Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 32

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 32

உனக்கென நான் 32

அன்பரசியின் கைபைசியிலிருந்து கற்றைகள் காற்றில் கடுகி சென்று சந்துருவின் வீட்டை அடைந்தன. அதன் எண்ணம் சந்துரு எங்கே என்று இருக்க சந்துருவின் அறையை தேடின. மிகவும் ஆர்வமுடன் சந்துருவின் கைபேசியை பார்க்க அவனோ வேறு யாருடனோ உரையாடி கொண்டிருந்தான். அதை கண்ட அலைகற்றைகள் வருத்தத்துடன் திரும்பி சென்று “நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார். தயவுசெய்து பின்னர் முயற்சிக்கவும்” என்ற தகவலை அன்பரசியின் காதில் சேர்த்தன. மீண்டும் முயற்சித்தாள் அன்பரசி அவளின் காதில் ஒலித்த பதிலில் எந்த மாற்றமும் இல்லை.

அடுத்தமுறை முயற்ச்சி செய்ய முயன்றாள் அதற்குள் “அன்பு இங்க வாம்மா” என்ற பார்வதியின் குரல். வேறு வீட்டிற்கு செல்லபோகிறாள் என்றதும் தனது வார்த்தைகளிலேயே பாசத்தை காட்டினாள் பார்வதி இந்த திடீர்மாற்றத்துடன்.

“என்னம்மா” என எழுந்து சென்றாள் அன்பரசி. வழக்கமான அறிவுரைகள்தான் “இங்க இருக்குற மாதிரி அங்க நடந்துக்க கூடாது பொண்ணுங்களுக்கு புகுந்தவீடுதான் பிராதனம் சரியா” என சமையலறையல் வாழ்கைகான பாடம் நடத்த துவங்கினார் பார்வதி. அன்பயசியும் கேட்டுகொண்டே தாய்க்கு உதவி செய்தாள். அவளது செய்கையை பார்த்த பார்வதிக்கு தன் மகளுக்கு கல்யாணகலை வந்துவிட்டது என மகிழ்ந்து கொண்டே மேலும் அறிவுரைகளை தொடர்ந்தாள்.

“அம்மா நான் ஸ்கூல்ல போய் சொல்லிட்டு வந்துடவா” என சஞ்சீவை பார்க்கும் ஆவலில் கூறினாள். “அப்பாகிட்ட கேளுமா” என்றாள் அன்பரசி. பார்வதியோ என்றுமே தந்தையிடம் உரிமையாக சண்டையிடும் அன்பரசி இன்று தன்னை தூதூக்கு அனுப்புகிறாளே என்ற எண்ணம். ஆம் அன்பரசியை இந்த நிச்ச்யம் மாற்றிதான்விட்டது.

அப்போது வந்த போஸ் “என்ன வழக்கம்போல ஆரம்பிச்சுட்டியா” என பார்வதியை பார்த்து கேட்டார். அதற்கு காரணம் இருந்தது. ஆம் ஊரில் இருந்து கல்யாணம் ஆகி செல்லும் பெண்களுக்கு அறிவுரை வழங்கி அறுக்கும் உறுப்பினரில் ஒருவராக இருந்தார் பார்வதி. தன் மகள் திருமணம் என்றால்சொல்லவா வேண்டும் அதனால்தான் தன் மகளை பார்வதி என்ற சிறையிலிருந்து மீட்க முயன்றார்.

“இல்லைங்க புகுந்த வீட்டுக்கு போகபோறால்ல அதான் எப்புடி நடந்துகனும்னு சொல்லிகிட்டு இருக்கேன்ங்க” என்று சமாளித்தார் பார்வதி.

“அவ போஸோட பொண்ணு டி அதெல்லாம் அவளுக்கே தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேணாம்” என தன் மனைவியின் கன்னத்தை கிள்ளினார்.

“இப்புடி சின்ன வயசுல நீங்க செல்லம் குடுத்ததுதான் ஊரையே மேய்ச்சுட்டு வந்தா அப்புறம் காலேஜ்ல..!” என பார்வதி கூறும்போதே இவள் அன்பின் காதலை பற்றி கூறுவாள் என்பது நன்றாக தெரிந்ததால் போஸ் கண்ணாலையே “சும்மா இருடி” என்பது போல உருட்டினார் போஸ்.

“அதாங்க காலேஜ்லயும் வாலுதனம் பன்னி கிட்டு இருந்தா” என முடித்தார் பார்வதி.

“அதெல்லாம் சந்துருவோட பிரட்சனைடி அவன் பாத்துப்பான். அன்பரசிய நாம சமாளிக்க முடியாதுனு தானே அவன் தலையில் கட்டிவைக்குறோம். இனி சந்துருவாச்சு இல்ல சன்முகமாச்சு நமக்கு என்ன. என்னம்மா அன்பு நான் சொல்றது சரிதான?” என்ற தன் மகளிடம் கேட்டார்.

அன்பரசியின் மனதில் ‘இல்லப்பா சந்துரு அம்மா இல்லாம வளந்தவரு என்க்குதான் நான் ஆசைபட்டது எதுவுமே நிலைக்கல அதான் சந்ததுருவுக்கு ஒரு தாயாக இருக்கும்னு முடிவு பன்னிதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தேன். அவருக்கு ஒரு நல்ல மனைவியா என்னால இருக்க முடியுமானு தெரியலைப்பா’ என மனதில் புழுங்கினாள்.

அவளது முகத்தில் குழப்பத்தை பார்த்த போஸ் “சரிம்மா நான் போய் ஸ்வீட் பழம் எல்லாம் வாங்கிட்டு வந்துடுறேன் ஸ்கூலுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடுவோம். மலரும் வாரேண்ணு சொன்னா பார்வதி அவளையும் கூப்டுறு” என்றதும் அன்பரசி யின் முகத்தில் சிறிது மகிழ்ச்சி தெரிந்தது. அதற்கு காரணம் “உன் கல்யாணத்தோட முதல் பத்திரிக்கை எனக்குதான்” என்று ஜெனி கூறியதுதான். ஆனால் இன்று ஜெனியும் இல்லை பத்திரிக்கையும் இல்லை. அவளது மகனிடமாவது கூறலாம் என்ற ஆவலுடன் இருந்தாள் அன்பரசி.

“என்ன மேடம் எப்புடி இருக்கீங்க” இது சந்துரு.

“ஆமா சார் என்ன பாத்து பத்து வருசம் ஆச்சுல விசாரிக்குறாரு இப்போதான ஏர்போர்டல பாத்தோம்” இது சுவேதா.

“சரி எதுக்கு ஃபோன் பன்ன” என்றான் சந்துரு.

“நீ டயர்டா இருக்கியா”

“இல்லையே”

“நாம எங்கயாவது வெளிய போகலாமா எனக்கு தனியா இருக்குறது ஒருமாதிரி இருக்கு” என்றாள்.

“ம்ம் போகலாம் நீ வீட்ல இரு நான் கார் எடுத்துட்டு வாரேன்” என்றான். “ஏய் நீ என்ன சொன்ன அன்னைக்கு” என்றாள். “நான் ஒரு டாக் இட் இவ் பர்சன் கொஞ்சம் அதிகமாகவே பேசுவேன் நீ என்னைக்குனு கொஞ்சம் தெளிவா சொல்றியா?!” என்றான்.

“ஒரு நாள் இந்த ஆடம்பரம் அது இது கமிட்மென்ட் இதெல்லாம் இல்லாம பிடிச்சவங்கூட மனசுல நிம்மதியா ஊர் சுத்தனும்னு சொன்னீல” என்றாள்.

“ஆமா சொன்னேன்”

“அப்போ நான் உனக்கு மனசுக்கு பிடிக்கலையா” என்ற குரல் கேட்கும் போதுதான் அன்பரசி தூது அனுப்பிய கற்றைகள் வந்து நோட்டம் பார்த்து சென்றன.

“ஏய் லூசு உன்ன பிடிக்காதவங்க யாருடி இருக்க முடியும்” என்று சமாதானபடுத்தினான்.

“என்ன யாருக்குமே பிடிக்காதுடா” என்ற குரல் அழுகை கலந்து கேட்டது. சுவேதாவின் குழந்தை மனது அது.

“இப்போ நான் அங்க வந்தேன் நீ என்கிட்ட உதவாங்குவ சும்மா நீயே எதாவது நினைச்சுக்காதடி”

சுவேதா எந்த பதிலும் தரவில்லை.

“சரி நீ விட்டா ஃபீல் பன்னிகிட்டே இருப்ப நான் ஒரு ஆட்டோ எடுத்துட்டு அங்க வாரேன் நீ ரெடியா இரு” என்று கிளம்பினான்.

“ம்ம் சரிடா” என இனைப்பை துண்டித்தாள்.

சிறிதுநேரத்தில் சுவேதா வாங்கிகொடுத்த டீசர்ட்டும் ஜீன்ஷும் அணிந்துகொண்டு கண்கண்ணாடியை எடுத்தான். அவனது மனம் அதை கீழே வைக்க சொன்னது. பின்னர் தனது பர்சை பார்த்தான். அதில் பத்தாயிரத்திற்கு மேல் பணமும் சில வங்கிகளின் அட்டைகளும் இருந்தன.

ஒரு சாதாரண மனுசன் எவ்வளவு செலவு பன்னுவான் என யோசிக்கும்போது தன் வீட்டு தோட்டகார் “என்ன தம்பி ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் இருந்தா வயித்துக்கு பஞ்சம் இல்லாம என் குடும்பம் சாப்பிட்டுரும் அப்புறம் மாசத்துக்கு ஒருவாட்டி வெளியே போவோம் கல்யான ஆன புதுசுல இருநூறு ரூபாய் எடுத்துட்டு என் பொண்டாட்டிய கூட்டிட்டு போவேன் இப்போ எப்புடியும் கல்யாணம் ஆனவங்க போகனும்னா ஒரு ஆயிரம்ரூபாயவது வேணும் தம்பி. இப்போ புள்ள குட்டினு ஆகிடுச்சு அவ்வளவா வெளிய போறது இல்ல” கூறியது நினைவுக்கு வரவே அதிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாயை உருகினான்.

‘அவ எதாவது கேட்டா என்ன பன்றது’ என ஒரு கார்டையும் எடுத்துக்கொண்டான். ஆனால் இது அவளுக்காக மட்டுமே என்று மனதில் உறுதி எடுத்து கொண்டான்.

அவனது கைபேசியை பார்த்தான். பின் அதையும் நிராகரித்துவிட்டு நடந்தான்.

அறைக்கு வெளியே வரவே விலை உயர்ந்த சூக்களும் செருப்புகளும் இருக்க அதை பார்த்து சிறிதுநேரம் யோசித்துவிட்டு வெறுங்காலுடன் கிளம்பினான்.

“என்ன தம்பி செருப்புகூட போடாம கிளம்பிட்டீங்க” என முனியம்மாள் வந்தார்.

“இல்லமா கொஞ்சம் மனசு சரியில்லை அதான் அப்புடியே வாக்கிங் போகலாம்னு” என்றான். காலையில் வாக்கிங் என்றாலே கும்பகர்ணனை எழுப்புவது போல்தான் இருக்கும் ஆனால் இன்று இந்த வெயிலில் போகிறானா என்று யோசித்த முனியம்மாள்.

“தம்பி வெளிய வெயில் அதிகமாக இருக்குப்பா செருப்பு போட்டுட்டு போங்க” என்றார்.

“இல்லமா இருக்கட்டும் அப்புறம் அப்பா எழுந்திருச்சா சொல்லிடுங்க” என நடக்கதுவங்கினான். அவனை பார்க்கும்போது முனியம்மாவுக்கு காவேரியின் நியாபகம் வந்தது. காவேரியும் மனது சரியில்லை என்றால் முனியம்மாவை அழைத்துகொண்டு அப்படியே நடந்து செல்வது வழக்கம். ஆனால் சந்துரு தனியாக செல்கிறான்.

ஏசியில் ஸ்பரிசத்தை பாதுகாத்தவனை வெயில் சற்று கிரங்கதான் செய்தது. கால்களில் சூட்டினை உணர்ந்தான். இருந்தாலும் நடக்கலாம் என்று நடந்தான்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு சிறு பெண் “அண்ணா அண்ணா பசிக்குதுனா எதாவது குடுங்க” என்று நின்றாள். அவளை பார்த்ததும் மூளையில் இருந்த அன்புதான் அது. அவன் தன் பையை பார்க்க அதில் இரண்டு ஐநூறு ரூபாயே இருந்தது.

பணம் இருந்தால் இதை அப்படியே குடுத்திருப்பான் ஆனால் சுவேதாவுக்கு என்ன செய்வது என்று யோசித்தவன் அந்த சிறை பெண்ணை தூக்கிகொண்டான். பின் சிறிது தூரம் சென்றதும் ஒரு கடை வந்தது.

“அண்ணே இந்தாங்க ” என ஐநூறு ரூபாயை நீட்டினான். “இதுல நூறு ரூபாய்க்கு இந்த பாப்பாக்கு எதுனா குடுத்துட்டு நானூறு ரூபாய் தாங்க” என்றான். அந்த கடைக்காரர் இவனை சந்தேகமாக பார்த்தார்.

பின்ன டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதுவும் பேரம்பேசி வாங்கும் நகரில் சில்லரை இல்லாமல் ஒருவன். அதிலும் நூறு ரூபாய் தானம் செய்கிறான் என்றால். இது கண்டிப்பாக கள்ள நோட்டுதான் என்பது அவரது சந்தேகம்.

அவனிடமிருந்து வாங்கியவர் அதில் பல சோதனைகளை நிகழ்த்தினார். ரூபாயை அச்சடித்தவர்கள்கூட இந்த அளவிற்கு சோதனை செய்திருக்க மாட்டார்கள். புதிய நோட்டுகளின் புழக்கத்திற்கு அப்புறம் கள்ளநோட்டுகள் நிறையவே கலந்ததன் அடிப்படை பயம் அது. இறுதியாக அந்த வங்கி மேலாளரிடம் நல்ல நோட்டு என பரிந்துரை அளிக்கபடவே அதை ஒரு டப்பாவில் போட்டார். பின் சந்துருவுக்கு நானூறு ரூபாய் கிடைத்தது.

“பாப்பா எதுவேணுமோ கேட்டு வாங்கிக்கோ” என சந்துரு கூற “சரி அண்ணே ” என சிரித்தாள். சந்துரு நடக்கதுவங்கினான்.

இதற்குமேல் அவனது கால்கள் தாக்குபிடிக்க வில்லை சிறிய நிழல் கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஒதுங்கினான். இவனது செய்கையை தூரத்திலாருந்த ஒரு ஜீவன் கவனித்துகொண்டிருந்தது. அந்த குழந்தையை தூக்கி வந்தது முதல் இவனது நீளம் தாண்டுதல் பயிற்ச்சி வரை.

“தம்பி நில்லுப்பா” என்றது அந்த உருவம்.

“என்னங்க ஐய்யா” என்றான் சந்துரு. தனக்கு முன் செருப்புகளை தைத்துகொண்டிருந்த அந்த முதியவரை பார்த்து.

“இந்தாப்பா இந்த செருப்ப போட்டுட்டு போ”என்றார். “இல்ல ஐயா என்கிட்ட பணம் இல்லை” என்றான். சந்துருவின் எண்ணம் காலனிகள் என்றால் குறைந்தது ஐயாயிரம் இருக்கும் என்றுதான். அதனால் அவ்வாறு கூறினான்.

“ஏம்பா நான் பணம் கேட்டேனா?! உன்ன பாத்துட்டுதான்பா இருக்கேன் ஒரு பிச்சகார குழந்தை பக்கத்துல நிக்குறதையே யாரும் விரும்பமாட்டாங்க ஆனா நீ அந்த குழந்தைய தூக்கிட்டு வந்ததும் இல்லாம உன்கிட்ட இருந்த காலெல்லாம் கொடுத்துட்ட! அதான்பா நான் இதுகூட செய்யக்கூடாதா” என்றார்.

“இல்ல ஐய்யா நீங்களே வெயில்ல உட்காந்து வியாபாரம் பன்றீங்க இப்புடி சும்மா குடுத்தா..!” என இழுத்தான்.

“உங்க தாத்தா குடுத்தா வாங்க மாட்டியாப்பா” என்றார். அடுத்த நொடி அது சந்துருவின் காலில் இருந்தது.

பின் அவரிடமிருந்து விடைபெற்று சென்றான். இப்போது நீளம் தாண்டுதல் பயிற்ச்சி அவனுக்கு தேவை படவில்லை‌. இதுவரை இந்த வழியில் பலமுறை காரில் கடந்திருப்பான். இந்த முதியவரை ஒரு நொடி திரும்பி பார்க்கக்கூட நேரம் இல்லை ஆனால் இன்று இவர் அன்பில் கடவுளாக தெரிந்தார்.

அன்பு என்பது ஓர் அழகான மொழி அதை உணர அன்பால் மட்டுமே முடியும் அனைத்து உயிர்களையும் கட்டி அணைப்பது அதுதான் என சிந்தித்தவனின் மனதில் அன்பரசி நின்றாள். அந்த அன்பால் அனைவரையும் ஆளும் அரசி அன்பரசி. அவளது பெயரை எண்ணி சிலிர்த்தான்.

“சார் ஆட்டோ வேணுமா!?” என்ற குரல். இதுவே மற்றநாளாக இருந்திருந்தால் அந்த ஆட்டோ சந்துருவின் டிராவல்ஸ் சர்விஸில் இனைந்திருக்கும்.

“ம்ம் ஆமாண்ணா” என ஏறி சென்றான். இறங்கும்போது சந்துருவின் வீட்டை ஒத்த அதே பிரம்மாண்ட வீட்டின் எதிரே ஆட்டோ நிற்க இறக்கிவிட்டு ஒரு நூறு ரூபாயை எடுத்துகொடுக்கவே பால்கனியில் நின்று ஒரு பெண் சந்துருவை பார்த்ததும் குதித்தாள்.

அதை பார்த்த ஆட்டோ டிரைவர் “என்ன சார் உங்க ஆளா கலக்குறீங்க போங்க” என ஆட்டைவை முறுக்கி கொண்டு கிளம்பினார்.

சிறிது நேரத்தில் சுவேதா ஓடி வந்தாள் அவளை பார்த்ததும் சந்துரு “ஏய் என்னடி இப்புடி வந்துருக்க?!” என்றான்.

-தொடரும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10

பாகம் – 10 வெறும் கூடாக என்னை விட்டு சென்றவளே எப்படி இந்த வெற்று உடலோடு வாழ்வேனடி … காற்றெல்லாம் இருக்கும் உன் சுவாசத்தை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடு .. சுவாசித்து உயிர் கொள்ளபார்க்கிறேன். பிரணவிற்கு தன் காதில் விழுந்த