Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 1

தோழமைகள் அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். 

உங்களை சந்தித்து சில மாதங்களாகிவிட்டது. இத்தனை காலமும் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களிடம் முன்னரே அறிவித்திருந்தபடி  இந்தக் கதையை ஓரளாவது முடித்துவிட்டே அடுத்தடுத்த பதிவுகளைக் கொடுக்க எண்ணியிருந்தேன். அதனாலேயே மேலும் தாமதாமாகிவிட்டது. இனி ஞாயிறு மற்றும் வியாழக் கிழமைகளில் பதிவிட முயல்கிறேன்.

இத்தனை வருடம் என் மேல் செலுத்திய அன்பையும் ஆதரவையும் இனியும் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். 

அன்புடன்,

தமிழ் மதுரா. 

 

யாரோ இவன் என் காதலன் 

 

YaaroIvanEnKadhalan

 

அத்தியாயம் – 1

கஸ்ட் மாத பெங்களூர் மழை தூறல் ஒவ்வொன்றும் சுத்தியலால் அடித்ததைப் போன்ற வேகத்துடன் அந்த சிறிய உணவு விடுதியின் கூரையில் இறங்கியது. தாரை தாரையாய் பொழிந்த மழைக்கிடையே ‘வொயிட் ஹார்ஸ்’ என்ற பெயர் பலகை மின் விளக்கின் உதவியால் ஒளிர்ந்தது. இந்த அளவு வேகமான மழை, ஆகஸ்ட் மாதத்தில்  தமிழ்நாட்டில் பார்த்த நினைவில்லை. ஆனால் டிசம்பரில் வாளியில் இருந்து இறைத்து ஊற்றினார் போல ஒரேடியாய் கொட்டி சென்னையை காகிதக்கப்பலாய் மிதக்கவிடும்.

பெங்களூரின் மாலை வேளைகளில் இந்த மழை பொழிந்து நகரை சுத்தப்படுத்துவதைப் போலவே தோன்றியது அஞ்சலிக்கு. அவளது பொன்னிற வதனம் குளிரால் சிவந்திருந்தது. உலர்ந்த ஆரஞ்சு உதடுகளில் லிப் ஃபால்ம் தடவிக் கொண்டாள். விரித்து விட்டிருந்த அவளது தலைமுடி நீர்வீழ்ச்சி போன்று வீழ்ந்து தோள் முழுவதும் பரவியிருந்தது. அவளது ஐந்தடி ஏழு அங்குல உடலின் ஒவ்வொரு இஞ்சும் பரவிய குளிரால் சிலிர்த்தது. அதை அனுபவிக்க நினைத்தாலும் அவளால் இப்போதைக்கு முடியாது.

ஈர வானிலையிலிருந்து தப்பிக்கவும், குளிருக்கு அடைக்கலமாகவும் நினைத்த மனிதர்களுக்கு அந்தப் பகுதியில் அவளது உணவகமே புகலிடம். மெதுவாக ஒதுங்க ஆரம்பித்த வாடிக்கையாளர்கள் சிறிது நேரத்தில் நிற்கக் கூட இடமின்றி வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர்,

இத்தனைக்கும் அவளினது மிகப் புகழ் பெற்ற உணவகம் இல்லை. சாட்ஸ் மற்றும் டிபன் ஐட்டம் மட்டுமே இப்போதைக்கு வழங்குகிறார்கள். அது கூட பலதரமான மக்களை திருப்திப் படுத்தும் பொருட்டே. ஒரு குறிப்பிட்ட வரையறையை வகுத்துக் கொள்ளாமல் சான்ட்விச், பானி பூரி, பேல் பூரி போன்ற உணவு வகைகள், நம் வகை உணவுப் பிரியர்களுக்கென இட்லி, தோசை வகைகள், காராபாத், கேசர்பாத் போன்ற சுலப உணவுகள். நல்ல காப்பி, டீ, பழரசங்கள். அவ்வளவுதான் அவளது கடை. சிலவருடங்கள் இப்படித்தான் ஓட்ட வேண்டும். இப்போதைக்குக் கையைக் கடிக்கவில்லை. அவளது செலவுக்கும், தொழிலாளர்கள் சம்பளத்துக்கும் கூட வருமானம் வருகிறது. கொஞ்சம் பேமஸ் ஆனதும் வேண்டுமானால் மேலும் விரிவு படுத்தலாம்.

நல்ல அடர்ந்த சிவப்பில் இருபுறமும் போடப்பட்டிருந்த இருக்கைகளையும். சுவரை ஓட்டிப் போடபட்டிருந்த பிரேக்பாஸ்ட் பாரைப் போன்ற சுழலும் நாற்காலிகளுடன் கூடிய இருக்கைகளையும். சுவர் முழுவதும் அவளது ரசனையை பிரதிபலித்த பாலே நடன ஓவியங்களையும் பெருமை பொங்கப் பார்த்தாள். இந்த சிறிய உணவகத்தின் ஒவ்வொரு சதுர அடியும் அவளது ரசனைப்படி அமைந்தது.

ஒரு வருடத்திற்கு முன்னர் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உதவியுடன் இந்த உணவகத்தை வாங்கினாள். பெங்களூரின் சந்தடியில் இல்லாது சார்ஜாபூர் ரோட்டில் சற்று தள்ளி அமைந்திருந்ததும் இந்த உணவகத்தை விற்கக் காரணமாய் இருக்கும் என்று ஊகித்தாள்.

அவள் அந்த உணவகத்தை விலைக்கு வாங்கியதற்குக் காரணம் நகரின் மையத்தில் இல்லாதிருந்தாலும் அந்த உணவகத்திற்கு அருகே சில நிறுவனங்களும், கல்லூரிகளும் இருந்தது. அதில் பணிபுரியும் மக்களும், மாணவர்களும் தங்க சில அப்பார்ட்மென்ட்களும் இருந்தது. அவர்கள் குடும்பத்தோடு வந்து உண்ண ஒரு நல்ல சூழ்நிலையுடன் கூடிய இடம் ஒன்று அவசியம். அதைத் தன்னால் சுலபமாகத் தர முடியும் என்று நம்பினாள்.

தந்தையின் மறைவுக்குப் பின் வந்த பணம் இந்த உணவகத்தை வாங்கப் போதுமானதாய் இருந்தது. அவரது மறைவுக்குப் பின் வேறு வேறு எங்கும் செல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை. சொந்த ஊரில் தங்குவதும் உவப்பானதாக இல்லை. அதனாலேயே தூரமாக வந்து ஒளிந்து கொண்டாள்.

அவளது தூரத்து சகோதரி முறையிலான மாயாவும் அதற்கு ஒரு முக்கியமான  காரணம். பெங்களூர் காரியான அவளது உதவியுடன் பழைய உணவகத்தை சீரமைத்து, நவீனமாக்கி ‘வொயிட் ஹார்ஸ்’ என்று பெயர் சூட்டினார்கள்.

 

அவள் படித்து முடித்ததும் தந்தையின் உதவியால் கிஷோரிடம் வேலைக்கு சேர்ந்தாள். அவன் அவளது வேலைக்கு மற்றுமின்றி வாழ்க்கைக்கும் பாஸாக நினைத்தான். அவளைத் திருமணம் செய்துக் கொள்ள விரும்பினான். கடைசியில் அவளது தந்தையின் மரணத்துக்கும் காரணமாய் அமைந்துவிட்டான். அதன்பின் யாரிடமும் வேலைக்கு செல்லவேண்டும் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை.

தந்தையின் எதிர்பாராத மரணத்திலிருந்து அவள் இன்னமும் வெளிவரவில்லை. அவளது சக்தி அனைத்தையும் உறிஞ்சி எடுத்துக்கொண்டதைப் போல அன்றிலிருந்து மாறிவிட்டாள். கிஷோரின்  சிறைவாசமோ, அவனுக்குக் கிடைத்த தண்டனையோ அவளது மனதுக்குப் போதுமானதாக இல்லை.

ஒரு சில மாதங்களில் அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட மாற்றங்களை ஜீரணிக்க ஒரு மாமாங்கம் கூட போதாது போல. ஆண்கள் அன்பாலோ இல்லை அதிகாரத்தாலோ பெண் எனும் உணர்ச்சிக் குவியலை எளிதாகக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகின்றனர்.  இனிமேல் எந்த ஒரு ஆண்மகனையும் சார்ந்து இருக்கப் போவதில்லை.

தான் யார்? தனக்கு என்ன நடக்கிறது? ஏன் என் தந்தை கொலை செய்யபட்டார்? பெண்ணைத் தரும் அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த கிஷோர் எப்படி அவருக்கு எமனாக மாறினான். இப்படி பல ‘ஏன்’கள். இதற்கெல்லாம் யார் விடைதருவார்கள்? இதற்கிடையில் நடக்கும் சில சம்பவங்கள் கூட சேர்ந்து அவளது மனதை ஏகமாய் குழப்புகிறது.

வொயிட் ஹார்ஸ் வாங்கும் போது இவளுக்குக் கொஞ்சம்  பணப்பற்றாக்குறை. வங்கிக் கடன், சேமிப்பு, தந்தையின் இழப்பில் கிடைத்த காப்பீட்டுப் பணம் இவற்றையும் மீறி ஒரு ஐந்து லட்சம் துண்டு விழுந்தது. எங்கும் அணுக முடியாது யாருடனும் கை நீட்ட முடியாது. வீட்டை விற்றுப் பணம் புரட்ட வேண்டும் இல்லை என்றால் இதை அப்படியே கைவிட்டுவிட்டு வந்தவழி செல்ல வேண்டும் என்ற இக்கட்டான நிலை.

“வேண்டாம் மாயா விட்டுடலாம்” என்று சோர்வாக சொன்ன சமயம்.

“மேடம் உங்க அலுவலகத்திலிருந்து ஐந்து லட்சத்தைக் கட்டிட்டாங்க. இப்பயே ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்தால் பார்மாலிடீஸ் முடிச்சுடலாம்” என இந்த டீலை முடித்துதந்தவரிடமிருந்து போன் வந்ததும் அவளுக்கு மயக்கம் வராத குறை.

யார் தனது பெயரை சொல்லிப் பணம் கட்டியது என்று இந்த நொடி வரை தலையை உடைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு க்ளூ கூடக் கிடைக்கவில்லை என்பதே நிஜம்.

இந்தச் சின்ன உணவகத்தில் மறைந்து மனக்காயங்களை ஆற்றிக் கொள்ள முனைந்தாலும், அவளது தந்தையின் நினைவுகளின் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை.

அவளது தந்தையின் பெயர் தனசேகர். நல்ல உயரத்தில், ஆஜானுபாகு உடல்வாகோடு, வெள்ளிக் கம்பி முடியோடு, ஆளுமைத் திறனுடன்  இருக்கும் தந்தையின் தோற்றத்தில், அறிவில் அவளுக்கு அவ்வளவு பெருமை. அவரே குள்ளமாக, பானைத் தொப்பையோடு இருந்தாலும் இதே அளவு அன்புடன்தான் இருந்திருப்பாள்.

பிறந்தவுடனேயே தாயை இழந்த அஞ்சலிக்கு,  தந்தை மேல் கொள்ளை பிரியம். சென்னை நீலாங்கரையில் அவர்களது வீடு. வீடு வேலைக்கும் அவளை கவனித்துக்கொள்ளவும் ஒரு வயதான பெண்மணி இருந்தார். அந்தப் பெண்மணியின் மறைவுக்குப் பின் அவளும் தந்தையும் மட்டுமே. அவரும் கிடைத்த பொழுதுகளை மகளுடனேயே கழிப்பார். தாய் என்ற பெயரில் ஒரு பெண் வீட்டில் இல்லாததால் அவர் தனக்குத் தெரிந்த வகையிலேயே அவளை வளர்த்தார். குதிரை ஏற்றம், மலை ஏற்றம், மீன் பிடித்தல், சினிமா படம் என்று தங்களுக்குள் ஒரு உலகை சிருஷ்டித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.

அடிக்கடி அவர்கள் ட்ரெக்கிங் போகும் பகுதிகள் நாகலாபுரமும், தடாவும். “ட்ரெக்கிங் போலாமா அஞ்சலி” என்ற தந்தையின் குரல் கேட்டதும்  குதித்தபடி தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு ரெடியாகி விடுவாள்.

அந்தப் பாதையின் கடினம் கூட தந்தையுடன் பல விஷயங்களைப் பேசிக் கொண்டே நடக்கும்போது அவ்வளவாகத் தெரியாது. பத்து கிலோமீட்டர் நடைபயணமும் மலை ஏற்றமும் சுலபமானதாக்கியது அவளது தந்தைதான்.

அவள் திருமணம் முடிவானதும் அப்படி ஒரு பயணம் கிளம்பினார்கள். அதுதான் அவர்களது கடைசி பயணமும். அது ஆரம்பித்தபோது நன்றாகவே இருந்தது வழக்கம்போல கலகலப்பும் சிரிப்புமாக. ஆனால் சற்று நேரத்தில் அவளது தந்தையின் முகம் ஏனோ வெளிறிக் காணப்பட்டது.

“அஞ்சலி உடனே இந்த இடத்தை விட்டுக் கிளம்புறோம். கமான் குவிக்…” என்றார்.

“சாப்பாடு…”

“எதுவும் வேண்டாம். அஞ்சலி… கொஞ்ச நாள் அப்பா என்ன சொன்னாலும் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம கீழ்படிஞ்சு நடந்தா ரெண்டு பேருக்கும் நல்லது” என்றார் பொறுமையைக் கையில் பிடித்தபடி.

மறுபேச்சு பேசாமல் கிளம்பினாள். அதன்பின் அவரது முகத்தில் யோசனை ரேகைகளும் கவலையும் படிந்ததைக் கண்டு வருத்தபடுவதைத் தவிர அவளால் வேறேதும் செய்ய முடியவில்லை. எத்தனையோ தடவை அவள் வற்புறுத்திக் கேட்ட போதும்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா… பெண்ணைத் திருமணம் செஞ்சுத் தரும் எல்லாத் தகப்பன்களுக்கும் இருக்கும் கவலைதான் இது” என்று மழுப்பி விட்டார்.

ஆனால் அவரே திருமணத்தை நிறுத்தியதாகவும் அதனால்தான் கிஷோர் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சொன்னது கூட அவளது மனதில் பதியவில்லை.

‘அன்னைக்கு என்னாச்சுப்பா… ஒவ்வொரு விஷயத்தையும் என் சம்மதத்தோட முடிவு செய்ற நீங்க, என்கிட்டே கூட சொல்லாம எதுக்குக் கல்யாணத்தை நிறுத்தினிங்க. கிஷோர்கிட்ட அப்படி என்ன தப்பிருக்கு’ மனதில் இருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு என்றாவது விடை கிடைக்குமா?

 

22 Comments »

 1. Hi, I’m Revathi. I love your writings espically ‘Chitrangatha’ and ‘Athai maganea athan’. After a long gap I got time to read your novels. Actually I don’t know how to express myself by words.

 2. நல்ல தொடக்கம் தோழி. அதுவும் கதாநாயகியின் அறிமுகப்படலமே மர்மத்தோடு தொடங்கி வாசிப்பவரின் ஆர்வத்தை தூண்டுகிறது.

 3. Hi mam,
  I am a big fan of you. Once I started reading ur blog it become one of my daily routine to check for updates😊. Thanks for giving us such wonderful novels.
  I’m eagerly waiting to read this story like others…..

  All the very best.

 4. hi anjali…welcome….in the first update itself you are coming out with a thriller like experience dont worry we are also coming along with you to find out the murderer and the reason for it. pl do come with regular update madhura

 5. Hi mam

  Wow super mam
  Romba naal wait panna vachuteenga… already 2 episodes read panniyachu.. entha story kkum 2 epi read pannittu ippadi wait panninathu illa. Daily unga blog open panni ‘yaro ivan en kathalan’ epi upload pannirukkanu check pannittu thaan next velai parpen. Today epi parthu romba excite ayten
  Thanks mam for ur every novels
  Updated daily podunga mam
  Plssssss😍😍😍😍

 6. Hi Tamil,
  Vinayagar Chathurthi vaazhthukkal !!

  What a lovely, lovely surprise ! THANK YOU !

  ‘Yaaro Ivan… En Kadhalan’ – title nalla irukku. Question is: ‘Kadhalana’ ‘ kaavalana’?

  If someone (Kishore?) killed Anjali’s father, and she does not even know why clearly, then ivalukku oru ‘kaavalan’ vendama? Not that he can’t be her ‘kadhalan’ as well 🙂

  ‘White Horse’ – ippadi restaurant peyar vacha, adhukkagave pogalame. 🙂 So, Anjali moved from Chennai to B’lore. 5 lakhs is not easy money. Avvalavu thogai eppadi aval peyaril kattapattadhunnu therinjikkamale, eppadi aval adhai accept pannikitta? Romba suspicious-a irukku. Who would have done that? Why????

  First epi koduthu, ivvalo questions-i manasukkul ezhuppitteenga. Waiting eagerly to find out when some of these are going to be answered….

  Tamil – VERY BEST WISHES for the new novel !
  -Siva

 7. Super akka. அஞ்சலியோடு சேர்த்து எங்களையும் நல்லா சுத்த விட்டிட்டீங்க. அசத்தலான ஆரம்பம். வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: