Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 33

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 33

உனக்கென நான் 33

வெளியே ஓடி வந்த சுவேதாவை பார்த்து “என்னடி இப்புடி வந்துருக்க இன்னைக்கு மெண்டல் ஆகிட்டியா?!”என கேட்டான் சந்துரு.

“ஏன்டா பிடிக்கலையா?!” இது சுவேதா ஏக்கமாக.

“அழகா இருக்கடி அதான் சொல்றேன் என்னாலையே நம்ப முடியலை” என்றான். அதற்கு காரணமும் இருந்தது. ஆம் சுவேதா முதல் முறையாக புடவை கட்டி தலையை வாரி ஜடை பின்னி பார்க்கவே மங்கலகரமாக இருந்தாள். ஹைடெக் பெண்ணின் இந்த திடீர் மாற்றம் சந்ததுருவை நிலைகுலைத்திருந்தது.

“நிஜாமா அழகா இருக்கேனா” முதல்முறை புடவை கட்டும் பெண்களின் மனதில் ஏற்படும் கேள்விதான். என்னதான் சுவேதாவின் குணம் அப்படி இருந்தாலும் அவளும் பெண் என்பதை அந்த கேள்வி எடுத்துக்காட்டியது சந்துருவுக்கு.

“சத்தியமா அழகா இருக்க; ஆமா ஏன் இந்த திடீர் மாற்றம்” என்றான். “அதான் அன்பரசிய பாத்தேன்ல அவங்கள மாதிரி இருக்கனும்னு எனக்கு ஆசை வந்திருச்சு அப்போதான உனக்கு பிடிக்கும்; அவங்க எவ்வளவு அழகா இருந்தாங்க புடவைல இன்னும் என் கண்ணுலயே இருக்காங்க; நீ ஏன் அவங்கள பத்தியே பேசிக்கிட்டு இருந்தேனு இப்போதான் எனக்கு புரியுது” என்று மெச்சினாள். பார்ப்பவர் கண்ணுக்குள் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடுவது அன்பரசியின் குணம்.

“ம்ஹும் அன்பு உன்னவிட சின்ன பொண்ணுதான் அவங்க இவங்கனு சொல்லி பெரிய மனுசி ஆக்கிடாத” என இருவரும் நடக்க துவங்கினர்.

“ஏய் நீயே நிறைய தடவை அவங்க இவங்கனுதான சொல்லிருக்க” என சந்துருவை நக்கலாக பார்த்தாள்.

அன்பரசிக்கு தாய் அந்தஸ்தை கொடுத்திருந்தவன் அப்படி பேசியிருந்தால் அதில் எந்த ஐயமும் இல்லை. “அப்புறம் இன்னொரு விசயம் நீ காலையில பார்த்தது அன்பரசிய மட்டும்தான். சின்ன வயசுல இருந்த அரிசிய நீ இன்னும் பாக்கலையே! பாத்திருந்தா இப்புடி பேசமாட்ட”

“அப்புடி என்ன பன்னாங்க” ஆர்வமானாள் சுவேதா.

“என்ன பன்னாங்களானு கேக்குறியா. சொல்றேன் இரு” என பெருமூச்சுவிட்டான்.

“சொல்லுடா” என சுவேதா கேட்க அந்த நாள் நினைவு படுத்தினான்.

அது அந்த கன்மாயை ஒட்டியுள்ள ஒரு புளியமரம் மூவரும் தொப்பென நனைத்திருந்தனர். சந்துருவுக்கோ குளிரில் நடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் ஏதோ கடப்பாறை நீச்சலில் இருந்து அடுத்த கட்டம் முன்னேறிவிட்டோம் என்ற ஓர் கர்வம். ஆனால் அவன் நீச்சல் அடித்தது இடுப்பளவு தண்ணீரில்தான்.

எப்படியும் பார்வதியிடம் அடி கண்டிப்பாக உண்டு என்ற அறிந்த தோழிகள் இருவரும் சந்துருவை கேடயமாக பயன்படுத்தி தப்பிக்கலாம் என்ற திட்டத்துடன் வீட்டை நோக்கி மூவரும் நடந்ததுகொண்டிருந்தனர்.

“ஏய் அரிசி இன்னைக்கு உங்க வீட்டுல உனக்கு முதுகுல தோசை சுட போறாங்கடி பெரியம்மா” என்றாள் மலை.

“ஆமாடி” என முகத்தை சோகமாக வைத்துகொண்டு “சந்துரு உனக்கு நீச்சல் சொல்லிதரதானே தண்ணியில குதிச்சேன். இப்போ அம்மா அடிப்பாங்க என்ன” என்றாள் சோகமாக.

“நான் அத்தைகிட்ட சொல்லிகிறேன் அரிசி நீ பயப்படாத” சந்துருவின் மொழி.

“அம்மா அடிச்சிச்சுனா அப்புறம் உன்கூட பேசமாட்டேன் பாத்துக்கோ” என்று நீண்டநாட்களாக செய்யும் தவறுக்கு இன்று ஒருநாள் மட்டும் சந்துரு வை வைத்து வாய்தா வாங்கிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள் அந்த குறும்பு பெண்.

“நான்தான் சொல்றேன்ல அரிசி” சந்துருவின் பேச்சிலேயே அவர்கள் நெருங்கியிருப்பது புரிந்தது.

திடீரென “ஏய் மலை அங்க பாருடி” என்றாள் அன்பு. “ஐய்யோ ஆமாடி நானும் ரொம்பநாளா கண்ணு வச்சுகிட்டுதான் இருக்கேன்” என் வானத்தை பார்த்தனர் இருவரும்.

ஆனால் இடையில் இருந்த புளியங்காய்தான் அவர்களின் குறிக்கோள். சற்று இல்லை இல்லை அதிக உயரத்தில் தான் இருந்தது.

“இருடி நான் பறிக்குறேன்” என மரத்தில் ஏறினாள் அரிசி. அப்போது அதிலிருந்த அரைகுறையாக வெட்டப்பட்ட ஒரு கிளை அரிசியின் சட்டையில் ஒரு கையை கிழித்துவிட்டது. அந்த மாநிற தோளிலும் சிறிது காயம்தான் அது சந்துருவுக்கும் வலித்தது.

ஆனால் கீழே இருந்த மலையின் குறிக்கோள் அந்த புளியங்காய் மட்டுமே “ஏறுடி சீக்கிரம்” என்று கத்தினாள். “ஸ்ஸ்ஸ் ஆஆ இருடி கையில கீறிவிட்டுருச்சு” என எச்சிலை தொட்டு அந்த கீறல் மீது தடவினாள். இதுவே சந்துருவுக்கு என்றால் ஒரு மினி ஹாஸ்பிட்டலே உருவாகியிருந்திருக்கும்.

உலகில் குரங்கிலிருந்து உருவான முதல் மனுசியின் பெயர் லூசியாம். அதில் எந்த ஐயமும் இல்லை ஆனால் முதலில் தோன்றிய குரங்கின் பெயர் அரிசி என்றுதான் இருந்திருக்கவேண்டும். ஆம் அவள் ஏறிசென்ற விதம் அப்படி. சிறிது நேரத்தில் இரண்டு பெரிய புளியங்காய் கீழே விழுந்தது. அதன் பின் அரிசியும் இறங்கினாள் இல்லை விழுந்தாள் குதிதாள் எதுவேனாலும் சொல்லலாம்.

மலைக்கு ஒரு முழு புளியங்காய் ஒதுக்கபடவே சந்துருவுக்கும் அரிசிக்கும் இடையில் ஒதுக்கீடு பணி முடிய சந்துருவுக்கு சிறிது ஒதுக்கப்பட்டது. ஆர்வமாக எடுத்து அப்படியே வாயில் போட்டு கடித்தான்.

அப்போது சந்துருவின் முகத்தை பார்கனுமே சுவேதாவிடம் கூறும்போது அதே முகபாவனையில் இருந்தான். “நான் இனிக்கும்னு நினைச்சு வாயில போட்டுட்டேன் அதுபுடி புளிச்சது சுவேதா” என அதே முகபாவனையை காட்ட சுவேதா சிரித்துகொண்டே “ஹா ஹா ஹா அப்புறம் என்ன ஆச்சு” என்றாள்.

“அப்புறம் என்ன பன்றது பாவம் கையல எனக்காக அடிபட்டு பறிச்சுட்டு வந்தா அதான் அப்புடியே முழுங்கிட்டேன்”

“ஏய் அரிசி இவன் முழுங்கிட்டான்டி விதையோட” என்றாள் மலை. சந்துரு புரியாமல் திருதிருவென முழித்தான்.

“போச்சு சந்துரு உன் வயித்துல மரம் வளந்துடும்” என அரிசி சந்துருவை பயமுறுத்தினாள். ஆம் சந்துரு அழுது விட்டான். அதன்பின் “பொண்ணுங்க சாப்பிட்டாதான்டி மரம் முளைக்கும் பசங்களுக்கு இல்ல” என அரிசி அவனை தேற்றி இன்னும் சிறிது புளியங்காய் கொடுத்தாள்.

பாவம் சந்துரு அதை சாப்பிடலாமா வேணாமா என குழப்பத்தில் கையிலேயே வைத்துக்கொண்டான்.

மூவரும் நடக்கதுவங்கினார். “அரிசி என்னடி ஒரு கைய காணோம்?!” என மலை அரிசியின் சட்டையை பார்த்து கிண்டல் செய்தாள்.

“அதான் மரம் கிழிச்சுவிட்டுருச்சுடி எல்லாம் உன்னாலதான்” என்றாள்.

“நீயெல்லாம் என்ன சுவேதா மார்டன் டிரஸ் போடுற அன்னைக்கு அரிசிய பாக்கனுமே ஒரு கை சட்டை நல்லா நினைச்சுகிட்டு சட்டையில் பையும் கிழிஞ்சு தொங்குச்சு அந்த முட்டிங்கால் வரைக்கும் பாவாடைய வேட்டிமாதிரி மடிச்சு கட்டியிருந்தா அப்போதான் நல்லா மரம் ஏற முடியுமாம்” என சந்துரு கூற கூற சுவேதா சிரித்துகொண்டே வந்தாள்.

“ரொம்ப குறும்பு பன்னுவாங்க போல” என்றாள்.

“இதுக்கேவா அடுத்து ஒன்னு நடந்துச்சு சுவேதா அதுதான் மெயின்” என்றான்.

சுவேதா மேலும் ஆர்வமானாள். “சொல்லுடா” என அவள்முகத்தில் சிரிப்பு இருந்தது.

சந்துருவும் ஆரம்பித்தான்.

மூவரும் நடந்து கொண்டிருக்க “ஏய் மலை அங்க பாருடி இன்னைக்கு இத ஒரு வழி பன்னிடனும்” என அரிசி வேகமாக ஓடினாள்.

“ஆமாடி நம்ம ஊரு கோயில் மாட்ட கடிச்சிடுச்சுடி இன்னைக்கு இத கொல்லனும்” என மலையும் ஓடவே சந்துரு குழப்பத்தில் இருந்தான்.

சிறிது நேரத்தில் ஒரு பாம்பு புற்று அதனுள் நுழைந்து தப்பிக்க எண்ணிய ஒரு பாம்பின் வால் அரிசியிடம் அகப்பட்டு கொண்டது.

“ஏய் மலை இழுடி ஓடிரபோகுது” என்ற பாம்பின் வாலை பிடித்துகொண்டு கத்தினாள். மலையும் அன்பரசியின் வயிற்றை பிடித்துகொண்டு பின்னால் இழுத்தாள்.

சந்துரு சிறிதுதூரம் தள்ளி நின்றான் (சிறிது தூரம் என்றால் நீங்களே யோசித்துகொள்ளுங்கள்)

பாவம் அந்த பாம்பு எவ்வளவு வலியை தாங்கும் அது பொருமை இழந்து புற்றின் வேறு வழியாக தலையை நீட்டியது. “ஏய் இங்க வந்துருச்சுடி” என வாலை விட்டுவிட்டு அதன் தலையை பிடித்து இழுத்தாள். பாம்பும் வெளியே வந்தது.

சரியாக அரிசியின் உயரம் இருந்தது அந்த நாகம். “ஏய் இது நல்லபாம்புடி கோயில் மாட்ட கடிச்சது விரியன் பாம்பாம் அந்த டாக்டர் சொன்னாங்க கேக்கலியா?” என்றாள் மலை.

“அடி லூசு எல்லா பாம்பும் ஒன்னுதான் இத விட்டா புதுசா வந்துருக்குற மாட்டையும் கடிச்சிடும்” என தொலைதூர சிந்தனையுடன் யோசித்தாள் அரிசி. அந்த பாம்போ “அடிபாவிகளா நான் உனக்கு என்னடி கெடுதல் பன்னேன்” என அரிசியை பார்த்துக்கொண்டிருக்க அதன் கழுத்தை பிடித்திருந்தாள்.

“ஏய் சந்துரு இங்க வா படம் காட்டுறேன் ” என பாம்பின் கழுத்தை காலால் மிதித்து கொண்டு அதன் தலையை கையால் விரித்தாள் அதில் பாம்பின் S வடிவ படம் இருந்தது. அவன் அதை கார்டூனில்தான் பார்த்திருக்கிறான்.

“சீக்கிரம் கொல்லுடி வீட்டுக்கு போகலாம்” இது மலை. ஆனால் சந்துரு அந்த பாம்பை பாவமாக பார்த்தான். காவேரியை போன்ற மனம் அவனுக்கு. அதை அரிசி இல்லை அன்பரசி உணர்ந்தாள் போலும்..

அருகில் இருந்த சிறிய கல்லை எடுத்து அதன் பற்களை உடைத்துவிட்டாள் “இனி எப்புடி கடிப்பேனு பாப்போம்” என அதனுடன் சாவால்வேறு போட்டுகொண்டாள். பின் காலை எடுக்க “என்ன விடுங்கடா சாமி” என அந்த பாம்பு சந்துருவை நோக்கி வரவே அவன் பயத்தில் தாவிகுதித்து அன்பரசியின் மேல் விழுந்துவிட்டான்‌. பாவம் பட்டகாலிலே படும் என்பதைப்போல கையில் கீறல் இருந்த இடத்தில் சிராய்ப்பும் சேர்ந்து கொண்டது. மீண்டும் எச்சில் வைத்திய்தான்.

சந்துரு சிரித்துகொண்டே “பாத்தியா சுவேதா இதுதான் அரிசி நல்லபாம்புக்கு பல்லு மூனு மாசத்துல முளைச்சிடும்னு தெரியாம கோயில் மாட்ட காப்பாத்திட்டேன்னு பெருமையா சுத்திகிட்டு திரிஞ்சா” என சந்துரு சிரிக்க.

“உன்னை ரொம்ப படுத்திருப்பாங்க போல” என சுவேதா சிரிக்க அந்த ஆட்டோ ஸ்டான்டை அடைந்தனர்.

“அண்ணே பீச்சுக்கு போகனும்” என்றான் சந்துரு. அந்த ஆட்டோக்காரர் சுவேதாவின் கழுத்தை பார்த்தார். தாலி இல்லை. எல்லாம் கலிகாலம்டா என சொல்லிக்கொண்டு ஆட்டோவை எடுத்தார். ஆட்டோ சிறிது நேரத்தில் கடற்கரையை அடைந்தது.

அப்போதுதான் காதல் ஜோடிகள் பீச்சை மெதுவாக நிரப்பி கொண்டிருந்தனர். சூரியனும் தன் தாக்கத்தை சிறிது குறைத்திருந்தான். அவனும் காதல் செய்பவன் தானே அதனால் காதலை புரிந்துகொண்டான்.

சந்துருவும் சுவேதாவும் சென்று கடற்கறையில் அமர்ந்தனர். சுற்றிலும் இருந்த ஜோடிகளின் பல செயல்கள். முத்தம் தலைகோதிவிடுதல்; செல்ல சண்டை; மடியில்தூங்குதல்; கண்களில் எதையோ தேடுதல் என இடமே காதலின் கற்றையைபரப்பிகொண்டிருந்தது.

சற்று தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு ஜோடி இதழில் தேனை பருக அதை பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். சுவேதா சந்துருவின் கண்ணை பார்த்து எதையோ தேடினாள். அவனும் அவ்வாறே இருந்தான். சுவேதா லேசாக புன்கைத்தாள். அவனது இதழ்களும் புன்னகைக்க “தம்பி பொண்ணுக்கு பூ வாங்கி குடுப்பா வெறும் தலையோடு இருக்கா” என அந்த பாட்டி நிற்க

சுவேதா சற்று மௌனமாக சிரித்தாள். சந்துருவும் பூவை வாங்கிகொண்டான். அவள் இதுவரை பூவே வைத்திருக்க வாய்ப்பில்லை ஹேர்ஸ்பிரே ஒன்லி. அதனால் சந்துருவே வைத்துவிட்டான் அந்த அழகான மல்லிகை பூவை.

“வேற எதாவது வேணுமாடி” என கேட்க அவனது கண்களை பார்த்தாள். “பஞ்சு மிட்டாய் வாங்கி குடுடா ஆசையா இருக்கு” என்றாள்.

சுற்றிலும் பார்த்தான். பஞ்சு மிட்டாய் தென்படவில்லை. “ஏய் கிடைக்குறதா கேளுடி ”

“அப்போ ஐஸ்கிரீம் வாங்கி குடு ” என்று மெனு சேஞ்ச் ஆனது.

அப்பாடா அருகிலேயே இருக்கிறதே என ஓடிசென்று வாங்கி வந்தான். “ஏய் உனக்கு வாங்கலையாடா” என்றாள்.

“இல்லடி நான் வேற ஐட்டம் வச்சுருக்கேன்” என மாங்காயையும் பொடியையும் வாங்கி வந்திருந்தான். எச்சில் ஊற “இத சாப்புடனும்னு ரொம்ப நாள் ஆசைடி ” என எடுத்து லேசாக கடித்தான்.

“ஏய் குடுடா எனக்கும் ஆசையா இருக்கு ” என அதையும் பறித்துகொண்டாள். கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே என சந்துரு பார்த்தான். ஆனாலும் சுவேதாவுக்காக என்ன வேணாலும் செய்யலாம்.

அவள் குழந்தைபோல ஐஸ்கிரீமை சாப்பிட வாயை சுற்றி அதன் சுவடுகள் இருக்க “லூசு ஒழுங்கா ஒரு ஐஸ் கூட திங்க தெரியல பாரு குழந்தையாட்டம்” என இதழ்களை துடைத்து விட்டான்.

அதன்பின் கையிலிருந்த மாங்காயை சாப்பிட்டதுவங்கினாள். “நல்லாதான் சாப்புடுற ஆனா உடம்பு ஒன்னும் ஏறலையே நல்லா ஒல்லிகுச்சியாட்டம்” என்றதும். “இப்போ நான் உடம்பு ஏத்தி என்னடா பன்னபோறேன்” என்றாள் சோகமாக.

“ஆமா உனக்கு புடவையெல்லாம் கட்டதெரியுமா” என்றான். “இல்லடா அம்மா கட்டிவிட்டாங்க”

“என்ன அம்மாவா?!” என அதிர்ச்சியடைந்தான்.

“ஹேய் நந்தினி அம்மா கட்டிவிட்டாங்க நியாயமா பாத்த அபி இதெல்லாம் எனக்கு சொல்லிகுடுத்துருக்கனும்” என தாயின் நினைவு வந்தது அவளுக்கு.

“சரிடி நீ விட்டா ஃபீல் பன்ன ஆரம்பிச்சுடுவ கிளம்பு போகலாம்” என்றான்.

“என்னடா கடல்ல விளையாடிட்டு போகலாமே” என்றாள்.

“ஏய் லூசு இப்போதான் ஐஸ் தின்னுருக்க அதுவும் இல்லாம மாங்காய் வேற இப்போ கடல்ல குளிக்குறேன்னு சொல்லுற உடம்புக்கு எதாவது ஆகிடும்டி” என்றான். தொப்பென்று நனைந்துகொண்டு புளியங்காய் சாப்பிட்டுவிட்டு பார்வதியை ஹாஸ்பிட்டல் கூட்டிசென்ற சுகமான தருனம் கண்ணில் வந்தது. அப்போதும் அரிசி அவனை கிண்டல் செய்துகொண்டுதான் இருந்தாள்.

அதுமாதிரி சுவேதாவுக்கு காய்ச்சல் வந்துவிடும் என பயந்தான். ஆனால் இவன் யோசித்து முடிப்பதற்குள் கடலில் இறுஙகியிருந்தாள்.

“ஏய் நில்லுடி சொன்னா கேளு” என இவனும் பின்னால் செல்லவே இவனையும் இழுத்து போட்டால் அலையெனும் மெத்தையில்.

இருவரும் விளையாடிகொண்டிருக்க ஒரு காவல் நண்பர் வந்து “ஏய் இங்க இறங்ககூடாதுனு சொல்லிருக்குள வெளிய வா” என கையில் குச்சியுடன் நின்றார்.

குச்சயால் அடிக்காத குறைதான் அனைவரையும் விரட்டிகொண்டிருந்தார். சந்துருவும் சுவேதாவும் மூச்சு வாங்க ஓடிவந்து ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

“சரி போலாம்டி” என்றான்

“ம்ம் சரடா” என கிளம்பினர்.

அப்போது கால் இல்லாத ஒரு பெண் சில பாசிகளால் செய்யப்பட்ட செயின்களை விற்றுகொண்டிருந்தாள்.
“பாப்பா நீங்க ஸ்கூலுக்கு போகலையா?!” என கேட்டான்.

“இல்லனனே என் பாட்டி தம்பி நான் மட்டும்தான் இருக்கோம் பாட்டிக்கு உடம்பு சரியில்லை தம்பி பள்ளிக்கூடத்துல மதியம் சாப்பாடு வாங்கி பாட்டிக்கு குடுத்துடுவான். நான் பத்து பாசியாவது வித்தாதாண்ண நைட்டு சோறு” என்றாள் அந்த காலில்லாத சிறுமி.

அவளை பார்த்தும் சுவேதாவின் கண்ணில் நீர் நிறைந்திருந்தது. சந்துருவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அன்னே அன்னிக்கு ஒன்னு வாங்கிகோங்கண்ணே ” என கெஞ்சினாள்.

“ஏய் நீ ஃபில் பன்னாத சுவேதா” என முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு “ஒன்னு எவ்வளவு பாப்பா” என்றான்.

“ஒன்னு பத்து ருபான்னே” என்றாள். தன் பையினை பார்த்தான். அதில் ஒரு ஐநூறு ரூபாயும் நூறு ரூபாயும் மட்டுமே இருந்தது.

“சரி இரண்டு குடு பாப்பா” என இரண்டு பாசிகளை வாங்கி ஒன்றை சுவேதாவின் கையில் கொடுத்துவிட்டு மற்றொன்றை அவளது கழுத்தில் மாட்டிவிட்டான். அது வெள்ளை நிறத்தில் அழகாக சிரித்தது சுவேதாவின் கழுத்தில். அந்த புடவையில் கிரீடம் வைத்தது போல அவ்வளவு அழகாக இருந்தது.

“அக்கா அழகா இருக்கீங்க ” என கண்ணாடியை எடுத்துகாட்டினாள் அந்த சிறுமி.சுவேதாவின் கண்களை அவளாலேயே நம்பமுடியவில்லை. வைரமும் தங்கமும் கால் தூசியென இருந்த சுவேதாவை இந்த பாசி முற்றிலும் மாற்றியிருந்தது. மொத்தமாக மாறியிருந்தாள்.

கண்ணில் கண்ணீருடன் அந்த சிறுமியின் நெற்றியில் முத்தமிட்டாள். “ரொம்ப தாங்கஸ்டா குட்டி.”

சந்துரு சுவேதாவை பார்த்து சிரித்துகொண்டே தன்னிடமிருந்த ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தான் .

“அண்ணே சில்லரை இல்லன்னே” என்றாள். “பாட்டியின் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போடா” என சந்துருவும் சுவேதாவும் அங்கிருந்து நகர்ந்தனர்.

“ஏய் பானிபூரி சாப்புடுறியாடி”

“அப்புடினா?!”

“வா வாங்கி தாரேன்” என்று அழைத்துச்செல்ல வடக்கிலிருந்து வந்த பையன் போல சூடான சூப்புகள் ஆவி பறக்க முன்னால் பல சிறிய அப்பல பொறிகளை வைத்துகொண்டு வித்தைகாட்டி கொண்டிருந்தான்.

ச்நதுருவை பார்த்ததும் “தோ பிளேட்?” என்றான். சந்துரு தலையாட்டவே அடுத்த நொடி இரண்டு மசால் பூரி வநுது சேர்ந்தது.

அதை ஒரு மாதிரி பார்த்தாள் சுவேதா. “என்னடி பாக்குற சாப்பிட்டு பாரு” என்றான். அவளும் அந்த பிளாஸ்டிக் ஸ்பூனில் ஒரு வாய் எடுத்து வைக்க சுவையில் மெய் மறந்தாள்‌.

எந்த அளவுக்கு என்றால் “சந்துரு இன்னொரு பிளேட் வாஙகுடா” என கெஞ்சினாள். அதை வாங்கிகொடுத்துவிட்டு சந்துரு நூறு ரூபாயை கொடுக்க மீதம் நாற்பது ரூபாய் இருந்தது.

தன் பையினை தடவிபார்த்தான். அந்த வங்கி அட்டை கடலால் நனைக்கபட்டிருந்தது. மீதம் உள்ளே சில்லறையாக ஒரு நாற்பது ரூபாய் கிடைத்தது.

‘ஆட்டோல போகனும்னா நூறு ரூபாய் ஆகுமே இவளை நடக்கவைக்ககூடாதே’ என மனம் தின்டாடியது. அந்த வேதனையை அவன் உணர்ந்தான். ஏழ்மை காதலர்கள் என்ன செய்வார்கள் என யோசித்தான்

அதற்குள் சுவேதா வரவே “போகலாமா” என சிரித்தான்.

“நீ இங்கேயே நில்லு” என அவளை நிற்க வைத்துவிட்டு ஆட்டோ ஸ்டான்டை நோக்கி நடந்தான். சிறிதுநேரம் வாக்குவாதம் நடந்தது. அவனது பிஸின்ஸ் விசயமாக கூட யாரிடமும் இந்த அளவுக்கு நேரம் பேசியது இல்லை. இறுதியாக ஒரு ஆட்டோவை வரவைத்து விட்டான். சுவேதா அதில் ஏறிகொண்டு சந்துருவின் தோளில் சாய்ந்துகொண்டு அந்த பாசியை கைகளால் தடவி ரசித்தாள் ஆட்டோவில் இருந்து முன் கண்ணாடி வழியாக.

சன்முகம் எழுந்திருக்கவே முனியம்மா கையில் காஃபியுடன் வந்தார். காஃபியை வாங்கியவர் “சந்துரு எழுந்துட்டானாமா?!” என்றார்.

“தம்பி அப்போவே எழுந்து வெளியே போயிடுச்சு அண்ணே”

சிறிது யோசிவர் “சரிம்மா நீ போ ” என கூறிவிட்டு காபியை கீழே வைத்தார். பின் மெதுவாக படியில் ஏறி சந்துருவின் அறைக்கு சென்றாள்.

அங்கு காவேரியின் புகைப்படம் பெரியதாக மாட்டப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது மனம் சற்று கனத்தது. “நீ இருந்திருந்தா அன்பரசி நமக்கு மறுமகளா வர்ரத நினைச்சு எவ்வளவு சந்தோஸ பட்டுருப்ப” என கண்கள் கலங்கினார்.

பின் சந்துருவின் கட்டிலில் அமர்தார். அதில் மேஜைவிளக்கின் பக்கத்தில் சிறுவயது அன்பரசியின் புகைப்படம் இருந்தது. “இன்னும் கொஞ்ச நாள்ல மாலையும் கழுத்துமா போட்டோ இங்க இருக்கபோகுது” என மனதில் நினைக்கும்போது அவருக்கு ஆனந்தும் பீறிட்டது.

சிறுதுநேம் சிந்தித்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்தார். எதிரில் சந்துரு நின்றிருந்தான்.

“அப்பா” என்றான்.

சனமுகம் அவனை பார்க்கவே “உன் அம்மா உன்ன தூங்கும்போது பாத்து ரசிச்சுகிட்டே இருப்பா அவ நியாபகம் வந்துச்சு அதான் நீ தூங்குறியானு பாக்க வந்தேன்” என கண்கள் கலங்க கூறினார். அவருக்கு சந்துரு தூங்கும்போது காவேரி அருகில் அமர்ந்திருப்பாள் என்ற ஆசை.

“இல்லப்பா எனக்கு தூக்கம் வரல அதான் வெளிய போயிட்டு வந்தேன்” எனும்போது சந்துருவின் கைபேசி கூப்பிட்டது.

“அப்பா நீங்க கீழ இருங்க நான் வந்துடுறேன்” என அவன் உள்ளே நுழைய சன்முகம் கீழே இறங்கிசென்றார்.

ஃபோனில் அமெரிக்க நண்பன்தான் “டேய் மூனுநாள்ள புராசஸ் பன்ன சொன்னியே உன் பாஸ்போர்ட் நம்பர் சொன்னியாடா நான் எவ்வளவு நேரம் உனக்கு ஃபோன் பன்றது” என திட்டினான்.

“இருடா சொல்றேன் என டிராயரை இழுத்தான்” அதில் அந்த புத்தகம் இல்லை. “நான் உனக்கு கால் பன்றேன் டா ” என வைத்தான் சந்துரு.

அடுத்த டிராயரையும் திறந்தான் ஏமாற்றமே கண்களை மூடிக்கொண்டு “அப்பா” என கூறினான்.

-தொடரும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ Full linkசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ Full link

அன்பு வாசகர்களே ! அத்தியாயம் அத்தியாயமாகப் போடலாம் என்றால் எனக்கு நேரம் கிடைத்தால் தானே… முழுகதையும் உண்டு . வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive” dir=”file/d/1gQysvhDszrRxlEWoNovbwghytJA4dpBx/preview” query=”” width=”640″ height=”480″ /]

சாவியின் ‘ஊரார்’ – 02சாவியின் ‘ஊரார்’ – 02

2 முறுக்கு மீசை வேதாசலம் வந்தான். அவன் இடது கையிலே ‘ப்ளாக்’ டயல் ‘ஸீக்கோ’ பளபளத்தது. ‘V’ போட்ட தங்க மோதிரம். ஸில்க் ஜிப்பா. சிகரெட் புகையை விழுங்கி மூக்காலும் வாயாலும் தேக்கமாக வெளியேற்றினான். சாமியாரை நெருங்கி வந்து “என்ன சாமி!

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1

வணக்கம் தோழமைகளே! ‘காதல் யுத்தம்’ என்ற புதினத்தின் மூலம் நமது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.கணபதி அவர்களை வரவேற்கிறோம்.  கதையின் கதாநாயகன் விஷ்ணுவை வெறித்தனமாக விரும்பும் கவிதா, ஆனால் தான் கனவில் மட்டுமே தோன்றிக் கண்ணாமூச்சி காட்டும் கனவுக்கன்னியைத் தூரிகையில் சிறைபிடித்துக்