Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 25

பாகம் – 25

உலகில் வாழும் உயிர்களெல்லாம் வண்ண கனவுகளோடு துயில, ஊரெல்லாம் சுற்றி வந்த அசதியில் நிலவு கூட இளைப்பாற, ஆரவ் மட்டும் இருளை வெறித்து கொண்டு இதயத்தில் வலிகளை சுமந்து அங்கேயே அமர்ந்திருந்தான். அதிகாலையின் குளிர் காற்றும் அவன்மேல் இறக்கம் கொண்டு தென்றலாய் மாறி வீசி அவன் காயத்தை ஆற்ற முயன்று முடியாமல் தோற்று நின்றது.

 

“பார்பி… என்னை எல்லாரும் ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் மேன், லெஜன்ட்ங்கிற பார்வையிலயே பாக்குறாங்க. ஆனா என்னோட அம்மா என்கூட இல்லாத ஏக்கம் எனக்குள்ள ஆறாத வடுவா அப்படியே இன்னும் இருக்கு. எனக்குள்ள இன்னும் அம்மாவோட கண்ணன் ஒரு ஓரத்தில் ஒளிஞ்சுகிட்டு இருக்கான். அவனை என்னால பழச மறக்க வச்சு சகஜமாக்க முடியல. இப்பவும் யாரோட அம்மாவாவது அவங்க மகன கொஞ்சுரத பாத்தா உள்ள இருந்து ‘எனக்கும் என் அம்மா வேணும்’னு கண்ணன் கதறி அழுறான். என்னோட பிரன்ட்ஸ் ‘எங்க அம்மா செஞ்சது’ன்னு சொல்லி கொண்டு வர்ர ஸ்னாக்ஸ் எல்லாம் என்னை சாப்பிட விடாம ‘எங்க அம்மா இதவிட நல்லா செய்வாங்க’ன்றான். கோவில், சாமி, நல்ல நாள், பிறந்த நாள் இது எதுவுமே எனக்கு அம்மா இல்லாம நல்லாவே இல்ல’.”

 

“என்னால மனச கட்டுப்படுத்தி மத்தவங்க கிட்ட சகஜமா பேசி பழக முடியாம விலகி வந்தேன். என்கிட்ட வந்து பேசுரவங்க கிட்ட கூட முக்கியமான விஷயம் தவிர என் பர்சனல் விஷயம் பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். எந்த ஊருக்கு நாங்க மேட்சுக்கு போனாலும் அந்த ஊர் ப்ளேயர்ஸ் வீட்டுக்கு ஒரு தடவையாவது எல்லாரையும் இன்வைட் பண்ணுவாங்க. நான் மட்டும் யார் வீட்டுக்கும் போக மாட்டேன், என்னோட வீட்டுக்கு யாரையும் இன்வைட் பண்ணவும் மாட்டேன். உள்ளுக்குள்ள இருக்குற கண்ணனை ஏமாத்த என்னை நானே கிரிக்கெட்லயும் பிஸினஸ்லயும் பிஸியா வச்சுகிட்டேன். நேரம் காலம் பாக்காம என்னோட புல் எபர்ட்டையும் போட்டு ரெண்டுலயும் ஒரே நேரத்தில மேல மேல முன்னேறினேன். பணம் வந்துச்சு ஆனா பசி வரல… புகழ் வந்துச்சு ஆனா தூக்கம் வரல… நீ என்கிட்ட வந்தப்பிறகு நான் மனசளவில நிறைய மாறி இருக்கேன். நீ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்த எனக்கு ஞாபக படுத்துற பார்பி. பயப்படும் போது அச்சு அசலா அம்மாவ, அழும்போது குட்டி கண்ணன, ஆனா நான் தொடும் போது மட்டும் பெரிய பொண்ணு மாதிரி வெட்கத்தில…” ‘அவசர பட்டு வார்த்தைய விட்டுட்டேனே’ ஆரவ் பார்பியை திரும்பி பார்த்தான்.

 

அவள் அவனை கவனிக்கவில்லை போல அமைதியாக இருந்தாள். பார்வை மட்டும் எங்கோ வெறித்து பிரம்மை பிடித்ததை போல முகம் அரண்டு இருக்க, நெடுநேரம் அழுததன் அடையாளமாக கண்ணீர் துளிகள் காய்ந்திருக்க மை விழி இரண்டும் செவ்வண்ணம் பூசி சிவந்திருந்தது.

 

“பார்பி… பார்பி… ” அவள் பதில் சொல்லாமல் சலனமின்றி இருக்க, அவள் தோளை தட்டி,”பார்பி இங்க பாரு…” சட்டென்று சுய நினைவு வந்து “ஹான்… என்ன? என்ன கேட்டீங்க?”

 

“ஆர் யூ ஓகே? என்ன ஆச்சு உனக்கு?”

 

“ம்… எனக்கு ஒண்ணுமில்ல.”

 

அவள் சரியில்லை, “ஏன் என்னவோ மாதிரி இருக்கடா? பயந்திட்டயா?”

 

“ம்… ஆமா…அது வந்து, நீங்க சொல்ல சொல்ல எல்லாமே என் கண் முன்னாடி நடக்குற மாதிரி இருந்தது. என்னால உங்க அம்மாவையும் உங்களையும் மனசுக்குள்ள உணர முடிஞ்சது… என்னால ஏத்துக்க முடியல.”

 

“ஆரவ் உங்க அம்மா பாக்க எப்படி இருப்பாங்க?”

 

“மகாலட்சுமி மாதிரி இருப்பாங்க. ரொம்ப அழகு. அம்மா கண்ணு உன்ன மாதிரி பெருசா அழகா மீன் மாதிரி இருக்கும். நேர் வகிடு, குண்டு கண்ணம். நான் அவங்கள மாதிரி இல்லனு நிறைய தடவ பீல் பண்ணி இருக்கேன்.”

 

“போட்டோ எதாவது….”

 

“ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு, அதுவும் டேமேஜா இருக்கு, மத்ததெல்லாம் அவ அழிச்சுட்டா. இத நிறைய தடவ பெரிய ஆர்டிஸ்ட்ஸ் கிட்ட குடுத்து வரைய டிரை பண்ணேன் பட் எதுவுமே எங்க அம்மா மாதிரி வரல. அதனால ஒரிஜினல்ல பேங்க் லாக்கர்ல வச்சுட்டு, அடிக்கடி பாக்க வசதியா போன்ல அத ஒரு போட்டோ எடுத்து வச்சுகிட்டேன்” என போனை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி பார்த்தாள் சரியாக முகம் இருக்கும் பகுதி முழுவதும் சிதைந்து இருந்தது.

 

“இன்னும் ரெண்டுநாள் கழிச்சு என் அம்மாவோட திதி நாள் வருது. இவ்ளோ பணம் இருந்து என்ன பிரயோஜனம்? வச்சு கும்பிட என்கிட்ட ஒரு போட்டோ கூட இல்ல… ” என்றதும் அவன் நிலை கண்டு பார்பி கண்களில் மீண்டும் நீர் கோர்க்க…

 

‘பாவம் ஏற்கனவே அழுது அழுது ஓஞ்சு இருந்தவள நான் மறுபடியும் அழ வச்சிட்டேனே’, “நீ ரூமுக்கு போடா. மத்ததெல்லாம் காலைல பாத்துக்கலாம்” தட்டு தடுமாறி அவள் எழுந்து செல்ல அவன் மனமின்றி அங்கேயே இருந்து விட்டான்.

 

படுக்கையில் வந்து விழுந்தவள் மனம் அவனையே நினைத்து கொண்டிருந்தது, ‘என்னால ஒரு மாசம் கூட அம்மா அப்பா இல்லாம இருக்க முடியல. இவன் இருபது வருஷமா தனியா இருந்திருக்கான், இதுல கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வேற. கழுத வயசாச்சு எனக்கு பக்குவமே இல்ல, ஏழு வயசில அவனுக்கு எப்டி இருந்திருக்கும். நான் அவனுக்கு எதாவது செய்யனுமே…’

 

அவள் போன பின் வானத்தையே பார்த்து கொண்டு தாயின் நினைப்போடு ஆரவ் அங்கேயே உறங்கி விட்டான். விடியும் நேரம் நெருங்க நெருங்க பறவைகளின் சத்தத்தில் தூக்கம் கலைய, எழுந்து தன் அறைக்கு வந்து சேர்ந்தான். ஆரவ்விற்கு உடல் இன்று அளவுக்கு அதிகமாக சோர்ந்து போய் இருக்க, நிதிஷ்க்கு போன் போட்டு, “இன்னிக்கு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நீயே எல்லா வேலையும் பாத்துக்க. நான் என்னோட ரூம்லயே இருக்குறேன். என்ன யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.”

 

“ஓகே சார்”

 

அடுத்து செப் க்கு கால் செய்து, “எனக்கு சாப்பாடு இன்னிக்கு வேண்டாம். பால் மட்டும் இப்ப குடுத்து விடுங்க. பார்பிக்கு சாப்பாடு டைம்க்கு அவ ரூம்ல போய் குடுத்திடுங்க”

 

” எஸ் சார்”

 

மனதில் அடைத்து வைத்திருந்த அனைத்தையும் அவளிடம் இறக்கி வைத்ததால் அத்தனை அசதியிலும் மனம் மட்டும் லேசாக, கவலை மறந்து எத்தனை மணி நேரம் உறங்கினானோ அவனுக்கே தெரியாது. கண்விழித்து கடிகாரத்தை பார்க்கையில் மணி மாலையை நெருங்கி இருந்தது. அதனில் நம்பிக்கை இன்றி போனையும் எடுத்து பார்த்து, ‘நெஜமாவே நான் இவ்ளோ நேரமா தூங்கி இருக்கேன்? அவ வேற இன்னிக்கு புல்லா நான் இல்லாம தனியா என்ன பண்ணாளோ… ‘ அவசர அவசரமாக காக்கா குளியல் குளித்து, அவளை தேடி ஓடி வந்தான். கீழே இறங்கி வரும்போதே அவள் தனக்காக ஹாலில் ஸோபாவில் அமர்ந்து காத்திருப்பது தெரிய, “ரொம்ப நேரம் தூங்கிட்டேன் பார்பி. நீ டைம்க்கு சாப்பிட்டயா? உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே…”

 

அவன் போக்கில் அவன் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்க, அவளோ சிறு தலையசைப்பை மட்டும் பதிலாக தந்து, தயங்கி தயங்கி ஒரு பொருளை ஆரவ்விடம் எடுத்து கொடுத்தாள். அது முழுவதுமாக கவர் செய்யப்பட்டிருந்த ஒரு போர்டு.

 

“என்னது இது?”

 

“பிரிச்சு பாருங்களேன்.”

 

சுற்றி இருந்த அழகான கவரை பிரித்து கொண்டே வர கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு புரிய தொடங்கியது. சில பகுதிகள் கண்ணில் தெரிய தொடங்கியதும் அவன் முகம் மாறி, கைகள் லேசாக உதற, அதற்குமேல் பொறுக்க முடியாமல் ஸோபாவில் அமர்ந்து இரண்டு கைகளாலூம் வேக வேகமாக பிரித்தான்.

 

“அம்மா…….”

 

அவள் வரைந்திருந்த ஓவியம் தத்ரூபமாக அவன் அம்மாவைப்போல் இருந்தது. உலகத்தையே மறந்து விழிகளில் நீர் வழிய சின்ன வயது கண்ணனாக மாறி ‘அம்மா.. அம்மா..’ என ஓவியத்தின் கண்களை தலையை கையை மீண்டும் மீண்டும் வருடி, ரசித்தான். ‘ஏதேனும் மாயம் நடந்து நீங்க இதுக்கு உள்ளிருந்து எழுந்து வந்துவிட கூடாதா? நீங்க இல்லாம நான் ரொம்பவே கஷ்ட பட்டுட்டேன்மா’ என தனக்குத்தானே என்னென்னவோ சொல்லி புலம்பிகொண்டு இருந்தான். ஆரவ் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் நார்மலாகவும், அதுவரை அவனை தொந்தரவு செய்யாமல் தூரமாக அமர்ந்திருந்த நிதிஷ்ம் பார்பியும் அவனருகில் வந்தனர்.

 

“இது எப்டி?”

 

நிதிஷ், “எனக்கு எதுவும் தெரியாது சார், மேடம்தான் திடீர்னு கடைக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க. பெயின்ட், பிரஷ், போர்டு எல்லாமே வாங்கி தர சொன்னாங்க… காலைல இருந்து கஷ்டப்பட்டு இத வரஞ்சாங்க. மதியம் சரியா சாப்பிட கூட இல்ல சார், அதுவும் போக அடிக்கடி கை வலிக்குதுன்னு தைலம் தேச்சுகிட்டே வரைஞ்சுகிட்டு இருந்தாங்க. ‘எடுத்து வச்சிட்டு நாளைக்கு வரைங்களே’ன்னு சொன்னா கேக்கவே இல்ல. இப்ப கூட உங்களுக்காக ரெண்டு மணி நேரமா இங்கயே வெய்ட் பண்ணிட்டு உக்காந்திருக்காங்க. நீங்க பேசிட்டு இருங்க நான் போய் ஒரு போன் பண்ணிட்டு வந்திடுறேன் சார்.” வேண்டுமென்றே கொஞ்சம் ஓவராக அவளை பாராட்டிவிட்டு சின்ன சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் நிதிஷ்.

 

தனக்கு மிக அருகில் இடத்தை காட்டி, “வந்து உக்காரு பார்பி…” என்றதும் அவனருகில் வந்து அமர்ந்தாள்.

 

“உன்னால எப்டி இவ்ளோ சரியா அம்மா முகத்த வரைய முடிஞ்சது?”

 

“நேத்து நீங்க சொன்னதெல்லாம் மனசுக்குள்ள கதை மாதிரி ஓடிட்டே இருந்தது. இப்படிதான் உங்க அம்மா இருப்பாங்கன்னு எனக்கு மனசில தோணுனத வரைஞ்சேன்.”

 

“அதுக்காக இன்னிக்கு முழுக்க உக்காந்து கை வலிக்க வரைஞ்சுகிட்டா இருப்பாங்க?”

 

“ஒருவேள இது சரியா இல்லனா நாளைக்கு மறுபடியும் கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணி வரையனும்னு நெனச்சேன். அதான் இன்னிக்கே…”

 

அவள் சொல்லி முடிக்கும்முன் அவன் திரும்பி அவள் தோள்களில் கையை போட்டு நேற்றை போலவே தன்னோடு இழுத்து இறுக்கி பிடித்து கொண்டு, “நீ எனக்கு குடுத்திருக்கிற கிப்ட் விலை மதிப்பில்லாதது தெரியுமா. இதுக்கு முன்னாடி நான் உனக்கு செஞ்சதெல்லாம் ஒண்ணுமே இல்லாம ஆயிடுச்சு பார்பி. ஆமா… உனக்கு பெயிண்டிங் எல்லாம் தெரியும்னு சொல்லவே இல்ல.”

 

“எனக்கே தெரியாதுப்பா, காலைல சும்மா நேத்து பாத்த பழைய அம்மாவோட போட்டோ உங்களோட பேஸ் எல்லாம் சேர்த்து யோசிச்சு பென்சில் வச்சு வரஞ்சு பாத்தேன். நல்லா வந்தது அதான் நிதிஷ் அண்ணாகிட்ட சொல்லி எல்லாம் வாங்கி ட்ரை பண்ணேன். இப்போ எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, தூக்கம் தூக்கமா வருது, நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரவா…”

 

“ம்…” என்று புன்னகையோடு தலையாட்டிவிட்டு, அவனும் தன் அம்மாவை தூக்கி கொண்டு அறைக்கு சென்றான். எப்போதும் பார்த்து கொண்டே இருக்க வசதியாக, தன் அறையில் நிலைக் கண்ணாடிக்கு நேர் மேலாக படத்தை மாட்டி கொண்டான். அம்மாவின் முகத்தையும் தன் முகத்தையும் மாறி மாறி பார்த்து, “கண்ணு மட்டும்தான் எனக்கு வேற மாதிரி இருக்கும்மா… மூக்கும், வாயும் உங்கள மாதிரியேதான் இருக்கு பாருங்களேன்….”

 

Advertisements

1 Comment »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: