Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 31

உனக்கென நான் 31

சோகங்களை தாங்கிகெண்டு நகர்ந்திருந்தாள் அன்பரசி அந்த பள்ளியை நோக்கி. அங்கு கிடைத்த புது தேழிகளும் மழலைகளும் அன்பரசியின் காயத்தின் வலிக்கு மருந்துபோட்டன. ஆனாலும் அதை ஆற்றுவதோ மறக்கசெய்வதோ இயலாத காரியம்தான். அதை செய்யவும் ஒருவன் வந்தான். அவளது நீண்டநாள் இரவு அழுகையை மூட்டைகட்டினான். அது அன்பரசிக்கு புதிய தெம்பினை அளித்தது.

சில வருடங்கள் கண்ணீரில் நீந்தி கரையேறவே அந்த தருணம் வந்தது. தலைமை ஆசிரியர் மனேரமா அமர்ந்திருக்க இந்திரா அன்று விடுப்பு எடுத்திருந்தார். மிகவும் கடினமான வேலை அன்பரசியின் தலையில் வந்து விழுந்தது. ஆம் பள்ளியில் இன்று ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தினம்.

“அன்பரசி அந்த ஃபைல் கிளியர் பன்னிடுங்க அப்புறம் சர்டிபிகெட் இருந்தா அந்த டேட் போடுங்க இல்லைனா ஏப்ரல் ஜீன் இந்த ரெண்டு மாசத்துல எதாவது பாத்து டேட் ஆஃப் பர்த் போட்டுகோங்க” என மனேரமா பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்.

“சரிங்க மேடம்” என அன்பரசி ஆவணங்களை நிரப்பி கொண்டிருந்தாள். அன்பரசியின் ராசியோ நட்சத்திரமோ தெரியாது அவள் வந்த நேரம் இந்த பள்ளியில் சேர்க்கை மழைதான். இழுத்து மூடும் நிலையில் இருந்த இந்த பள்ளி தன் பழம்பெருமையை வைத்தே ஓடிகெண்டிருந்தது. அன்பரசியின் சில அறிவுரைகள் அந்த நிலையை மாற்றியிருந்தன.

பள்ளியை பயத்துடன் பார்த்துகெண்டே உள்ளே வரும் மழலைகளை பார்த்து புன்னகைத்து அன்பாக பேசி பயத்தை பேக்கிகொண்டிருந்தாள் அன்பரசி. பின் பெயர் வயது என பதிவிடுவது வேலை. அதன் பின் தலைமை ஆசிரியர் கேட்கும் குழந்தைத்தனமான கேள்விக்கு பதில் கூறவேண்டும். குழந்தைகளுக்கு குழந்தை தனமாகதானே கேட்க முடியும்.

ஒவ்வொருவராக கடந்து செல்ல ” மிஸ் இந்தாங்க” என கையிலிருந்த சாக்லெட்டை ஒரு சிறுவன் மேஜையில் வைத்தான். அதை பார்த்தவள்.

“எதுக்குப்பா சாக்லெட்?” என்றாள். “அதுவா நான் இன்னைக்கு முதல்ல ஸ்கூலுக்கு வாரேன்ல அதான்” என சிரித்தான். அந்த சிரிப்பு அன்பரசிக்கு எதையோ உணர்த்தியது.

அன்று “இந்தாடி சாக்லெட்” என மேஜையில் அமர்ந்திருந்த அன்பயசியின் முன் வைத்தாள் ஜெனி.

“எதுக்குடி சாக்லெட்?” என அன்பரசி கேட்க “அதான் நாம செகன்ட் இயர் வந்துட்டேம்ல அதான்” என சிரித்தாள் ஜெனி.

“அப்போ ஏண்டி காலேஜ் சேந்தப்போ தரலை?” என வக்கில் வண்டுமுருகனாக மாறினாள் அன்பரசி. “அப்போ தந்திருந்தா இதுல விசம் தடவிருக்கியானு நீ சாப்பிடாமல பேயிருப்ப” என கண்ணடித்தாள்.

“நீ பேசறத பாத்தா..! ஏய் இதுல விசம் எதுவும் இல்லையே” என சந்தேகமாக பார்த்தாள். “ஆமாடி நீ ஒரு ஆளு உன்னையெல்லாம் கொல்றதுக்கு நான் தீவிரவாதிகிட்ட பேயி சைனைடு வாங்கிட்டு வந்து சாக்லெட்ல தடவி கொடுக்க பேறேன் ஏண்டி காமெடி பன்ற நல்லா கொசு மாதிரி இருக்க அப்புடியே நசுக்கி கொண்ணுட மாட்டேன்” என பேலியாக அன்பரசியின் கழுத்தை பிடித்தாள்.

“நீ செஞ்சாலும் செய்வடி! நீ சைனடு எல்லாம் வாங்கவேணாம். நீ ரெடிபன்ன சாம்பார் எடுத்துட்டு வந்தா போதும் அம்புட்டு தீவிரவாதியும் குளோஸ்டி” என மேலும் வம்பிழுக்க “ஏய் என் சமையல கிண்டல் பன்னாதடி” என முறைத்தாள்.

“ஆமா மெக் டெனால்ட்ல உன்ன கூப்பிடுறாங்க போ” என சிரித்தாள். “ஒருநாள் இல்ல ஒருநாள் என்னையும் என் சமையலையும் பிரிஞ்சு கஷ்டபடபோற அப்போ தெரியும்டி” என அன்பரசியின் தலையில் கொட்டினாள்.

“ஏய் வலிக்குதுடி லூசு.” என அன்பு தலையை தடவிகொண்டிருக்க ஜெனியோ தன் புகைப்பட ஆல்பத்தில் மேலும் போட்டேகளை சேர்க்க துவங்கியிருந்தாள்.

“ஏய் என்னடி புது பிட்டா எங்க குடு நான் பாக்குறேன்” என ஜெனியிடம் இருந்து பிடுங்கினாள்.

“ஏய் இது நீயா ஜெனி சின்ன வயசுல இப்புடியா இருந்த அடையாளமே தெரியலைடி” என சிலிர்த்தாள் அன்பரசி. “இருந்தாலும் மேல சட்டை போட்டுருக்கலாம்” என ஜெனியின் மூன்று வயது புகைபடத்தை பார்த்து கிண்டல் செய்தாள்.

அன்பரசியின் தோளில் செல்லமாக தட்டிய ஜெனி “ஏய் அடுத்த பக்கம் திருப்பு டி” என வெட்கப்பட்டாள்.

“ம்ம்ம் பத்து வயசுலயே யாரையோ புரோபோஸ் பன்ன கையில பூவோட நிக்குற” என பெருமூச்சு விட்டாள். “அம்மா தாயே அது சும்மா ஸ்டில்லுக்காக நின்ன்து” என ஜெனியே அடுத்த பக்கம் புரட்டினாள்.

“என்னடி வெள்ள டிரஸ்ல அப்புடியே தேவதை மாதிரி இருக்க நீ அழகுடி” என தன் தோழியை மெச்சினாள் அன்பு. “அது சர்ச்ல ஞானஸ்நானம் வாங்கும்போது எடுத்ததுடி” என்றாள். “அப்புடினா?” இது அன்பு. “அடுத்த வாரம் சர்ச்சுக்கு வா நேர்ல காட்டுறேன்” என்றாள். “ஐய்யோ அம்மா அடிப்பாங்க நா வரலைடி” என சேம்பேறிதனத்தை வெளியே காட்டாமல் சிரித்துகொண்டு அடுத்த பக்கத்தை புரட்டினாள்.

“ஏய் இது யாருடி உன்கூட உன்ன மாதிரியே” என்று கேட்டாள். “அது என் அக்கா மேரி” என்று கன்னத்தில் கை வைத்தாள். “உனக்கு அக்காலாம் இருக்காங்களா?” என கேட்டாள்.

“ஆமாடி ஆனா இப்போ கல்யானம் ஆகிடுச்சு இப்போ மூனு வயசுல ஒரு பையன் இருக்கான். அவ கொஞ்சம் பிடிவாத காரி எங்க அப்பா கூட சண்டை போட்டுட்டு உங்க வீட்டு வாசபடிய மிதிக்க மாட்டுன்னு பேயிட்டா. பாவம் மாமாதான் இப்போ தூது புறா. நான் அடிக்கடி போய் என் மகன கெஞ்சுவேன்” என கண்கள் சுருங்க கூறானாள்.

“ஏய் கல்யாணம் ஆகாமலேயே மகனா! நீ பன்னாலும் பன்னிருப்படி” என அன்பரசி மீண்டும் சீண்டவே “ஏய் லூசு என் அக்கா மகன் எனக்கும் மகன்தான வேணும் அதை சொன்னேன்டி” என திட்டிவிட்டு “சரி அவனை பாக்குறியா” என கடைசி பக்கத்தை புரட்டினாள்.

அதில் ஒரு குழந்தை தவழ்ந்துகெண்டு வாயில் கிழுகிளுப்பையை கடித்து கொண்டிருந்தான். “அழகா இருக்கான்டி ” என அன்பரசி கூற “ம்ஹும்ம படு வாலுடி சேட்டை புடிச்ச பையன் ஆனா அவனுக்காக தான் நான் நேத்து எங்க அக்கா கூட சண்டை போட்டேன் ஏய் இவன் என் பையன் நான்தான் வளர்ப்பேன் எனக்கு எழுதிகொடுத்துடு அப்புடின்னு ஆனா எங்க மாமா வந்ததால அமைதியாயிட்டேன் இல்லைனா இவன் இப்போ எங்க வீட்டுல இருந்திருப்பான்” என ஜெனி கையிலிருந்த தன் அக்கா மகனின் (மன்னிக்கவும் ஜெனியின் மகனின்- இல்லைனா ஜெனி கோபபடுவா அதான்) போட்டேவை இதனைத்தாள்.

“இதுதான் கடைசியா எடுத்த போட்டேவா?!” என அன்பரசி கேட்க “ஆமாடி நேத்து எடுத்தது.” என ஆல்பத்தை மூடி பையில் வைத்தாள். உள்ளே இருந்த தன் காதலன் ஆசிக்கின் படத்தை அன்பரசி பாக்ககூடாது என நினைத்திருப்பாள் போலும்.

“ஏய் நான் நடுவுல இன்னும் பாக்கலைடி” என அன்பரசி கேட்கவே “அது ஜெனியோட சீக்ரட் யாரும் பாக்ககூடாது” என சிரித்துகொண்டே பையை எடுத்து கீழே வைத்தாள்.

“நீ செல்றத பாத்தா சரி இல்லையே” என அன்பு ஏரகண்ணால் பார்க்க “போதும்டி இப்போவே இந்த ஓட்டு ஓட்டுற அந்த போட்டோவெல்லாம் நீ பாத்த நான் தெலைஞ்சேன்” என சிரிக்க தோழிகள் இருவரும் அடுத்த டாப்பிக்குக்கு சென்றனர்.

ஜெனியின் அதே உணர்வும் வேகமும் இந்த சாகலெட் சிறுவனிடம் காணபடவே “உங்க அம்மா எங்க” என்றாள் அன்பரசி.

“அம்மா நடந்து வர்ரதுககுள்ள பள்ளிகூடமே முடிச்சிட்டும்” என அந்த சிறுவன் கூறவே “சற்று மேடிட்ட வயிருடன் ஒரு பெண் வந்தார். அந்த சிறுவனுக்கு வயிற்றில் ஒரு தம்பி பாப்பா ரெடியாக இருந்தது விளையாட.

அந்த பெண் அன்பரசியை பார்த்தவுடன் “நீ அன்பரசிதான?” என்றார். “ஆமா நீங்க?!” என்றாள்.

“நான் ஜெனியோட அக்காமா அவ எப்போவும் உன்னபத்திதான் பேசிகிட்டு இருப்பா! ஆனா இப்போ அந்த ஆண்டவர்கிட்ட உன்னபத்தி பெருமையா சொல்ல போயிட்டா” என கண்கள் கலங்கியது.

“ஐயோ அக்கா ஜெனி நம்மகூடதான் இருக்கா அழாதிங்க” என தன் மனதின் சோக எரிமலையை அடக்கிகொண்டு ஜெனியின் அக்கா மேரிக்கு ஆறுதல் சொன்னாள்.

“ஆமா அன்பரசி இந்த குழந்தை ஜெனிதான் என்கூட தான் இருக்கா” என வயிற்றில் கைவைத்து தடவினார். “ஆமாக்கா இது ஜெனிதான்” என சற்று சோர்வாக கூறினாள். ராஜேஷுக்கும் தனக்கும் பிறக்கபோகம் குழந்தைக்கு ஜெனி என பெயர் வைக்கவேண்டும் என இருவரும் காதலிக்கும்போதே பேசிவைத்திருந்தனர். காதலை சேர்த்து வைத்தவள் அவள் அல்லவா?!. ஆனால் அன்பரசியின் அனைத்து ஆசைகளும் இன்று பொய்யாய் நின்றது. இறுதியாய் இருந்த ஜெனி என்ற பெயரும் பறிபோனது.

சற்று பெருமூச்சு விட்டு நிதானபடுத்திகொண்டவள் “சரி உன் பேரு என்னடா கண்ணா” என மேரியின் (ஜெனியின்) மகனிடம் கேட்டாள்.

“என் பேரு சஞ்சீவ்” என முடித்தான்.

தன் தோழியின் அக்கா மகனை தன் மகனாக நினைத்தாள் அன்பரசி அதனால்தான் என்னவோ அவள் கொடுக்கும் செல்லத்தால் சஞ்சீவ் இரண்டாம் வகுப்பின் ஆயுதப்படை தலைவன் என பதவி உயர்வு பெற்றுள்ளான்‌. அன்பரசிக்கும் அவனது செயல்கள் ஜெனியை நினைவூட்டுவதால் எதுவும் கூறாமல் ரசிப்பாள். சஞ்சீவ் மீது இவள் அதிக பாசமாக இருப்பதின் காரணம் ஓடி முடிய நினைவுகளை திருப்பிகொண்டிருந்தவளுக்கு சஞ்சீவை பார்க்கவேண்டும் போல் இருந்தது. நிகழ்காலத்திற்கு வந்தாள். அப்போது அவளது கைபேசி எதிரில் படவே சந்துருவுக்கு ஃபோன் பன்னவேண்டும் என்ற ஆசையும் நினைவும் வந்தது.

கைபேசியை எடுத்தாள்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: