Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 26

உனக்கென நான் 26

கைபேசியை குழப்பத்துடன் பார்த்துகொண்டிருந்தாள் அன்பரசி. அவளது கையில் இருந்த பிரியோவோ இவளையே பார்க்க மனது அமைதியானது. யாரோ விளையாடுறாங்க என நினைத்துகொண்டு பிரியாவை கொஞ்சியபடி உள்ளே சென்றாள். அப்போது மலர் அங்கு வரவே அன்பரசியின் முகத்தில் முன்னால் இருந்த கலக்கம் இல்லை. “என்னடி சரி  ஆகிட்டியா இப்போ எப்புடி இருக்கு மனசு” என கேட்க “சந்துரு ரொம்ப நல்லவர்டி ஆனா ” என இழுக்க.

“அம்மா தாயே சந்துரு நல்லவரு நீ மட்டும் என்ன கெட்டவளா சும்மா புலம்பிகிட்டே இருக்காதடி உன் கடந்த காலம் என்னனு எனக்கு தெரியாது உன் மனசுல இருக்குறதையும் சொல்லமாட்டேங்குற சரி அதை விடு உனக்கு என்னடி பிரச்சனை” என மலர் கேட்டுமுடித்தாள்.

அன்பரசியின் மனதில் இருந்த நினைவுகள் வெளியே வரும் தருணம் நெருங்கியது. தன் தோழியிடம் கூறலாம் என வார்த்தைகளை தயார்செய்தாள். ஆனாலும் அவளால் கூற இயலவில்லை அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

அன்பரசியின் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்த மலர் “ஆரம்பிச்சுட்டியா எனக்கு ஒரு முடிவ சொல்லு சந்துருவ உனக்கு பிடிச்சுருக்கா இல்லையா” என மலர் கேட்க வெட்கத்துடன் “ம்ம்” என கூறவே “அடி லூசு மனசுல அப்போ ஆசை இருக்கு உனக்கு” என மலர் அன்பரசியின் இடுப்பை கிள்ளினாள்.

“அப்படி இல்லடி சந்துரு அம்மா இல்லாம வளந்தவர்டி அந்த டைரி வாசிச்சதும்தான் எனக்கே புரிஞ்சுது என்ன அவங்க அம்மா மாதிரி நினைச்சிருக்காருடி நான் அவர்கூட இருந்த சந்தோஷமா இருப்பாரு” என அன்பரசி கூறவே “அப்போ உனக்காக நீ கல்யாணம் பன்னல?!” என மலர் முறைத்தாள்.

“எனக்குனு இனி என்னடி இருக்கு வாழ்கைல காதலிச்சேன் அதுவும் இல்லாம போச்சு. நான் ஆசைப்பட்டது எதுவுமே எனக்கு நிலைச்சது இல்லை. அதான் அடுத்தவங்க ஆசைக்காக வாழ்ந்துகிட்டு இருந்தாலே போதும்டி” என அன்பரசியின் கண்ணில் நீர்துளிகள் வழிந்தன. “ஏய் ஏன்னடி லூசு மாதிரி அழுதுகிட்டு ” என அவளை அறைக்குள் அழைத்துசெனறாள். “அம்ம” என அன்பரசியின் கண்ணீரை பிரியா துடைத்துவிட குழந்தைகள் முன் அழகூடாது என உணர்ந்தவள் தன்னை நிதானபடுத்திகொண்டாள்.

“யாருடி அவன் உன்னை விட்டுட்டு போனது சுத்த முட்டாபயலா இருப்பான் போல” என மலர் ஆத்திரமாக கேட்கும்போது அன்பரசி அவளின் வாயை பொத்தி “அவர் நல்லவர்டி அவர் என்னை விட்டுட்டு போகல நான்தான் அவரை விட்டுட்டேன்” என சுவற்றில் மாட்டியிருந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டே கூறினாள். மீண்டும் அழகூடாது என்ற உத்தி அது.

“என்ன நீ விட்டுட்டியா ஏன்?!” என மலர் கேட்க “அவர் என்ன கல்யாணம் பன்னிருந்தா வாழ்கையில தோத்துருப்பாருடி ஆனா இப்போ நல்லா இருக்காரு அதுவே எனக்கு போதும்” என கண்ணீர் வழிந்தது அது ராஜேஷின் நிழலை கண்ணில் இருந்து அழிக்க நினைத்திருக்கும் போலும் ஆனாலும் தோல்விதான்.

“என்னடி லூசு மாதிரி பேசற காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலும் ஜெயிக்கனும்டி” என அறிவுரை வழங்கியவளை பார்த்து “குடும்பமா இல்ல காதலானா நீ எத முடிவு பன்னுவ” என தன்தோழியடம் கேட்க மலர் சிறது யோசித்தாள். “காதல்தான்” என கூற வாயை திறக்கும்போது “நான் குடும்பம்னு சொன்னது உன்னோட குடும்பம் இல்ல உன் காதலனோட குடும்பம்” என அன்பரசி நிறுத்தினாள்.

“என்னடி சொல்ற” என மலர் விழித்தாள். “நீ சொல்லு எதை தேர்ந்தெடுப்ப” என மீண்டும் கேட்டாள். “உண்மையான லவ் பன்னிருந்தா அவன்தான் நல்லா இருக்கும்னு நினைப்பேன்” என மலரின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன.

“நான் யாருகூடயாவது பொய்யா பழகி பாத்துருக்கியா” என அன்பரசி கூறவே “இல்லை” என்றாள். “அது மாதிரிதான் என் காதலும்” என மலரை பார்க்க அவளும் மௌனமாக இருந்தாள். பேச பல வார்த்தைகள் இரூந்தும் இருவரூம் அமைதியாக இருக்க பிரியாவின் சத்தம் மட்டுமே கேட்டுகொண்டிருந்தது.

அறையின் அமைதியை கலைக்கும் பொருட்டு அன்பரசியின் கைபேசி மீண்டும் சினுங்கியது. மீண்டும் அதே மூன்று இலக்க எண்.

கைகள் நடுங்க முகத்தில் பயம் தொற்றிகொள்ள எடுத்தாள் அன்பரசி. “ஹலோ உனக்கு என்ன வேணும்” என அன்பரசி ஆத்திரமடைய மலர் அவளை குழப்பமாக பார்த்தாள்.

“ஹலோ அன்பரசி மேடம் கூல்டவுன் கொஞ்சம் பொறுமையா கேளுங்க ” என சிரித்தாள் அந்த மர்ம பெண்.

“நீ யாருனு தெரியாம என்னால உன்கூட பேசமுடியாது” என காதிலிருந்து செல்போனை எடுக்க முயன்றாள்.

அதற்குள் “ஜெனிய தெரியும்னு நினைக்குறேன்” என அந்த பெண்கூறவே அன்பரசியின் கண்கள் தானாக கண்ணீரை சிந்தின. “பாவம் பன்னாலும் ஒரு நியாயம் இருக்கனும் எனக்கு தேவை ஒரு உசுரு அது நீயா இல்லை சந்துருவானு முடிவு பன்னிக்கோ நாளைக்கு நான் கால் பன்றேன் ஹா. ஹா. ஹா” என சிரித்துவிட்டு இனைப்பு துண்டிக்கப்பட்டது.

அன்பரசி பதட்டத்துடன் மீண்டும் அந்த எண்ணிற்கு முயற்சி செய்தால் “தாங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்” என வந்தது. “என்னடி எதுவும் பிராப்ளமா” என மலர் அன்பிடம கேட்டாள்.

“ம்ம் ஜெனி ” என கூறிவிட்டு தன் தோழியின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். “ஜெனியா யார் அது” என குழம்பிகொண்டே தன் தோழியின் முதுகில் தட்டிக்கொடுத்து சமாதானம் செய்தாள்.

மீண்டும் கைபேசி ஒலிக்கவே அன்பரசியோ பயந்துகொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள். ஆனால் மலர் எடுத்து ஆன் செய்தாள். “ஏய் அன்பு யார்கூட பேசிக்கிட்டு இருந்த லைன் பிஸினு வருது” என சந்துரு விமானநிலையத்தில் நின்றுகொண்டு பேசினான். ” நான் மலர்” என அவள் கூறியதும்.

“அன்பரசி இல்லையா நான் கொஞ்சம் பேசணும்” என சந்துரு கேட்டான். ஆனால் அன்பரசியோ அழுதுகொண்டே இருந்ததால் “நீ அப்புறமா கால் பன்றியா அவ கொஞ்சம் டிஸ்ட்ரப்டா இருக்கா” என மலர் கூற சந்துரு “சரி” என கூறினான் ஆனால் மனமோ ‘அன்பரசிக்கு என்னை பிடிக்குதா இல்லை வீட்டில் சொன்னதால் கல்யாணம் பன்ன சம்மதிச்சாளானு கேட்கலாம்னு பாத்தா அவ என்கூட பேசக்கூட தயாரா இல்லை அப்படினா என்னை பிடிக்கலையா இல்ல வேற யாரையாவது லவ் பன்றாளா? சரி அப்படி லவ் பன்னா இந்த கல்யாணத்த நிறுத்திடலாம்’ என மனதில் ஓடி முடிய.

“அப்பா எனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்” என தந்தையை பார்த்துகேட்டான். “ஏன்டா இப்புடி கேக்குற” என சன்முகம் கேட்டார்.

“ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டீங்களே” என இழுத்தான்‌. “இந்த கல்யாணம் வேண்டாம் அப்படீங்குற வார்த்தைய தவற எதுவேணாலும் சொல்லு” என சன்முகம் வழியை அடைத்தார்.

“ஒன்னும் இல்லைப்பா” என சந்துரு கூறிவிட்டு முன்னே நடந்தான் ஆனால் அவன் மனசாட்சியோ ‘நீ என்ன செல்ஃபிஸா உனக்கு வாழ்கைனா என்னனு புரிய வச்சவடா அன்பரசி உனக்கு தாய் மாதிரி; உன் அம்மாக்கு பிடிக்காம எதாவது நீ பன்னிருக்கியா; இப்பமட்டும் ஏன் பிடிக்காத ஒரு விசயத்தை பன்ன நினைக்குற; ஒரு பொண்ணுக்கு யாரு துனையா வரனும்னு அவ முடிவெடுக்க உரிமை இல்லையா; அன்பரசி மனசுல நீ இல்லை’ என முடிந்தது.

கைபேசியை எடுத்தான் “ஹலோ டேவிட் எப்புடி இருக்க” என சோர்வாக கேட்டான்.

“ஐ எம் ஃபைன் டியூட் ஒய் யுவர் வாய்ஸ் காட் சேட்ஃபிலிங்” என கேட்டான் டேவிட்.

“ஒன்னும் இல்லடா அந்த சாஃப்ட் டெக் கம்பெனி ஓகே பன்னிரு”

“ஏய் இடியட் அதுல சைன் பன்னா நீ அமெரிக்காலதான் இருக்கனும் ஒன் இயர்க்கு நல்லா யோசிச்சு முடிவு பன்னு” என டேவிட் அதிர்ந்தான்.

“இல்ல டியூட் எனக்கு இங்க மேரேஜ் பிக்ஸ் பன்னிருக்காங்க” என சந்துரு முடிக்கும் முன்னே “கங்காராட்ஸ் டியூட்” என டேவிட் கூற “ஹே எனக்கு அதுல இஸ்டம் இல்லடா ஆர் யூ அன்டர்ஸ்டேன்ட்” என கூறினான்‌.

“ஓ ஓகே ஓகே அதனாலதான் நீ அமெரிக்கா வந்து என்ஜாய் பன்னலாம்னு பாக்குற சரியா?!” என சிரித்தான்.

“ஆமா சீக்கிரம் முடிச்சிட்டு சொல்லு இன்னும் மூனு நாளுக்குள்ள நான் அங்க இருக்கனும்” என கூறவே “இட்ஸ் மை டியூட்டி” என டேவிட் கூறியதும் இனைப்பு துண்டிக்கபட்டு அன்பரசியின் பிறந்தநாள் அன்று எடுத்த புகைப்படம் முகப்பில் இருந்தது. தனது தெடுதிரையை தடவியவனின் முகப்பில் சிறிதுநேரத்தில் சந்துருவும் சுவேதாவும் சேர்ந்து எடுத்திருந்த படத்துக்கு மாறியது. சன்முகமும் சந்துருவும் விமானத்தில் ஏறவே “சார் மொபைல் சுவிட்ச் ஆப் பன்னிடுங்க” என்ற பணிபெண்ணின் உத்தரவுக்கு இனங்க மொபைலை அனைத்தான். தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் அருகே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

“ஏய் சுவேதா நீயும் இந்த ஓபிளைட்தானா” என சந்துரு சென்று அமர்ந்தான். “பின்ன மதுரையில என்ன ஆயிரம் பிளைட்டா ஓடுது” என போலியாக சிரித்தாள்.

“சரி அதை விடு மஞ்சுளாவும் அந்த ரெண்டு மாடுகளும் வரலையா?” என சந்துரு கேட்க “சுகுவையும் பாலாஜியையும் கேக்குறியா?!” என சந்துருவை பார்த்தாள். ” ம்ம்” என்றான்.

“மஞ்சுளாவோட வீடு மதுரையிலதான இருக்கு அங்க பேயிருங்காங்க” என அவள் கூற “ஏன் நீ போகலையா?” என்றான். சுவுதாவுக்கு மனம் முழுவதும் கனத்திருக்க இதுவே சந்துருவும் சுவேதாவும் தனியாக இருந்தாள் அவனை கட்டியணைத்து அழுதிருப்பாள். அனைத்துகவலைகளும் அவளது முகத்தை சுருக்கி காட்டின.

“சரி உன் ஒயிஃப் அழகா இருக்கா” என சுவேதா திசைதிருப்பினாள். “நீ கூடதான் அழகா இருக்க” என்றான் சேகமாக.

“என்னடா ஆச்சு ஏன் சோகமா இருக்க”

“ஒன்னு சொல்றேன் யாருகிட்டயும் சொல்லவேண்டாம்” என சந்துருகூற “சொல்லு” என்றாள்.

“இந்த கல்யாணம் நடக்காது நான் அமெரிக்கா போறேன்” என சந்துரு கூறவும் விமானம் ஓடுதளத்தில் ஓடி வின்னில் புகுந்தது.

“ஏன்டி என்னடி பிரச்சனை சந்துரு கூட ஏன் பேசமாட்டேங்குற” என மலர் கேட்க அன்பரசி மலரின் தோளில் இருந்து எழுந்தாள்.

“என்னடி சொல்ற”

“ஆமா இப்போ ஃபோன் பன்னது அவன்தான்” என மலர் கூறவே “சந்துருவா என்கிட்ட அப்போவே சொல்லிருக்கலாம்லடி” என சிறிது கோபம் தெரிந்தது.

“இருடி மறுபடியும் ஃபோன் பன்னலாம் கோபபடாத” என டயல் செய்தால் ஆனால் சுவிட்ச் ஆஃப் என வந்தது.

தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: