Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 30

உனக்கென நான் 30

ராஜேஷ் என்ற வார்த்தையை கேட்டதும் எரிச்சலடைந்தாள் சங்கீதா. “ஏன்டி என்னடி ஆச்சு” இது அன்பு.

“என்ன சொல்றது நீ அவன உண்மையாதான காதலிச்ச! ஆனா அவன் அப்புடி இல்லடி அவனுக்கும் அவன் அத்தை பொண்ணுக்கும் நிச்சயம் பன்னிட்டாங்க அதுமட்டுமில்ல காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம். எல்லாம் பணத்தாசைடி. பணத்துக்கு முன்னாடி காதல் எல்லாம் ஒன்னுமே இல்லடி இந்த ராஜேஷ் மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம்”

ஜெனி இருந்திருந்தால் இன்று தட்டிகேட்டிருப்பாள். கையறுநிலையை புத்தகத்தில் படித்திருந்த அன்பரசி அதை இன்று உணர்ந்தாள். ஜெனி இல்லாத வேதனை மனதை ரணபடுத்தினாலும் ராஜேஷை பற்றி சங்கீதா கூறியதை அன்பரசியின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் சங்கீதாவோ அரிச்சந்திரன் போன்றவள். அவளது தகவலை சோதிப்பது என்பது இயலாத காரியம். அன்பரசியின் இதயத்தில் அந்த வலியோ மீண்டும் பூண்டு கொள்ள ராஜேஷை தேடியது மனது.

கோபமாக கண்ணில் நீர் நிறைந்திருக்க வகுப்பினுள் நுழைந்தாள். கண்களை நீரில் மிதக்கும் கப்பலென உலாவவிட்டாள். அவன் அங்கு இல்லை. சட்டென வெளியே செல்ல ஆயத்தமானாள்.

அப்போது வாயிலின் அருகே நின்றிருந்தாள் பூஜா. அன்பரசியை பார்த்து “அன்பு உன்கூட கொஞ்சம் பேசணும்” என்றாள். பூஜா அதிகமாக யாரிடமும் பேசியது கிடையாது. ஆனால் இன்று அவளாக முன் வருகிறாள் என்றால் அன்பரசி சிறிது கேட்கத்தான் வேண்டும்.

“சொல்லு பூஜா” கண்ணிலிருந்த நீர் தரையில் விழுந்தது. “யார தேடுற? ராஜேஷா?!”

“ம்ம்”

“எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?” பூஜா இந்த அளவுக்கு பேசுவாலா என்ன என்றது அன்பின் மனது.

“நான் அவன்கிட்ட ஒன்னு கேட்கனும்” என கண்ணை கசக்கி கொண்டே கூறினாள் ஆனால் பார்வையோ வேறு எங்கேயோ பார்த்துகொண்டிருந்தது.

“என்ன உன் காதலை கேட்க போறியா?” என்றாள் பூஜா. அன்பரசி அதிர்ந்தாள். ‘என் காதலனிடம் என் காதலை கேட்கபோகிறேன் இவளுக்கு என்ன?!’ என மனம் பறிதவித்தது‌.

“நான் ராஜேஷ் அண்ணாவோட தூரத்து சொந்தம் அவங்க அப்பா எங்க குடும்பத்துக்கு நிறைய உதவி பன்னிருக்காங்க. ஆனா இன்னைக்கு அந்த குடும்பத்தோட நிலமை வார்த்தையால் சொல்லமுடியாத அளவுக்கு இருக்கு”

அன்பரசி சிலையாக நின்று உள்வாங்கிகொண்டிருந்தாள். “ஆமா அன்பு ராஜேஷ் அப்பாவோட பிசினஸ் ரொம்ப டல் ஆகிருச்சு அதனால ஜெனிக்கு அடிபட்ட அன்னைக்கு அவருக்கு நெஞ்சுவலி அதான் ராஜேஷ் ஜெனியோட கேஸ்ல இன்வால்வ் ஆகமுடியல அதான் எதுக்குடா தலைவலின்னு போலிஸ் கேஸை ஆக்சிடன்ட்னு மூடிட்டாங்க; ராஜேஷ் வீட்டுக்கு போனப்பதான். அவங்க அப்பாவோட தங்கச்சி அதான் ராஜேஷ் அண்ணாவோட அத்தை ரொம்ப நாள் சண்டைக்கு அப்புறம் வந்திருந்தாங்க; சின்ன வயசுலேயே அவங்க பொண்ணுக்கு ராஜேஷை பேசி முடிச்சிருந்தாங்கலாம். அதனால் அவங்க கல்யானத்துலேயே குடும்பத்த இனைச்சுகலாம்னு ராஜேஷ் அப்பா ஆசைபட்டார். அதான் அன்னைக்கு பேசி முடிச்சிட்டாங்க” என பூஜா முடித்தாள்.

அன்பரசிக்கு அடுத்த முடிவு என்ன எடுப்பது என்றே தெரியவில்லை. ஜெனியில்லாத வருத்தத்தை உணர்ந்தாள்.

“அன்பு எங்கள வாழவச்ச குடும்பத்துக்காக உன்கிட்ட ஒரு பிச்சை கேட்குறேன்டி” என அன்பரசியின் இருகைகளையும் பற்றினாள்.

“ஏண்டி இப்படிலாம் பேசற” என குரல் கனக்க கூறினாள் அன்பு.

“இல்லடி இந்த கல்யானம் நடந்திருச்சுனா ராஜேஷ் பிசினஸ் டெவலப் பன்ன வரதட்சனையா நிறைய காசு கிடைக்கும்டி. அதும்ட்டும் இல்ல ரொம்ப வருசமா பிரிஞ்சிருந்த குடும்பம் ஒன்னு சேரும். ராஜேஷோட அப்பா நிம்மதியா இருப்பாரு அன்பு.” என அனபரசியின் முகத்தை பார்த்தாள்.

இறுகிய முகத்துடன் அன்பரசி “சரி பூஜா எனக்கு ராஜேஷ் சந்தோசமா இருக்கனும்” என அழுதாள்.

“அன்பு இன்னொரு விசயம் ராஜேஷ் மனசுல நீ மட்டும்தான் இருக்க அவனுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலடி. உன்ன கூட்டிட்டு எங்காவது கண்காணாத இடத்துல வாழனும் இல்லைனா செத்துடனும் அப்புடின்னு அவன் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசிக்கிட்டு இருந்தான்டி. ராஜேஷ் வாழ்கை உன் வாரத்தையிலதாண்டி இருக்கு ராஜேஷ் மனசை நீதான் மாத்தனும் நான் வேனா உன் கால்ல விழறேன்” என அழுதுகொண்டே விழபோன பூஜாவை தடுத்து எழுப்பிவிட்டு கண்ணீரை துடைத்துவிட்டாள் அன்பரசி.

“ராஜேஷாட அத்த பொண்ணு நல்ல பொண்ணா ராஜேஷை சந்தோசமா பாத்துப்பாளாடி” என பூஜாவிடம் கேட்க “அவள் தங்கம்டி உன்னை மாதிரியே உனக்கு ஒரு தங்கச்சி இருந்தா எப்புடி இருப்பாலோ அந்த மாதிரி பாத்துப்பாடி ” என அழுதுகொண்டே பூஜா மனமகள் பெயரை கூறினாள் நிச்சயம் அது அன்பயசி என்று இல்லை. அதானால் அன்பரசியின் இதயத்தில் முள்கிரீடம் வைத்ததை போல இருந்தது.

“எப்புடிடி நீ காலேஜ் பர்ஸ்ட் வர்ர ஆமா உங்க அப்பா இல்லை அப்புறம் உனக்கு யாரு ஃபீஸ் கட்டுறா?” என கேட்கும் தோழிகளிடம் “கயவுள்டி” என கூறிவிட்டு பூஜா ராஜேஷ் இருந்த திசைநோக்கி பார்த்ததின் விஸ்வாசம் இன்றுதான் உணரமுடிந்தது அன்பரசியால்.

“நீ அழாத பூஜா நான் பாத்துகிறேன்” என கண்ணீரை துடைத்துகொண்டவள் கேன்டினை நோக்கி நகர்ந்தாள். செல்லும் வழியில் அன்பரசியின் மனசாட்சி அவள் காதலுடன் போட்டியிட்டது.

‘ஏண்டி அன்பு நீ செல்ஃபிஸ்டி ஏதோ ஒரு மூனாவது மனுசி உன் காதலனோட வாழ்கை நல்லா இருக்கனும்னு உன் கால்ல விழறா அதுவும் படிக்க உதவி செஞ்துக்கே. ஆனா நீ அவனையே காதலிச்சுட்டு அவனோட அப்பா செத்தாலும் பரவாயில்லை குடும்பம் நடுதெருவுக்கு வந்தாலும் பரவாயில்லை. அவன் மட்டும் வேனும்னு நினைக்குறியே நீயெல்லாம் ஒரு பொண்ணா இதுக்கு விபச்சாரிங்களே மேல்டி’ இதயத்தை குடைவதைபோல இருந்தது. குடைந்து உள்ளே ஒளிந்திருந்த காதலெனும் செல்லபிராணியை வெளியே எடுத்தாள்.

“ராஜேஷ் எனக்கு உன்னோட நினைவுகள் மட்டும் போதும்டா நான் அதோடயே வாழ்ந்துடுவேன் நீ நல்லா இருக்கனும் உன் குடும்பத்த பாரு. ஆமா இனி அது நம்குடும்பம்னு என்னால சொல்லமுடியாதுடா என்னோட உயிர் உனக்காக துடிச்சுகிட்டே இருக்கும்டா” என செல்லபிராணியின் இதயத்தில் கத்தியை இறக்கினாள்.

அது துடித்துகொண்டே அன்பரசியின் மனசாட்சியை பார்க்கவே இவளால் அழகையையும் உணர்ச்சியையும் கட்டுபடுத்த முடியவில்லை. தரைதளம் இடிக்கபட்ட கட்டிடம் போல கேன்டீனில் ஜெனியின் சாட்சியாக முதலில் காதல் தெரிவித்த இடத்தில் சரிந்து அமர்ந்தாள். அவளது இதயம் அந்த காதலெனும் செல்லபிராணியை காப்பாற்ற மனசாட்சியின் காலில் விழுந்து கதறிகொண்டிருந்தது. அன்பின் மனமும் சிறிது கரைந்து கொண்டிருக்க காதல் துடித்தது.

அப்போது அந்த எக்ஸ்பைரி ஆனா பாட்டி வந்து அன்பயசியின் எதிரில் அமர்ந்தார். அவரை பார்க்க தன் இறந்த பாட்டி எதிரில் வந்து அமர்ந்ததை போல இருந்தது அன்பிற்கு.

“ஏம்மா அழுதுகிட்டு இருக்க நீ அழுதா நல்லாவே இல்ல வழக்கம்போல என்ன எதாவது திட்டுமா அது என் மகள் திட்டுறது மாதிரியே இருக்கும்மா” என அவர் கூற அவரது அந்த வண்டி அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.

மேஜையில் தலைசாய்த்திருந்த அன்பரசி யின்  கார்கூந்தல் அவளது முகத்தை மூடியிருக்க பாட்டியின் குரல் கேட்டதும் நிமிர்ந்தாள்.

“ஐய்யோ குட்டி அழுவாதடா என்ன பிரச்சனை? பாட்டிகிட்ட சொல்லு உனக்கு மனசு லேசா ஆகிடும்” என்றார்.

அன்பரசியும் அழுதுகொண்டே பாட்டியின் கையைப்பிடித்து முகம் புதைத்து அழுதாள். தனக்கு ஆறுதலாக தற்போது இருக்கும் ஒரே ஜீவன் இந்த எக்ஸ்பைரி ஆனா பொருள்தான்.

“லவ் பிரட்சனையாம்மா?” என்றார். அன்பரசியும் அழுதுகொண்டே நடந்தவற்றை கூற “ஆமாம்மா அழகான குட்டி தேவதை மாதிரி சுத்திக்கிட்டு இருப்பா” என ஜெனியின் மரணம் பற்றி கூறியதும் கண்ணில் நீர் வடித்தார் அந்த பாட்டி.

ராஜேஷ் சம்பந்தமான தன் முடிவை பற்றி பாட்டிக்கு அன்பரசி வெளிபடுத்தவே துடித்துக்கொண்டிருந்த செல்லக்கிளி இறுதி மூச்சினை சுவாசித்து கொண்டிருந்தது.

பாட்டி தன் சோகத்தையும் வாழ்க்கையையும் பகிர நினைத்தார். அது அன்பின் வாழ்கைக்கு ஓர் வழிகாட்டும் என நினைத்திருப்பார் போலும்.

“இங்க பாரும்மா நானும் தாத்தாவும் லவ் மேரேஜ்தான். அவரு பன்னையாருக்கு கீழ வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. அந்தாளு மூட்டைய தூக்கிட்டு வரும்போது அவ்வளவு கம்பீரமா இருப்பாரு. அதுமட்டுமா ஜில்லாவுலேயே யாரும் அடங்காத பன்னையார் காளையை அந்த மனுசன் தான் அடுக்குனாரு அதுவும் எனக்கு பட்டுப்புடவை எடுத்துகொடுக்கனும்னு ஒரே காரணத்துக்காக தான். அந்த புடவைய கொடுத்துதான் என்னை மடக்கிட்டாரு. நாங்களும் காதலிச்சோம். கண்ணாலேயே நலம் விசாரிச்சுகுவோம். அப்போ நான் அழாகா இருந்தேனோ தெரியாது. என்ன தேவதை இளவரிசின்னு புகழுவாரு. என்ன அவரு கீழ் ஜாதி நான் கொஞ்சம் மேல்ஜாதி நான் ஒரு படிக்காத கழுத. அவரு எங்க கூப்பிட்டாலும் என்னனு கேட்காம பேயிடுவேன். ஒருநாள் அப்புடிதான் தலையில ஒரு முண்டாசு கட்டிகிட்டு வந்தாரு. வழக்கம்போல மலைமேல இருக்குற கேயிலுக்கு போனோம் அப்போ திடீர்னு தாலி கட்டிட்டாரு. எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அப்போதான் முண்டாசை நான் கழட்டி பாத்தேன் தலையில ஒரு வெட்டுக்காயம் இருந்துச்சு. ‘நீ இல்லாம என்னால வாழமுடியாதுடி வா நாம எங்கயாவது பேயிடலாம்னு’ கூப்புட்டாரு என் புருசன் சொன்னதுக்கு அப்புறம் எனக்கு என்ன இருக்கு ரெண்டு பேரும் மாட்டுவண்டி கட்டிகிட்டு ஊரைவிட்டு கிளம்புனோம். அப்போ எங்க ஜாதி ஆளுங்க வந்து வண்டிய மறச்சாங்க அவரு என்ன அங்க ஓடிக்கிட்டு இருந்த ஆத்துல தள்ளி விட்டுட்டாரு அப்போ அவரை அரிவாளால்..” என பாட்டியின் குரல் ததும்பியது.

அன்பரசி பாட்டியையே பார்க்க “அதுக்கு அப்புறம் நான் இங்கவந்துட்டேன்மா கொஞ்சநாள் பைத்தியம்போல சுத்திக்கிட்டு திரிஞ்சேன். இப்போ பஸ்ஸடாப் இருக்குற இடத்துல பிச்சையெல்லாம் எடுத்தேன். ஒரு வழியா கொஞ்ச வருசம் கழிச்சு இந்த காலேஜ் பசங்க இங்க இருக்குற அனாதை ஆசிரமத்துல சேத்துவிட்டாங்க அப்புறம் இங்க வேலை செஞ்சு ஆசிரமத்துக்கு என்னால முடிஞ்ச உதவிய பன்னிகிட்டு இருக்கேன்.”

அன்பரசி பாட்டியை வியப்பாக பார்க்க “நீ ஏன் அப்புடி பாக்குறேன்னு புரியுதும்மா; நீங்க ஏன் கல்யானம் பன்னிக்கலை அப்படிதான? ம்ம்ம் அந்த ஆளு கட்டுன தாலி என் முந்தானையிலேயேதான் இருக்கு அவரோட நினைப்பு மட்டும் போதும்மா நான் சாகுற வரைக்கும் இருந்துடுவேன் உன்ன பாத்த அவரு ஆசைப்பட்டு என்கிட்ட கேட்ட மகள் ஜாடையில் இருக்க அதான் என் மனசில் இருக்குறத உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு அதான் சொன்னேன். எந்த கஷ்டம் வந்தாலும் நாம நினைக்க சந்தேஷமான அந்த சில நொடிகள் போதும்மா” என பெருமூச்சு விட்டபடி எழுந்து அந்த வண்டியை தள்ளிக்கொண்டே நடந்தார்.

அன்பரசியின் இதயகூட்டில் இருந்து எடுக்கப்பட்ட காதல்கிளி தன் உயிரை விட்டிருந்தது. அந்த இடத்தில் முழுவதும் ராஜேஷின் நினைவுகளால் நிரபபினாள்.

கேன்டீனின் வெளியில் சலசலப்பு சில தோழர்கள் பேசிக்கொண்டு வருவதை போல தெரிந்தது. “மச்சி டேய் அழாதடா ஜெனி நம்மகூடதான் இருக்கா” இது ராஜேஷின் ஆறுதல் வார்த்தை.

ஜெனியின் மரணம் தாக்கியது அன்பயசியை மட்டும் அல்ல ஆசிக்கும் பாதிக்கபட்டிராந்தான். அவனது மனதை திடபடுத்தவே தோழர்கள் முயன்று கொண்டிருந்தனர். “என்ன விடுங்கடா நான் ஜெனி கூடவே போயிடுறேன்” ஆசிக்கின் ஆதங்கம்.

“டேய் ஏன்டா லுசுமாதிரி பேசற நீ சாகுறத ஜெனி விரும்புவாளா? சொல்லு நீ நல்லா வாழுரத உன்கூடயே இருந்தா பாப்பாடா அததான் அவ ஆசைப்படுவா” ராஜேஷ் சமாதானபடுத்திகொண்டே வர உள்ளே அன்பரசியை பார்த்தான்.

அவன் வந்ததை அன்பரசியால் உணரமுடியவே அவளோ அவனுக்கு முதுகை காட்டி அமர்ந்திருந்தாள். தன் கையிலிருந்த கைக்குட்டையால் தன் கண்ணீரை முழுவதும் துடைத்துகொண்டாள். அவள் முகத்தில் ஜெனிக்கான வருத்தம் மட்டுமே இருந்தது.

“டேய் கொஞ்சம் இருங்கடா அன்பரசிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என அன்பரசியை நோக்கி நடந்தான்.

அவன் வருவதை உணர்ந்தவள் “உங்க பாட்டி இறந்துட்டாங்கனு கேள்விப்பட்டேன் என்னால வரமுடியலடி சாரி” என்றான் அன்பரிசியின் எதிரில் அமர்ந்துகொண்டு. அவனது கண்களை பார்க்கமுடியாதவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவள் முகத்தில் சிறு கோபம் இருக்கிறது என உணர்ந்தான்.

“ஏய் நில்லு அன்பு ஏன் என்மேல கோபமா”  அவள் எதுவும் பேசாமல் நடந்துகொண்டே இருந்தாள். அவனும் எழுந்து பின்னாலயே நடக்க ஆரம்பித்தான். அவள் முகத்தைகூட திருப்பாமல் நடந்து கொண்டிருந்தாள்.

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை?” என்று கையை பற்றினான். அவனிடமிருந்து கையை உதறியவள் அனலாக முறைத்தாள். “இந்தாடா சொடுக்குபோடு” என எப்போதும் கைகளை நீட்டுபவள் இன்று இவன் தொட்டதற்கே கோபமடைகிறாள். வேறு ஒரு பெண்ணிற்கு உரிமையானவனை தீண்டகூடாது என்ற அவளது மனது அது. ராஜேஷோ குழப்பத்தில் நின்றான்.

‘இவ மனசுல என்னதான் இருக்கு ‘ என தனக்குள் கேள்விகேட்ட நேரம் தன் நிச்சயதார்த்தம் நினைவுக்கு வந்தது. ராஜேஷ் அதை பற்றிதான் அன்பிடம் பேசாலாம் என்று வந்தான்.

சுதாரித்தவன் ஓடி சென்று அன்பின் முன் நின்றான். “ஏய் எனக்கு நிச்சயமாயிடுச்சு அதுதான உன் பிரச்சனை; என்ன பாரு அன்பு ” எனவே குனிந்துகொண்டே இருந்தாள்.

“நான் எல்லாம் பிளான் பன்னிட்டேன் நாம காலேஜ் முடிஞ்சதும் சென்னைக்கு போறோம். அங்க என் பிரண்டு கிட்ட எல்லாம் பேசிட்டேன். அவனுக்கு தெரிஞ்ச ஸ்கூல்ல நாம ரெண்டு பேருக்கும் வேலை வாங்கிட்டேன். நாம யாருக்கும் தெரியாம கல்யானம் பன்னி சந்தோஷமா இருக்கலாம்டி எனக்கு நீ உனக்கு நான் இந்தா ஆர்டர் காப்பி” என ஒருதாளை கையில் நீட்டினான்.

அவனை நிமிர்ந்துபார்க்க தைரியம் வரவழைத்தவள் அவனது கண்களை பார்க்காமல் நிமிர்ந்தாள். “இதெல்லாம் எதுக்கு ராஜேஷ் பன்ற” என்றாள்.

“நீ என் பொண்டாட்டி டி நான் பன்னாம வேற யாரு பன்னுவா” என்றான். “பொன்டாட்டியா அந்த உரிமைய உணக்கு யாரு கொடுத்தா?”

“என்ன அன்பு உளர்ர நீ ஜெனி செத்ததால டிஸ்ட்ரப்டா இருக்கேன்னு நினைக்குறேன் ஆனா நான் தெளிவா இருக்கேன்”

“லுக் ராஜேஷ் ஜெனி சொன்னால்தான் உன்ன லவ் பன்றமாதிரி நடிச்சேன் அப்போதான் நீ என்ன தொந்தரவு பன்னாம இருப்பனு சொன்னா அதுமட்டுமில்ல என் படிப்புக்கு எந்த பாதிப்பும் வரகூடாது அதான் அப்புடி நடிச்சேன்” என மனதில் இருந்த காதல் கிளிக்கு சாமாதி எழுப்பி கொண்டிருந்தாள்.

ராஜேஷுக்கு இதயத்தில் ஓர் வலி ஏற்பட்டது. உலகமே இருண்டுது போல தோன்றியது. “என்ன அன்பு சொல்ற?” என்றான்.

“நான் என்னடா சொல்லனும் நீ கெளம்புறியா ஜெனியே செத்துட்டா அவகுடுத்த அறிவுரை மட்டும் எனக்கு எதுக்கு?” என கண்ணீர் விழிக்குள்ளேயே கட்டுபடுத்த பட்டது.

இப்போ முடிவா என்ன சொல்ற”

எனக்கும் உனக்கும் செட் ஆகாது சரியா நீ உன் லைஃப்பை பாத்துகிட்டு போ” என கத்திகொண்டிருந்தாள் அன்பரசி.

நீ தாண்டி என் லைஃப் உன்னை விட்டுட்டு எபடிடி இருக்க முடியும்”

பைத்தியாமா நீ”

ஆமாடி உன்னை லவ் பன்னேன்ல நான் பைத்தியம்தான்”

லவ்வா?! ஆனா நான் உன்னை லவ் பன்னலையே “

என்ன லவ் பன்னலையா அப்போ என்கூட பழகுனது எல்லாம் பொய்யா”

பச்ச். நான் எப்போதாவது உன்னை லவ் பன்றேன்னு சொல்லிருக்கேனா?”

சற்று சிந்தித்தவன் “இல்லை ” என தலைகுணிந்தான்.

பின்ன ஏன் என்னை டார்ச்சர் பன்ற”

நீ பழகுனது எல்லாம் பொய்யா”

அன்பரசியின் கண்கள் சிவந்தன “டேய் நான் உன்கூட பழகுனது ஒரு ஃபிரண்டாதான் அதுமட்டுமில்லாம எனக்கு செலவு பன்ன ஒருத்தன் தேவைபட்டான் போதுமா அதான் உன்கூட பழகுனேன்” என முடித்தாள்.

ச்சீ நீ இவ்வளவு கேவலமான பொண்ணா.. காசுக்காக என்ன வேணாலும் பன்னுவியா நான் உன்னை இப்படி எதிர்பாக்கலைடி. இனி உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன். த்தூதூ! இந்தா அப்பார்ட்மெண்ட் ஆர்டர் உன்கூட பழகுன பாவத்துக்கு உனக்கு இதையாவது பன்றேன்” என அந்த ஆர்டரை அவளது முகத்தில் பறக்கவிட்டான்‌ கோபத்துடன் செல்ல அன்பரசி அங்கேயே அமர்ந்த தன் மடியில் தானே தலைசாய்த்து அழுதாள்.

அவளுக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. மனதோ “ராஜேஷ் போடா நீ என்ன தப்பா நினைச்சாலும் பரவாயில்லை நீ நல்லா இருக்கனும்டா உன்ன என் வார்த்தைகள் கஷ்டபடுத்தியிருந்தா என்ன மன்னிச்சிடுடா” என குமுறி கொண்டு அழுதாள். அவர்களது காதல் சாட்சியாக இருந்த மரம் அன்பரசியின் தோளுக்கு இடம் கொடுத்துகொண்டிருந்தது‌ அதில் சாய்ந்துகொண்டு தலை கவிழ்த்தி கண்ணீர் வடித்தாள்.

கல்லூரி நாடகளில் அன்பரசி ராஜேஷை பார்ப்பதை தவிரத்தாள். சிலநாட்கள் உடல்நிலை சரியில்லை என விடுமுறைகளும் எடுத்துகொண்டாள். ஒரு வழியாக சில நாட்களில் கல்லூரி தேர்வுகள் முடிவடையவே அனைத்து பறவைகளும் பிரிந்தன பறந்தன.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள் அன்பரசி. தன்னவன் இல்லை ராஜேஷ் தனக்கு கொடுத்த இறுதி பரிசான கடிதத்தை பார்த்தாள். இன்னும் ஒரு வார்த்தில் ஜாயினிங் டேட். அதை எடுத்து தன் ஃபைலில் வைத்துக்கொண்டாள்.

“அன்பு கிளம்புமா அது வேற ஏன்டா லேட்டுனு கத்தபோறான் நீயும் சீக்கிரம் கிளம்புடி சும்மா இப்போதான் புது பொண்ணு மாதிரி ஜோடிச்சிட்டு இருப்பா” என குடும்பமே பரபரப்பாக கிளம்பிகொண்டிருந்தது.

ஆம் விதியின் விளையாட்டு சதுரங்கத்தை விட சற்று சிக்கலானதுதான். போஸின் நண்பர் தான் ராஜேஷின் அப்பா. போஸுக்கு தெரியாதவர்கள் யாரும் சுற்றுகிராமங்களில் இருக்க வாய்ப்பில்லை. இன்று ராஜேஷின் திருமணம். அதற்குத்தான் அனைவரும் கிளம்பிகொண்டிருக்கின்றனர்.

“நான் வரலைப்பா” என அன்பரசி எவ்வளவோ முயற்சித்தும் “பாட்டி செத்ததுல இருந்து வீட்டுக்குள்ளேயே கிடக்க நாலு மனுசங்கள பாத்தாதான் மனசுக்கு லேசா இருக்கும்” என போஸும் “என்னடி பொட்டபுள்ளைக்கு திமிரு கிளம்புடி அப்பா பேச பேச எதிர்பேச்சு பேசறா” என பார்வதியும் சேர்ந்து சமாளிக்க வைத்துவிட்டனர்.

வேறு வழியில்லாமல் கிளம்பிகொண்டிருந்தாள். இறுதியாக கல்யான மன்டபத்தை அடைந்தனர். செல்லும் வழி எல்லாம் எதிரில் வந்த நண்பர்களை விசாரித்து கொண்டும் வணக்கம் வைத்துகொண்டும் நடந்துகொண்டிருந்தார் போஸ். தன் தந்தையின் செல்வாக்கை அப்போதுதான் உணர்ந்தாள் அன்பரசி.

“வாங்க வாங்க மிலிட்டரி காரரே” என ராஜேஷின் அப்பா போஸின் கையை பிடித்து அழைத்துசென்றார். அப்போது ராஜேஷ் தன் தந்தையிடம் ஏதோ கூறுவதற்காக வந்தான். அப்போது அங்கு நின்றிருந்த அன்பரசியை பார்த்தான் அவனது கண்கள் கலங்கின. அவளது கண்களும் கலங்கவே கைக்குட்டையால் கண்ணை துடைத்துகொண்டாள்.

“ஏய் யாருப்பா அது இந்த லைட்ட கொஞ்சம் ஆஃப் பன்னுங்கப்பா சும்மா கண்ணு கூசுது” என ராஜேஷின் அப்பா திட்ட ஒருவன் வயரை அவிழ்த்துவிட்டான். அதற்குள் அன்பரசியின் முகத்தை பார்க்க தெம்பில்லாமல் ராஜேஷ் அங்கிருந்து நகர்ந்தான்.

அன்பரசியோ ராஜேஷின் கண்ணுக்கு தெரியாமல் ஓர் இருக்கையில் அமர்ந்தார். “என்ன மருமகளே இது நம்ம வீட்டு கல்யாணம் முன்னாடி வாம்மா” என ராஜேஷின் தந்தை அழைத்தார். அவர்கூறியது அன்பரசியின் மனதை மேலும் தாக்கியது.

“இப்போ மட்டும் மருமகன்னு சொல்லு பிசினஸ் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்ச ஊர்பக்கமே தலை காட்டுறது இல்ல” என போஸ் அவரை அன்பாக திட்டிக்கொண்டே முன் இருக்கையில் அமர்ந்தார். அன்பரசியும் வேறு வழியில்லாமல் சென்று அமர்ந்தாள்.

இரண்டு தோழர்களும் பேசிக்கொண்டிருக்க ராஜேஷின் தாய் வந்து அவனது தந்தையின் காதில் ஏதோ கூற அவரது முகம் சோகமாக மாறியது. அதை கவனித்த போஸ்.

“என்னடா எதுவும் பிரச்சனையா?” என்றார்.

பின் அவர் சுற்றிலும் பார்த்துகொண்டு தன் தோழனின் அருகில் சோகமாக அமர்ந்தார். “சொல்லுடா என்ன பிரச்சனை” மீண்டும் போஸ் கேக்க‌.

“என் மவனுக்கு இந்த கல்யாணத்துல இஸ்டம் இல்லையாம்” என்றார். போஸ் அதிர்ந்தார்.

“ஆமடா அவனுக்கு மொத இருந்தே விருப்பம் இல்லடா காலேஜ்ல யாரையோ லவ் பன்னானாம் ஆனா ஒரு வழியா அவனே இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தான். ஆனா இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலைடா மறுபடியும் பிரச்சனை பன்றான்” என தலையில் கைவைத்து அமர்ந்தார். அதை கேட்டுக்கொண்டிருந்த அன்பரசியின் மனதில் ‘ஐய்யோ நான் இங்க வராமலேயே இருந்திருக்கனும் இப்போ என்ன பாத்துதான் இவன் இப்படி பன்றான்’ என மனதில் குமுறினாள்.

“வாடா நான் என்னனு பாக்குறேன்” என போஸ் கூறவே இருவரும் மனமகன் அறைக்கு நுழைந்தனர். அவர்கள் செல்வதை அன்பரசி பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள் ஒரு குற்ற உணர்வுடன்.

“அதான் சொல்றென்லம்மா இந்த கல்யானத்த நிறுத்துங்க எனக்கு விருப்பம் இல்லை நீங்க பிசினஸ் வளக்குறதுக்கு என வாழ்கைதான் கிடைச்சதா?” என தன் மனதில் இருந்த காதல் அவனை பேச வைத்தது.

“டேய் இந்த கல்யாணம் நடக்கலைனா நம்ம குடும்பம் சேராமயே போயிடும்டா” என அவன் தந்தை கூறவே.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்ப்பா என்ன தொந்தரவு பன்னாதீங்க” என்றான்.

“சரிடா நீ லவ் பன்ற பொண்ணு யாரு சொல்லு அவளையே கல்யாணம் பன்னி வச்சுடுறோம்” என அவன் தாய் கூறினாள். அப்போது அங்கு நின்றிருந்த போஸை பார்த்தவனுக்கு அவர்மீது ஊர் வைத்திருந்த மரியாதை தெரியும் ஆனால் அவர் அன்பரசியின் தந்தை என்பது இப்போதுதான் தெரியும் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. “அவ செத்துட்டா‌ போதுமா நான் அவளை நினைச்சே வாழ்ந்துக்குறேன்” என கத்தினான்.

போஸிற்க்கு நிலைமை புரிந்தது. பளாரென்று அவனுக்கு அறை வைத்தவர் “ஏன்டா நீ எடுக்குற முடிவுல ஒரு பொண்ணோட வாழ்கையை நினைச்சு பாத்தியா? உன்னையே நினைச்சுகிட்டு இருந்தவ மேடையில வந்து கல்யாணம் நின்னா அவளை யாருடா கல்யாணம் பன்னிப்பா? நீ ஒரு பையனா உனக்கு பரவாயில்லை ஆனா ஒரு பொண்ணா அவ என்ன பன்னுவா தொலைச்சுபுடுவேன் ராஸ்கல்” என மனப்பென்னை மனதில் வைத்து பேசினார்.

ராஜேஷின் காதல் அணை பெண்ணின் வாழ்கை என்ற மதகால் அடைக்கப்பட்டது. சிறுதுநேரத்தில் மணமேடையில் அமர்த்தபட்டான். அன்பரசியோ அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள். அவனும் அவ்வாறே இருந்தான். “மாப்பிள்ள சிரிங்க” என்ற போட்டோகிராபரின் வார்த்தையால் போலியாக சிரிக்க முயன்றான்.

அடுத்ததாக மனப்பெண் மேடையில் அமர்த்தபட்டாள். அவள் அன்பரசியை பார்த்து “என்னடி ஓகேவா?!” என்பதுபோல சைகை காட்டினாள்.

ஆம் மேடையில் மாலையுடன் அமர்ந்திருந்தது மலர்விழி எனும் மலை. அன்பரசியின் உயிர்தோழி. தங்கை எனும் அந்தஸ்த்தை பெற்றவள்தான்.

அன்பரசி துக்கத்தை கண்ணில் மறைத்துக்கொண்டு தன் தோழியை பார்த்து சிரித்தாள் போலியாக. அந்த நாள் நினைவு அது.

“ஏய் மலர் காதல்னா என்ன நினைக்குற” இது மலர்.

“அது ஒரு வரம்டி அவருக்காக நானும் எனக்காக அவரும் வாழுறது” என ராஜேஷை நினைத்துகொண்டு கூறினாள் அன்பு.

“என்னடி ரொம்ப ஃபீல் பன்னி சொல்ற யாரையும் லவ் பன்றியா” என இடுப்பை கிள்ள செல்லமாக சிணுங்கினாள். ” யாருடி அது” என்றாள் மலர்.

“அது காலேஜ்லடி! நான் உனக்கு நேர்ல ஒருநாள் காட்டுறேன். சரி நீ ஏன் காதலை பத்தி திடீர்னு கேக்குற உன் வலையில யாரும் விழுந்துட்டானா?” என்று தன் தோழியை சீண்டினாள்.

“இப்போ இல்லடி என் மூனு வயசுலேயே என் மாமா பையனுக்கு என்ன பேசி முடிச்சுட்டாங்கடி அப்புறம் ஏதோ சண்டைனு சொல்லி ரெண்டு குடும்பமும் பிரிஞ்சுட்டோம். எனக்கு அவரை பாக்கனும்னு ஆசையா இருக்கு. எங்க கல்யாணத்தால எங்க குடும்பம் ஒன்னு சேரனும்டி” என கண்கள் விரிய கூறிய மலர் அன்பின் முன் இன்று தன் மாமாவுடன் மனப்பெண்ணாக.

பூஜாவின் அந்த வார்த்தைகள் “அவ உன் தங்கச்சி மாதிரிதாண்டி. அவ வேற யாரும் இல்லை உன் உயிர்த்தோழி மலர்விழிதான்.” இதுதான் அன்பரசியின் காதல் கிளியை இதயகூட்டிலிருந்து வெளியே எடுத்தது.

அன்பரசியின் கையிலிருந்த மலர்கள். தன் தோழி மலரின் மீது விழ அவள் கழுத்தில் மாங்கல்யம் சூட்டப்பட்டது. கண்ணீருடனும் தன் தோழிக்கு கிடைக்கப்போகும் அன்பான வாழ்க்கையையும் எண்ணி மகிழ்ந்து அங்கிருந்து கிளம்பினாள். வீட்டில் தன் அறையில் வந்து அழுதவள் அப்படியே உறங்கி போக அவளருகில் கிடந்த ராஜேஷின் புகைப்படம் போஸின் கையில் சிக்கியது. தன் தோழிக்காக தன் காதலையே விட்டுகொடுத்திருக்கிறாள் என எண்ணும் போது போஸின் கண்களில் நீர் வடிந்தது.

தன் மகளின் மனதை இதற்குமேல் கஷ்டபடுத்தகூடாது என நினைத்த போஸ் தன் அன்பை சற்று கட்டுப்பாடாக மாற்றி தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்கையை தேடினார் தான் இறப்பதற்கு முன்.

இந்த வீட்டில் தன்னை பிரிந்த பலரின் நினைவுகள் சுற்றுவதால் “அப்பா எனக்கு சென்னையில வேலை கிடைச்சிருக்கு” என ஊரிலிருந்து கிளம்பி வெகுதூரம் செல்ல நினைத்தாள்.

“பொம்பளபுள்ள அவ்வளவு தூரம் போக வேணாம் இங்க வீட்டுல இரு இல்ல உனக்கு ரொம்ப போர் அடிக்குதா சொல்லு பக்கத்து ஊர்ல இருக்குற ஸ்கூல்ல வேலைக்கு பேசுறேன் வெளியூர்லாம் போகவேணாம்” என தடுத்தார் அதில் தன் மகள் தன் கண்பாராவையிலிரூந்து மறைந்தாள் தன் கவலைகளை நினைத்து அழுதுகொண்டே இருப்பாள் என்ற பாசம் இருந்தது. பின் அவரின் செல்வாக்கை பயன்படுத்தி அங்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டார்.

பிரியாவை பஸ்ஸில் பார்த்ததும் அவளது முகத்தில் ராஜேஷின் சாயல் தெரிய தன்னை அறியாமல் தன் தோழி மலரிடம் இருந்து அவளை தூக்கிகொண்டு கொஞ்ச ஆரம்பித்திருந்தாள். ராஜேஷும் அன்பரசியை பார்த்தால் அழுதுவிடுவான் எனவே ஊர்பக்கம் வராமலேயே வேலை என சமாளித்தான். ஆனால் மலர் தன் பெரியப்பா போஸை பார்த்துதான் பயப்படுகிறார் தன் கனவர் என நினைத்துகொண்டாள். கல்யான மண்டபத்தில் ராஜேஷிக்கு விழுந்த அறையை ஒளிந்திருந்து பார்த்தால் அல்லவா!.

பிரியாவும் தனக்கு அன்னையாக வந்திருக்க வேண்டியவள் அன்பரசி தான் என உணர்ந்திருப்பாள் போலும் அதனால்தான் என்னவோ அன்பரசியை பார்த்து முதலில் “அம்ம” என்று அழைத்திருந்தாள்.

பள்ளிக்கு முதல்நாள் சென்ற அன்பரசியின் நினைவில் அகலாத அந்த தருனமும் காத்திருந்தது…

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: