Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 22

பாகம் – 22

 

மனிஷ் தற்போது ஆரவ்வின் மீதான கொலை முயற்சி குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறான். அவன் உள்ளே சென்றதும் ஆரவ் அசுர வேகத்தில் தன் பலத்தை அதிக படுத்தி கொண்டான். மனிஷ்க்கு ஆதரவளித்த அரசியல் கட்சி தலைவர்களை ஆரவ் தன் பக்கம் இழுத்து விட்டான். ஏற்கனவே தான் முதலீடு செய்திருந்த சில துறைகளிலிருந்து பணத்தை திரும்ப எடுத்து இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் சிலரின் குறிப்பிட்ட ஒரு பிஸினஸில் பார்ட்னர்ஷிப் போட்டு கொண்டான். அது அவர்களின் பிஸினஸ் முன்னேற்றத்திற்காக இவனையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வைத்தது.

 

இதற்குள் எந்த விதத்திலும் பண பற்றாக்குறை வராமல் தடுக்க அதிக அளவு விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்து கொண்டான். ஏற்கனவே அவன் இரண்டு மூன்று விளம்பர படங்களில் இதற்கு முன்னும் நடித்துள்ளான். ஆனால் இப்போது இருபது நாட்களில் பதினைந்து கம்பெனி விளம்பரங்களுக்கு தயார் செய்து விட்டான். இது போக ஐபிஎல் ஏலத்தால் அவனுக்கு கிரிக்கெட்டில் இருந்தும் பெரிய தொகை கைக்கு வர இருக்கிறது. தன் பாதுகாப்பிற்கென ஒரு கன் லைசென்ஸ்ஸிற்கு அப்ளை செய்து விட்டிருக்கிறான். மேற்கொண்டு வருகின்ற வேலைகளை எல்லாம் நிதிஷிடம் ஒப்படத்துவிட்டு கிட்டத்தட்ட ஹனிமூன் கிளம்புவதை போல் பார்பியுடன் இன்று கிளம்பி இருக்கிறான்.

 

அவளை சமாதான படுத்தும் விதமாக ஜூஸ்க்கு பிறகு சிக்கன் ரோல், சாக்லேட் எல்லாம் வாங்கி தந்ததும் சற்றே சகஜமான பார்பி, பயத்திலோ பாசத்திலோ வழியெல்லாம் அவன் கையை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டே வந்தாள். ப்ளைட்டில் வழக்கம் போல கார்னர் சீட்டை தேடி பிடித்து இருவரும் அமர்ந்து கொண்டனர். ப்ளைட் டேக் ஆப் ஆனதும் போனை எடுத்து ஹேண்ட் ப்ரீ மாட்டி பாடல்களை ஓட விட்டான். இசைஞானி பாடல்களை அவன் விரும்பி போட, அவளோ ஏஆர் பாடல்களுக்கு மாற்றி வைக்க, அவன் போனை பிடுங்கி தொலைந்த தன் பாடலை தேட, அவளோ ஹேண்ட் ப்ரீயை தூக்கி கொண்டு ஓட, அவனும் சிறு பிள்ளையாய் அவளை விரட்ட…. “சார் ப்ளீஸ் டோன்ட் ரன்” என்று ஏர்ஹோஸ்டர் கூறவும், இருவரும் அமைதியாய் வந்து தங்களது இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

 

நேரம் நள்ளிரவை தாண்டியதும் ப்ளைட்டிலிருந்து இறங்கி ஆக்ராவிற்கு காரில் சென்றனர். கார் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் பார்பி ஆரவ் கையை தன்னோடு இறுக கட்டி கொண்டு அவன் தோளிலேயே படுத்து தூங்கி விட்டாள். ஆரவ் மனதில் அவள் சொன்ன அனாதை என்ற வார்த்தையே மீண்டும் மீண்டும் சுற்றி வர, ‘பாவம் என்னால ரொம்பவும் பயந்துட்டா போல, இப்ப கூட கைய விடாம புடிச்சிகிட்டே இருக்கா. உன்னவிட்டு நான் எங்கயும் போக மாட்டேன்டா, இனிமே நான் எங்க போனாலும் உன்னயும் என் கூடவே வச்சுக்கிறேன். தைரியமா இரு’ என்று உறங்குபவளுக்கு தன் மனதை உணர்த்தி கொண்டிருந்தான்.

 

மறுநாள் அதிகாலை ஆக்ராவில் தாஜ்மஹாலை பேக்ரவுண்டாக வைத்து ஷூட்டிங் ஆரம்பித்தது. ஏதோ டீ விளம்பரம் என பார்பிக்கு சொல்லி இருந்தான், அதற்காக ஆறு மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டனர். பார்பியை ஒரு துணியை வைத்து பர்தா முறையில் முகத்தை மூடி அழைத்து வந்திருந்தான்.

 

“எதுக்கு இப்டி மூடனும்? என்ன யாரும் பாக்க கூடாதுனா?”

 

“சே.. சே.. இல்லடா. உன்ன யாரும் திருட்டுத்தனமாக போட்ட எடுத்துற கூடாதுனுதான். இது பப்ளிக் ப்ளேஸ்ல, நாமதான் கொஞ்சம் கேர்புல்லா இருந்துக்கனும். நீ தனியா எங்கயும் போயிடாம, என் கண் பார்வையிலேயே இரு.”

 

“ம்….”

 

சூரிய ஒளியில் தாஜ்மஹாலை போலவே பார்பியும் பொன்னிறமாக மின்ன, ஆரவ் ஷூட்டிங் ஆரம்பிக்கும் வரை கூலிங் க்ளாஸ் உதவியால் சத்தமில்லாமல் அவளை சைட் அடித்து கொண்டிருந்தான். இருவருக்கும் இடையில் வந்து நின்ற அந்த அறிவுகெட்ட டைரக்டர், வெள்ளை நிறத்தில் ஒரு ஆடையை அவனிடம் கொடுத்து கேரவனுக்கு சென்று உடை மாற்றி வர சொன்னார். ஆரவ் ஆடை மாற்றி வந்ததும் டைரக்டர் அவனிடம் விருவிருவென வந்து விளம்பரத்தை விளக்கி சொல்ல ஆரம்பித்தார். அங்கே இருந்த ஒரு வெள்ளை நிற மேடையை சுற்றி பரதம் ஆடும் பெண்கள் தயாராக நின்றிருக்க, மேடையின் நடுவில் ஆரவ் வெள்ளைநிற குர்தாவில் அமர்ந்து பாட்டு பாட வேண்டும்.

 

ஆட் டைரக்டர், “ஆரவ்ஜி இந்த பேப்பர்ல நீங்க பாட வேண்டிய பாட்டு இருக்கு. ஒரு தடவ படிச்சுக்கோங்க. நான் ஸ்டார்ட் சொன்னதும் இந்த பாட்ட ஒரு தடவ ரசிச்சு பாடிட்டு பக்கத்தில இருக்குற டீ எடுத்து குடிச்சுகிட்டே ‘வா… தாஜ்’ னு சொல்லிட்டு கேமராவ பாத்து லைட்டா சிரிங்க. அவ்ளோதான் சார், இதுதான் ஸீன். ”

 

“சார் எனக்கு பாட்டெல்லாம் சுத்தமா பாட வராது. எப்படியும் டப்பிங் தான போடுவீங்க, நான் வேணும்னா வாய மட்டும் அசைக்கவா?”

 

“இல்ல சார், பாடினா தான் முகமும் கழுத்தும் நரம்பு அசைவுகளோட ரியாலிடிக்கா தெரியும், பாக்குறதுக்கு ஆட் நல்லா இருக்கும். நாங்கதான கேக்க போறோம், சும்மா பாடுங்க ஜி”

 

‘விதி யார விட்டது…’ என்று பாட்டை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தான். பார்பி கேமராமேன் அருகில் நின்று கேமரா வழியே ஆரவ்வை பார்த்து கொண்டிருந்தாள். ‘சும்மாவே சொதப்புவேன், இதுல இவ வேர கேமரா பக்கத்தில போய் நிக்கிறாளே… இன்னிக்கு நான் நடிச்சமாதிரி தான்’ மனதிற்குள் புலம்பிக்கொண்டிருக்க, “ரெடி, 1 2 3 ஸ்டார்ட்” என டைரக்டர் உரக்க கத்தினார். பெண்கள் சுற்றி சுற்றி வந்து பரதம் ஆட, ஆரவ் (ரொம்ப கேவலமா) பாட, இரண்டு மூன்று முறை ரீ டேக் வாங்கி ஷூட்டிங்கை முடித்து விட்டு உடை மாற்றி வர எட்டு மணிக்கு மேல் ஆனது.

 

அதிகாலை என்பதால் தாஜ்மஹாலை பார்க்க வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திட, ஆரவ் பார்பியிடம் “இப்ப கூட்டம் கம்மியா இருக்கு, வா நாம ஒரு தடவ சுத்தி பாக்கலாம்” என தனியே அழைத்து சென்றான். ஒரு கூலிங் கிளாஸ், ஒரு மாஸ்க், ஒரு கேப் அணிந்து தன்னை மறைத்து கொண்டான். ‘நீங்க சினிமாவில் பார்த்ததெல்லாம் போலி நான்தான் ஒரிஜினல்’ என்பதைப்போல அகன்று விரிந்து, வானுயர உயர்ந்து, தன் இருபுறமும் கோவிலின் காவல் தெய்வத்தை ஒத்த இரண்டு சிறிய கோட்டைகளுடன் கம்பீரமாக இருந்தது தாஜ்மஹால்.

 

ரொமான்ஸ் பண்ணனும் வந்த ஆரவ் ஆசையில் ஒரு லாரி மண்ணை கொட்டும் விதமாக, “ஆரவ் இங்க ஏன் ஸ்டெப்ஸ் கீழ போகுது, அடியில ஏதாச்சும் சீக்ரட் ரூம்ஸ் இருக்கா? இவ்ளோ பெரிய பில்டிங்க கட்டுன ஷாஜகான் ஏன் காம்பவுண்ட் சுவர மட்டும் ஒரு முழம் உயரத்தில் கட்டிருக்காரு? ஆமா ஷாஜகானுக்கு மும்தாஜ் எத்தனையாவது வொய்ப்?”

 

‘கேள்வி கேக்கவே பொறந்த மாதிரி இத்தன கேள்வி கேட்டு உசுர வாங்கிகிட்டு இருக்காளே…’ என அவனையே பீல் பண்ண வைத்துவிட்டாள்.

 

“எனக்கு அதெல்லாம் தெரியாது பார்பி. நான் ஹிஸ்ட்ரில ரொம்ப வீக், எனக்கு தெரிஞ்சதெல்லாம் தாஜ்மஹால்னா ஸிம்பல் ஆப் லவ், அவ்ளோதான்”

 

“நாம தான் தாஜ்மஹால் காதலோட ஸிம்பல், இவங்களோட காதல் தான் உலகிலே உன்னத மானது, அப்டினு உளறிகிட்டு இருக்கோம். ஆனா உண்மையில ஷாஜகான் இதெல்லாம் ஒரு பந்தாக்கு பண்ண வேலை.”

 

“ஆனா.. ஷாஜகான் தன் மத்த பொண்டாட்டிக்கு எல்லாம் ஏன் இத மாதிரி கட்டல? அவனால எல்லாருக்கும் கட்ட முடியும். இருந்தாலும் அவன் மனசு இவளுக்கு மட்டும் பண்ண சொல்லி இருக்குனா அதுக்கு பேரு தான் காதல்”

 

“காதல்னா ஒரு மாயவலை, கொஞ்ச நாள் போதை தந்துட்டு அப்புறம் கண்ணுக்கே தெரியாம மறஞ்சு போயிடும். முன்னாடி காலத்தில ஆத்மார்த்தமா காதலிச்சு இருக்கலாம். ஆனா இப்ப இந்த அவசர யுகத்தில உருகி உருகி காதலிச்சு அப்புடியே காதல்ல கரையிற மாதிரி யாரும் கிடையாது. காதலே ஒரு என்டர்டெயின்மெண்ட் ஆகி போச்சு”

 

“அப்போ நீ யாரையும் காதலிக்க மாட்டயா பார்பி”

 

“ம்ஹூம்…. மாட்டேன்பா, எனக்கு காதல்மேலயே நம்பிக்கை இல்ல. அதுவும் இல்லாம தேவையில்லாம என்னால உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் எந்த கெட்ட பேரும் வந்திட கூடாது. உங்க வீட்ல இருக்குற வரைக்கும் நான் ஒழுங்கா இருந்துட்டு போயிடுறேன்.”

 

‘சுத்தம்… இனி நான் லவ் ப்ரபோஸ் பண்ணினா என் பேரு கெட்ரும்னு, என்னை விட்டுட்டே ஒடிடுவா போல. பட் உன்ன நான் அவ்ளோ ஈசியா விட்ருவேனா பார்பி?’ என்று தனக்குள்ளேயே விஷமமாய் சிரித்து கொண்டான்.

 

இதமாதிரி எத்தன பேர பாத்திருக்கேன் என்றபடி அமைதியாக உறங்கி கொண்டிருந்தாள் உள்ளே மும்தாஜ். ஆரவ் பார்பியை ஆங்காங்கே நிற்க வைத்து தன் போனில் நிறைய போட்டோக்கள் எடுத்து தள்ளினான். சில நிமிடங்கள் கழித்து பார்பி, “நின்னு நின்னு கால் வலிக்குது ஆரவ். நாம எங்கயாவது உக்காரலாமா?”

 

தாஜ்மஹாலின் சுவரோடு இணைந்தபடி சுற்றி சற்றே உயரமாக இருந்த திண்ணைகளில் அவர்கள் இருவரும் அமர சென்றார்கள். அவளால் ஏற முடியாமல் திணர, ஆரவ் யோசிக்காமல் குழந்தை போல அவளின் இடை பற்றி தூக்கி அதன்மேல் அமர்த்தினான். அவனின் திடீர் தீண்டலால் ஏற்கனவே பழக்கமான ஒரு குறுகுறுப்பு உணர்வு தனக்குள் தோன்றி மறைய அவள் சந்தேகமாய், “ஆரவ் இதுக்கு முன்னாடி நீங்க எப்பவாச்சும் என்னை இதே மாதிரி தூக்கி இருக்கீங்களா?” என்றாள்.

 

“ம்…. நீ பாம்ப பாத்து பயந்து ஓடி வந்தப்போ தூக்கினேன்” என்றவனுக்கு இப்போதும் அவளின் அன்றைய உருவம் கண் முன் தோன்றி மறைந்தது. அந்த நினைவுகளால் அவன் முகத்தில் புன்னகையும் வெக்கமும் குடியேறி கொள்ள அவளுக்கு அதை காட்டாமல் வேறு புறம் திரும்பி நின்றான்.

 

‘அவன் சொன்னதில எதுவும் வித்தியாசமா இல்லையே. இருந்தும் எதுக்காக என்னோட மனசு இப்படி படபடன்னு அடிச்சுக்குது’ என விடையில்லா கேள்விகளுடன் பார்பி அங்கிருந்து கிளம்பினாள்.

 

ஹோட்டலுக்கு திரும்பி வருகையில், “நாம மும்பைக்கு போனதும் என்னை பிசிசிஐ மேட்ச்சுக்கு கூப்பிட்டுரு வாங்க. இங்க இருக்குற இந்த ரெண்டு நாளும் உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் வாங்கி தர்றேன்.”

 

“மும்பைக்கு போனா நான் தனியா வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியிருக்கும். இப்போ இங்க எனக்கு இப்டியே சும்மா கொஞ்ச நேரம் ஊர சுத்தி பாத்தாலே போதும்.”

 

மனதிற்குள் அவள் அவ்வப்போது சொல்வதெல்லாம் தனியாக குறித்து கொண்டான். ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில் இருவரும் பிரேக் பாஸ்ட் முடித்ததும், ஆரவ் அங்கேயே ஊர் சுற்றி பாக்க பைக்தான் வேண்டுமென கேட்டு வாங்கினான். இருவரும் ஹெல்மெட் போட்டபடி ஆக்ராவின் சந்து பொந்தெல்லாம் கேட்பாரின்றி சுற்றி திரிந்தனர். அளவான வேகத்தில் எதிர் வரும் காற்றை இதமான தென்றலாக்கி சுகமான பயணத்தை அவளுக்கு காட்டினான். என்னதான் பெரிய செலபிரிட்டியா இருந்தாலும் காதல் கொண்ட மனது கெஞ்ச, அடிக்கடி ஸ்பீட் பிரேக்கரில் எல்லாம் வேண்டுமென்று ஏற்றி இறக்கினான். அவளோ அவன் மேலிருந்த நம்பிக்கையில் அதை பெரிதாய் யோசிக்காமல், அங்கிருந்த புதிய மனிதர்களை, புதிய உணவுகளை, புதிய உடைகளை வேடிக்கை பார்ப்பதிலேயே மூழ்கி விட்டாள். ஆங்காங்கே அவள் பார்வை நிலைத்து நின்ற சில பொருட்களை எல்லாம் அடுத்த நொடியிலேயே அவள் கைகளில் வாங்கி தந்திருந்தான். அந்தி சாயும் நேரம் டெல்லிக்கு காரில் கிளம்பிய இருவரும் இரவில் டெல்லியில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலுக்கு வந்தடைந்து விட்டனர்.

 

அவளது அறைவரை உடன் வந்து, “பார்பி, பக்கத்து ரூம்ல நான் இருக்கேன். நைட் டின்னர் என்னோட ரூம்க்கு கொண்டு வர சொல்லிட்டேன், நீ போய் ப்ரஷ் ஆகிட்டு வா சாப்பிடுவோம்” என்றுவிட்டு சென்றான்.

 

அரை மணி நேரத்தில் வேறு உடையில் அவன் அறைக்கு வந்து சேர்ந்தாள் பார்பி, “ஷூட்டிங் முடிஞ்சி போச்சில, அப்புறமும் நாம ஏன் இங்கயே இருக்கோம்.”

 

“நாளைக்கு ஈவ்னிங் எனக்கு இங்க ஒரு மீட்டிங் இருக்கு, முடிஞ்சதும் ஊருக்கு கிளம்பிடலாம்.”

 

அடுத்த நாள் காலையும் ஊர் சுற்றுவது, ஷாப்பிங், மாலையில் மீட்டிங் என விரைவாகவே நகர்ந்துவிட இரவில் மும்பைக்கு ப்ளைட் ஏறிவிட்டார்கள். இதுவரை இல்லாத தயக்கமும் பயமும் இப்போது பார்பியை சூழ்ந்து கொள்ள, ‘அவங்களுக்கு என்னை பிடிக்கலனு புரியுது… நான் திரும்ப எப்படி அவங்க கூட சேரந்து ஒரே வீட்டுக்குள்ள இருக்க?… மறுபடியும் அசிங்கமா பேசினா நான் என்ன செய்ய?… எனக்கு வேற வழியில்ல, ஆரவ்க்காக நான் தான் பொறுத்து போகனும்’ என தூங்காமல் எங்கோ வெறித்து பார்த்தபடி யோசித்து கொண்டிருந்தவளது உணர்வுகளை அவன் அவளது கண்களிலேயே படித்து விட்டான்.

 

அவள் கைகளை பிடித்து மெதுவாக அழுத்தம் கொடுக்க, அது ‘என் செல்ல குட்டியை நான் அப்படி எல்லாம் கஷ்டபட விடமாட்டேன்’ என சொல்லாமல் சொல்லியது. நள்ளிரவில் இருவரும் வீடு வந்து சேர, வழக்கம்போல அந்த வீட்டின் வெறுமையே அவர்களை வரவேற்றது. மறுநாள் முழுவதும் ஆரவ் காலையில் பிராக்டீஸ், அதையடுத்தே நிதிஷ்ஷுடன் போன்கால் என்று பிசியாகவே இருந்தான். அஸ்விகா இல்லாமல் அந்த அறையே வெறிச்சோடி போக, பார்பி பகல் முழுவதும் அறைக்குள் இங்கும் அங்கும் உலாவி கொண்டிருந்தாள். மாலை நெருங்கும் நேரம் ‘இதுக்கு மேல நம்மால உள்ளயே அடஞ்சு கிடக்க முடியாது,  கீழ போய் ஆரவ் என்ன பண்றான்னு பாக்கலாம். அவனோட அம்மாவோ தங்கச்சியோ கீழ இருந்தா சத்தம் போடாம அப்டியே திரும்பி வந்திடுவோம்’ என்ற முடிவுடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

கீழே ஹாலில் ஆரவ்வும் நிதிஷ்ம் மட்டும் ஏதோ முக்கியமாய் பேசி கொண்டு இருக்க, இவள் தயங்கி தயங்கி அருகில் வந்ததும் ஆரவ் பேச்சை நிறுத்தி , “எங்கயாவது பைக்ல ஒரு ரவுண்டு போவோமா?” என்றதும் துள்ளி குதித்து கொண்டு அவன் பின்னால் ஓடி வந்தாள். ஆரவ் தன் கேரேஜில் இருந்து ஒரு புத்தம் புதிய பைக்கை எடுத்து வந்தான், அது இன்றுதான் வந்திருக்கும் போல. ஆக்ராவை போலவே இங்கும் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு இருவரும் கொஞ்ச நேரம் சுற்றி வந்தனர்.

 

“இனிமே ப்ரீயா இருக்கும் போது இப்டி அவுட்டிங் கூட்டிட்டு போறீங்களா. ஜாலியா இருக்கு”

 

கரும்பு தின்ன கூலியா? அவனும்தான் அவளுடனான இந்த நெருக்கத்தை விரும்புகிறானே… “ம், என்னோட வொர்க் எல்லாம் சீக்கிரமா முடிஞ்சா கூட்டிட்டு போறேன்” என்றான்.

 

இதற்காகவே நிதிஷ்ஷிடம் கேட்டு வேலைகளை கற்று கொள்ள ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் செல்லும் இடத்திற்கு எல்லாம் தானும் உடன் செல்ல ஆரம்பித்தாள். ஆரவ்விற்கு வேண்டிய உதவிகளெல்லாம் பார்த்து பார்த்து செய்தாள். சாரதாம்பாள் பார்பி வந்ததிலிருந்து ஆரவ் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்ட்டதால், பிரியங்காவை வைத்து பார்பியை வெளியேற்ற திட்டம் தீட்டினார். அது படு தோல்வி அடைந்து, இப்போது பார்பி முன்பை விட அதிகமாக ஆரவ்வுடன் ஒட்டிக்கொண்டே திரிவதை கண்டு, சாரதாம்பாள் மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. பார்பி தன்னிடம் தனியாக சிக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்

 

ஒரு நாள் மாலை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆரவ்வை பார்க்க சில வெளி ஆட்கள் அவனது அபீசியல் ரூமிற்கு வந்திருந்தனர். புது ஆட்களுடன் இருக்க சங்கடமாய் உணர்ந்த பார்பி, அவன் வேலைகளை முடித்து வரும் வரை ஹாலில் இருப்பதாய் சொல்லி விட்டு சென்றாள். அவன் திரும்பி வந்து பார்க்கும்போது அவள் அங்கே இல்லை. ‘என்னை விட்டுட்டு சாப்பிட போயிட்டாளோ!’ என டைனிங் ரூம், கார்டன், பூஜை அறை எல்லாம் பார்த்து விட்டு அவள் அறைக்கு சென்றான். அங்கும் அவள் இல்லை….

 

என்ன விட்டு எங்க போன பார்பி?….

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: