Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 29

உனக்கென நான் 29

விமானத்தின் இதயதுடிப்பு அடங்கியதும் அனைவரும் இறங்கி நடக்க துவங்கினர். சந்துருவும் சுவுதாவும் வெளியே வரவே முன்னால் அமர்ந்திருந்த சன்முகம் வெளியே சென்று சந்துருக்காக காத்திருந்தார். “சுவேதா நீயும் இந்த ஓபிளைட்லதான் வந்தியா”

“ஆமா அன்கிள் சந்துருக்கு பக்கத்து சீட்டுதான்” என்றாள். “மஞ்சு சுகுமார் எல்லாம் வந்தாங்களே” சன்முகத்தின் கேள்வி. “அவங்க மூனுபேரும் மதுரையில் மஞ்சு வீட்டுக்கு போயிருக்காங்க அன்கிள்” என்றவளை பார்த்து “ஏன் நீ போகலையாம்மா?!” என்றார். “இல்ல அன்கிள் இன்னும் மூனு நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என சந்துருவை பார்த்தாள்.

“சரிம்மா நாளைக்கு ஃபிரியா இருந்தா வீட்டுக்கு வா” என சன்முகம் கூறும்போது சுவேதா கார்பார்கிங்கில் நின்றாள். அவள் நின்ற இடத்தில் ஓர் ஆடி கார் வந்து நிற்கவே “சரி அன்கிள் நான் வாரேன் பாய் சந்துரு” என கூறிவிட்டு சந்துருவை பார்த்து போன் பன்னு என கையால் சமிக்கை கொடுத்தாள். அவனும் புரிந்துகொண்டு தலையாட்டினான்.

கையில் ஃபேனை எடுத்தவன் ஆன்செய்தான். “ஹலோ சிதம்பரம் நாங்க வந்துட்டோம் இங்க பார்கிங் வாசல்லதான் இருக்கோம்” என சந்துரு கூறவே ஓர் விலையுயர்ந்த கார் வந்து நின்றது. உள்ளே இருந்து டிரைவர் சன்முகத்தை பார்த்து “என்ன ஐயா பிரயானம் எல்லாம் எப்புடி இருந்துச்சு” என கேட்க “நல்லா இருந்துச்சு சிதம்பரம்” என அமைதியானார்.

“தம்பிக்கு கல்யானம்னு சொன்னாங்க போன இடத்துல பேசிமுடிச்சுட்டீங்களோ ஆடிட்டர் சொன்னாரு ” என ஆதங்கபட்டார்.

“ஆமா சிதம்பரம் என்னோட பிரண்டு நான் இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கேன்னா அவன்தான் காரணம் இப்போ அவன் பொண்ணையும் எங்க வீட்டுக்கு குடுக்க சம்மதிச்சுட்டான் வேற என்ன வேணும் எனக்கு இந்த ஆயிசுக்கும் அவனுக்கு என்னால நன்றிகடன அடைக்க முடியாது” என முடித்துவிட்டு “சாரி சிதம்பரம் திடீர்னு முடிவாகிருச்சு அதான் உன்னை கூப்பிட முடியலை தப்பா எடுத்துகாத” என்றார் சன்முகம்.

“அட ஐயா நீங்கபோய் ஏன்யா மன்னிப்பு கேட்டுகிட்டு நான் உங்கவீட்ல டிரைவரா இருக்குதே நீங்க போட்ட பிச்சை” என முதலாளியிடம் தன்னிலை உணர்த்தினார்.

வேலையாட்களை தன் குடுமபம் என நினைப்பவன் சந்துரு; சிதம்பரம் இப்படி கூறியதற்கு இந்தநேரம் “அண்ணே நீங்க அப்படி நினைச்சீங்கன்னா என்கிட்ட பேசாதீங்க நம்ம எல்லாம் ஒரே குடும்பம்னே” என திட்டியிருப்பான். ஆனால் இன்றோ மூடபட்ட கண்ணாடியில் எதையோ வெற்த்துகொண்டு வந்தான். கண்கள் திறந்திருந்தாலும் மனத்திரையில் பல நிகழ்வுகளை ஓட்டிகொண்டிருந்தான்.

பெரிய இரும்பு கதவு திறக்கபடவே பளிங்கு கற்களால் இழைத்தெடுக்கபட்ட மஹால் என ஒரு வீட்டில் நுழைந்தது அந்த ரதம். சந்துருவின் வருகையை பார்த்து அனைவரும் ஆச்சரியடவே உள்ளூர மகிழ்ச்சியும் அடைந்தனர். அதிலும் தன் முதலாளிக்கு கல்யானம் என்றாள் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

“அம்மா இனி உங்ககூட சமையலறையில சண்டைபோட ஒருத்தி வரபேறா” என சிரித்துகொண்டே சொல்வான் என்று எதிர்பாரத்தாள் முனியம்மாள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது அவனோ அமைதியாக எதையோ யோசித்துகொண்டே தன் அறையை நோக்கி நடந்தான்.

சரி பயனகலைப்பு என விட்டுவிட்டு “தம்பி பூஸ்ட் போட்டு எடுத்துட்டு வரவா” என்றாள். “இல்லமா நான் கொஞ்சம் தூங்குறேன் கொஞ்சம் தலை வலிக்குது” என உதட்டை பொய்யாக அசைத்துவிட்டு நகர்ந்தான்.

தன் அறையில் சென்று கட்டிலில் தன் கைபேசியை வீசினான். அப்படியே தலையனையை முதுகில் வைத்துகொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். எதிரில் மாட்டியிருந்த காவேரியின் புகைபடம் தன் மகனிடம் “ஏண்டா கவலையா இருக்க” என கேட்பதை போல இருந்தது. அவனருகில் இருந்த அன்பரசியின் சிறுவயது புகைபடம் அவனை ஏக்கமாக பார்க்க அவனோ தன் மனதின் அந்தநாளை மீண்டும் திருப்பினான்.

சந்துருவின் கைகளை பற்றிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் சுவேதா. அவளது கவலைகள் தீரும் வரை அழட்டும் என சந்துருவும் பெறுமை காத்தான்.

“சந்துரு நீ என்ன எந்தமாதிரி பாக்குற” என கேட்டாள் சுவேதா சற்று நிதானமடைந்து

“எந்தமாதிரினா என்ன சொல்லுற?” என எந்த பதில் கூறினாலும் தவறாக முடியும் என நினைத்துகெண்டு கேள்வியை அவளிடமே திருப்பினான்.

“இல்ல ஒரு பெண்ணுனா இப்புடிதான் இருக்கனும்னு நீ மஞ்சுகிட்ட நடந்துகிட்டத வச்சே நான் புரிஞ்சுகிட்டேன் அதான் உன் பார்வையில நான் எல்லாம் ஒரு பொண்ணே இல்லதானே” என கண்ணீரை துடைத்தாள்.

“இங்க பாரு சுவேதா மொதல்ல அழறத நிறுத்து. இந்த உலகத்துல எல்லாரும் அவங்க்வங்களுக்கு பிடிச்ச மாதிரிதான் நடந்துகிறாங்க சரியா இதுல அடுததவங்க அதுல தலையிடகூடாது” என கூறினான்.

“அப்போ மஞ்சுகிட்ட மட்டும் நீ ஏன் அப்படி நடந்துகிட்ட?! அப்புறம் என்ன சரிபன்னும்னு உனக்கு தோனலையா”

“லுக் சுவேதா நான் ஒன்னு சொல்லவா; உனக்கு என்ன எப்போ இருந்து தெரியும்?!”

“அன்னைக்கு மஞ்சுவ தேடி நீ வந்தியே அப்போதான் உன்ன பாத்தேன் அதுக்கு முன்ன மஞ்சு உன்னபத்தி நிறைய சொல்லிருக்கா”

“ஓ அப்புடியா எனக்கு உன்ன நீ இங்க வந்த முதல் நாள்ள இருந்தே தெரியும். ஆமா அன்னைக்கு நீ ரெட் கலர் சர்ட் புளூ ஜீன்ஸ் போட்டுருந்த; எந்த பயமும் இல்லாம ஒரு பெண் சிங்கம் மாதிரி வரண்டால நடந்துவந்த” என்றான். சுவேதா அவனையே கண் இமைக்காமல் பார்த்திருந்தாள்.

“ஆமா எனக்கு சின்ன வயசுல ஒரு பிரண்ட் இப்புடிதான் தொளதொளனு அவங்க அப்பா சட்டைய போட்டுகிட்டு சேட்டை பன்னிகிட்டு. ரொம்ப தைரியமானவ அழகானவ நல்லா அன்பா இருப்பா நீ அவதானு நினைச்சேன்” என தன் மனதில் சிறுவயதில் இருந்த அரிசியை முன்னிருத்தினான்.

“அதுக்கு அப்புறமா தான் உன்னபத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன் ஆனா கலேஜே உன்னபத்தி சொன்னது சுவேதா திமிர்பிடிச்சவ! மச்சி அவளால் பொண்ணே இல்லடா! அது ஒரு மாதிரிடா அப்புடினுதான் சொன்னாங்க ஆனா நான் யாரையும் தப்பா நினைக்கமாட்டேன். அவங்க என்ன சூழ்நிலையில இருப்பாங்கன்னு பாப்பேன்.” என சந்துரு வெளிப்படுத்தினான்.

“ஆமா சூழ்நிலை!! நீ சொன்னது சரிதான் சந்துரு அந்த சூழ்நிலைதான் எனக்கு சரியா அமையால ” என கண்ணில் நீர் வடித்தாள்.

“சுவேதா என்னால உன் கஷ்டத்த உணர முடியுது ஆனா அது என்னனு எனக்கு தெரியல என்ன நீ நம்புனா சொல்லு” என அவள் மனதருகில் நெருங்கினான்.

பெண்களின் மனதை திருடவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை ஆறுதல் தருமாறு கூட இருந்தாலே போதும். சந்துரு அதைதான் செய்தான். குரல் தழும்பியது கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன சுவேதாவுக்கு குளிரால் நடுங்குவதை போல. வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன.

“உன் அம்மாவ ஒருத்தன் உன்  கண்ணு முன்னாடியே சாட்டையால் அடிச்சு கொண்ணா என்ன பன்னுவ?!” என சுவேதா அழ ஆரம்பித்தாள். சந்துருவுக்கோ இதயமே நின்றதுபோல இருந்தது. ஆம் அவனால் காவேரியையும் சரி அரிசியையும் சரி அந்த நிலையில் வைக்க முடியவில்லை.

“என்ன?” என மீண்டும் ஏதேர்ச்சையாக கேட்டுவிட்டான்.

அவள் “அபிநயா என் அம்மா என் கண்ணுமுன்னாடியே செத்தாங்க” என கூறி அழாதுகொண்டே எழுந்து சென்றாள். சந்தருவுக்கும் தன் தாய் இறந்த அந்த நொடி கண்ணில் வந்து சென்றது. ஆனால் அரிசியின் சிரிப்பை தன் மூளையில் பூட்டி வைத்திருந்ததால் சிறிது நேரத்தில் மீண்டான்.

அன்பரசியின் கண்ணிலும் நினைவுகளை ஓட்டிகொண்டிருக்க கைபேசியோ கேட்பாரில்லாமல் கிடந்தது. அன்று ராஜேஷின் கண்ணீரை துடைத்தவள். “நான் காத்துருக்காம யாருடா காத்திருக்க பேறா நீ நாம்மளோட குடும்பத்தோட நிலைய சரிபன்னிட்டு என்ன பொண்ணு கேளுடா” என அவனது குடும்பத்துடன் தன்னை இனைத்திருந்தாள்.

“சரிடி பொண்டாட்டி” என அவளை சிரிக்க வைத்தான் ராஜேஷ். இருவரும் கைகோர்த்து கேட்டின் அருகே வந்தனர்.

“ட்ரிங் ட்ரிங் ட்ரிங்” என சைக்கிளின் மணியோசையை எழுப்பிகொண்டு “இந்த லவ்பேர்ட்ஸ் கொஞ்சம் வழிவிட்டு பறந்தீங்கன்னா நல்லா இருக்கும்” என ஜெனி இருவரின் பின்னாடியும் சைக்கிளில் வந்தாள்.

“ஏம்மா உனக்குத்தான் அவ்வளவு இடம் இருக்குள்ள” என ராஜேஷ் சிரிக்க “ஏய் ஜெனி நீதான் அப்போவே கிளம்பிட்டியே ஆனா இப்போ எங்க பின்னாடி வந்துகிட்டு இருக்க” என சந்தேகமாக கேட்டாள் அன்பரசி.

அன்பரசி யின் கைகளை பிடித்திருந்த ராஜேஷோ “அவ ஆசிக்கை கொஞ்சிட்டு வந்திருப்பா” என ராஜேஷ் சிரித்தான். “என்ன ஆசிக்கா? யாரு அந்த கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்டா?” என அன்பரசி கேட்கவே

“ஆமா அந்த ஆசிக் முகமது தான் ” ராஜேஷ் கூறும் முன் ஜெனி இவர்களை கடந்து ஒரு ஐம்பது அடி சென்றிருப்பாள்.

உடனே அன்பரசி “ஏய் ஜெனி நீ கூட லவ்பேர்ட் தானா” என கத்தினாள் மகிழச்சியில். அன்பரசியின் ஓசை ஜெனியின் காதினை அடைய அவள் சைக்கிளை ஓட்டியபடியே தன் தோழியை திரும்பிபார்த்து சிரித்தாள்.

“ஜெனி………” என அன்பரசியின் தொண்டையிலிருந்து பலத்த குரல். அந்த நொடி ஜெனியின் எதிரில் வந்த ஒரு அம்பாசிடர் காரிலிருந்து ஒரு கைவெளியே வந்து ஜெனியின் கழுத்தில் வருடவே. அதன் விரல்களுக்கு இடையே கூர்ந்த பிளேட் இருந்தது.

ஜெனியின் பூபோன்ற கழுத்தில் சிகப்பு குருதி பீறிடவே அவளது சைக்கிள் அவளை பிரிந்து ஓரமாகவிழ அதிலிருந்த கேமிராவின் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. ஜெனியோ ரோட்டின் நடுவில் விழுந்தாள்.

குரல்வளையில் வெட்டபட்டதால் ஜெனியால் கத்தமுடியவில்லை தான் உயிருடன் இருப்பதை உணர்ந்த தன் கைகளை மண்டியிட்டபடி தூக்கி காட்டினாள். கழுத்தில் ரத்தம் வெள்ளமாய் ஓட ராஜேஷும் அன்பரசியும் அவளை நோக்கி ஓடினர்.

மண்டியிட்டிருந்த ஜெனியோ கையால் கழுத்தை பிடித்து குருதியை தடுக்க முயன்றாள். ஆனால் பின்னால் வந்த அந்த லாரி அவள் மீது ஏறி சென்றது. அன்பரசியின் முகத்தில் தன் தோழியின் ரத்தம் தெறிக்கவே பேயறைந்தவள் போல நின்றாள்.

ராஜேஷோ அந்த அம்பாசிடரை பார்க்க அதிலிருந்து வெளிப்பட்ட கை கட்டைவிரலை கீழே காட்டி தோல்விகுறி காட்டி மறைந்தது. அந்த லாரி டிரைவரும் அதே குறியை காட்டி மறைந்தனர்.

ராஜேஷ் அம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தான். அவர்கள் வந்தாலும் ஜெனியின் உடல் ஏற்றப்பட்டது அமரர் ஊர்தியில் தான்.

ஜெனியின் மரணம் மீண்டும் நினைவில் வரகூடாது என்பதால் என்னவோ அன்று சந்துரு தன் தாயின் இறப்பை பற்றி கூறும்போது அவனது வாயை பொத்தினாள்.

ஆனால் இன்றோ அந்த ஃபோன் கால் ஜெனியின் மரணத்தை நினைவுபடுத்திவிட்டது. அந்த ரத்தக்கறை முகத்தில் இருக்கவே அன்பரசி அப்படியே மயங்கி விழுந்தாள். ராஜேஷ் தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளது முகத்தில் தெளித்து எழுப்பினான். அதற்குள் அந்த இடத்தைசுற்றி கூட்டம் கூடியிருந்தது.

தெம்பில்லாமல் விழுந்தவளை கையால் அனைத்துபிடித்திருந்தான் ராஜேஷ். கண் விழித்தவள் “ஐய்யோ ஜெனி இல்ல இல்ல நீ சாகல. திரும்ப வந்துடி ஜெனி. நீ இல்லாம யாருடி என்ன ஃபோட்டோ எடுப்பா ஐய்யோ ஜெனி” என மீண்டும் மயங்கும் நிலைக்கு சென்றாள். மனதினை திடமாக வைத்திருந்த ராஜேஷ் அனபரசியை அங்கிருந்து சற்று தூரம் தள்ளி கூட்டிசென்றான். அதற்குள் ஆம்புலன்ஸ் வரவே அங்கு நின்றிருந்த சங்கீதாவிடம் அன்பரசியை பார்த்து கொள்ளுமாறு கூறிவே சங்கீதாவும் அழுது கொண்டிருந்தாள். ஜெனிக்கு நட்பு வட்டம் மிகவும் பெரியது சங்கீதாவும் அதில் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.

ராஜேஷ் எழுந்திருக்கவே அன்பரசியின் கைபேசி ஒலித்தது. அவள் பிரம்மை பிடித்தவள் போல அமர்ந்திருக்க எடுத்து “பேசுடி” என அவள் காதில் வைத்தான். “ஹலோ” என சக்தியே இல்லாமல் கூறினாள்.

மறுமுனையில் உள்ள நபர் என்ன கூறினாறோ தெரியவில்லை மீண்டும் மயங்கினாள். குழப்பமடைந்த ராஜேஷ் போனை காதில் வைத்து “ஹலோ சொல்லுங்க” என கூற மறுமுனையில்.

“சார் அன்பரசியோட பாட்டிய பாம்பு கடிச்சிடுச்சு இறந்துட்டாங்க கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு கூட்டி வாங்க” என ஒருவர் பேசவே ராஜேஷுக்கு நிலைமை விளங்கியது.

“சங்கீதா அன்ப அவ வீட்டுக்கு கூட்டி போங்க அவங்க பாட்டி இறந்துட்டாங்கலாம். இங்க நான் பாத்துக்கிறேன்” என அனுப்பிவைத்தான்.  துக்கத்தில் மேலும் துக்கம் சொன்ன  செல்ஃபோன் என்றால் அன்பரசிக்கு ஒருவித பயம் தொற்றிகொண்டது. சந்துரு வாங்கிகொடுத்தபேதும்கூட அவள் தயங்கியதின் காரணம் இதுதான்.

சிறுவயதில் இருந்து தன்னை தூக்கி வளர்த்த பாட்டியின் உடலின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளது கண்கள் ஜெனிக்காகவும் சேர்த்து அழுதன. ஜெனியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் கொடுப்பினை கூட இல்லாமல் பேனால். அவளது மனமோ ஒருதிரையில் இரட்டை நினைவுகளை சுமந்தது.

“ஏண்டி காசு கொண்டு வரலைனா என்கிட்ட சொல்லமாட்டியா இப்புடி சாப்பிடாம கிடப்பியா இந்தா தோசை வாங்கி வந்துருக்கு மரியாதையா சாப்புடு. அந்த தேவி வந்து சொல்லிட்டு போறா” என கையில் ஒரு பார்சலுடன் நின்ற ஜெனிபர்.

“ஏய் அரிசி இந்தாடி காசு உங்க அப்பனுக்கு தெரியாம கலப்பு கடையில் போய் கறி வாங்கிதிண்ணுடி உங்க ஆத்தா விரதம் அது இதுன்னு சொல்லி உன்னைய ஒல்லி ஆக்கிடுவா” என தேட்டத்தில் பேத்திக்கு காசுகொடுத்த மாரியம்மாள்.

“ஜெனி எங்க வீட்டுக்கு நீ எப்போ வரப்போற ” என்ற அன்பிடம் “உனக்கும் ராஜேஷுக்கும் எப்போ கல்யானம்னு சொல்றியோ அப்போ உங்க வீட்டுக்கு நான் கன்டிப்பா வாரேன்டி “- ஜெனி.

“பாட்டி வீட்டுக்கு ஏன் வரமாட்டேங்குற” என்ற அன்பிடம் “உன் கல்யாணத்துக்கு தாண்டி வருவேன் ” என கன்னத்தை கிள்ள “போ பாட்டி நீ வரவே வேணாம் நான் கல்யாணம் எல்லாம் பன்னிக்கமாட்டேன்” என துள்ளிக்குதித்து ஓடிய நினைவுகள்.

“ஏய் ரோட்டுல போகும்போது பராக்கு பாக்காம போடி. எல்லா விசயத்துலையும் அசால்டா இருக்காத தனியா விழுந்ததால தப்பிச்ச எதாவது கார் வந்திருந்தா என்னடி பன்னிருப்ப” என சைக்கிளில் போகும்போது கீழே விழுந்த அன்பரசியை திட்டிய ஜெனியின் உயிர் இன்று ரோட்டிலேயே பிரிந்தது ஏனோ.

“ஏய் தென்ன ஓலையில என்னடி விளையாட்டு அங்க போகாத ரொம்பநாளா பாம்பு சுத்திக்கிட்டு இருக்கு அந்த கந்தன கூப்பிட்டு சுத்தம் பன்ன சொல்லனும்” என அன்பரசியிடம் முதல்முறையாக கோபம்கொண்ட தருணம்.

“பாட்டி இன்னைக்கு காலேஜ்ல டான்ஸ் காம்படீசன் நான்தான் பர்ஸ்ட்” என ஒரு மாதத்திற்கு முன் ஓடி வந்தவளிடம் “ஐ என் தங்கத்துக்கு கண்ணு பட்டிருக்கும்” என நெட்டிமுறித்து நூறு ரூபாய் கொடுத்த மரியம்மாளின் நினைவாக அன்பரசியிடம் இருந்த இறுதி தருணம் நேற்று இரவில் நடந்த அந்த பேச்சுவார்த்தைதான்.

“பாட்டி அது என்ன நட்சத்திரம்” என அன்பு கேட்க. “அதுதான் குட்டி அருந்ததி நட்சத்திரம். கல்யாணம் பன்ற பொண்ணு அருந்ததி மாதிரி இருக்கும்னு அதை காட்டி சொல்லுவாங்க. ம்ம்ம் என் கடைசி ஆசை எல்லாம் இந்த கட்டை வேகுறதுக்குள்ள என் குட்டியோட கல்யாணத்தை பாத்துடனும் அவ்வளவுதான்” என மாரியம்மாள் கூற “பாட்டி இன்னொரு தடவை சாகுறேன் அது இதுன்னு பேசுன அப்புறம் உன்கூட பேசவே மாட்டேன் பாத்துகோ” என கேபமடைந்தவள். அது நிஜமாக மாற யாரிடம் கோபமடைய என்று தெரியாமல் கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள்.

தன் பாட்டியின் இறுதிச்சடங்குகள் முடிய பாட்டியின் நினைவுகள் வராமல் இருக்க தேட்டத்திற்கு செல்வதை நிறுத்தினாள். வீட்டிலும் தன்னை ஒரு தனி அறையில் அடைத்துகொண்டாள். அதில்தான் இன்றுவரை இருக்கிறாள்.

கைபேசியின் ஓசை கேட்டாலே அன்பரசியின் முகத்தில் பயமும் பதட்டமும் தொற்றிகொள்ளவே அதை கவனித்த பார்வதி “வயசு பொண்ணுக்கு என்ன செல்போனு” என வாங்கி பீரேவில் பூட்டினார்.

தனியாகவே இருந்து ஜெனியின் நினைவுகளும் பாட்டியின் நினைவும் வாட்டியெடுக்க தனியாக அழுதாள். அதை கவனித்த போஸ் “ஏம்மா காலேஜ் போகலையா” என அதட்டவே தன் நண்பர்களைபார்த்தாள் கொஞ்சம் ஆறுதல் தரும் என போஸ் நினைத்தார்.

தந்தையின் கட்டுபாட்டு வளையத்தில் முதல்முறையாக நுழைந்தாள் அரிசியிலிருந்து அன்பரசியாக. பின் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஜெனியின் உடல் வெள்ளை வண்ண சுன்னாம்பால் தீட்டபட்டிருக்க மீண்டும் அந்த நாள் நினைவுக்கு வரவே அங்கு வந்த சங்கீதா அவளது அழுகையை தடுத்து விட்டாள்.

“ஏய் அன்பரசி காலேஜ் வந்துட்ட போல” என அவளை நிதானத்துக்கு கொண்டுவர முயன்றாள். ஆனால் அன்பரசி “அந்த கார்காரனை பிடிச்சுட்டாங்களா?” என்றாள்.

சங்கீதாவோ அன்பரசியின் தோளில் கையால் அனைத்து கொண்டு “அது ஆக்ஸிடென்ட் அப்புடின்னு கேஸை முடிச்சுட்டாங்க கழுத்துல இருந்த வெட்டு மார்சுரில விழுந்துன்னு கேஸை மூடிட்டாங்கடி” என அவளை அனைத்து கொண்டு நடந்தாள்.

அன்பரசி யின் மனம் குமுற “ராஜேஷ் எங்க” என்றாள்.

“ஹே நிறைய எழுதவேண்டியிருக்குடி நீ அதுவும் இல்லாம நம்ம காலேஜ் பங்ஷன் வேற வருதுடி”-சங்கீதா.

“பேச்சை மாத்தடி ராஜேஷ் எங்க” – அன்பு

“வாடி கிளாஸ்க்கு போகலாம் பூஜா உன்ன பாக்கனும்னு சொன்னா” என சங்கீதா மீண்டும் சமாளித்தாள்.

“ராஜேஷ் எங்கடி” என மீண்டும் கேட்டாள் அன்பரசி.

“பச்ச் அவனை பத்தி பேசாதடி நீ அவன மறந்துடு அவன் இப்புடி பன்னுவான்னு நான் எதிர்பாக்கலை” என அன்பரசியை பார்த்தாள்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: