்கடா ஏய் சஞ்சீவ் நீ உன் இடத்துல உட்காரவே மாட்டியா?! ஏய் ராஜேஷ் நீ ஏன் கீர்த்தி கூட பேசிக்கிட்டு இருக்க” என திட்டிதீர்த்தார் இந்திரா.

ஒரு வழியாக வகுப்பு அமைதியடைய “ஏய் எல்லாரும் கேட்டுகோங்க உங்க டீச்சருக்கு அடுத்தவாரம் கல்யாணம் இனி வரமாட்டாங்க” என கூற அனைவரின் முகத்திலும் இருந்த சிரிப்பு காணாமல் போனது.

“என்னடா அமைதி ஆகிட்டீங்க உங்க டீச்சருக்கு விஷ் பன்னுங்க டா” என்றாள் இந்திரா.

முகத்தில் சோகமாக “ஹாப்பி பர்த்டே டீச்சர்” என்றனர் கோரஷாக.

இந்திரா சிரித்துகொண்டே “இதுகளுக்கு இந்த ஹாப்பிபர்த்டே விட்டா எதுவுமே தெரியாது. ஏய் ஹாப்பி மேரிட் லைஃப்னு சொல்லுங்கடா” என்றார்.

முன்னர் இருந்த சத்தமும் குறைந்திருந்தது இந்தமுறை வாழ்த்தில்.

பின் சில அறிவுரைகளை கூறிவிட்டு “நான் போயிட்டு வாரேன் பசங்களா சமத்தா இருக்கனும் சரியா” என சோகமாக கிளம்பினாள் அன்பு.

அப்போது வெளியில் ஓடி வந்தான் சஞ்சீவ். “டீச்சர் இனி நீங்க வரமாட்டீங்களா?” என்றான் சோகமாக. அது என்ன விட்டு போறியா அன்பு என ஜெனி கேட்பதைபோல இருந்தது.

அவனது உயரத்திற்கு ஏற்ப மண்டியிட்டு அமர்ந்தாள். “ஆமா சஞ்சீவ்! நீ சமத்தா இருக்கனும் எப்பவும் போல பர்ஸ்ட் ரேங்க் எடுக்கனும் யாருகூடயும் சண்டைபோடாத சரியா” என்றாள்.

“சரிங்க டீச்சர் ” என அழுதான். அவனை கட்டி அனைத்துகொண்டாள்.

பின் அவன் சோகமாக “நான் கிளாஸ்க்கு போறேன் நீங்கதான் என்ன விட்டுட்டு போறீங்கள்ள” என திரும்பி சோகமாக நடக்கதுவங்கினான். அன்பரசியோ மண்டியிட்டபடியே என்ன செய்வது என்று தெரியாம்ல் அமர்ந்திருந்தாள்.

“ஏய் அன்பு சின்னபுள்ளையாட்டம் என்னடி இது” என இந்திரா தூங்கிவிட்டார்.

அந்த நேரம் போஸும் பார்வதியும் தலைமை ஆசிரியரிடம் விடைபெற்று வெளியே வந்தனர். “சரி அன்பு போகலாம் நாங்க வர்ரோம்மா” என இந்திராவிற்கு கூறினார்.

“சரிங்க அப்பா கல்யாணத்துல ட்ரீட்” என்றாள்

“கன்டிப்பாமா” என மூவரும் நடந்தனர்.

இறுதியாக வீட்டை அடைய அன்பரசியோ அனைவரையும் பிரியபோகும் ஏக்கத்துடனும் அந்த ரோட்டில் குலுங்கி குலுங்கி பயனித்ததாலும் சோர்வுடன் இருந்தாள்.

தன் அறையில் சென்று அமர அவளது கைபேசி ஒலித்தது. அது சந்துரு தான்.

“ஹலோ அன்பரசி?!” என்றது எதிர்முனை.

“ம்ம்” என்றாள்.

“நான் சந்துரு”

அன்பரசியின் மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. “சொல்லுங்க” என்றாள் மெதுவான குரலில்.

“இல்ல மிஸ்ட் கால் பன்னிருந்தீங்க?!” என்றான். “அன்பு; உன்னதான்; உனக்கு; மேடம்(நக்கலாக)” என்று கூப்பிட்டவன் இப்போது வாங்க போங்கன்னு கூப்பிடுவது அவளது இதயத்தில் உறுத்தியது.

“இல்ல நீங்க என்கிட்ட பேசனும்னு சொன்னீங்கல்ல அதான் ஃபோன் பன்னேன்” என்றாள்.

சந்துருவின் நினைவில் “ஏய் சந்துரு போச்சுடா நீ அம்மாகிட்ட அடிவாங்க போற” ;” உன் வயித்துல மரம் முளைக்கும் டா” என்று உரிமையோடு கிண்டல் செய்த அரிசியை தேடினான் அந்த குரலில்.

“நான் ஒன்னு கேட்கலாமா நீங்க தப்பா எடுத்துகலைனா?” என்றான்.

‘டேய் நான் உன் அம்மா மாதிரிடா என்கிட்ட என்னடா தயக்கம்’ என்று திட்டவேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் “ம்ம் சொல்லுங்க” என்று முடித்தாள்.

“நீங்க யாரையாவது காதல்..!” என தெரியாமல் கேட்டுவிட்டார் சந்துரு. ஆணாகளின் இயல்பான குணம் அது மனதில் எதையும் குழப்பாமல் கேட்டுவிடுவார்கள்.

எதிர்புறமோ அன்பரசியின் இதயம் பலமாக அடித்து கொண்டிருந்தது. செயற்கை கோள்களோ அவள் அடுத்துகூறபோகும் வார்த்தையை எண்ணி வானில் மிதந்துகொண்டிருந்தன.

“ஆமாங்க ரெண்டு பேர்” என்றாள்.

அனபரசியின் இந்த பதிலை சந்துருவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “என்ன?!” என்று மீண்டும் உறுதி செய்ய ஏதோ தொலைதொடர்பில் குறை இருப்பதை போல கேட்டான்.

“ஆமாங்க இரண்டுபேர லவ் பன்னேன்” என்றாள். சந்துரு அமைதியாக இருக்கவே “அமைதியாகிட்டீங்க அதுல ஒருத்தருக்க கல்யாணம் ஆகிடுச்சு” என ராஜேஷை கூறிவிட்டு. “இப்பையும் ஒருத்தர லவ் பன்றேன்” என கூறியவளின் மனதில் ‘டேய் அது நீதான்டா ஏன்டா மரமண்டை’ என உள்ளிருந்த அரிசி கத்திகொண்டிருந்தாள்.

“என்ன லவ் பன்றீங்களா அப்போ இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்றான் சந்துரு.

உள்ளே சந்துரு சந்துரு என்று கீச்சிட்டுகொண்டிருந்த அரிசியினை அறிவியல் ஆசிரியர் பிரம்பால் அடித்து அமைதியாக்கியதுபோல துவண்டு அமைதியானாள்.‌ அதிலும் சந்துரு அடுத்து கூறபோகும் வார்த்தை உள்ளே இருக்கும் அரிசியின் இதயத்தில் கத்தியை இறக்கபோகிறது என்று அறியாத மடந்தைபெண் இதயம் படபடக்க ஃபோனை காதில் வைத்திருந்தாள்.

“நானும் ஒரு பொண்ண லவ் பன்றேங்க அவள மறந்துட்டு உங்ககூட வாழமுடியாது”

-தொடரும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: